Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸா மருத்துவமனை குண்டுவெடிப்பில் 500 பேர் பலி – சிக்கலாகும் மனித உரிமை பிரச்னை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காஸா, இஸ்ரேல், ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டேவிட் க்ரிட்டென்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

காஸா நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவத்துக்குக் காரணம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்று பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இஸ்ரேலிய ராணுவம், இச்சம்பவத்துக்குக் காரணம் பாலத்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் நடத்திய ஒரு ராக்கெட் ஏவுதல் தவறாகிப் போனதுதான் என்று கூறுகிறது. இந்தக் குற்றச்சாட்டை அந்த அமைப்பு நிராகரித்திருக்கிறது.

மருத்துவமனையில் இருந்த ஒரு மருத்துவர், இந்தச் சம்பவத்தை ‘படுகொலை’ என்று வர்ணித்து அதைக் கண்டித்தார். மற்றொரு மருத்துவர் அந்த இடமே ஒரு பேரழிவின் காட்சியாகத் தோன்றியதாகக் கூறினார்.

 

சிகிச்சையின்போது இடிந்து விழுந்த மேற்கூரை

செவ்வாய் இரவு (அக்டோபர் 17) அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் இருந்து வெளிவந்த படங்கள் பெரும் குழப்பத்தின் காட்சிகளைக் காட்டுகின்றன. ரத்தம் தோய்ந்த, உடல் சேதமான மக்கள் இருளில் ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு செல்லப்படுகின்றனர். இடிபாடுகள் நிறைந்த தெருவில் உடல்களும் சிதைந்த வாகனங்களும் கிடக்கின்றன.

ஏவுகணை ஒன்று அப்பகுதியைத் தாக்குவதையும் அதைத்தொடர்ந்து அங்கு குண்டுவெடிப்பு நடப்பதையும் ஒரு வீடியோ காட்டுகிறது.

'எல்லை கடந்த மருத்துவர்கள்' என்ற மனிதாபிமான உதவி நிறுவனத்தைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் காசன் அபு-சித்தா, இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறுகையில், "தாம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது என்றும், அறுவை சிகிச்சை அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது என்றும் கூறினார்.

இந்தச் சம்பவத்தை "ஒரு படுகொலை" என்று அவர் விவரித்தார்.

 

‘மொத்தம் 1,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம்’

காஸா, இஸ்ரேல், ஹமாஸ்
படக்குறிப்பு,

ஒரு வீடியோ, ஏவுகணை ஒன்று மருத்துவமனையைத் தாக்குவதையும் அதைத் தொடர்ந்து அங்கு குண்டுவெடிப்பு நடப்பதையும் காட்டுகிறது.

அங்கிருந்த மற்றொரு மருத்துவர் பிபிசியிடம் கூறுகையில், மருத்துவமனையில் இருந்த 80% சேவைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாகச் சொன்னார். மேலும் அவரது மதிப்பீட்டின்படி, 1,000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் அல்லது காயமடைந்துள்ளனர்.

அஹ்லி அல்-அரபு மருத்துவமனை செயல்படுவதற்கு ஆங்கிலிகன் தேவாலயம் முழுமையாக நிதியளிக்கிறது. அந்த தேவாலயம், இந்த மருத்துவமனை காஸாவில் உள்ள எந்த அரசியல் பிரிவுகளையும் சாராதது என்று கூறுகிறது.

ஜெருசலேமில் உள்ள புனித ஜார்ஜ் கல்லூரியின் தலைவரும், அந்நகரில் உள்ள தேவாலயத்தின் முக்கிய நபர்களில் ஒருவருமான கேனான் ரிச்சர்ட் செவெல், இச்சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய நம்பகமான தகவல்களைப் பெறுவது மிகவும் கடினம் என்றார்.

ஆனால், மருத்துவமனை தாக்கப்பட்டதை உறுதிப்படுத்த முடியும் என்றும் இதில் ‘அதிர்ச்சியளிக்கும் அளவுக்கு அதிக எண்ணிகையில் மக்கள் இறந்திருக்கின்றனர்’ என்றும் கூறினார்.

 
காஸா, இஸ்ரேல், ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குண்டுவெடிப்பு நடந்தபோது சுமார் 600 நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஊழியர்கள் மருத்துவமனைக்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்த 1000 நோயாளிகள், முதியவர்கள்

மேலும் பேசிய கேனான் ரிச்சர்ட் செவெல், கடந்த வார இறுதியில் சுமார் 6,000 இடம்பெயர்ந்த மக்கள் இந்த மருத்துவமனை முற்றத்தில் தஞ்சமடைந்து இருந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 14) இஸ்ரேல் இந்த மருத்துவமனை மீது நடத்திய விமானத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்தனர் என்று அவர் கூறினார். "அதைத்தொடர்ந்து 5,000 பேர் மருத்துவமனை முற்றத்தை விட்டு வெளியேறினர். ஆனால் சுமார் 1,000 பேர் அங்கேயே தங்கினர், அவர்களில் பலர் ஊனமுற்றோர் அல்லது வயதானவர்கள்," என்றும் அவர் கூறினார்.

தற்போது வெடிப்பு நடந்தபோது சுமார் 600 நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஊழியர்கள் மருத்துவமனைக்குள் இருந்ததாகவும், ஆனால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனைக்கு வெளியில் இருந்ததாக தான் நம்புவதாகவும் செவெல் கூறினார்.

"இந்தத் தாக்குதல் விபத்தாகவோ, திட்டமிடப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் இந்த வகையான தாக்குதலை நியாயப்படுத்த முடியாது," என்று அவர் கூறினார்.

 
காஸா, இஸ்ரேல், ஹமாஸ்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

இந்தச் சம்பவத்தில் 500 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘தாக்குதலை நேரில் பார்த்தேன்’

சம்பவத்தின்போது அருகில் இருந்த பிரிட்டிஷ்-பாலத்தீனிய கட்டுமானப் பொறியாளரும் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஜாஹர் குஹைல் பிபிசியிடம் கூறுகையில், தான் கண்டது ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட பயங்கரம்’ என்றார்.

"எஃப்-16 அல்லது எஃப்-35 ரக போர் விமானங்களில் இருந்து வந்த இரண்டு ராக்கெட்டுகள் மக்களை இரக்கமின்றி கொன்றதைப் பார்த்தேன்," என்று அவர் கூறினார்.

வெடிப்பில் ஏற்பட்ட தீயினால் பலர் உயிரிழந்ததாகவும், முதலில் வந்த மீட்புப் பணியளர்களிடம் உயிர் பிழைத்தவர்களை மீட்பதற்குத் தேவையான உபகரணங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 
காஸா, இஸ்ரேல், ஹமாஸ்
படக்குறிப்பு,

மருத்துவமனையில் இருந்து வெளிவந்த படங்கள் அங்கு நிலவிய பெரும் குழப்பத்தின் காட்சிகளைக் காட்டுகின்றன.

அதிகார மட்டங்கள் கூறுவது என்ன?

இந்தச் சம்பவத்தில் 500 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பு இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேலை குற்றம்சாட்டி, இதை ஒரு ‘கொடூரமான படுகொலை’ என்று வர்ணித்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருக்கும் பாலத்தீனிய அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர், இஸ்ரேலை குற்றம்சாட்டி, இச்சம்பவத்தை ‘கொடூரமான குற்றம்’ என்றார்.

ஆனால், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், தாம் மருத்துவமனைகளைக் குறிவைக்கவில்லை, இவை ‘சரிபார்க்கப்படாத கூற்றுகள்’ என்று கூறியிருக்கின்றன.

