Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, வாலி said:

தெரிஞ்சு என்னசெய்யப் போகிறீர்கள்? சகல சௌபாக்கியங்களுடன் செல்வச்செழிப்புடன் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட சகல சுதந்திரங்களுடனும் நீங்கள் வாழும் பயங்கரவாத நாடுகளிலிருந்து உடனே இவ்வாறான நாடுகளுக்குப்போய் வாழப்போகிறீர்களா?

 

ஆம் இந்த பயங்கரவாத நாடுகள் தங்கள் பயங்கரவாதங்களை நிறுத்தினால் 
இங்கிருந்து குப்பை கொட்ட வேண்டிய எந்த அவசியமும் எனக்கு மட்டுமில்லை 

இயற்கை கனிமகள் நிறைந்த ஆஃப்ரிக்க செல்வந்தர்கள் எவருக்கும் வேறு நாடுகளுக்கு செல்லவேண்டிய எந்த தேவையும்மில்லை 

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2-வது அமெரிக்க போர்க்கப்பல் இஸ்ரேல் விரைந்தது

1139557.jpg

இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்க கடற்படையின்யு.எஸ்.எஸ். ஐசனோவர் போர்க்கப்பல் மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரைந்து செல்கிறது.
இஸ்ரேலின் பாதுகாப்புக்காக 2-வது அமெரிக்க போர்க்கப்பல் இஸ்ரேல் கடல் பகுதிக்கு விரைந்துள்ளது.

பாலஸ்தீனத்தின் வடக்கு காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இந்த சூழலில் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீராங்கனை ஒருவர் உயிரிழந்தார். சில வீரர்கள் காயமடைந்தனர். வடக்கு எல்லைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர் கூறும்போது, “வடக்கு காசாபகுதியில் பாலஸ்தீன மக்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்துதாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மிகப்பெரும் சவாலை சந்திக்க நேரிடும். நாங்கள் போரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்க கடற்படை சார்பில் யுஎஸ்எஸ் போர்டு போர்க்கப்பல் ஏற்கெனவே மத்திய கிழக்கு கடல் பகுதியில் முகாமிட்டுள்ளது. தற்போது ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ராணுவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஐசனோவர் போர்க்கப்பலும் இஸ்ரேலுக்கு விரைந்துள்ளது.

https://thinakkural.lk/article/277229

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

முள்ளிவாய்க்கால் நேரம் கிரிபத் கொடுத்து கொண்டாடியோர், காஸாவுக்கு மூக்கால் அழுகிறார்களாம்.

Posted
6 hours ago, goshan_che said:

எங்கே.ம் வெளியேற விடுகிறார்கள்?

ஒரே எல்லையை சக அரபு/முஸ்லிம் நாடான எகிப்து இறுக்க மூடி வைத்துள்ளது. மக்கள் காத்து கிடக்கிறார்கள்?

 

என்றாவது முஸ்லிம் அகதிகளை முஸ்லிம் நாடுகள் / அரபு நாடுகள் வரவேற்று உள்ளனரா? இல்லை.

ஆனால், இந்த முஸ்லிம்களை மேற்குலகு நோக்கி அகதிகளாக போவதற்கு தூண்டுவார்கள். மேற்கு நாடுகளும் இவர்களை வரவேற்று அடைக்கலம் கொடுக்கும். அப்படி, மேற்கில் குடியேறிய பின், இதே அரபு நாடுகள் பள்ளிவாசல்களை அமைக்வும், இஸ்லாமிய அமைப்புகளை உருவாக்கவும் (NGO), இஸ்லாமிய கல்வி நிலையங்களை கட்டியமைக்கவும் பெருமளவு நிதி உதவி செய்யும்.

இவ்வாறுதான் அவர்களின் (இஸ்லாமியர்களின்) கனவான, உலகெங்கும் தம் மதத்தை பரப்பி, உலகில் அதிக சனத்தொகை கூடிய இனமாக / மதமாக மாற்றுகின்றனரோ என்ற எண்ணம் எனக்கு எழுவது உண்டு  (conquering the world)

இதை நீங்கள் குடியேறி இருக்கும் நாடுகளில் கூட அவதானித்திருப்பீர்கள்.

  • Like 3
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

4 minutes ago, நிழலி said:

என்றாவது முஸ்லிம் அகதிகளை முஸ்லிம் நாடுகள் / அரபு நாடுகள் வரவேற்று உள்ளனரா? இல்லை.

ஆனால், இந்த முஸ்லிம்களை மேற்குலகு நோக்கி அகதிகளாக போவதற்கு தூண்டுவார்கள். மேற்கு நாடுகளும் இவர்களை வரவேற்று அடைக்கலம் கொடுக்கும். அப்படி, மேற்கில் குடியேறிய பின், இதே அரபு நாடுகள் பள்ளிவாசல்களை அமைக்வும், இஸ்லாமிய அமைப்புகளை உருவாக்கவும் (NGO), இஸ்லாமிய கல்வி நிலையங்களை கட்டியமைக்கவும் பெருமளவு நிதி உதவி செய்யும்.

இவ்வாறுதான் அவர்களின் (இஸ்லாமியர்களின்) கனவான, உலகெங்கும் தம் மதத்தை பரப்பி, உலகில் அதிக சனத்தொகை கூடிய இனமாக / மதமாக மாற்றுகின்றனரோ என்ற எண்ணம் எனக்கு எழுவது உண்ட (conquering the world)

இதை நீங்கள் குடியேறி இருக்கும் நாடுகளில் கூட அவதானித்திருப்பீர்கள்.

 

ஆம்

யாழில்  பலமுறை  எழுதியுள்ளேன்

அவர்களது  இலக்கை  அவர்கள்  ஒரு  நாள்  அடைந்தே தீருவார்கள்

உலகை ஒரு  நாள்  ஆள்வர்

இதற்கு  சாட்சியாக  பல  ஐரோப்பிய  நாடுகளில் அவர்கள் பல  பகுதிகளை  ஆளும்  நிலைக்கு  அல்லது  பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்கு  வந்துவிட்டனர்.

அவ்வாறு  அவர்கள் ஆட்சிகளக்கு  வரும்போது எமது  சந்ததியினர் மீண்டும் புலம் பெயர்வர். ஏனெனில் அராபியர்கள்  தான் உலகில் அதி கூடிய இனத்துவேசிகள்.

