Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸாவை ஒரு கோணத்திலும் இலங்கையை வேறுகோணத்திலும் ஐ.நா. சபைக்குள் பார்ப்பதில் நியாயமில்லை - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
03 NOV, 2023 | 08:01 PM
image

காஸா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐக்கிய நாடுகள் சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தூய்மையான கரங்களுடன் வந்தால் அடுத்த செப்டெம்பர் மாத ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை பதிலளிக்கும். இல்லையெனில் நியாயமற்ற விடயத்திற்கு இலங்கை பதிலளிக்க வேண்டுமா?'' என, வெலிமடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

https://www.virakesari.lk/article/168460

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை எந்த கோணத்தில் பார்த்தாலும் குற்றவாளி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலர் உக்ரேன் விடயத்திலும், காஸா விடயத்திலும், மேற்கை, இரெட்டை அணுகுமுறையை பற்றி எழுதியதைத்தான் ரணில் மேலே கூறி உள்ளார்.

அப்பிரசெண்டுகளா,

இப்பயாச்சும் விளங்குதா? 

இரெண்டு வருசமா நீங்கள் முக்கி எழுதினதெல்லாம் சிங்கள அரசுக்கு முட்டு என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா சபை சரியான கோணத்தில தானே பார்க்கின்றது.
நாடுகளின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டியது ஐ.நா கடமை கண்டியளோ.அந்த வகையில் சிறிலங்கா அரசுக்கும் ,இஸ்ரேல் அரசுக்கும் துணை போகின்றது ஐ.நா சபை.
அன்று வன்னியில் அரச பயங்கரவாதம் கூறிய அதே காரணங்களை இன்று இஸ்ரேலும் கூறுகிறது.
புலிகள் பயங்கரவாதிகள் ,தமிழர்கள் அல்ல... எமது இராணுவம் ஒரு கையில் ஆயுதமும் மறு கையில் புத்த சாசனமும் வைத்து போராடுகிறார்கள் .
இன்று காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் கூறுகிறது ஹமாஸ் பயங்கரவாதிகள் பலஸ்தீனர்கள் அல்ல...ஒரு கையில் ஆயுதம் மறுகையில் ஒலிவ் கிளையுடனாம்..
நீங்கள் போராளிகளை பார்க்கும்கோணத்தில் தான் ஐ.நா சபையும் பார்க்கிறது....
புலிகள் பயங்கரவாதிகள் (தமிழர்கள்)என ஐ.நா பிரதிநிதிகளை( ஐ.நா இதற்கு முழு சம்மதம் தெரிவித்தார்கள் தானே) வன்னியிலிருந்து வெளியேற்றி சர்வதேச உதவியுடன் இனவழிப்பு செய்ய அனுமதி தந்தார்கள். 15 வருடங்கள் கழிந்தும் , இனவழிப்பு செய்த நாடு என அறிவிக்காமல் உங்கள் நாட்டை பாதுகாத்து வருகிறது சர்வதேசமும்,ஐ.நா சபையும்.

  • கருத்துக்கள உறவுகள்

உக்கிரனை ரஷ்யா ஆக்கிரமித்து விட்டதால் அதற்கு ஆயுத உதவிகளும் ஆதரவும் வழங்குகிற அமெரிக்காவும் மேற்குலகும்தான் இன்று பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து அப்பாவி பாலஜ்தீனர்களை கண்கூடித்தனமாகக் கொன்று குவிப்பதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.இவர்கள்தான் தமிழர்களைை சிறிலங்கா அரசு குண்டுகள் போட்டு அழித்த போது ஆதரவு கொடுத்தவர்கள்.சிங்கள அரசு காரியம முடிந்தததும் கழட்டி விட்டு சீனாவின் சார்பு நிலை எடுத்ததால் இக்று மனித உரிமை மீறல் போர்க்குற்றம் என்று மெனமையாக ஒரு செல்லதட்டு தட்டுகிறார்கள். அதிலும்மனித உரிமை மீறல் விடயத்தில் லசந்தவுக்கு நடந்த கொடுமைகளை சிலாகித்த அளவுக்கு கொலையுண்ட தமிழ் ஊடகவியலாளர்களை பெரிதாக சிலாகிக்க வில்லை. இன்று உலகில் நடக்கும் போரா;டங்களுக்கும் அதனால் எழும் மனித உரிமை மீறல்களுக்கும் வித்திட்டவர்கள் இந்த மேற்குலகத்தினரே. அந்த மேற்குலகத்தின் செல்லப்பிள்ளையான ரணிலும் மாறி மாறி சந்தர்பத்திற்கு ஏற்றவாறு நாக்கைப் புரட்டுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இரெண்டு வருசமா நீங்கள் முக்கி எழுதினதெல்லாம் சிங்கள அரசுக்கு முட்டு என்பது.