இஸ்ரேல் பதுகாப்புப் படைகளின் தலைமை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி ஒரு வீடியோ அறிக்கையில், ‘செயல்பாட்டு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கூடுதல் ஆய்வு மற்றும் குறுக்கு விசாரணையில், காஸாவில் உள்ள மருத்துவமனையை இஸ்ரேலிய படைகள் தாக்கவில்லை என்பது தெளிவானதாகக் கூறினார்.

அவர் மேலும், “இஸ்லாமிய ஜிகாத் அமைப்பால் ஏவப்பட்ட ராக்கெட் தோல்வியடைந்ததன் விளைவாக மருத்துவமனை தாக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.

 

சிக்கலாகும் மனிதாபிமானப் பிரச்னை

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலத்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,300 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் காஸா மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தின.

காஸா மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல்களில் 3,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், காஸா மருத்துவமனையில் தற்போது நடந்திருக்கும் குண்டுவெடிப்பு, மனிதாபிமான நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்குத் தடங்கல் விளைவித்திருக்கிறது.

இன்று (புதன்கிழமை, அக்டோபர் 18) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பாலத்தீனிய மற்றும் எகிப்திய தலைவர்களுக்கு இடையே திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பை ஜோர்டான் ரத்து செய்திருக்கிறது.

 

மருத்துவமனை குண்டுவெடிப்பால் தீவிரமடைந்த மக்கள் போராட்டம்

இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல்

பட மூலாதாரம்,EPA

இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதலில் காயமடைந்த காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்றுவந்த காஸா மருத்துவமனை ஒன்றின் மீது ராக்கெட் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, பல முக்கிய நகரங்களில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

செவ்வாய்க்கிழமை இரவு மேற்குக் கரையில் உள்ள பல நகரங்களின் தெருக்கள் பாலத்தீனியர்களின் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. பாலத்தீனிய அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸுக்கு எதிராக கற்களை வீசி போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

மருத்துவமனை குண்டுவெடிப்பால் ஆத்திரமடைந்த எதிர்ப்பாளர்கள் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே கூடினர். அங்கு அவர்கள் தீ வைத்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மற்றொரு போராட்டக் குழு பிரெஞ்சு தூதரகத்திற்கு வெளியே கூடி கட்டடத்தின் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. லெபனானின் ஹிஸ்புல்லா போராளிக் குழு முஸ்லிம்கள், அரேபியர்களை “உடனடியாக தெருக்களுக்கும் சதுக்கங்களுக்கும் சென்று தீவிர கோபத்தை வெளிப்படுத்துமாறு” அழைப்பு விடுத்துள்ளது.

திரிபோலி மற்றும் பிற லிபிய நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பாலத்தீனிய கொடிகளை ஏந்தியபடி, காஸா மக்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியபடி ஒன்று திரண்டனர்.

இரானின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ், பிரெஞ்சு தூதரகங்களுக்கு வெளியிலும், துருக்கி மற்றும் ஜோர்டானில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்கு வெளியிலும் போராட்டக் குழுக்கள் குவிந்துள்ளன.

https://www.bbc.com/tamil/articles/cv2e14kmw7do

  • Replies 69
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை.. மனித உயிருக்கு எந்த பெறுமதியும் இல்லை.. மேற்கு நாடுகளில் நாய் பூனையாக இந்த மக்கள் பிறந்திருந்தால் கூட நல்ல வாழ்க்கை பெற்றிருபார்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் விமான தாக்குதல் - 500க்கும் மேற்பட்டவர்கள் பலி

Published By: RAJEEBAN

18 OCT, 2023 | 06:04 AM
image
 

காசா மருத்துவமனை மீது இடம்பெற்ற தாக்குதலொன்றில் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய விமானத்தாக்குதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றன என ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதேவேளை பாலஸ்தீனிய ஜிகாத் அமைப்பின் ரொக்கட் தாக்குதலே காரணம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் விமானதாக்குதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அஹ்கிலி அல் அராபியில் உள்ள பப்டிஸ்ட் மருத்துவமனை மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஹமாஸின் ரொக்கட் ஒன்று தவறுதலாக விழுந்து வெடித்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என முதலில் தெரிவித்த இஸ்ரேல் பின்னர் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் ரொக்கட்டே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு இதனை நிராகரித்துள்ளது.

ஏற்பட்ட சேதங்களின் அளவை பார்க்கும்போது இது இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் ரொக்கட் தவறுதலாக வெடித்ததால் ஏற்பட்ட இழப்பு இல்லை என தெரியவருவதாக கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/167130

  • கருத்துக்கள உறவுகள்

காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: இஸ்ரேலின் இனப்படுகொலை!

October 18, 2023
Israel-attack-on-Gaza-Hospital.jpg?resiz

நேற்று (17.10.2023) காசா பகுதியில் உள்ள அல்-அஹ்லி அல்-அரபி (al-Ahli al-Arabi) மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளிதாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது யூத இனவெறி பயங்கரவாத இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனியர்கள் மீது நடத்தியுள்ள படுகொலையாகும்.

Video caught the second a strike hit Gaza's al-Ahli Baptist hospital and killed hundreds. Authorities in the assaulted domain are blaming Israel for the strike ⤵️ pic.twitter.com/FsujVYoKfk

— Al Jazeera English (@AJEnglish) October 18, 2023

Israel-attack-on-Gaza-Hospital-7.jpg?resIsrael-attack-on-Gaza-Hospital-6.jpg?resIsrael-attack-on-Gaza-Hospital-5.jpg?resIsrael-attack-on-Gaza-Hospital-4.jpg?resIsrael-attack-on-Gaza-Hospital-3.jpg?resIsrael-attack-on-Gaza-Hospital-2.jpg?resIsrael-attack-on-Gaza-Hospital-1.jpg?res

This Gazan doctor learned his family was killed by an Israeli airstrike while comforting survivors in his hospital. pic.twitter.com/juy82yQtVq

— AJ+ (@ajplus) October 18, 2023

இத்தாக்குதலை எதிர்த்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

Protests erupt in cities across the Middle East following an attack on Al-Ahli Baptist Hospital in Gaza City that killed over 500 people ⤵️ pic.twitter.com/HVoHTJzcGc

— Al Jazeera English (@AJEnglish) October 17, 2023

https://www.vinavu.com/2023/10/18/gaza-hospital-attack-israel-began-genocide-palestinians/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா மருத்துவமனை தாக்குதல் - அவுஸ்திரலியா கண்டனம்

18 OCT, 2023 | 11:28 AM
image
 

பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும்  கண்மூடித்தனமான தாக்குதல்களை கண்டிப்பதாக  அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

காசா மருத்துவமனையிலிருந்து வெளிவரும் காட்சிகள் கடும் மனவேதனையை ஏற்படுத்துகின்றன பெருமளவு உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளமை தெளிவாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் சிந்தனைகள் கொல்லப்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் அவர்களின் அன்புக்குரியவர்கள் குறித்து காணப்படுகின்றன என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பது முதலிடம் பெறவேண்டும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களிற்கான மதிப்பு மிகமுக்கியமானது எனவும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/167146

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் வைத்தியசாலை மீது குண்டு வீச்சு தாக்குதல் ; மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டம் வெடித்தது

Published By: DIGITAL DESK 3

18 OCT, 2023 | 11:44 AM
image
 

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் போர்  தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்நிலையில், காசாவில் அஹ்கிலி அல் அராபியில் உள்ள வைத்தியசாலை மீது குண்டு வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய விமானத்தாக்குதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றன என ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. அதேவேளை பாலஸ்தீனிய  ஜிகாத் அமைப்பின் ரொக்கட் தாக்குதலே காரணம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காசாவில் வைத்தியசாலை மீதான குண்டு வீச்சு தாக்குதலை கண்டித்து லெபனான், ஜோர்தான் மற்றும் துருக்கி ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டம் வெடித்துள்ளது.

