Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குஷ்பு முற்ற வெளிக்கு வர மாட்டார்? - நிலாந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு முற்ற வெளிக்கு வர மாட்டார்? நிலாந்தன்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா.

adminNovember 19, 2023
kushboo-kala-master.jpg?fit=1170%2C658&s

மற்றொரு இசை நிகழ்ச்சியும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அடுத்த மாதம் 21 ஆம் தேதி யாழ்.முத்த வெளியில் தமிழகப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அந்நிகழ்ச்சியைப் பிரபல்யப் படுத்துவதற்காக களமிறக்கப்பட்ட இரண்டு தமிழகப் பிரபல்யங்கள் சர்ச்சையாக மாறியிருக்கிறார்கள்.

ஒருவர் நடன ஆசிரியர் கலா மாஸ்டர். மற்றவர் நடிகை குஷ்பு. கலா மாஸ்டர் கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியை நடாத்தியவர். இறுதிக்கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர் தமிழக மக்களைத் திசை திருப்புவதற்காக அந்த நிகழ்ச்சியை நடாத்தினார் என்று அவர் மீது குற்றச்சாட்டு. குஷ்பு தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் கூறும் போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என்று வர்ணித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு.

அந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துவது கனடாவில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழர். இந்திய நடிகை ரம்பாவின் துணைவர். புலம்பெயர்ந்த நாடுகளில் வெற்றி பெற்ற முதலீட்டாளர்களில் ஒருவர்.  யாழ்ப்பாணம் கந்தர் மடம் சந்தியில் நோர்தேன் யுனி என்ற பெயரில் சிறிய பல்கலைக்கழகத்தை கட்டியிருக்கிறார். அவர் ஹரிஹரனை முத்த வெளியில் பாட வைக்க விரும்புகிறார். அந்த நிகழ்ச்சியின் கவர்ச்சியைக் கூட்டுவதற்காக இரண்டு பிரபல்யங்களை இணைத்திருக்கிறார். அதுதான் இப்பொழுது பிரச்சினை.

அப்படித்தான் கடந்த மாதம் நடந்த சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியும் சர்ச்சையாக மாறியது. ஆனால் சந்தோஷ் நாராயணன் கூறுகிறார் “நான் ஈழத்தமிழ்க் குடும்பத்தில் ஒருவன்” என்று. அவருடைய மனைவி கோண்டாவிலைச் சேர்ந்தவர். சீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சியில் பேசும்போது, அவர் புலம்பெயர்ந்த தமிழர்களே தன்னைப் போன்ற இசையமைப்பாளர்களுக்கு “சாப்பாடு போடும் கடவுள்கள்” என்று வர்ணிக்கின்றார். இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்றும் கூறுகிறார்.

அவரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தவர் ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர். கோடம்பாக்கத்தில் வெற்றிகரமாக முதலீடு செய்தவர். இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையிலான முரண்பாட்டைத் தீர்த்து வைக்குமளவுக்கு கோடம்பாக்கத்தில் செல்வாக்கு மிக்கவர். கொழும்பில் வங்குரோத்தாகிய எதிரிசிங்க வணிகக் குழுமத்தை விலைக்கு வாங்கியவர். ஐந்து சிங்களப் படங்களில் அவர் முதலீடு செய்கிறார். அண்மையில் அவர் தனது மனைவியோடு சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தார். இலங்கையில் தனது சொத்துக்களையும் முதலீட்டையும் பாதுகாப்பதற்கு அவருக்கு அது தேவையாக இருக்கலாம்.

