Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை: பெண் சாப்பிட்ட சாக்லேட்டுக்குள் புதைந்திருந்த மனித கை விரல் - எப்படி வந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சாக்லேட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வைத்தியசாலையில் உள்ள சிற்றுண்டி சாலையில் வாங்கிய சாக்லேட்டினுள் மனித கை விரல் இருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், யூ.எல். மப்றூக்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 9 ஆகஸ்ட் 2023, 05:43 GMT
    புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்

(எச்சரிக்கை - இந்தச் செய்தியில் தரப்படும் தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)

இலங்கையில் பெண் ஒருவர் சாப்பிட்ட சாக்கலேட்டினுள் மனித கைவிரல் ஒன்று இருந்தமை தொடர்பான செய்தி பெரும் அதிர்ச்சியினையும் பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள மஹியங்கணை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மஹியங்கணை ஆதார வைத்தியசாலையின் 'ஈசிஜி' பிரிவில் பணியாற்றும் பெண் ஒருவர், வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில் (கேன்டீன்) இந்த சாக்கலேட்டை வாங்கியதாக மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சஹன் சமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

'நட்ஸ்' என நினைத்த பெண்

”குறித்த நபர் கடந்த 03ஆம் தேதி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அந்த சாக்லேட்டை வாங்கி - அதில் ஒரு பகுதியைச் சாட்பிட்டு விட்டு, மீதியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார். பின்னர் சனிக்கிழமை (05ஆம் தேதி) மிகுதி சாக்கலேட்டை சாப்பிட்டுள்ளார்.

அப்போது ஏதோ கடினமான பொருள் வாயினுள் இருப்பதை உணர்ந்துள்ளார். அது சாக்கலேட்டினுள் உள்ள 'நட்ஸ்' ஆக இருக்குமென நினைத்து அதனை கடித்துள்ளார்.

ஆனாலும் அது வித்தியாசமான ஒன்றாக அவருக்கு புரியவே, வெளியில் எடுத்துப் பார்த்த போது - மனித கைவிரலைக் கண்டுள்ளார் என, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் - சுகாதார பரிசோதகர்களில் ஒருவரான சல்மான் பாரிஸ் பிபிசி தமிழிடம் கூறினார்.

இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு குறித்த நபர் முறையிட்டுள்ளார்.

பின்னர், இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், மனித விரல் காணப்பட்ட சாக்கலேட் உற்பத்தி செய்யப்பட்ட தினத்தைக் கொண்ட - அதே வகை சாக்கலேட்கள் அனைத்தையும், அந்தப் பகுதியிலுள்ள விற்பனை நிலையங்களில் கைப்பற்றி, அவற்றினை தம்வசம் எடுத்துக் கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பில், மஹியங்கணை நீதவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 07) அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இருந்தபோதும், சாக்கலேட்டினுள் இருந்த பொருள் - மனித விரல்தானா என்பதை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையுள்ளதால், அதனை கொழும்பு ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சல்மான் பாரிஸ் குறிப்பிட்டார்.

தற்போது மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில், குறித்த தடயப் பொருளான மனித விரல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

ஆய்வக அறிக்கை கிடைத்த பின்னர் இது தொடர்பில் முறையாக வழக்குத் தொடுக்கப்படும் என சல்மான் கூறுகின்றார்.

சாக்கலேட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது குறித்து பிபிசி தமிழிடம் மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சஹன் சமரவீர கூறுகையில், "உணவுப் பொருளொன்றில் மனித கைவிரல் ஒன்று இருந்தமை பாரதூரமான விடயமாகும். குறித்த சாக்கலேட் உற்பத்தி நிறுவனத்தின் தவறாகவே இதனை நாம் பார்க்கிறோம். இது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளோம். அங்குதான் தீர்மானம் மேற்கொள்ளப்படும்,” என்றார்.

