Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

யாழ் களத்தில் இடைப்பட்ட காலத்தில்  பச்சைப் புள்ளி மற்றும் சிவப்பு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பின்னைய காலங்களில் புள்ளி வழங்கும் முறைமைகள் தவறான முறையில் பாவிக்கப்பட்டமையினால் பல அறிவுறுத்தல்களின் பின்னர் சிவப்பு புள்ளி வழற்கும் முறை முற்றாக நிறுத்தப்பட்டது.

பின்னைய காலங்களில் பச்சைப்புள்ளி வழங்கும் முறையிலும் சிலரால் விடயத்திற்கு புள்ளிகள் வழங்கப்படாது எழுதியவருக்கு என்று / இணைத்தவருக்கே புள்ளி வழங்கப்பட்டதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்தும் புரிந்தும் கொண்டமையால் புள்ளிகள் வழங்கியவர் விபரங்களை மறைக்க வேண்டிய நிலைமைக்கு வந்திருந்தோம்.

தற்போது மீண்டும் பழைய நிலைக்கு பச்சைப் புள்ளிகள் வழங்கியவர்களை பார்வையிடும் வசதியையும் சிவப்பு புள்ளி வழங்கும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளோம். அதேவேளை புள்ளிகள் வழங்குபவர்கள் சரியான முறையில் வழங்குகின்றார்களா என்பதையும் கண்காணிப்போம். தவறாகப் பயன்படுத்துவதும் குழுக்களாக இணைந்து புள்ளிகள் வழற்குவதும் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட உறுப்பினர்கள் சில காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவே புள்ளி வழங்கும் முறையில் தடை வழங்கப்படும்.

கால மாற்றத்திற்கேற்ப இடை நிறுத்தப்பட்ட இந்த புள்ளி வழங்கும் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மோகன் said:

தற்போது மீண்டும் பழைய நிலைக்கு பச்சைப் புள்ளிகள் வழங்கியவர்களை பார்வையிடும் வசதியையும் சிவப்பு புள்ளி வழங்கும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.

எப்போது இருந்து நடைமுறைப்படுத்தப்படும்?

சிவப்புப் புள்ளியை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கமுடியும் என்று நம்பவில்லை! இது ஒருவரின் reputation score ஐ குறைக்க வழிவகுக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எப்போது இருந்து நடைமுறைப்படுத்தப்படும்?

சிவப்புப் புள்ளியை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கமுடியும் என்று நம்பவில்லை! இது ஒருவரின் reputation score ஐ குறைக்க வழிவகுக்கும்!

மதிப்பு புள்ளிகளை வைத்து என்ன செய்யமுடியும்? 

இங்கே பல ஆயிரம் மதிப்பு புள்ளிகள் பெற்றவர்கள் கருத்துக்கள உறவு நிலையை இழந்து கருத்துக்கள உறுப்பினர் நிலைக்கு தரம் குறைக்கப்பட்டு உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை சிவப்பு இன்னும் வரவில்லையே?!
பழைய 5 வகையான விருப்புக்குறிகளே காட்டுகிறது.

  • தொடங்கியவர்

புள்ளிகள் வழங்கியவர்களைப் பார்க்க முடிவதோடு சிவப்பு புள்ளிகள் வழங்கவும் முடியும். சிவப்பு புள்ளிகள் வழங்கப்பட்ட பச்சைப் புள்ளிகளில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்த மாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

எப்போது இருந்து நடைமுறைப்படுத்தப்படும்?

சிவப்புப் புள்ளியை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கமுடியும் என்று நம்பவில்லை! இது ஒருவரின் reputation score ஐ குறைக்க வழிவகுக்கும்!

உங்களுக்கு ஒரு இரத்த திலகம் இட்டு உள்ளேன். சிவப்பு புள்ளி வேலை செய்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

உங்களுக்கு ஒரு இரத்த திலகம் இட்டு உள்ளேன். சிவப்பு புள்ளி வேலை செய்கின்றது. 

இதைத்தான் துஷ்பிரயோகம் என்றேன். கறள்,  வன்மங்களை வைத்து சிவப்புப் புள்ளி போடுவது இப்போது இலகுவாகிவிடும். இதனால்தான் முகநூலில் சிவப்புப் புள்ளி இல்லை!

முகநூலில் dislike இல்லாததன் காரணம் இப்படி உள்ளது.