சந்தோஷ் நாராயணன், ஹரிஹரன் போன்றவர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கு முதலீடு செய்வது புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள். அவர்களும் போரின் விளைவுகள்தான். அவர்களும் ஈழத் தமிழ் ரத்தம்தான். அவர்கள் அந்நியர்கள் அல்ல. அவர்களோடு தமிழ் செயற்பாட்டாளர்களும் கட்சிகளும் உரையாட வேண்டும். முதலாளிகள் எப்பொழுதும் லாபத்தை நோக்கியே சிந்திப்பார்கள். அது அவர்களுடைய தொழில் ஒழுக்கம். ஆனால் அரசியல் செயற்பாட்டாளர்கள் அந்த முதலாளிகளை எப்படி ஆகக்கூடிய பட்சம் தேசியப் பண்பு மிக்கவர்களாக மாற்றுவது என்று சிந்தித்து உழைக்க வேண்டும். அதுதான் தேசிய அரசியல் ஒழுக்கம். அவர்களை எப்படித் தேச நிர்மாணத்தின் பங்காளிகளாக மாற்றுவது?

முதலில் ஈழத் தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். தோல்விகளுக்கும் பின்னடைவுகளுக்கும் பிறத்தியாரை எப்பொழுதும் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஈழத் தமிழர்களுக்காக ஈழத் தமிழர்கள்தான் போராட வேண்டும். தமிழகத்தவர்களோ அல்லது வெளிநாடுகளில் இருப்பவர்களோ எந்தளவுக்குப் போராடலாம் என்பதில் வரையறைகள் உண்டு. இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஈழத் தமிழர்கள் அல்லாதவர்களிடம் எதை எதிர்பார்க்கலாம்? எந்த அளவுக்கு எதிர்பார்க்கலாம்? என்பதில் பொருத்தமான விளக்கங்கள் இருக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு சிங்கள முற்போக்குவாதியிடம் அவர் தமிழ்த் தேசியவாதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. அவர் இனவாதத்துக்கு எதிராக இருந்தாலே போதும். சிங்கள திரைப்படக் கலைஞர் பிரசன்ன விதானகே எடுக்கும் படம், தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. அது இனவாதத்தை எதிர்த்தாலே போதும். அதுவே தமிழ் அரசியலுக்கு வெற்றிதான்.

தமிழரல்லாத வேற்று இனத்தவர் ஒருவர் கட்டாயம் தமிழ்த் தேசியவாதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் தமிழ் மக்களின் நியாயத்தை ஏற்றுக் கொண்டாலே போதும்.

அப்படித்தான் தமிழகமும். தமிழகத்தில் இருப்பவர்கள் 100% ஈழத் தமிழ் அபிமானிகளாக இருக்க வேண்டும் என்றில்லை. அங்கே 19 பேர் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள் என்பது மகத்தானது. அதற்காக எல்லாரையும் தீக்குளிக்கக் கேட்கலாமா? அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக மாநில அரசாங்கத்தின் மீதும் மத்திய அரசாங்கத்தின் மீதும் அழுத்தங்களைக் கொடுத்தாலே அது மகத்தான விளைவுகளைத் தரும்

2009க்குப் பின் தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளும் ஈழத்தமிழ் அரசியலில் இருந்து விலகிச்செல்லும் போக்கு அதிகரித்துவரும் ஒரு பின்னணியில், ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து தமிழகத்தை எப்படிக் கையாள்வது என்ற அடிப்படையிலும் தமிழகப் பிரபல்யங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை அணுக வேண்டும்.
.
ஏன் அதிகம் போவான்? தாயகத்தில் சொந்தத் தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் தமிழ்த் தேசிய அரசியற் பரப்புக்கு வெளியே நிற்கிறார்கள். டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அங்கஜனிற்கும் பிள்ளையானுக்கும் வாக்களித்தவர்களை எதிரிகளாகப் பார்க்கலாமா? அவர்கள் எங்களுடைய மக்கள் இல்லையா?அவர்களை எப்படித் தமிழ்த் தேசிய நீரோட்டத்துக்குள் ஈர்த்தெடுப்பது என்றுதானே சிந்திக்க வேண்டும்? தாயகத்திலேயே தமிழ்ச் சனத் தொகையில் ஒரு தொகுதி தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே நிற்கின்றது. அப்படியென்றால் தாயகத்துக்கு வெளியே நிலைமை எப்படியிருக்கும்? அவ்வாறு தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே நிற்பவர்களை தமிழ்த் தேசிய நீரோட்டத்துக்குள் ஈர்த்தெடுப்பதுதான் தேசத்தை திரட்டும் அரசியல்.

