Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணத்திற்குப் பின்னரும் வாழ்க்கை இருக்கிறது: நிபுணர் கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜெஃப்ரி லாங், நோயாளிகளின் சுமார் 5000 மரண அனுபவங்களை ஆய்வு செய்துள்ளார். அவர் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.

ஜெஃப்ரி லாங் ஒரு புற்றுநோயியல் நிபுணரும், நியர்-டெத் எக்ஸ்பீரியன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் நிறுவனரும் ஆவார். ஜெஃப்ரி லாங் தனது பணியின் போது நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

ஜெஃப்ரி லாங் கூறுகையில், மரணத்திற்குபின் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து அலைந்து திரிந்தது , பின்னர் ஆன்மா வேறொரு உலகத்தில் நுழைந்து ஒரு சுரங்கப்பாதை வழியாக நடந்து சென்றது, அதன் முடிவில் சுரங்கப்பாதையில் ஒரு பிரகாசமான ஒளி இருந்தது. நோயாளிகள் இறந்த தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றதாகவும், அந்த நேரத்தில் அங்கே அவர்களின் உண்மையான வீடு இருப்பதாக அவர்கள் உணர்ந்ததாகவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://thinakkural.lk/article/270982

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர் ஆதாரத்துடன் நிறுவுவாரா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜெஃப்ரி லாங், நோயாளிகளின் சுமார் 5000 மரண அனுபவங்களை ஆய்வு செய்துள்ளார். அவர் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/270982

மரணத்துக்கு பின் நிச்சயம் எதோ ஒன்று நடக்கிறது. ஆனால் யாராலும் என்ன என்று சொல்லமுடியாது. சில மனிதர்கள் தமக்கு முந்திய பிறப்புகளை பற்றி ஞாபகம் இருக்கு என்று சொல்கிறார்கள். இதை நான் நம்புகிறேன். பல யோகிகளும் ஞானிகளும் மரணத்தின் பின்னான நிகழ்வுகளை விளக்கியுள்ளார்கள். அவர்கள் இந்த அறிவை தாமாகவே பெற்றுக்கொண்டதால் அவற்றிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.  எது உண்மை, எது பொய்யோ, எமது ஐம்புலன்களால் அறியமுடியாத விடயங்கள் எவ்வளவோ இருப்பது மட்டும் உண்மை. *** Near death expereince is different from after death****

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nilmini said:

மேடம் நீங்கள் ஒரு டாக்டர்.. நீங்களுமா..?????

  • கருத்துக்கள உறவுகள்

ஜெவ்றி லோங் போலி என்று சொல்லவில்லை, ஆனால் அவரது நம்பிக்கை, நம்பிக்கை மட்டும் தான், வேறெதுவும் அல்ல. அதே போல இதை நம்புவோரும் நம்பிக்கையோடு மட்டும் தான் நிற்க முடியும். 

ஆனால், ஜெவ்றி லோங் சொல்லும் ஒரு விடயம், அவரது நம்பிக்கையினால், நரம்பியல் விஞ்ஞானத்தை (neuroscience) அவர் முற்றாக புறக்கணிக்கிறார் என்று கண்டு கொள்ள முடிகிறது.

இப்படிச் சொல்கிறார் ஒரு கட்டுரையில்: There isn't even a remotely plausible physical explanation for this phenomenon.

தமிழில்: இந்த அவதானிப்புகளுக்கு அடிப்படையான ஒரு விஞ்ஞான விளக்கத்தையும் என்னால் காண முடியவில்லை என்கிறார் லோங்.

நான் ஒரு நரம்பியல் விஞ்ஞானி அல்ல, ஆனால் எனக்கு விளங்கிய மூளையின் தொழிற்பாட்டின் படி, எங்கள் மூளைக்கு இரத்த ஓட்டம் தடைப்படும் போது ஒக்சிசன் குறைவடையும் போது, மூளையின் நரம்புக் கலங்கள் தாறுமாறான மின்சாரத் துடிப்பைக் (electrical activity) காட்டும். இந்த அதிகரித்த மின்சாரத் துடிப்புகள், மூளையில் ஏற்கனவே இருக்கும் நினைவுகளைக் காட்சிகளாக மாற்றக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

அண்மையில், ஒரு நோயாளி மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் fMRI பொருத்தப் பட்ட நிலையில், திடீரென மாரடைப்பினால் மரணமானார். அவரது, மூளையின் முன் மூளைப்படையில் (prefrontal cortex), நினைவுகளோடு தொடர்பான பகுதி அதிகம் ஒளிர்ந்ததை fMRI இல் கண்டார்கள், இதை பற்றி ஒரு விஞ்ஞான சஞ்சிகைக் கட்டுரையும் வெளி வந்தது.

எனவே, இந்த ஒளி, சுரங்க குகை, உறவுகளைக் காண்பது இவையெல்லாம் ஒட்சிசன் கிடைக்காமல் இறக்கும் மூளையின் நடவடிக்கைகள். இதைத் தாண்டி ஏதாவது இருக்குமா? நம்பிக்கை மட்டும் தான், தரவுகள் இல்லை! 

