Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பளபளக்கும் புத்தம் புதிய 244 மாடி வீடுகள்.. இலங்கைத் தமிழர் வாழ்வில் ஸ்டாலின் செய்த மறுமலர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பளபளக்கும் புத்தம் புதிய 244 மாடி வீடுகள்.. இலங்கைத் தமிழர் வாழ்வில் ஸ்டாலின் செய்த மறுமலர்ச்சி

IMG-20230816-214037.jpg

சேலம்: இந்த திராவிட மாடல் ஆட்சியில்தான் இலங்கைத் தமிழர் நலன் மீது புதிய அக்கறை பிறந்துள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே 'அகதிகள் முகாம்' என்ற வார்த்தையை 'மறுவாழ்வு மையம்' என்று மாற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

உடனே பலர் சொன்னார்கள் பெயர் பலகையை மாற்றிவிட்டால், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மாறிவிடுமா என்று. அதற்குத் தன் தரமான செயல் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

ஏறக்குறை 217 கோடி நிதி அவர்களின் நலனுக்காக ஒதுக்கி இருந்தார் ஸ்டாலின். அதன் பலனாக இன்று சேலம் மாவட்டத்தில் பவளத்தானூர், குறுக்குப்பட்டி, அத்திக்காட்டனூர் ஆகிய பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்குச் செயல்பட்டு வந்த தகரக் கொட்டகைகள் முகாம் இன்று ஹைடெக் சிட்டியாக மறுமலர்ச்சி பெற்றுள்ளது.

ஆம்! இந்த மக்களுக்காக ஏறக்குறை 244 புத்தம் புதிய வீடுகளைக் கட்டித் தந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதற்கான விழா விரைவில் வெளிச்சம் பெற உள்ளது.

தகரக் கொட்டையில் தவியாகத் தவித்துவந்த நம் சொந்தங்கள் இனி, அழகான கான்கிரீட் வீடுகளுக்குள் கால்வைக்க உள்ளார்னர். இருண்டு போன வாழ்க்கையிலிருந்து இனிமையான வாழ்க்கைக்கு அந்த மக்கள் மாறப்போகிறார்கள்.

எப்படி இருக்கின்றன வீடுகள்? என்ன நினைக்கிறார்கள் மக்கள்? நம் கேள்விகளுக்கு முதன்முதலாக முகம் காட்டினார் 32 வயதான இளைஞர் யானதன்.

"எனது தாய், தந்தையர் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்கள். நான் தமிழ்நாட்டில்தான் பிறந்து வளர்ந்தேன். ஆரம்பக் காலத்தில் நான் பள்ளியில் படிக்கவும் அது தொடர்பான ஆவணங்களைத் தயார் செய்வதும் பெரிய சவாலாக இருந்தது.

அதன்பிறகு தமிழ்நாட்டு மாணவர்களைப் போல எங்களுக்கும் உரிய உரிமைகள் கிடைக்கத் தொடங்கின. ஆகவே பழைய கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. இன்றைய காலத்தில் எங்கள் பிள்ளைகளில் இரண்டு பட்டங்களைப் பெற்றவர்கள் ஏறக்குறைய 500 பேருக்கு மேல் இருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் 2021இல் கொரோனா காலகட்டத்தில் திமுக ஆட்சி வந்தது. அதன்பின்னர் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி 217 கோடி ரூபாய் நிதியை எங்கள் மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கினார். அதனால், எங்கள் மாணவர்களுக்குக் கிடைத்துவந்த கல்வி உதவித்தொகை இப்போது 3 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மேற்படிப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

அதைப்போலவே தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கிடைப்பதைப் போலவே எங்கள் பெண்களுக்கும் சுய உதவிக்குழு நிதியை அதிகரித்துள்ளார்கள். குடியுரிமை வேண்டும் என்பது எங்களது நீண்டகாலக் கோரிக்கை. அதை ஏற்றுக்கொண்டு அதற்காகத் தனிக்குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். அதில் எங்கள் மக்களையும் உறுப்பினராக இணைத்துள்ளார்.

