Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
12 SEP, 2023 | 10:53 AM
image
 

லிபியாவின் கிழக்கு பகுதியை தாக்கியுள்ள டானியல் புயல் காரணமாக உருவான பெரும் வெள்ளம் பல கரையோர நகரங்களில் குடிமனைகளிற்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்ததால் 2000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

libiya_flood1.jpg

2000 பேர் உயிரிழந்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்களை காணவில்லை என சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்படாத கிழக்கு லிபிய அரசாங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

libiya_flood.jpg

உயிரிழப்புகள் பல ஆயிரமாக மாறாலாம் என லிபியா குறித்த நிபுணர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

டானியல் புயலை தொடர்ந்து அதிகாரிகள் அவசரநிலையை  அறிவித்துள்ளனர். லிபியாவின் கிழக்கில் ஊரடங்கினை அதிகரித்துள்ள அதிகாரிகள் கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.பெங்காசி சூசே அல்மார்ஜ் உட்பட பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

150க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன - டெரனா நகரில் 150க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என செம்பிறைகுழுவினர் தெரிவித்துள்ளனர்.

libiya2.jpg

சுமார் ஒரு இலட்சம் பேர் வசிக்கும் பகுதிகளில் இரண்டு அணைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

மீட்பு நடவடிக்கையின் போது பல பாதுகாப்பு படையை சேர்ந்த பலரும் காணாமல்போயுள்ளனர்.

https://www.virakesari.lk/article/164390

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லிபியாவில் புயல், மழையால் 5,200 பேர் உயிரிழப்பு: 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை

1122684.jpg லிபியாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதி

திரிபோலி: புயல், மழை காரணமாக லிபியா நாட்டில் 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் புயல் உருவானது. டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த 10-ம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்தநதியில் கட்டப்பட்டுள்ள 2 அணைகள் உடைந்தன. இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதுகுறித்து கிழக்கு லிபியா நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் கூறும்போது, “புயல், கனமழை மற்றும் அணைகள் உடைப்பால் இதுவரை 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை’’ என்று தெரிவித்தனர்.

கிழக்கு லிபியாவில் 3 நாள் துக்கம்அனுசரிக்கப்படும் என பிரதமர்ஒசாமா ஹமாத் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று மீட்புப் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளார்.

மேற்கு லிபியாவை ஆட்சி செய்யும் கமாண்டர் கலிபா கூறும்போது, “புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் எங்கள் படையை சேர்ந்த வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துருக்கி உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன’’ என்றார்.

இதுகுறித்து செஞ்சிலுவை சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தாமர் ஜெனீவா நகரில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள லிபியாவில் உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. இதனால் அந்த நாடு கிழக்கு லிபியா, மேற்கு லிபியா என இரு பகுதிகளாக பிரிந்துள்ளது. உள்நாட்டுப் போரால் லிபியாவில் அடிப்படை கட்டமைப்புகள் மிகவும் மோசமானநிலையில் உள்ளன. இதனால் லிபியாவில் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. ஐ.நா. சபை, செஞ்சிலுவை சங்கம் சார்பில் கிழக்கு லிபியாவில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.

 

https://www.hindutamil.in/news/world/1122684-storm-rains-kill-5-200-in-libya-more-than-10-000-missing-1.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சோகம்

லிபியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 2,300 பேர் கொல்லப்பட்டதாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று டேர்னா நகரில் டேனியல் புயல் தாக்கியபோது 2 அணைகளும் 4 பாலங்களும் இடிந்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கிவிட்டன.

எகிப்து உட்பட சில அண்டை நாடுகளில் இருந்து சில உதவிகள் வரத் தொடங்கியுள்ளன, ஆனால் லிபியாவின் அரசியல் சூழ்நிலையால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன. நாட்டில் இரண்டு போட்டி அரசாங்கங்கங்கள் ஆட்சி செய்து வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான், இத்தாலி, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உதவிகளை அனுப்புவதாகக் கூறியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை இரவில் பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகளில்

 
லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நகரத்தின் வழியாக வெள்ளத்தின் நதி ஓடுவதைக் பார்க்க முடிகிறது. வெள்ளத்தில் ஏராளமான கார்கள் மிதந்து சென்றன.

ஏராளமான மக்கள் கடலுக்குள் அடித்துச் சென்ற கொடூரமான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. மற்றவர்கள் வீட்டின் மேல் தளங்களிலும் மொட்டை மாடிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

"நான் பார்த்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன், இது ஒரு சுனாமி போன்றது" என்று லிபியாவின் கிழக்குப் பகுதி அரசைச் சேர்ந்த ஹிஷாம் சிகியோவாட் கூறினார்.

டேர்னாவின் தெற்கே உள்ள அணைகளில் ஒன்று உடைந்ததால் விழுந்ததால் நகரின் பெரும் பகுதிகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக அவர் பிபிசியிடம் கூறினார்.

"ஒரு பெரிய ஊர் அழிந்துவிட்டது - ஒவ்வொரு மணி நேரமும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது"

 
லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சேதம் காரணமாக நகரத்திற்குள் நுழையும் பெரும்பாலான முக்கிய பாதைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன

உடல்களை மீட்க மீட்புக் குழுக்கள் போராடி வருவதாகவும், கடற்படை மற்றும் நீர்மூழ்கிக் மீட்புக் குழுவினர் கடலில் இருந்து உடல்களை மீட்க முயற்சித்து வருவதாகவும் அல்-திபீபா கூறினார்.

