Jump to content

ஐ.நா.வில் காஸா போர் நிறுத்தம் கோரி தீர்மானம் - வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா. வாக்கெடுப்பு

பட மூலாதாரம்,UNITED NATION@TWITTER

24 நிமிடங்களுக்கு முன்னர்

காஸாவில் போர் நிறுத்தம் கோரி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும் எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியாவுடன் சேர்த்து 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஏஐஎம்.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் 3 வாரங்களை கடந்தும் நீடிக்கும் நிலையில், காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வரக் கோரி ஐ.நா. பொதுச் சபையில் ஜோர்டான் அmரசு தீர்மானம் ஒன்றை வெள்ளிக்கிழமை கொண்டுவந்தது.

பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிரான அனைத்து வன்முறைச் செயல்களையும் இந்த தீர்மானம் கண்டித்ததோடு பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்வதற்கு ஆதரவாக அமைந்திருந்தது.

 
ஐ.நா. வாக்கெடுப்பு

பட மூலாதாரம்,UNITED NATION@TWITTER

இதில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கத்தார், எகிப்து, இந்தோனீசியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், செளதி அரேபியா, குவைத், மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட 120 நாடுகள் வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா, ஆஸ்திரியா, ஹங்கேரி உள்ளிட்ட 14 நாடுகள் எதிராக வாக்களித்தன.

இந்தியா, இத்தாலி, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இராக், யுக்ரேன் உள்ளிட்ட 45 நாடுகள் இந்த வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை.

கனடா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா

ஆனால் மறுபுறம், 'ஹமாஸின் தீவிரவாத தாக்குதலைக்' கண்டிப்பதாக கூறி கனடாகொண்டு வந்த திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

எனினும், இந்த வரைவுத் தீர்மானம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால் ஐ.நா பொதுச் சபையில் தோல்வியடைந்தது.

இந்தியா புறக்கணித்தது ஏன்?

காஸாவுக்கு ஆதரவான வாக்கெடுப்பைப் புறக்கணித்தது குறித்து ஐ.நா பொதுச் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜனா படேல் விளக்கம் அளித்தார். அதில், "கடந்த அக்டோபர் 7 ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சி அளித்தன. அவை கண்டனத்துக்குரியவை. பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம். அவர்களை உடனடியாக நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்க வலியுறுத்துகிறோம்.

பயங்கரவாதம் வேகமாகப் பரவக் கூடியது. அதற்கு எல்லைகள் இல்லை. தேச பேதங்கள் இல்லை. இன வேறுபாடுகளும் இல்லை. ஆகையால் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உலகம் எந்தவித நியாயங்களையும் கற்பிக்கக் கூடாது. வேற்றுமைகளை விலக்கி வைப்போம். ஒன்றுபட்டு பயங்கரவாதத்துக்கு எதிரான முறைகளைக் கையாள்வோம்” என யோஜனா படேல் தெரிவித்துள்ளார். அவரது விளக்கத்தில் எந்த இடத்திலும் ஹமாஸின் பெயர் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

 
ஐ.நா. வாக்கெடுப்பு

பட மூலாதாரம்,PRIYANKA GANDHI VADRA@FACEBOOK

படக்குறிப்பு,

பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்

எதிர்க்கட்சிகள் கண்டனம்

இதனிடையே காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்திற்கு வாக்களிப்பதில் இருந்து நமது நாடு ஒதுங்யிருப்பது அதிர்ச்சியும் அவமானத்தையும் அளிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “நமது நிலைப்பாடு என்றும் அகிம்சை மற்றும் உண்மையின் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. மனித குலத்தின் ஒவ்வொரு சட்டமும் தூள் தூளாக்கப்படுவதையும், பல இலட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள், தகவல் தொடர்பு, மின்சாரம் போன்றவை துண்டிக்கப்படுவதையும், பாலத்தீனத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பது, ஒரு தேசமாக நம் நாடு தனது வாழ்நாள் முழுவதும் நின்ற கொள்கைகளுக்கு எதிரானது” என பிரியங்கா காந்தி எழுதியுள்ளார்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களித்தக் தவறியது அதிர்ச்சியளிக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணை நட்பு நாடாக இருந்து இந்திய வெளியுறவுக் கொள்கை எந்த அளவிற்கு வடிவமைக்கப்படுகிறது என்பதையும், அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா உறவை ஒருங்கிணைப்பதற்கான மோதி அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் காட்டுகிறது. பாலத்தீன பிரச்னைக்கான இந்தியாவின் நீண்டகால ஆதரவை இந்த முடிவு நிராகரிக்கிறது” என கூறியுள்ளது.

ஐ.நாவில் நரேந்திர மோதி அரசு போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்காதது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, இது மனிதாபிமான பிரச்னை, அரசியல் பிரச்னை அல்ல என கூறியுள்ளார்.

“காஸாவுக்கு உதவிகளை அனுப்பிவிட்ட பிறகு, தீர்மானத்தின் மீது வாக்களிக்காதது ஏன்? ஒரு உலகம் ஒரு குடும்பம் என்கிற தத்துவம் என்ன ஆனது” எனக் எக்ஸ் தளத்தில் ஓவைசி பதிவிட்டுள்ளார். “கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஜோர்டா மன்னருடன் பிரதமர் நரேந்திர மோதி பேசினார். இப்போது ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா பங்கெடுக்கவில்லை. இது முரண்பாடான வெளியுறவுக் கொளையை காட்டுகிறது” என ஓவைசி கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cd1d0jwjvwjo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஹமாஸின் தீவிரவாத தாக்குதலைக்' கண்டிப்பதாக கூறி கனடாகொண்டு வந்த திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களால் கொண்டுவரப்படட யுத்த நிறுத்த தீர்மானம் செல்லுபடியற்றது. ஏன் என்றால் இந்த தீர்மானம் ஹமாசை கட்டுப்படுத்தாது. அவர்கள் சடட திட்ட்ங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் யுத்த நிறுத்தத்தை மீறினாலும் சடடபடி ஒன்றும் செய்ய முடியாது. எனவே இதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் காந்தித் தாத்தா.. 🤣

14 minutes ago, Cruso said:

இவர்களால் கொண்டுவரப்படட யுத்த நிறுத்த தீர்மானம் செல்லுபடியற்றது. ஏன் என்றால் இந்த தீர்மானம் ஹமாசை கட்டுப்படுத்தாது. அவர்கள் சடட திட்ட்ங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் யுத்த நிறுத்தத்தை மீறினாலும் சடடபடி ஒன்றும் செய்ய முடியாது. எனவே இதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. 

