Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

 

உங்கள் அம்மம்மா

அம்மப்பாவின்  நண்பரின் மகள் இல்லையே???

இந்த வழக்கில் இதுதான் நடந்தது என்பது உறுதியா? அல்லது மேலே சொன்னது போல் வெறும் ஊகமா?

அம்மம்மாவின் அண்ணாவும் அம்மப்பாவும் நண்பர்கள் - ஒத்த வயதினர்.  ஆனால் பேசி முடித்த கல்யாணம். ஓட்டப்பந்தயம் இல்லை🤣.

ஓடி இருந்தால் நிச்சயம் போட்டு தள்ளி இருப்பார்கள் - ஏலவே பைத்தியகாரத்தனமாக, வறட்டு கெளரவத்துக்காக இரெண்டு கொலை செய்த ஆட்கள்.

  • Replies 102
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

எப்படியான பயம் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் அண்ணா?  30, 40 வருடங்களுக்கு முன்பிருந்த மாதிரி  கட்டுப்பாடுகள் இப்பொழுது சாத்தியமா? சமூகத்தின் மீதான பயம் கூட முன்பு மாதிரி இப்பொழுது இருக்க முட

goshan_che

இந்த திரியில் ஊகங்கள் ரெட்டை கட்டி பறக்கிறன. இதுவரை வயது வித்தியாசம் மட்டுமே செய்தியாக வந்துள்ளது. மிகுதி grooming, seduction எல்லாம் அவரவர் கற்பனையே. உலைவாயை மூடினாலும் வம்பளக்கும் ஊர்வாயை

நியாயம்

சமூக பொறுப்பில் எல்லோருக்கும் பங்கு உண்டு. மக்கள் அமைப்பே நிருவாகம் அல்லவா?  இங்கு குறிப்பிட்ட அவல செய்தி வீரகேசரி தளத்தில் எப்படி பிரசுரம் செய்யப்பட்டுள்ளது பாருங்கள்.    “யாழில் 19 வய

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

இந்த வழக்கில் இதுதான் நடந்தது என்பது உறுதியா? அல்லது மேலே சொன்னது போல் வெறும் ஊகமா?

அம்மம்மாவின் அண்ணாவும் அம்மப்பாவும் நண்பர்கள் - ஒத்த வயதினர்.  ஆனால் பேசி முடித்த கல்யாணம். ஓட்டப்பந்தயம் இல்லை🤣.

ஓடி இருந்தால் நிச்சயம் போட்டு தள்ளி இருப்பார்கள் - ஏலவே பைத்தியகாரத்தனமாக, வறட்டு கெளரவத்துக்காக இரெண்டு கொலை செய்த ஆட்கள்.

அந்த நேரத்தில் பாக்கு வெட்டியால் வெட்டி கூரையில் காயப் போட்டு இருப்பார்கள் 

🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, விசுகு said:

அந்த நேரத்தில் பாக்கு வெட்டியால் வெட்டி கூரையில் காயப் போட்டு இருப்பார்கள் 

🤣 வட்டுக்கோட்டைக்கு வழி கேட்க வேண்டியதுதான்🤣

அம்மம்மாவின் பிறந்த வீட்டில் மாம்பழம் வெட்டும் கத்தியே ஒரு மார்க்கமாய் இருக்கும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் / உடுவில் மல்வம் பகுதியில் சிலநாட்களுக்கு முன்னர் மக்களால் அடித்து கொல்லப்பட்ட 51 வயது நபர் இவர் புரிந்த குற்றமான காரியம் ! 21 வயது பெண்ணை காதலித்து கூட்டிச் சென்றதாக கூறப்பட்டு அடித்து வதைத்து கொல்லப்பட்டார் ....

  

வயதில் இளையவளை விருப்பியது இருவரும் சேர்ந்து சென்றது ஒருபுறம் இருக்கட்டும் !!

 

இதுவே இந்த நபர் !! ?

 

கனடா.இலண்டன் .அவுஸ்ரேலியா . பிரான்சு . சுவிஸ் நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு மாப்பிள்ளை நபராக இருந்திருந்தால் இதைவிட வயது கூடியவர் என்றாலும் பல கோடி சீதனம் கொடுத்து பெண்ணுக்கு புத்திமதி கூறி திருமணம் செய்து அர்ச்சனை மலர் தூவி வாழ்த்தி வழி அனுப்பி வைத்திருப்பீர்கள் !

 

அந்த நபர் வறியவர் என்பதால் தானே அடித்து கொன்றீர்கள் தவறு நடந்தவுடன் இருவரையும் அழைத்து பெண்ணுக்கும் காருண்ணீயமாக புத்திமதி கூறி மனமார பிரித்து வைத்திருக்கலாம் ?

 

 ஆத்திரத்தில் அறிவை இழந்து நபரை அடித்து அடித்து கொன்று தற்போது 9 நபர்கள் குற்றவாளியாக சிறையில் வாழ்வது ஏன் ?....

 

பகுத்தறிவு இன்றி ஒரு அப்பாவி நபரை அடித்து கொன்றதில் என்ன ஞாயம் இருக்கின்றது !! ஏன் அவருடன் சென்ற பெண்ணை நீங்கள் தண்டனை கொடுக்கவில்லையா ?

 

கேள்வியுடன் ??...இந்நபரின் ஆன்மா இறையடி சேரட்டும் ..

 

பணம் இருந்திருந்தால் இவரின் காதல் வென்றிருக்கும் ....🤣

https://www.facebook.com/100005773602170/posts/pfbid02AUdsUSgp12rHMpuhcpok2JvMaNn618Gxaj9fij33bETqUWCbL9bRACgP47kpGJyml/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

 

இந்த கட்டுப்பாடுகள் என்பதும் ஒருவித அச்சம் அல்லது போதை என்று கூட சொல்லலாம்.

கரணம் தப்பினால்???

இப்போ உங்களிடம் ஒரு கேள்வி

மாணவருக்கு ஆசிரியரிடம் பயம் அல்லது மரியாதை

சிஸ்யனுக்கு குருவிடம் பயம் அல்லது மரியாதை

பிள்ளைகளுக்கு பெற்றோர்களிடம் பயம் அல்லது மரியாதை

இப்படி பெற்றோர்களுக்கு???

