Jump to content

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

 

நியாயத்தை கதைப்போம் + எப்போதும் தமிழன் - politics makes strange bedfellows என்பது சரியாகத்தான் இருக்கிறது.

 

உங்களைவிட போர் அனுபவம் எனக்கு நிறையவே உள்ளது! அதை உங்களுக்கு சொல்லிக்காட்ட வேண்டிய அவசியமும் எனக்கில்லை! 

***

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலைக்குரிய செய்திகள் வருகின்றன. ஆனால் எம்மை அழிக்க துணை போனவர்கள் எம்மை அழித்தவனுடன் கை குலுக்கியவர்கள் நாங்கள் உயிருடன் எரிந்து சாம்பல் ஆகியபோது பார்த்துக் கொண்டு ஊமையாக கைகட்டி நின்றவர்கள் இனியாவது இதனூடாகவாவது எம் அவலங்களையும் பேசட்டும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் தாக்குதலில் சிக்குண்டுள்ள காசா மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை - ஆராய்கின்றது அமெரிக்கா

Published By: RAJEEBAN

11 OCT, 2023 | 10:05 AM
image
 

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் சிக்குண்டுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழி பாதை குறித்து அமெரிக்கா, எகிப்து,  இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆராய்ந்துவருகின்றன.

இஸ்ரேல் தொடர்ந்தும் காசாமீது தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்கா அங்கு சிக்குண்டுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை குறித்து  பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக்சுலிவன் இதனை தெரிவித்துள்ளார்.

அமைப்புகள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்  4600 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் என  காசா சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.

காசாவிலிருந்து சுமார் 260.000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என ஐக்கியநாடுகள் தெரிவித்துள்ளன.

2014 இல் 50 நாள் மோதல்களின் பின்னர் இவ்வளவு பெரிய அளவில் பொதுமக்கள் இடம்பெயர்ந்தது இதுவே முதல்தடவை என ஐநா தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

காசாவில் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

குண்டுவீச்சில் 1000த்திற்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன என ஐநா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/166600

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

இஸ்ரேலின் தாக்குதலில் சிக்குண்டுள்ள காசா மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை - ஆராய்கின்றது அமெரிக்கா

இவர்கள் பேசி முடிப்பதற்குள் இஸ்ரேல் அழித்து முடித்திருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விசுகு said:

நாங்கள் உயிருடன் எரிந்து சாம்பல் ஆகியபோது பார்த்துக் கொண்டு ஊமையாக கைகட்டி நின்றவர்கள் இனியாவது இதனூடாகவாவது எம் அவலங்களையும் பேசட்டும். 

அப்படி நடந்தால் நல்லது. ஆனால், நான் நம்பவில்லை. கொல்லப்பட்டு தெருவோரத்திலே வீசப்பட்டிருக்கும் பலஸ்தீனர் மீது யூதாஸ் உச்சாபோவதைக் கண்டிக்க யாருமில்லை. இந்த இலட்சணத்தில் எங்களைப்பற்றிப் பேசுவார்கள்?

 

Edited by nochchi
திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

யுத்தமும், இழப்புக்களும் உங்களுக்கு சிரிப்பிற்குரிய விடயங்களா?

☹️

இல்லை நான் அல்லது எவராயினும். அழுது   அன்றி. சிரித்து   யுத்தத்தில்  மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

———————

வெள்ளை பொஸ்பரசை வீசும் இஸ்ரேலின் செயல் மனிதகுல விரோதமானது.

ஆனால் இலங்கை வீசியதையே கண்டுக்காத நாடுகள் இஸ்ரேலை கண்டிக்கும் என்பது அப்பாவித்தனமா எதிர்பார்ப்பு.

பிகு

இதை சாட்டாக வைத்து ரஸ்யாவை வெள்ளை அடிக்க ஒரு சாரார் கிளம்பி உள்ளனர்.

உக்ரேனில் ரஸ்யாவும் வெள்ளை பொஸ்பரசை பாவித்தது. பாவிக்கிறது.

இதை இங்கே நானும் ரஞ்சித்தும் முன்பே வீடியோ ஆதாரத்தோடு எழுதி உள்ளோம்.

