Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+
15 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

விசுகண்ணையும் உதிலை ஓராள்..😂 உத நம்பி இதுக்கு விசுகண்ணை குடுத்த பில்டப் இருக்கே..🤦🏻

அட அவர் உதை நம்பேலை...

தான் துவாரகா அக்காவின்ர குரலையே நேரில கேட்டனான் என்டெல்லோ திண்ணையில அறிவிச்சவர்... அவற்ற எல்லையே வேறை... ஆள் கதைச்சுப் போட்டுத்தான் உறுதிப்படுத்துவார்😜😂

(அன்டைகே நினைச்சு வைச்சனான், 27 ம் திகதி ஐயாவை அறுக்கிறது என்டு...)

மட்டுமில்லாமல், அவர் பாட கருப் பிள்ளையார் ஆட, ஒரே கூத்தா இருந்தது நேற்று.😂

இன்டைக்குப் பாருங்கோ, ரண்டுபேரையும் இந்தத் திரிப்பக்கமே காணேலை... வந்தால் மொங்கப்படுவம் என்டு தெரிஞ்சு ஓடிற்றினம்.😝

  • Replies 300
  • Views 38.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

    விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    "தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன்  களத்தில் நிற்பாள்"           -காசியானத்தன்   “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்..  இந்தியாவும் புல

  • * Making of the "Thuvaraka"? உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள். இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

நான் உரையை கேட்டேன். முன்னைய மாவீரர் தின உரைகளில் இருந்து பலவற்றை உருவித் தொகுக்கப்பட்டுள்ளது. புதிய செய்தி என்னவென்றால் புலம்பெயர் தமிழர்கள் வறுமையில் வாடும் மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் உதவவேண்டும் என்பதுதான். 

தேசியத்தலைவரின் மகள் என்று சொல்லும் ஒருவர் போராளிகளாக தமது உயிரையும் கொடுக்க துணிந்தவர்களை முன்னாள் போராளிகள் என்று ஏன்  விளிக்கின்றார்?

ஒரு அமைப்பை தலைமைதாங்க வருபவர் உறுப்பினர்களை முன்னாள் போராளிகள் என்றால் இந்த அமைப்பின் தற்போதைய உறுப்பினர்கள் யார்?

மேலும், துவாரகாவாகத் தோன்றியவருக்கு தமிழ் உச்சரிப்பை சரியாகச் சொல்லிக்கொடுக்கவில்லை. லகரம் மோசமாக இருக்கின்றது.

இறுதியாக அவர் சொன்னது சரிதான்!

”புளிகளின் தாகம் தமிளீளத் தாயகம்”

நான் உந்த‌ மேக்க‌ப் மாமியின் பேச்சை ஒரு நிமிட‌ம் கேட்டேன் அதோட‌ நிப்பாட்டி போட்டேன்..............யூடுப்பில் க‌ழுவி ஊத்தி போட்டேன்............எல்லாரும் உண்மைய‌ வெளி கொண்டு வ‌ந்தால் அடிச்சு சொல்லுறேன் உந்த‌ மேக்க‌ப் மேட‌ம் அடுத்த‌ மாவீர‌ நாள் உரைக்கு வ‌ர‌ மாட்டா............நான் ஒரு ப‌டி மேல‌ போய் எழுதி விட்டேன் இந்த‌ தொழில் செய்வ‌தும் பார்க்க‌ வேறு தொழில் செய்து பிழைக்கலாம் என்று..............

