Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூவானம் (கிறுக்கல்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது வேலைக்கான பயணத்தில் நாள்தோறும் பேருந்தில் போய்வருவது வழமை தினம் தினம் பஸ்கட்டணம் அதிகரிப்பதால் போக்குவரத்து செலவு அதிகமாக வரவே கையில் தலைக்கவசத்தை வைத்து பயணம் செய்வது வாடிக்கையானது. சில நேரம் சிலர் ஏற்றிச்செல்வார்கள் சில நேரம் கையசைத்தும் ஏற்றிசசெல்ல மாட்டார்கள் ஆரம்பத்தில் நானும் மோட்டார் சைக்கிளில் பயணித்தேன்  காலப்போக்கில் பொருளாதார சுமை காரணமாக பஸ்ஸில் பயணிக்க ஆரம்பமானேன் . பஸ் சீசன் ரிக்கட் எடுத்தாலும் சீசனைக்கண்டால் பஸ்ஸை தூர நிறுத்தும் நம்மூர் சாரதிகளும் நான் தற்போது தலைக்கவசத்துடன் பாதையில் நிற்கும் இந்த நிலைக்கு காரணம் . 

வேலையிடத்தில் எனது உயரதிகாரியை சந்தித்து எனக்கு பயணம், சாப்பாட்டு செலவு அதிகமாகிறது என்னால் வேலைக்கு ஒழுங்காகவும்,குடும்ப சூழ்நிலை காரணமாகவும் நேரத்துக்கும் வரமுடியாமல் உள்ளது என்னை நீங்கள் வேறு பாடசாலைக்கு விடுவித்தால் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என சொல்ல அவர் விடுதலை தர மறுத்துவிட்டார். காரணம் அதிக வேலைகளை இழுத்துப்போட்டு செய்த காரணத்தால் மாறுதல் எடுக்கவும் முடியவில்லை தினம் தினம் தலைக்கவசத்துடன் நிற்பேன் யாராவது என்னை ஏற்றிக்கொண்டு போவார்கள் என‌. அன்றைய நாள் நானும் கையை காட்ட‌ ஒருவர் ஏற்றினார் ஏற்றிய அவர் என்னை நியாபகம் இருக்கா என அவர் கேட்க? இல்லையென நான் சொல்ல அவரோ நீங்கள் என்னை ஒரு நாள் ஏற்றி சென்று இருக்குறீங்க என அவர் சொல்ல ம் இருக்கலாம் (நாம் செய்யும் நல்லது எங்கோ ஓர் இடத்தில் நாம் அவதியுறும் போது அது வந்து சேரும்) 

நான் தனியே போகும் யாரும் தலைக்கவத்துடன் நின்றால் ஏற்றிப் போவ‌து ஏற்றிச்செல்வது வழமை என்றேன். ம் தற்போது பலர் செல்வார்கள் ஆனால் ஏற்றுவதில்லை அதற்கு காரணமும் உண்டு சிலர் தனியே நின்று ஏறி யாரும் அற்ற இடத்தில் இறங்குவதாக சொல்லி கத்தியை காட்டி கொள்ளை அடிச்ச சம்பவங்கள், மற்றது போதைப்பொருள் கடத்திய சம்பவங்களும் நடந்ததால் யாரும் ஏற்றிச்செல்வதில்லை என்றேன்.

நீங்க எங்க போகணும் தம்பி? அண்ண கல்முனைக்கு போகணும் சரி ஏறுங்க எங்க வேலை செய்யறீங்க பாடசாலையில் வேலை செய்கிறன் அப்படியா சொந்த இடம் எது? என் ஊரை நான் சொல்ல‌ அப்படியானால் நீங்கள் எடுக்கும் சம்பளம் பஸ்ஸுக்கும் சாப்பாட்டுக்கும் செலவாக‌ போயிடுமே தம்பி என கேட்டார் ஓம் அண்ணன் இப்படித்தான் போகிறது என நானும் சொல்ல காத்தான்குடி வருகிறது அங்கே  அண்ணை மிக கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள் இங்கே மனித எருமை மாடுகள மிக அதிகமாக குறுக்காக பாய்ந்து பாதையை கடந்து செல்லும் என நான் சொல்ல அவர் சிரிக்கிறார். என்ன உங்க குரல் சத்தமே வருகுதில்ல போங்க காரணத்தை சொல்கிறேன் என நானும் சொல்ல‌ 