புலம்பெயர்ந்த தமிழர்களிடம்கூட எதுவரை எதிர்பார்க்கலாம் என்பதில் வரையறைகள் உண்டு. ஏனெனில் அவர்கள் கள யதார்த்தத்திற்கு வெளியே வசிக்கின்றார்கள். அவர்களை எப்படி ஆகக்கூடிய பட்ஷம் தேச நிர்மாணத்தின் பங்காளிகளாக மாற்றுவது என்றுதான் சிந்திக்கலாம்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு விதத்தில் தாயகத்தின் நீட்சியும் அகற்சியுந்தான். ஆனால் அவர்கள்தான் தமிழக சினிமா பிரபல்யங்களை அழைத்து கோடிக்கணக்கான காசைச் செலவழித்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள். அண்மையில் கனடாவில் நடந்த சிற் சிறீராமின் இசை நிகழ்ச்சிக்குரிய பட்ஜெட் 10 லட்சம் கனேடிய டொலர்கள் என்று கூறப்படுகிறது.

குஷ்பு ஒரு நடிகை மட்டுமல்ல. அரசியல்வாதியும் கூட. 2010ல் அவர் திமுகவில் சேர்ந்தார் .2014 இல் அவர் கொங்கிரஸில் சேர்ந்தார். 2020இல் அவர் பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். அதாவது இப்பொழுது அவர் ஆளுங்கட்சியில் இருக்கிறார் 2014 இல் அவர் கனடாவுக்குப்போனவர். மார்க்கம் fஏயர் மைதானத்தில் நடந்த அவருடைய நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கு பற்றினார்கள். அதில் அவருடைய ரசிகர்கள் அவருடைய காலில் விழுந்ததைத் தான் கண்டதாக ஒரு சமூக செயற்பாட்டாளர் சொன்னார். பிந்திக் கிடைத்த தகவலின்படி ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

ஒருபுறம் புலம்பெயர் தமிழர்கள் தமிழகச் சினிமாப் பிரபல்யங்களை அழைத்து கோடிக்கணக்கில் காசைக்கொட்டிக் கொண்டாடுகிறார்கள். இன்னொரு புறம் நீதிக்கான போராட்டத்தின் ஈட்டி முனையாகவும் காணப்படுகிறார்கள். இந்த இரண்டும் கலந்ததுதான் புலம்பெயர்ந்த வாழ்வின் யதார்த்தம். எனவே புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் தாயகத்தில் முதலீடு செய்யும் பொழுது அதனை கொழும்பு மைய நோக்கு நிலையில் இருந்து செய்வதற்கு பதிலாக தேச நிர்மாணம் என்ற நோக்கு நிலையில் இருந்து செய்யுமாறு ஊக்குவிக்க வேண்டும். தாயகத்தில் உள்ள கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் கருத்துருவாக்கிகளும் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அதை நோக்கி முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.

2009 க்கு பின் கைபேசியால் காட்டிக் கொடுக்கப்பட்ட நாடு இலங்கை. மே18க்கு பின் யுத்தகளத்தில் எடுக்கப்பட்ட எல்லா படங்களும் இலங்கை அரச படைகள் தமது கமராக்களினாலும் தமது கைபேசிகளாலும் எடுத்த படங்கள்தான். அந்தப் படங்கள்தான் பிந்நாளில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச் சான்றுகளாக மாறின. அதாவது கைபேசியால் காட்டிக் கொடுக்கப்பட்ட ஒரு நாடு. அதுபோலவே ஈழத் தமிழர்களும் 2009க்கு பின் சமூக வலைத்தளங்களால், கைபேசிச் செயலிகளால் சிதறடிக்கப்பட்ட ஒரு தேசிய இனமாக மாறி வருகிறார்கள். ஈழத் தமிழர்கள் ஒருவர் மற்றவருக்கு எதிராக அள்ளி வீசும் அவதூறுகளால் தேசம் சிதறிக் கொண்டே போகிறது. சமூக வலைத்தளங்களால் சிதறடிக்கப்பட்ட ஒரு தேசம்?