11.jpg
லெபனானின் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே போராட்டம் ;  புகைப்படம்: அப்பாஸ் சல்மான்/EPA

லெபனானின் ஈரான் ஆதரவுடைய ஹெஸ்புல்லா அமைப்பு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இஸ்ரேல் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

ஹெஸ்புல்லாவின் அழைப்பைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பெய்ரூட்டுக்கு வெளியே, அவ்கார் புறநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே  கூடிய நிலையில் பாதுகாப்புப் படையினருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு எதிர்ப்பாளர்கள் கற்களை எறிந்து அருகிலுள்ள கட்டிடத்திற்கு தீ வைத்துள்ளதாக ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் தெரிவித்துள்ளது.

இதே வேளை, பெய்ரூட்டில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் பிரதான நுழைவாயிலில் நூற்றுக்கணக்கானோர் கூடி, ஹெஸ்பொல்லாக் கொடிகளை உயர்த்தி கற்களை வீசியுள்ளனர்.

ஜோர்தான் தலைநகர் அம்மானில், போராட்டக்காரர்கள் இஸ்ரேலிய தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். ஹமாஸுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதன்போது, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் செவ்வாயன்று அமெரிக்க இராஜதந்திர முயற்சிகளுக்கு தலைமை தாங்கி இஸ்ரேலில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

14.jpg
இஸ்தான்புல்லில்  இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே மக்கள் போராட்டம். புகைப்படம்: Umit Turhan Coskun/AFP/Getty Images

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் புதன்கிழமை அதிகாலையில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் தூதரகங்களுக்கு வெளியே கூடினர். "பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் மரணம்" என்று ஈரான் தலைநகரில் உள்ள பிரான்ஸ் தூதரக வளாகத்தின் சுவர்களில் முட்டைகளை வீசி எதிர்ப்பாளர்கள் கூச்சலிட்டனர்.

லிபியாவில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்  பாலஸ்தீனியக் கொடிகளை காட்டிக்கொண்டும், சிலர் பாலஸ்தீனிய தலைபாகையால் (keffiyehs) முகத்தை மூடிக்கொண்டும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  அவர்கள் காஸா மக்களுக்கு ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.

மேலும், யேமனின் தென்மேற்கு நகரமான தாஸ், மொராக்கோ தலைநகர் ரபாத் மற்றும் ஈராக் தலைநகர் பாக்தாத் ஆகிய இடங்களிலும் போராட்டங்களில் ஈடுப்படுவதை தொலைக்காட்சி காட்சிகள் காட்டியுள்ளன.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், காசாவில் வைத்தியசாலையில் நடந்த குண்டு வீச்சு தாக்குதல் மனித உயிர்கள் மீது அக்கறையற்ற தன்மையை அண்மைய இஸ்ரேலிய தாக்குதல்கள் எடுத்துக்காட்டுவதாக"  கூறினார். இந்நிலையில், அங்காராவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் மற்றும் இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்திற்கு வெளியே ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/167147

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் | காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம்

18 OCT, 2023 | 04:15 PM
image
 

புதுடெல்லி: காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் "காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் மற்றும் அதில் உயிரிழந்தவர்கள் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

நடந்து கொண்டிருக்கும் இந்த மோதலில் தொடர்ச்சியாக பொதுமக்கள் உயிரிழப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்" என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167196

  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருள் வியாபாரிகளுடன் முப்படையினர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு-எம்.ஏ. சுமந்திரன்

இலங்கை இராணுவம் கூறிய நொண்டிச்சாட்டை இஸ்ரேலும் கூறுகின்றது – சுமந்திரன்.

காசாவில் உள்ள வைத்தியசாலை மீதான தாக்குதல் கடுமையான போர்க்குற்றம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

2009 இல் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீதான தாக்குதலிற்கு இலங்கை இராணுவம் இதே போன்றே நொண்டிச்சாட்டை தெரிவித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அதனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1354629

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசிய போது ஏற்பட்ட வலி 14 வருடங்கள் கழித்து மீண்டும் - திருமுருகன் காந்தி

Published By: RAJEEBAN   18 OCT, 2023 | 03:30 PM

image

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது 2009ம் ஆண்டு இஸ்ரேலால் வழங்கப்பட்ட விமானங்கள் குண்டுகளை வீசியபோது நேர்ந்த வலி 14 வருடங்களின் பின்னர் காயத்தை கொடுத்துக்கொண்டிருக்கின்றது என மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர்பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

gaza_ho_38.jpg

கடந்த ஒருவாரமாக நடக்கும் போர் தூக்கத்தை கலைத்துக்கொண்டே இருந்தது. தூங்கச் செல்லும்முன்னர் ஒருமுறை செய்தியை கவனித்த போதுதான் மருர்துவமனையின் மீதான தாக்குதல் செய்தி வந்துகொண்டிருந்தது. குழந்தைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் ரத்த சகதிகளை காண முடிவதில்லை. நமக்கு நேரும் அடக்குமுறையை எதிர்கொள்ளலாம், ஆனால் அடுத்தவர்களுக்கு நேரும் அடக்குமுறை துயரங்களை சுமக்க இயலவில்லை.  2009ம் வருடத்திய தூக்கமற்ற இரவுகள் மீண்டும் வேட்டையாடுகின்றன. புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீதான இதே இசுரேலால் கொடுக்கப்பட்ட விமான ஆயுதங்கள் வீசப்பட்டபோது நேரும் அதே வலி மீண்டும் 14 வருடம் கழித்து காயத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

இன்று மாலை இந்திய தவ்ஹீத் ஜமாத் சென்னை அண்ணாசாலை தர்கா (தாராப்பூர் டவர்) அருகே போராட்டத்தை மாலை 4 மணிக்கு அறிவித்திருக்கிறார்கள். 2009ல் ஓடி ஓடி அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. 2009ல் நாம் இயக்கமாக, அரசியலாக ஒன்றாக எழாமல் தோற்றுப்போனோம், இப்போதும் தோற்கிறோம். குறைவான மக்கள் தொகை கொண்ட நகரத்தில் கூட உலகெங்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள், கோடிக்கணக்கான மக்கள் தொகை கொண்ட நாம் நூற்றுக்கணக்கில் கூட திரள முடியாதவர்களாகி இருக்கிறோம். அரசியல் கட்சி, சாதி என பிளவுண்டு கிடக்கும் சமூகம், நீதியை நிலைநாட்ட என்றுமே பயன்படாது என்பதற்கு நாமே சாட்சி. இன்று மாலை நான் போராட்டத்தில் பங்கெடுக்கிறேன், மருத்துவமனையில் கையில் பிஸ்கட்டோடு கொல்லப்பட்ட அந்த குழந்தைக்காக..

பாப்டிஸ்ட் கிருத்துவ மருத்துவமனை மீது இசுரேல் நடத்திய விமான தாக்குதலில் 500க்கும் அதிகமான பாலஸ்தீன குழந்தைகள், மருத்துவர்கள் படுகொலை. பச்சைப்படுகொலை செய்யும் இசுரேலுக்கு எதிராக உங்கள் குரல் எழட்டும்.

thiru_murugan.jpg

பாலஸ்தீனத்தின் பாப்ட்டிஸ்ட் மருத்துவமனை மீது சற்று முன் குண்டுவீசியது இசுரேல். நோயாளிகள், மருத்துவர்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை. அப்பட்டமாக போர்க்குற்றம் புரிந்து இனப்படுகொலை செய்கிறது இசுரேல். 

புதுகுடியிருப்பு, வட்டுவாகல் என ஈழ மக்களின் மருத்துவமனைகள் மீது குண்டுவீசி நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களை அழித்த இலங்கையின் அதே போர்வெறியை கடைபிடிக்கும் இசுரேல். 