நீங்கள் எங்க வேலை செய்கிறீர்கள் என்று கேட்க அவரோ நான் மிதிவெடிகளை அகற்றும் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என சொன்னார் அப்போது மிதிவெடி மிகவும் பயங்கரமானதாக இருக்குமே நான் கேட்க லேசான மழைதூறல் வேற வாகனம் புதுக்குடியிருப்பை அடைகிறது .................. புது குடியிருப்பு  பகுதி சன நடமாட்டம் குறைவான பகுதி  ஆங்காங்கே சிலசில ஓலை குடிசைகள் இருக்கும் அங்கே  இருக்கும் மக்கள் சீசனுக்கு ஏற்றால் போல் முந்திரிகை , நாவல் பழம் , சோளன் அவித்து பாதையோரம் விற்பது வழமை  மழையும் அதிகரிக்க‌

நாங்களும் ஒரு ஓலை குடிசை நோக்கி ஒதுங்க அங்கே அம்மா மழையில் நனைந்து கொடுகி நின்றா சோள‌ன் இருக்கிறதா? ஓம் மகன் இருக்கு  எங்கள் இருவருக்கும் தாருங்கள் எனச் சொல்ல அவர் சோளனை அடுப்பில் இருந்து  எடுத்து இருவருக்கும் தருகிறார் இருவரும் மெதுவாக கதைத்துக் கொண்டிருக்கும் போது மின்னல் வெட்ட‌ இடியும் காதை பிளந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சிறுவனை நான் காண டேய் தம்பி இங்க வாடா என நான் கூப்பிட அவன் ஓடுகிறான் பின்னங்கால் *** அடிபட ஏன் தம்பி அவன் உங்கள காண ஓடுகிறான் என அந்த அம்மாவும் என்னை ஏற்றி வந்த அண்ணரும் கேட்க நான் வெட்ட எடுத்த கோழி போல‌கத்துர குரல் இவனாலதான் வந்தது என நான் சொல்ல என்ன நடந்தது என இருவரும் கேட்க ஒரு கிழமைக்கு முன்னன் நான் நல்லா கேட்டுத்தான் இவனிட்ட நாவல் பழம் வாங்கினன் பாவி பழம் பழுக்க சுண்ணாம்பு தண்ணி தெளிச்சிருக்கான் போல அத சாப்பிட்ட நாளில் இருந்து தொண்டை இப்படி இருக்கு இப்ப கொஞ்சம் பரவாயில்லை மூணு நாளைக்கு முன்னம் எல்லாம் கைப்பாசைதான் என சொல்ல இருவரும் சிரிக்கின்றனர்.


அந்த அம்மாவோ தம்பி இவங்க வாகரையிலிருந்து பழம் எடுத்து விற்கிறவங்கள் நீங்கள் யோசிக்கலையா முழுப்பழமும் மொத்தமாக பழுத்த்திருக்குமா என ? ஓம் அம்மா அது தெரிஞ்சுதான் கேட்டன் பல வருசமா இந்த ரோட்டால போய்வாரதால எனக்கு நல்ல அனுபவம் இவங்க கிட்ட என நானும் சொல்ல சோளம் கதையோடு கதையாக முடிந்து விட்டது இன்னுமொரு சோளனை தாங்கள் இருவரும் எடுக்கிறோம். 