 

அண்ணா, பெற்றோர்களுக்கு சமூகத்தில் அச்சம் வேண்டும் என்பதற்காக ஆணவக்கொலையோ, பிள்ளையை தற்கொலைக்கு தூண்டவேண்டுமா? 

பெற்றோர்கள் தமது பிள்ளைகளைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பிள்ளை திசை மாறுகிறது அல்லது சமூகத்தில் இருந்து ஒதுங்குகிறது என்றால் அதனை ஆராயவேண்டும். அதனை விடுத்து ஜயோ மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்ற பயத்தில் பிள்ளையின் வாழ்வையும் பாழாக்கி தங்களது நிம்மதியையும் இழக்கவேண்டிய அவசியமில்லை.

5 hours ago, goshan_che said:

இந்த திரியில் ஊகங்கள் ரெட்டை கட்டி பறக்கிறன

அதே போல உண்மையும் வெளியே வரப்போவதில்லை. ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவரை இனி கதைக்கவிடமாட்டார்கள்.

 

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

cousin னை திருமணம் செய்வதும்  கலாச்சாரமாம் அதை தான் காப்பாற்ற வேண்டுமாம்.

 

எனக்கும் அது விளங்குவதில்லை.. மாமா மகன் அத்தை பெண்.. நாங்களாகவே சில கட்டுப்பாடுகள் கொள்கைகளை உருவாக்கிவிட்டு அதில் பெருமிதம் வேறு கொள்கிறோம்.. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, island said:

இவ்வாறான திருமணங்கள் சட்டப்படி செல்லாதே!  மேற்கு நாடுகளில் கூட செல்லாது.  

குமுகாயம் சரியான திசையில் சிந்திக்காதவரை சட்டங்களால் வேலிபோட்டுவிட முடியாது. 

1. தாம் சகோதரர்களென்ற  மனப்பாங்கு அவர்களுக்குள் வராமை.
2. இதனால் உறவுமுறைகளிடையே தோன்றக்கூடிய பகைமைகளைக் கருத்திற் கொள்ளாமை.
3. பெற்றோரின் கண்மூடித்தனமான போக்கு.
4. உடற்கவர்ச்சி மீதான ஈர்ப்பு.
5. குமுகாயப் பார்வையோ அக்கறையோ இல்லாத நிலை.
6. எமக்கு வயது(18 தொடங்கிவிட்டால்)வந்துவிட்டது என்ற மனப்பாங்கு.
7. 18வந்தவுடன் எல்லாம் தெரியும். அதனால் முடிவெடுக்கும் உரிமை உள்ளது என்ற தற்துணிபாற்றல்.
8. வேலை செய்கின்றோம் எம்மால் வாழ முடியாதா என எண்ணுதல் போன்ற  பல்வேறு சுய ஊடாட்டங்களின் விளைவாக இது போன்ற பிறள்வுநிலை உறவுகள் தொடர்கின்றன.

 நான் 1980காலப்பகுதியில் இதுபோன்ற(ஒன்றுவிட்ட சகோதரியை மணம்புரிதல்) ஒரு விடயத்தை அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சட்டப்படி செல்லாதவைகள் ஏற்று கொள் முடியாதவைகள்  மனித உரிமைகளுக்கு எதிரானது தான் அந்த கலாச்சாரம். cousin னை திருமணம் செய்வதும்  கலாச்சா

உண்மை. அத்தை மகனை அல்லது மகளை மணம் புரிவதும் சித்தாப்பா மகனை/ மகளை மணம் புரிவதும் அடிப்படையில் ஒன்றே. அறிவியல் ரீதியில் இரண்டுமே  cusin சகோதர முறை தான். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, island said:

உண்மை. அத்தை மகனை அல்லது மகளை மணம் புரிவதும் சித்தாப்பா மகனை/ மகளை மணம் புரிவதும் அடிப்படையில் ஒன்றே. அறிவியல் ரீதியில் இரண்டுமே  cusin சகோதர முறை தான். 

சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பாவின் பிள்ளைகளை முடிப்பது பாகிஸ்தானில் சில சமூகங்களில் சர்வ சாதாரணம்.

யூகே வந்த புதிதில் கூடப்படித்த ஒரு பாகிஸ்தானி, ஊருக்கு போய் வந்து தனக்கு திருமணம் ஆகி விட்டது என்றார். வாழ்த்து கூறி விட்டு காதலா, பார்த்து வைத்த திருமணமா? என கேட்க, பெற்றார் முடிவு, “பெண் என் சகோதரிதான்” என்றார் - தலை சுத்தி விழாத குறை. பிறகு விசாரித்தால் - உடன் பிறந்த சகோதரி இல்லை. சித்தி மகளாம்.

என்ன சமூகம் இது …என ஒரு மாதிரியாக இருந்தது….பிறகு வீட்டை வந்து யோசித்து பார்த்தால்…பயோலோஜி படி, இதுக்கும் மாமன் மகளை முடிப்பதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என புரிந்தது.

தமிழ் நாட்டில் ஒரு படி மேலே போய் - ஈழத்தில் நாம் அப்பா இடத்தில் வைக்கும் தாய்மாமனையே கட்டுவார்கள்.

இதுதான் தமிழ் கலாச்சாரம்.

இதை தெற்காசியாவுக்கு வெளியே உள்ள இனத்தவரிடம் சொன்னால் சத்தி எடுப்பார்கள்🤣.

இந்த நாறிப்போன கலாச்சாரத்தில் ஊறிய நமக்குத்தான் வயது-பொருந்தா காதல் அசிங்கமாக தெரிகிறது.

#விந்தை மனிதர்கள்

பிகு

இதை எழுதும் போது “இதனால தாண்டா வியாதியும், சாதியும் அதிகமாககிறது” என்ற அமரர் விவேக் மனதில் வந்து போனார்.

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதே போல உண்மையும் வெளியே வரப்போவதில்லை. ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவரை இனி கதைக்கவிடமாட்டார்கள்.