  • Like 1
  • நிழலி changed the title to இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Posted

இந்த திரியின் தலைப்பை 'இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு' என்று மாற்றியுள்ளேன்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, நிழலி said:

என்றாவது முஸ்லிம் அகதிகளை முஸ்லிம் நாடுகள் / அரபு நாடுகள் வரவேற்று உள்ளனரா? இல்லை.

ஆனால், இந்த முஸ்லிம்களை மேற்குலகு நோக்கி அகதிகளாக போவதற்கு தூண்டுவார்கள். மேற்கு நாடுகளும் இவர்களை வரவேற்று அடைக்கலம் கொடுக்கும். அப்படி, மேற்கில் குடியேறிய பின், இதே அரபு நாடுகள் பள்ளிவாசல்களை அமைக்வும், இஸ்லாமிய அமைப்புகளை உருவாக்கவும் (NGO), இஸ்லாமிய கல்வி நிலையங்களை கட்டியமைக்கவும் பெருமளவு நிதி உதவி செய்யும்.

இவ்வாறுதான் அவர்களின் (இஸ்லாமியர்களின்) கனவான, உலகெங்கும் தம் மதத்தை பரப்பி, உலகில் அதிக சனத்தொகை கூடிய இனமாக / மதமாக மாற்றுகின்றனரோ என்ற எண்ணம் எனக்கு எழுவது உண்டு  (conquering the world)

இதை நீங்கள் குடியேறி இருக்கும் நாடுகளில் கூட அவதானித்திருப்பீர்கள்.

 மேற்கில் இருக்கும் முஸ்லிம்களில் பலர் மேற்கின ஜனநாயக நடைமுறைக்கு இசைவானவர்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களில் என்ன பிரச்சனை என்றால் அடிப்படைவாதிகள் மதத்தை முன்னிறுத்தி அநியாயங்களை செய்யும் போது அதை எதிர்க்கும் திராணி ஏனையவர்க்கு வருவதில்லை. அப்படி வருவோரையிம் முனாபிக் என கூறி ஒடுக்கி விடுவார்கள்.

இது ஒரு காலத்தில் மத அடிப்படையிலான உலக யுத்தத்தை கொடுத்தே தீரும்.

யூகேயில், அமெரிக்காவில் முஸ்லிம்கள் 30% வரும் போது இப்போ அனுப்புவது போல் இஸ்ரேலுக்கு கப்பல் அனுப்ப முடியாது.

இது எமக்கே விளங்கும் போது மேற்கிற்க்கும், குறிப்பாக மேற்கில் வாழும், மேற்கை மறைமுகமாக அளுத்தும், அல்லது கட்டுப்படுத்தும் யூதருக்கு கட்டாயம் விளங்கும்.

இப்படி விளங்கியதன் ஒரு அங்கமே - குறிப்பாக அந்த இடத்தில் இஸ்ரேலை மீள உருவாக்கிய காரணம்.

21 minutes ago, விசுகு said:

 

ஆம்

யாழில்  பலமுறை  எழுதியுள்ளேன்

அவர்களது  இலக்கை  அவர்கள்  ஒரு  நாள்  அடைந்தே தீருவார்கள்

உலகை ஒரு  நாள்  ஆள்வர்

இதற்கு  சாட்சியாக  பல  ஐரோப்பிய  நாடுகளில் அவர்கள் பல  பகுதிகளை  ஆளும்  நிலைக்கு  அல்லது  பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்கு  வந்துவிட்டனர்.

அவ்வாறு  அவர்கள் ஆட்சிகளக்கு  வரும்போது எமது  சந்ததியினர் மீண்டும் புலம் பெயர்வர். ஏனெனில் அராபியர்கள்  தான் உலகில் அதி கூடிய இனத்துவேசிகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, goshan_che said:

முஸ்லிம்களில் என்ன பிரச்சனை என்றால் அடிப்படைவாதிகள் மதத்தை முன்னிறுத்தி அநியாயங்களை செய்யும் போது அதை எதிர்க்கும் திராணி ஏனையவர்க்கு வருவதில்லை. அப்படி வருவோரையிம் முனாபிக் என கூறி ஒடுக்கி விடுவார்கள்.

சரியான கணிப்பீடு.

இவ்வாறான காரணங்கள் அடிப்படைவாதம், தீவிர தேசியவாதங்கள் வளர்ந்து வருவதற்கான காரணிகள்.

 ஒரு இனம் அல்லது மதக்குழுவினர் இப்படி தான் இருக்க வேண்டும. என்பதை அடிப்படைவாதிகள் தீர்மானித்து  அதை ஒட்டு மொத்த மக்கள் மீதும் திணிக்கும் நடைமுறை.  பெரும்பாலான மக்களை அதை மனசார விரும்பாமல் விட்டாலும் காலப்போக்கில் இந்த கும்பல் மனநிலையின் பாதிப்புக்குள்ளாகி அதன் பார் ஈர்க்கப்படுவர். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, goshan_che said:

ஒரே எல்லையை சக அரபு/முஸ்லிம் நாடான எகிப்து இறுக்க மூடி வைத்துள்ளது. மக்கள் காத்து கிடக்கிறார்கள்?

காரணம்? எப்படி சும்மா இருந்த லெபனானை பலஸ்தீன அகதிகளின் வருகை உள்நாட்டு போரை உருவாக்கி சீரழிச்சதோ அப்படி தமக்கும் நடக்கும் என்ற பயம்.

இந்த மக்களை, ஹமாசை போசித்த ஈரான் பொறுப்பெடுப்பதே முறை.

அவர்கள் ஹமாசை பொறுப்பெடுப்பார்களா என்பதே சந்தேகம்.

இஸ்ரேல் என்ற தேன் கூட்டுக்கு ஹமாசும், ஈரானும் கல் எறிந்துள்ளார்கள். கொத்து வாங்குவது அப்பாவி பலஸ்தீனர்.

சரியாகச் சொன்னீர்கள்-

இஸ்ரேல் என்ற தேன் கூட்டுக்கு ஹமாசும், ஈரானும் கல் எறிந்துள்ளார்கள். கொத்து வாங்குவது அப்பாவி பலஸ்தீனர்.]