இனப்படுகொலையால் புலப் பெயர்ச்சியால் மெலிந்து சிதறிய ஒரு சிறிய தேசம், சமூக வலைத்தளங்களில் மேலும் மேலும் சிதறி கொண்டு போகிறது. யாதும் ஊராகப் புலம் பெயர்ந்து விட்டோம். ஆனால் யாவரும் கேளீரா ? அதாவது யாவரும் நண்பர்களா? தீதும் நன்றும் பிறர் தருவதில்லை. நாமே நமக்குத் தேடிக் கொள்பவையா?
 
https://globaltamilnews.net/2023/197527/

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையின் ஒரு பகுதி... இணைத்தவர் கவனத்திற்கு. 🙏

Quote

முதலில் ஈழத் தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். தோல்விகளுக்கும் பின்னடைவுகளுக்கும் பிறத்தியாரை எப்பொழுதும் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஈழத் தமிழர்களுக்காக ஈழத் தமிழர்கள்தான் போராட வேண்டும். தமிழகத்தவர்களோ அல்லது வெளிநாடுகளில் இருப்பவர்களோ எந்தளவுக்குப் போராடலாம் என்பதில் வரையறைகள் உண்டு. இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஈழத் தமிழர்கள் அல்லாதவர்களிடம் எதை எதிர்பார்க்கலாம்? எந்த அளவுக்கு எதிர்பார்க்கலாம்? என்பதில் பொருத்தமான விளக்கங்கள் இருக்க வேண்டும்.

இந்த தெளிவினை தான் நான் வலியுறுத்துகிறேன்.

அவர்கள், தலைவரை, தலைவரின் ஆலோசனைப்படி, தமது நிலத்தில் சாதிய ஒழிப்புக்காக கொண்டு போனால், அதனை எமது அரசியல் போராட்டத்துடன் போட்டு குழப்பி, மாங்கு, மாங்கு என்று மாயக்கூடாது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய அருமையான கருத்து.  எமக்காத நாம் போராடிக்கொண்டு உலக நாடுகளை எம்மவசம் இழுக்கும் ராஜதந்திரத்துடன் செயற்பட வேண்டும்.  இன்றுவரை அதை சரிவர செய்ய தெரியாத நாம்  அடுத்தவன் மீது பழி போட்டு தப்பிக்கும் அரசியலைச் செய்வது  என்றைக்கும் எமக்கு கை கொடுக்காது மாறாக  மேலும்  எதிர்மறை விளைவுகளையே தரும்  என்பதை எமது அரசியலைக் கையாள்வோர்  (புலம் பெயர் நாடுகளில் இயங்குவோர் உட்பட) உணர்ந்து கொள்ள வேண்டும். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, island said:

ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய அருமையான கருத்து.  எமக்காத நாம் போராடிக்கொண்டு உலக நாடுகளை எம்மவசம் இழுக்கும் ராஜதந்திரத்துடன் செயற்பட வேண்டும்.  இன்றுவரை அதை சரிவர செய்ய தெரியாத நாம்  அடுத்தவன் மீது பழி போட்டு தப்பிக்கும் அரசியலைச் செய்வது  என்றைக்கும் எமக்கு கை கொடுக்காது மாறாக  மேலும்  எதிர்மறை விளைவுகளையே தரும்  என்பதை எமது அரசியலைக் கையாள்வோர்  (புலம் பெயர் நாடுகளில் இயங்குவோர் உட்பட) உணர்ந்து கொள்ள வேண்டும். 

ஆமாம்

அவர்கள் உணரவேண்டும் செய்யவேண்டும். நாமல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தன் குஷ்பு ரசிகரோ.. ஏன் இந்தக் கூவு கூவுகிறார்.

அசினை.. நாமல் கூட்டிக் கொண்டு வந்த போதும் எதிர்ப்பு இருந்தது.