இதை எல்லாம் தாண்டி நாங்கள் 40 வருடங்களுக்கு மேலாக 10க்கு 10 வீட்டில்தான் வாழ்ந்துவருகிறோம். அதிலும் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. பொதுக்கழிப்பிடம்தான் உள்ளது. தனியாகக் கழிப்பறை வசதிகள் இல்லை. அதனால் சுகாதாரக் கேடுகள் அதிகம் ஏற்பட்டுவருகின்றன. இந்தக் கஷ்டங்களை எல்லாம் நாங்கள் தொடர்ந்து அரசுக்குச் சொல்லி வருகிறோம்.

அதை ஏற்றுக்கொண்டு ஆறு மாதங்களுக்கு முன், அருகில் உள்ள பாம்பம்பாடி என்ற கிராமத்தில் எங்களது இலங்கைத் தமிழ் மக்களுக்காக 234 புதிய வீடுகளை முதல்வர் ஸ்டாலின் கட்டித் தர உத்தரவிட்டார்.

அதில் எங்களுக்குப் படுக்கையறை, சமையல் அறை, தனி கழிப்பறை, குடிநீர் வசதி, எங்கள் பகுதியில் நூலகம், நியாயவிலைக்கடை, அங்கன்வாடி, தண்ணீர் தொட்டி, சமுதாயக் கூடம் எனப் பல அடிப்படை வசதிகளுடன் அந்த வீடுகளைக் கட்டி வருகின்றனர். அதற்கான பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது.

இந்த வீடுகளைப் பார்க்கும்போதே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் வாழ்க்கை நரகத்தில் இருப்பதைப் போன்று இருந்தது. மழைக்காலம் என்றாலும் வெயில் காலம் என்றாலும் அது எங்களுக்குக் கஷ்ட காலமாகவே இருந்து வந்தது. ஒரு நிம்மதியான உறக்கம் இல்லாமல் வாழ்ந்துவந்தோம். அதை எல்லாம் இந்தப் புதிய வீடு மாற்றப் போகிறது" என்றார்

அடுத்து கவிதா நாகநாதன், "நான் இந்த முகாமில் கடந்த 32 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறேன். எனக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். கணவர் இறந்துவிட்டார். 2 பிள்ளைகளைப் படிக்க வைத்தது, கல்யாணம் கட்டிக் கொடுத்தது எல்லாம் இந்த முகாமில்தான். ஒரு பையனுக்கு மட்டும் கல்யாணம் ஆகவில்லை. அவன் வேலைக்குச் சென்று வருகிறான்.

சில மாதங்கள் முன்பாக வந்த மழையில் எங்கள் பழைய முகாமில் தண்ணீர் புகுந்துவிட்டது. பல வீடுகளில் வெள்ளம் வந்துவிட்டது. அப்போது, மழைக்காலம் என்பதால் பாம்பு, பூச்சிகள் எல்லாம் வீட்டுக்குள் வந்துவிட்டன. இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் தவித்தோம்.

இப்போது முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு என்று சிமெண்ட் வீடுகளைக் கட்டித் தந்துள்ளார். நாங்கள் இப்படிப்பட்ட வீடுகளில் வாழ்வோம் என்று நினைத்துக் கூடப்பார்த்ததில்லை. அந்தளவுக்கு தனித்தனி வீடுகளைக் கட்டித்தந்துள்ளார்.

நாங்கள் இந்த 32 ஆண்டுகளாக ஒரே முகாமில் ஒட்டுமொத்தமாக வாழ்ந்துவந்தோம். யாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்று இல்லை. சாப்பிடுவது தொடங்கி கழிவறைக்குச் செல்வது வரை எல்லாம் ஒன்றுதான். அதை எல்லாம் தாண்டி இன்றைக்குத் தனி வீட்டுக்குப் போகப் போகிறோம். அதில் சகல வசதிகளும் இருக்கின்றன.