இனி இந்த பெண் சந்தோசமாக வாழத்தான் ஊர் விடுமா?

வயசாளியை கல்யாணம் கட்டினால் பாலியல் தேவை பூர்த்தியாகுமா என்று கவலைப்பட்ட நல்லுங்கள் - இந்த பெண் இனி அடையப்போகும் அவச்சொல்லை நினைத்து பார்த்திருந்தால் - அந்த வயசாளியோடாவது விரும்பியபடி வாழட்டும் என யோசித்திருப்பர்.

Edited by goshan_che
  • Like 1
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதே போல உண்மையும் வெளியே வரப்போவதில்லை. ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவரை இனி கதைக்கவிடமாட்டார்கள்.

 

சமூக அக்கறை உள்ளவர்கள், தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் உடல், உள பாதிப்புக்கு உள்ளாகிய பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும். 

கிடைக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் பார்தால் மிகவும் பின் தங்கிய இடம்/குடும்பம் போல் தோன்றுகின்றது.

இந்த பிள்ளைக்கு இனி தாய், தகப்பன், சகோதரங்களுடன் வாழ்வது சாத்தியப்படாது. ஊருக்குள் வாழ்வது பெரும் வேதனையாகும், போராட்டமாகும். 

அக்கறை உள்ள பொது நல அமைப்புக்கள் ஏதாவது பிள்ளையை நாடி தேவையான உடனடி உதவிகள், வசதிகள் செய்து கொடுத்தால் பெரும் புண்ணியம். 

சுவிஸ்/பிரான்ஸ்/கனடா போன்ற நாடுகளுக்கு இலங்கையில் இருந்தே விண்ணப்பித்து அகதி விண்ணப்பம் மூலம் செல்வதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், ஏதாவது தொண்டு நிறுவனம் பிள்ளையின் நிலமை, விருப்பம் அறிந்து பொறுப்பெடுக்க வேண்டும். 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சட்டத்தில் சிக்கல் இல்லை, சட்டம் மீறப்படவில்லை, சமூகத்துக்கு இது தவறாக படுகிறது காரணம் இரு குடும்பத்தின் "கெளரவம்" சிதைக்கப்பட்டுள்ளது. இதனால் மட்டுமே ஒரு கொலையும், கொலை முயற்சியும் நடந்தேறி இருக்கிறது. கொலை வெறியர்கள் கைது செய்யப்பட்டுய விசாரணை, தண்டனை என்று காலம் உருண்டோடும். இதுவும் கூட ஒருவகை கௌரவ பிரச்சினைதான்.
தமிழ் தாலிபானுகள் செய்யவேண்டிய பல நற்காரியங்களை புறந்தள்ளி விட்டு இதை கையில் எடுத்திருக்கிறார்கள். 
இந்த சம்பவத்தை சற்றே மாற்றி யோசித்துப்பார்த்தால், 
பெண் வயது 52, பையனின் வயது 19, இருவருக்கும் காதல் மலர்ந்து ஓடியும் போய்விட்டார்கள். 
வஞ்சகமாக வீட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டு, உறவினர்களால் அக்கம் பக்கத்தவர்களால்  அந்த பெண் குரூரமாக  பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறாள்,
பையனும் நையப்புடைக்கப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்படுகிறான். 
உங்கள் மனதில் அந்த பெண் குறித்த விண்பமும், இப்போது கொலை செய்யப்பட்ட அந்த ஆணின் கதியும் ஒரே விதமாக தெரிகிறதா?  அதே கோபம் இப்பவும் வருகிறதா?  அந்த பெண்ணின் கொலையை சமூகத்தால் கொடுக்கப்பட்ட சரியான நீதியாக தண்டனையாக எடுத்துக்கொள்வீர்களா?

  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கும் அது விளங்குவதில்லை.. மாமா மகன் அத்தை பெண்.. நாங்களாகவே சில கட்டுப்பாடுகள் கொள்கைகளை உருவாக்கிவிட்டு அதில் பெருமிதம் வேறு கொள்கிறோம்.. 

 

22 hours ago, island said:

அறிவியல் ரீதியில் இரண்டுமே  cusin சகோதர முறை தான். 

💯

அம்மாவின் தங்கையின் மகள் cusin எனக்கு தங்கச்சி.ஆனால் அம்மாவின் தம்பியின் மகள் cusin எனக்கு தங்கை இல்லை நான் திருமணம் செய்யலாம் 🙆‍♂️
இப்போது யாழ்ப்பாணத்தில்  தமிழ் தலிபான்காளால் காதலர்களுக்கு நடத்தபட்ட கொடூரம் இவற்றை எல்லாம் தமிழ் காலாச்சாரம் என்று அறிந்து எனக்கும் கோஷான் சேக்கு வந்த மாதிரி கடுமையான தலை சுற்று ஏற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/8/2023 at 08:56, விசுகு said:

எங்கள் ஐனாதிபதியை கணக்கில் எடுத்துக் கொள்ளாததை மிகவும் காட்டமாக கண்டிக்கிறோம் 😂

விசுகு   இங்கு பேசப்படுவது மகள் வயது  பெண்களை   திருமணம்  செய்தது பற்றி   மாறாக   அம்மா வயது  பெண்களை   திருமணம் செய்வது… பற்றியில்லை 🤣

On 12/8/2023 at 12:18, goshan_che said:

திருமணம் என்பது பலதுக்காக செய்வது. அதில் பாலியல் தேவை, இனவிருத்தி, பாதுகாப்பு, ஒரு நட்பு என பல விடயங்கள் இருக்கும்.

இதில் எந்த ஒன்றுக்காக குறித்த இருவர் இணைகிறனர் என்பது அவர்களை பொறுத்தது. அதில் சமூகம் தலையிட்டு -சொல்ல எதுவும் இல்லை.

Edited சனி at 12:18 by goshan_che

ஆமாம் அருமையான கருத்துகள் 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

ஜனாதிபதியின் மீதானா அபிமானம் (பொறாமை🤣) கண்ணை மறைத்து விட்டதோ🤣.