நம் நிஜ வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பரந்த அளவிலான விஷயங்களுக்கு நாம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம் என்பதை இருமையான ‘பிடித்த’ மற்றும் ‘பிடிக்காதது’ சரியாகப் பிரதிபலிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதன் பின்னால் உள்ள உளவியல் காலப்போக்கில் எல்லோருக்கும் பரீட்சயம் ஆகலாம்.

பல்வேறு ஊடகங்களின் செய்திகளின் தொடர்பிலான பின்னூட்டல் பகுதியில் தம்ப்ஸ் அப்புடன் டவுணும் உள்ளது. நான் நினைக்கின்றேன் கருத்துக்களத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்களும் வெளியில் நின்று யார் பச்சை, சிகப்பு புள்ளிகள் இடுகின்றார்கள் என்பதை பார்க்கக்கூடியதாக அமைந்தால் நல்லது என்று. 

கருத்துக்களத்தின் விதிமுறைகளுக்கு முரணான கருத்துக்களை முறைப்பாடு செய்ய வழி உள்ளது. இப்போது அப்படியான கருத்துக்களுக்கு சிவப்பு புள்ளி போடலாம். 

விவாதம் சூடாகும்போது சிவப்பு புள்ளிகள் ஆத்திரத்தில் இடப்படலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா தங்களை இங்கு காண்பது மிக்க மகிழ்ச்சி. தாங்களும் தங்கள் குடும்பமும் நலமே என்று நம்புகிறோம்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, nedukkalapoovan said:

மோகன் அண்ணா தங்களை இங்கு காண்பது மிக்க மகிழ்ச்சி. தாங்களும் தங்கள் குடும்பமும் நலமே என்று நம்புகிறோம்.  

யான் வேண்டுவதும் அதுவே.❤️

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிகள் இடுவதை மறைத்ததை நான் வரவேற்றேன்.

அண்மைகாலமாக யாழ்களத்தில் குழுவாதம் மிகவும் குறைந்து காணப்பட்டமைக்கு இது ஒரு முக்கிய காரணி என நான் கருதுகிறேன்.

இப்போ இந்த மாற்றம் ஏன் என்பது விளங்கவில்லை.

பச்சை புள்ளியை பார்க்கும் படி செய்து விட்டு, பின் அதை கண்காணிப்பது, சிலருக்கு மட்டும் புள்ளி இடும் வசதியை நீக்குவது என்பது நிர்வாகம் ஒரு தலைபட்சமாக நடக்கிறது என்ற அதிருப்தியை தரும்.

நிர்வாக சுமையும் கூடும்.

இதனால் நிச்சயம் குழுவாதம் மீண்டும் தலை தூக்கும் என நான் திண்ணமாக நம்புகிறேன்.

உடையாத ஒன்றை திருத்தாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

அண்மைகாலமாக யாழ்களத்தில் குழுவாதம் மிகவும் குறைந்து காணப்பட்டமைக்கு இது ஒரு முக்கிய காரணி என நான் கருதுகிறேன்.

குழுவாதம் அப்படியே தான் இருக்குது.. என்பதற்கு பச்சை புள்ளிப் பட்டியல் சாட்சி. என்ன இப்ப குழு மாறி குழு பச்சை போட்டு மகிழுது.

மொத்தத்தில்.. இந்தப் பச்சை சிவப்பை முற்றாக அகற்றி விடுவது நல்லது. தம் அப்.. தம் டவுன் மட்டும் விடலாம். கணக்கு.. பட்டியல் இவற்றையும் இல்லாமல் செய்தால்.. குழு வாதத்திற்கு.. குழு பச்சை குத்தலுக்கு இன்னும் தேவையே இல்லாமல் போகும். முதுகு சொறிவதும் இல்லாமல் போகும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

உங்கள கருத்து பிடித்திருப்பதால் ஒரு பச்சை👍😀.

முற்றாக நீக்கி விடுங்கள் என்பதுதான் என் ஒரிஜினல் கோரிக்கை. செவி மடுக்கவில்லை.

ஆனால் கடந்த 12 மாதத்தில் யாழில் குழுவாதம் குறைந்து, ஒவ்வொருவரும் தனியாளாக எழுதுவதாக எனக்கு படுகிறது. பிரமையோ தெரியவில்லை🤣.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்து விரும்பப்பட்டுள்ளது என்பது போதும். யார் எனது கருத்துக்கு பச்சை உட்டுள்ளார்கள் என்பதை அறிந்து எனக்கு என்ன பிரயோசனம் என்று எனக்கு புரியவில்லை.  நிர்வாகத்தின் இந்த முடிவை நான் வரவேற்கவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

எனது கருத்து விரும்பப்பட்டுள்ளது என்பது போதும். யார் எனது கருத்துக்கு பச்சை உட்டுள்ளார்கள் என்பதை அறிந்து எனக்கு என்ன பிரயோசனம் என்று எனக்கு புரியவில்லை.  நிர்வாகத்தின் இந்த முடிவை நான் வரவேற்கவில்லை.  