இத்தனைக் காலம் ஓலைக் குடிசைபோல இருந்த வீட்டில் வாழ்ந்தோம். அந்தக் கஷ்டம் எல்லாம் சொல்ல ஒரு நாள் போதாது. படாத கஷ்டம் இல்லை. அனுபவிக்காத துயரம் இல்லை. அப்படியே எங்கள் பாதி ஆயுள் கரைந்துவிட்டது" என்கிறார் பெருமூச்சை விட்டபடி.

இவரைத் தொடர்ந்து தர்ஷினி, "எங்கள் குடும்பம் 1990இல் இலங்கையிலிருந்து தமிழ்நாடு வந்தது. அப்போது நான் 6 மாதக் குழந்தை. நான் படித்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான். இத்தனை வருடங்களாக நாங்கள் கஷ்டத்தில்தான் வாழ்ந்தோம். இப்போது ஸ்டாலின் அய்யா ஆட்சியில் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.

எங்களுக்கு இதுவரை கிடைத்துள்ள நலத்திட்டங்கள் எல்லாம் கலைஞர் ஆட்சியில்தான் கிடைத்திருக்கிறது. அவருக்கு அடுத்து இப்போது அதே அளவுக்கு ஸ்டாலின் பல உதவிகளைச் செய்துவருகிறார்.

இந்த வீடு கட்டிக் கொடுத்த விஷயத்தில் ஸ்டாலின் எல்லோரையும்விட பல மடங்கு எங்கள் மனதில் உயர்ந்துவிட்டார். இவ்வளவு காலம்  அகதி முகாம் என்று சொல்லி வந்தார்கள். அவர் ஆட்சியில்தான் மறுவாழ்வு மையம் என மாற்றி இருக்கிறார்கள். ஒரு வார்த்தைதான். ஆனால், அது தந்த வலி என்பதை உங்களுக்குப் புரியவைக்க முடியாது.

அவருக்கு எங்கள் முகாம் மக்களின் சார்பாக நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர் செய்த உதவிக்கு இந்த வார்த்தை எல்லாம் கொஞ்சம் கம்மிதான்" என்கிறார்.

தன் ஆயுளில் முக்கால்வாசியைக் கழித்துவிட்ட பாட்டி ரீட்டா, "நாங்கள் மூன்று தலைமுறைகளைக் கூட பார்த்துவிட்டோம். எங்கள் காலம் எல்லாம் போய்விட்டது. ஒருநாள் நிம்மதியாகப் படுக்கக் கூட இடமில்லாமல் வாழ்ந்து கழித்திட்டோம். சுகாதாரம் இல்லாமல் எத்தனை நோய் நொடிகளைக் கண்டுவிட்டோம்.

இனிமேல் எங்களைப் போல யாரும் வாழக் கூடாது. அவ்வளவு இன்னல்கள். அவ்வளவு துயரங்கள். இப்போது இந்தப் புதிய வீடுகளைப் போய் பார்த்தேன். பார்க்கும் போதே மனத்திற்குள் அவ்வளவு நிம்மதி. அதை ஸ்டாலின் அய்யாதான் செய்து தந்துள்ளார்.

பல உதவிகள் பலர் செய்யலாம். வீடுதான் முக்கியம். காக்கை கூட தனி கூடு இருக்கிறது. இந்த மனிதக் கூட்டமான எங்களுக்கு என்று தனி வீடு இல்லை. பெண்டு பிள்ளைகள் என எல்லாம் ஒரே அறையில் கிடந்தோம். காலைகூட கொஞ்சம் தாராளமாக நீட்ட முடியாது. கொசுக் கடி, துர்நாற்றம் என எத்தனை எத்தனை?" என நம் கண்களை தன் பேச்சால் ஈரமாக்குகிறார் பாட்டி.