எங்க‌ட‌ ச‌கோத‌ரியின் தியாக‌த்தை கொச்சை ப‌டுத்தினால் யாருக்கு தான் கோவ‌ம் வ‌ராம‌ இருக்கும் பெரிய‌ப்ப‌ரே நீங்க‌ளே சொல்லுங்கோ............ந‌ன்னிச் சோழ‌ன் இணைத்த‌ ப‌ட‌த்தை பார்த்து க‌ண் க‌ல‌ங்கி விட்டேன்.............நாம் ப‌டும் வேத‌னை யாருக்கு தெரியும்😢.............. 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

விசுகண்ணையும் உதிலை ஓராள்..😂 உத நம்பி இதுக்கு விசுகண்ணை குடுத்த பில்டப் இருக்கே..🤦🏻

நான் எந்த உந்துதலும் கொடுக்கவில்லை. செய்தியை மட்டுமே பதித்தேன். 

நன்றாக சிரிப்பு குறியீடு இடுங்கள்

ஆரவாரம் செய்யுங்கள்

என் நம்பிக்கையின் தற்கொலையை. 

தற்கொலை செய்தது நானல்ல. தமிழினம். இனி பாழுங்கிணற்றிற்குள். ...😭

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நன்னிச் சோழன் said:

அட அவர் உதை நம்பேலை...

தான் துவாரகா அக்காவின்ர குரலையே நேரில கேட்டனான் என்டெல்லோ திண்ணையில அறிவிச்சவர்... அவற்ற எல்லையே வேறை... ஆள் கதைச்சுப் போட்டுத்தான் உறுதிப்படுத்துவார்😜😂

(அன்டைகே நினைச்சு வைச்சனான், 27 ம் திகதி ஐயாவை அறுக்கிறது என்டு...)

மட்டுமில்லாமல், அவர் பாட கருப் பிள்ளையார் ஆட, ஒரே கூத்தா இருந்தது நேற்று.😂

இன்டைக்குப் பாருங்கோ, ரண்டுபேரையும் இந்தத் திரிப்பக்கமே காணேலை... வந்தால் மொங்கப்படுவம் என்டு தெரிஞ்சு ஓடிற்றினம்.😝

நீங்கள் மொக்கையீனப்படுத்தப்போவது என்னை அல்ல தொடரட்டும் உங்கள் பணி. 

  • கருத்துக்கள உறவுகள்

404831984_760488215919512_22582973874879

அசலும் போலியும். 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்னிச் சோழன்
உங்கள் கருத்துக்களில் இப்போதெல்லாம் ஒருவித வன்ம, காழ்ப்பு பாணி 
இருப்பதை போல தெரிகிறது. நீங்கள் எதோ ஒரு ஆர்வத்தில் அப்படி பதிவிட்டாலும், உங்கள் தாயகம், தேச விடுதலை நோக்கிய செயல்பாடுகளுக்கு சற்றே நெருடலாக இருக்கிறதை போல நான் உணர்கிறேன்.
தவறாக எதுவும் சொல்லி இருந்தால் மன்னிக்க.

  • கருத்துக்கள உறவுகள்+
8 minutes ago, Sasi_varnam said:

நன்னிச் சோழன்
உங்கள் கருத்துக்களில் இப்போதெல்லாம் ஒருவித வன்ம, காழ்ப்பு பாணி 
இருப்பதை போல தெரிகிறது. நீங்கள் எதோ ஒரு ஆர்வத்தில் அப்படி பதிவிட்டாலும், உங்கள் தாயகம், தேச விடுதலை நோக்கிய செயல்பாடுகளுக்கு சற்றே நெருடலாக இருக்கிறதை போல நான் உணர்கிறேன்.
தவறாக எதுவும் சொல்லி இருந்தால் மன்னிக்க.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

அந்த வன்மமும் இதுவும் இஸ்ரேல் திரியில் தான். 

இன்று கொஞ்சம் ஓவராகத் துள்ளுவது, இந்தப் போலியின் நாச வேலைத் திட்டத்தால். 