அவங்களுக்கும் பொழுதுபோக்கு வேண்டாமா? 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Cruso said:

இவர்களால் கொண்டுவரப்படட யுத்த நிறுத்த தீர்மானம் செல்லுபடியற்றது. ஏன் என்றால் இந்த தீர்மானம் ஹமாசை கட்டுப்படுத்தாது. அவர்கள் சடட திட்ட்ங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் யுத்த நிறுத்தத்தை மீறினாலும் சடடபடி ஒன்றும் செய்ய முடியாது. எனவே இதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. 

ஆமாம் உண்மை   மற்றும் ஹமாஸ். இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது அங்கீகரிக்கவில்லை   இது இரு நாடுகள் என்ற கொள்கையை  ஹமாஸ். எற்க்கவில்லை என்பதவதுடன். தீர்வுக்கும். முட்டுக்கட்டையாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

இவர்களால் கொண்டுவரப்படட யுத்த நிறுத்த தீர்மானம் செல்லுபடியற்றது. ஏன் என்றால் இந்த தீர்மானம் ஹமாசை கட்டுப்படுத்தாது. அவர்கள் சடட திட்ட்ங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் யுத்த நிறுத்தத்தை மீறினாலும் சடடபடி ஒன்றும் செய்ய முடியாது. எனவே இதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. 

 

2 hours ago, Kandiah57 said:

ஆமாம் உண்மை   மற்றும் ஹமாஸ். இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது அங்கீகரிக்கவில்லை   இது இரு நாடுகள் என்ற கொள்கையை  ஹமாஸ். எற்க்கவில்லை என்பதவதுடன். தீர்வுக்கும். முட்டுக்கட்டையாகும். 

சரியான ஒரு சிக்கல் ..........
உங்கள் இருவருக்கும் புரிந்தது 
ஐ நா வில் இருக்கும் யாருக்கும் புரியாமல் வாக்கெடுப்பு நடாத்தி இருக்கிறார்கள் 

இஸ்திரேல் காசா மீது கடடவிழ்த்தது விட்டிருக்கும் கொலை களத்தை 
இந்த வாக்கெடுப்பின் அழுத்தத்தால் கைவிட்டால் ... பின்பு என்ன செய்வது என்றே புரியவில்லை. 

உங்கள் இருவரின் கருத்தையும் அவசரமாக இஸ்திரேலுக்கு தெரியப்படுத்த வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

 

சரியான ஒரு சிக்கல் ..........
உங்கள் இருவருக்கும் புரிந்தது 
ஐ நா வில் இருக்கும் யாருக்கும் புரியாமல் வாக்கெடுப்பு நடாத்தி இருக்கிறார்கள் 

இஸ்திரேல் காசா மீது கடடவிழ்த்தது விட்டிருக்கும் கொலை களத்தை 
இந்த வாக்கெடுப்பின் அழுத்தத்தால் கைவிட்டால் ... பின்பு என்ன செய்வது என்றே புரியவில்லை. 

உங்கள் இருவரின் கருத்தையும் அவசரமாக இஸ்திரேலுக்கு தெரியப்படுத்த வேண்டும் 

கொலையை நான் ஆதரிக்கவில்லை  இஸ்ரேல் கொல்லாவிடில்  ஹமாஸ். கொல்லும்    போர் நிறுத்தம் மட்டுமே போதாது  இஸ்ரேலிலை ஹமாஸ் உள்பட பாலஸ்தீனரும்   பாலஸ்தீனத்தை   இஸ்ரேலும். ஏற்றுக்கொள்ள வேண்டும் ஹமாஸ் ஏன் இஸ்ரேலினை அங்கீகரிக்கவில்லை ??  முழுமையாக இஸ்ரேல் பாலஸ்தீனருக்குரியதா. ??  இந்த போர்  நிறுத்தம் கோரும் நாடுகளால். ஹமாஸ்சை. இஸ்ரேலில் அங்கீகாரிக்கும்படியாக. ஏன் செய்ய முடியவில்லை?? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரை நிறுத்த வேண்டும் என்பவர்களும் போரத் தொடரவேண்டும் என்பவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறார்கள்.ஆனால் 2 பக்கதிலும் இல்லாமல் மதில்மேல் பூனையாக இருப்பவர்கள். சந்தர்பவாதிகள். இந்தியா இப்போதும் இப்படியான தீர்மானங்களை எடுப்பது புதிய விடயமல்ல.

இதற்கான தீர்வுகளை முனமொழிந்தால் யுத்தம் தானாகவே நிற்கும். இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளாத ஹமாசை முஸ்லிம் நாடுகள் தங்கள் உதவிகளை நிறுத்தி கட்டுப்படுத்த வேண்டும். இஜ்ரேல் பாலஜ்தீனம் என்ற இறைமையுள்ள இருநாடுகள் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் யுதுக்குடியேற்றங்கள் நிறுத்தப்பட்டு ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

இஜ்ரேல் பாலஜ்தீனம் என்ற இறைமையுள்ள இருநாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.

இதனை யார் செய்ய வேண்டும்? ஏனிந்த நீண்ட கால இழுத்தடிப்பு? ஒருவேளை இருதரப்புக்கும் வேறு திட்டங்கள் உள்ளனவா?
1.இதனை உலகமும் ஏதோ சகட்டுமேனிக்குச் சொல்கிறதேயன்றி நடைமுறையில் அப்படியவர்கள் நேர்மையோடு சிந்திக்கிறார்களா? ஏன் அதனை செய்ய இவளவுகாலம்? அல்லது பலஸ்தீனத்தை அழித்து ஒரு அகண்ட இஸ்ரவேலை உருவாக்கும் பெரும்பான்மைக் கிறிஸ்த்தவ நாடுகளின் மறைமுகத் திட்டத்தின் தொடர்ச்சியா இந்த அழிப்பு நடவடிக்கை? 
2. அல்லது சுற்றியிருக்கும் இசுலாமிய நாடுகளின் அகண்ட பலஸ்தீனத்துக்கான ஆதரவுடனான மறைமுகத்திட்டத்தறிகான பலியாக இந்த அழிவு நடவடிக்கை அனுமதித்துக் காத்திருக்கிறதா? 