"இத்தனை ஆண்டுகளாக பவளத்தானூர், குறுக்குப்பட்டி, அத்திக்காட்டனூர் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்துவந்தார்கள். இந்த மக்களுக்காக பாப்பம்பாடி பஞ்சாயத்தில் இடம் தேர்வு செய்து 244 குடியிருப்புகளைக் கட்டி தந்துள்ளோம். இதில் அத்திக்காட்டானூர் முகாம் மக்களுக்கு 55 வீடுகள், பவளத்தானூர் முகாம் மக்களுக்கு 80 வீடுகள், குறுக்குப்பட்டி முகாம் மக்களுக்கு 109 வீடுகள் என அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன.

IMG-20230816-214110.jpg

வீடுகளின் தரைக்கு டைல்ஸ் போட்டுள்ளோம். அதைப்போலக் கழிப்பறைகள் கூட டைல்ஸ் வசதிகள் கொண்டவை. கின்சன், தனி அறை, ஒரு ஹால், வீட்டுக்கு உள்ளாகவே கழிப்பறை, குளியல் அறை பல வசதிகளைச் செய்து தந்துள்ளோம். ஜன்னல்கூட இந்தக் காலத்திற்கு ஏற்ப நவீன மாடலில் அமைத்துள்ளோம்.

முறையான சாலை வசதி, மின்சார வசதி, தனித்தனி குடிநீர் குழாய் இணைப்புகள் எனச் செய்து தந்துள்ளோம். வீட்டுக்கு முன்பாக நடைபாதைக்கு 20 அடி தெரு அமைத்துள்ளோம். அதுவும் சிமெண்ட் சாலையுடன் அமைத்துள்ளோம்.

வீடுகளைத் தவிர்த்து அங்கன்வாடி மையம், பொது நூலகம், இந்த மக்களுக்காகவே நியாயவிலைக்கடைக்கு என்று தனிக்கட்டடம், மகளிர் சுய உதவிக்குழுவுக்காக ஒரு தனிக் கூடம், மொத்தமாக 100 மின் விளக்குகள் எனப் பல வசதிகளைச் செய்து தந்துள்ளோம்" என்கிறார் தாரமங்கலம் பகுதி உதவிப் பொறியாளர் ஸ்ரீநிவாசன்.

இந்த 2 ஆண்டுகள் ஸ்டாலின் ஆட்சியில்தான் எத்தனை சாதனைகள்!

https://tamil.oneindia.com/news/salem/cm-stalin-has-built-244-new-houses-for-sri-lankan-tamils-in-salem-530117.html

டிஸ்கி: 

ஆர் குத்தி அரிசியானாலும் சரி ;  மகிழ்ச்சி..😊

ஆனாலும் "தட்ஸ்தமிழ்" செம்பு சத்தம் கொஞ்சம் அதிகம் தான்..

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் சொல்வதுபோல் யார் குத்தியும் அரிசி வந்தால் சரி.........அந்த மக்களின் வாழ்வு சிறக்கட்டும்........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆம்! இந்த மக்களுக்காக ஏறக்குறை 244 புத்தம் புதிய வீடுகளைக் கட்டித் தந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதற்கான விழா விரைவில் வெளிச்சம் பெற உள்ளது.

இந்த வீடுகளை கட்டிக் கொடுத்து எமது சொந்தங்களை நல்ல குடியிருப்புக்குள் குடியமர்த்துவது சந்தோசம்.

மிகவும் நன்றி.

ஆனாலும் உலகெல்லாம் அகதியாக இருக்கும் தமிழன் படித்து தான் விரும்பிய பாதையில் பொறியியலாளராகவோ வைத்தியராகவோ எது வேண்டுமானாலும் படித்து வேலைகளையும் எடுத்து முன்னேறலாம்.

இதில் வேதனையான விடயம் தமிழ்நாட்டிலிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கல்வியையே தமிழ்நாட்டில் வழங்குகிறார்கள்.

எனவே இப்படி வீடுகளை கட்டிக் கொடுத்து சொகுசாக வாழுகிறார்கள் என்பதைக் காட்டிலும் அவர்களை சுதந்திரமாக படிக்கவிட்டு படித்ததற்கேற்ற வேலையை செய்யவிட வேண்டும்.