அப்போ கள்ள மெளனம் சாதித்த யாழ்கள ஊறவுகள் இப்போ எகிறி குதிக்கிறார்கள்.

வல்லரசுகள் மட்டும் அல்ல, சாதாரண யாழ்கள உறவுகள் கூட மனித உரிமை கோசத்தை தமக்கு ஏற்ற தருணத்துக்கேற்பவே பாவிக்கிறார்கள்.

காஸாவில் மட்டும் அல்ல உக்ரேனிலும் சாவது மனிதர்கள்தான்.

2 hours ago, Maruthankerny said:

Russia has this weapons. We have weapons to wipe out Ukraine a 1000 times over. But we don't, we do not get back at Azov, Zelensky by bомbing innocent civilians indiscriminately Thesame horrible tactics the US deployed in Iraq. Go after HAMAS not Palestinians. This is a warcrime by Israel. The hypocrisy in the west is beyond what I have ever seen. Ukrainian lives are important but not Palestinians?

https://twitter.com/i/status/1711351137784217629

இந்த நூற்றாண்டின் மிக குரூரமான நகைச்சுவை இந்த டுவீட்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

உக்ரேனில் ரஸ்யாவும் வெள்ளை பொஸ்பரசை பாவித்தது. பாவிக்கிறது.

இதை இங்கே நானும் ரஞ்சித்தும் முன்பே வீடியோ ஆதாரத்தோடு எழுதி உள்ளோம்.

அப்போ கள்ள மெளனம் சாதித்த யாழ்கள ஊறவுகள் இப்போ எகிறி குதிக்கிறார்கள்.

வல்லரசுகள் மட்டும் அல்ல, சாதாரண யாழ்கள உறவுகள் கூட மனித உரிமை கோசத்தை தமக்கு ஏற்ற தருணத்துக்கேற்பவே பாவிக்கிறார்கள்.

உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத ஹமாஸின்  தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1200 ஆக உயர்ந்துள்ளது.  3000 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை.

உண்மையில் இந்த வெள்ளை பொஸ்பரஸ் விடயத்தில் யாழ்கள கருத்தாளர் சிலரின் இரெட்டை வேடம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஒரு சாதாரண கருத்துக்களத்தில் கூட காஸாவில் நடந்தால் ரத்தம் உக்ரேனுக்கு வந்தால் தக்காளி சோஸ் என இரெட்டை நாக்கால் எழுதும் ஆட்களுக்கு - உலக நாடுகள் இரெட்டை வேடம் போடுகிறன என எழுத எந்த அருகதையும் இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

மிகவும் கவலைக்குரிய செய்திகள் வருகின்றன. ஆனால் எம்மை அழிக்க துணை போனவர்கள் எம்மை அழித்தவனுடன் கை குலுக்கியவர்கள் நாங்கள் உயிருடன் எரிந்து சாம்பல் ஆகியபோது பார்த்துக் கொண்டு ஊமையாக கைகட்டி நின்றவர்கள் இனியாவது இதனூடாகவாவது எம் அவலங்களையும் பேசட்டும். 

சிறப்பான கருத்து......உந்த தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை போட்டுத்தானே எம்மினத்தவர்களையும் அழித்தார்கள் ...... இப்ப தங்கள் அயலவர்களையும் அழிக்கிறார்கள்......எந்தப் பக்கமாய் இருந்தாலும் சரி அப்பாவி மக்களுக்குத்தான் அவலம் எல்லாம்......!

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

*****

 

 

👆🏼 அண்மையில் வீசப்பட்ட ராக்கெட்டுகள் இங்கேதன் தயாரிக்கபட்டன என கூறி காஸா பல்கலைகழகத்தை தரைமட்டம் ஆக்கும் இஸ்ரேல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு இஸ்ரேலில் என்ன வேலை?

அமெரிக்காவுக்கு இஸ்ரேலில் என்ன வேலை?