குறித்த சாக்கலேட்டினுள் மனித விரல் கண்டெடுக்கப்பட்ட தகவல் வெளியான அன்றைய தினம், அந்த சாக்கலேட் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் வந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டதாக அறிய முடிகிறது. பின்னர் தொடர்புடைய சாக்கலேட் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து வந்தவர்களும் - மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் தகவல்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

இவ்விடயம் குறித்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சல்மான் பாரிஸ் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையில் இவ்வாறான சம்பவமொன்று நடந்துள்ளமை இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் உணவுப் பொருள்களில் பூச்சிகள் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மனித உறுப்பு ஒன்று உணவுப் பொருளில் காணப்பட்டமை இதுவே முதன்முறை. அதனால், இது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு மட்டங்களுடனும் கலந்தாலோசித்து வருகிறோம்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c4n4kjvy8dpo

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்கையில் இனி சாக்கலேட்டே சாப்பட மாட்டார்

ஒரு வேலைகாரர் கைவிரல் வெட்டுப்பட்டு சாக்கலேட்டுடன் கலந்திருக்குமா அல்லது கொலை செய்யப்பட்டு சக்கலேட்டுடன் கலந்திருப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நின்ற போது பரீட்சித்து பார்ப்பதற்காக சொக்லேற் வாங்கி சாப்பிட்டு பார்த்திருக்கிறேன்.இலங்கையின் உணவு நல்ல சுவைகளுக்கு நேர் எதிரானது சொக்லேற். சுவையே இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்டோஸ் சொக்லேட்ஸ் சமீபத்திய சமூக ஊடக உரிமைகோரல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கிறது

கண்டோஸ் சொக்லேட் உற்பத்தியாளரான சிலோன் சொக்லேட்ஸ் லிமிடெட்’, அதன் சொக்லேட் தயாரிப்புகளில் ஒன்று சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்களில் சமீபத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மஹியங்கனையில் கொள்வனவு செய்யப்பட்ட கண்டோஸ் சொக்லேட் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அப்பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இருந்து அதே வகை தயாரிப்புகள் திரும்பப் பெறப்படுவதற்கு வழிவகுத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடக உரிமைகோரல்களை நிவர்த்தி செய்துள்ள ‘சிலோன் சொக்லேட்ஸ் லிமிடெட்’ இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ‘சிலோன் சொக்லேட்ஸ் லிமிடெட்’  வருத்தம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/267760

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊறுகாய் போத்தலினுள் புதிய ஆணி இருந்தது. கடையில் திருப்பி கொண்டுபோய் கொடுத்த போது சந்தேகத்துடன் எடுத்து திகதியையும் பார்த்து, என்னையும் பார்த்து ஆணியையும் பார்த்தார். கொண்டு போன சொப்பிங் பாக்கை விரித்து, எல்லாவற்றையும் கொட்ட, அடியில் இருந்து மேலும் இரண்டு விழ வெலவெலுத்துப் போனார்.

சம்பளம் ஓழுங்காக கொடுக்காவிடில், அல்லது சரியாக நடத்தாவிடில் இப்படி இந்தியாவில் நடப்பது சகயமப்பா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, Nathamuni said:

சம்பளம் ஓழுங்காக கொடுக்காவிடில், அல்லது சரியாக நடத்தாவிடில் இப்படி இந்தியாவில் நடப்பது சகயமப்பா!

நானும் சாப்பாடு தயாரிக்கிறவன் எண்ட முறையிலை சொல்லுறன். வெளிநாடுகளிலையும் உதெல்லாம் சகஜம்......இறைச்சி வெட்டேக்கை  நடக்கிற கூத்துக்கள் சொல்லி வேலையில்லை கண்டியளோ :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நானும் சாப்பாடு தயாரிக்கிறவன் எண்ட முறையிலை சொல்லுறன். வெளிநாடுகளிலையும் உதெல்லாம் சகஜம்......இறைச்சி வெட்டேக்கை  நடக்கிற கூத்துக்கள் சொல்லி வேலையில்லை கண்டியளோ :face_with_tears_of_joy:

உந்த பண்டி சோசேய் எனக்கு கண்ணிலை காட்டேலாது கண்டியளே. 

இறைச்சியை வாங்கி சவ்வுகள், சங்கதிகள வெட்டி எறிவம். உந்தக் கோதாரி விழுவார் ஒண்டையும் எறியமாட்டாங்கள். 