எனக்கும் யார் குறி போடுகிறார்கள் என்று அறிந்து பயனில்லை. அதை விட, இந்த மாற்றம் இல்லாமலே யார் கருத்திற்கு யார் விருப்பக் குறி போட்டிருப்பர் என்று ஊகிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. சரியாக ஊகித்திருக்கிறேனா என்று பரிசோதிக்க, சில திரிகளை தற்போது சுற்றிப் பார்த்த போது, என் ஊகிப்பு கிட்டத் தட்ட 100 வீதம் துல்லியமாக இருக்கிறது😂!

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிகள் விடயத்தில் கிருபனது கருத்தே எனதும்...தேவையில்லாத விடயங்களில் இறங்குவது பிறகு குய்யோ ,மையோ என்று கத்துவதே வேலையாய் போயிட்டுது ... முற்றாக இந்த புள்ளி முறையினை நீக்குவது நல்லது அப்போது தான் எழுத பஞ்சி பட்டு கொண்டு இருப்பவர்களும் வந்து எழுதுவர். இல்லா விட்டால் ஒரு புள்ளியை போட்டுட்டு அமைதியாய் இருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2023 at 14:58, Justin said:

எனக்கும் யார் குறி போடுகிறார்கள் என்று அறிந்து பயனில்லை. அதை விட, இந்த மாற்றம் இல்லாமலே யார் கருத்திற்கு யார் விருப்பக் குறி போட்டிருப்பர் என்று ஊகிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. சரியாக ஊகித்திருக்கிறேனா என்று பரிசோதிக்க, சில திரிகளை தற்போது சுற்றிப் பார்த்த போது, என் ஊகிப்பு கிட்டத் தட்ட 100 வீதம் துல்லியமாக இருக்கிறது😂!

உங்களுக்கு தெரியும் தான “கோர்த்து விடுவதில் கோசான் வல்லவர்” என்பது யாழ்கள மூதோர் வாக்கு🤣.

யார் பச்சை குத்தியது என தெரியாது என்பதை பயன்படுத்தி, சும்மா கருமாந்திர கருத்துக்கு எல்லாம் பச்சை குத்தி, அதை எழுதியோரை பப்பாவில் ஏற்றி விட்டால் என்ன? என்ற ஒரு குறுக்கு புத்தி மனதில் ஓடியது🤣.

ரொம்ப டெம்டிங்கா இருந்தும் செய்யவில்லை.

நல்லவேளை செய்யவில்லை. இப்ப செக் பண்ணி பார்த்துட்டு முழு களமும் என் மேல் கொலை வெறியாகி இருக்கும்🤣.

மோரல் ஒவ் த ஸ்டோரி

யாழ் நிர்வாகத்தை நம்பி எதுவும் செய்யப்படாது🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2023 at 23:26, கிருபன் said:

இதைத்தான் துஷ்பிரயோகம் என்றேன். கறள்,  வன்மங்களை வைத்து சிவப்புப் புள்ளி போடுவது இப்போது இலகுவாகிவிடும். இதனால்தான் முகநூலில் சிவப்புப் புள்ளி இல்லை!

முகநூலில் dislike இல்லாததன் காரணம் இப்படி உள்ளது.

நம் நிஜ வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பரந்த அளவிலான விஷயங்களுக்கு நாம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம் என்பதை இருமையான ‘பிடித்த’ மற்றும் ‘பிடிக்காதது’ சரியாகப் பிரதிபலிக்கவில்லை.

1 hour ago, ரதி said:

புள்ளிகள் விடயத்தில் கிருபனது கருத்தே எனதும்...தேவையில்லாத விடயங்களில் இறங்குவது பிறகு குய்யோ ,மையோ என்று கத்துவதே வேலையாய் போயிட்டுது ... முற்றாக இந்த புள்ளி முறையினை நீக்குவது நல்லது அப்போது தான் எழுத பஞ்சி பட்டு கொண்டு இருப்பவர்களும் வந்து எழுதுவர். இல்லா விட்டால் ஒரு புள்ளியை போட்டுட்டு அமைதியாய் இருப்பர்.