இஸ்ரேலுக்கும்- பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப்  போர் இடம்பெற்று வரும் நிலையில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு தனது போர்க்கப்பலை அனுப்பிய விடயம் குறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இது குறித்து அவர்  தெரிவித்ததாவது ”இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது  விமானம் தாங்கிப்  போர்க்கப்பலை அனுப்பியுள்ளது.  அமெரிக்காவுக்கு இஸ்ரேலில் என்ன வேலை?  காசாவிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குண்டுமழை வீசுவதற்கே அமெரிக்கா இந்த வேலையில் இறங்கியுள்ளது.

காசாவுக்குள் தண்ணீர் செல்லும் பாதைகள் நிறுத்தப்பட்டுள்ளதோடு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் மருத்துவமனைகள் செயற்படும் நிலையில் இருக்கின்றனவா எனத்  தெரியவில்லை.

துரதிர்ஷ்டவசமாக, வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், பாடசாலை என கருணையின்றி குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. உலகம் இதனை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. யாரும்  எதுவும் சொல்வதில்லை. மனித உரிமைகளுக்கு என்ன ஆனது?” இவ்வாறு எர்டோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://athavannews.com/2023/1353456

 

###############    ################   #########

 

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை : மௌனம் காக்கும் மேற்கத்திய நாடுகள்

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை : மௌனம் காக்கும் மேற்கத்திய நாடுகள்.

காசா பகுதியை இஸ்ரேல் முழுமையாக முற்றுகையிட ஆரம்பித்துள்ள நிலையில் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

காசா மீது கடந்த ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்படும் தீவிரமான குண்டு தாக்குதலில் 970 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

2.2 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் நிலம், கடல் மற்றும் வான்வழி ஊடான முற்றுகைக்கு மத்தியில் எங்கும் செல்ல வழியின்றி வாழ்கின்றனர்.

இந்நிலையில் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலின் மிருகத்தனமான இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1353491

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வேலை வாய்புக்காக இஸ்ரேல் போன தாய்லாந்து நாட்டவரை இறை கோசங்களை எழுப்பியபடி தோட்டம் வெட்டும் கத்தியால் கழுத்தை வெட்ட முயன்ற ஹமாஸ் ஆயுததாரி.

18 தாய்லாந்தினர் கொல்லப்பட்டுள்ளனராம்.

இன்னும் 11 தாய்லாந்து நாட்டவர் பணயகைதிகளாய் உள்ளனராம்.

Edited by goshan_che
  • Confused 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் இறப்பு எண்ணிக்கை 1000 தாண்டியதாக பலஸ்தீன சுகாதார துறை அறிவிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம், இந்த பாலஸ்தீன மற்றும் ரஷ்ய பயங்கரவாதங்களினால் அநியாயமாக எத்தனை உயிர்கள் பலியாகிவிட்டன!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாலி said:

பாவம், இந்த பாலஸ்தீன மற்றும் ரஷ்ய பயங்கரவாதங்களினால் அநியாயமாக எத்தனை உயிர்கள் பலியாகிவிட்டன!

இது அவர்கள் கேட்டு பெற்றுக் கொண்டது     இல்லையா??? பழைய கதைகள் தேவையற்றது   20 நிமிடங்களில் 5000 ரக்கெட்கள் கொண்டு தாக்கினால். ...இஸ்ரேல். என்ன செய்ய முடியும்???  அமைதியாக இருக்கலாமா?? அப்படி இருந்தால்  காமாஸ். என்ன செய்யும்??? நாங்கள் பலசாலிகள்   எங்களை எவரும் அடிக்க முடியாது   என்பார்கள்   எனவே  எங்களை விட நீங்கள் பலமிக்கவர்களில்லை என்று சொல்ல வேண்டிய தேவை  இஸ்ரேலுக்குண்டு   அவர்களின் தாக்குதல் மிகவும் சரியானதாகும் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசா பல்கலைகழகத்தை குண்டுவீசி அழித்தது இஸ்ரேலின் விமானப்படை

Published By: RAJEEBAN

11 OCT, 2023 | 03:38 PM
image
 

காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைகழகத்தி;ன் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதை இஸ்ரேல் விமானப்படை உறுதி செய்துள்ளது.