வீரச்சாவடைந்த ஒருவரை வைத்து இவ்வளவு இழிவாக செய்வது எனக்கு துளியும் பிடிக்கவில்லை. அதான் அதற்கு ஆதரவாக முண்டுகொடுப்போருக்கு எதிராக சண்டியன் சின்னத்தம்பியாகி நிற்கிறேன்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

த‌ய‌வு செய்து நிர்வாக‌ம் எங்க‌ளின் க‌ருத்துக்க‌ளை நீக்க‌ வேண்டாம்..........நாம் நாக‌ரிக‌மான‌ முறையில் தான் எழுதுகிறோம்.............எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு மன குமுறல் அதிக‌மாக‌ இருக்கு இப்ப‌ 

பெரிய‌வ‌ர்க‌ள் விடும் பிழைய‌ வ‌ய‌தில் சிறிய‌வ‌ர்க‌ள் சுட்டிக் காட்டுவ‌தில் ஏதும் த‌ப்பு இருக்கா🙏...........ந‌ன்னி சோழ‌ன் எழுதுவ‌து மிக‌ ச‌ரி.............ம‌ரியாதை க‌வுர‌வ‌த்தை நினைத்து.............த‌மிழின‌த்துக்காக‌ த‌ங்க‌ளின் உயிரையே அர்ப்ப‌னித்த‌வ‌ர்க‌ளை கொச்சைப் ப‌டுத்தும் கூட்ட‌ங்க‌ளுட‌ன் சேர்ந்து புர‌ளிய‌ கில‌ப்பி விட்டால் அது வ‌ய‌து வேறு பாடு இன்றி பொது வெளியில் சுட்டிக் காட்ட‌ ப‌டும்🙏🙏🙏

நான் த‌வ‌று செய்தா கூட‌ அந்த‌ த‌வ‌றுக்கு க‌ண்டிப்பாய் நான் பொறுப்பேற்பேன்🙏😢............என‌க்கு ம‌ரியாதைய‌ விட‌ எம் போராட்ட‌ம் முக்கிய‌ம் எம‌க்காக‌ உயிர் நீத்த‌வ‌ர்க‌ளை எப்ப‌வும் போற்றி வ‌ண‌ங்க‌னும் அதுக‌ளின் தியாக‌த்தை கொச்சைப் ப‌டுத்த‌ கூடாது ஒரு போதும்🙏🙏🙏.............

முழுமையாக கேளுங்கள், பலருக்கும் பகிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நன்னிச் சோழன் said:

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

அந்த வன்மமும் இதுவும் இஸ்ரேல் திரியில் தான். 

இன்று கொஞ்சம் ஓவராகத் துள்ளுவது, இந்தப் போலியின் நாச வேலைத் திட்டத்தால். 

வீரச்சாவடைந்த ஒருவரை வைத்து இவ்வளவு இழிவாக செய்வது எனக்கு துளியும் பிடிக்கவில்லை. அதான் அதற்கு ஆதரவாக முண்டுகொடுப்போருக்கு எதிராக சண்டியன் சின்னத்தம்பியாகி நிற்கிறேன்.

க‌ருத்துக்க‌ள‌ம் என்றால் சில‌ ச‌மைய‌ம் க‌ல் எறி விழ‌ தான் செய்யும்..........இதை எல்லாம் க‌ண்டு கொள்ளாம‌ உங்க‌ள் ப‌ணிய‌ திற‌ம் ப‌ட‌ செய்யுங்கோ..........என‌க்கும் ஆர‌ம்ப‌த்தில் மூக்கு மேல் கோவ‌ம் வ‌ந்து விடும்.........குமார‌சாமி தாத்தா ம‌ற்றும் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ளின் அறிவுரைய‌ கேட்டு திருந்தி விட்டேன்...............

நான் த‌வ‌று இழைத்தாலும் அதை சுட்டிக் காட்ட‌ முழு உரிமை உம‌க்கு உண்டு.........அப்ப‌ தான் அதே பிழைய‌ மீண்டும் விடாம‌ பார்த்து கொள்ளுவேன்✌️.............

  • கருத்துக்கள உறவுகள்+
30 minutes ago, Sasi_varnam said:

தவறாக எதுவும் சொல்லி இருந்தால் மன்னிக்க.