*************

மேலதிகமாக, இதை இன்னொரு வழியிலும் ஆராய்ந்திருக்கிறார்கள்: மூளையின் மின்சாரத் துடிப்புகளை, மூளைக்கு வெளியே தலையின் மேற்பரப்பில் வைக்கப் படும் மின்கடத்திகள் மூலம் அளக்கலாம், இது பல ஆண்டுகளாக பாவனையில் இருக்கிறது, இதன் பெயர் EEG (electroencephalogram). (இதயத்தில் இப்படியான மின்சாரத்துடிப்பை அளப்பது ECG - electrocardiogram எனப்படுகிறது).

இத்தகைய மூளை மின்சாரத்துடிப்பினால் உருவாகும் காமா (gamma) அலைகள் முக்கியமானவை, தன்னுணர்வோடு (consciousness) தொடர்பானவை. மரணமாகும் தறுவாயில் இருந்த நோயாளிகளில் மூளையின் காமா அலைகள், சாதாரண நிலையில் மூளை ஒரு விடயத்தை நினைவு கூர முயலும் போது எப்படி இருக்குமோ, அப்படி இருந்திருக்கின்றன.

https://www.science.org/content/article/burst-brain-activity-during-dying-could-explain-life-passing-your-eyes

எனவே, மரணத்திற்கு நெருங்கிய காட்சிகள், அனுபவங்களுக்கு நரம்பியல் விளக்கம் இல்லையென்று சொல்வது சரியல்ல. இதை வைத்து மரணத்திற்குப் பின்னர் ஏதோ இருக்கிறது அல்லது இல்லை என நிறுவுவது முடியாத காரியம். ஆனால், விஞ்ஞான ரீதியில் "இல்லை" என்பதில் இருந்து தான் தேடல் ஆரம்பிக்க வேண்டும்.   

Edited by Justin
கீழ் பகுதி சேர்க்கப் பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

மருத்துவர் ஆதாரத்துடன் நிறுவுவாரா?

அவர் சொல்வதை பாருங்கள். மரணத்திற்குபின் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து, வேறொரு உலகத்தில் நுழைந்து, சுரங்கப்பாதை வழியாக நடந்து சென்று, சுரங்கப்பாதை முடிவில் பிரகாசமான ஒளியை கண்டது 😀
மிக பெரும்பாலோருக்கு மரணத்ததிற்கு பின்பு எதுவவுமே இல்லை என்ற உண்மையை ஏற்று கொள்ள பயமாக உள்ளது. மதவாதிகள் இதை பயன்படுத்தி கடவுளின் பிள்ளையாக மாறு, மறு உலகம் உண்டு, சொர்க்கம் உண்டு என்ற கற்பனைகள் இவர்களுக்கு ஆறுதலை தருகின்ற பிடித்தமானதாக உள்ளது. இந்த டொக்டர் அதற்கு  முட்டு கொடுக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

"மரணத்ததிற்கு பின்பு எதுவவுமே இல்லை என்ற உண்மை"  

இந்த மிகப்பெரிய உண்மையாய் விளங்கிகொண்ண்ட மனிதர்களில் ஒருவர் நீங்கள். ஒரு சிறிய வட்டத்தில் இருந்து கொண்டு இந்த பிரபஞ்சத்தில், இந்த பூமியில் வாழ்ந்து மடிந்த   மனிதர்களின் இருப்பே உண்மை என்று நம்புவதில்ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மேடம் நீங்கள் ஒரு டாக்டர்.. நீங்களுமா..?????

அந்த அறிவு இருப்பதால் தான் எனக்கு தெரியாதவை எல்லாவற்றையும் மறுக்காமல் மேலும் படித்து, அறிந்து தெரிந்து கொள்ளும் ஆர்வம்

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்துக்குப்பின் ....இன்னும் மனிதன் மனித தன்மை கொஞ்சமேனும் உள்ளவனாக இருப்பதற்கு    காரணம் கடவுள் /தெய்வம் என்ற ஒரு வித பயபக்தி தான். இல்லாவிடடால்  மனம் போனபோக்கிற்கு சென்று மிருகங்களைவிட கேவலமான இனமாகிப்போயிருப்பான். தெய்வ பயம் ஒழுக்கம் கட்டுப்பாடு மனித நேயம் என்பன மதம் வழியாக போதிக்க பட்டு பாவம் /தீமை செய்தால் தண்டனை மரணம். வாழும் காலம் கடவுளால் நிர்ணயிக்க படுகிறது. அடுத்தவனுக்கு தீமை செய்தால் அழிந்துபோய் விடுவாய். மரணம் சம்பவிக்கும். மரணத்துக்கு பின்னான உலகில் ( நரகம்)தள்ளப்படுவாய். இவ்வுலகில் படட  துன்பம்போதும் மறு உலகிலும் துன்ப வேதனை அனுபவிக்காமல் இருக்க நிஜ உலகில் தீமை செய்ய அஞ்சு. மரணத்தின்பின் அமைதியாய் உறங்கு ...(Rest  in  peace )

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

ஜெவ்றி லோங் போலி என்று சொல்லவில்லை, ஆனால் அவரது நம்பிக்கை, நம்பிக்கை மட்டும் தான், வேறெதுவும் அல்ல. அதே போல இதை நம்புவோரும் நம்பிக்கையோடு மட்டும் தான் நிற்க முடியும். 

ஆனால், ஜெவ்றி லோங் சொல்லும் ஒரு விடயம், அவரது நம்பிக்கையினால், நரம்பியல் விஞ்ஞானத்தை (neuroscience) அவர் முற்றாக புறக்கணிக்கிறார் என்று கண்டு கொள்ள முடிகிறது.