F8JjCTQWgAArla3.jpg

காசா பல்கலைகழகம் தனது தாக்குதலில் அழிக்கப்பட்டதை டுவிட்டரில் இஸ்ரேல் விமானப்படை உறுதி செய்துள்ளது.

ஹமாஸ் பொறியியலாளர்களிற்கு பயிற்சி வழங்கும் முக்கிய நிலையமாக காணப்பட்டதால் அதனை குண்டுவீசி அழித்துள்ளதாக  இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது.

F8JjCTQWgAArla3.jpg

இங்கு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

 

F8JjCTQXAAEflwj.jpg

https://www.virakesari.lk/article/166640

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

இது அவர்கள் கேட்டு பெற்றுக் கொண்டது     இல்லையா??? பழைய கதைகள் தேவையற்றது   20 நிமிடங்களில் 5000 ரக்கெட்கள் கொண்டு தாக்கினால். ...இஸ்ரேல். என்ன செய்ய முடியும்???  அமைதியாக இருக்கலாமா?? அப்படி இருந்தால்  காமாஸ். என்ன செய்யும்??? நாங்கள் பலசாலிகள்   எங்களை எவரும் அடிக்க முடியாது   என்பார்கள்   எனவே  எங்களை விட நீங்கள் பலமிக்கவர்களில்லை என்று சொல்ல வேண்டிய தேவை  இஸ்ரேலுக்குண்டு   அவர்களின் தாக்குதல் மிகவும் சரியானதாகும் 

திருப்பி தாக்குவது நியாயம்.

ஆனால் ஹமாஸ்சின் நிலைக்கு அவர்களும் இறங்கி பொதுமக்களை தாக்குவது நியாயமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நான் எழுதிய ஒரு கருத்தைத் தொடர்ந்து, தேவையற்ற விதமாக கருத்துக்கள், எழுதப்படுவதால் இந்த திரியில் அதனை எழுதியதற்காக உண்மையில் வருத்தப்படுகிறேன்.. 

நன்னிக்கு அந்தக் கருத்தை நான் எழுதியதன் நோக்கம் வேறு.. ஆனால் தேவையற்ற விதமாக திரிக்கு சம்பந்தம் இல்லாமல் அதனை வைத்தும், அதன் தொடர்ச்சியகவும் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுவதைப் பார்க்க ஏன் அதனை எழுதினேன் என்றுதான் நினைக்கிறேன். 

பார்க்கப்போனால் இந்தப் போரில் இரண்டு பக்கமும் தவறு உள்ளது. காட்டுமிராண்டித்தனமாக செயற்படும் ஹமாஸும் சரி, தனது மக்களை காப்பாற்ற பதிலடி கொடுக்கிறேன் எனக் கூறிக்கொண்டு சாதாரண பாலஸ்தீன மக்களை மனிததன்மையற்று தாக்கும் இஸ்ரேலும் சரி. இரு தரப்பு செய்ததும் பிழை. 

ஆனால் இதனை தடுக்காமல் ஊக்குவிப்பதில்தான் மற்றைய நாடுகள் செயல்படுகின்றன. இந்த தீவிரமத வாதக்குழுக்களை உருவாக்கும்/ஊக்குவிக்கும் நாடுகளுக்கு அப்பாவி மக்களும் பற்றி அக்கறையில்லை. அதே போல மற்றைய நாடுகளும் தங்களது நாட்டுநலன்களுக்கேற்ப கண்டும்காணாதது போல இருக்கின்றன. 

என்னைப் பொறுத்த வரை இன்று இந்த  உக்ரோன் போர் தொடங்கி இந்த பாலஸ்தீன போர் வரை உலகில் நடந்த/நடந்துகொண்டிருக்கும் போர்களைப் பார்த்தால் மனித உயிர்கள் இரண்டாம் பட்சம். மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லை. 

இவையெல்லாம் தெரிந்தும்,  தேவையற்ற விதமாக கருத்துகளை எழுதி மனஸ்தாபப்படவேண்டுமா? 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

திருப்பி தாக்குவது நியாயம்.

ஆனால் ஹமாஸ்சின் நிலைக்கு அவர்களும் இறங்கி பொதுமக்களை தாக்குவது நியாயமில்லை.