 

நம்ம ஐனாதிபதி ரீச்சரை கட்டி அவரை பிரான்ஸ் மக்கள் நாட்டின் முதல் மகன் மகளாக ஏற்றுக் கொண்டதை பார்க்கும்போது நாம சின்ன வயதில் ரீச்சர் மீது காட்டிய பாசம் எந்த வகை என்று ஒரு  சந்தேகம் வருகுதில்லை?🤪

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/8/2023 at 15:09, nochchi said:

மிக மிக ஆபத்தானதொரு நிலையை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தியுள்ளன. நாம் யாரிடமும் கையேந்தத் தேவையில்லை. எனவே எமக்கு எவருடைய புத்திமதியும் தேவையில்லை.

நீங்கள் ஜேர்மனியில் வாழ்கிறீர்கள். ..இங்கே பிள்ளைகளுக்கு பெற்றோர் அடிக்க முடியாது   20 ஆண்டுகளுக்கு முன்  எனது நண்பன் ஒருவன் பிள்ளைகளுக்கு தாறுமாறாக அடித்து விட்டார் பக்கத்து வீட்டு ஜேர்மனியன். பொலிஸாருக்கு தகவல் வழங்கி விட்டான்   உடனும். பொலிசார் வந்து விட்டார்கள்  பிள்ளைகள் மேனியில். தழும்புகள் இருந்தது   அவரை இரண்டு நாள்கள். சிறையினுள்ளே  வைத்திருந்தது   கொண்டு வந்து வீட்டில் விட்டார்கள்  இனிமேல் இப்படி அடிக்கப்படாது   என எச்சரிக்கை செய்ததுடன் மீறினால்  பிள்ளைகளை இளையோர் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார்கள்.எனக்   கூறிச்சென்றார்கள்.  வெளிநாட்டிலிருந்து கொண்டு இலங்கையில் பிள்ளைகள் வளர்ப்பது போல்   வளர்க்க வேண்டும் என்று  ஆசைப்படலாமா?    இப்போது இலங்கையிலேயோ   வெளிநாடு மாதிரித் தான் பிள்ளைகள் வளர்க்கப்படுகிறது   இலங்கையில் பிள்ளைகள் பெற்றோர் சொல்லை கேட்கிறார்களா.  ?? இப்போது   இல்லையே பெற்றோர் தான்  பிள்ளைகள் சொல்லை கேட்கிறார்கள்  ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/8/2023 at 23:48, island said:

உண்மை. அத்தை மகனை அல்லது மகளை மணம் புரிவதும் சித்தாப்பா மகனை/ மகளை மணம் புரிவதும் அடிப்படையில் ஒன்றே. அறிவியல் ரீதியில் இரண்டுமே  cusin சகோதர முறை தான். 

ஆமாம்   துருக்கி மக்கள்  பெரும்பாலும்  இப்படி சகோதர முறையில் திருமணம் செய்கிறார்கள்    25. ஆண்டுகளுக்கு முன்  நான் இருக்கும் இடத்துலும்.  வட்டுக்கோட்டையைச் சேர்ந்த  ஒன்னுவிட்ட  சகோதரங்கள். திருமணம் செய்திருந்தார்கள்.  இப்போது கனடாவில் இருக்கிறார்கள்   நம்ம ஊரில்  காவலுக்கு ஒன்றுவிட்ட அண்ணணை.  விட்டார்கள்  தங்கை  அண்ணாவின். குழந்தையை சுமந்தார்.    அவன் சொன்னான்” நான் திருமணம் செய்கிறேன்   ...அவர்கள் உடன்படவில்லை   பிள்ளையை   இல்லாமல் செய்து விட்டு  வேறு ஒரைவனுக்கு   கட்டி வைத்து விட்டார்கள். 

Posted
On 11/8/2023 at 19:10, goshan_che said:

 

55 வயது மனிதரை முடித்தால் 10 வருடத்தில் பாலியல் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை வரும் என்கிறீர்கள்  - எல்லா ஆண்களுக்கும் அப்படி அல்ல. பல உதாரணங்களை காட்டலாம். அப்படி வந்தாலும் இவர்களின் உறவு, உடற் தேவையை இரெண்டாம் பட்சமாக கருதும் உறவாக இருக்கலாம். 

 

 

எந்த இடத்தில் நான் இவ்வாறு பாலியல் தேவை பற்றி எழுதியிருக்கின்றேன் என்று கூற முடியுமா?

Quote


//, அப்படி கட்டி 15 வருடங்கள் சென்ற பின் உருவாகக் கூடிய சிக்கல்களை புரிந்தும், அவற்றைப் பற்றி// 

என நான் எழுதியிருப்பதைப் பார்த்து, வெறுமனே பாலியல் தேவைகளை மட்டுமே கருத்தில் எடுத்து எழுதியிருக்கின்றேன் என உங்களுக்கு வசதியாக நீங்களே எடுத்துக் கொண்டு கருத்துப் பகிர்ந்து இருக்கின்றீர்கள்.

15 வருடங்களின் பின் பாலியல் தேவை மட்டுமல்ல, அக் குடும்பத்திற்கு பிறக்க கூடிய பிள்ளைகளிற்கான பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தேவைகள், பிள்ளை வளர்ப்பு, வயது போகும் போது ஏற்படக் கூடிய வருத்தங்கள் போன்றவற்றையும் கருத்தில் எடுத்தே என் கருத்து அமைந்தது. உண்மையில், பாலிய தேவை என்பது இரண்டாம் பட்சம் இங்கு. பிள்ளை வளர்ப்பும், பொருளாதாரமும் தான் முக்கியம் இங்கு.

கணவன் அற்ற அல்லது நோயின் தாக்கத்தில் கணவர் இருக்கும் பெண்கள் பிள்ளைகளை வளர்க்கவில்லையா அல்லது பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க முடியாதா என கேள்வி கேட்க முடியும். கண்டிப்பாக, முடியும். போரில் கணவரை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள் வாழும் சமூகம் எம்முடையது. ஆனால் அவர்கள் படும் சிரமம் பற்றி நான் எழுதி நீங்கள் அறிய வேண்டி இல்லை என நம்புகின்றேன். 