இப்படிச் சொல்கிறார் ஒரு கட்டுரையில்: There isn't even a remotely plausible physical explanation for this phenomenon.

தமிழில்: இந்த அவதானிப்புகளுக்கு அடிப்படையான ஒரு விஞ்ஞான விளக்கத்தையும் என்னால் காண முடியவில்லை என்கிறார் லோங்.

நான் ஒரு நரம்பியல் விஞ்ஞானி அல்ல, ஆனால் எனக்கு விளங்கிய மூளையின் தொழிற்பாட்டின் படி, எங்கள் மூளைக்கு இரத்த ஓட்டம் தடைப்படும் போது ஒக்சிசன் குறைவடையும் போது, மூளையின் நரம்புக் கலங்கள் தாறுமாறான மின்சாரத் துடிப்பைக் (electrical activity) காட்டும். இந்த அதிகரித்த மின்சாரத் துடிப்புகள், மூளையில் ஏற்கனவே இருக்கும் நினைவுகளைக் காட்சிகளாக மாற்றக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

அண்மையில், ஒரு நோயாளி மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் fMRI பொருத்தப் பட்ட நிலையில், திடீரென மாரடைப்பினால் மரணமானார். அவரது, மூளையின் முன் மூளைப்படையில் (prefrontal cortex), நினைவுகளோடு தொடர்பான பகுதி அதிகம் ஒளிர்ந்ததை fMRI இல் கண்டார்கள், இதை பற்றி ஒரு விஞ்ஞான சஞ்சிகைக் கட்டுரையும் வெளி வந்தது.

எனவே, இந்த ஒளி, சுரங்க குகை, உறவுகளைக் காண்பது இவையெல்லாம் ஒட்சிசன் கிடைக்காமல் இறக்கும் மூளையின் நடவடிக்கைகள். இதைத் தாண்டி ஏதாவது இருக்குமா? நம்பிக்கை மட்டும் தான், தரவுகள் இல்லை! 

*************

மேலதிகமாக, இதை இன்னொரு வழியிலும் ஆராய்ந்திருக்கிறார்கள்: மூளையின் மின்சாரத் துடிப்புகளை, மூளைக்கு வெளியே தலையின் மேற்பரப்பில் வைக்கப் படும் மின்கடத்திகள் மூலம் அளக்கலாம், இது பல ஆண்டுகளாக பாவனையில் இருக்கிறது, இதன் பெயர் EEG (electroencephalogram). (இதயத்தில் இப்படியான மின்சாரத்துடிப்பை அளப்பது ECG - electrocardiogram எனப்படுகிறது).

இத்தகைய மூளை மின்சாரத்துடிப்பினால் உருவாகும் காமா (gamma) அலைகள் முக்கியமானவை, தன்னுணர்வோடு (consciousness) தொடர்பானவை. மரணமாகும் தறுவாயில் இருந்த நோயாளிகளில் மூளையின் காமா அலைகள், சாதாரண நிலையில் மூளை ஒரு விடயத்தை நினைவு கூர முயலும் போது எப்படி இருக்குமோ, அப்படி இருந்திருக்கின்றன.

https://www.science.org/content/article/burst-brain-activity-during-dying-could-explain-life-passing-your-eyes

எனவே, மரணத்திற்கு நெருங்கிய காட்சிகள், அனுபவங்களுக்கு நரம்பியல் விளக்கம் இல்லையென்று சொல்வது சரியல்ல. இதை வைத்து மரணத்திற்குப் பின்னர் ஏதோ இருக்கிறது அல்லது இல்லை என நிறுவுவது முடியாத காரியம். ஆனால், விஞ்ஞான ரீதியில் "இல்லை" என்பதில் இருந்து தான் தேடல் ஆரம்பிக்க வேண்டும்.   

Neurosceience என்றால் என்ன? இது எதை பற்றிய படிப்பு? இங்கு கொழும்பில் ஒரு சபை போதகர் இதைப்பற்றி அடிக்கடி பிரசங்கிப்பார். இவர் மக்களை ஏமாற்றுகின்றார் என்றே நான் நினக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

மரணத்துக்குப்பின் ....இன்னும் மனிதன் மனித தன்மை கொஞ்சமேனும் உள்ளவனாக இருப்பதற்கு    காரணம் கடவுள் /தெய்வம் என்ற ஒரு வித பயபக்தி தான். இல்லாவிடடால்  மனம் போனபோக்கிற்கு சென்று மிருகங்களைவிட கேவலமான இனமாகிப்போயிருப்பான். தெய்வ பயம் ஒழுக்கம் கட்டுப்பாடு மனித நேயம் என்பன மதம் வழியாக போதிக்க பட்டு பாவம் /தீமை செய்தால் தண்டனை மரணம். வாழும் காலம் கடவுளால் நிர்ணயிக்க படுகிறது. அடுத்தவனுக்கு தீமை செய்தால் அழிந்துபோய் விடுவாய். மரணம் சம்பவிக்கும். மரணத்துக்கு பின்னான உலகில் ( நரகம்)தள்ளப்படுவாய். இவ்வுலகில் படட  துன்பம்போதும் மறு உலகிலும் துன்ப வேதனை அனுபவிக்காமல் இருக்க நிஜ உலகில் தீமை செய்ய அஞ்சு. மரணத்தின்பின் அமைதியாய் உறங்கு ...(Rest  in  peace )

உலகில் மத நம்பிக்கை அதி தீவிரமாக கடைப்பிடிக்கப்படும்  அரபு நாடுகள், இந்தியா, தென்னமரிக்க நாடுகளில்  குற்றச்செயல்கள் மிக மிக அதிகம்.  