எல்லா நசலுகளையும், வெங்காயம், உள்ளி, உப்பு போட்டு அரைச்சு அனுப்ப....

🥺☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, Nathamuni said:

உந்த பண்டி சோசேய் எனக்கு கண்ணிலை காட்டேலாது கண்டியளே. 

இறைச்சியை வாங்கி சவ்வுகள், சங்கதிகள வெட்டி எறிவம். உந்தக் கோதாரி விழுவார் ஒண்டையும் எறியமாட்டாங்கள். 

எல்லா நசலுகளையும், வெங்காயம், உள்ளி, உப்பு போட்டு அரைச்சு அனுப்ப....

🥺☹️

இஞ்சை பாருங்கோ நாதமுனியர்! நீங்கள் சுத்தம் சுகாதாரமாய் சாப்பிடோணும் எண்டால் வீட்டிலை தான் சமைச்சு சாப்பிடோணும்.மற்றும்படி கடைச்சாப்பாடு எண்டால் சாப்பாட்டின்ரை நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது. யம் யம் எண்டு ரசிச்சு ருசிச்சு சாப்பிட வேண்டியதுதான். ஒவ்வொண்டுக்கும் ஆதி அந்தம் தேட வெளிக்கிட்டால் பச்சைத்தண்ணி கூட குடிக்க மாட்டியள். இந்த உலகம் முழுக்க இதுதான் நிலை.

பண்டி வந்து இஞ்சை ஜேர்மனியிலை கிட்டத்தட்ட எங்கடை கற்பகதரு மாதிரி.பண்டிக்கால் கூட வீச மாட்டாங்கள்.பண்டி நாக்கிலை ஒரு சாப்பாடு செய்வாங்கள். அது சாப்பிட நீங்கள் தவமிருக்க வேணும்.அதிலையும் பண்டி ரத்தத்திலை...... வேண்டாம் இதோட விடுவம்..:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2023 at 23:02, குமாரசாமி said:

கற்பகதரு மாதிரி

டக்கெண்டு எண்ட மனசு எங்கயோ போட்டுது🤣

On 10/8/2023 at 20:12, குமாரசாமி said:

நானும் சாப்பாடு தயாரிக்கிறவன் எண்ட முறையிலை சொல்லுறன். வெளிநாடுகளிலையும் உதெல்லாம் சகஜம்......இறைச்சி வெட்டேக்கை  நடக்கிற கூத்துக்கள் சொல்லி வேலையில்லை கண்டியளோ :face_with_tears_of_joy:

உலகத்தில செய்யவே கூடாத வேலை - சாப்பாட்டு கடை ஆட்களோட முண்டுறது. முண்டிட்டம் எண்டால் - பிறகு அங்க செத்தாலும் சாப்பாடு வாங்க கூடாது - நானும் அனுபவத்தில்தான் சொல்லுறன்🤣.

On 9/8/2023 at 08:10, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் நின்ற போது பரீட்சித்து பார்ப்பதற்காக சொக்லேற் வாங்கி சாப்பிட்டு பார்த்திருக்கிறேன்.இலங்கையின் உணவு நல்ல சுவைகளுக்கு நேர் எதிரானது சொக்லேற். சுவையே இல்லை.

ஐயோ அதை ஏன் கேட்கிறியள். இலங்கையில் கண்டோஸ், எட்னா, செலரஸ் என்று மூன்று பிராண்ட் உண்டு.

ஒரு காலத்தில் இவை தேவாமிர்தம்.

வெளிநாடு வந்து கொஞ்ச காலத்தால போய் சாப்பிட்டால் - ஒரே சீனிக்கட்டி.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2023 at 02:13, goshan_che said:

வெளிநாடு வந்து கொஞ்ச காலத்தால போய் சாப்பிட்டால் - ஒரே சீனிக்கட்டி.

சீனியை அள்ளி போட்டால் தான் சுவையை தரும் என்ற தமிழர்கள் கொள்கை  தான்  சிங்கலவர்கள் கொள்கையுமோ.

On 12/8/2023 at 02:13, goshan_che said:

ஐயோ அதை ஏன் கேட்கிறியள். இலங்கையில் கண்டோஸ், எட்னா, செலரஸ் என்று மூன்று பிராண்ட் உண்டு.