தாம் தவறாக எதையும் சொல்லவில்லை.

3 minutes ago, பையன்26 said:

க‌ருத்துக்க‌ள‌ம் என்றால் சில‌ ச‌மைய‌ம் க‌ல் எறி விழ‌ தான் செய்யும்..........இதை எல்லாம் க‌ண்டு கொள்ளாம‌ உங்க‌ள் ப‌ணிய‌ திற‌ம் ப‌ட‌ செய்யுங்கோ..........என‌க்கும் ஆர‌ம்ப‌த்தில் மூக்கு மேல் கோவ‌ம் வ‌ந்து விடும்.........குமார‌சாமி தாத்தா ம‌ற்றும் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ளின் அறிவுரைய‌ கேட்டு திருந்தி விட்டேன்...............

நான் த‌வ‌று இழைத்தாலும் அதை சுட்டிக் காட்ட‌ முழு உரிமை உம‌க்கு உண்டு.........அப்ப‌ தான் அதே பிழைய‌ மீண்டும் விடாம‌ பார்த்து கொள்ளுவேன்✌️.............

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

துவாராக வெளியில் கொண்டு வருகிரம் என்று இறங்கின கூட்டம் அதாங்க நம்ம இந்திய உளவுபிரிவுகள் விழி பிதிங்கி நிக்கினமாமே இனிமேல் என்ன உருட்டு உருட்டினாலும் தமிழ் சனம் நம்ப போவதில்லை அந்தளவுக்கு பழம் சீலை சத்தமாய் கிழிந்து விட்டது .😀

படத்தில் துவரகாவாய் நடிக்க வந்த   வந்த பெண்ணின் ரிசிமூலம் ரசி மூலம் முகவரி எல்லாமே கிழித்து தொங்க போடுகினம் இங்கு போடுமளவுக்கு தரம் இல்லை .

Just now, பெருமாள் said:

துவாராக வெளியில் கொண்டு வருகிரம் என்று இறங்கின கூட்டம் அதாங்க நம்ம இந்திய உளவுபிரிவுகள் விழி பிதிங்கி நிக்கினமாமே இனிமேல் என்ன உருட்டு உருட்டினாலும் தமிழ் சனம் நம்ப போவதில்லை அந்தளவுக்கு பழம் சீலை சத்தமாய் கிழிந்து விட்டது .😀

தலைவருக்கு நான்கு பிள்ளைகள், அதில் கடைசி பிள்ளை ஒருபோதுமே வெளியில் வரவில்லை, எனவே அந்தப் பிள்ளையை வெளியே காட்டுகிறோம் என்று ஒரு திட்டத்துடன் அடுத்த முறை வந்தாலும் வருவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

தலைவருக்கு நான்கு பிள்ளைகள், அதில் கடைசி பிள்ளை ஒருபோதுமே வெளியில் வரவில்லை, எனவே அந்தப் பிள்ளையை வெளியே காட்டுகிறோம் என்று ஒரு திட்டத்துடன் அடுத்த முறை வந்தாலும் வருவார்கள்

பாருங்க ஐடியா சிங்கம் ஐடியா கொடுக்கிறார் நெசமாலுமே அடுத்தமுறை வந்தாலும் வருவாங்க அவ்வளவுக்கு தென்னாசிய இந்திய அரசியல் நிலைமை  அந்த சின்ன  மாலை தீவு காரனும் கெட் அவுட் இந்தியன் என்று சொல்லிபோட்டான் .