பேய்டா நகரத்தில் உள்ள உதவிப் பணியாளரான காசிம் அல்-கதானி,, "சேதம் காரணமாக நகரத்திற்குள் நுழையும் பெரும்பாலான முக்கிய பாதைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன என்பதால் மீட்புப் பணியாளர்கள் டேர்னாவை அடைவது கடினம்.” என்று பிபிசியிடம் கூறினார்.

“வெள்ளம் ஏன் இத்தகைய பேரழிவை ஏற்படுத்தியது என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, டேர்னா மற்றும் கிழக்கு நகரமான பெங்காசியை மீண்டும் கட்டியெழுப்ப ரூ.4,500 கோடி வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

சௌசா, அல்-மர்ஜ், மிஸ்ரட்டா ஆகிய நகரங்களும் ஞாயிற்றுக்கிழமை புயலால் பாதிக்கப்பட்டன.

 
லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பெங்காசிக்கு கிழக்கே கடற்கரையோரம் 250 கிமீ தொலைவில் உள்ள டேர்னா, வளமான ஜபல் அக்தர் பகுதியின் அருகிலுள்ள மலைகளால் சூழப்பட்டுள்ளது.

டேர்னா நகரத்திலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள மேல் அணை முதலில் உடைந்தது. அதன் நீரை இரண்டாவது அணையை நோக்கி அனுப்பியதாக நீர் பொறியியல் வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். இந்த அணை டேர்னாவுக்கு அருகில் உள்ளது.

"முதலில் நாங்கள் கனமழை என்று நினைத்தோம், ஆனால் நள்ளிரவில் ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது, அது அணை உடைந்தது," என்று தனது மனைவி மகளுடன் உயிர் பிழைத்த ராஜா சசி என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பெங்காசிக்கு கிழக்கே கடற்கரையோரம் 250 கிமீ தொலைவில் உள்ள டேர்னா, வளமான ஜபல் அக்தர் பகுதியின் அருகிலுள்ள மலைகளால் சூழப்பட்டுள்ளது.

கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு, லிபியாவில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் இந்த நகரம் இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கு அரசு நிர்வாகத்துடன் தொடர்புடைய கலீஃபா ஹப்தாருக்கு விசுவாசமான படைகளால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

https://www.bbc.com/tamil/articles/cll8pnprd6lo

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகை உலுக்கும் லிபியா பேரழிவு: “பெரும்” வெள்ளம்..கடலுக்குள் புதைந்த மக்கள்- 20,000 பேர் பலி!

libi-2.jpg

லிபியாவில் பெரும் சுனாமி போல ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பலியாகிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

மொரோக்காவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 3,000 பேர் வரை பலியாகினர், 10000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ஒட்டுமொத்த உலகமும் மொரோக்காவின் பேரழிவில் அதிர்ந்து போயிருந்தது.

இந்நிலையில் லிபியாவில் டேனியல் புயல் மிக மோசமான அழிவை ஏற்படுத்தி இருக்கிறது. டேனியல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை 2 அணைகளை துவம்சம் செய்தது. இந்த அணைகள் உடைந்த போது பெருவெள்ளமானது சுனாமி எனும் ஆழிப்பேரலையை விட பல மடங்கு அதிவேகமாக நகரங்களை காவு கொண்டது. இந்த பெருவெள்ளத்தில் சிக்கிய டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் நகரங்கள் அடையாளமே தெரியாமல் அழிந்து போயின.

libi-3.jpg

லிபியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கிய இந்த பெருவெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 8,000. மேலும் 20,000 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. பெருவெள்ள ஆறானது மனிதர்களை அப்படியே வாரி சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் வீசியதாம். இதனால் டெர்னா நகரை ஒட்டிய கடலுக்குள் தேடும் இடமெல்லாம் மனித உடல்களாக சிதறி கிடக்கிறது என அதிருகின்றனர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்.

லிபியாவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து போட்டி அரசாங்கங்கள் நடைபெறுகின்றன. இதனால் லிபியா மீட்பு பணியில் சர்வதேச நாடுகளின் உதவிகள் சென்றடைவதில் சிக்கல் தொடருகிறது.

libi-1.jpg

மேலும் லிபியாவில் ஐநா சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடுகின்றன; ஆனால் வெளிநாடுகளில் இருந்து மீட்பு பணிக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருவதன் மூலமே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழுமை அடையச் செய்ய முடியும் என்கிற ஆதங்கத்தையும் தன்னார்வலர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே டெர்னா நகர மேயர் Abdulmenam al-Ghaithi  பேட்டி ஒன்றில், லிபியா பெருவெள்ளத்தில் மொத்தம் 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என அச்சப்படுவதாக கூறியிருப்பது உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

https://thinakkural.lk/article/273052

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: "நிதி ஒதுக்கியும் அணைகளை சரிசெய்யாத அரசே பேரிடருக்கு காரணம்"

 

14 செப்டெம்பர் 2023, 14:17 GMT
புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்

ஒரு நகரமே அழிந்து கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் இடிபாடுகள். வீதிகளில் சேறும் சகதியும் நிரம்பி வழிகிறது. மருத்துவமனைகளில் சடலங்கள் நிரம்பி வழிகின்றன. அங்குள்ள மக்களின் முகங்களில் கவலை தோய்ந்துள்ளது.