மத நம்பிக்கை விடயத்தில் அதிக அக்கறை காட்டாதவர்கள் என்று அறியப்படும்  நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய ஸகன்ரிநேவிய நாடுகளில் குற்றச்செயல்கள் மிக மிக குறைவு.

இந்த விடயம் உங்கள் கூற்றிற்கு மாறாக உள்ளதல்லவா?   

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய வட்டத்தில் உள்ளவர்கள் தாராளமாக விளக்கம் அளிக்கலாம்.
மறுபிறப்பு  பற்றி எமது மதம் கூறும் போது அப்படி ஒன்றும் இல்லை என்றவர்கள்  இப்போ சுரங்கப்பாதையால் தெரிகிறது என சொல்வது எப்படி?
பி.கு: விஞ்ஞான விளக்கம் தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

உலகில் மத நம்பிக்கை அதி தீவிரமாக கடைப்பிடிக்கப்படும்  அரபு நாடுகள், இந்தியா, தென்னமரிக்க நாடுகளில்  குற்றச்செயல்கள் மிக மிக அதிகம்.  

மத நம்பிக்கை விடயத்தில் அதிக அக்கறை காட்டாதவர்கள் என்று அறியப்படும்  நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய ஸகன்ரிநேவிய நாடுகளில் குற்றச்செயல்கள் மிக மிக குறைவு.

இந்த விடயம் உங்கள் கூற்றிற்கு மாறாக உள்ளதல்லவா?   

உங்கள் இருவரது கருத்துக்களின் படி

அவர் ஒரு வாகனத்தை சட்ட விதிகளுக்கு பயந்து ஓட்டுவது நன்று என்கிறார்

நீங்கள் எப்படி என்றாலும் ஓடி அனுபவப்பட்டு அடிபட்டு தானாக வழிக்கு வந்து ஓட்டுதலே சிறந்தது என்கிறீர்கள்

நான் இது இரண்டுக்கும் நடுவில்?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

மிக பெரும்பாலோருக்கு மரணத்ததிற்கு பின்பு எதுவவுமே இல்லை என்ற உண்மையை ஏற்று கொள்ள பயமாக உள்ளது. மதவாதிகள் இதை பயன்படுத்தி கடவுளின் பிள்ளையாக மாறு, மறு உலகம் உண்டு, சொர்க்கம் உண்டு என்ற கற்பனைகள் இவர்களுக்கு ஆறுதலை தருகின்ற பிடித்தமானதாக உள்ளது.

உண்மையில் இந்தப் பயம் தான் மரணத்திற்குப் பின்னால் ஏதோ இருக்கிறது என்ற நம்பிக்கையின் தோற்றுவாய் என நான் கருதுகிறேன். அல்லது, "தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற பேராசை அல்லது ஈகோ" மன நிலையும் , இப்படியான நம்பிக்கையை உருவாக்குகிறது.

காரணம் எதுவாக இருந்தாலும், இந்த நம்பிக்கையை வைத்து பல சாமியார்கள், போதகர்கள், மௌலவிகளின் பிழைப்பு ஓடுகிறது.

மறு பக்கம், "மரணம் முடிவல்ல!" என்ற கோஷம் ஒரு தனி மனிதருக்கு மரண பயத்தை நீக்கி நம்பிக்கையைக் கொடுத்தால், அதனால் அவரது மரணத்திற்கு முன்னான வாழ்க்கை செழித்தால் அதில் ஆட்சேபனையெதுவும் யாருக்கும் இருக்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

உலகில் மத நம்பிக்கை அதி தீவிரமாக கடைப்பிடிக்கப்படும்  அரபு நாடுகள், இந்தியா, தென்னமரிக்க நாடுகளில்  குற்றச்செயல்கள் மிக மிக அதிகம்.  

மத நம்பிக்கை விடயத்தில் அதிக அக்கறை காட்டாதவர்கள் என்று அறியப்படும்  நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய ஸகன்ரிநேவிய நாடுகளில் குற்றச்செயல்கள் மிக மிக குறைவு.

இந்த விடயம் உங்கள் கூற்றிற்கு மாறாக உள்ளதல்லவா?   

இது சமகாலத்தில் மட்டுமல்ல, இது வரை நாம் அறிந்து கொண்ட மனித வரலாற்றிலும்  கூட உண்மை.

ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால், அங்கே இருண்ட காலம் என்பது கிறிஸ்தவ மதத் தலைமையாலும், அதனைச் சார்ந்த அரசர்களாலும் கொடுமைகளும், மனித முன்னேற்றத்தைத் தடுக்கும் செயல்களும் அரங்கேறிய காலம்! பின்னர் கலிலியோ போன்றவர்களின் "தண்டனை கிடைத்தாலும் விஞ்ஞானத்தைப் பரப்புவோம்" என்ற துணிவு தான் அங்கே மனிதர்களுக்கு ஓரளவு சுதந்திரம் பெற்றுத் தந்தது.