19 வயது பெண் என்னிடம் வந்து தான் இப்படி 54 வயதான ஆணை திருமணம் முடிக்க போகின்றேன் என கூறியிருந்தால், கண்டிப்பாக இவற்றைத் தான் கூறி, இன்னும் கொஞ்சம் பொறுத்து முடிவு எடுக்கச் சொல்லி இருப்பேன்.

இதனால் தான், இந்த காதலுக்கு என் ஆதரவில்லை என எழுதியிருந்தேன்.
 

இந்த திரியை இதனை விட நீட்டிப்பதற்கு விரும்பவில்லை. திரியை நீட்டிக்க நீட்டிக்க, வழக்கம் போல அரட்டைத் தனமான கருத்துகளும் வந்து குவிகின்றதை காணக் கூடியதாக உள்ளது. எனவே என் முதல் பதிலின் இறுதியில் குறிப்பிட்டு இருந்ததை மீண்டும் எழுதுகின்றேன். 
 

Quote

//
அதே நேரத்தில், அந்தப் பெண்ணின் பெற்றோர்களும் உறவுகளும் செய்தது காட்டுமிராண்டித்தனம். பக்குவமாக எடுத்து சொல்லி இன்னும் ஒரு சில வருடங்கள் காத்திருக்க செய்து, அப் பெண் 21 வயது முடிவடையும் வரையாவது பொறுக்கச் சொல்லி பின் முடிவை எடுக்கச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் வரட்டு கெளரவமும், பழிவாங்கும் உணர்வும் மேல் எழுந்து காட்டுமிராண்டித்தனமாக (காட்டுமிராண்டிகள் என்பது கூட ஒருவகையில் முன்னோர்களை பழிக்கும் சொல் என நினைக்கின்றேன்) நடந்து கொண்டு இருக்கின்றார்கள். 
//

இங்கு இருவருக்கிடையிலான வயது வேறுபாடு என்பதை விட எனக்கு முரண்பாடாக இருந்த விடயம் அப் பெண்ணின் வயது. அதனால் தான் பெற்றோர்கள் அப் பெண்ணை இன்னும் சில வருடங்கள் காத்திருக்க செய்து விட்டு முடிவெடுக்க சொல்லி ட்டு இருக்கலாம் என எழுதியிருந்தேன் (இந்த கருத்தை வரவேற்று இருந்தீர்கள் என நினைவு)

நன்றி வணக்கம்.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட இது இன்னும் இழுபடுதா?

கோப்பாயில் அடுத்த கொலையும் விழுந்து ஆறு பேர் கைது. இந்த முறை 51 வயசு, 9 வயசு சிறுமி மீது பாலியல் வன்புணர்வு. 
 

https://www.dailymirror.lk/breaking_news/Six-arrested-over-killing-of-man-accused-of-raping-underage-girl/108-265224

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
55 minutes ago, நிழலி said:

எந்த இடத்தில் நான் இவ்வாறு பாலியல் தேவை பற்றி எழுதியிருக்கின்றேன் என்று கூற முடியுமா?

தனியே அதை பற்றி மட்டும் நீங்கள் எழுதியதாக நான் கூறவில்லை. ஆனால் அதை பற்றியும் நீங்கள் எழுதியுள்ளீர்கள் என கீழே 👇 நீங்களே ஏற்கிறீர்கள்.

 

55 minutes ago, நிழலி said:

வெறுமனே பாலியல் தேவைகளை மட்டுமே கருத்தில் எடுத்து எழுதியிருக்கின்றேன்

 

55 minutes ago, நிழலி said:

உண்மையில், பாலிய தேவை என்பது இரண்டாம் பட்சம்

ஆனால் அதுவும் ஒரு பட்சமாக உங்களால் கருத பட்டுள்ளது. இதைத்தான் நான் கூறி பதிலும் எழுதினேன்.

————

55 minutes ago, நிழலி said:

அக் குடும்பத்திற்கு பிறக்க கூடிய பிள்ளைகளிற்கான பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தேவைகள், பிள்ளை வளர்ப்பு, வயது போகும் போது ஏற்படக் கூடிய வருத்தங்கள் போன்றவற்றையும் கருத்தில் எடுத்தே என் கருத்து அமைந்தது

இதே போல் 1ம் மாரடைப்பு வந்தோர், குடும்பத்தில் பரம்பரையாக தசை தளர்வு நோய் வாய்ப்பு உள்ளோர், உடல் நிலை, அல்லது உடல் உறுப்புகள் செயலலின்மை காரணமாக life expectancy குறைந்தோர், அல்லது அதிகம் ஓடியாடி பிள்ளை வளர்க்க முடியாத உடல் வலுவற்றோர் திருமணம் முடிப்பதையும் எதிர்பீர்களா?

இல்லைதானே?

54 வயசாளி - அடுத்த வருடம் பிள்ளை பெற்றால் பிள்ளை 15 வயதாகும் போது அவருக்கு 70 வயதாய் இருக்கும். ரஜனி காந்துக்கு இப்போ 73 வயது.

 

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
57 minutes ago, நிழலி said:

19 வயது பெண் என்னிடம் வந்து தான் இப்படி 54 வயதான ஆணை திருமணம் முடிக்க போகின்றேன் என கூறியிருந்தால், கண்டிப்பாக இவற்றைத் தான் கூறி, இன்னும் கொஞ்சம் பொறுத்து முடிவு எடுக்கச் சொல்லி இருப்பேன்.

என்னிடம் அவர்களாக வந்து கேட்டிருந்தால் இந்த பிரச்சனை எல்லாம் வரும் - ஆனால் ஒரு கட்டிளம்காளையை கட்டி அவர் நாளைக்கே மோட்டார் சைக்கிள் விபத்தில் அடிபட்டு வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்தாலும் இதே நிலை வரும். ஆனால் நிகழ்தகவு இதற்கு குறை என விளக்கி. முடிவு உன் கையில் என சொல்லி இருப்பேன்.