பொருத்தமான உதாரணம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இறை கோசத்தை எழுப்பிய படி பிரசள்சில் ஒருவரை குத்தி கொலை செய்த நபர், பிரெஞ்சு எல்லையை நோக்கி நகர்வதால், இரு நாட்டிலும் பாதுகாப்பு உசார் நிலையில்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முஸ்லிம் மதவாத முல்லாக்களினால் கொடுங்கோலாட்சி நடைபெறுகின்ற ஈரானை போய் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட சகல சுதந்திரங்களையும் அனுபவித்து கொண்டு ,,சகல சௌபாக்கியங்களுடனும், செல்வ செழிப்புடனும் வாழ்ந்து கொண்டு அப்படி வாழவைத்த நாடுகளை  பத்தோடு பதினொன்றாவதாவது என்று  ஈரானோடு ஒப்பிடுவது மிகவும் அபத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

 

இறை கோசத்தை எழுப்பிய படி பிரசள்சில் ஒருவரை குத்தி கொலை செய்த நபர், பிரெஞ்சு எல்லையை நோக்கி நகர்வதால், இரு நாட்டிலும் பாதுகாப்பு உசார் நிலையில்.

 

குத்தி அல்ல சுட்டு கொலை, இருவரை என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரகசிய பேச்சுவார்த்தை ஒன்று கட்டாரில் நடந்துகொண்டு இருக்கிறது 
அமெரிக்க மற்றும் அவர்களின் எடுபிடிகள் ஹமாஸ் பிடித்துவைத்திருக்கும் அனைவரையும் 
உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் 
இஸ்திரேல் காஸாவுக்குள் உட்புக விடாது தடுக்க அதையே கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள் 

மனித அழிவின்றி சியோனிஸ்ட் அரக்கர்களிடம் இருந்து அப்பாவி பலஸ்தீனியர்களை 
காப்பாற்றினால் நன்று 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

உலகை ஒரு  நாள்  ஆள்வர்

நிச்சயமாக   துருக்கி அதிபர்   ஈரானிய அதிபர்  இவர்களின் விருப்பம் இதுவே   ...ரஷ்யா அதிபருக்கும். இந்த விருப்பம் உண்டு”  ஆனால் சீனா  உலக பொருளாதாரத்தை ஆள விரும்புகிறது   உலக ஆட்சியை இல்லை    அமெரிக்கா பதிலாக முஸ்லிம் அல்லது  புடின் வந்தால்   ஏதாவது விமேசனம்   உண்டா  ???  இந்த கேள்விகளுக்கு மேற்க்கை எதிர்ப்பவர்கள்  பதில்கள் தருவார்களா??? இவை எனது தனிப்பட்ட கருத்துகள்  திருத்தம் வரவேற்கப்படுகின்றன…   🙏🙏

5 minutes ago, Maruthankerny said:

மனித அழிவின்றி சியோனிஸ்ட் அரக்கர்களிடம் இருந்து அப்பாவி பலஸ்தீனியர்களை 
காப்பாற்றினால் நன்று 

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி ஒத்துக் கொள்கிறேன்  ஆனால்  இந்த முஸ்லிம்கள்  உலகில்…………… பல்கிப் பெருகி  இவர்களின் கையில்  உலகை ஆளும் வாய்ப்புகள் கிடைத்தால்  இந்த உலக வாழ் மக்களுக்கு நன்மையா?? அல்லது தீமையா ?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலவர் நீங்கள் எழுதிதில். 9 ஆவது பகுதி வரை வாசித்து விட்டேன்  உங்களுடன்  எங்கள் ஊர் மைந்தர்கள். பலர் நண்பர்கள் ஆக உள்ளனர்  மிக்க மகிழ்ச்சி  தொடர்ந்து எழுதுங்கள்   இஸ்ரேல் யூதர்களின். பூமி என்பதை  எல்லோரும் அறிந்து கொள்ளலாம் வாழ்த்துக்கள்    🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Kandiah57 said:

 

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி ஒத்துக் கொள்கிறேன்  ஆனால்  இந்த முஸ்லிம்கள்  உலகில்…………… பல்கிப் பெருகி  இவர்களின் கையில்  உலகை ஆளும் வாய்ப்புகள் கிடைத்தால்  இந்த உலக வாழ் மக்களுக்கு நன்மையா?? அல்லது தீமையா ?? 

ஆதலால் !
இப்போது முஸ்லிம்களை இன அழிப்பு செய்யவேண்டும் என்கிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Maruthankerny said:

ரகசிய பேச்சுவார்த்தை ஒன்று கட்டாரில் நடந்துகொண்டு இருக்கிறது 
அமெரிக்க மற்றும் அவர்களின் எடுபிடிகள் ஹமாஸ் பிடித்துவைத்திருக்கும் அனைவரையும் 
உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் 
இஸ்திரேல் காஸாவுக்குள் உட்புக விடாது தடுக்க அதையே கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள்


ஏற்கனவே ஈரான், ஹமாஸ் அதனிடம் அறிவித்ததாக, இராணுவம் அல்லாதோரை விடுவிக்க ஆயத்தம் என்று பதில் வெளிப்படையாக வழங்கப்பட்டு உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Maruthankerny said:

ஹமாஸ் பிடித்துவைத்திருக்கும் அனைவரையும் 
உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் 
இஸ்திரேல் காஸாவுக்குள் உட்புக விடாது தடுக்க அதையே கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள் 

இதை இஸ்ரேல் ஏற்காது. சில சமயம் விடும் வரை ஓம் எண்டு சொல்லிப்போட்டு பிறகு இன்னொரு சாட்டை வைத்து உட்புகும்.

கந்தகாரில் விமானத்தை கடத்தி வைத்ததும் வெளிநாட்டு அமைச்சரே போய் கேட்டதை கொடுத்து விமானத்தை மீட்டு வந்த இந்தியா போல அல்ல இஸ்ரேல்.

அவர்களுக்கு அரசியல், இராணுவ இலக்குத்தான் முக்கியம். பணயகைதிகள் உயிர் இரெண்டாம் பட்சமே.

அதே போல் ஹமாசும் ரொக்கேட்டை எல்லாம் பேரீச்சம் பழத்துக்கு விற்று விட்டு சும்மாவா இருக்கப்போகிறது?