ஏன் அண்ண‌ நீங்கள் இன்றைக்கு வேலைக்கு லீவா என நான் கேட்க இல்ல தம்பி நான் வேலையை விட்டு எழுதிக்கொடுத்து விட்டு வருகிறேன் வேலையை முற்றாக விட்டு வருகிறேன் என்று அவர் சொன்னார். ஏன் என்ன காரணம்? தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் மிக கஷ்டமே வேலையில்லாதது நானும் கேட்க ம்ம்ம் தம்பி நேற்றைய நாள் வேலை செய்திருக்கும்போது நண்பர் ஒருவர் மிதிவெடியில் தனது காலை வைத்து இழந்து விட்டார் அதனால் நானும் பல வருடமாக வேலை செய்கிறேன் நேற்றைய சம்பவம் என்னை மிகவும் பாதித்தது அதனால் வேலையை விட்டு விலகுகிறேன் என்றார் அவர் ...........ம்ம்ம் 
திருமணம் ஆகிவிட்டதா? இல்லை ஏன் கட்டவில்லை நாளைக்கும் எனக்கும் இந்த நிலை வந்தால் என்ன செய்வது?? பதில் சொல்ல முடியாமல் நானும் 

ஏன் அவர் பயிற்ச்சிகள் எடுக்கவில்லையாயென நானும் கேட்க  புதுசாக புதுசாக வேலையில்லா திண்டாட்டத்தில் நிறைய பேர் வந்து இணைகிறார்கள் எங்களுக்கு சுமார் ஒரு வருட காலம்  பயிற்ச்சி தந்தார்கள்  தற்பொழுது நிறைய பேர் பூரணமாக பயிற்சி பெறுவதில்லை வேலையென‌ வந்து இணைகிறார்கள் தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளதால் அகற்றுவது சிரமம் என்றார்  நாங்கள் வேலை செய்து துப்பரவாக்கிய பகுதியில் தான் அந்த வெடி வெடித்தது  நாங்கள் அகற்றிய பகுதியில் மழை நீர் ஒடியதால் அதிலிருந்த வெடி ஒன்றே நீரோட்டத்தில் வந்து மண் மூடி இருந்து அது ஒருவருக்குமே தெரியவில்லை வெளியாக்கிய பகுதியென நினைத்து மீண்டும் அகற்ற செல்லும் போதே வெடித்தது என அவர் சொல்ல மனம் கனத்தது.

பாவம் அவரும் குடும்பஸ்த்தர் இரு குழந்தைகள் உள்ளது ஒரு நாளைக்கு 20 மீற்றர் நிலம் கூட அகற்ற முடியாமல் விதைத்து வைத்திருக்கிறார்கள் நான் கூட ஒருதரம் சிக்கினேன் அது மிகப்பழையது வெடிக்கவில்லை தப்பித்துவிட்டேன் என அவர் காலைப்பார்க்கிறார் முழங்கால் தொடக்கம் தேய்ந்து இருந்தது சரி அண்ண மழை ஓய்கிறது வாருங்கள் போவோம் என நான் சொல்ல அந்த கடைகார அம்மாவோ கவனம் மனே பார்த்து போங்கள் ரோட்டு முழுக்க தண்ணியாக் கிடக்கு என சொல்ல நீங்களும் நனையாமல் போங்க இருட்டுகிறது என காசைக்கொடுக்கிறேன் அவவோ முழுக்க நனைந்திருந்தார்

மழை நின்றாலும் தூவானம் எம்மவர்க்கு  அடித்துக்கொண்டே இருக்கும் ..................................

  • கருத்துக்கள உறவுகள்

மனதை நெருட வைத்த உங்கள் கதை/அனுபவப்பகிர்வு சிறப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ராசன்! உங்கள் கதையை   வாசிக்கும் போது நான் உங்கள் நிலையில் இருந்திருந்தால் எப்படியிருந்திருப்பேன் என ஒரு கணம் யோசித்து பார்த்தேன்.

வாழ்க்கை என்பது எங்குமே போராட்டம் தான். ஆனால் போராட்டமே வாழ்க்கை என்றால்......யாரை நொந்து கொள்வது?