உக்ரேன் காஸாவில் சிறிலங்கா அரசு சிங்களவர்களும் இவர்களும் ஒரே கொள்கை கொண்ட பிறதேஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

🤣

சிலருக்கு, விடுதலைப் புலிகளை இதே மேற்குலகுதான் பயங்கரவாதிகளென சித்தரித்து, இலங்கையில் இருந்து தமிழினத்தையும் போராட்டத்தையும் பயங்கரவாத முத்திரை குத்தி அடியோடு அழித்தொழிக்க முன்னின்றது என்பது வசதியாக மறந்துவிடுகிறது. 

தீக்கோழி தலையை மண்ணில் மறைத்தால் உலகம் இருண்டுவிடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

🤣

சிலருக்கு, விடுதலைப் புலிகளை இதே மேற்குலகுதான் பயங்கரவாதிகளென சித்தரித்து, இலங்கையில் இருந்து தமிழினத்தையும் போராட்டத்தையும் பயங்கரவாத முத்திரை குத்தி அடியோடு அழித்தொழிக்க முன்னின்றது என்பது வசதியாக மறந்துவிடுகிறது. 

தீக்கோழி தலையை மண்ணில் மறைத்தால் உலகம் இருண்டுவிடாது. 

இனியும் அவர்கள் (மேற்கு) தானாம் உதவும். நம்பிக்கைக்கும் ஒரு அளவு இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, kalyani said:

இனியும் அவர்கள் (மேற்கு) தானாம் உதவும். நம்பிக்கைக்கும் ஒரு அளவு இருக்கு.

கனடா தற்போது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு காரணம் இல்லாமலா visit visa வழங்குகிறார்கள்? சிங்கப்பூர், தாய்வான் போன்ற சொல்கேட்கும் ஒரு நாட்டை உருவாக்குவதுதான் அவர்களது இலக்கு.

தமிழர்கள் அவர்களுக்கு ஒரு போடுதடி. அவ்வளவுதான். 

தங்கள் சொற்கேட்டு நடக்கக்கூடிய ஒரு அரசுதான் மேற்குலகுக்குத் தேவையே தவிர, தமிழர்களின் நலன்கள் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

இது சம்பந்தனை வெண்ட அறளை.

ரணில் மேலே தெளிவாக சொன்ன பின்பும் விளங்கவில்லை.

மேற்கோ, கிழக்கோ, மங்கோலிய, ரோம, அமரிக்க பேரசரோ சர்வதேச உறவில் யாரும் என்றும் நீதி நேர்மை படி நடந்ததில்லை.

இனியும் நடக்க போவதில்லை.

எல்லாம் அவரவர் நலனிற்கு ஏற்ப மாறி, மாறி கதைப்பதே.

பலஸ்தீன விடயம் -  உணர்சிகளை தள்ளி வைத்து விட்டு நடப்பதை தமிழர் தரிசிக்க ஒரு நல்ல உதாரணம்.

எப்படியும் ஹமாசை அழிக்க அல்லது செயழிழக்க வைக்க போகிறார்கள். ஹமாஸை ஒரு போதும் புலிகளுடன் ஒப்பிட முடியாது, கூடாது.

ஆனால் 2008 இல் புலிகள் இருந்த இடத்துக்கு இப்போ ஹமாஸ் வந்துள்ளது.

அங்கே,

புலிகளை மேற்கு, இந்தியா, ரஸ்யா, சீனா எல்லாரும் இலங்கைக்கு நேரடியாக உதவி அழித்தார்கள்.