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட இனம் நாம். சக ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்போம்.

https://www.virakesari.lk/article/167182

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகளே காரணம் – இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டு

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 11 ஆவது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் வீசிய ரொக்கெட் தாக்குதலே காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நெதன்யாகு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அல் அக்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகளே காரணம். அவர்கள் வீசிய ரொக்கெட்கள் குறிதவறி மருத்துவமனை மீது விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

https://thinakkural.lk/article/277476

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கொடுமை.. மனித உயிருக்கு எந்த பெறுமதியும் இல்லை.. மேற்கு நாடுகளில் நாய் பூனையாக இந்த மக்கள் பிறந்திருந்தால் கூட நல்ல வாழ்க்கை பெற்றிருபார்கள்..

இரண்டாம் உலகப்போரில் நாஷிகளால் துரத்தப்பட்டு,அலைக்கழிக்கப்பட்டு,அழிக்கப்பட்டு அல்லல் பட்ட யூத இனம் மனிதாபிமானத்தை மறந்து நிற்கின்றது.அதற்காக ஹமாஸ் செய்வது சரி என்று சொல்ல வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4923.jpg

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் உள்ள வைத்தியசாலை மீதான தாக்குதல் கடுமையான போர்க்குற்றம்.
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
சுமந்திரன் சரியாகவே சொல்லியுள்ளார்.

8 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை இராணுவம் கூறிய நொண்டிச்சாட்டை இஸ்ரேலும் கூறுகின்றது – சுமந்திரன்.


2009 இல் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீதான தாக்குதலிற்கு இலங்கை இராணுவம் போன்று  நொண்டிச்சாட்டை தெரிவித்தது   இஸ்லாமிய ஜிஹாத் என்ற பாலஸ்தீன பயங்கரவாத இயக்கமா அல்லது இஸ்ரேலா என்பதை அவர் சொல்லவில்லை. ஆதவன் செய்தி இலங்கை இராணுவம் கூறிய நொண்டிச்சாட்டை இஸ்ரேலும் கூறுகின்றது என்று அவர் சொன்னதாக தலைப்பு வைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான இக்கடடான ஒரு நேரத்தில் இஸ்ரேல் இப்படியான தாக்குதலை செய்திருக்க முடியாது. அவர்கள் எல்லா தாக்குதலுக்கு முன்பும் எச்சரிக்கையின் பின்னரே குண்டுகளை பயங்கரவாதிகள் மீது போட்டிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜிஹாதி, ஹமாஸ் பயங்கரவாதிகள் இந்த கொடூரமான செயலை செய்துவிட்டு இஸ்ரேல் மீது பழியை போட்டிருக்கிறார்கள். இதட்குரிய ஆதாரத்தையும் இஸ்ரேல் வெளியிட்டிருக்கிறது.

இந்த குண்டு தாக்குதல் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஆர்பாடடமும், கொந்தளிப்பும் அதிகரித்திருக்கிறது. இதட்காகவே இதை அந்த ஜிஹாத், ஹமாஸ் பயங்கரவாதிகள் இதை செய்தார்கள்.இஸ்ரவேலை ஆதரிப்பதட்காக இதை கூற வில்லை. அனால் உண்மை கசக்கத்தான் செய்யும்.

இருந்தாலும் ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிப்பதை இஸ்ரேல் நிறுத்தமாடடாது என்பதை உறுதியாக கூறலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Cruso said:

இப்படியான இக்கடடான ஒரு நேரத்தில் இஸ்ரேல் இப்படியான தாக்குதலை செய்திருக்க முடியாது. அவர்கள் எல்லா தாக்குதலுக்கு முன்பும் எச்சரிக்கையின் பின்னரே குண்டுகளை பயங்கரவாதிகள் மீது போட்டிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜிஹாதி, ஹமாஸ் பயங்கரவாதிகள் இந்த கொடூரமான செயலை செய்துவிட்டு இஸ்ரேல் மீது பழியை போட்டிருக்கிறார்கள். இதட்குரிய ஆதாரத்தையும் இஸ்ரேல் வெளியிட்டிருக்கிறது.

இந்த குண்டு தாக்குதல் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஆர்பாடடமும், கொந்தளிப்பும் அதிகரித்திருக்கிறது. இதட்காகவே இதை அந்த ஜிஹாத், ஹமாஸ் பயங்கரவாதிகள் இதை செய்தார்கள்.இஸ்ரவேலை ஆதரிப்பதட்காக இதை கூற வில்லை. அனால் உண்மை கசக்கத்தான் செய்யும்.

இருந்தாலும் ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிப்பதை இஸ்ரேல் நிறுத்தமாடடாது என்பதை உறுதியாக கூறலாம். 

உண்மை தகவல்களுக்கு மிக்க நன்றி! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸா: மருத்துவமனை மீதான தாக்குதலால் அரபு உலகில் வேகமாக மாறும் காட்சிகள் - அமெரிக்காவுக்கு நெருக்கடி

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,EPA

18 அக்டோபர் 2023

காஸா நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 471 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவத்துக்குக் காரணம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்று பாலத்தீன அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால், இஸ்ரேலிய ராணுவம், இச்சம்பவத்துக்குக் காரணம் பாலத்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் நடத்திய ஒரு ராக்கெட் ஏவுதல் தவறாகிப் போனதுதான் என்று கூறுகிறது. இந்தக் குற்றச்சாட்டை அந்த அமைப்பு நிராகரித்திருக்கிறது.

சிகிச்சையின் போது இடிந்து விழுந்த மேற்கூரை

செவ்வாய் இரவு (அக்டோபர் 17) அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் இருந்து வெளிவந்த படங்கள் பெரும் குழப்பத்தின் காட்சிகளைக் காட்டுகின்றன. ரத்தம் தோய்ந்த, உடல் சேதமான மக்கள் இருளில் ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு செல்லப்படுகின்றனர். இடிபாடுகள் நிறைந்த தெருவில் உடல்களும் சிதைந்த வாகனங்களும் கிடக்கின்றன.

ஏவுகணை ஒன்று அப்பகுதியைத் தாக்குவதையும் அதைத்தொடர்ந்து அங்கு குண்டுவெடிப்பு நடப்பதையும் ஒரு வீடியோ காட்டுகிறது.

'எல்லை கடந்த மருத்துவர்கள்' என்ற மனிதாபிமான உதவி செய்யும் அமைப்பைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் காசன் அபு-சித்தா, இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறுகையில், "தாம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது என்றும், அறுவை சிகிச்சை அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது என்றும் கூறினார்.

இந்தச் சம்பவத்தை "ஒரு படுகொலை" என்று அவர் விவரித்தார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தாக்குதலுக்கு பின் மருத்துவமனையின் நிலை எப்படி உள்ளது?

காஸா மருத்துவமனை தாக்குதலில் 471 பேர் கொல்லப்பட்டதாகவும், 314 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பாலத்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காசாவில் தாக்குதலுக்குள்ளான அல்-அஹ்லி மருத்துவமனையைச் சுற்றி காணப்படும் நிலைமை "இதுவரை பார்த்ததில்லை, விவரிக்க முடியாது" என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அந்த அமைச்சக செய்தித் தொடர்பாளர் டாக்டர் அஷ்ரப் அல்-குத்ரா வெளியிட்ட அறிக்கையில், "மருத்துவமனையின் தரையிலும், தாழ்வாரங்களிலும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். சில இடங்களில், மக்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். பலர் தங்கள் முறை அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றன." என்று அவர் கூறியுள்ளார்.