எப்படியும் இஸ்ரேல் மீது தாக்கத்தான் போகிறது.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி ஒத்துக் கொள்கிறேன்  ஆனால்  இந்த முஸ்லிம்கள்  உலகில்…………… பல்கிப் பெருகி  இவர்களின் கையில்  உலகை ஆளும் வாய்ப்புகள் கிடைத்தால்  இந்த உலக வாழ் மக்களுக்கு நன்மையா?? அல்லது தீமையா ?? 

நான் எந்த அப்பாவி மக்களுக்கும் அல்லது இனங்களுக்கும் எதிரியல்ல. ஆனால் அடிப்படைவாத முஸ்லிம் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் என்னால் வாழ்வதை கற்பனை செய்ய கூட முடியாது.

நான் மட்டும் அல்ல யாழில் எழுதும் எல்லாரின் நிலையும் இதுதான்.

இலண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல LGBQT+ ஆட்களும் ரெயின்போ பதாதைகளுடன் கலந்து கொண்டார்கள். இலண்டனில் ஒரு நாள் ஹமாசை ஆளவிட்டால் முதலில் இவர்கள் தோலையே உரிப்பார்கள்🤣.

அதே போலத்தான் மியா கலிபா அம்மையாரும். அவரின் கலையை பெற்றாரின் நாடாகிய லெபனானில் போய் செய்தால் - கல்லால் அடித்தே கொல்வார்கள்.

யாழில் சயோடின்ஸ்ட், பயோனிக் என நீட்டி முழக்குவோரும் அப்படியே.

Chickens voting for KFC🤣

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

https://x.com/TreasChest/status/1714071913293602978?s=20

ரஸ்யா கொணர்ந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் தோல்வி.

பணய கைதிகள் விடுதலை, உடனடிப் போர் நிறுத்தம், மனிதாபிமான உதவியை அனுமதித்தல் என்பனவற்றை இது கோரியது.

ஆனால் ஹமாசை பெயர் சொல்லி குறிக்காமல் தனியே மக்கள் தாக்கப்படுவதை, பயங்கரவாதத்தை கண்டித்தது. 

ஆம்: Russia, China, UAE, Gabon and Mozambique.

இல்லை: USA, Britain, France and Japan.

வாக்களிக்காதோர்: Albania, Brazil, Ghana, Malta, Switzerland, Ecuador.

————-

ஹமாஸ் ஆயுததாரிகள் ஒரு இஸ்ரேலிய இளம்பெண்ணின் வீடியோவை, பணய கைதி வீடியோ என வெளியிட்டுள்ளனர்.

 

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வரும் புதனன்று பைடன் இஸ்ரேல் போகிறாராம்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://news.sky.com/video/exclusive-us-treasury-secretary-speaks-to-sky-news-wilfred-frost-12985530

அமெரிக்க கருவூல செயலாளர் உக்கிரேன் இஸ்ரேலிய யுத்தத்திற்கான செலவீட்டிற்கு முன்னுரிமை என அறிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

நான் எந்த அப்பாவி மக்களுக்கும் அல்லது இனங்களுக்கும் எதிரியல்ல. ஆனால் அடிப்படைவாத முஸ்லிம் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் என்னால் வாழ்வதை கற்பனை செய்ய கூட முடியாது.

நான் மட்டும் அல்ல யாழில் எழுதும் எல்லாரின் நிலையும் இதுதான்.

இலண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல LGBQT+ ஆட்களும் ரெயின்போ பதாதைகளுடன் கலந்து கொண்டார்கள். இலண்டனில் ஒரு நாள் ஹமாசை ஆளவிட்டால் முதலில் இவர்கள் தோலையே உரிப்பார்கள்🤣.

அதே போலத்தான் மியா கலிபா அம்மையாரும். அவரின் கலையை பெற்றாரின் நாடாகிய லெபனானில் போய் செய்தால் - கல்லால் அடித்தே கொல்வார்கள்.

யாழில் சயோடின்ஸ்ட், பயோனிக் என நீட்டி முழக்குவோரும் அப்படியே.

Chickens voting for KFC🤣

ஆம் நான் பலவருடங்கள் வாழ்ந்து அனுபவித்துள்ளேன். இவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என நன்கு தெரியும் 

12 hours ago, விசுகு said:

 

அவ்வாறு  அவர்கள் ஆட்சிகளக்கு  வரும்போது எமது  சந்ததியினர் மீண்டும் புலம் பெயர்வர். ஏனெனில் அராபியர்கள்  தான் உலகில் அதி கூடிய இனத்துவேசிகள்.

ஆம் நான் பலவருடங்கள் வாழ்ந்து அனுபவித்துள்ளேன். இவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என நன்கு தெரியும் 

  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாலத்தீன மக்களுக்கு முழு ஆதரவு - ஹமாஸ் தலைவரிடம் மலேசிய பிரதமர் வாக்குறுதி

அன்வர் இப்ராஹிம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

15 அக்டோபர் 2023
புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்

பாலத்தீன மக்களுக்கு அசைக்கமுடியாத ஆதரவை வழங்குவதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவிடம் கூறியதாக மலேசிய பிரதமர் இப்ராஹிம் அன்வர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக இப்ராஹிம் கூறினார்.

"காஸாவின் மோசமான சூழ்நிலையில், குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்தவும், ரஃபாவில் ஒரு மனிதாபிமான வழித்தடத்தை நிறுவவும் நான் வலுவாக வாதிடுகிறேன்," என்று எக்ஸ் வலைத்தளத்தில் இப்ராஹிம் பதிவிட்டார்.

"இஸ்ரேல், தங்கள் ஆக்கிரமிப்பு அரசியலை கடைப்பிடிப்பதை கைவிடுவதும், ஹமாஸுடன் உடனடியாக போர்நிறுத்தம் செய்வதும், நடந்துகொண்டிருக்கும் மோதலுக்கு முடிவுகட்ட ஒரு அமைதியான உடன்பாட்டை உண்மையாக பின்பற்றுவதும் கட்டாயமாகும்." என்று அவர் கூறினார்.