இங்கே,

ஹமாசுக்கு முஸ்லிம் நாடுகளும், ரஸ்யாவும் பெயரளவு ஆதரவு மட்டுமே கொடுக்க. மேற்கின் முழு பின் பலத்துடன் இஸ்ரேல் ஹமாஸை அழிக்க அல்லது முடக்கப்போகிறது.

இரெண்டு இடத்திலும் இப்படி ஒரு அமைப்பை அழிக்க மிகபெரிய சிவிலியன் இழப்பு விலையாக கொடுக்கப்பட்டது, படுகிறது.

ஆனால் ஹமாசின், மக்களின் அழிவுக்கு பின், பலஸ்தீனியருக்கு, ஃபட்டா வழியாக, மேற்கு, எகிப்து, ஜோர்டான் அனுசரணையில் ஒரு வழி திறக்க கூடிய வாய்ப்புகள் வரும். இதை மூட இஸ்ரேல் எத்தனிக்கும். ஆனால் அதை கெட்டியா பிடித்து, அதன் வழியே தீர்வை அடைவதுதான் பலஸ்தீனர் முன் உள்ள ஒரே வழி.

இல்லாமல் ஈரானை, கிஸ்புலா போன்ற மாய மான்களை நம்பினால் நாடில்லாமல், நாதி இல்லாமல் அலைய வேண்டியதே.

நினைத்து பாருங்கள். ஜோர்தானுக்கும், எகிப்துக்கும், பலஸ்தீனுக்கும் - அமெரிக்கவை பொறுத்த மட்டில் சமய, இன விடயத்தில் ஒரு வித்தியாசமும் இல்லை. இஸ்ரேலை ஒரு நாடாக பலஸ்தீன் அங்கீகரித்து, ஈரானின் வட்டத்தில் இருந்து மேற்கின் வட்டத்துள் பலஸ்தீன் வருமாகின், ஜோர்தான் போல அதுவும் மேற்கின் செல்ல பிள்ளையாக மாறலாம்.

வலுவான இனங்கள்/நாடுகள் உலகில் வாழும் முறையில், வலுவற்ற எளிய இனங்கள் வாழ முடியாது.

வலுவற்ற இனங்கள் நாணல் போக்கையே கைகொள்ள வேண்டும்.

வலுவான இனங்களாக இருந்து, போரில் தோற்று இப்போ வலுவற்ற இனமாகிலும் தன் நலனை பேணி வாழும் ஜப்பானும், ஜேர்மனியிம் நல்ல உதாரணங்கள்.

ஒரு போரின் தோல்வி என்பது பல விடயங்களின் முடிவுரை. தோல்விக்கு முன் இருந்ததை போல் பின்னும் இருக்க முடியாது. 

ஹமாசுக்கு பின்னான பலஸ்தீனியரின் புது வழி போலவே எமக்கும் இருக்கிறது.

என்ன அவர்களின் கேந்திர முக்கியதுவம், புலம்பெயர் ஆதரவு வட்டம் எம்மை விட மிக பெரிது ஆகவே மேற்கை அணுகி ஒரு தீர்வை அவர்கள் பெறுவது எம்மை விட இலகு.

ஆனால் அவர்களை போலவே எமக்கும் வேறு வழி இல்லை. நாம் கொஞ்சமாவது வலுவாக இருக்கும் மேற்கின் வழியேதான் எமக்கான சாவி இருக்கிறது. இதை பலப்படுத்துவதே நாம் இப்போ செய்ய வேண்டியது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

உங்களை எந்த கோணத்தில் பார்த்தாலும் குற்றவாளி தான்.

இஸ்ரேலுக்கு எதிராக யுத்த குற்ற விசாரணை நடத்துவது போலஇலங்கைக்கு எதிராகவும் நடத்த வேண்டும். அப்போது  இரண்டு நாடடையும் ஒரே கோணத்தில் நோக்குவதாக அமையும். ரணில் அதைத்தான் எதிர் பார்க்கிறார் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனும் ரணிலும் தொலைந்த சாவியைத் தேடித் தேடிக் களைத்துவிட்டனர் போல தென்படுகிறது. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

தங்கள் சொற்கேட்டு நடக்கக்கூடிய ஒரு அரசுதான் மேற்குலகுக்குத் தேவையே தவிர, தமிழர்களின் நலன்கள் அல்ல. 