பேரழிவுக்குத் தள்ளப்பட்ட லிபியாவில் அழுகுரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

கிழக்கு லிபியாவில் ஏற்பட்ட சுனாமியை போன்ற பயங்கர வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18,000 முதல் 20,000 பேர் வரை இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடலில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்ட வண்ணம் உள்ளன. இந்தப் பெரும் வெள்ளத்தால் காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 
பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: சுனாமி போன்ற பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது?

பட மூலாதாரம்,REUTERS/ESAM OMRAN AL-FETORI

 
படக்குறிப்பு,

நள்ளிரவில் டேர்னா அருகே அணை இடிந்து விழும் சத்தம் கேட்டதை செங்கல் தொழிற்சாலை தொழிலாளியான வாலி எடின் முகமது நினைவு கூர்ந்தார்.

நள்ளிரவில் டேர்னா அருகே அணை இடிந்து விழும் சத்தம் கேட்டதை செங்கல் தொழிற்சாலை தொழிலாளியான வாலி எடின் முகமது நினைவு கூர்ந்தார்.

“நாங்கள் அதிகாலை 3:00, 3:30 மணியளவில் எழுந்தோம். ஒரு பெரிய இடிச்சத்தம் கேட்டுத்தான் கண் விழித்தோம். டேர்னாவில் இருந்த அனைவருமே அதைக் கேட்டிருப்பார்கள்,” என்று அவர் ராட்டர்ஸ் முகமையிடம் கூறியுள்ளார்.

“வெள்ளம் நம்ப முடியாத அளவுக்குப் பெரிதாக இருந்தது. நாங்கள் வெளியே சென்றபோது அங்கு நகரமே இல்லை. தரைமட்டமாகி இருந்தது,” என்று அவர் கூறினார்.

 

சுனாமி போன்ற வெள்ளம் ஏற்பட்டது எப்படி?

பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: சுனாமி போன்ற பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது?

பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES VIA REUTERS

 
படக்குறிப்பு,

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (செப்டம்பர் 10) கிழக்கு லிபியாவில் உள்ள டேர்னா நகரை டேனியல் புயல் தாக்கியது. இரவில் கனமழை கொட்டியது.

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (செப்டம்பர் 10) கிழக்கு லிபியாவில் உள்ள டேர்னா நகரை டேனியல் புயல் தாக்கியது. இரவில் கனமழை கொட்டியது.

லிபியாவின் கிழக்கு மலைப்பகுதியில் இருந்து நகருக்குள் ஓடும் வாதி டேர்னா ஆறு டேர்னா நகர் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.

இது பெரும்பாலும் வறண்ட நிலையிலேயே காணப்படும். ஆனால், வரலாறு காணாத மழையால் இந்த ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் டேர்னா நகரத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் மேல் பகுதியில் அமைந்திருந்த அணை முதலில் உடைந்தது.

அதன் நீரை இரண்டாவது அணையை நோக்கித் திருப்பியதாக நீர் பொறியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மேல் அணையின் கொள்ளளவு 53 மில்லியன் கன அடி. ஆனால், கீழ் அணை, 795 மில்லியன் கன அடி கொள்ளளவு உடையது.

 
பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: சுனாமி போன்ற பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது?

பட மூலாதாரம்,REUTERS/AYMAN AL-SAHILI

 
படக்குறிப்பு,

இரண்டு அணைகளும் உடைந்து தண்ணீர் கணிக்க முடியாத வேகத்தில் நகருக்குள் சுனாமியைப் போல் சீறிப் பாய்ந்தது.

மேல் அணையில் இருந்து தண்ணீர் திருப்பி விடப்பட்டாலும் முறையான பராமரிப்பு இல்லாததால் இரு அணைகளும் உடைய நேர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு அணைகளும் உடைந்து தண்ணீர் கணிக்க முடியாத வேகத்தில் நகருக்குள் சுனாமியைப் போல் சீறிப் பாய்ந்தது.

சுனாமியை போன்ற அந்தப் பெரும் வெள்ளத்தில், நகரம் முழுவதுமாக கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது. அணை உடைந்ததை அறியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கானோர் நீரில் மூழ்கினர்.

பேரழிவின் கோரப்பிடியில் லிபியா

“நான் ஆறு பேரை இழந்துவிட்டேன். மூன்று பேரின் உடல்கள் கிடைத்துவிட்டன. மீதி 3 பேரைக் காணவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்,” என்று இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் பேசியபோது கூறினார்.

இது மிகப் பெரியதொரு பேரழிவு, உயிரிழந்த அனைவர் மீதும் இறைவன் இரக்கம் காட்டட்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களிடையே பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு மருத்துவ ஊழியர் வேதனையுடன் கூறினார்.

 
பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: சுனாமி போன்ற பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது?