"இந்த குண்டுவெடிப்பில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். சிலருக்கு "உடல் பாகங்கள் துண்டிக்கப்படும்" அளவுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன, பல காயங்களுக்கு "இங்குள்ள திறன் இல்லாத வரையறுக்கப்பட்ட மருத்துவக் குழுக்களால்" சிகிச்சை அளிக்கப்படுகிறது." என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தாக்குதலுக்கு பிறகு நிலைமை என்ன?

அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் காணப்படும் நிலை, “முன் எப்போதும் கண்டிராத நிலை, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என காஸாவில் உள்ள பாலத்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அஷ்ரஃப் அல்-குத்ரா, “மருத்துவர்கள் மண்ணில் நின்றுக் கொண்டும், மருத்துவமனை வராண்டாக்களில் நின்றுக் கொண்டும் அறுவை சிகிச்சைகள் செய்து வருகின்றனர். சில இடங்களில் மயக்க மருந்து கொடுக்காமலே அறுவை சிகிச்சை செய்கின்றனர்” என்று தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். “பலர் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள காத்திருக்கிறார்கள். மருத்துவ குழுக்கள் உயிர்களை காப்பாற்ற முயன்று வருகிறார்கள்” என்று மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வெடிவிபத்தில் பல குழந்தைகளும் பெண்களும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். “சிலருக்கு மிகவும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களின் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. முழுமையான மருத்துவ வசதிகள் இல்லாத குறைவான மருத்துவக் குழுக்களால் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன” என அவர் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,EPA

‘தாக்குதலை நேரில் பார்த்தேன்’

சம்பவத்தின்போது அருகில் இருந்த பிரிட்டிஷ்-பாலத்தீன கட்டுமானப் பொறியாளரும் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஜாஹர் குஹைல் பிபிசியிடம் கூறுகையில், தான் கண்டது ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட பயங்கரம்’ என்றார்.

"எஃப்-16 அல்லது எஃப்-35 ரக போர் விமானங்களில் இருந்து வந்த இரண்டு ராக்கெட்டுகள் மக்களை இரக்கமின்றி கொன்றதைப் பார்த்தேன்," என்று அவர் கூறினார்.

வெடிப்பில் ஏற்பட்ட தீயினால் பலர் உயிரிழந்ததாகவும், முதலில் வந்த மீட்புப் பணியளர்களிடம் உயிர் பிழைத்தவர்களை மீட்பதற்குத் தேவையான உபகரணங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்பு இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேலை குற்றம்சாட்டி, இதை ஒரு ‘கொடூரமான படுகொலை’ என்று வர்ணித்தது.

மருத்துவமனை குண்டுவெடிப்பு பற்றி இஸ்ரேல் கூறுவது என்ன?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இருதரப்புமே பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன.

காஸா மருத்துவமனை குண்டுவெடிப்பு பற்றி இஸ்ரேலிய இராணுவத்தின் டேனியல் ஹகாரி விரிவாகப் பேசினார்.

  • நேற்று உள்ளூர் நேரப்படி 18:59 மணிக்கு பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் என்ற போராளிக் குழுவால் "சுமார் 10 ராக்கெட்டுகளின் சரமாரியாக" ஏவப்பட்டதாக ஹகாரி கூறினார்
  • அதே நேரத்தில் மருத்துவமனையில் வெடிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன.
  • இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் வான்வழி காட்சி பகுப்பாய்வு, "தவறான" இஸ்லாமிய ஜிஹாத் ராக்கெட்டால் வெடிப்பு ஏற்பட்டது என்பதை "முழுமையான உறுதியுடன்" காட்டுகிறது, இது மருத்துவமனைக்கு அருகிலுள்ள கல்லறையில் இருந்து ஏவப்பட்டது.
  • "சேதமடைந்த ஒரே இடம்" மருத்துவமனைக்கு வெளியே "எரியும் அறிகுறிகளைக் காணக்கூடிய ஒரு கார் நிறுத்துமிடம்" என்று ஹகாரி கூறினார்.
  • இஸ்ரேலிய தாக்குதல்கள் "பள்ளங்கள் மற்றும் கட்டமைப்பு சேதம்" போன்ற மிகவும் குறிப்பிடத்தக்க பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் வாதிட்டார்.
  • ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
  • ஹகாரி கூறுகையில், "ஹமாஸ் தங்களுக்குத் தெரியும் என்று கூறியது போல் விரைவாக என்ன நடந்தது என்பதை அறிய இயலாது" என்றார்.
  • இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் வாதத்தை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என்று ஒரு நிருபர் கேட்டபோது, இஸ்ரேல் கடந்த காலத்தில் "முடிவெடுப்பதில் விரைந்து செயல்பட்டது" என்று ஒப்புக்கொண்டார், ஆனால் அவர்கள் "இரட்டை சரிபார்ப்பதற்கு" பல மணிநேரம் எடுத்துக்கொண்டதாக அவர் கூறுகிறார். அவர்களின் உளவுத்துறையும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்:
  • ரேடார் அமைப்புகளைப் பயன்படுத்தி, "காசாவிற்குள் இருந்து" ஏவப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் கண்காணித்தது. அவை அருகிலுள்ள கல்லறையிலிருந்து ஏவப்பட்டதைக் காட்டும் பாதையுடன் ராக்கெட் தவறான பாதையில் செல்வது குறித்து அவர்கள் தகவல் பரிமாறிக் கொண்ட ஆதாரமும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் குற்றச்சாட்டை பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு மறுத்துள்ளது.

ஹமாஸ் - பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் வேறுபாடு என்ன?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு காரணம் என்று இஸ்ரேலிய இராணுவம் குற்றம்சாட்டும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் காசா பகுதியில் இரண்டாவது பெரிய போராளிக் குழுவாகும். இது ஈரானால் ஆதரிக்கப்படுகிறது.

இது ஹமாஸைப் போன்ற இஸ்லாமிய சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் அரசின் அழிவிலும் அது உறுதியாக உள்ளது. இது பொதுவாக ஹமாஸை விட தீவிரமானதாகக் கருதப்படுகிறது.

கடந்த காலங்களில், ஹமாஸின் நடவடிக்கைகள் ஆளும் சக்தியாக பொறுப்புகளைக் கொண்டிருப்பதால், அதன் செயல்பாடுகள் தணிந்ததாகத் தோன்றியது.

இஸ்லாமிய ஜிஹாத் ஹமாஸிடமிருந்து வேறுபட்டு தனித்து இயங்குகிறது. ஆனால் பெரிய குழுவால் பொதுவாக தேவைப்படும்போது அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடிந்தது.

இஸ்லாமிய ஜிஹாத் அதன் சொந்த போராளிப் பிரிவு, அல் குத்ஸ் படை மற்றும் அதன் சொந்த ராக்கெட் ஆயுத கையிருப்பைக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் ஆரம்பத்திலேயே, இஸ்லாமிய ஜிஹாத் ஹமாஸ் நடவடிக்கையில் இணைவதாகக் கூறியது.

அமைதியாக இருக்க முடியாது - இரான்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி இந்த தாக்குதலுக்கு செவ்வாய்கிழமை கண்டனம் தெரிவித்திருந்தார். இதன் தீப்பிழம்புகள் வெகு விரைவில் இஸ்ரேலை விழுங்கும் என அவர் எச்சரித்தார். இரான் இந்த தாக்குதலுக்காக ஒரு நாள் துக்கம் அனுசரித்தது.

சமூக ஊடக x தளத்தில், ரைஸி, “காஸா மருத்துவமனையில் வீசப்பட்ட அமெரிக்க இஸ்ரேலிய குண்டின் தீப்பிழம்புகள் விரைவில் இஸ்ரேலை விழுங்கும். இந்த போர் குற்றங்களின் போது யாரும் அமைதியாக இருக்கக் கூடாது” என்று பதிவிட்டிருந்தார்.