இது பொருத்தமான காரணமாக வரலாம் ஈழத்தமிழருக்கும்.

யூதருக்கான நாட்டுக்கு அடிகோலும் அமெரிக்கா ராஜாங்க திணைக்களத்தின் நியாப்படுத்தலின் அத்தியாய தலைப்பு.

Vide William Yale of the US State Dept who wrote in 1919:

“An Eastern race well versed in Western culture and profoundly in sympathy with Western ideals will be established in the Orient. Furthermore, a Jewish state will inevitably fall under the control of American Jews who will work out, along Jewish lines, American ideals and American civilization.”

https://www.google.co.uk/books/edition/Afflicted_Powers/h5CWQuNsVzgC?hl=en&gbpv=1&dq=“An+Eastern+race+well+versed+in+Western+culture+and+profoundly+in+sympathy+with+Western+ideals+will+be+established+in+the+Orient.+Furthermore,+a+Jewish+state+will+inevitably+fall+under+the+control+of+American+Jews+who+will+work+out,+along+Jewish+lines,+American+ideals+and+American+civilization.”&pg=PA108&printsec=frontcover

(google இல் தேடி பார்க்கவும்) 
 
  • கருத்துக்கள உறவுகள்

அருமை.

வரிக்கு வரி ஈழத்தமிழருக்கு பொருந்துகிறதல்லவா?

2 hours ago, Kadancha said:

“An Eastern race well versed in Western culture and profoundly in sympathy with Western ideals will be established in South Asia. Furthermore, a Tamil state will inevitably fall under the control of American, British, Canadian, European and Australian Tamils who will work out, along Tamil lines, American ideals and American civilization.

மேலே உள்ளதில் யூதர் என்பதை தமிழர் என மாற்றி உள்ளேன். அச்சொட்டாக பொருந்துகிறது அல்லவா?

இதுதான் நமக்கான சாவி. 

தமிழர் நலன் ஒரு போதும் மேற்கின் நலனுக்கு எதிரானதாக அமைய தேவையில்லை. We are natural allies.  சொல்லப்போனால் நம் நலனகள் ஒன்றுக்கு ஒன்று பொருத்துபவை. நாம் ஒன்றியவாழிகள்.

சீனா மேலும் மேலும் இலங்கையில் இறங்க, நாம் மேற்கிற்கு “தென்னாசியாவின் யூதர்கள்” ஆக மாறும் வாய்ப்பு கூடும்.

அதை நாம் சிக்கென பிடிக்க வேண்டும்.

அதற்கு இதை விளங்கி நடக்கும் ஒரு தலைமை வேண்டும். இப்போ எம்மிடம் அது இல்லை.

சம்பந்தனும் சுமந்திரனும் ரோ கீறிய கோட்டை தாண்டாத பத்தினிகள்.

அவர்களோ இன்று இருக்கும் வேறு எந்த அரசியல்வாதியோ மேலே சொன்ன அணுகுமுறையை எடுக்கும் புத்திகூர்மை, தூரநோக்கு, இயலுமை அற்றவர்கள்.

ஆனால் ஒரு ஒழுங்காகான புலம்பெயர் தலைமையால் (Gary?) இது முடியும்.

சம்பந்தனும், சுமந்திரனும் ரணிலின் சாறத்துள்ளும், மோடியின் ஜிப்பாவினுள்ளும் சாவியை தேடினால் கிடைக்காதுதானே?

சாவி மேற்கில் உள்ளது. 

ஆற்றில் இருப்பதை குளத்தில் தேடுவது பலனழிக்காது.

பிகு

மேற்கை நோக்கி தமிழர் தரப்பு நகர்ந்து விட கூடாது என்பதில் இலங்கையும், றோவும், தம்மை இந்திய எதிர்பாளர் என பாசாங்கு செய்தபடி றோ போடும் ரொட்டி துண்டுக்கு வாலாட்டும் நபர்களும் மிக அவதானமாக இருக்கிறார்கள் என்பது இந்த திரியை வாசித்தால் புரியும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கின் கலாச்சாரத்தில் நன்கு ஊறிய, மேற்கின் விழுமியங்கள் மீது ஈடுபாடு கொண்ட, கிழக்கத்தேய இனம் ஒன்று தெற்காசியாவில் காலூன்றும்.