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆர் குத்தி அரிசியானாலும் சரி ;  மகிழ்ச்சி..😊

ஆனாலும் "தட்ஸ்தமிழ்" செம்பு சத்தம் கொஞ்சம் அதிகம் தான்..

 

இணைப்புக்கு நன்றி புரட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

இணைந்த தோழருக்கு நன்றி சொன்ன யாரும் வீடு கட்டி கொடுத்த ஸ்டாலினுக்கு சொல்லவில்லை 🤣.

நன்றி முதலமைச்சர் ஸ்டாலின்🙏.

தமிழ்நாட்டு மக்கள் பலரே குடிசைமாற்று வாரியத்தில் வீடு கேட்டு தவம் கிடக்கும் நிலையில், இது மிக பெரிய உபகாரம்.

தானமாக கிடைக்கும் மாட்டை பல்லை பிடித்து பார்க்க கூடாது என்பார்கள்.

உயர் கல்வியில், குடியுரிமையில் தமிழ் நாட்டு அரசு (எந்த கட்சியும்) அதிகம் நகர முடியாமல் இருக்க ஒன்றிய அரசே காராணம்.

பங்களதேஷ் இந்துகளுக்கு குடியுரிமை கொடுப்பார்கள் ஆனல் இலங்கையில் இருந்து போனால் இந்து ஆகினும் குடியுரிமை இல்லை - அதனால் வரும் கல்வி உட்பட்ட வரப்பிரசாதங்களும்மில்லை.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசு, ஆளுநருக்கு பிடிக்காத விடயமாக இருந்தாலும் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தமிழர்களுக்கு ஒரு நன்மை என்றால் இந்த ஆளுநர் அதட்கு எதிராகவே இருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் மிக்க நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

தோழர் சொல்வதுபோல் யார் குத்தியும் அரிசி வந்தால் சரி.........அந்த மக்களின் வாழ்வு சிறக்கட்டும்........!  👍

அண்மையில் மாவீரன் படம் பார்த்தேன் சிவ கார்த்திகேயனின் படம் அதில் வரும் கட்டிடங்கள் போல் அல்லாமல் இருந்தால் வாழ்த்துக்கள் 

அப்படத்தில் சேரிகளில் வாழும் மக்களுக்கு அடுக்கு மாடி வீடு கட்டிக்கொடுப்பார்கள் ஒரு ஆளும் கட்சியினரால்  ஆணி அடித்தால் சுவர் விரிவு விழும் மேலுள்ள குளியலறையின் கழிவு தண்ணி கீழ் ஒழுகும், கங்கூஸ் கைபிடி இழுக்க வரும் . இ  ப்படி இராமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி 

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியரசுக்கு மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக அரசிற்கும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நன்றிகள் பல..
இத்தகைய செயல்களை போன்று ஏனைய புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு உள்ள  உள்ள உரிமைகள் போல் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கின்றேன்.அவர்களுக்கு வேண்டிய உரிமைகளை கொடுத்தால் அவர்களே தமது வாழ்வாதரங்களை தேடிக்கொள்வார்கள்.
இலங்கை மலையக மக்களுக்கு  இழைக்கப்படும் அநீதிகளுக்கு கண்டும் காணாமல் இருக்கும் சோரம் போன எமது அரசியல்வாதிகளுக்கு தமிழக அரசின் செயல்கள் நல்ல படிப்பினையாக அமைய வேண்டுகின்றேன்.
 

நல்ல சேதி சொன்ன தோழர் புரட்சியருக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த உதவி மிகப் பெரியது👍. ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள்,

இன்னும் பல இருக்கு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மக்களுக்கு செய்ய

இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க நினைத்தால்

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினுக்கு நன்றிகள் பல.  லட்சக்கணக்கில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு(அகதிகளாக) உதவுங்கள். காவல்துறையின்  ஈழத்தமிழ் மக்கள் மீதான அராஜகங்களை நிறுத்துங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.