இன்றும், மேற்கில் இருந்து கிழக்காக நீங்கள் ஐரோப்பாவில் பயணித்து அவதானித்தால், மதச்சார்பில்லாத பிரான்சிலும், ஜேர்மனியிலும் இருக்கும் வாழ்க்கைத் தரத்தையும், சட்ட ஆட்சியையும் கிழக்கில் இருக்கும் போலந்திலும் (தீவிர கத்தோலிக்க நாடு), ரஷ்யாவிலும் (பழமைவாத கிறிஸ்தவ நாடு) காண முடியாது!

இவை மீள மீள நிரூபிக்கப்படும் அவதானிப்புகள். ஆனால், பயம் எங்களை ஏதோவொரு மதத்தின் மீது பற்றிப் பிடித்துக் கொண்டிருக்க வைத்திருக்கிறது. அதற்கு, ஓட்டைகள் நிறைந்த காரணங்களும் சொல்லி மனதைத் தேற்றிக் கொள்கிறோம்!

6 hours ago, colomban said:

Neurosceience என்றால் என்ன? இது எதை பற்றிய படிப்பு? இங்கு கொழும்பில் ஒரு சபை போதகர் இதைப்பற்றி அடிக்கடி பிரசங்கிப்பார். இவர் மக்களை ஏமாற்றுகின்றார் என்றே நான் நினக்கின்றேன். 

இது எங்கள் நரம்புத் தொகுதியை ஆராயும்/படிக்கும் அறிவியல் துறை. இதற்குள் மூளை, முண்ணான் என்பன எப்படித் தொழிற்படுகின்றன என்ற சகல மட்டத்திலான ஆய்வுகளையும் உள்ளடக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

மறு பக்கம், "மரணம் முடிவல்ல!" என்ற கோஷம் ஒரு தனி மனிதருக்கு மரண பயத்தை நீக்கி நம்பிக்கையைக் கொடுத்தால், அதனால் அவரது மரணத்திற்கு முன்னான வாழ்க்கை செழித்தால் அதில் ஆட்சேபனையெதுவும் யாருக்கும் இருக்க முடியாது!

Well said..! உண்மையில் நான் சிலகாலம் இதனால் anxiety disorder இல் இருந்தேன்.. தீவிரமாக வானவியல்,உடலியல், மனித தோற்றம் கூர்ப்பு போன்றவற்றை சினிமாப்படம் பார்ப்பது போல் கொரோன காலகட்டத்தில் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து பிறப்பு ஒரு இயற்கை விபத்து மரணத்தின் பின் எதுவுமில்லை போன்றவற்றை தெரிந்து கொள்ளும்போது இந்த மனநிலை மிகத்தீவிரமாக இருந்து அன்றாட வேலைகளில் கூட கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது.. எனவே எளிய மனிதர்களுக்கு இந்த நம்பிக்கைகள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தும்.. குடும்பத்தை பிள்ளைகளை பொறுப்புடன் கவனிக்கும் மனநிலையை கொடுக்கும்.. எல்லாவற்றுக்கும் மேலாக மனதில் ஏற்படும் வெறுமையை விரட்ட உதவும்.. நானே எவ்வளவோ கஸ்ரப்பட்டுத்தான் anxiety இல் இருந்து வெளிய வந்தேன்.. இப்பொழுதுகூட அப்பப்போ தனிமையில் இருந்தால் இந்த எண்ணங்கள் வந்துவிடும்.. குழந்தைகள்தான் இதிலிருந்து என்னை மீளவைத்தவர்கள்.. எனினும் வயதான காலத்தை எப்படி இந்த உண்மைகள் தெரிந்தபின்னும் கடத்தபோகிறேன் என்று கவலையாக இருக்கிறது.. அதற்கு இப்பவே திட்டமிடவேண்டும்..

———/

நேற்று படித்த ஒன்று இந்த இடத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் இங்கே பகிர்கிறேன்.. 

தெற்கு அவுஸ்ரேலியாவின் லுவிஸ்டன் கிராமம், அடிலெய்ட் நகரில் இருந்து நாற்பது நிமிட பயணத்தூரத்தில் இருக்கிறது.  சிட்னி மத்திய நகரில்  இருந்து இரண்டு மணிநேர பயணம் செய்தாலும், அடுக்கு மாடிகளும், பெரும் வியாபார ஸ்தாபனங்களுமாக கசகசவென்ற பெருநகரத்தின் கூறுகளைக் காண வேண்டி வரும். நாற்பது நிமிட பயணத்தூரத்தில் ஒரு பெருநகரம் இருந்தாலும் லுவிஸ்டன் கிராமத்தின் எந்தக் கூறுகளும் மாறாமல் இருக்கிறது.  ஆயிரமாயிரம் ஏக்கர்களில் கனோலா பூக்களை பயிரிடுவது இந்தக் கிராமத்தின் பிரதான விவசாயமாக இருக்கிறது. அந்தப் பூவில் இருந்து சமயலுக்கு எண்ணை எடுக்கிறார்கள். ஒவ்வொரு பண்ணையாளும் நூறு இருநூறு ஏக்கர்களுக்கு பயிரிடுகிறார். அதற்கு மேலும் பெரும் நிலங்கள் நீள்கிறது. இது அறுவடைக் காலம் போலும். லுவிஸ்டன் கிராமமே மஞ்சள் பூத்துக் கிடக்கிறது. தோட்டங்களின் நடுவில் பண்ணை வீடுகள். அல்லது கிராம எல்லைகளில் தோட்டங்களை வைத்திருப்பவர்கள் கிராம மத்தியில் செறிவாய் வாழ்கிறார்கள். ஒவ்வொரு வீடும் நாலைந்து ஏக்கரில் அமைந்திறது. பின்னேரரங்களில் குதிரைகளில் சேணமிட்டு வீதிவலம் வரும் ஆட்களைப் பார்க்கலாம். சிறுவர்களும் , இளைஞர்களும், முதியவர்களுமாய் அணிவகுப்பார்கள். 