அமெரிக்கா மீது ரஷ்யா சாடல்

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா சகாரோவா அமெரிக்க கொள்கைகளை தாக்கி பேசினார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய கிழக்கிலிருந்து வரும் தகவல்களை நான் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒபாமா (பராக் ஒபாமா) அடிக்கடி சொல்வதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் –‘அமெரிக்க கொள்கைகளுக்கு மிக்க நன்றி, இந்த உலகம் மேலும் பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது. எனினும், இப்போது ‘எவ்வளவு’ பாதுகாப்பு என பார்க்கிறோம்’” என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சௌதி அரேபியா என்ன சொல்கிறது?

அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீதான தாக்குதலை அருவருப்பானது என சௌதி அரேபியா குறிப்பிட்டுள்ளது.

இது காட்டுமிராண்டித்தனமான செயல் என்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிகளின் அப்பட்டமான மீறல் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"தொடர் சர்வதேச கோரிக்கைகளுக்கு பிறகும், மக்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தவில்லை என இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது. இரட்டை நிலைப்பாட்டை கைவிட்டு சர்வதேச மனித உரிமை சட்டங்களை அனைவருக்கும் சமமாக பொருத்தி பார்க்க இந்த சம்பவம், சர்வதேச சமூகத்தை நிர்பந்திக்கிறது.

இஸ்ரேல் செய்யும் குற்றங்கள் என வரும் போது இரட்டை நிலைபாடு எடுக்கப்படுகிறது, ஆனால் சர்வதேச சமூகம் ஆயுதமற்ற பொதுமக்களை காப்பாற்ற தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பாலத்தீனத்தை விட்டு வெளியேற விரும்பும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், பாதுகாப்பான பாதை வழங்க வேண்டும் என்றும் உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவை காஸாவில் சிக்கியுள்ள மக்களுக்கு சென்றடைவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்று சௌதி அரேபிய அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.

சர்வதேச சட்டஙகளை மீண்டும் மீண்டும் மீறி வருவதற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை பொறுப்பாக்க வேண்டும் என்றும் சௌதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் என்ன சொல்கிறது?

மருத்துவமனை தாக்குதலை கண்டித்து, விரைவில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் அடிப்படை சேவைகளும் தாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய சட்டத்தின் கீழ், குடிமக்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைகளின் கீழ், குடிமக்களின் உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் மற்றும் அவர்கள் மோதலில் குறிவைக்கப்படாததை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகத்துக்கு உடனடி போர் நிறுத்தத்துக்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது, இது நடக்கவில்லை என்றால், முழு பிராந்தியத்திலும் பதற்றம், வன்முறை மற்றும் நிலையற்ற தன்மை அதிகரிக்கும் அபாயம் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cmlrxprzvewo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Gazaவில் அடுத்த பயங்கரம்: இதைச் செய்தது யார்? மாறிமாறி குற்றம்சாட்டும் Israel & Hamas

 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2023 at 07:17, Maruthankerny said:

உண்மை தகவல்களுக்கு மிக்க நன்றி! 

நன்றி நன்றி நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of text

 

May be an illustration

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸா மருத்துவமனை குண்டு வெடிப்பு - காணொளிகள், படங்கள் கூறுவது என்ன?

காஸா
கட்டுரை தகவல்
  • எழுதியவர், பால் பரவுன், ஜோஷ்வா சீதம், சியான் செட்டான், டேனியல் பாலும்போ
  • பதவி, பிபிசி வெரிஃபை
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

காசா நகரில் அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் அல்-அஹ்லி மருத்துவமனையில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனிய அதிகாரிகள், இந்த வான்வழித் தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாகக் கூறி உடனடியாக இஸ்ரேலைக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இஸ்ரேல் தாம் அதில் ஈடுபடவில்லை என மறுத்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கும் மறுப்புக்கும் இடையில், உண்மையைக் கண்டறிதல் மென்மேலும் கடினமாகியுள்ளது.

பிபிசி வெரிஃபை மூலமாக வீடியோ காட்சிகள், ஒளிப்படங்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் தகவல்கள் உள்ளிட்ட ஆதாரங்களைக் கொண்டு அறியப்படாத செய்திகளை அறிந்துகொள்ள முயன்று வருகிறோம். மேலும், செல்வதற்கு வாய்ப்பு குறைவான, குண்டுவெடிப்பு நடந்த அந்த இடத்துக்கு பிபிசி செய்தியாளர் நேரிலும் சென்றுள்ளார்.

அவ்வப்போது புதிய தகவல்கள் வெளிவருகின்றன, எனவே கிடைக்கும் புதிய தகவல்கள், ஆதாரங்களைப் பற்றிய நிபுணர்களின் தகவல்களைக் கொண்டு இந்தக் கட்டுரையை அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.

மேலும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விசயம், நேரடியாக நடக்கும் மோதல்களைப் போலவே தகவல்களின் தளத்திலும் இந்த விசயத்தில் மோதல்கள் நடந்து வருகிறது என்பதாகும். இஸ்ரேலிலும், காசாவிலும் உள்ள அதிகாரிகள் குண்டுவெடிப்பைக் குறித்து மாறுபட்ட தகவல்களை வழங்குவது இது முதல் முறை அல்ல. அவர்களுடைய பல்வேறு அறிக்கைகளையும் கூற்றுகளையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.

 

குண்டுவெடிப்பு

செவ்வாய்க்கிழமை, காசாவின் உள்ளூர் நேரப்படி 19:00 மணியளவில் (16:00 GMT) மருத்துவமனை வெடிப்பு ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் பரவிய குண்டுவெடிப்பைக் காட்டும் 20 வினாடி வீடியோவே, சம்பவத்தின் குறிப்பிடத்தக்க முதல் காட்சி ஆதாரமாகும்.

அதில், ஏவுகணைகளின் விசில் சத்தத்தையும், அதைத் தொடர்ந்து வெடிப்பு மற்றும் பெரிய நெருப்பு பிழம்பையும் காண முடியும்.

உள்ளூர் நேரப்படி 18:59 மணிக்கு ஒளிபரப்பான அல்-ஜசீரா தொலைக்காட்சியின் இணையவழி நேரடிக் காட்சிகளில் காஸாவிற்கு மேலே வானத்தில் ஒரு பிரகாசமான ஒளி எழுவதைக் காண முடிந்தது. இரண்டுமுறை ஒளிக்கீற்று கிளம்பியது, கடும் திசைமாற்றத்திற்கு பின், வெடிச்சத்தம் கேட்டது.

 
Play video, "காஸாவில் மருத்துவமனை ராக்கெட்டால் தாக்கம் - நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு", கால அளவு 3,02
03:02p0gm9g44.jpg
காணொளிக் குறிப்பு,

ராக்கெட் தாக்குதலுக்கு காஸாவில் மருத்துவமனை ஒன்று இலக்காகியுள்ளது.

 

பின்னர், தரையில் தொலைவில் ஒரு வெடிப்பு ஏற்படுவதை காண முடிகிறது. அதைத் தொடர்ந்து கேமரா ஆபரேட்டருக்கு அருகில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்படுகிறது. இது பிபிசி ஜியோலொக்கேட் செய்து கண்டறிந்துள்ளது.

இவை வெகு தொலைவில் நடைபெற்ற ஏவுகணை வெடிப்பில் இருந்து வந்திருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.

சமூக ஊடக சேனல்களில் வெளிவந்த மற்ற காட்சிகளும் வெவ்வேறு கோணங்களில், வேறுபட்ட தொலைவில் இருந்து ஒரே குண்டுவெடிப்பினை காட்டுவதாக அமைந்தன.