26 minutes ago, புலவர் said:

யுதுக்குடியேற்றங்கள் நிறுத்தப்பட்டு ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டும்.

யூதர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவார்களா? விடுவதாயின் புதிதாக இடங்களை ஆக்கிரமிக்கமாட்டார்கள் அல்லவா?
 

26 minutes ago, புலவர் said:

இந்தியா இப்போதும் இப்படியான தீர்மானங்களை எடுப்பது புதிய விடயமல்ல.

இந்தியா ஒரு 'பச்சோந்தி' நாடென்பது உலகறிந்தது. தனது மக்களையே சமமாக நடாத்தத்தெரியாத நாடு எப்படி உலக விடயங்களில் நேர்மையோடு இருக்கும் என்று எதிர்பார்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா பாதுகப்புச் சபை தீர்மானத்துக்கும், ஐ நா பொதுச் சபை தீர்மானத்துக்கும் உள்ள வலு வேறு பாட்டை தெரிந்து கொள்ளுங்கள் மக்காள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஐ நா பாதுகப்புச் சபை தீர்மானத்துக்கும், ஐ நா பொதுச் சபை தீர்மானத்துக்கும் உள்ள வலு வேறு பாட்டை தெரிந்து கொள்ளுங்கள் மக்காள்.

 

வல்வை ஊராட்சிக்கும், மாகாண சபைக்கும் உள்ள வித்தியாசம் தானே😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

வல்வை ஊராட்சிக்கும், மாகாண சபைக்கும் உள்ள வித்தியாசம் தானே😎

🤣 ஆனால் நிரந்த உறுப்பினர் எல்லாரும் ஓம் என்று ஒரு விடயத்தை ஆதரித்தால் பாதுகாப்பு கவுன்சிலுக்கு உலகில் எந்த அமைப்புக்கும், நாட்டுக்கும் இல்லாத அதிகாரம் உள்ளது.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣 ஆனால் நிரந்த உறுப்பினர் எல்லாரும் ஓம் என்று ஒரு விடயத்தை ஆதரித்தால் பாதுகாப்பு கவுன்சிலுக்கு உலகில் எந்த அமைப்புக்கும், நாட்டுக்கும் இல்லாத அதிகாரம் உள்ளது.

மாமாக்கு மீசை கொட்டினா, சித்தி எண்டு கூப்பிடலாம் 😎

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

கொலையை நான் ஆதரிக்கவில்லை  இஸ்ரேல் கொல்லாவிடில்  ஹமாஸ். கொல்லும்    போர் நிறுத்தம் மட்டுமே போதாது  இஸ்ரேலிலை ஹமாஸ் உள்பட பாலஸ்தீனரும்   பாலஸ்தீனத்தை   இஸ்ரேலும். ஏற்றுக்கொள்ள வேண்டும் ஹமாஸ் ஏன் இஸ்ரேலினை அங்கீகரிக்கவில்லை ??  முழுமையாக இஸ்ரேல் பாலஸ்தீனருக்குரியதா. ??  இந்த போர்  நிறுத்தம் கோரும் நாடுகளால். ஹமாஸ்சை. இஸ்ரேலில் அங்கீகாரிக்கும்படியாக. ஏன் செய்ய முடியவில்லை?? 

அவனை நிறுத்த சொல்லு 
நானும் நிறுத்துகிறேன் 

இஸ்திரேலிடம் சொல்லுங்கள் பலஸ்தீனை ஏற்றுக்கொண்டு அவர்களை சுதந்திரமாக விட சொல்லி 

குறைந்த பட்ஷம் முதலில் சுந்தந்திர நாடுகளாக இருக்கும் லெபனான் சிரியா எகிப்து நாடுகளில் நடத்தும் அக்கிரமத்தை என்றாலும் நிறுத்த சொல்லுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

மாமாக்கு மீசை கொட்டினா, சித்தப்பா எண்டு கூப்பிடலாம் 😎

மாமாக்கு மீசை கொட்டிய சந்தர்பங்களும் உள்ளன. மிக அரிது ஆனால் உண்டு.

பிகு

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

மாமாக்கு மீசை கொட்டிய சந்தர்பங்களும் உள்ளன. மிக அரிது ஆனால் உண்டு.

பிகு

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தி

🤣😁

கடைசீல பிங்கர் ஸ்லிப் ஆயிருச்சு

ஐ.நா. வாக்கெடுப்பு

இதென்னப்பா இது, இந்திராகாந்தி மாதிரி இருப்பா எண்டு பார்த்தா, விக்கு வைச்ச ஆம்பிளை மாதிரி இருக்குது.

ஒருவரின் தரம், அவரின் தெரிவுகளில் இருக்கும்.

வீட்டுக்கு அலுமாரி டெலிவரி கொடுக்க வந்தவர், வீட்டுக்காரர் ஆனால், இவர் எப்படி நாட்டினை ஆள முடியும் என்று கேள்வி வருகிறது.

இது தனிநபர் விமர்சனம் இல்லை. ஆனால், தாய் மனிசி, இந்த முறையும் மகனை இறக்கிப் பார்த்து, சரி வராவிடில், இவரை, இந்திராகாந்தி என்று இறக்க போறாவாம். 🙄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் விக்கு வைச்ச ஆம்பிளை மாதிரி இருக்கிறாவா அல்லது   பெண் மாதிரி இருக்கிறாவா என்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை. இலங்கை தமிழர்கள் படுகொலைகள் செய்யபட்டபோது,  ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் சென்று கொலைகள் செய்தபோது  இவர்கள் என்ன செய்தார்கள் என்பதே கண்டணத்திற்கு உரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விளங்க நினைப்பவன் said:

காங்கிரஸ் பொதுச்செயலாளர் விக்கு வைச்ச ஆம்பிளை மாதிரி இருக்கிறாவா அல்லது   பெண் மாதிரி இருக்கிறாவா என்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை. இலங்கை தமிழர்கள் படுகொலைகள் செய்யபட்டபோது,  ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் சென்று கொலைகள் செய்தபோது  இவர்கள் என்ன செய்தார்கள் என்பதே கண்டணத்திற்கு உரியது.