பட மூலாதாரம்,REUTERS/AYMAN AL-SAHILI

 
படக்குறிப்பு,

பேரழிவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள லிபியாவுக்கு எகிப்து, துருக்கி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

“இந்தப் பேரழிவில் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. எங்கள் குடும்பம், எங்கள் சகோதரர்கள், உயிரிழப்புகள் மிக மிக அதிகம்,” என்று அவர் அழுதுகொண்டே கூறினார்.

டேர்னாவின் வீதிகளில் கட்டட இடிபாடுகளும் உடல்களும் மட்டுமே எஞ்சியுள்ளதாக, அப்பகுதியைச் சேர்ந்த புகைப்பட செய்தியாளரான தாஹா முஃப்தா பிபிசியிடம் தெரிவித்தார்.

பேரழிவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள லிபியாவுக்கு எகிப்து, துருக்கி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீர், உணவு என அத்தியாவசிய பொருட்களைத் தாண்டி உடல்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான பைகளைக் கேட்டு அழைப்பு வருவதாக தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

 
பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: சுனாமி போன்ற பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது?

பட மூலாதாரம்,REUTERS/AYMAN AL-SAHILI

 
படக்குறிப்பு,

உயிரிழந்தவர்களின் உடல்கள் பெரிய குழி தோண்டப்பட்டு அடக்கம் செய்யப்படுகின்றன.

அத்தகைய பைகளை வைத்திருந்த அப்துல் அசீஸ் என்ற தன்னார்வலர், அந்தப் பைகள் 100 குடும்பங்களுக்கு உதவும் என்று தான் நினைப்பதாகக் கூறினார். “இதை நாங்கள் விநியோகித்து விடுவோம். எதற்குமே இல்லை என நாங்கள் கூறுவதில்லை. மக்கள் எதைக் கேட்டாலும் வழங்க முயல்கிறோம்,” என்று அவர் கூறுகிறார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பெரிய குழி தோண்டப்பட்டு அடக்கம் செய்யப்படுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பால் நகரம் முழுக்கப் பரவியிருக்கும் சுகாதாரமற்ற நீரிலிருந்து தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

முன்பே எச்சரிக்கப்பட்டதா?

ஐ.நா.வின் சர்வதேச வானிலை அமைப்பு லிபியாவில் வானிலை முன்னறிவிப்பு சேவையை இயல்பாக இயக்கியிருந்தால், பல உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறுகிறது. அதேவேளையில், டேனியல் புயலின் வீரியம் குறித்த தகவல்களைத் தாங்கள் ஏற்கெனவே வழங்கியதாகவும் லிபிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

 
பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: சுனாமி போன்ற பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது?
 
படக்குறிப்பு,

வெள்ளம் ஏற்படுவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்பு மழைப்பொழிவு குறித்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

லிபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் இந்த வாரத் தொடக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. வெள்ளம் ஏற்படுவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்பு மழைப்பொழிவு குறித்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் கிழக்கு பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்களை மீட்பதற்கே முன்னுரிமை

மேலும் பல உதவிப் பணியாளர்கள் டேர்னாவிற்கு வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் தேடல் மற்றும் மீட்புப் பணியைவிட, இறந்தவர்களின் உடல்களை மீட்பதே அவர்களின் முன்னுரிமையாக இருக்கிறது.

இந்தப் பேரழிவில் பிழைத்தவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை இன்னமும் தேடி வருகின்றனர். சடலங்கள் தொடர்ந்து கடலுக்குள் இருந்து கரையில் ஒதுங்கிக்கொண்டே இருக்கின்றன.

 
பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: சுனாமி போன்ற பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது?

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

இரண்டு அணைகளில் விரிசல் ஏற்பட்டால், அது உடைந்து விழப் போகிறது என்பது ஏன் மக்களுக்கு எச்சரிக்கப்படவில்லை என்பது குறித்துக் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

கடற்கரையானது ஆடைகள், பொம்மைகள் மற்றும் பொருட்களால் மூடப்பட்டுள்ளது. இவையனைத்தும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளில் இருந்து சிதறியவை.

ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு அணைகளில் விரிசல் ஏற்பட்டால், அது உடைந்து விழப் போகிறது என்பது ஏன் மக்களுக்கு எச்சரிக்கப்படவில்லை என்பது குறித்துக் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

லிபியாவை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் பிபிசியிடம் பேசியபோது, நாட்டின் இந்தக் கொடிய பேரழிவு நடக்க “அனைத்துமே” காரணம் என்று கூறினார்.

லிபிய கல்வியாளரும் தக்யீர் கட்சியின் தலைவருமான குமா எல்-காமதி, “அரசின் தோல்வி, பலவீனமான வழிமுறைகள், பலவீனமான அரசுகள், பலவீனமான நிறுவனங்கள் என எல்லாமே இதற்குக் காரணம்,” என்று அவர் விமர்சித்தார்.

கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில், "அந்த அணைகளை சரிசெய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி செல்லவேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை," என்று எல்-காமதி கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cv28zjpxeydo

Posted

லிபியாவின் இன்றைய பேரழிவுக்கு, பெரு மழையும், அதற்கான முன்கூட்டியே எச்சரிக்கை செய்யாமையும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமையும் உடனடிக் காரணங்களாக இருப்பினும், முக்கியமான மறைமுகக் காரணங்களில் ஒன்று அமெரிக்காவும் அதன் நேட்டோ நாடுகளும் இணைந்து செய்த இராணுவ நடவடிக்கையும் ஆகும்.

