Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Kandiah57 said:

தலைப்பு அது தான்   ...die Rundreise.    =சுற்றுலா.   

ஊருலா     .    தமிழ் ஊர்சுற்றுதல்.    ..ஜேர்மன் = Urlab.  தமிழ் இருந்து தான்  ஜேர்மன்மொழி  பிறந்து இருக்கிறது 🤣😂

 

Urlaub.  என்று வரவேண்டும் 

  • Like 1
  • Thanks 1
  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kavi arunasalam

சமீபத்தில் தாயகம் போயிருந்தேன். நீண்ட வருடங்களின் பின்னர் ஒரு மாவீரர் நாளில் தாயகத்தில் இருக்க முடிந்தது. கொழும்பில் வசிக்கும் எனது பழைய நண்பன் ஒருவன் என்னை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டான். அவன்

Kavi arunasalam

சில காலமாக எனது வலது கை மணிக்கட்டில் ஒரு நோ இருக்கிறது. முதுமை ஒரு காரணமா? அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாமா? என்று எனது குடும்ப வைத்தியரை அணுகிய போது, என்னிடம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “இளமை விடை பெற

Kavi arunasalam

காலையில் பாண் வாங்குவதற்காக மணியனும் நானும் பேக்கரிக்குப் போயிருந்தோம். அங்கே ஒரு சிறிய கூட்டம் வரிசை கட்டி இருந்ததால்  மணியன் பாண் வாங்கி வரும் வரை நான் ஓரமாக ஒதுங்கி நின்றேன். பிளாஸ்ரிக் பையில்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் மணிக்கட்டில் வந்த நோவு பரவலாக மூட்டுகளிலும் வர தொடங்கியது.வீட்டு டாக்ரர் இது ஆதரடைஸ் போல இருக்கு.

அதற்கேற்ற டாக்ரரையும் தந்தா.

இப்ப 5-6 வருடமா ஆதரைடிசுக்கு மாத்திரைகள் எடுக்கிறேன்.

கூடுதலானவரையில் நான் மாத்திரைகள் எடுப்பதில்லை. 

கையில் இப்பொழுது எனக்கு வலி தெரிவதில்லை.ஆயுர்வேத மருத்துவ எண்ணையின் மகத்துவமா என்பதிலும் எனக்குத் தெளிவில்லை. எதுவானாலும் அந்த எண்ணைகளின் படங்களை இங்கே இணைக்கிறேன்

IMG-9860.jpg

8 hours ago, alvayan said:

வெள்ளவத்தை கடற்கரை வெளிச்சமாய்க் கிடக்கே...அந்த தாழைகள்  எல்லாம் எங்கே போயிட்டுது...மறைந்திருந்து பார்த்த மறக்க முடியாத அனுபவங்கள்.

IMG-5482.jpg

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதனால் தான் கேட்டேன்  urlaub         என்பதை ஊர் உலாத்தல் = ஊருலா என்று ஜெர்மன் காரர் கவி அருணா சொல்லி இருக்கிறார். (தம்பி ஒரு தடவை பிள்ளைகள்   urlaub  போய்விட்டார்கள்   என்றுசொன்ன ஞாபகம்.)

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

எண்ணை போத்தலில் தமிழும், ஆங்கிலமும் பெரிதாக இருக்க...
சிங்களம் சிறிதாக இருப்பதை, பிக்குமார் கண்டால்... 
ஆயுர்வேத ஆஸ்பத்திரியை அத்திவாரத்துடன் கிண்டி எறிந்து விடுவார்களே. 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, தமிழ் சிறி said:

spacer.png

எண்ணை போத்தலில் தமிழும், ஆங்கிலமும் பெரிதாக இருக்க...
சிங்களம் சிறிதாக இருப்பதை, பிக்குமார் கண்டால்... 
ஆயுர்வேத ஆஸ்பத்திரியை அத்திவாரத்துடன் கிண்டி எறிந்து விடுவார்களே. 😂

இல்லை செய்யமாட்டார்கள். கைதடியில் ஆயுர்வேத கல்லூரி வைத்தியசாலையுடன் இருக்கிறது  அங்கே சிங்கள மருத்துவர்கள் வேலை செய்கிறார்கள்  நிறைய பிள்ளைகள் படிக்கிறார்கள்   சிங்களவர் ஆயுர்வேத மருத்துவத்துக்கு. முக்கியம் கொடுக்கிறவர்கள். என நினைக்கிறேன்  மிகுதி. நிழலி. வந்து சொல்லுவார்.  🤣🙏

Posted
13 hours ago, நிலாமதி said:

வீட்டு டாகடர்  = குடும்ப வைத்தியர்   ( family Doctor      )

பயண அனுபவ பகிர்வுக்கு நன்றி . ஜெர்மன் பாஷையில்  சுற்றுலாவை எப்படி சொல்வது ....?  