நீங்கள் சொல்வது சரி   ஆனால்  அதை பாலஸ்தீன மக்கள்  தாக்கப்படாது  என்பதை   ஹமா  சும். பாலஸ்தீன மக்களும்  எதிர்பார்க்கும் தகுதிகளை இழந்து விட்டார்கள்  இவர்கள் இஸ்ரேலில் மக்களை தாக்கி கொண்டு  எங்களை தாக்காதே என்று எப்படி கோர முடியும் ?? எதிர்பார்க்கலாம்?? மேலும் அவ்வாறு இஸ்ரேல்  தாக்குதல் செய்ய முற்பட்டால் ஹமாஸ்க்கு அதிகம் பாதிப்பு எற்ப்படாது  ஆனால் அதேநேரம் ஹமாஸ் இஸ்ரேலில் பொதுமக்களை தொடர்ந்து தாக்கும் இதன் காரணமாக இஸ்ரேலியார்கள். நாட்டை இழந்து நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான சூழ்நிலை ஏற்படலாம் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, P.S.பிரபா said:

பார்க்கப்போனால் இந்தப் போரில் இரண்டு பக்கமும் தவறு உள்ளது. காட்டுமிராண்டித்தனமாக செயற்படும் ஹமாஸும் சரி, தனது மக்களை காப்பாற்ற பதிலடி கொடுக்கிறேன் எனக் கூறிக்கொண்டு சாதாரண பாலஸ்தீன மக்களை மனிததன்மையற்று தாக்கும் இஸ்ரேலும் சரி. இரு தரப்பு செய்ததும் பிழை. 

ஆனால் இதனை தடுக்காமல் ஊக்குவிப்பதில்தான் மற்றைய நாடுகள் செயல்படுகின்றன. இந்த தீவிரமத வாதக்குழுக்களை உருவாக்கும்/ஊக்குவிக்கும் நாடுகளுக்கு அப்பாவி மக்களும் பற்றி அக்கறையில்லை. அதே போல மற்றைய நாடுகளும் தங்களது நாட்டுநலன்களுக்கேற்ப கண்டும்காணாதது போல இருக்கின்றன. 

பயங்கரவாதிகளாக எவரும் பிறப்பதில்லை.

பயங்கரவாதிகள் ஆக்கப்படுகிறார்கள்.

இதனாலேயே இந்த திரிக்குள் எதுவுமே எழுதுவதில்லை.

ஆனாலும் எழுதுபவர்களின் கருத்துக்களைப் பார்க்க புல்லரிக்குது.

1 hour ago, P.S.பிரபா said:

இவையெல்லாம் தெரிந்தும்,  தேவையற்ற விதமாக கருத்துகளை எழுதி மனஸ்தாபப்படவேண்டுமா? 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kandiah57 said:

பாலஸ்தீன மக்கள்  தாக்கப்படாது  என்பதை   ஹமா  சும். பாலஸ்தீன மக்களும்  எதிர்பார்க்கும் தகுதிகளை இழந்து விட்டார்கள்

ஹமாசுக்கு சரி.

பலஸ்தீன மக்கள் எவ்வாறு இந்த தகுதியை இழந்தார்கள். அவர்கள் ஹமாசின் மீது எவ்விதமான அதிகாரமும் இல்லாதவர்கள்.

இஸ்ரேல் இப்படி மூர்க்கமாக தாக்கும் என தெரிந்தே ஹமாஸ் இஸ்ரேலிய சிவிலியன்களை இலக்கு வைத்தது.

காசாவை - கட்டங்கள் இல்லாத கூடார தேசம் tent city ஆக்குவோம் என்கிறார் ஒரு இஸ்ரேலிய அதிகாரி.

நீங்கள் நினைக்கிறீர்களா இப்படி ஒரு நிலை வரும் என தெரிந்தும், காஸா மக்கள் ஹமாசின் தாக்குதலை ஆதரித்து இருப்பார்கள் என? இல்லை.

ஆகவே இஸ்ரேல் ஹமாசை மட்டும் தாக்கும் அல்லது முடிந்தளவு மக்கள் இழப்பை தவிர்க்கும் வகையில் போர் செய்ய வேண்டும்.