தவகரன் சங்கவி என்பவர்களின் விடியோ எனக்கு வட்சப்பில் வந்தது. அதில் அவர் யாழ்பாண விமான நிலையத்தில் கண்டோஸ் சொக்கலேற்றை பாருங்கோ என்று காட்டுகிறார். ஆனால் அங்கே இருப்பவை வெளிநாட்டு   Kitkat  , Mars , Tobberone. வீடியோ 6:48 - 8:10 வரை பருங்கள்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சீனியை அள்ளி போட்டால் தான் சுவையை தரும் என்ற தமிழர்கள் கொள்கை  தான்  சிங்கலவர்கள் கொள்கையுமோ.

தவகரன் சங்கவி என்பவர்களின் விடியோ எனக்கு வட்சப்பில் வந்தது. அதில் அவர் யாழ்பாண விமான நிலையத்தில் கண்டோஸ் சொக்கலேற்றை பாருங்கோ என்று காட்டுகிறார். ஆனால் அங்கே இருப்பவை வெளிநாட்டு   Kitkat  , Mars , Tobberone. வீடியோ 6:48 - 8:10 வரை பருங்கள்.

ஓம்.. நாங்கள் எல்லா சொக்லேட்டையும் கண்டோஸ் எண்டுதான் சொல்லுவம்🤣.

யூகேயில் எந்த பிராண்ட் vacuum cleaner ஐயும் Hoover என்பதுபோல்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2023 at 00:10, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் நின்ற போது பரீட்சித்து பார்ப்பதற்காக சொக்லேற் வாங்கி சாப்பிட்டு பார்த்திருக்கிறேன்.இலங்கையின் உணவு நல்ல சுவைகளுக்கு நேர் எதிரானது சொக்லேற். சுவையே இல்லை.

விரலைத் தின்றால் எப்படி தம்பி சுவை வரும்?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

விரலைத் தின்றால் எப்படி தம்பி சுவை வரும்?

மோதிர விரல் எண்டாலும் பரவாயில்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

மோதிர விரல் எண்டாலும் பரவாயில்லை🤣

ஊருக்க வந்தால் ஒரு பார்சல் கொண்டு வாங்க நல்ல சொக்லட்டா😛

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஊருக்க வந்தால் ஒரு பார்சல் கொண்டு வாங்க நல்ல சொக்லட்டா😛

அந்த விபுலாநந்தர் நினவு இல்லம் இருக்கெல்லா, அந்த சுவப்பு வேலி கம்பியில சொக்லேட் பாக்கை கொழுவிவிட்டு, தகவல் தந்து விட்டு எஸ் ஆகி விடுகிறேன். 

இல்லாட்டி ஆளை எல்லவா அடையாளம் கண்டுபிடிச்சிடுவீங்க🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2023 at 21:58, Nathamuni said:

உந்த பண்டி சோசேய் எனக்கு கண்ணிலை காட்டேலாது கண்டியளே. 

இறைச்சியை வாங்கி சவ்வுகள், சங்கதிகள வெட்டி எறிவம். உந்தக் கோதாரி விழுவார் ஒண்டையும் எறியமாட்டாங்கள். 

எல்லா நசலுகளையும், வெங்காயம், உள்ளி, உப்பு போட்டு அரைச்சு அனுப்ப....

🥺☹️

வீட்டை விட்டு வெளியில் போனால் சைவம்தான் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊருக்குப் போகும் பொழுதெல்லாம் சில இடங்களுக்கு தவறாது போவது போல  சில உணவுகளை சாப்பிடாமல் வந்தது இல்லை(பெரும்பாலும்).. அதில இந்த கண்டோஸும் அடங்கும்😊..இனி யோசிக்கத்தான் வேண்டும்

1 hour ago, பெருமாள் said:

வீட்டை விட்டு வெளியில் போனால் சைவம்தான் நல்லது .