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவங்கள் சிலிர்க்க வைக்கின்றன தனி.........ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள்........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

தூவானமா? துயரமா? பகிர்விற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2023 at 04:04, தனிக்காட்டு ராஜா said:

மழை நின்றாலும் தூவானம் எம்மவர்க்கு  அடித்துக்கொண்டே இருக்கும்

உண்மைதான்.. 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா உங்கள் ஒவ்வொரு அனுபவமும் மனதை பிழிந்தே செல்கிறது.

அனுபவங்கள் அழவைக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/9/2023 at 20:47, Sabesh said:

மனதை நெருட வைத்த உங்கள் கதை/அனுபவப்பகிர்வு சிறப்பு

நன்றி சபேஸ் அண்ணை

 

On 27/9/2023 at 02:52, குமாரசாமி said:

வணக்கம் ராசன்! உங்கள் கதையை   வாசிக்கும் போது நான் உங்கள் நிலையில் இருந்திருந்தால் எப்படியிருந்திருப்பேன் என ஒரு கணம் யோசித்து பார்த்தேன்.

வாழ்க்கை என்பது எங்குமே போராட்டம் தான். ஆனால் போராட்டமே வாழ்க்கை என்றால்......யாரை நொந்து கொள்வது?

சிரித்து விட்டு கடந்து போவதுதான் சாமியார் பழகிடுச்சி 

 

On 27/9/2023 at 13:20, suvy said:

அனுபவங்கள் சிலிர்க்க வைக்கின்றன தனி.........ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள்........!  👍

மிக்க நன்றி அண்ணை

 

On 27/9/2023 at 14:40, ஏராளன் said:

தூவானமா? துயரமா? பகிர்விற்கு நன்றி.

நன்றி ஏராளன் 

 

On 27/9/2023 at 20:10, ஈழப்பிரியன் said:

ராஜா உங்கள் ஒவ்வொரு அனுபவமும் மனதை பிழிந்தே செல்கிறது.

அனுபவங்கள் அழவைக்கிறது.

அனுபவங்கள் என்னை ஏதோ ஒரு வகையில் முழுமையாக்கிறது என்று சொல்லலாம் எது வந்தாலும் வாழ்க்கையில் பழகப்பட்டுவிடுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2023 at 11:10, ஏராளன் said:

தூவானமா? துயரமா? பகிர்விற்கு நன்றி.

சந்தேகமில்லை, துயரம்தான் சரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

சந்தேகமில்லை, துயரம்தான் சரி.

கருத்துக்கு மிக்க நன்றி அண்ணை 

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பகிர்விற்கு மிக்க நன்றி ...என்று நிற்குமோ இந்த தூறல் 

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கோ தனி ..நானும் வாசித்து கொண்டு தான் இருக்கிறேன் 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2023 at 01:04, putthan said:

அனுபவ பகிர்விற்கு மிக்க நன்றி ...என்று நிற்குமோ இந்த தூறல் 

நன்றி அண்ணை உங்களை காண்பது குறைவாக உள்ளது களத்தில்  

 

On 8/10/2023 at 23:11, ரதி said:

தொடர்ந்து எழுதுங்கோ தனி ..நானும் வாசித்து கொண்டு தான் இருக்கிறேன் 

நன்றி ரதி அனுபவங்கள் சம்பவங்கள் கதைகளாக வரும் 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தூவானத்தில் நானும் நன்கு நனைந்துவிட்டேன். எழுதுங்கள் உங்கள் அனுபவங்களை. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தூவானத்தில் நானும் நன்கு நனைந்துவிட்டேன். எழுதுங்கள் உங்கள் அனுபவங்களை. 

வணக்கம் அக்கா,

உங்களிடம் இன்னோரு திரியில் ஒரு கேள்வி கேட்டு, எங்கே உங்களை காணமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பதில் தர முடியுமா? நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

வணக்கம் அக்கா,

உங்களிடம் இன்னோரு திரியில் ஒரு கேள்வி கேட்டு, எங்கே உங்களை காணமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பதில் தர முடியுமா? நன்றி

என்ன கேள்வி ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன கேள்வி ?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.