"மனிதாபிமான உதவிகளை வழங்குவற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், குறிப்பாக உணவு மற்றும் மருந்து வடிவில் தேவைப்படுபவர்களின் துன்பத்தைப் போக்குவதற்கு முடிவு செய்திருக்கிறோம்"

பணயக் கைதிகளின் முதல் வீடியோவை வெளியிட்டது ஹமாஸ்

ஹமாஸ்
படக்குறிப்பு,

வீடியோவில், ஒரு இளம் பெண் தனது பெயர் மாயா ஷெம் என்றும், தனக்கு 21 வயது என்றும், இஸ்ரேலில் உள்ள ஷோஹாம் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார். வீடியோவில் இருந்து படங்களை காட்டலாம் என்று குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாக குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்

தங்களிடம் பணயக் கைதியாக உள்ள ஒரு பெண்ணின் காணொளியை ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-காஸம் பிரிகேட்ஸ் வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு ஹமாஸ் வெளியிட்ட முதல் பணயக்கைதி வீடியோ இதுவாகும். காஸாவில் 199 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

வீடியோவில், ஒரு இளம் பெண் தனது பெயர் மாயா ஷெம் என்றும், தனக்கு 21 வயது என்றும், இஸ்ரேலில் உள்ள ஷோஹாம் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்.

இஸ்ரேலில் நடந்த ஒரு விருந்தில் ஹமாஸால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகக் கூறி, தன்னை விடுவிக்குமாறு அவர் கெஞ்சும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

அதே பெண் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெறும் காட்சியும் இதில் அடங்கும்.

ஹமாஸால் மாயா கடத்தப்பட்டதை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படை அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பிபிசி பொதுவாக பணயக் கைதிகள் வீடியோக்களை வெளியிடுவதில்லை.

வீடியோவில் இருந்து படங்களை காட்டலாம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாக குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஹமாஸின் செயல்களை நியாயப்படுத்த முடியாது - ஜஸ்டின் ட்ரூடோ

ட்ரூடோ

பட மூலாதாரம்,REUTERS

காஸாவில் மனிதாபிமான பாதை திறக்கப்பட வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

காஸாவில் முடங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமையை கனடா ஆதரிக்கிறது, ஆனால் "போர்களுக்குக் கூட விதிகள் உண்டு" என்று அவர் மேலும் கூறினார்.

"பயங்கரவாதம் எப்போதும் பாதுகாக்க முடியாதது, ஹமாஸின் பயங்கரவாத செயல்களை எதுவும் நியாயப்படுத்த முடியாது. ஹமாஸ் பாலத்தீனிய மக்களையோ அல்லது அவர்களின் நியாயமான விருப்பங்களையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று நாடாளுமன்றத்தில் ட்ரூடோ கூறினார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் கனடாவைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர், மூன்று பேரைக் காணவில்லை.

காசாவுடனான எல்லையைத் திறக்குமா எகிப்து?

ரஃபா எல்லை

காசாவுடனான எல்லையைத் திறக்க எகிப்து திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் காசாவில் சண்டை நிறுத்தம் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கமும் சண்டை நிறுத்தம் குறித்த அறிவிப்பு ஏதும் தங்களுக்கு வரவில்லை என்று கூறியுள்ளது.

காசாவுடனான அதன் எல்லையில் உள்ள ரஃபா கடவையை திறக்குமாறு எகிப்து இராஜதந்திரிகள் மற்றும் உதவி நிறுவனங்களின் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

எனினும் இந்தப் பாதை வழியாக அனைத்து பாலத்தீனர்களும் செல்ல முடியாது. இரட்டை குடியுரிமை கொண்ட பாலத்தீனியர்களையும் காஸாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரையும் மட்டுமே அதிகாரிகள் வெளியேற அனுமதிப்பார்கள்.

சனிக்கிழமையன்று அமெரிக்க அரசு அதன் குடிமக்களுக்கு தெற்கே செல்லுமாறு அறிவுறுத்திய பின்னர், பல பாலத்தீனிய-அமெரிக்கர்கள் ஏற்கனவே இந்தப் பாதைக்கு அருகில் கூடிவிட்டனர்.

உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை இந்த எல்லைப் பாதை மீண்டும் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த குடிமக்கள் காசாவை விட்டு வெளியேற உதவுவதற்காக, அந்த நாடும் இந்த எல்லையைத் திறப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஆக்‌ஷன் எய்ட் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் காசாவுக்கு மிகவும் தேவையான மனிதாபிமான உதவிகளுக்கு இந்த எல்லைப் பாதை திறக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன.

இதனால் ஏராளமானோர் ரஃபா எல்லை அருகே கூடியுள்ளனர்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தெற்கு காசாவுக்கு இஸ்ரேல் மீண்டும் தண்ணீர் விநியோகம்

தெற்கு காஸாவுக்கு இஸ்ரேல் மீண்டும் தண்ணீர் விநியோகத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். பொதுமக்களுக்காக பாதுகாப்பான பகுதியாக தெற்கு காஸா இருக்கக்கூடும் என்பதை இது குறிப்பதாக பிபிசியின் தலைமை சர்வதேச செய்தியாளர் லைஸ் டவுசெட் கூறுகிறார்.

தெற்கு காஸாவில் இஸ்ரேலிய வான்வழி குண்டுவீச்சு தொடர்ந்தாலும், இந்த நடவடிக்கை மூலம் மொத்தமாக தாக்குதல் நடத்துவதற்கு பதிலாக பகுதி பகுதியாக சென்று தாக்குதலை நடத்த இஸ்ரேல் முயற்சிப்பதாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ள இரான், இப்பிரச்னையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடக் கூடும் என்ற அச்சம் நிலவும் நிலையில், அமெரிக்கா மேலும் ஒரு விமானந்தாங்கி போர்க்கப்பலை மத்திய தரைக்கடலுக்கு அனுப்பியுள்ளது. இஸ்ரேலுக்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தவே அமெரிக்கா இவ்வாறு செய்துள்ளது.

மறுபுறம், இஸ்ரேல் - லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. அங்கே இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டதால் நிலைமையை மோசமாக்கியுள்ளது-

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

அரபு நாடுகளில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் முகாம்

அரபு நாடுகளில் தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் கெய்ரோ விமான நிலையத்தில் பேசும்போது, இந்த விவகாரத்தை பிற நாடுகள் எப்படி பார்க்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்காக சமீபத்திய நாட்களில் ஜோர்டான், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்றதாக தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது என்று கூறிய அவர், அதே நேரத்தில் மோதல் பரவுவதை தடுக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்க குடிமக்கள் உட்பட பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக தூதரக பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

"இஸ்ரேலுக்குத் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளவும், இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் உரிமை உள்ளது," என்று அவர் கூறினார்.