இந்தப்பட்டியலில் நானும் இணைந்துகொள்கின்றேன்

பாப்பம் ராசம்மா எப்ப வாரா எண்டு😂

  • கருத்துக்கள உறவுகள்+

நான் இந்த சிவப்புப் புள்ளியை மெய்யுண்மை சாராக (Factually) தவறான கருத்திற்கு மட்டுமே பாவிப்பேன் என்று பறைகிறேன். அப்படித்தான் ஒரே ஒரு தடவை பாவித்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வாத்தியார் said:

இந்தப்பட்டியலில் நானும் இணைந்துகொள்கின்றேன்

பாப்பம் ராசம்மா எப்ப வாரா எண்டு😂

இப்பிடிச் சொல்லி விட்டீர்கள், இனி ராசம்மா வர மாட்டா😂!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசயத்தில சுவியண்னை போல யாரோடும் மல்லுக்கு போகாத ஜீவன் கள்தான் பாவம்... நிறைய இடத்தை பச்சை போட்டு சுவி அண்னை நல்லா மாட்டிகிட்டாரு...(மாட்டிவிடுவம்.. எல்லாரும் தேடிப்பாத்து கும்மட்டும்... மவனே கருத்து எழுதாமல் எஸ்கேப் ஆகவா பாக்கிறியள்..🤣 நாங்க மட்டும் கருதுது எழுது எல்லாரிட்டையும் அடிவாங்கனும்..) 🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த விசயத்தில சுவியண்னை போல யாரோடும் மல்லுக்கு போகாத ஜீவன் கள்தான் பாவம்... நிறைய இடத்தை பச்சை போட்டு சுவி அண்னை நல்லா மாட்டிகிட்டாரு...(மாட்டிவிடுவம்.. எல்லாரும் தேடிப்பாத்து கும்மட்டும்... மவனே கருத்து எழுதாமல் எஸ்கேப் ஆகவா பாக்கிறியள்..🤣 நாங்க மட்டும் கருதுது எழுது எல்லாரிட்டையும் அடிவாங்கனும்..) 🤣

இது ஒரு நல்ல கருத்து.......பொதுவாக முன்பு 5 புள்ளிகள் ஒரு நாளைக்கு கொடுத்திருந்தார்கள்.......பின் அதை 8 ஆக்கினார்கள் ....அவற்றின் ஆயுள் ஒருநாள் மட்டுமே......நானும் அவற்றை வீணாக்க விரும்புவதில்லை......அதனால் நானும் பெரும்பாலும் அரசியல் திரிகள் தவிர்ந்த ஏனைய என்னை ஈர்க்கும்  திரிகளில் அவற்றை போட்டு விடுவேன்....... (இப்பவும் உங்களின் இந்தக் கருத்தைப் பார்ப்பதற்கு முன் உங்களுடைய ஆண் பிள்ளைகளுக்கான கருத்தில் ஒரு புள்ளி இட்டிருக்கிறேன் ......உங்களின் அதிஷ்டம் அப்போது என்னிடம் புள்ளியும் இருந்திருக்கிறது) அவ்வளவுதான்.........!  😂

ஆனால் எல்லாவற்றையும் முழுமையாக  வாசித்தோ, பார்த்தோதான் நான் போடுவதுண்டு.......சும்மா எழுந்தமானத்துக்கு போடுவதில்லை......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நன்னிச் சோழன் said:

நான் இந்த சிவப்புப் புள்ளியை மெய்யுண்மை சாராக (Factually) தவறான கருத்திற்கு மட்டுமே பாவிப்பேன் என்று பறைகிறேன். அப்படித்தான் ஒரே ஒரு தடவை பாவித்திருக்கிறேன்.

நான் இதை என் மீது கறள் வைத்து சம்பந்தமே இல்லாமல் பகிடியாய் எழுதியதுக்கு கூட சிவப்பு புள்ளி இடும் ஆட்களுக்கு திருப்பி பாவிக்கலாம் என நினைக்கிறேன்🤣.

பிகு

இதுவும் பகிடிதான். அந்தளவு தரம் குறைவதில்லை.

நன்னி மேலே சொன்னது உங்களுக்கல்ல.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ஏற்கெனவே தெரிவிந்திருந்தார் சிவப்பு -1 அடையாளம் தவறாக பயன்படுத்தபடும் இப்போது அப்படி தான் ஹமாஸ் பிரசாரத்திற்காக துஷ்பிரயோகம் செய்யபடுகின்றது.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.