மேலும் இந்த பெண்ணின் தேவை என்ன (பாலியல், சரீர பாதுகாப்பு, நிதி பாதுகாப்பு, அரவணைப்பு, நிம்மதி, ஈர்ப்பு - இன்னும் பல  - இதில் எது? எல்லாமுமே?) என்ற கேள்விக்கு விடைதெரியாமல் - இதில் என் கருத்தை கூற விளையமாட்டேன்.

57 minutes ago, நிழலி said:

இங்கு இருவருக்கிடையிலான வயது வேறுபாடு என்பதை விட எனக்கு முரண்பாடாக இருந்த விடயம் அப் பெண்ணின் வயது. அதனால் தான் பெற்றோர்கள் அப் பெண்ணை இன்னும் சில வருடங்கள் காத்திருக்க செய்து விட்டு முடிவெடுக்க சொல்லி ட்டு இருக்கலாம் என எழுதியிருந்தேன் (இந்த கருத்தை வரவேற்று இருந்தீர்கள் என நினைவு)

ஓம். 

46 minutes ago, Nathamuni said:

அட இது இன்னும் இழுபடுதா?

கோப்பாயில் அடுத்த கொலையும் விழுந்து ஆறு பேர் கைது. இந்த முறை 51 வயசு, 9 வயசு சிறுமி மீது பாலியல் வன்புணர்வு. 
 

https://www.dailymirror.lk/breaking_news/Six-arrested-over-killing-of-man-accused-of-raping-underage-girl/108-265224

 

இது சிறுவர் துஸ்பிரயோகம். 

மேலே விவாதித்தது, திருமணம் செய்யலாம் என சட்டம் வகுத்த நாளை தாண்டி ஒரு வருடம் ஆகி விட்ட ஒரு வயது வந்த பெண்ணை பற்றி.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/8/2023 at 12:37, நிழலி said:

கார் ஓட்டுவதைப் போல, அல்லது வாக்கு போடுவதைப் போல அல்ல நீண்டகால பந்தம் ஒன்றான திருமணம் முடிப்பது தொடர்பான முடிவு என்பது என் கருத்து. வாக்கு போடுவதற்கு ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கிடைப்பது மாதிரி ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒரு முறை கலியாணம் கட்ட முடியாது.
 

உறவுகளை தெரிவு செய்கின்ற, ஒரு குடும்பத்தை கொண்டு நடத்துகின்ற பக்குவம் என்பது ஆணுக்கு பெண்ணை விட தாமதமாகவே வருகின்றது என்பது என் கணிப்பு. பெண்ணுக்கு 22 என்றால், ஆணுக்கு 25 வயதாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றேன். எங்கள் தாத்தாக்களின் காலத்தில் இருந்த வாழ்க்கை சூழலில், கூட்டுக் குடும்ப அமைப்பில் இந்த வயது கட்டுப்பாடு அவசியமாக இருக்கவில்லை என்பதால் அவர்கள் 20 இலேயே திருமணம் முடித்து பிள்ளைகளையும் பெற்று இருந்தனர். ஆனால் இன்றைய இயந்திர வாழ்க்கை சூழலில், ஒவ்வொருவரும் தனித் தனி தீவுகளாகி விட்ட பின்னர் இது அவசியம்.

என் மகனுக்கு இந்த வருடம் 18 வயதாகிவிட்டது. அவனால் கல்வி தொடர்பான சில விடயங்களில் மட்டுமே உறுதியான முடிவை எடுக்க கூடியதாக உள்ளது (அதுவும் நாளை மாறலாம்). பல விடயங்களில் தெந்தட்டு முடிவுகள் தான். எது முதலில் இலகுவாகக் கிடைக்கின்றதோ, அதை விரும்பிக் கொள்ளும் வயது இது, இந்த வயதில் நீண்ட கால பந்தம் ஒன்றான, திருமணம் தொடர்பான இறுதி முடிவை எடுக்க முடியாது. 

 

16 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய இரு உடல்கள் பாதுகாப்பான முறையில் பாலியல் உறவில் ஈடுபட அவர்களது சம்மதம் மட்டும் போதும். இங்கு இரு உடல்கள் ஒரு குறுகிய நேரத்தில் ஈடுபடும் செயல்முறை இது. ஆனால், திருமணம் மூலம் ஏற்படும் பந்தம் என்பது  இவ்வாறான குறுகிய காலத்துக்கு உரியது அல்ல. வாழ் நாள் முழுதும் தொடர்ந்து இருக்கும் உறவு அது. இவ்வாறு தன்னுடன் பயணிக்க போகும் ஒரு உறவை "இவர் தான்" என , உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இருக்கும் 18 வயதில் தீர்க்கமாக முடிவு செய்தால், அது பிழைத்துப் போகக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.   இதனால் தான் வடக்கு கிழக்கில் விவாகரத்துகளும் இளவயது குடும்பஸ்தவர்களின் தற்கொலைகளும்  கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துச் செல்கின்றது. இவற்றில் ஈடுபடுகின்றவர்களின் வயதை கவனித்துப் பாருங்கள்

3.1. கள்ள உறவு எனும் சொல்லே மிகவும் கொச்சையானது. இந்தக் கொச்சையான சொல்லின் அர்த்தம், இருவர் தமக்கு ஏற்கனவே ஒரு துணை இருக்கும் போது, அந்த துணையை ஏமாற்றி, இன்னொருவருடன் பாலியல் உறவில் ஈடுபடுவது. இங்கு சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் இவ்வாறு தம் துணைகளை ஏமாற்றியதாக நான் அறியவில்லை.  (நான் இந்த சம்பவம் தொடர்பான ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதற்கு தான் முடிவு செய்துள்ளனர் எனும் எடுகோளில் தான் இவற்றை எழுதுகின்றேன்)

 

நான் இங்கு எழுதும் கருத்து என் கருத்து. யாழின் கருத்துக்களத்தில் எழுதும் கருத்து. என் இந்த 18 வயது திருமணத்துக்கு ஏற்ற வயது அல்ல எனும் கருத்து நீதிமன்றம் ஒன்றில் ஒரு சில வினாடிகளிலேயே நிராகரிக்கப்பட்டு விடக் கூடிய கருத்து. 