மனிதாபிமான முயற்சிக்கு தலைமை தாங்குவதற்காக துருக்கிக்கான முன்னாள் அமெரிக்கத் தூதராக டேவிட் சாட்டர்ஃபீல்ட்டை நியமித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மத்தியதரைக் கடலுக்கு செல்லும் விமான தாங்கி கப்பல்களை தற்போதைய சூழலை கட்டுப்படுத்துவதற்கானதாக பார்க்க வேண்டுமே தவிர ஆத்திரமூட்டலாக பார்க்கக் கூடாது என்றும் கூறினார்.

காஸா மீது தரைவழித் தாக்குதல்

பட மூலாதாரம்,MENAHEM KAHANA/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

காஸா பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது.

காஸா பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது.

ராணுவ செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், "பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதங்களை அழித்து பணயக் கைதிகளை மீட்பதே" நோக்கம் என்றார்.

காஸாவில் வசிக்கும் மக்களை வாடி காஸாவின் வடக்குப் பகுதி முழுவதையும் காலி செய்துவிட்டு தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேல் எச்சரித்தது. இதனால் 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், இவ்வளவு பெரிய அளவில் இடம் பெயர்வது "மிகவும் தீவிரமான மனிதாபிமான ரீதியிலான பாதிப்புக்கு" வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,300 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து தொடங்கிய இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கையில் இதுவரை 2,000 பாலத்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

பூமியின் முகத்தில் இருந்து ஹமாஸை நிரந்தரமாக ஒழித்துவிடுவோம் என்றும் காசா இனி ஒருபோதும் மாறாது என்றும் இஸ்ரேலிய தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

 
காஸா மீது தரைவழித் தாக்குதல்

சனிக்கிழமையன்று இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் கொடூரமான தாக்குதலில் 1,300 பொதுமக்கள் கொல்லப்பட்ட பின்னர், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "ஹமாஸ் உறுப்பினர்கள் ஒருவரையும் விடாமல் அழிப்போம்," என்று கூறினார்.

இதற்காக ஹமாஸுக்கு எதிராக “ஸ்வார்ட்ஸ் ஆஃப் அயர்ன்” என்ற பெயரில் இஸ்ரேல் ஒரு போர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதற்கு முன், காஸாவில் இதுபோன்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் "ஸ்வார்ட்ஸ் ஆஃப் அயர்ன்" பிரசாரம் நடைமுறையில் எவ்வளவு தொலைவுக்கு சாத்தியமானது? மக்கள் தொகை அதிகமுள்ள காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் இதை நடத்துவது எவ்வளவு சவாலானதாக இருக்கும்? இஸ்ரேலிய தளபதிகள் தங்கள் நோக்கங்களை அடைய முடியுமா?

காஸா மீது தரைவழித் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காஸா பகுதியில் தரைப்படை நடவடிக்கைகள் என்பது நகரின் குறுகிய தெருக்களிலும் சந்துகளிலும் வீடு வீடாகத் தேடுதல் மற்றும் சண்டையிடுதல் என்பதாகும். இதன் காரணமாக பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் பன்மடங்கு அதிகரிக்கும்.

இதுவரை இஸ்ரேல் காஸா பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன் நான்கு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பணயக் கைதிகளை மீட்பது ஏன் சவாலானது?

சனிக்கிழமை நடந்த தாக்குதலின்போது ஹமாஸ் ஆயுதக் குழுவினால் பிடித்துச் செல்லப்பட்ட 150 பணயக் கைதிகளை மீட்பது ராணுவத்தின் மற்றொரு முக்கியமான பொறுப்பாக உள்ளது. அவர்கள் காஸாவில் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து ராணுவத்திடம் எந்தத் தகவலும் இல்லை.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஹரேசி ஹலேவி, ஹமாஸை வேரறுப்பதாக சபதம் செய்து அதன் அரசியல் தலைவரை குறிவைத்து காஸாவில் தாக்குதல் நடத்தினார். ஆனால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, கடந்த 16 ஆண்டுகளாக ஹமாஸின் ஆட்சிக்கு சாட்சியாக இருந்த காஸா முற்றிலும் மாறும் என்று நம்பப்படுகிறது.

இஸ்ரேலிய ராணுவ வானொலியுடன் தொடர்புடைய ராணுவ ஆய்வாளர் அமீர் பார் ஷாலோம் பேசியபோது, "இஸ்ரேல் ஹமாஸின் அனைத்து உறுப்பினர்களையும் அழிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அதன் பின்னணியில் உள்ள சிந்தனை, மதரீதியாக ஈர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய தாக்குதல் நிச்சயமாக இந்த அமைப்பை மிகவும் பலவீனப்படுத்தும். எப்பேற்பட்ட பணியையும் மேற்கொள்ளும் அதன் திறன் அழிக்கப்படும்," என்றார்.

நரகமாக மாறி வரும் காஸா: இஸ்ரேலின் இறுதிக்கட்ட தாக்குதல் எப்படி இருக்கும்?

இந்த நோக்கம் மிகவும் எதார்த்தமானது. இதுவரை, இஸ்ரேல் ஹமாஸுடன் நான்கு போர்களை நடத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் ஹமாஸை முற்றிலுமாக ஒடுக்குவதற்கான அதன் முயற்சிகள் தோல்வியடைந்தன.

இஸ்ரேலிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ், இந்தப் போரின் முடிவில் ஹமாஸிடம் "இஸ்ரேலிய குடிமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதற்குப்" போதுமான ராணுவ பலம் இருக்காது என்று கூறியுள்ளார்.

தரைவழித் தாக்குதல் ஆபத்தானது

காஸாவில் இஸ்ரேலின் "ஸ்வார்ட்ஸ் ஆஃப் அயர்ன்" என்ற முழக்கம் வெற்றியடைவது பல காரணிகளைச் சார்ந்தது.

இஸ்ரேல் தாக்கக்கூடும் என்பதை ஹமாஸ் அறிந்திருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் ராணுவப் பிரிவான இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் அதற்கான ஆயத்தங்களைச் செய்திருக்க வேண்டும்.