தமிழகத்தில் இருந்து போர் அவலம் ஓயமுன் ஓடி வந்து கனிமொழி.. கும்பல் மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தியதோடு சரி.. இன்று வரை ஈழத்தமிழர்களுக்காக ஒரு குரல் கூட எழுப்பியதில்லை. இத்தனை ஆக்கிரமிப்புக்களும் துயரங்களும் நடந்தேறிய போதும்.

ஈழத்தமிழர்கள் கேட்டார்களா.. வந்து மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தச் சொல்லி..???!

அதேபோல்.. விஜய் சேதுபதி.. முரளியாக நடிக்க ஒத்துக்கொண்ட போதும் எதிர்ப்புக் கிளம்பியது.

கனடாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி மாவீரர் வாரத்தில் வந்த போதும் எதிர்ப்புக் கிளம்பியது.

.. சிங்கள அரச கூலிகளுக்கு வாக்குப் போடும்.. மக்கள் எந்தக் காலத்தில் தான் இருக்கவில்லை. புலிகள் காலத்திலும் சில இலவசங்களுக்காக.. சலுகைகளுக்காக.. ஆக்கிரமிப்பு துயரத்தில் இருந்து தப்ப.. என்று பல வகையில் வாக்குப் போட்ட மக்கள் இருக்கினம். எல்லோரும்.. டக்கிளசை.. அங்கயனை விரும்பி வாக்குப் போடினம் என்றில்லை. கூட்டமைப்பின் இனத் துரோகங்களுக்கு எதிர்ப்புக்காட்டவும் போடினம். குறிப்பாக 2009 மே க்குப் பின்.. இந்த நிலை அதிகரித்திருக்குது. காரணம் கூட்டமைப்பு கூட்டமைப்பாகவே இல்லை. 

அதற்காக.. ஈழத்தமிழினத்தின் துயர்களை.. துயர வரலாறுகளை.. மறைக்கவோ.. அதன் வரலாற்றுத்தேவைகளை மறைக்கவோ.. மழுங்கடிக்கவோ.. யார் முனைந்தாலும்.. அது கண்டிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில்.. குஷ்பு.. கலா மாஸ்டர் போன்றவர்களுக்கு அவர்கள் சார்ந்தவர்களுக்கு சரியான புரிதலை உண்டு பண்ண வேண்டியது கட்டாயம். போர் முடிந்த கையோடு.. ஈழத்தில்.. தமிழர்களுக்கு எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து விட்டது போல் காட்சிப்படுத்தி ஆட்சி செய்யும் திமுக.. அதிமுக.. காங்கிரஸ்.. பாஜக.. உட்பட்ட கட்சிகளுக்கும்.. ஈழத்தமிழினம்.. இன்னும் சோரம் போகவில்லை என்ற செய்தியை சொல்ல வேண்டும். ஏனெனில்.. அவர்கள் இப்போ.. ஹிந்திய நலனை மையப்படுத்தி தங்களின் சுயநலனுக்கு ஆட்சி செய்பவர்களாக உள்ளனர். அதற்கு ஈழத்தமிழர்களின் துயர்களை குழிந்தோண்டிப் புதைக்கவும் விளைகின்றனர். சினிமா.. களியாட்டாங்கள்.. ஹிந்திய துணை தூதரக விரிவாக்கங்கள்.. மூலம்.. ஈழ ஊடுருவலை தமக்கு சாதமாக்க முனைகின்றனர். இது சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய ஒரு சூழல் அல்ல. மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழல். மக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வூட்ட வேண்டிய சூழல். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு (தனியார்) பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப் பட்டு அதனை அறிமுகப் படுத்தலுக்கு பாடுபவர்கள் , ஆடுபவர்கள் , சினிமாக்கார ர்கள் , சர்ச்சைக்குரியவர்கள் ( சர்ச்சைக்குரிய நடிகை குஷ்புவை கொண்டுவர முயற்சித்து அதனை எதிர்ப்பாக்கி , அதுவே பெரிய விளம்பரமாகி) அரசியல்வாதிகள் , ஆட்சிமட்டத் தொடர்பு மற்றும் விருந்தினர் களியாட்ட மாளிகையை அந்த கல்வி நிறுவனத்திற்காக பெற்றுக் கொள்ளுதல் போன்ற , ஒரு பொருளையோ அல்லது வியாபாரத்தையோ அறிமுகப் படுத்துவது போன்ற யுக்திகள் அரங்கேற்றப் படுகின்றன. எனக்கென்னமோ இது ஒரு உயர்கல்வி நிறுவனத்தை/ பல்கலைக்கழகத்தை அறிமுகப் படுத்தலுக்காக பொருத்தமான வழிமுறைகளாக தெரியவில்லை.