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

துவாராக வெளியில் கொண்டு வருகிரம் என்று இறங்கின கூட்டம் அதாங்க நம்ம இந்திய உளவுபிரிவுகள் விழி பிதிங்கி நிக்கினமாமே இனிமேல் என்ன உருட்டு உருட்டினாலும் தமிழ் சனம் நம்ப போவதில்லை அந்தளவுக்கு பழம் சீலை சத்தமாய் கிழிந்து விட்டது .😀

படத்தில் துவரகாவாய் நடிக்க வந்த   வந்த பெண்ணின் ரிசிமூலம் ரசி மூலம் முகவரி எல்லாமே கிழித்து தொங்க போடுகினம் இங்கு போடுமளவுக்கு தரம் இல்லை .

12 minutes ago, நிழலி said:

தலைவருக்கு நான்கு பிள்ளைகள், அதில் கடைசி பிள்ளை ஒருபோதுமே வெளியில் வரவில்லை, எனவே அந்தப் பிள்ளையை வெளியே காட்டுகிறோம் என்று ஒரு திட்டத்துடன் அடுத்த முறை வந்தாலும் வருவார்கள்

6 minutes ago, பெருமாள் said:

பாருங்க ஐடியா சிங்கம் ஐடியா கொடுக்கிறார் நெசமாலுமே அடுத்தமுறை வந்தாலும் வருவாங்க அவ்வளவுக்கு தென்னாசிய இந்திய அரசியல் நிலைமை  அந்த சின்ன  மாலை தீவு காரனும் கெட் அவுட் இந்தியன் என்று சொல்லிபோட்டான் .

இப்ப‌வே போலி முக‌த்தை பார்த்து காரி துப்பி போட்டின‌ம் ம‌க்க‌ள்.........இன்னும் ஒரு கிழ‌மையில் காசி ஆன‌ந்த‌னில் இருந்து ப‌ல‌ர் வெளியில் முக‌ம் காட்ட‌ மாட்டின‌ம்.............
இவை என்ன‌ தான் பிலான் ப‌ண்ணி செய்தாலும் அது ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளிட‌ம் எடுப‌டாது..........த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் எதையும் உண்மை என்று உட‌ன் ந‌ம்ப‌க் கூடிய‌வ‌ர்க‌ள்...........கால‌ப் போக்கில் அவையும் புரிந்து கொள்ளுவின‌ம் இது வெறும் ராமா என்று.............

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டிய யாழ் களம்.. துவாரகா உண்மையா பொய்யா என்று அடிபடுவதிலும் வீழ்ந்து போன மறவர்களின் எதிரிவெளியிட்ட ஒளிப்படங்களை மீளவும் தரவேற்றியும்..தங்களின் வாதப் பிரதிவாதங்கள் எடுபட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதில்.. தீவிரமாக இருக்குது. நல்ல வழிநடத்தல்.

தமிழீழத் தாயகக் கனவோடு தம் இன்னுயிர் தந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம்.

உண்மையில் தாயக மக்கள் மிகத் தெளிவாக ஆற்ற வேண்டிய கருமத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து தம் பிள்ளைகளுக்கு சகோதர சகோதரிகளுக்கு மாமா மாமிகளுக்கு அஞ்சலி செய்திருக்கிறார்கள். அந்த மக்களிடம் உள்ள தெளிவு..

யாழ் களத்திடம் கூட இல்லாமல் போனது கேவலம். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது  இந்தப் பொய்யை மெய்யாக்க இந்தியா ஒரு வேலையை செய்யும், அது ஈழத்தில் ஏதாவது ஒரு ராணுவ அல்லது அரசியல் ( மஹிந்த ராஜபக்ச குடும்பம்  )  இலக்குகளை தாக்கி அழித்து அதன் மூலம் தனது அரசியல் நோக்கத்தை அடைந்து கொள்வது. ஈழத்தில் உள்ள மக்களே மிகவும் கவனம் 

  • கருத்துக்கள உறவுகள்

துவாரகா என்பவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையாஎனும் விவாதம்  எமக்கு எள்ளளவும் பயன் தரப்போவதில்லை. 

தற்போதைய சூழலில், துவாரகா என்கிற ஒருவரை இலங்கைத் தமிழர்களுக்கு முன்னே கொண்டு சென்று அவரை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது? 

இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? 

இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்துவதன் ஊடாக அவர்கள் அடைய நினைப்பது என்ன? 

இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்தி, அவரை ஈழத் தமிழர் ஏற்றுக்கொண்டால், அதனால் யாருக்கு இலாபம்? யாருக்கு நட்டம்? 

ஈழத் தமிழருக்கு இதனால் நன்மையா தீமையா? 

இவை தொடர்பான ஆய்வுகள்தான் தற்போதைய தேவை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, nedukkalapoovan said:

மாவீரர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டிய யாழ் களம்.. துவாரகா உண்மையா பொய்யா என்று அடிபடுவதிலும் வீழ்ந்து போன மறவர்களின் எதிரிவெளியிட்ட ஒளிப்படங்களை மீளவும் தரவேற்றியும்..தங்களின் வாதப் பிரதிவாதங்கள் எடுபட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதில்.. தீவிரமாக இருக்குது. நல்ல வழிநடத்தல்.

தமிழீழத் தாயகக் கனவோடு தம் இன்னுயிர் தந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம்.

உண்மையில் தாயக மக்கள் மிகத் தெளிவாக ஆற்ற வேண்டிய கருமத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து தம் பிள்ளைகளுக்கு சகோதர சகோதரிகளுக்கு மாமா மாமிகளுக்கு அஞ்சலி செய்திருக்கிறார்கள். அந்த மக்களிடம் உள்ள தெளிவு..

யாழ் களத்திடம் கூட இல்லாமல் போனது கேவலம். 

உண்மைகளை விட பொய்களையே அதிகம் அலசி ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில் உண்மையை விட பொய்களே இலகுவாக  உள்ளே நுழைந்து விளையாடுகின்றன.

உண்மைகள் சாவதில்லை. என்றோ ஒரு நாள் உயிர்த்தெழும். ஆனால் பொய்களோ  உண்மையின் இருந்த இடத்தையே தடம் தெரியாமல் அகற்றி விடும். இது காலம் கற்றுத்தந்த பாடம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

உண்மைகளை விட பொய்களையே அதிகம் அலசி ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில் உண்மையை விட பொய்களே இலகுவாக  உள்ளே நுழைந்து விளையாடுகின்றன.

உண்மைகள் சாவதில்லை. என்றோ ஒரு நாள் உயிர்த்தெழும். ஆனால் பொய்களோ  உண்மையின் இருந்த இடத்தையே தடம் தெரியாமல் அகற்றி விடும். இது காலம் கற்றுத்தந்த பாடம்.

நிறுவத் துடிப்பவர்கள்.. கடந்த 14 ஆண்டுகளாக என்னத்தை வெட்டிக்கிழிச்சிச்சினம்..??!

பொய்களை புரட்டுகளை தாண்டி வந்த நாமே பொய்க்காக.. மெய்யை மறப்பது மழுங்கடிப்பது நியாயமில்லை.

1987 இல் கொல்லப்பட்ட பிரபாகரன்.. இன்னும் பல பேருக்கு.. கொல்லப்பட்டவராகவே தான் இருக்கிறார்.

ஏன் புட்டினை கூட கொன்று.. இப்போ.. நிழலை உலாவிட்டிருக்காங்களாம்.. இப்படி ஒரு கதை மேற்குலகிடம் இருக்குது.

பொய்யை பொய்யென நிறுவ முனைந்து காலத்தை வீணடிப்பதிலும் மெய்யின் பால்.. நிஜத் தேவைகளை நிறைவு செய்ய அந்தக் காலத்தைப் பாவிப்பதே புத்திசாலித்தனம்.