ஹமாஸ் பல்வேறு இடங்களில் வெடிமருந்துகளைப் புதைத்திருக்க வேண்டும், மேலும் எங்கு போரிடுவது என்பதையும் முடிவு செய்திருக்க வேண்டும். அந்த அமைப்பு இஸ்ரேலிய ராணுவத்தைத் தாக்குவதற்கு காஸாவில் உள்ள தனது நிலத்தடி சுரங்க வலையமைப்பை முழுமையாகப் பயன்படுத்தும்.

 
காஸா மீது தரைவழித் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 2014ஆம் ஆண்டு காஸா நகரின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில், ராணுவ டாங்கிகளை எதிர்க்கும் வகையில் கண்ணிவெடிகள், துப்பாக்கி சுடும் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஹமாஸுடன் நடந்த போர்களில் இஸ்ரேலின் காலாட்படை பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

காஸாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் 11 லட்சம் பாலத்தீன குடிமக்களை 24 மணிநேரத்திற்குள் அப்பகுதியைக் காலி செய்து, தரைவழித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன் தெற்கு நோக்கி நகருமாறு இஸ்ரேல் கூறியதற்கு இதுவொரு பெரிய காரணம்.

இந்தப் போர் பல மாதங்களுக்குத் தொடரலாம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதற்காக 3 லட்சத்து 60 ஆயிரம் ரிசர்வ் ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், பின்வாங்குவதற்கான சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இஸ்ரேலால் எவ்வளவு காலம் தனது போரைத் தொடர முடியும் என்பதுதான் கேள்வி.

 
இஸ்ரேல் பாலத்தீனம் மோதல்

அகதிகள் விவகாரங்களைக் கையாளும் ஐ.நா. அமைப்பு, காஸா "நரகத்தின் கிணறாக" மாறி வருவதாகக் கூறியுள்ளது. அங்கு இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு குடிநீர், மின்சாரம் மற்றும் பெட்ரோல், டீசல் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்போது காஸாவின் கிட்டத்தட்ட பாதி மக்களை அந்தப் பகுதியை காலி செய்யும்படி இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை விவகாரங்களை உள்ளடக்கிய பிரபல இஸ்ரேலிய பத்திரிகையாளரான யோஸ்ஸி மெல்மான் பேசியபோது, "இஸ்ரேலிய ராணுவமும் அரசாங்கமும் சர்வதேச சமூகத்தின் ஆதரவை, குறைந்தபட்சம் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருப்பதாகக் கருதுகின்றன. இப்போது அவர்களின் கொள்கை இதுதான். நம்மிடம் போதுமான நேரம் இருப்பதால் ஒன்றாக இணைவோம் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருக்கிறது," என்றார்.

எது எப்படி என்றாலும், மக்கள் பசியால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டால் இஸ்ரேலின் நட்பு நாடுகளும் அதைப் பற்றிக் கவலைப்படும் நிலை ஏற்படும் என்று அவர் நம்புகிறார்.

காஸா மீது தரைவழித் தாக்குதல்

பட மூலாதாரம்,SAID KHATIB/AFP

படக்குறிப்பு,

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் காரணமாகப் பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

பணயக் கைதிகளை மீட்பது கடினமான பணி

சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ் போராளிகள் பணயக் கைதிகளாகப் பிடித்த 150 பேரில் இஸ்ரேலிய குடிமக்கள் மட்டும் இல்லை, ஏராளமான வெளிநாட்டு குடிமக்களும் உள்ளனர். இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களும் பலர் உள்ளனர்.

அத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற பல நாடுகளின் அரசுகள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள தங்கள் குடிமக்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன், "பிரான்ஸ் தனது குடிமக்களை பாதுகாப்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை," என்று நாட்டில் வசிக்கும் பிரெஞ்சு-இஸ்ரேலிய குடும்பங்களுக்கு உறுதியளித்துள்ளார்.

ஹமாஸுடன் பணயக் கைதிகள் இருப்பது இஸ்ரேலின் முழு நடவடிக்கையிலும் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதனுடன், இஸ்ரேலுக்குள் கூட இது தொடர்பாக அரசாங்கத்தின் மீது நிறைய அழுத்தங்கள் உள்ளன.

அமீர் பார் ஷாலோம் தற்போதைய சூழ்நிலையை 1972 முனிச் ஒலிம்பிக் போட்டியின்போது ஏற்பட்ட சூழ்நிலையுடன் ஒப்பிடுகிறார். 1972இல், பாலத்தீன துப்பாக்கி ஏந்திய குழுவினர் இஸ்ரேலிய வீரர்களைப் பிடித்து 11 பேரைக் கொன்றனர்.

அந்த நேரத்தில், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் தேடிக் கொல்லும் நடவடிக்கையை அரசு தொடங்கியிருந்தது. இம்முறையும் அரசாங்கம் இதேபோன்ற ஒன்றைச் செய்ய விரும்புவதாக அவர் நம்புகிறார். இஸ்ரேலிய குடிமக்களைக் கடத்திய ஹமாஸை கண்டுபிடிக்க அரசு விரும்புகிறது.

 
காஸா மீது தரைவழித் தாக்குதல்

பட மூலாதாரம்,ATEF SAFADI/EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு,

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ள ஹமாஸ் ஆயத்தமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

காஸாவின் வெவ்வேறு இடங்களில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பது இஸ்ரேலின் உயரடுக்கு கமாண்டோ பிரிவான சயரெட் மட்கல் படையினருக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், பணயக் கைதிகளைக் கொல்லப்படுவார்கள் என ஹமாஸ் ஏற்கெனவே மிரட்டியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஹமாஸின் பிடியிலிருந்து கிலாட் ஷாலித் என்ற வீரரை விடுவிக்க இஸ்ரேல் ஆயிரம் பாலத்தீன கைதிகளை விடுவித்தது. ஹமாஸ் ஐந்து ஆண்டுகளாக கிலாட்டை பணயக் கைதிகளாக வைத்திருந்தது.

ஆனால் மீண்டும் ஒருமுறை இஸ்ரேல் அத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு முன் கவனமாகச் சிந்திக்க வேண்டும். 2011இல் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட பாலத்தீனர்களில் யாஹ்யா சின்வார் ஒருவர். சின்வார் இப்போது ஹமாஸின் அரசியல் தலைவராகியிருப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியாது.

மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளும் இந்தப் போரைக் கண்காணித்து வருகின்றன

இஸ்ரேல் மேற்கொள்ளும் தரைவழித் தாக்குதலின் வெற்றி, அதன் அண்டை நாடுகள் அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும்.