அப்படியென்றால் எது சரியான அணுகுமுறை என்று நீங்கள் கேட்க கூடும். கல்விமான்களை கொண்டுவருதல், உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடனான உறவை வளர்த்தல் , உலகத்தின் முதல் தர பல்கலைக் கழகங்களுடனான கூட்டு , குறித்த பல்கலைக் கழகத்தில் கற்றால் அதன் தரம் , வேலை வாயப்பிற்கான சந்தர்ப்பம் , உலக அளவிலான அங்கீகாரம் / உலக நாடுகளுக்கு குடிபெயரந்து செல்லக் கூடிய தகமை போன்றவற்றை மையப் படுத்தியதாக அது இருத்தல் பொருத்தமானது என்று நம்புகிறே

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தன் ஒரு இந்திய சார்புஆய்வாளர். அவருடைய கருத்து இந்திய அரசின் மறைமுகத்திட்டங்களைக் காட்டிக்கொடுக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

நீங்க யாழின் பொக்கிஷம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ooravan said:

ஒரு (தனியார்) பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப் பட்டு அதனை அறிமுகப் படுத்தலுக்கு பாடுபவர்கள் , ஆடுபவர்கள் , சினிமாக்கார ர்கள் , சர்ச்சைக்குரியவர்கள் ( சர்ச்சைக்குரிய நடிகை குஷ்புவை கொண்டுவர முயற்சித்து அதனை எதிர்ப்பாக்கி , அதுவே பெரிய விளம்பரமாகி) அரசியல்வாதிகள் , ஆட்சிமட்டத் தொடர்பு மற்றும் விருந்தினர் களியாட்ட மாளிகையை அந்த கல்வி நிறுவனத்திற்காக பெற்றுக் கொள்ளுதல் போன்ற , ஒரு பொருளையோ அல்லது வியாபாரத்தையோ அறிமுகப் படுத்துவது போன்ற யுக்திகள் அரங்கேற்றப் படுகின்றன. எனக்கென்னமோ இது ஒரு உயர்கல்வி நிறுவனத்தை/ பல்கலைக்கழகத்தை அறிமுகப் படுத்தலுக்காக பொருத்தமான வழிமுறைகளாக தெரியவில்லை.

அப்படியென்றால் எது சரியான அணுகுமுறை என்று நீங்கள் கேட்க கூடும். கல்விமான்களை கொண்டுவருதல், உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடனான உறவை வளர்த்தல் , உலகத்தின் முதல் தர பல்கலைக் கழகங்களுடனான கூட்டு , குறித்த பல்கலைக் கழகத்தில் கற்றால் அதன் தரம் , வேலை வாயப்பிற்கான சந்தர்ப்பம் , உலக அளவிலான அங்கீகாரம் / உலக நாடுகளுக்கு குடிபெயரந்து செல்லக் கூடிய தகமை போன்றவற்றை மையப் படுத்தியதாக அது இருத்தல் பொருத்தமானது என்று நம்புகிறே

நாங்க இந்தியன் ஆமியின் slr வெடிசத்தத்தில் இந்த நாடுகளுக்கு வந்து சேர்ந்தோம் இனி வருபவர்கள் அங்கு உள்ள ஐஸ் போதை கஞ்சா பவுடர் வாழ் வெட்டு குழுக்களிடம் தப்பிக்க பெற்றோரோ கனடா போன்ற குளிர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள் . அங்கு நடக்கும் விடையத்தை முதலில் விளங்கி கொள்ளுங்க அதன்பின்தான் எல்லாமே .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

கட்டுரையின் ஒரு பகுதி... இணைத்தவர் கவனத்திற்கு. 🙏

இந்த தெளிவினை தான் நான் வலியுறுத்துகிறேன்.