அந்தக் கண்டணத்தில தான் விக்கு கதை வந்தது எண்டதை விளங்க நிணையுங்க!! 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

அவனை நிறுத்த சொல்லு 
நானும் நிறுத்துகிறேன் 

இஸ்திரேலிடம் சொல்லுங்கள் பலஸ்தீனை ஏற்றுக்கொண்டு அவர்களை சுதந்திரமாக விட சொல்லி 

குறைந்த பட்ஷம் முதலில் சுந்தந்திர நாடுகளாக இருக்கும் லெபனான் சிரியா எகிப்து நாடுகளில் நடத்தும் அக்கிரமத்தை என்றாலும் நிறுத்த சொல்லுங்கள் 

எனக்கு இப்போது நேரமில்லை ...2024  இல்  கண்டிப்பாக  சொல்லுகிறேன். ....😂. வேறு என்ன  சொல்ல வேண்டும் ?? 😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kandiah57 said:

எனக்கு இப்போது நேரமில்லை ...2024  இல்  கண்டிப்பாக  சொல்லுகிறேன். ....😂. வேறு என்ன  சொல்ல வேண்டும் ?? 😂😂😂😂

ஆசிய  ஆபிரிக்க நாடுகளில் அத்துமீறி உள் நுழைந்து அப்பாவி மக்களை அழித்தது யார்?
வட அமெரிக்க நாடுகளில் அத்துமீறி உள் நுழைந்து அந்த நாட்டு மக்களையே அழித்தது யர்?
முதல் உலகப்போரை தொடங்கியது யார்?
இரண்டாம் உலகப்போரை தொடங்கியது யார்?
யார் 60 லட்சம் யூதர்களை கொன்றது?
ஹிரோசிமா நாஷசாக்கியில் அணுகுண்டு போட்டது யார்?

இதை செய்தவர்களை எல்லாம் பயங்கரவாதிகளோ அல்லது தீவிரவாதிகளோ என்று சொல்லவில்லை ஏன்?
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

 

சரியான ஒரு சிக்கல் ..........
உங்கள் இருவருக்கும் புரிந்தது 
ஐ நா வில் இருக்கும் யாருக்கும் புரியாமல் வாக்கெடுப்பு நடாத்தி இருக்கிறார்கள் 

இஸ்திரேல் காசா மீது கடடவிழ்த்தது விட்டிருக்கும் கொலை களத்தை 
இந்த வாக்கெடுப்பின் அழுத்தத்தால் கைவிட்டால் ... பின்பு என்ன செய்வது என்றே புரியவில்லை. 

உங்கள் இருவரின் கருத்தையும் அவசரமாக இஸ்திரேலுக்கு தெரியப்படுத்த வேண்டும் 

நீங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு அருகில் இருப்பதால் அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடி இன்னும் மேலதிக தகவல்களை வழங்கினால் நல்லது. அதாவது உங்கள் கருத்து என்ன  என்பதை, நீங்கள் என்ன புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை  எதிர்பார்க்கிறேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

 

குறைந்த பட்ஷம் முதலில் சுந்தந்திர நாடுகளாக இருக்கும் லெபனான் சிரியா எகிப்து நாடுகளில் நடத்தும் அக்கிரமத்தை என்றாலும் நிறுத்த சொல்லுங்கள் 

யாரு சொன்னது? இரண்டுமே ஈரானின் கட்டுபாட்டில்தான் இருக்கின்றது. ஈரானின் proxy அமைப்புக்கள் அங்கிருந்து அகலும் வரைக்கும் அந்த நாடுகளுக்கு சுந்தரம் இல்லை. 

23 hours ago, Kapithan said:

🤣

அவங்களுக்கும் பொழுதுபோக்கு வேண்டாமா? 

ஆமாம் இப்படியான தீர்மானங்களை கொண்டு வரும்போது பொழுது போக்குடன் அரபு நாடுகளின் சன்மானமும் கிடைக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஆசிய  ஆபிரிக்க நாடுகளில் அத்துமீறி உள் நுழைந்து அப்பாவி மக்களை அழித்தது யார்?
வட அமெரிக்க நாடுகளில் அத்துமீறி உள் நுழைந்து அந்த நாட்டு மக்களையே அழித்தது யர்?
முதல் உலகப்போரை தொடங்கியது யார்?
இரண்டாம் உலகப்போரை தொடங்கியது யார்?
யார் 60 லட்சம் யூதர்களை கொன்றது?
ஹிரோசிமா நாஷசாக்கியில் அணுகுண்டு போட்டது யார்?

இதை செய்தவர்களை எல்லாம் பயங்கரவாதிகளோ அல்லது தீவிரவாதிகளோ என்று சொல்லவில்லை ஏன்?
 

இந்த கேள்விகளுக்கு பதில்கள் அனைவருக்கும் தெரியும்  தெரிந்தும் எவருமே எந்தவொரு  மாற்றங்களையும். நிறுவியது இல்லை   ஏன??? 

இங்கே உதாரணமாக யாழ் களத்தை எடுத்து பார்த்தால்  1...களவிதிகளுண்டு  

2..நிர்வாகம் இருக்கிறது 

3...நிர்வாகிகள் இருக்கிறார்கள் 

 4..கள உறுப்பினர்கள் இருக்கிறார்கள் 

பார்வையாளர்கள் தவிர்த்து  மேலே சொல்லப்படுபவர்கள்  100 பேருக்கு உள்ளே வரலாம்” ....இங்கே அடிக்கடி தெரிந்து கொண்டு களவிதிகளை மீறுகிறோம் ...என்ன செய்வார்கள் ??...வெட்டுவார்கள்...எச்சரிக்கை செய்வார்கள்...இடைநிறுத்தம் செய்வார்கள்... நாங்கள்  கள விதிமுறைகளை மீறி கொண்டு  நிர்வாகத்தை  குறை கூறுவோம்....இது அடிக்கடி நடப்பது உண்டு”  தெரியாமலா?? நடக்கிறது...இல்லை   இல்லாவேயில்ல....தெரிந்து கொண்டு தான் நடக்கிறது....யாழ் களம் இருப்பதால் பல அனுபவங்களையும். பல அனுகூலங்களையும்  பல விடயங்களையும் தெரிந்து கொள்கிறோம்.... 