செயற்கை நுண்ணறிவையும் எமது விடுதலைக்காகப் பயன்படுத்த முடியும் என்றால் அதைச் செய்ய தயங்கத் தேவையில்லை. ஏனெனில்.. உலக வல்லரசுகளே அதை செய்ய எப்பவோ ஆரம்பித்துவிட்டன. 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nedukkalapoovan said:

மாவீரர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டிய யாழ் களம்.. துவாரகா உண்மையா பொய்யா என்று அடிபடுவதிலும் வீழ்ந்து போன மறவர்களின் எதிரிவெளியிட்ட ஒளிப்படங்களை மீளவும் தரவேற்றியும்..தங்களின் வாதப் பிரதிவாதங்கள் எடுபட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதில்.. தீவிரமாக இருக்குது. நல்ல வழிநடத்தல்.

தமிழீழத் தாயகக் கனவோடு தம் இன்னுயிர் தந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம்.

உண்மையில் தாயக மக்கள் மிகத் தெளிவாக ஆற்ற வேண்டிய கருமத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து தம் பிள்ளைகளுக்கு சகோதர சகோதரிகளுக்கு மாமா மாமிகளுக்கு அஞ்சலி செய்திருக்கிறார்கள். அந்த மக்களிடம் உள்ள தெளிவு..

யாழ் களத்திடம் கூட இல்லாமல் போனது கேவலம். 

இதில் கேவ‌ல‌ம் என்று சொல்ல‌ என்ன‌ இருக்கு.....விள‌ங்க‌ப் ப‌டுத்த‌வும்.... ஏதும் நானோ அல்ல‌து ந‌ன்னி சோழ‌னோ ஏதும் த‌வ‌றாக‌ எழுதி விட்டோமா அண்ணா...............இன்று தான் த‌லைவ‌ரின் ம‌னைவி அம்மா ம‌திவ‌தனியின் ப‌ட‌த்தை பார்த்தேன்............சொந்த‌ ச‌கோத‌ரியின் தியாக‌த்தை கொச்சை ப‌டுத்தின‌ அருணா..........அவாக்கு முட்டுக் கொடுக்க‌ யாழில் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் இருக்கிறார்............இப்ப‌டியான‌ அசிங்க‌மான‌ செய‌லுக்கு நாட்டு ப‌ற்று அறிவுள்ள‌வ‌ர்க‌ள் ஒரு போதும் ஈடு ப‌ட‌ மாட்டின‌ம்...........நாம் வைச்ச‌ விவாத‌ம் த‌லைவ‌ர் குடும்ப‌த்தின் தியாக‌த்தை கொச்சை ப‌டுத்த‌ வேண்டாம்..............பூமாலை போட்டு க‌ண்ணீரை கானிக்கையாக்கி வ‌ண‌ங்க‌ வேண்டிய‌ துவார‌காவ‌ யாழில் யார் கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌து................நேற்று த‌லைவ‌ரின் பிற‌ந்த‌ நாள் நேற்று தான் என‌து பிற‌ந்த‌ நாளும்..........பிற‌ந்த‌ நாளுக்கு க‌ண்ணீர் விட்டு அழுது விட்டு ப‌டுத்த‌ நான்..............ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் வ‌லி வேத‌னை அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு புரியாது...............த‌லைவ‌ர் இருக்கிறார் என்று அட‌ம் பிடித்த‌ ந‌ப‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருவ‌ர்............இதுவும் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ரின் தியாக‌த்தை கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து போல் தானே.............ச‌ரி 2009க‌ளின் விப‌ர‌ம் தெரியாம‌ இருந்தோம்..........14வ‌ருட‌ம் க‌ழித்தும் த‌லைவ‌ர் அருகில் நின்ற‌ போராளிக‌ள் காணொளி ஆதார‌த்தோடு சொல்ல‌ வில்லையா த‌லைவ‌ர் இந்த‌ இட‌த்தில் தான் வீர‌ச்சாவு அடைந்தார் என்று.............த‌ம்பி பால‌ச்ச‌ந்திர‌னை த‌னிய‌ விட்டுட்டு பெத்த‌ தாய் புலம்பெய‌ர் நாட்டுக்கு த‌ப்பி செல்பாவா.............இப்ப‌டி ப‌ல‌ நூறு கேள்விக‌ள் இருக்கு கேட்க்க‌............இதை போய் கேவ‌ல‌ம் என்று சொல்ல‌ எப்ப‌டி உங்க‌ளுக்கு மன‌சு வ‌ருது😏.................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

ஒரு சாதாரண கேள்வி.. 