என் வீட்டில், என் இரத்த உறவுகளுக்குள் இப்படியான ஒரு சம்பவம் இடம்பெற்றால் நான் எப்படி எதிர்வினையாற்றுவேன் என்பதன் அடிப்படையில் தான் என் கருத்து அமைகின்றது. 19 வயது பெண்ணை 54 வயதான ஒருவன் கலியாணம் கட்டுவதை ஏற்கின்ற, அப்படி கட்டி 15 வருடங்கள் சென்ற பின் உருவாகக் கூடிய சிக்கல்களை புரிந்தும், அவற்றைப் பற்றி அக்கறைப்படாமல், முற்போக்குவாதியாகவோ (அல்லது பிற்போக்குவாதியகவோ) அல்லது 100 வீதம் சட்டத்தின் படி வாழ்கின்றவனாகவோ நான் என்றுமே இருந்ததில்லை என்பதன் அடிப்படையில் எழுதும் கருத்துகள் இவை.

நன்றி

சரியான பதில் நிழலி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

54 வயது நபர் 90 வயது மட்டும் அல்லது அதற்கு மேலும்  உயிர் வாழ முடியாத?? 25 வயது இளைஞர்  30வயதில  அல்லது 35 வயதில் இறக்க முடியாத?? மனிதர்கள் எந்த வயதிலும் இறக்கலாம்.  மனிதன் இறந்து விடுவார்கள் என்று எப்படி சக மனிதன்  முடிவு செய்ய முடியும்??  எனது தந்தையின் தகப்பனார். 1918. ஆம் ஆண்டு   சிங்கப்பூர் மலேசியா  இணந்த.  நாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்தது வேலை செய்தவர்  வ கைதடிக்கு வந்து திருமணம் செய்து திரும்பி வேலைக்கு போனார்    எனது தகப்பனார். தாய் வயிற்றில் வளர்த்து வந்தார்  ...தகப்பன்.  அங்கே இறந்து விட்டார்  ..அதன் பிற்பாடு தான்    எனது அப்பா பிறந்தார்   அவருக்கு தகப்பனை  தெரியாது  ...தாயும் இரண்டாவது திருமணம் செய்து விட்டார்  தகப்பனின். தாய் தான் வளர்த்து வந்தார்   எனது அப்பாவுக்கு இலங்கையில் ஒரு சிறிய தகப்பனும். மலேசியாவில் ஒரு சிறிய தகப்பனும் இருந்தார்கள்     என்னை பேரன். தூக்கி வளர்க்கவில்லை எழுத பெரிது ஆகிவிடும்    நிறுத்துகிறேன்  ..இன்று இலங்கையில் 90 ஆயிரம் விதவைகள்  மறுமணம்  செய்யாமல் இருப்பற்க்கு காரணம்   எங்கள் கலாசாரம்    கடந்த வாரம்  ஒரு பெண் எழுதிய பதிவை படித்தேன்   ஆண்கள் மனைவி இறந்தால் மறுமணம் செய்யலாம்   பெண்கள் விதவைகள் என்ற பெயரில் வெள்ளை சிலை உடன் ஏன் வீட்டுகுள். குந்தியிருக்க வேண்டும்   நாங்கள் வாழ்க்கையை  எப்போது எப்படி அனுபவிப்பது என்று   ?? கேள்வி சரியா?? பிழையா?? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, Kandiah57 said:

இன்று இலங்கையில் 90 ஆயிரம் விதவைகள்  மறுமணம்  செய்யாமல் இருப்பற்க்கு காரணம்   எங்கள் கலாசாரம்  

உண்மை. காதலனை சித்திரவதை செய்து அடித்து கொன்ற  காதலியை சித்திரவதை செய்து நிர்க்கதியாக்கிய அதே கலாச்சாரம் தான்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 13/8/2023 at 10:52, நியாயத்தை கதைப்போம் said:

 

சமூக அக்கறை உள்ளவர்கள், தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் உடல், உள பாதிப்புக்கு உள்ளாகிய பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும். 

கிடைக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் பார்தால் மிகவும் பின் தங்கிய இடம்/குடும்பம் போல் தோன்றுகின்றது.

இந்த பிள்ளைக்கு இனி தாய், தகப்பன், சகோதரங்களுடன் வாழ்வது சாத்தியப்படாது. ஊருக்குள் வாழ்வது பெரும் வேதனையாகும், போராட்டமாகும். 

அக்கறை உள்ள பொது நல அமைப்புக்கள் ஏதாவது பிள்ளையை நாடி தேவையான உடனடி உதவிகள், வசதிகள் செய்து கொடுத்தால் பெரும் புண்ணியம். 

சுவிஸ்/பிரான்ஸ்/கனடா போன்ற நாடுகளுக்கு இலங்கையில் இருந்தே விண்ணப்பித்து அகதி விண்ணப்பம் மூலம் செல்வதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், ஏதாவது தொண்டு நிறுவனம் பிள்ளையின் நிலமை, விருப்பம் அறிந்து பொறுப்பெடுக்க வேண்டும். 

முயற்சி செய்தாலும் விளைவு நாங்கள் எதிர்பார்த்த மாதிரி வருமே தெரியாது. ஏனெனில் இந்த விடயங்களில் நாங்கள் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. 

நன்றி

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, Kandiah57 said:

வெளிநாட்டிலிருந்து கொண்டு இலங்கையில் பிள்ளைகள் வளர்ப்பது போல்   வளர்க்க வேண்டும் என்று  ஆசைப்படலாமா?    இப்போது இலங்கையிலேயோ   வெளிநாடு மாதிரித் தான் பிள்ளைகள் வளர்க்கப்படுகிறது   இலங்கையில் பிள்ளைகள் பெற்றோர் சொல்லை கேட்கிறார்களா.  ?? இப்போது   இல்லையே பெற்றோர் தான்  பிள்ளைகள் சொல்லை கேட்கிறார்கள்  ...