2011 இல் இவை லிபியாவில் இராணுவ நடக்கையினை நிகழ்த்தி கடாபியை கொன்ற பின், அவற்றால் இன்று வரைக்கும் ஒரு நிலையான அரசு அமையச் செய்ய முடியவில்லை. இந்த பேரழிவு நிகழ்ந்த பிரதேசத்தில் கூட, லிபிய அரசின் நிலையான ஆதிக்கம் இல்லாமல், கிளர்ச்சிக் குழுக்களின் ஆதிக்கங்களும் அழிவுகளும் தொடர்கின்றன. ஒருங்கமைக்கப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணம் கூட வழங்க முடியாத நிலையில் தான் அங்குள்ள அரசு(கள்) உள்ளன. 

லிபியா பேரழிவு காணோளிகள் எல்லாமே மிகவும் அவலமாக உள்ளன. ஒரு சில மணித்தியாலங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இருந்த சுவடே இல்லாமல் அழிந்து போயுள்ளன.
 

ஏனைய இஸ்லாமிய நாடுகளாவது உரிய முறையில் உதவுகின்றனவா என பார்ப்போம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

லிபியாவின் இன்றைய பேரழிவுக்கு, பெரு மழையும், அதற்கான முன்கூட்டியே எச்சரிக்கை செய்யாமையும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமையும் உடனடிக் காரணங்களாக இருப்பினும், முக்கியமான மறைமுகக் காரணங்களில் ஒன்று அமெரிக்காவும் அதன் நேட்டோ நாடுகளும் இணைந்து செய்த இராணுவ நடவடிக்கையும் ஆகும்.

2011 இல் இவை லிபியாவில் இராணுவ நடக்கையினை நிகழ்த்தி கடாபியை கொன்ற பின், அவற்றால் இன்று வரைக்கும் ஒரு நிலையான அரசு அமையச் செய்ய முடியவில்லை. இந்த பேரழிவு நிகழ்ந்த பிரதேசத்தில் கூட, லிபிய அரசின் நிலையான ஆதிக்கம் இல்லாமல், கிளர்ச்சிக் குழுக்களின் ஆதிக்கங்களும் அழிவுகளும் தொடர்கின்றன. ஒருங்கமைக்கப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணம் கூட வழங்க முடியாத நிலையில் தான் அங்குள்ள அரசு(கள்) உள்ளன. 

லிபியா பேரழிவு காணோளிகள் எல்லாமே மிகவும் அவலமாக உள்ளன. ஒரு சில மணித்தியாலங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இருந்த சுவடே இல்லாமல் அழிந்து போயுள்ளன.
 

ஏனைய இஸ்லாமிய நாடுகளாவது உரிய முறையில் உதவுகின்றனவா என பார்ப்போம்.

உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, நிழலி said:

ஏனைய இஸ்லாமிய நாடுகளாவது உரிய முறையில் உதவுகின்றனவா என பார்ப்போம்.

எப்பொழுது தான் அவர்கள் தமக்குள் உதவி இருக்கிறார்கள்??

ஐரோப்பிவில் இருந்து மொரோக்கோவுக்கு செல்லும் உதவிகள் கூட லிபியாவுக்கு???

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

லிபியாவின் இந்த நிலைக்கு கடாபியை கொலை செய்த அமெரிக்காவும் மேற்கு நாடுகளுமே முழுப்பொறுப்பு.

பிபிசி கூட தெரிஞ்சோ தெரியாமலோ.. கடாபிக்கு பின்னான லிபியாவினை உருவாக்கிய அனைவரினதும் தோல்வியே இந்தப் பேரழிவு என்று சொல்லிட்டுது. அதில பிரிட்டனுக்கும் கூட்டுப் பங்களிப்பு இருக்குது என்பதை பிபிசி.. மறுதலிக்காது என்று நம்புவோமாக.

லிபிய மக்களின் இந்தத் துயருக்கு மேற்குலகமே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.

இதே நிலை.. மிக விரைவில்.. உக்ரைனுக்கும் வரும். கோமாளி சொலுங்கியால். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்.."சகோதரத் தலைவன்" இன்று இருந்திருந்தால்..மழையே பெய்திருக்காது, பாறைகளும், மண்ணும் சேர்த்துக் கட்டிய அணை உடைந்தே இருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈராக்கிலும், லிபியாவிலும் அன்று இருந்த ஆட்சியை (சர்வாதிகாரத்தனமாக இருந்தாலும் கூட) நீக்கி தமது பொம்மைகளை நிறுத்தியவர்கள் மேற்குலக நாடுகளே. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றவர்கள்.