இந்த உலக கட்டமைப்பை உருவாக்குவதில்  அமெரிக்கா பங்களிப்புகள் வழங்கி உள்ளது   உலகுக்கு ஒரு தலைமை தேவை   உலகில் உள்ள எந்த நாடு தலைமை எற்றலும். நீங்கள் மேலே கேட்ட கேள்விகளில் உள்ள அனைத்தும் செய்வார்கள்   தவிர்க்க முடியாது   ஏனெனில் யாழ் கள உறுப்பினர்கள் எப்படி கள விதிமுறைகளை மீறுவர்களே  அப்படியே உலக நாடுகளும்  சண்டித்தனம்  விடுவார்கள் விதிமுறைகளை மீறுவார்கள். நான் தலைவர் என்ற நாடு  எச்சரிக்கும் பொருளாதார தடைகளை விதிக்கும்   அமைப்புக்களிலிருந்து  நீக்கும்     

குறிப்பு....இந்த கேள்விகள் இந்த திரிக்கு தேவையற்றது  நீங்கள் கேட்டாதால் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன   வணக்கம் 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

குறிப்பு....இந்த கேள்விகள் இந்த திரிக்கு தேவையற்றது  நீங்கள் கேட்டாதால் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன   வணக்கம் 🙏

நல்லதுக்கும் நேர்மைக்கும் காலமில்லை எண்டு சொல்ல வாறியள் போல கிடக்கு. கலிகாலம்

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்ரைன் அமைதி மாநாடு –  ரஷ்யா பக்கேற்காததனால் சீனாவும் புறக்கணிப்பு! நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் ‘உக்ரைன் அமைதி மாநாடு’ சுவிட்ஸர்லாந்தில்(Switzerland) நேற்று(15) ஆரம்பமானது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்ஸர்லாந்தில் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் இந்த சா்வதேச மாநாடு இடம்பெற்று வருகிறது. அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் நடைபெறுகிறது. குறித்த மாநாட்டில், அணுசக்தி பாதுகாப்பு, கடல் பயண சுதந்திரம், உணவு பாதுகாப்பு போன்ற மூன்று விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், ஈக்வடாா், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் 50 க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்றுள்ளதுடன், சுமாா் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இதில் பங்கேற்றுள்ள, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீா் ஸெலென்ஸ்கி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, உலகமே ஒன்று கூடினால் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவிட முடியும் என தெரிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, உலக நாடுகளை ஒன்று திரட்டுவதில் இந்த மாநாடு வெற்றியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த மாநாட்டில், ரஷ்ய பங்கேற்கவில்லை. இதனால் குறித்த ‘உக்ரைன் அமைதி மாநாட்டை சீனாவும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388152
    • இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு ஆரம்பம்! 16 JUN, 2024 | 11:26 AM   தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (16) காலை 10 மணியளவில் ஆரம்பமானது. கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி. தவராசா உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இன்றைய கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை விடயத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாகவும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.   https://www.virakesari.lk/article/186180
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெரியவர்கள், இளம் வயதினரிடையே நீரிழிவு நோய் ஏற்படுவது பரவலாக காணப்படுகிறது. அதுகுறித்த விழிப்புணர்வும் பரவலாக காணப்படுகின்றது. ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், அதுபல தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளுக்கு எதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது? அதற்கான அறிகுறிகள் என்ன? அதனை தடுக்க முடியுமா? சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். டைப் 1 நீரிழிவு நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுவது டைப் 1 நீரிழிவு நோய். உடல் செல்களுக்கு குளுக்கோஸ் செல்ல உதவும் இன்சுலின் என்ற ஹார்மோனுக்கு பற்றாக்குறை ஏற்படுவதுதான் நீரிழிவு நோய். அந்த இன்சுலின் ஹார்மோன் கணையத்தால் உற்பத்தி செய்யப்படாத நிலையே டைப் 1 நீரிழிவு நோய். பெரியவர்கள், இளம்பருவத்தினருக்கு ஏற்படுவது டைப் 2 நீரிழிவு நோய். அது பெரும்பாலும் வாழ்வியல் முறைகள், மரபியல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகின்றன. ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவு நோய் எவ்வித காரணங்களும் இன்றி, தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படுகிறது என்கிறார், குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார். “டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்கு ஏற்படுவதால் இது பிறப்பில் ஏற்படும் நோய் என கருதக்கூடாது. குழந்தைப்பருவத்தில் ஒரு வயது முதல் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் இது ஏற்படும். இதனால், கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்கள் பாதிக்கப்பட்டு, இன்சுலின் சுரப்பு நின்றுவிடும். எந்த வைரஸ் தொற்று காரணமாகவும் இது தூண்டப்படலாம்” என விளக்குகிறார் அருண்குமார்.   முக்கிய அறிகுறிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த டைப் 1 நீரிழிவு நோய் பெரியவர்களுக்கும் வரலாம் என்று மருத்துவர் அருண்குமார் கூறுகிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் 2022-ம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட சுமார் 95,000 குழந்தைகள் இத்தகைய டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவுக்கு முக்கியமான சில அறிகுறிகள் உண்டு. பாலியூரியா - அடிக்கடி சிறுநீர் கழித்தல் பாலிடிப்சியா - அதிக தாகம் எடுத்தல் பாலிபீஜியா - அதிகமாக பசி எடுத்தல் இவைதவிர, அதிகளவில் உணவு உட்கொண்டாலும் எடை இழப்பு அதிகமாக ஏற்படும். பிறப்புறுப்பில் தொற்று நோய்கள் எளிதாக ஏற்படும். “அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்நோய் கண்டுபிடிக்கப்படுவதில்லை,” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.   டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்படாதபோது, இதனால், டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் என்ற தீவிர நிலை ஏற்படுவதாக அவர் எச்சரிக்கிறார். டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் என்பது, சர்க்கரை அளவு அதிகமாகி, அதனால் ரத்தத்தில் அமிலம் அதிகமாகி பயங்கரமான மூச்சுத்திணறல் ஏற்பட்டு கோமா நிலை ஏற்படும் என்று அவர் கூறுகிறார். பெரும்பாலும் இத்தகைய தீவிர நிலையில் தான் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுவதாகவும் இதில் குழந்தைகள் இறப்பதற்கும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர் அருண்குமார் எச்சரிக்கிறார். “ஒரு குழந்தைக்கு டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் ஏற்படும்போது, அவசர சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றி, அதன் பின்னரே இன்சுலின் சிகிச்சை தொடங்கப்படும். தீவிரமான பிரச்னைகளின் போது குழந்தையை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படலாம்” என்கிறார் அவர். குழந்தைகளுக்கு மூன்று மாதங்களில் 5% எடை இழப்பு ஏற்படுகிறது என்றால் குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். டைப் 1 நீரிழிவு நோயை தடுக்க முடியாது என்றாலும், ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்து இன்சுலின் சிகிச்சை எடுத்தால் மற்ற குழந்தைகளை போலவே ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் அக்குழந்தைகள் வாழ முடியும் என நம்பிக்கையூட்டுகிறார் மருத்துவர் அருண்குமார். உலக சுகாதார மையத்தின் தகவலின்படி, 2017-ம் ஆண்டில் உலகம் முழுவதிலும் 90 லட்சம் பேர் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பான்மையானோர் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் வாழ்கின்றனர். டைப் 1 நீரிழிவு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணமோ அல்லது அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளோ தெரியவில்லை. டைப் 1 நீரிழிவு நோய்க்கு என்ன சிகிச்சை வழங்கப்படும்? “இன்சுலின் செலுத்துவதுதான் ஒரே தீர்வு. அதன் அளவு ஒவ்வொரு குழந்தையின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். “டைப் 1 நீரிழிவு நோயில் இன்சுலின் சுரப்பது சுத்தமாக இருக்காது. அப்படிப்பட்ட சமயத்தில் இன்சுலின் கொடுத்தால்தான் அந்த குழந்தைகள் உயிர்வாழ முடியும்” என்கிறார், மருத்துவர் சந்திரசேகர்.   குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வராதா? பட மூலாதாரம்,GETTY IMAGES மாறிவரும் வாழ்வியல் முறைகள், உடல் பருமன், மனச்சோர்வு காரணமாக, 10-12 வயது குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதாக மருத்துவர் சந்திரசேகர் கூறுகிறார். “இன்சுலின் எதிர்ப்பு தன்மை காரணமாக பெரியவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. வாழ்வியல் காரணிகள், மரபியல் காரணிகளால் இது ஏற்படும். சமீப காலமாக 10-12 வயது உடல் பருமன் கொண்ட குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. சரியான உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு காரணங்கள்” என்கிறார் அவர். சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் எதிர்காலத்தில் வரலாம் என்று கூறும் அவர், தற்போது அத்தகைய குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே டைப் 2 நீரிழிவு நோய் வந்துவிடுவதாக கூறுகிறார். டைப் 2 நீரிழிவு நோயை தடுக்கக் குழந்தைகளின் உடல் எடையை கண்காணிக்க வேண்டும், 9-11 வயது குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தத்திற்கான பரிசோதனைகள் எடுக்கப்பட வேண்டும் என கூறுகிறார், மருத்துவர் சந்திரசேகர். டைப்2 நீரிழிவு ஏற்படும் குழந்தைகளுக்கு மாத்திரைகள் மூலம் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதுதவிர, பிறக்கும் குழந்தைகளுக்கு நியோநாட்டல் நீரிழிவு நோய் மிக அரிதாக ஏற்படும் என்று கூறுகிறார் மருத்துவர் சந்திரசேகர். “இது குழந்தை பிறந்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் ஏற்படலாம். மரபணுக்களில் ஏற்படும் ஒரு குறைபாட்டால் இது ஏற்படுகிறது. பீட்டா செல்களில் சுரப்புகள் மாறி, மரபணுக்களில் ஏற்படும் குறைபாட்டால் இது ஏற்படுகிறது. இது டைப் 1 நீரிழிவு நோய் கிடையாது” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2552x2wpjzo
    • டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் எவை? பட மூலாதாரம்,GETTY IMAGES 16 ஜூன் 2024, 04:08 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் அதிர்ச்சிகரமான முடிவுகள் என்பது இயல்பான ஒன்றாகி வருகின்றன. கத்துக்குட்டி அணிகளின் சவால் தரும் ஆட்டத்தால் முன்னணி அணிகள் பலவும் தொடரை விட்டே வெளியேறியுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து ஆகிய 3 அணிகளும் வெளியேற்றப்பட்டு விட்டன. பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும், சி பிரிவில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், டி பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்காவும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இங்கிலாந்து தகுதி பி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் 3.611 ஆக இருக்கிறது. இங்கிலாந்துடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற போட்டியிட்ட ஸ்காட்லாந்து அணியும் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து தோற்றுப் போனதால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், நிகர