லுவிஸ்டனில் எண்பத்து மூன்று  வயதான அந்தக் கிழவரைச் சந்தித்தேன்.  பொல்லூன்றியபடியே வந்து தான் எனக்கு முகமன் சொன்னார். ஆனால் சற்றைக்கும் சுத்தியல், அலவாங்கு சகிதம் அவரது வீட்டைச் சுற்றி செங்கற்கள் பதிக்கும் வேலையைத் தொடங்கினார். நான் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டிருந்தேன். என்னை நிமிர்ந்து பார்த்து " வெய்யில் காலம் தொடங்குகிறது என?" என்றார். நான் அதைச் சட்டை செய்யாமல் " உங்கள் வயதில் எல்லாம் என் சமாதிக்கு மேல் யாரும் செங்கல் பதித்திருப்பார்கள் " என்றேன். சிரித்தார். " அப்படிச் சொல்லாதே ! நீ நூறு வயது வரை கூட இருக்கலாம் " என்றார். " ஆனால் என் அறுபது வயதில் செங்கல் பதிப்பது என்ன? தூக்க கூட இயலுமாய் இருப்பேனோ தெரியாது. நீங்கள் எண்பத்து மூன்று வயதில் இதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்" என்றேன். அதற்குள் அவர் இரண்டு வரிச் செங்கற்களை பதித்து முடித்திருந்தார். நிமிர்ந்து மூச்செடுத்தார். பிறகு பொல்லூன்றிக்கொண்டு போய் அருகில் இருந்த கதிரையில் அமர்ந்து ஒரு மிட் ஸ்ரெந்த் பீரை ஒரு வாய் உறிஞ்சிக்கொண்டார். 

நான் அருகில் அமர்ந்து பேச்சுக்கொடுத்தேன். இங்கிலாந்துக்காரரான அவர் எழுபதுகளில் அவுஸ்ரேலியாவுக்கு சுற்றுலா வந்திருக்கிறார். அவருக்கு இந்த நாடு பிடித்துக்கொண்டுவிட்டது. எண்பத்து ஓராம் ஆண்டு நிரந்தரமாக அவுஸ்ரேலியாவில் வந்து குடியமர்ந்துவிட்டதாகச் சொன்னார். அவர் செங்கற்கள் பதித்துக்கொண்டிருந்த வீடு அவர் கட்டியதாகச் சொன்னார்.  " ஏற்கனவே இருந்த வீட்டை வாங்காமல் புதிதாக கட்டிக்கொண்ட வீடா " என்று கேட்டேன். " இல்லை! இந்த வீட்டை நானே தான் என் கைப்படக் கட்டினேன். சில சமயங்களில் உதவிக்கு யாரையும் சம்பளத்துக்கு வைத்துக்கொள்வேன். ஆனால் அனேக நேரங்களில் நான் மட்டுமே வேலை செய்தேன். அப்போது அதோ அங்கிருக்கும் அந்த கராஜில் குடியிருந்தேன்". எங்களுக்குப் பின்னால் ஐம்பது மீட்டர்கள் தள்ளி பழைய கராஜ் ஒன்று இருந்தது. " என் மகள் வளர ஆரம்பித்ததும். இதோ  பலகைகளாலான இந்த வீட்டைக் கட்ட ஆரம்பித்தேன். இதையும் நான் தான் கட்டினேன். மகளுக்கு இருபது வயது ஆன போது இந்த செங்கல் வீட்டை அவளுக்குக் கொடுத்துவிட்டு நான் பலகை வீட்டிற்கு மாறிவிட்டேன் ". 

" எண்பத்து மூன்று வயதில் இப்படி வேலை செய்வதற்கு பதிலாய் இப்போதாவது சம்பளத்திற்கு ஆள் வைத்துக்கொண்டால் இலகுவாக இருக்கும் அல்லவா?" 

" பிறகு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? சும்மா இருப்பது பெரும் சுமையாக இருக்கும். எனக்குச் செய்து கொண்டிருப்பதற்கு ஏதாவது வேலை வேண்டும். அதுவும் ஓடியாடி வேலை செய்துவிட்டு, ஓய்வு கால முதுமையை வெறுமனே எதுவும் செய்யாமல் கழிப்பது என்பது பைத்தியம் பிடிக்க வைக்கும் " 

"... " 

" நான் இந்தச் செங்கற்களை இன்றோ நாளையோ பதித்து முடிக்கப் போவதில்லை. அதற்கான அவசரமும் இல்லை. என் உடல் ஒத்துழைக்கும் மட்டும் வேலை பார்ப்பேன். பிறகு இப்படி அமர்ந்திருந்து ஓய்வெடுப்பேன். பார்த்தாய் தானே பத்துச் செங்கற்களை கூட பதித்திருக்க மாட்டேன். ஆனால் நாளைய நாள் செய்வதற்கு எனக்கு ஏதோ உண்டு என்கிற உற்சாகம் எனக்குப் போதும் " 