ஈராக்கில் சதாம் இருக்கும்வரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அங்கு தலையெடுக்க அவர் விடவில்லை. ஆனால், தமது நண்பனான சவுதி அரேபியாவையும், கூடவே குவைத்தையும் காப்பாற்றி எண்ணெய் வளத்தைத் தொடர்ந்து பேண ஈராக்கில் அமெரிக்கப்படை தரையிறங்கியது. பின்னர் சதாம் அகற்றப்பட, அமெரிக்காவைத் தாக்குகிறோம் என்கிற பெயரில் உலகில் இருந்த அனைத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்பட்ட ஈராக்கில் நுழைந்தன. அல்கொய்டா மட்டுமல்லாமல் ஐஸிஸ் அமைப்பும் இந்தப் பிண்ணனியிலேயே ஈராக்கில் முகாம் அமைத்தன. ஆனால் என்ன, இன்று அமெரிக்காவும் ஈராக்கை விட்டு வெளியேறியாயிற்று, சதாமையும் கொன்றாயிற்று. ஆனால், அமெரிக்காவின் பரம வைரி ஈரான் இப்போது ஈராக்கினுள் புகுந்து அரசைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.சதாம் இருந்திருந்தால் இஸ்லாமிய அடிப்படைவாதமும் வந்திருக்காது, ஈரானும் அங்கு நுழைந்திருக்காது.

லிபியாவில் சர்வாதிகாரியான கடாபியை அழித்ததன் மூலம் அந்நாட்டை இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போர்க்களமாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போன நாடாகவும் மேற்குநாடுகள் மாற்றியிருக்கின்றன. ஏட்டிக்குப் போட்டியான குழுக்களின் கைகளில் அகப்பட்டுச் சிதைந்து கொண்டிருக்கும் லிபியாவில் அபிவிருத்தியென்பதோ, மக்கள் நலத் திட்டங்கள் என்பதோ எப்படிச் சாத்தியம்? சரித்திரம் காணாத‌ மழை பெய்தே இந்த அழிவு ஏற்பட்டிருப்பினும், நிவாரணப் பணிகளை சரிவரச் செய்வதற்கு நிலையான அரச இயந்திரம் ஒன்று அங்கில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோமா?  அந்த நிலையான அரச இயந்திரம் இல்லாமற்போனமைக்கு யார் காரணம்? 

சிரியாவிலும் இதனையே மேற்குலகு செய்யப் பார்த்தது. சர்வாதிகாரி ஆசாத்திற்கு சர்வாதிகாரி புட்டினின் உதவி கிடைத்ததனால் அந்நாடு தற்போதும் ஏதோ ஒருவகையான அரச செயற்பாட்டினைக் கொண்டிருக்கிறது.

சர்வாதிகாரிகளை அழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதென்பதெல்லாம் சரிதான். ஆனால், சர்வாதிகரிகளை அழித்தபின்னர் நாட்டை அடிப்படைவாதிகளின் கைகளில் விட்டு விட்டு இருந்தவற்றையும் இழந்து நிற்கும் மக்களை நட்டாற்றில் விட்டுச் சென்றது சரியா? சர்வாதிகாரிகளை அகற்றினீர்கள் என்றால் அந்நாடுகளில் ஜனநாயகம் நிலைபெற்று, மக்களாட்சி பலம்பெறும்வரை நின்று உதவியிருக்க வேண்டாமோ? 

  

5 hours ago, nedukkalapoovan said:

இதே நிலை.. மிக விரைவில்.. உக்ரைனுக்கும் வரும்

இந்த வாதம் இங்கு செல்லாது. உக்ரேனில் இருப்பது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனநாயக வழி ஆட்சி, சர்வாதிகார ஆட்சியல்ல. தனது நாட்டு மக்களுக்குத் தேவையான வசதிகளை இன்றிருக்கும் முறையான உக்ரேன் அரசு செய்தே வருகிறது.   அந்த மக்களாட்சியை அகற்றி தனது பொம்மை ஒன்றை அங்கே கொழுவேற்றி அழகுபார்க்கவே சர்வாதிகாரி புட்டின் விளைகிறான். ஆக, உக்ரேன் சீர்குலைக்கப்படுவது புட்டினாலேயே அன்றி மேற்குலகினால‌ல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரஞ்சித் said:

சர்வாதிகாரிகளை அழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதென்பதெல்லாம் சரிதான். ஆனால், சர்வாதிகரிகளை அழித்தபின்னர் நாட்டை அடிப்படைவாதிகளின் கைகளில் விட்டு விட்டு இருந்தவற்றையும் இழந்து நிற்கும் மக்களை நட்டாற்றில் விட்டுச் சென்றது சரியா? சர்வாதிகாரிகளை அகற்றினீர்கள் என்றால் அந்நாடுகளில் ஜனநாயகம் நிலைபெற்று, மக்களாட்சி பலம்பெறும்வரை நின்று உதவியிருக்க வேண்டாமோ? 

  

 

 இந்த இறுதி வரை நின்று போஷிப்பது எவ்வளவு சாத்தியம் ஒரு வெளிச்சக்தியால்? ஆப்கானிஸ்தானில் இதையே செய்ய முயன்றார்கள், வெற்றியடையவில்லை. ஈராக்கிலும் முயன்றார்கள். போர் எதிர்ப்பாளரான எம்மா ஸ்கை என்ற பிரிட்டிஷ் செயற்பாட்டாளரை, அமெரிக்க தரப்பு வடக்கு ஈராக்கில் தனது நிர்வாக நடவடிக்கைகளில் ஆலோசகராகச் சேர்த்துக் கொண்டது. மிகுந்த ஆர்வத்துடன் பணியில் சேர்ந்த அவர், ஒரு தினக் குறிப்புப் போல தன் அவதானிப்புகளை புத்தகமாக எழுதி வெளியிட்டார். ஈராக்கில் சதாமின் வீழ்ச்சிக்குப் பின்னர் நடந்தவை பற்றி அறிய விரும்புவோர் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல்.