ரன் ரேட் அடிப்படையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் கடும் போட்டி டி பிரிவில் தென் ஆப்ரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், இரண்டாவது இடத்திற்கு வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் போட்டியிடுகின்றன. தற்போதைய நிலையில் வங்கதேசம் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ, அல்லது ஆட்டம் தடைபட்டாலோ கூட வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும் மறுபுறம், நெதர்லாந்து அணியோ சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற தனது அடுத்த ஆட்டத்தில் இலங்கையை வெல்ல வேண்டும். அதேநேரத்தில், வங்கதேச அணி தனது கடைசி ஆட்டத்தில் நேபாளத்திடம் தோற்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால் மட்டுமே நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை வெளியேற்றம் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தானும், பி பிரிவில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து அணியும், டி பிரிவில் இலங்கை அணியும் கத்துக்குட்டிகளின் சவாலை சமாளிக்க முடியாமல் டி20 உலகக்கோப்பை தொடரை விட்டே வெளியேற்றப்பட்டுள்ளன. நிகர ரன் ரேட் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ரன்-ரேட் என்பது ஒரு அணி தனது முழு இன்னிங்ஸிலும் ஒரு ஓவருக்கு அடித்த சராசரி ரன்களின் எண்ணிக்கை ஆகும். உதாரணமாக, 20 ஓவர்களில் 140 ரன்கள் என்பது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கு சமம். மற்ற அணியின் ரன் ரேட்டிலிருந்து எதிரணியின் ரன் ரேட்டைக் கழிப்பதன் மூலம் நிகர ரன் ரேட் கணக்கிடப்படுகிறது. எனவே வெற்றி பெறும் அணி நேர்மறை நிகர ரன் ரேட்டையும், தோல்வியுற்ற அணி எதிர்மறை நிகர ரன் ரேட்டையும் கொண்டிருக்கும். ஒரு அணி 20 ஓவர்களையும் முழுமையாக ஆடாமல் முன்கூட்டியே ஆட்டமிழந்தால், அந்த அணியின் ரன் ரேட் 20 ஓவர் அடிப்படையிலேயே கணக்கிடப்படும். இவ்வாறு, ஒவ்வொரு ஆட்டத்திலும் கிடைக்கும் நிகர ரன்ரேட் அடிப்படையிலேயே லீக் சுற்றில் அந்த அணியின் ஒட்டுமொத்த ரன் ரேட் கணக்கிடப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்லுமா? இதுவரை, ஆறு அணிகள் முந்தைய டி20 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது மறக்க முடியாத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2014இல் இந்தியா மீண்டும் பட்டத்தை வெல்லும் சூழலில் இருந்தது. ஆனால் இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. பாகிஸ்தான் 2009இல் ஒருமுறை வெற்றி பெற்றது. அதன் பிறகு மூன்று முறை இறுதிப் போட்டி வரை வந்துள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, 2010 மற்றும் 2022இல் போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, டி20 உலகக்கோப்பையில் மூன்றாவது பட்டத்தைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளனர். போட்டிகளை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 2012 மற்றும் 2016இல் இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளது. 2021இல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. https://www.bbc.com/tamil/articles/c4nn55n21rwo
    • படக்குறிப்பு,சிதம்பரம் நடராஜர் கோவிலில் சரஸ்வதி பண்டாரம் இருந்ததை உறுதிப்படுத்தும் கல்வெட்டு. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 25 நிமிடங்களுக்கு முன்னர் "நான் மறைந்த பிறகு என் உடல் மீது மலர் மாலைகளை வைக்க வேண்டாம்; என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள்'' என்று புத்தகங்கள் மீதான தன் தீரா வேட்கையை வெளிப்படுத்தியவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு. உலகில் புத்தகங்களுக்கு எத்தனை சிறப்பு இருக்கிறதோ, அத்தனை பெருமை கொண்டது நூலகங்கள். கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்து எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றல் மையங்களாகவும் நூலகங்கள் திகழ்கின்றன. இத்தகைய சிறப்புப் பெற்ற நூலகங்கள் தமிழ்நாட்டில் சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அந்த காலத்தில் நூலகங்கள் சரஸ்வதி பண்டாரம் என்று அழைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், சிதம்பரத்தில் 850 ஆண்டுகளுக்கு முன்பே சோழர் ஆட்சி காலத்தில் செயல்பட்ட 'சரஸ்வதி பண்டாரம்' குறித்து இக்கட்டுரையில் விரிவாக காண்போம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சரஸ்வதி பண்டாரம் எனும் நூலகம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் செயல்பட்டு வந்த சரஸ்வதி பண்டாரம் குறித்து இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம் பிபிசி தமிழிடம் விவரித்தார். "சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரை பிரித்து பொருள் கொண்டால் சரஸ்வதி என்பதற்கு கல்விக்கடவுள் என்றும் பண்டாரம் என்பதற்கு கருவூலம் என்றும் பொருளாகும். இதை கல்வி கடவுளின் கருவூலம் என்று குறிப்பிட முடியும் . இதற்கு கலைமகளின் பொக்கிஷம், ஞான பீடம், சரஸ்வதி நூலகம், நூல் நிலையம், புத்தக ஆலயம், புத்தகச்சாலை முதலிய பொருளும் உண்டு. சரஸ்வதி பண்டாரத்தில் வரலாற்று காலத்தைச் சார்ந்த ஓலைச்சுவடிகளை சேகரித்தும் தொகுத்தும், நகலெடுத்து எழுதியும், பாதுகாத்து பராமரித்தும், வந்துள்ளனர். இதைப் பற்றி சிதம்பரம் கல்வெட்டுகள் மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்" என்றார் அவர். படக்குறிப்பு,சிதம்பரம் நடராஜர் கோவில் சரஸ்வதி பண்டாரத்தில் வரலாற்று காலத்தைச் சார்ந்த ஓலைச்சுவடிகளை சேகரித்தும் தொகுத்தும், நகலெடுத்து எழுதியும், பாதுகாத்து பராமரித்தும், வந்துள்ளனர். என்ன மொழியில், எந்தெந்த நூல்கள் இருந்தன? சிதம்பரம் கோவிலில் சோழ மன்னர் இரண்டாம் ராசாதிராசரின் காலம் (கிபி 1163 -1178) "ஸ்வஸ்தி ஸ்ரீ ஸரஸ்வதி பண்டாரத்துக்கு … "எனத் தொடங்கும் கல்வெட்டு ஒன்றில் சரஸ்வதி பண்டாரம் இருந்துள்ளதை குறிப்பிடுகிறது. அந்த கல்வெட்டு குறித்து விவரித்த முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம், "சரஸ்வதி பண்டாரத்தில் சுவாமி தேவர் (அரச குரு) எழுதிய புத்தகங்கள் மற்றும் சித்தானந்தகாரா என்ற கிரந்த புத்தகங்களும் (சமஸ்கிருதம்) வைக்கப்பட்டிருந்துள்ளன. இந்த நூல் நிலையத்தில் ஓலைச்சுவடிகளை நகலெடுத்து எழுதுவதற்கும் அவற்றை அவிழ்த்து கட்டுவதற்கும், கோர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் மெய் காப்பாளர்கள் உள்ளிட்ட பலநிலை பணியாளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்த நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை தமிழிலும் கிரந்தத்திலும் பிரிதொரு நகலெடுத்து அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து விக்கிரமச் சோழரின் மாளிகையில் உள்ள நகல் பாதுகாக்கும் இடத்தில் வைத்திருந்துள்ளனர். இங்கு பணியாற்றியுள்ள சரஸ்வதி பண்டாரர்கள் அதாவது நூலகர்கள் மற்றும் திருக்கோயில்களில் திருமுறை ஓதுகின்ற திருக்கை ஓட்டிகள் முதலானவர்கள் செய்கின்ற பணிகளுக்கு (பார்வைக்காக) முதலாக வைக்க வேண்டியுள்ள நூல்களைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன." என்று தெரிவித்தார்.   பணியாளர்கள் விவரம் சிதம்பரம் கோவிலில் பாண்டிய மன்னர் முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியன் காலத்து (கி.பி. 1251-1270) கல்வெட்டில் சரஸ்வதி பண்டாரத்தை பற்றியும் இதில் பணியாற்றியுள்ள பணியாளர்களை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுகுறித்து குறிப்பிட்ட வஞ்சியூர் க.பன்னீர்செல்வம், "இதில் பல கிரந்தங்களை படிப்பதற்கும், பார்ப்பதற்கும், எழுதுவதற்கும், நகலெடுப்பதற்கும், அவிழ்த்து கட்டுவதற்கும், ஓலைச்சுவடிகளை படிக்கவும், நகலெடுத்த ஓலைச்சுவடிகளை வாய்விட்டு படித்து ஒப்பிட்டு பார்க்கவும் முறையாக அடுக்கி கோர்த்து பாதுகாத்து வைப்பதற்கும் 20 பணியாளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்த கிரந்தங்களை எழுதி சேர்க்கும் பணியில் இச்சரசுவதி பண்டாரத்தில் பணியாற்றியுள்ள 10 பணியாளர்களுடன் புதிதாக 10 பணியாளர்களை பணியமர்த்தவும் செய்துள்ளனர். இவர்கள் ஓலைச்சுவடிகளை புதிய நகலெடுத்து எழுத வேண்டும் என்று அவர்களின் பணி விவரமும் கூறப்பட்டுள்ளது" தெரிவித்தார்.   படக்குறிப்பு,தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம் நூலகத்திற்காக நிலதானம் சிதம்பரம் நடராஜர் கோவிலின் முதல் பிரகாரத்தின் தெற்கு பக்கம் சுவற்றில் முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியரின் 13-ஆம் ஆட்சி ஆண்டில் (கிபி 1264) பொறிக்கப்பட்டுள்ள மற்றொரு கல்வெட்டிலும் சரஸ்வதி பண்டாரம் பற்றிய செய்தி வந்துள்ளது. இதில் ராசாதி ராச வளநாட்டில் அமைந்திருந்த தனியூர் பெரும்பற்ற புலியூரில் நாயனார் பெயரால் அகரம் விக்கிரம பாண்டிய சதுரவதி மங்களம் ஒன்றை வேதமும் சாஸ்திரமும் நன்கு அறிந்திருந்த 108 பிராமணர்களுக்கு இம்மன்னர் உருவாக்கிக் கொடுத்துள்ளார். இங்கு அமைந்திருந்த சரஸ்வதி பண்டாரத்தில் பணியாற்றியுள்ள சரஸ்வதி பண்டாரத்தருக்கும் நிலக்கொடை கொடுத்துள்ளார். மேலும் அந்த நிலங்களையும் நிர்வாகம் செய்துள்ளனர் என்பது பற்றிய கல்வெட்டு தகவலை பன்னீர்செல்வம் விளக்கினார். நூலகம் அமைந்திருந்த இடம் தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் சரஸ்வதி பண்டாரம் என்று அழைக்கப்பட்ட நூலகம் இருந்த இடம் குறித்தும் கல்வெட்டு தகவல் அடிப்படையில் அவர் விளக்கினார். "சிதம்பரம் நடராசர் கோவில் மேற்கு கோபுரம் அமைந்துள்ள பகுதியில் சுப்பிரமணிய பிள்ளையார் கோவிலின் வடக்குப் பக்கத்தில் காணப்படுகின்ற மண்டபத்தின் அடிப்பகுதியில் சோழ மன்னர் இரண்டாம் ராசாதி ராஜனின் கால (கி.பி. 1163- 1178) கல்வெட்டு ஒன்றில் ராசாதி ராசரின் மாளிகையின் மேற்கு பக்கத்தில் உள்ள சுப்பிரமணிய பிள்ளையார் கோவிலின் வடக்கு பக்கத்தில் உள்ள மண்டபத்தில் சரஸ்வதி பண்டாரம் அமைந்திருந்தது. இதில் சுவாமி தேவர் எழுதிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நூல் நிலையத்தில் பலர் பணியாற்றியுள்ளனர் என்பது குறித்த விவரமும் உள்ளன." என்றார் அவர்.   பணியாளர்கள் பெயர் மற்றும் ஊதியம் - கல்வெட்டு தகவல் சிதம்பரம் கோவில் சரஸ்வதி பண்டாரத்தில் உள்ள பணிகளை நின்மை ஆட்கொண்டான் பட்டன், கௌதமன் உய்யக்கொண்டான் பட்டன், மணலூர் கிழவன் திருஞானசம்பந்தம் திருச்சிற்றம்பலம் உடையான், புல்லூருடையான் திருநீலகண்டன், ஆரியன் இராமப்பட்டன் ஆகியோர் செய்துள்ளனர். இவர்களுக்கு நாள் கூலிக்கும், சீருடைகளுக்கும் ஆண்டுக்கு ஒன்று நெல்லாகவும், காசாகவும் ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது. நகலெடுத்து எழுதுபவர்கள் நாள் ஒன்றுக்கு நெல் தூணியும் (ஆண்டுக்கு 365 தூணி (2பதக்கு = ஒரு தூணி நெல்லும்) மற்றும் நான்கு காசுகளும் கொடுக்கப்பட்டது. மெய் காப்பாளர்கள் மற்றும் கோர்ப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு நெல் பதக்குநாழியும் (ஆண்டுக்கு 365,பதக்கு நாழி ( 2குருணி= ஒரு பதக்கு, 4- உழக்கு= ஒரு நாழி) ஆண்டுக்கு 3 1/2 காசுகளும் கொடுக்கப்பட்டன. நூலகத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக சிதம்பரம் அருகே விஸ்வாதிக்க விவேகமங்கலம் என்ற ஊரில் 27- வேலி, (6.17 ஏக்கர் = ஒரு வேலி) 2மா (1குழி = 12 அடி *12 அடி144 சதுர அடி,100 குழி = ஒரு மா) , அரைக்காணி முந்திரிகை (3/320 – அரைக்காணி முந்திரி) நிலத்தை ராசாதி ராசர் இறையிலியாக (தானமாக) கொடுத்துள்ளார். இந்த நிலத்திலிருந்து வருகின்ற 820 -கலம் நெல்லையும் மூன்று கூறிட்டு (ஒரு கூறு 273.3 கலம்) நூலகத்திற்கு கொடுக்கச் சொல்லி உள்ளார். https://www.bbc.com/tamil/articles/c4nn7zgv626o
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.