அப்போது கனைவா என்கிற தெற்கு அவுஸ்ரேலியாவின் இன்னுமொரு கிராமத்தில் நான் சந்தித்த வேறொரு ஆள் என் நினைவில் வந்து போனார். அவருக்கு அவளவு பெரிய வயதிருக்காது. அறுபது அறுபத்தைந்து இருக்கலாம். பெரும் பணக்காரர். வீட்டில் நான்கைந்து கார்கள் நின்றன.  விலையுயர்ந்த இரண்டு RAM ரக கார்களும் அவற்றில் அடக்கம். அவர் ஒரு Plumber. இப்போது அவரது வியாபாரத்தை மகன்கள் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால் மனிதருக்கு சும்மா இருக்க முடியவில்லை. சிட்னியில் சாதாரணமாக எந்த plumber உம் நானூறு ஐநூறு டாலர்கள் தீட்டிவிடும் வேலைகளை முப்பது , நாற்பது டாலர்களுக்கு செய்துகொடுத்துக்கொண்டிருப்பார். கேட்டால் " பிள்ளைகளிடம் வியாபாரத்தைக் கொடுத்துவிட்டு வீட்டில் ஓய்வாய் இருப்பது பெரும் மனச் சோர்வாய் இருக்கிறது. நான் முதுமையடைந்து விட்டதாகவும் , தனிமையாய் இருப்பது போலவும் இருக்கிறது. பணம் ஈட்ட வேண்டிய தேவை இல்லை. ஆனால் எதிலும் ஈடுபடாமல் சும்மா இருப்பது என்பது பெரும் மனச்சுமையை கொண்டு வரும். உனக்கு செய்வதற்கென்று எதையேனும் வைத்துக்கொள்ளும் போது உன்னால் உற்சாகமாய் இருக்க முடியும் " என்பார். 

பூங்கன்றுகள் நடுவதிலும், மரங்களைச் சுற்றி அலங்காரக் கற்களை நடுவதிலும் நாள் முழுவதும் செலவிடும் எத்தனையோ அவுஸ்ரேலிய முதியவர்கள் ஞாபகம் வந்து போனார்கள். 

இந்திய துணைக்கண்டச் சூழலில் ஓய்வு பெற்றதும் அல்லது பிள்ளைகள் வீட்டுப் பொறுப்பினை எடுத்துக்கொள்ள ஆரம்பித்ததும் வெறுமையாகவும், வெற்றிடமாகவும் உணரும் மனநிலையை வயது முதிர்ந்தவர்களிடம் சாதாரணமாகப் பார்க்கலாம். "ஓய்வெடுங்கள்" என பிள்ளைகளின் அன்போ அல்லது அவர்களது மனமோ சொல்லிக்கொள்ள , இதுவரை காலமும் செய்துகொண்டிருந்த அத்தனையிலும் இருந்தும் அவர்கள் ஒதுங்கிவிடுகிறார்கள் அல்லது ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள். இந்த வெறுமை அவர்களை பிடித்து ஆட்டுவதைப் பார்க்கலாம். முன்னை விட கோபப்படும் அப்பா, முன்பை விட கவலைப்படும் அல்லது எடுத்ததற்கும் எல்லாம் அழுதுவிடும் அம்மா என்று தினம் தினம் வீடுகளில் சந்தித்திருப்போம். காரணம் , அந்த வெறுமை அவர்களை தின்றுகொண்டிருக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் தன்னால் இயன்றதை , தனக்கென்று வகுத்துக்கொண்ட ஒரு வேலையில் தங்களை ஒன்றித்துக்கொள்ளும் மூத்தோர்கள் உற்சாகமாய் இருக்கிறார்கள். 

மூத்தோரை விடுங்கள். எதிலும் ஒன்றித்திராமல் சும்மாயிருக்கும் நேரத்தை அதிகமாக் கொண்டிருக்கும் எவருக்கும் மனச்சோர்வு வரும். நானே சாட்சி. நம்மால் கட்டுப்படுத்த இயலாத விடயங்களால் எமக்கு வரும் மன அழுத்தங்களின் போது எதிலும் ஈடுபாடு காட்டாமல் இருப்பது என்பது வேறு. அப்போதும் வலிந்து எதையாவது கடமைக்காவது செய்ய ஆரம்பித்தால் தப்பித்துக்கொள்ள மார்க்கம் கிடைக்கும். அதே சமயம் , வெறுமனே எந்தக் காரணமும் இன்றி எதிலும் ஈடுபாடில்லாத மனம் , பெரும் அழுத்தத்தில் விழும்.  எனக்கு அதைக் கற்பிக்க ஆளிருந்தது. உங்களுக்கு இதை யாரும் கற்பியாதிருந்தால் நான் அதுவாய் இருந்துகொள்கிறேன்.

நன்றி https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02sCkc2pqjhPNbXyL5gV9tS3XYFRm1c7Y7rmmFp3mXsFtHcFHq7qJnJt6qMuMZxFH5l&id=100076450413851

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உனக்கு செய்வதற்கென்று எதையேனும் வைத்துக்கொள்ளும் போது உன்னால் உற்சாகமாய் இருக்க முடியும் " என்பார். 

நன்றி புலவரே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆம், இதையொத்த அனுபவ முன்மாதிரிகளைப் பல வடிவங்களில் கேட்டிருக்கிறோம்.