The Unraveling: High Hopes and Missed Opportunities in Iraq

புத்தக முகப்பு: நன்றியுடன் அமேசன் தளம் 

ஈராக்கில் இருக்கும் மூன்று பிரதான தரப்புகள் ஒன்றாக இணையவோ, அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவோ எள்ளளவும் முனையவேயில்லை என்பது இந்த நூலில் விபரிக்கப் படும் சம்பவங்களை வாசிக்கும் போது புலப்படும்.

அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக் மீது பொய்யான காரணம் கூறி படையெடுத்தது முதல் தவறு. சதாமை நீக்கிய பின், ஈராக் இப்படி இருக்கும் என ஊகிக்க தவறியது இரண்டாவது தவறு. ஆனால், ஈராக்கில் நிரந்தரமாகத் தங்கி நிற்பதும் சாத்தியமில்லாத "வியற்நாம்" தவறாக மாறியிருக்கும். வெளியேறியதே சரியானதென நான் நினைக்கிறேன்.

கடாபி, உள்ளூர் மக்களுக்கு மட்டும் சர்வாதிகாரியாக இருக்கவில்லை. அவர் பல மேற்கு எதிர்ப்பு இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கு வெளிப்படையாகவே தங்கமும், பணமும் கொடுத்து ஊக்குவித்த ஒருவர். சதாமின் முடிவுக்குப் பின்னர் தான், கொஞ்சம் அமெரிக்காவின் பக்கம் சமாதானக் கரம் நீட்ட ஆரம்பித்தார் (லொக்கர்பீ விமானக் குண்டு வெடிப்பில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு, இரகசியமாக நஷ்ட ஈடு கொடுக்கவும் முனைந்தார்). இன்று ஏதோ அவரை அமெரிக்கா வஞ்சகமாகக் கொன்று விட்டதென பிரச்சாரங்கள் பரவுகின்றன. ஆனால், மேற்கிற்கு கொடுத்த அச்சுறுத்தல்களால், கடாபி இந்த முடிவை விட வேறெதையும் எதிர்பார்த்திருக்க முடியாதென்பது என் அபிப்பிராயம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, ரஞ்சித் said:

இந்த வாதம் இங்கு செல்லாது. உக்ரேனில் இருப்பது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனநாயக வழி ஆட்சி, சர்வாதிகார ஆட்சியல்ல. தனது நாட்டு மக்களுக்குத் தேவையான வசதிகளை இன்றிருக்கும் முறையான உக்ரேன் அரசு செய்தே வருகிறது.   அந்த மக்களாட்சியை அகற்றி தனது பொம்மை ஒன்றை அங்கே கொழுவேற்றி அழகுபார்க்கவே சர்வாதிகாரி புட்டின் விளைகிறான். ஆக, உக்ரேன் சீர்குலைக்கப்படுவது புட்டினாலேயே அன்றி மேற்குலகினால‌ல்ல. 

உக்ரைன் செய்கிற இனப்படுகொலைகள்.. அமெரிக்க சார்ப்பு நடவடிக்கைகள் எல்லாமே சனநாயகமோ..??! இப்பவும் போரை சாட்டு வைச்சு தேர்தல்களுக்கு முகம் கொடுக்காமல் தப்பிக்கும் நிலை தான் அமெரிக்க ஆதரவு சனநாயகமாக்கும். எப்படி எல்லாம் சனநாயகத்தின் பெயரால் மக்களை அழிக்கிறார்கள்.. அப்படி இருந்தும்.. உந்தப் போலி சனநாயகத்தை நம்புபவர்களை என்னென்பது.

பணத்துக்கும் பதவிக்கும் அடிபடும்.. இன்றைய லிபிய கூலித் தலைமை போலன்றி.. கடாபி ஆட்சியில் இருந்திருந்தால்.. நிச்சயமாக வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கைகளுக்கு சரியான நடவடிக்கைகளை மக்களின் நலனை முன்னிறுத்தி செய்திருப்பார் என்பதை நம்பலாம். அதையே மேற்குலக ஊடகங்கள் சில கூட சொல்லி வைத்துள்ளன. கடாபியை எதிரியாகப் பார்த்தவர்கள் கூட. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லிபியாவில் பேரழிவின் மத்தியில் ஒரு அதிசயம் - முழு குடும்பமும் நீரில் அடித்துச்செல்லப்பட 11வயது சிறுவன் உயிர்தப்பியுள்ளான்

Published By: RAJEEBAN

18 SEP, 2023 | 03:41 PM
image
 

லிபியாவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள  வெள்ளத்தில்  முழுக்குடும்பம் உயிரிழந்துள்ள நிலையில் அந்த குடும்பத்தைசேர்ந்த11வயது  சிறுவன் மாத்திரம் உயிர் தப்பியுள்ளான்.

இதனை அதிசயம் என வர்ணிக்க முடியும் என ஸ்கைநியுஸ் தெரிவித்துள்ளது.