உண்மைதான்.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த கண்டோஸும் அடங்கும்😊..இனி யோசிக்கத்தான் வேண்டும்

யோசிக்க தான் வேண்டும் 🙁 நீங்கள் உண்மையிலேயே கண்டோஸ் தான் சாப்பிட்டு இருக்கிறீர்கள்.
அங்கே  Cadbury  TimTam  சொக்லேற் வாங்கி சாப்பிட்டதையும் கண்டோஸ் சாப்பிட்டேன் என்று  சொல்வார்களாம்😀  கோஷான் சேயின் விளக்கத்திற்கு பின்பு தெரிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் உண்மையிலேயே கண்டோஸ் தான் சாப்பிட்டு இருக்கிறீர்கள்.

IMG-0627.jpg
 
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அங்கே  Cadbury  TimTam  சொக்லேற் வாங்கி சாப்பிட்டதையும் கண்டோஸ் சாப்பிட்டேன் என்று  சொல்வார்களாம்😀  கோஷான் சேயின் விளக்கத்திற்கு பின்பு தெரிந்து கொண்டேன்.

அப்ப உங்களுக்கு எங்கட ஆட்களையோ ஊரையோ தெரியாதா???

  • கருத்துக்கள உறவுகள்
On 20/8/2023 at 22:54, விளங்க நினைப்பவன் said:

தவகரன் சங்கவி என்பவர்களின் விடியோ எனக்கு வட்சப்பில் வந்தது. அதில் அவர் யாழ்பாண விமான நிலையத்தில் கண்டோஸ் சொக்கலேற்றை பாருங்கோ என்று காட்டுகிறார். ஆனால் அங்கே இருப்பவை வெளிநாட்டு   Kitkat  , Mars , Tobberone. வீடியோ 6:48 - 8:10 வரை பருங்கள்.

உந்தக் கொடுமை ஊரில பெரிய கொடுமை.எல்லா சிலிப்பரும் பாட்டா எல்லா சிகரட்டும் கோலட் லீவ் விஸ்கி எல்லாம் வெளி நாட்டு சாராயம்.பண்ணியில் பண்னிப் பாருங்கோவன்.எல்லா சொக்லேட்டும் கன்டோஸ்.😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்ப உங்களுக்கு எங்கட ஆட்களையோ ஊரையோ தெரியாதா???

கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.  இந்தளவிற்கு தெரியாது. எல்லா சொக்லேட்டும் கன்டோஸ், எல்லா சிலிப்பரும் பாட்டா. கல்வியில் முன்னேறிய சமூகமாக தங்களை சொல்லி கொள்பவர்கள் இப்படி எல்லாம் செய்யலாமா.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

அந்த சுவப்பு வேலி கம்பியில சொக்லேட் பாக்கை கொழுவிவிட்டு, தகவல் தந்து விட்டு எஸ் ஆகி விடுகிறேன். 

நீங்கள் சொக்லேற் பாக்கை வேலி கம்பியில கொழுவிடுவதற்கு முன்பு அவர்  கட்லற், வடை, இலங்கை பலகாரங்கள் அடங்கிய ஒரு பொதியை அங்கே கொழுவிவிட்டால்  நீங்கள் அதை எடுத்து கொண்டு சொக்லேற் பாக்கை கொழுவிவிடுவது பயனுள்ளதாக  இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல பண்டமாற்றாக இருக்கிறதே🤣

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

நல்ல பண்டமாற்றாக இருக்கிறதே🤣

அண்ணை எப்ப தூக்குவார் என்று கமராவும் கையுமா வேலைவெட்டியையும் விட்டுடுட்டு அலையப் போறாங்கள்.

17 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொக்லேற் பாக்கை வேலி கம்பியில கொழுவிடுவதற்கு முன்பு அவர்  கட்லற், வடை, இலங்கை பலகாரங்கள் அடங்கிய ஒரு பொதியை அங்கே கொழுவிவிட்டால்  நீங்கள் அதை எடுத்து கொண்டு சொக்லேற் பாக்கை கொழுவிவிடுவது பயனுள்ளதாக  இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அண்ணை எப்ப தூக்குவார் என்று கமராவும் கையுமா வேலைவெட்டியையும் விட்டுடுட்டு அலையப் போறாங்கள்.

கொவிட் எல்லோ- மாஸ்க் போட்டு மாப்பிள்ளை மாரி போவேன்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.