அவர்கள், தலைவரை, தலைவரின் ஆலோசனைப்படி, தமது நிலத்தில் சாதிய ஒழிப்புக்காக கொண்டு போனால், அதனை எமது அரசியல் போராட்டத்துடன் போட்டு குழப்பி, மாங்கு, மாங்கு என்று மாயக்கூடாது. 

தலைவர் சாதிய ஒழிப்புப் போராட்டத்தையா நடாத்தினார்? அவர் ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை தன்னலமற்று நடாத்தினார். சுதந்திரப் போராட்டத்தின் மூலமாக வரும் மாற்றங்களினூடாக சாதியம் நீர்த்துப்போய் காலப்போக்கில் இல்லாமல் போகும் என்பதுதான் புலிகளின் சிந்தனைமுறையாக இருந்தது.

தமிழ்நாட்டில் சாதியத்தின் வீரியத்தைக் குறைத்ததும், இன்றும் சனாதன பிஜேபி பிற மாநிலங்கள் போல செல்வாக்குச் செலுத்தமுடியாமல் இருப்பதற்கும் தந்தை பெரியாரின் வழிவந்தவர்களின் செயற்பாடுகள்தான் காரணம். அண்ணன் சீமானும் ஒரு காலத்தில் தந்தை பெரியாரின் சீடர்.

தனது சுயநல அரசியலுக்காக தலைவரையும், புலிகளினது சின்னத்தையும் “பிராண்டாக”  பாவித்து, தமிழ்நாட்டு கட்சி அரசியலுக்குள் புலிகளை உள்நுழைத்தது புலிகளின் தமிழ்நாட்டு கட்சி அரசியலுக்குள் தலை நுழைப்பதில்லை என்ற கொள்கைக்கு முரணானது. இதனால் அண்ணன் சீமானுக்கு ஆதாயம் கிட்டியிருக்கலாம். ஆனால் புலிகள் மீதும், தலைவர் மீதும் வெறுப்பைத் தூண்டும் கட்சிப் பிரச்சாரங்களைத் தூண்டியது ஈழத் தமிழருக்குப் பின்னடைவுதான்.

பட்டி, தொட்டி எங்கும் தலைவரையும், புலிகளையும் கொண்டு சென்றவர் என்று நாதம்ஸ் புளகாங்கிதம் அடைந்து ஒரு பதிவை முன்னர் இட்டிருந்தார். ஆனால் அண்ணன் சீமான் தனது பிரச்சார வீடீயோக்களில் தலைவர் படம் பின்னுக்கு இருப்பதை தவிர்ப்பது சமூக ஊடகங்கள் வீடியோக்களைத் தடைசெய்துவிடும் என்பதனால்தான். ஆக வெறும் உள்ளூர் பிரச்சாரத்திற்குத்தான் தலைவரும், புலிகளும்!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

உங்கள் புரிதலும், எனது புரிதலும் மிக வித்தியாசமானது.

உங்கள் புரிதலை மாற்றக் கோரி, பக்கம், பக்கமாக எழுதும் வீண் வேலை செய்யப் போவதுமில்லை.

நேரமும் இல்லை.

உங்களிடம் ஒரே கேள்வி: தமிழகத்தில் அரசியல் செய்பவர்களை (தமிழர்களை) எல்லாம் சாதியத்தினுள் அடக்கும் நிலையில், பிரபாகரன் தான் (தமிழர்) தலைவன், நானல்ல என்று சொல்லி கட்சி நடத்தும் ஒருவரை சாதியத்தினுள் அடக்க முடியாமல் இருப்பதன் காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்.

நன்றி🙏

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப குசுப்பு வரமாட்டாவோ😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.