டெர்னாவில் அந்த சிறுவனின் முழுக்குடும்பத்தையும் அடித்துச்சென்ற அலை அந்த சிறுவனை மாத்திரம் மீண்டும் கரைக்கு கொண்டுவந்து சேர்ந்துள்ளது.

அந்த சிறுவன் குறிப்பிடத்தக்க காயம் எதுவுமின்றிகாணப்படுகின்றான் காலில் சிறிய சிராய்ப்புகள்மாத்திரம்காணப்படுகின்றன  

skynews-derna-libya_6288858.jpg

வெள்ள நீர் எங்களை உயரத்திற்கு தூக்கி மீண்டும் நிலத்தில் வீழ்த்தியதுஎன அந்தசிறுவன் தெரிவித்துள்ளான்.

நான் நிலத்தில் கண்விழித்தேன் அங்கிருந்து எழுந்து நடந்தேன் பின்னர் பொலிஸ் காரில் என்னை பாடசாலைக்கு கொண்டு சென்றார்கள் என அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

அந்த சிறுவனின் மன உணர்வு என்ன என நான் கேட்டேன்  அவன் அதற்கு ஒன்றுமில்லை என பதிலளித்தான்.

அந்தசிறுவனின் உறவினரான முஸ்தபா பரஸ் தற்போது அவனின் பாதுகாவலராக காணப்படுகின்றார்

நாங்கள் 11 பேரை இழந்தோம் ஐந்து உடல்களை மாத்திரம் மீட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பொறியியலாளரான அவர் தடுத்திருக்க கூடிய இந்த துயரம் குறித்து கடும்சீற்றம் வெளியிட்டுள்ளார்.

1973 இல் கட்டப்பட்ட லிபிய அணை 50 வருடங்களாக பராமரிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த துயரத்திற்கு அலட்சியமும் ஊழலும் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பேரழிவை சந்தித்துள்ள டெர்னாவின் பகுதியில் படையினர் மீட்பு பணிகளிற்கு தலைமை வகிக்கின்றனர்.

சிலவேளைகளில் அவர்களது நடவடிக்கைகள் சிறப்பானவையாக காணப்படுகின்றன

சிலவேளைகளில் எதிர்மறையான விளைவுகளை  ஏற்படுத்துகின்றன.

முதல் நாள் பெருமளவு படையினரின் பிரசன்னம் காணப்படவில்லை.

அன்று காலை விடிந்ததும் ஆயிரக்கணக்கான உடல்கள் கரையொதுங்கின வெள்ள நிவாரண குழுவே நடவடிக்கையில் ஈடுபட்டது.

அந்த குழுவில் செம்பிறை சங்கத்தினர் பொலிஸார் இராணுவத்தினர் மருத்துவர்கள் ஆகிய பலர் காணப்பட்டனர்.

ஐரோப்பாவில் பேரழிவை ஏற்படுத்திய டானியல் புயல் அது மத்தியதரை கடலை கடந்தவேளை அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர்.

skynews-derna-libya_6288857.jpg

நாங்கள் கடலில் இருந்து வரும் வெள்ளத்திற்கு தயாராகயிருந்தோம் ஆனால்  பின்னாலிருந்த அணை உடைந்த வெள்ளமே பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என ஒருவர் தெரிவித்தார்.

முதல்நாள் காலை 1500 உடல்கள் கரையொதுங்கின- என தெரிவித்த அவர் நாங்கள் அனைவரும் கடற்கரைக்கு ஒடினோம் அது கிட்டத்தட்ட மங்கலாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/164861

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/9/2023 at 21:49, nedukkalapoovan said:

பணத்துக்கும் பதவிக்கும் அடிபடும்.. இன்றைய லிபிய கூலித் தலைமை போலன்றி.. கடாபி ஆட்சியில் இருந்திருந்தால்.. நிச்சயமாக வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கைகளுக்கு சரியான நடவடிக்கைகளை மக்களின் நலனை முன்னிறுத்தி செய்திருப்பார் என்பதை நம்பலாம். அதையே மேற்குலக ஊடகங்கள் சில கூட சொல்லி வைத்துள்ளன. கடாபியை எதிரியாகப் பார்த்தவர்கள் கூட. 

மேற்குலகின் அரபு வசந்தத்திற்கு முன் அவர்கள் தமது வாழ்க்கையை தாமே கவனித்துக்கொண்டனர்.நாகரீக உலகின் கவனிப்புகள் இல்லாவிடினும் சந்தோசமாக வாழ்ந்தனர். 
இவர்கள் என்று அரபுவசந்தம் என கூறினார்களோ அன்றே அவர்களின் வசந்தங்களும் மறைந்து விட்டது.
அதன் பலன்.....

இன்று கொத்துக்கொத்தாக ஐரோப்பா நோக்கி படையெடுக்கின்றார்கள். தாங்க முடியாமல் ஐரோப்பா தவிக்கின்றது.இந்த வலி அமெரிக்காவிற்கு தெரியுமா?

ஜேர்மனியில் ஒரு நீச்சல் தடாகத்தில் ஒரு யுவதியை 8 பேர் சேர்ந்த பாலியல் கொடுமை செய்திருக்கின்றார்கள். இது தேவையா?



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.