தென் இஸ்ரேலில் ஹமாஸ் புகுந்து விட்டது என்பதால் அந்த கிராமங்களை யூத மக்களுடன் சேர்த்து இஸ்ரேல் துவம்சம் செய்யவில்லை.

இதே அணுகுமுறையை காஸாவிலும் எடுக்கலாம்.

ஆனால் காஸாவின் carpet bombing செய்கிறார்கள். இது வேணும் என்றே சிவிலியன் இலக்குகளை குறிவைப்பது = யுத்தக்குற்றம்.

Edited by goshan_che
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையாண்ணை சொல்வது சிறிலங்கன் ஆமியின் குரலாக என்காதுகளில் ஒலித்து தேன் வந்து பாயுது என் காதினிலே..

”புலிப்பயங்கரவாதிகள் சிவிலியன்களுக்குள் மறைந்திருந்து தாக்குகின்றனர்.. அதனால் அவர்களை அளிக்க அவர்கள் மறைந்திருந்த பாடசாலையின் மீது குண்டு வீசப்பட்டது..”

“புலிப்பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த சந்தையில் குண்டு வீசியதில் 80 புலிப்பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்”

“புலிப்பயங்கரவாதிகள் சிகிச்சை பெற்ற வைத்தியசாலையின்மீது குண்டு வீசி தாக்கியதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்”

 

1 hour ago, Kandiah57 said:

நீங்கள் சொல்வது சரி   ஆனால்  அதை பாலஸ்தீன மக்கள்  தாக்கப்படாது  என்பதை   ஹமா  சும். பாலஸ்தீன மக்களும்  எதிர்பார்க்கும் தகுதிகளை இழந்து விட்டார்கள்  இவர்கள் இஸ்ரேலில் மக்களை தாக்கி கொண்டு  எங்களை தாக்காதே என்று எப்படி கோர முடியும் ?? எதிர்பார்க்கலாம்?? மேலும் அவ்வாறு இஸ்ரேல்  தாக்குதல் செய்ய முற்பட்டால் ஹமாஸ்க்கு அதிகம் பாதிப்பு எற்ப்படாது  ஆனால் அதேநேரம் ஹமாஸ் இஸ்ரேலில் பொதுமக்களை தொடர்ந்து தாக்கும் இதன் காரணமாக இஸ்ரேலியார்கள். நாட்டை இழந்து நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான சூழ்நிலை ஏற்படலாம் 

 

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கந்தையாண்ணை சொல்வது சிறிலங்கன் ஆமியின் குரலாக என்காதுகளில் ஒலித்து தேன் வந்து பாயுது என் காதினிலே..

”புலிப்பயங்கரவாதிகள் சிவிலியன்களுக்குள் மறைந்திருந்து தாக்குகின்றனர்.. அதனால் அவர்களை அளிக்க அவர்கள் மறைந்திருந்த பாடசாலையின் மீது குண்டு வீசப்பட்டது..”

“புலிப்பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த சந்தையில் குண்டு வீசியதில் 80 புலிப்பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்”

“புலிப்பயங்கரவாதிகள் சிகிச்சை பெற்ற வைத்தியசாலையின்மீது குண்டு வீசி தாக்கியதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்”

 

 

அதே! சிலர் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலே கருத்து வைக்கின்றனர்! ஹமாஸ் வேறு சாதாரண பாலஸ்தீனிய குடிமக்கள் வேறு!!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
    • ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
    • முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் தோற்ற பின்னர் பெருமளவு சமையல்காரர்கள் தனக்கு தேவை என வேண்டுகோள் விடுத்தவேளை அவர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  நாட்டின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் சொகுசு வீடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என்பன அதிகளவில் காணப்படுகின்றன. நாம் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அதனை தான் தேசிய மக்கள் சக்தி செய்யவுள்ளது. அரசியல் என்பது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு கீழ்படிய வேண்டும். அதற்கு மாறாக சட்டத்தை மீறி செயற்பட கூடாது. அப்படி ஒரு நாட்டை தான் தேசிய மக்கள் சக்தி உருவாக்கவுள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198120
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.