ஆயுதங்களைப் பற்றிய நிபுணத்துவம் கொண்ட 20 அறிஞர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்களை நாம் இது பற்றி அறிந்துகொள்ள தொடர்புகொண்டோம். அவர்களில் ஒன்பது பேர் இன்னும் பதிலளிக்கவில்லை, ஐந்து பேர் கருத்து கூற விரும்பவில்லை. எனவே மீதமுள்ள ஆறு நிபுணர்களிடம் பேசினோம்.

கிடைத்துள்ள ஆதாரங்கள் - வெடிப்பின் அளவு மற்றும் முன்பே கேட்ட ஒலிகள் உள்ளிட்டவைகளை வைத்து – மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய முடியுமா என்று நாங்கள் கேட்டோம்.

இதுவரை, இந்த விபரங்களை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. நாங்கள் பேசிய மூன்று வல்லுநர்கள், ஒரு பெரிய வெடிமருந்து கொண்ட வழக்கமான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து உருவாகும் விளைவுகளோடு இது ஒத்துப்போகவில்லை என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான ஜே ஆண்ட்ரெஸ் கேனன் கூறுகையில், தரையில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் சிறியதாகத் தென்படுகின்றன. அதாவது இந்த வெடிப்பின் தாக்கத்திலிருந்து உருவாகிய வெப்பம் ஒரு ஏவுகணையிலிருந்து இருந்து ஏவப்பட்டதை விடவும், எஞ்சிய ராக்கெட் எரிபொருளால் ஏற்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது என்கிறார்.

காஸா மருத்துவமனை குண்டு வெடிப்பு- வீடியோக்கள், ஆதாரங்கள்  என்ன கூறுகின்றன?
 

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஜஸ்டின் பிராங்க் இதை ஒப்புக்கொள்கிறார். ஆரம்பக் கட்ட ஆதாரங்களை கொண்டு சொல்வது கடினம் என்றாலும், ஒரு தோல்வியுற்ற ராக்கெட்டின் பகுதி, கார் நிறுத்தத்தில் மோதியதால் ஏற்பட்ட தாக்கத்தில் எரிபொருள் மற்றும் உந்துவிசை உருவாக்கிய நெருப்பில் இருந்து இந்த வெடிப்பு ஏற்பட்டது போல் தெரிகிறது என்று அவர் கூறுகிறார்.

அவருக்கு பார்க்கக் கிடைத்த காட்சிகளில் இருந்து ஏவுகணைகள் அதன் இலக்கினை தாக்கியதா என்பதைத் தீர்மானிக்க முடியாது என்று கேனன் கூறுகிறார். வானத்தில் ஏற்படும் ஒளித் தெறிப்புகள் எஞ்சின் அதிக வெப்பமடைந்து வேலை செய்வதை நிறுத்திய ராக்கெட்டைக் குறிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

இடர்களைப் பற்றிய மதிப்பீட்டு நிறுவனமான சிபிலைனின் மத்திய கிழக்கு ஆய்வாளரான வலேரியா ஸ்குடோ, ட்ரோன்களை பயன்படுத்தி வான்வழித் தாக்குதலை நடத்தும் திறன் இஸ்ரேலுக்கு உள்ளது என்று குறிப்பிடுகிறார், அதன் வழியாக அவர்கள் ஹெல்ஃபயர் ஏவுகணைகளைப் பயன்படுத்தலாம். இந்த ஏவுகணைகள் கணிசமான அளவு வெப்பத்தை உருவாக்குகின்றன, ஆனால் பெரிய பள்ளத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது என்கிறார். இருப்பினும் உறுதிப்படுத்தப்படாத இந்த வீடியோ காட்சிகளில் மருத்துவமனை தளத்தில் தீப்பிடித்த விதம், இந்த விளக்கத்துடன் ஒத்துப்போவதாக இல்லை என்கிறார் அவர்.

குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து காட்சி ஆதாரம்

காஸா மருத்துவமனை குண்டு வெடிப்பு- வீடியோக்கள், ஆதாரங்கள்  என்ன கூறுகின்றன?
 

கட்டடம் குறித்த தகவல்களை, அல்-அஹ்லி மருத்துவமனை தளத்தின் அமைப்பையும் பொதுவில் கிடைக்கும் செயற்கைக்கோள் படங்களுடன் பொருத்தி, குண்டுவெடிப்பு நடந்த இடம் மருத்துவமனை தான் என நிறுவ பி.பி.சியால் முடிந்தது.

கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியான முற்றத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிகிறது. குண்டுவெடிப்புக்குப் பிறகு நிலத்தின் படங்கள் சுற்றியுள்ள மருத்துவமனை கட்டிடங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாக காண்பிக்கவில்லை. எரிந்த புள்ளிகள் மற்றும் எரிந்த கார்கள் ஆகியவற்றை படங்கள் காட்டுகின்றன.

இந்த மருத்துவமனை ஆங்கிலிக்கன் தேவாலயத்திற்கு சொந்தமானது, அவர்களால் நடத்தப்படுவது ஆகும்.

ஜெருசலேமில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கல்லூரியைச் சேர்ந்த டீன் கேனான் ரிச்சர்ட் செவெல் கூறும்போது தாக்குதல் நடந்த சமயத்தில் இடம்பெயர்ந்து வந்திருந்த சுமார் 1,000 மக்கள் முற்றத்தில் தஞ்சம் அடைந்ததாகவும், சுமார் 600 நோயாளிகளும் ஊழியர்களும் கட்டிடத்திற்குள் இருந்ததாகவும் கூறினார்.

காஸா மருத்துவமனை குண்டு வெடிப்பு- வீடியோக்கள், ஆதாரங்கள்  என்ன கூறுகின்றன?
 

பாதிக்கப்பட்டவர்கள்

அல்-அஹ்லி மருத்துவமனைக்கு பிபிசி நிருபர் ருஷ்டி அபுலூஃப் சென்றுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அங்கு பேரழிவு ஏற்பட்டதாகவும், இறந்தவர்களின் உடல்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றார்.

வெடிப்பு நடந்தபோது, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மருத்துவமனையில் இருந்ததாக ஒருவர் செய்தியாளரிடம் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களின் காயங்களின் தன்மையிலிருந்து குண்டுவெடிப்பு பற்றி எண்ண கண்டறிய முடியும் என்பதற்காக இன்னும் படங்களையும் காட்சிகளையும் பகுப்பாய்வு செய்து வருகிறோம்.

வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் மோசமான படங்களை பிபிசி பார்த்தது, அவை மிக மோசமான காயங்களைக் காட்டுகின்றன.

இங்கிலாந்தின் மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பின் நிறுவனர் உறுப்பினரும், மோதல் காயங்கள் துறை மருத்துவ நிபுணருமான நிபுணர் டெரிக் பவுண்டர் சில படங்களைப் பார்த்தார்.

"சிதறல் காயங்கள் வெடிப்பின் விளைவாக வீசப்பட்ட துண்டின் தாக்கத்தில் உருவாகியிருக்கலாம்" என்று அவர் கூறினார்.

ஆனால் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ள படங்களில் காயங்கள் அனைத்தையும் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்த குண்டுவெடிப்பில் 471 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) இந்த எண்ணிக்கை வேண்டுமென்றே கூடுதலாக சொல்லப்படுவதாக தெரிவிக்கிறது. எத்தனை பேர் இறந்தார்கள் என்பது பற்றிய அதன் சொந்த மதிப்பீட்டை வெளியிடவில்லை. சுயாதீன அமைப்புகள் எவையும் இந்த தளத்தினை அணுக முடியாததால், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை சரிபார்க்க கடினமாக உள்ளது.

காஸா மருத்துவமனை குண்டு வெடிப்பு- வீடியோக்கள், ஆதாரங்கள்  என்ன கூறுகின்றன?
 

நமக்கு இன்னும் தெரியாதது என்ன?

வெடிப்பால் உருவாகிய பள்ளத்தின் தன்மை மிக முக்கியமான சான்றுகளில் ஒன்று ஆகும்.