இம்முறை.. தலைவருக்கு ஏன் யாழ் களம் அஞ்சலி செய்யவில்லை. கடந்த காலங்களில் முரண்பாடுகளுக்கு மத்தியிலும்.. செய்யதே..???!

எங்களைப் பொறுத்தவரை எதிரி தன் சார் நோக்கங்களோடு தெரிந்தெடுத்து.. வெளியிட்ட எந்த ஆதாரத்தையும் நம்பத் தயார் இல்லை. ஏனெனில்.. நாம் பல்வேறு எதிரிகளின் நோக்கங்களை அவை சார்ந்த  செயற்பாடுகளை தாண்டி வந்தவர்கள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DWARAKA-2023-11-f0548236f08eb74586153bae

விடுதலைப்புலிகள்  முக அலங்காரம் செய்ததில்லை. இயற்கையோடு வாழ்ந்தவர்கள்.
இந்த பெண் உடுத்தியிருக்கும் ஆடையை கவனித்தாலே ஆயிரம் விடைகள் கிடைத்து விடும். இதன் மூலம் பல முகத்திரைகள் கிழிந்து விட்டது. இனி மேலும்  இவர்களது ஆட்டங்கள் இங்கும் அங்கும் எங்கும் எடுபடப்போவதில்லை.

இலங்கையில்  பல இயக்கங்கள் விடுதலைக்காக போராடினாலும் மக்கள் தேர்ந்தெடுத்தது ஒரு விடுதலை இயக்கத்தை மட்டுமே.  இனியும் தீர்க்க தரிசனத்துடன் செயல்படுவார்கள்.

9 minutes ago, nedukkalapoovan said:

ஒரு சாதாரண கேள்வி.. 

இம்முறை.. தலைவருக்கு ஏன் யாழ் களம் அஞ்சலி செய்யவில்லை. கடந்த காலங்களில் முரண்பாடுகளுக்கு மத்தியிலும்.. செய்யதே..???!

 நெடுக்கர்! அதை நீங்களும் செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

ஒரு சாதாரண கேள்வி.. 

இம்முறை.. தலைவருக்கு ஏன் யாழ் களம் அஞ்சலி செய்யவில்லை. கடந்த காலங்களில் முரண்பாடுகளுக்கு மத்தியிலும்.. செய்யதே..???!

அதை யாழ் நிர்வாக‌த்திட‌ம் தான் கேட்க்க‌னும்.............த‌னி ம‌ட‌லில் மோக‌ன் அண்ணாவிட‌ம் கேட்டால் அத‌ற்கான‌ ப‌திலை அவ‌ர் அளிப்பார்..............

ச‌ரி உங்க‌ளிட‌ம் கேட்க்கிறேன் த‌லைவ‌ர் பொறுமையை க‌டைபிடிப்ப‌வ‌ரா..............த‌லைவ‌ரை நேசித்த‌ அத்த‌னை பேருக்கும் தெரியும் த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று............. நான் கற்பூரம் மேல் அடிச்சு சொல்லுறேன் த‌லைவ‌ர் வீர‌ச்சாவு அடைந்து விட்டார் என்று😥🙏🙏🙏.........அதே ச‌த்திய‌த்தை க‌ற்பூர‌ம் மேல் அடிச்சு நீங்க‌ள் சொல்லுவிங்ளா த‌லைவ‌ர் இருக்கிறார் என்று😡.............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.