ஊரில் இளையோரிடையே இப்போது இருக்கும் போதை மருந்துப் பிரச்சினைக்கு இதுவும் ஒரு தீர்வு என்பது என் கருத்து. படிப்பு, விளையாட்டு, சாரணர் படை, அம்புலன்ஸ் படை போன்றவற்றின் சமூக செயல்பாடுகள் மூலம் வார இறுதிகளை நிரப்புதல் இப்படி இளையோரை ஓட விட்டால் போதைக்கெல்லாம் நேரமேயிருக்காது. இதன் பெறுமதி ஊரில் விளங்கவில்லை என நினைக்கும் படி இருக்கிறது எனக்குத் தெரிந்த உதாரணங்கள்.

கோட்டையில் இராணுவத்தின் நிழலில் இருந்த மத்திய கல்லூரியில், 90 களில் விஞ்ஞான தினம், சாரணர் சேவை, தமிழ் மொழி தினம் என்று எதையும் விட்டுக் கொடுக்காமல் உழைத்தோம், பயன் பெற்றோம். இன்று எல்லாம் இருந்தும் இது போன்ற பயன் தரும் நடவடிக்கைகள் மிகவும் குறைவென்று அறிகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தது என்ன?

தினக்குரலில் அன்றைய பதிப்புக்கு அச்சு கோர்த்து எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது. 

ஆனால்…

இந்த 11 பக்கத்தில் 1/8 பக்க அளவுக்கு விளம்பரம் கொடுத்திருந்த சுடர்மணி ஜட்டி இலங்கை விநியோகிஸ்தர் கடைசி நேரத்தில் விளம்பரத்தை போட வேண்டாம் என சொல்லி விட்டார் ….

”யோவ்…போய் ஏதாவது ஒரு பேய் கதையை போட்டு பக்கத்தை நிரப்புயா”

அசோசியேட் எடிட்டர் மீது எரிந்து விழுகிறார் சீப் எடிட்டர்.……

சில நாட்களில் யாழ்களத்தில்

(மீண்டும் திரியின் முதாலவது பதிவில் இருந்து படிக்கவும்).

  • கருத்துக்கள உறவுகள்

I’m a doctor who studied 5K near-death experiences — there is life after death

August 29, 2023 10:20pm 
 
A radiation oncologist in Kentucky who has studied more than 5,000 near-death experiences believes his research has proven the existence of life after death — “without a doubt.”

Dr. Jeffrey Long founded the Near-Death Experience Research Foundation in 1998, having become fascinated with near-death experiences (NDE) while completing his medical residency.

In a new essay for Insider, he defines NDEs as “someone who is either comatose or clinically dead, without a heartbeat, having a lucid experience where they see, hear, feel emotions, and interact with other beings.”

Long collects stories from those who have reported NDEs and scientifically analyzes the accounts.

“In the face of overwhelming evidence, I’ve come to believe there’s certainly an afterlife,” he said.

Dr. Jeffrey Long, founder of the Near-Death Experience Research Foundation, claims that although he has no "scientific explanation," he has found "overwhelming evidence" of an afterlife.
Dr. Jeffrey Long, founder of the Near-Death Experience Research Foundation, claims that although he has no “scientific explanation,” he has found “overwhelming evidence” of an afterlife.
Getty Images
"I've come to believe there's certainly an afterlife," Long wrote in a new essay for Insider.
“I’ve come to believe there’s certainly an afterlife,” Long wrote in a new essay for Insider.
Twitter / @4NDERF

While each NDE is different, Long has noticed several consistent patterns.

About 45% of patients report an out-of-body experience. Long explained that people claim “their consciousness separates from their physical body, usually hovering above,” allowing them to see and hear what happens around them.

Long says these narratives have been confirmed by witnesses.

He cited the case of a woman who lost consciousness while riding a horse on a trail — “her consciousness traveled with her horse as he galloped back to the barn.”

She was later “able to describe exactly what happened at the barn” even though her body wasn’t physically there.

Others “say they’re transported into another realm,” with many claiming to have passed through a tunnel, seen a bright light, been greeted by a deceased loved one and watched their life “flashing before their eyes.”

Long has collected stories from those who reported NDEs and analyzed them scientifically to find consistent patterns.

Getty Images/iStockphoto

Long admitted that these sightings have become cliché, but said young children (who likely have not been exposed to those stories) have described similar experiences.

“I haven’t found any scientific explanation for these experiences,” Long confessed, but noted the breadth of the reports.

“I’ve read brain research and considered every possible explanation for NDEs. The bottom line is that none of them hold water.”

Long isn’t the only one conducting this research.

Dr. Bruce Greyson, professor emeritus of psychiatry and neurobehavioral sciences at the University of Virginia, was inspired to study NDEs after he had one of his own.

"I've read brain research and considered every possible explanation for NDEs. The bottom line is that none of them hold water," Long said.
“I’ve read brain research and considered every possible explanation for NDEs. The bottom line is that none of them hold water,” Long said.
Getty Images
 
He agrees with Long that no two NDEs are exactly alike, but he has also cataloged a few familiar traits

According to his research, NDEs are fairly common, with some 10-20% of people who come close to death reporting them — about 5% of the population at large. 

He also shared that many people claimed to have an out-of-body experience, a bright light sighting, and a reunion with a dead loved one.

“I think the evidence overwhelmingly points to the physical body not being all that we are,” he told The Post in 2021. “There seems to be something that is able to continue after the body dies. I don’t know what to make of it.” 

https://nypost.com/2023/08/29/doctor-who-studied-5k-near-death-experiences-convinced-of-life-after-death/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.