இஸ்ரேல் அரசு எகிப்தில் இருந்து முக்கியப் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடலாம். எகிப்தின் வடக்கு எல்லை காஸாவின் தெற்குப் பகுதியை ஒட்டியுள்ளது. காஸாவிற்குள் இருக்கும் மக்களுக்கு ரஃபா எல்லைக் கடப்பு வழியாக உதவி வழங்க எகிப்து காஸா மீது அழுத்தம் கொடுக்க முடியும்.

இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுக்கழகத்தின் ஒஃபிர் விண்டர் இது குறித்துப் பேசியபோது, "இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை முன்னேறினால், காஸாவில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது ஏராளமான மக்கள் எகிப்து நாட்டுக்கு அகதிகளாகச் செல்லக்கூடும். அதனால், போரிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

 
காஸா மீது தரைவழித் தாக்குதல்

பட மூலாதாரம்,AHMED ZAKOT/SOPA IMAGES/LIGHTROCKET

படக்குறிப்பு,

கடந்த 2011இல் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட பாலத்தீனரான யாஹ்யா சின்வார் இப்போது ஹமாஸின் அரசியல் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

காஸாவிலிருந்து வெளியேறும் ஏராளமான மக்களுக்கு இடமளிக்க எகிப்து தனது எல்லைகளைத் திறக்க வேண்டும் என்று ஒஃபிர் விண்டர் கூறுகிறார். இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் தரப்பில் இருந்து அழுத்தம் அதிகரிக்கலாம்.

லெபனானை ஒட்டியுள்ள இஸ்ரேலின் வடக்கு எல்லையின் மீதும் அனைவரின் பார்வையும் பதிந்திருக்கிறது.

லெபனானில் இருக்கும் ஆயுதமேந்திய தாக்குதல் குழுவான ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலிய ராணுவத்திற்கும் இடையில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும் இந்தப் பகுதி இஸ்ரேலுக்கு புதிய போர்க்களமாக மாறவில்லை.

ஹிஸ்புல்லாவின் பிரதான ஆதரவாளரான இரான் ஏற்கெனவே இஸ்ரேலுக்கு எதிராக ஒரு "கூட்டணியைத்" தொடங்குவதாக அச்சுறுத்தியுள்ளது. தற்போதைய பதற்றத்தை யாரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியபோது, அவர் இரான் மற்றும் ஹிஸ்புல்லாவை பற்றித் தான் குறிப்பிட்டார்.

"எந்தவொரு நாடும், எந்தவொரு அமைப்பும் மற்றும் எந்தவொரு நபரும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தால், அவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை மட்டுமே உள்ளது - அதைச் செய்யாதீர்கள்" என்று ஜோ பைடன் கூறியிருந்தார்.

தனது செய்தியின் தீவிரத்தைக் காட்ட, அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்பியுள்ளது.

 
காஸா மீது தரைவழித் தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS/IBRAHEEM ABU MUSTAFA

படக்குறிப்பு,

தாக்குதல் தீவிரமடைந்தால் பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறும் ஆபத்து நிலவுகிறது.

காஸாவுக்கான இஸ்ரேலின் இறுதி நடவடிக்கை என்ன?

இந்த ராணுவ நடவடிக்கையின் மூலம் ஹமாஸை இஸ்ரேல் முழுமையாக பலவீனப்படுத்தினாலும், காஸாவில் அதன் இடத்தைப் பிடிப்பது யார் என்ற கேள்வி எழுகிறது.

இஸ்ரேல் 2005இல், தனது ராணுவத்தைக் கொண்டு ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களை காஸாவில் குடியேற்றியது. மீண்டும் ஒருமுறை இந்தப் பகுதியில் குடியேற்றத்தை ஏற்படுத்தி தன்னை ஆக்கிரமிப்பாளராகக் காட்ட விரும்பாது.

கடந்த 2007ஆம் ஆண்டு அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட பாலத்தீன அதிகார அமைப்பு, மீண்டும் காஸா பகுதிக்குள் உருவாகும் சாத்தியம் இருப்பதாக ஒஃபில் விண்டர் நம்புகிறார்.

பாலத்தீன அதிகார அமைப்பு ஒரு கிளர்ச்சி அமைப்பு அல்ல. தற்போது மேற்குக் கரைப் பகுதியை அந்த அமைப்புதான் ஆட்சி செய்கிறது. அந்த அமைப்பு மீண்டும் அதிகார பலம் பெறுவதை எகிப்து அரசும் வரவேற்கும் என அவர் நம்புகிறார்.

இஸ்ரேலிய தாக்குதல்களால் அழிக்கப்பட்ட காஸா உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவது சவால் நிறைந்த ஒரு பணியாகவே இருக்கும்.

ஹமாஸ் தாக்குதலுக்கு முன்பே, இஸ்ரேல் அரசு காஸாவிற்கு "இரட்டை உபயோகப் பொருட்கள்" செல்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இவை ராணுவம், பொதுமக்கள் என இருதரப்பும் பயன்படுத்தக்கூடிய பொருட்களாகும். இதுபோன்ற விஷயங்களில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இஸ்ரேல் விரும்புகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, இஸ்ரேல்-காஸா எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலியில் இருந்து குடியிருப்புப் பகுதிகள் பாதுகாப்பான தொலைவில் இருக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் விரும்புகிறது. இதற்கு முன்பும் இஸ்ரேலில் இதுபோன்ற அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட்டின் முன்னாள் தலைவரான யோரம் கோஹென், தற்போதைய பாதுகாப்பு மண்டலத்தை குறைந்தது இரண்டு கிலோமீட்டர் (1.25 மைல்கள்) தொலைவுக்கு "கண்டவுடன் கூடும்" பகுதியாக மாற்றப்பட வேண்டும் என்று நம்புகிறார்.

ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலின் விளைவு எதுவாக இருந்தாலும், அதன் மூலம் இஸ்ரேல் தனது மூல நோக்கத்தை அடைய விரும்புகிறது. எதிர்காலத்தில் தன் மீது இதுபோன்ற தாக்குதல் நடக்கக்கூடாது என்பதை உறுதி செய்யவே இஸ்ரேல் விரும்புகிறது.

https://www.bbc.com/tamil/articles/c25qe780xleo




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.