மேலும், இவ்வாறமையும் ஒரு தமிழ் அரசானது அமேரிக்க, பிரித்தானிய, கனேடிய, ஐரோப்பிய அவுஸ்ரேலிய, தமிழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து, தமிழர் நலனையும், அமெரிக்க (மேற்கின்) நலனையும் சமாந்தரமா முன்நகர்த்தும் என்பது தவிர்க்கவியலாதது.

மேலே @Kadancha கொடுத்த இஸ்ரேல் உருவாக்கத்துக்காக யூதர் வைத்த வாதத்தை மொழி மாற்றி யூதர் என்ற இடத்தில் தமிழர் என பிரதியீடு செய்துள்ளேன்.

சாவி எது என்பது தெளிவு. அதை எப்படி அடைவது என்பதை பற்றித்தான் நாம் விவாதிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 நாம் மேற்குலகுடன் கூடவே பயணிக்கவேண்டும் என்பதை அறுத்துறுத்துக்  கூறுவதைக் காட்டுவதில்  உள்ள  ஆர்வத்தைவிட, இன்னொருவனைத் துரோகியாகக் காட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுவது   இந்தத் திரியின் தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் தொர்பேயில்லாத விடயம். 

இது அவர்களது உண்மையான நோக்கத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

2 hours ago, Kadancha said:

இது பொருத்தமான காரணமாக வரலாம் ஈழத்தமிழருக்கும்.

யூதருக்கான நாட்டுக்கு அடிகோலும் அமெரிக்கா ராஜாங்க திணைக்களத்தின் நியாப்படுத்தலின் அத்தியாய தலைப்பு.

Vide William Yale of the US State Dept who wrote in 1919:

“An Eastern race well versed in Western culture and profoundly in sympathy with Western ideals will be established in the Orient. Furthermore, a Jewish state will inevitably fall under the control of American Jews who will work out, along Jewish lines, American ideals and American civilization.”

https://www.google.co.uk/books/edition/Afflicted_Powers/h5CWQuNsVzgC?hl=en&gbpv=1&dq=“An+Eastern+race+well+versed+in+Western+culture+and+profoundly+in+sympathy+with+Western+ideals+will+be+established+in+the+Orient.+Furthermore,+a+Jewish+state+will+inevitably+fall+under+the+control+of+American+Jews+who+will+work+out,+along+Jewish+lines,+American+ideals+and+American+civilization.”&pg=PA108&printsec=frontcover

(google இல் தேடி பார்க்கவும்) 
 
நீங்கள் கூறுவதில் எனக்குள்ள கேள்வி : இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழரது இருப்பை/குடிப்பரம்பலை கேள்விக்குள்ளாக்கிவிட்டு எப்படி மேற்கு தமிழரைத் தனக்குச் சாதகமாகப் பாவிக்க முடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

பலஸ்தீன விடயம் -  உணர்சிகளை தள்ளி வைத்து விட்டு நடப்பதை தமிழர் தரிசிக்க ஒரு நல்ல உதாரணம்.........

மிகச் சிறப்பாக இலகுவாக எல்லாமே விளங்கபடுத்தியுள்ளீர்கள்.

தமிழர் நலன் ஒரு போதும் மேற்கின் நலனுக்கு எதிரானதாக அமைய தேவையில்லை. We are natural allies. 👍

மேற்கின் நலனில் தான் எமது நலன்கள் தங்கியுள்ளது . 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர் நலன் ஒரு போதும் மேற்கின் நலனுக்கு எதிரானதாக அமைய தேவையில்லை. We are natural allies. 👍

மேற்கின் நலனில் தான் எமது நலன்கள் தங்கியுள்ளது . 

எமது நலனில்தான் மேற்கின் நலன் தங்கியிருக்கிறது என்றும் கூறலாம்  😉

ஏனென்றால் சிங்களம் எப்போதும் சீனச் சார்பானது, இந்தியா ரஸ்ய+தனது நலன் சார்ந்தது வரலாறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.