ஒரு பெரிய பள்ளம் இல்லாததும், அடுத்தடுத்த கட்டிடங்களில் வெடிப்பும், சேதமும் உருவாக்காததும் தங்களுடைய ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை என நிரூபிப்பதாக IDF கூறுகிறது.

மேலே உள்ள படத்தில், நீங்கள் ஒரு சிறிய பள்ளத்தைக் காணலாம், மற்ற அடையாளங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

கிடைக்காத ஆதாரங்களின் மற்றொரு முக்கிய பகுதி ஏவுகணை துண்டுகள் ஆகும். ஏவுகணைகள் பெரும்பாலும் அவற்றின் வெளிப்புற பகுதியின் மிச்சங்களால் அடையாளம் காணப்படுகின்றன, மேலும் அவை ஏவுகணைகளின் உருவாக்கம் பற்றி அறிய பயன்படும். ஆனால் இந்த தாக்குதலில் மேற்சொன்ன ஆதாரத்தை நாங்கள் காணவில்லை.

பாலத்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) என்ற அமைப்பு தாங்கள் ஏவிய ஏவுகணைகளால் மருத்துவமனை தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டிருப்பதாக இரண்டு ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நடந்த உரையாடல் என்று கூறி IDF ஒரு உரையாடலை வெளியிட்டுள்ளது. PIJ என்ற அமைப்பு காஸாவில் இரண்டாவது பெரிய போராளிக் குழுவாகும், அந்த அமைப்பு இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலை ஆதரித்தது.

இந்த பதிவையும் சுயாதீனமாக சரிபார்க்க முடியாத நிலை உள்ளது. PIJ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தமக்கு இந்த வெடிப்பில் தொடர்பும் இல்லை என்று மறுத்ததுடன், குண்டுவெடிப்புக்கு இஸ்ரேலை குற்றம் சாட்டியுள்ளது.

கூடுதல் தகவல்கள்: விஷுவல் ஜர்னலிசம் குழு, டாம் ஸ்பென்சர், ஷயன் சர்தாரிசாதே, எம்மா பெங்கல்லி மற்றும் ஜேமி ரியான்

https://www.bbc.com/tamil/articles/c2vdjn756e8o

பலர் அவசரப்பட்டு அறிக்கை விட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

வீடியோக்கள் படங்கள் அனைத்தும் இது மிகைப்படுத்தப்பட்ட நிகழ்வாகவே காண்பிக்கின்றன. இதுதான் குண்டுவெடிப்பு நடைபெற்ற இடமாம். 30 மீற்றர் விட்டமுள்ள வாகனத் தரிப்பிடத்தில் எவ்வாறு ஆயிரம் பேர் நிற்க முடியும் ?

gz-ex2.jpg

இதன் தரை வெறும் மண்ணின்மேல் செங்கல் அடுக்கப்படதாகும். வெடித்த இடத்திலிருந்து சில கற்கள் மாத்திரமே தூக்கி எறியப்பட்டு சிறு குழி ஒன்று ஏற்பட்டுள்ளது. ஏவுகளையோ வானிலிருந்து வீசப்பட்ட குண்டோ அது விழுந்த இடத்தில் பாரிய சேதத்தை உண்டாக்கும். அருகிலுள்ள வாகனங்கள் தீயினாலேயே சேதமாயுள்ளன. எரியாத வாகனங்களின் கண்ணாடிகள் கூட முற்றாக உடையவில்லை. அருகிலுள்ள கட்டடத்தின் பணிவான கூரை ஓடுகள் அப்படியே உள்ளன. தகரக் கொட்டகை சேதமடையவில்ல...

 

gz-ex.jpg

பலஸ்தீனியர்களின் எறிகணை தவறுதலாக இங்கு விழுந்து வெடித்துள்ளது என்பதே பொருத்தமானது. 

இதை வைத்து பலஸ்தீன் நல்லதொரு பரப்புரை போரில் வென்றுள்ளது. இதற்காக இஸ்ரேலியர்கள் அச்சாப்பிள்ளை என்று அர்த்தமல்ல.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயத்தின் மீது தாக்குதல் - பலர் பலி

Published By: RAJEEBAN   20 OCT, 2023 | 03:59 PM

image

காசாவின்  போர்பிரையஸ் தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பெருமளவானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் பலர் தங்கியிருந்த தேவாலய வளாகத்தை இலக்குவைத்து இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

கிரேக்க ஓர்த்தடக்ஸ் போர்பிரையஸ் தேவாலயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர் காயமடைந்துள்ளனர் என காசாவின் மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

12ம் நூற்றாண்டை சேர்ந்த தேவாலயத்திற்கு அருகில் காசாவின் பல முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தஞ்சமடைந்திருந்த பகுதியை இலக்குவைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதலை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட தளத்தை தங்கள் விமானங்கள் தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலால் தேவாலயத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது சேதங்கள் குறித்து அறிந்துள்ளோம் நாங்கள் இது குறித்து ஆராய்ந்துவருகின்றோம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தேவாலயத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளது இதனால் அதற்கு அருகில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/167382

  • கருத்துக்கள உறவுகள்+

அமெரிக்க முதல் கட்ட தகவலறிகிகை 100-300 பேருக்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் தான் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறது.

வேறு சில அறிக்கைகளோ 100க்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவமனை தாக்கப்பட்டது என்பது பொய்செய்தி என்றும் கூறுகிறது.

காசாவுக்குள் இருந்து வரும் செய்திகளை நான் நம்புவதில்லை...'Cuz they always play the victim card!!

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நன்னிச் சோழன் said:

அமெரிக்க முதல் கட்ட தகவலறிகிகை 100-300 பேருக்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் தான் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறது.

வேறு சில அறிக்கைகளோ 100க்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவமனை தாக்கப்பட்டது என்பது பொய்செய்தி என்றும் கூறுகிறது.

காசாவுக்குள் இருந்து வரும் செய்திகளை நான் நம்புவதில்லை...'Cuz they always play the victim card!!

ரைம்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்களின் செய்தியாளர்கள் நூற்றுக் கணக்கான உடல்களின் பாகங்களைக் கண்டிருக்கிறார்கள். மேலே, நான் தந்த இணைப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள் அல்லவா?

எனவே, எண்ணிக்கை தெரியாது, யார் ஏவியது என்பதும் தெரியாது, ஆனால் வெடிப்பு நிகழ்ந்தே இருக்கிறது. மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நீங்கள் அளவுக்கதிகமாக இஸ்ரேல் சார்புப் பிரச்சார சனல்களில் நம்பிக்கை வைக்கிறீர்களென நினைக்கிறேன்.

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்+
10 minutes ago, Justin said:

ரைம்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்களின் செய்தியாளர்கள் நூற்றுக் கணக்கான உடல்களின் பாகங்களைக் கண்டிருக்கிறார்கள். மேலே, நான் தந்த இணைப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள் அல்லவா?

எனவே, எண்ணிக்கை தெரியாது, யார் ஏவியது என்பதும் தெரியாது, ஆனால் வெடிப்பு நிகழ்ந்தே இருக்கிறது. மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நீங்கள் அளவுக்கதிகமாக இஸ்ரேல் சார்புப் பிரச்சார சனல்களில் நம்பிக்கை வைக்கிறீர்களென நினைக்கிறேன்.

 அமெரிக்க புலனாய்வுத்துறையின் தகவல்களையே கூறினேன்... 

நீங்கள் கூறிய அதே நூற்றுக் கணக்கைத்தான் நானும் கூறியிருக்கிறேன். என்ன கூடுதலாக இன்னொன்றையும் கூறியுள்ளேன்.

பரப்புரையால் மண்டைகழுவப் படுபனல்ல நான், ஐயனே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.