இங்கே பிள்ளைகளை அடித்துவளர்க்குமாறு யாரும் கூறவில்லை. அதைவிடப் புலத்திலே பிள்ளைகளுக்குக் கல்விமுறை அவர்களுக்கான தெளிவைக்கொடுக்கும். ஆனால், குமுகாயம் தொடர்பான பார்வை மற்றும் தொடர்பாடலை நாம்தான் தெளிவுபடுத்த முடியும். அத்தோடு மீண்டும் சொல்கின்றேன். இங்கு யாரும் யாருக்கும் எதுவும் சொல்லமுடியாது. ஒருவேளை எனது நன்பணின் மகன் தண்ணியில் தள்ளாடியதைக் கண்டால் கேட்கக்கூட முடியாது. தந்தையிடம் சொன்னால், இதெல்லாம் இங்கு சர்வசாதாரணம்தானே என்று கேட்பார். இதுதான் மனநிலை.
நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, nochchi said:

இங்கே பிள்ளைகளை அடித்துவளர்க்குமாறு யாரும் கூறவில்லை. அதைவிடப் புலத்திலே பிள்ளைகளுக்குக் கல்விமுறை அவர்களுக்கான தெளிவைக்கொடுக்கும். ஆனால், குமுகாயம் தொடர்பான பார்வை மற்றும் தொடர்பாடலை நாம்தான் தெளிவுபடுத்த முடியும். அத்தோடு மீண்டும் சொல்கின்றேன். இங்கு யாரும் யாருக்கும் எதுவும் சொல்லமுடியாது. ஒருவேளை எனது நன்பணின் மகன் தண்ணியில் தள்ளாடியதைக் கண்டால் கேட்கக்கூட முடியாது. தந்தையிடம் சொன்னால், இதெல்லாம் இங்கு சர்வசாதாரணம்தானே என்று கேட்பார். இதுதான் மனநிலை.
நன்றி 

உண்மை  ஆனால் எங்கள் பெற்றோர் அறிவுக்கும். எங்களது அறிவுக்கும்.  பாரிய வித்தியாசம் உண்டு   பயத்தை ஊட்டி  அடக்கி ஒடுங்கி   வளர்த்தார்கள்   ...காரணம் தங்கள் கட்டுப்பட்டில். பிள்ளைகள் இருக்க வேண்டும்  ..சொல்வதை  மறு பேச்சின்றி  சரி பிழைக்கு அப்பால். செய்யவேண்டும் ..திருமணம் கேட அவ்வாறே   இன்றைய எமது பிள்ளைகள் நிறையவே திறமையை  வெளிப்படுத்துகிறார்கள்.  காரணம் பயமில்லை   துணிவு அது காரணமாக தன்னம்பிக்கை கொண்டவர்களாக விளங்குகிறார்கள். 

  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இளங்கோவன் யார்? காங்கிரஸ்காரர். புலிகளின் பரம எதிரி. சோனியா பக்தர். தெலுங்கு வம்சாவழியினர். இவரும் சீமானும் எந்த இனத்தின் அல்லது எந்த கொள்கையின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபட முடியும்? வேண்டு? அதுவும் உயிரோடு இருக்கும் போது போய் சந்தித்தால் கூட பரவாயில்லை. செத்த பின் இளக்கோவன் பிணத்தோடு என்ன அரசியலை செய்யப்போகிறார் சீமான்?      
    • சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த செல்வம் அடைக்கலநாதன்  
    • நாதத்தின் அவதாரைக் கனவில் கண்டீர்களா? அல்லது "நாதம்" என்று ஒருவர் அறிமுகம் செய்து கொண்டாரா கனவில்? ஒரு "கனவியல்" ஆராய்ச்சிக்காகத் தான் கேக்கிறேன்😎
    • இது தொடர்பாக சில விடயங்களைச் சொல்ல விரும்புகின்றேன். மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயம் என்பது கொழும்பு  மட்டக்குளியில் உள்ள ஒரு free gospel church ஆகும். சங்கிகளின் மொழியில் சொல்வதனால் மதம் மாற்றும் ஒரு நிறுவனமாகும். இந்த ஆலயத்தின் நத்தார் நிகழ்வுக்கு இந்தியத் தூதர் ஏன் வரவேண்டும் அல்லது அழைக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. அடுத்ததாக ஏழை மக்களுக்கு பணம்கொடுத்து மதம்மாற்றுபவர்கள் என்று சங்கிகளால் சொல்லப்படும் ஓர் ஆலய மாணவர்களுக்கு ஏன் இந்திய மக்களின் உதவித்திட்டம் வழங்கப்பட வேண்டும்? இந்தியத் தூதர் ஓரு கிறிஸ்தவராக இருந்து அழைக்கப்பட்டிருந்தால் அதில் ஓரளவுக்குத்தன்னும் நியாயம் இருந்திருக்கும்.  சரி இந்த நிகழ்வில் ஏன் மீனவர் பிரச்சினை குறித்த கருத்துக்களை இந்தியத்தூதர் தெரிவிக்கவேண்டும்? இவ்வாறான கேள்விகள் எனக்குள் எழுகின்றன. இது குறித்து ஈழத்து இந்து சமயிகளின் தலைவன் மற்வன்புலவு சச்சிதானந்தனினதும் இந்து சமயத்தின் காவலன் சிறுவர் இல்லம் புகழ் ஆறுதிருமுருகனினதும் எதிர்வினை எப்படி இருக்கப்போகின்றது என்பதனையும் அறிய உள்ளம் அவாவுகின்றது. மேலதிக தகவல்களாக இந்த மிஸ்பா சபையின் போதகர் ஜெயம் சாரங்கபாணி (படத்தில் இடதுபுறம் இருப்பவர்) ஆவார். சாரங்கபாணி என்ற பெயர் பொதுவாக தெலுங்கு மொழி பேசும் மக்களின் பெயராக அறியப்படுகின்றது. இறுதியாக இது ஓரு மத நிகழ்வாக இருந்தால் பேசாமல் கடந்து போய்விடலாம். ஆனால் இங்கு ஒரு மதநிகழ்வில் அரசியல் பேசப்பட்டிருக்கின்றது. அதுதான் சில அய்யங்களை தோற்றுவித்திருக்கின்றது!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.