ஊருலாப்🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊர்லாப்பிற்கு மிகவும் நன்றிகள் ..🖐️

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

காலையில் பாண் வாங்குவதற்காக மணியனும் நானும் பேக்கரிக்குப் போயிருந்தோம். அங்கே ஒரு சிறிய கூட்டம் வரிசை கட்டி இருந்ததால்  மணியன் பாண் வாங்கி வரும் வரை நான் ஓரமாக ஒதுங்கி நின்றேன்.

பிளாஸ்ரிக் பையில் பாணை வாங்கிக் கொண்டு ஒரு புன் சிரிப்போடு வந்த மணியன், “உனக்கு பல்லெல்லாம் ஓகேதானே?” என்று என்னைக் கேட்டான். அவன் அப்படி அதுவும் காலையிலேயே என்னைக் கேட்டது ஏன் என்று புரியாமல் விழித்து நின்ற எனக்கு, அவன் தொடர்ந்து சொல்லும் போதுதான் புரிந்தது.

“எனக்குப் பின்னாலே மூண்டாவதா நின்றாரே, அவர் ஒரு டென்ரிஸ்ட். ஊர் வல்வெட்டித்துறை. வெள்ளவத்தையிலைதான் அவரின்ரை டிஸ்பென்சரி இருக்கு. நான் அவரிட்டைத்தான் பல்லைக் காட்டுறனான். எனக்கு முன் பல்லிலை ஒருஈவுஇருந்ததெல்லோ! அந்த இடைவெளியை மறைச்சவர் இவர்தான்என்று தன்னுடைய பல்லைக் காட்டிச் சிரித்தான் மணியன்.

கதைத்துக் கொண்டிருக்கும் போதே பல் வைத்தியர் பாணுடன் எங்கள் பக்கத்தில் வந்து நின்றார். “எப்பிடி, சுகமா? கனகாலமா அந்தப் பக்கம் காணேல்லே?”

“ ஓம்..ஓம். ஒருக்கால் வரத்தான் வேணும். இவர் என்னுடைய பழைய சினேகிதன். யேர்மனியிலை இருக்கிறார்மணியன் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

“அப்பிடியே! நல்லது. நாளைக்கு மகள் நியூசிலாந்திலை இருந்து வாறா. எயார் போர்ட்டுக்குப் போயிடுவன். வாறதெண்டால் செவ்வாய், புதனிலை வாங்கோசொல்லிவிட்டு, சிரித்து  விடை பெற்றார்.

“டென்ரிஸ்ரட்டை போற எண்ணம் இருக்கோ? போறதெண்டால் சொல்லு” 

“ டென்ரிஸ்ற் சிரிக்கக்க பாத்தன். மேல் பல் வரிசையில் இடது, வலது பக்கங்களில் ஒன்றிரண்டு பல்லுகளைக் காணேல்லை. முதலிலே அவர் தன்ரை பல்லைக் கட்டட்டும். பிறகு பாப்பம்என்று மணியனுக்குச்சொன்னேன்.

“சரி உன் இஷ்டம். இங்கை எண்டால் செலவு குறைவுஎன்று மணியன் சொல்ல

பல்லை விடு, பிறகு பாப்பம்.” என்று சொல்லிவிட்டு கதையை வேறு பக்கம் திருப்பினேன். “உன்னைக் கேக்கோணும் எண்டு நினைச்சனான். இப்ப சிறீலங்காவிலை முள் முருங்கை முற்றா அழிஞ்சு போச்சு எண்டு சொல்லுறாங்களே உண்மையோ?” 

மணியனிடம் இருந்து பதில் வரவில்லை.

வீட்டில் காரை நிறுத்தி விட்டுவாஎன்ற ஒற்றை வார்த்தையுடன் தன் வீட்டு முற்றத்துக்கு அழைத்துப் போனான். “பார். இதுதான் முள் முருங்கை. பழைய மரம் பெருத்து உயர்ந்து நிக்கிறதாலை உன்ரை கண்ணுக்குப் படேல்லை. முள் முருங்கை மட்டுமில்லை. பனையும் வெள்ளவத்தையிலை இருக்கு. நீ மேலை இருக்கக்கை பல்கணியிலை இருந்து பார் தெரியும்என்று சொல்லிவிட்டு, “வா சாப்பிடுவம்என்று வீட்டுக்குள் போனான்.

 

IMG-5286.jpg

IMG-5287.jpg

அடுத்தநாள் மணியனின் பிறந்தநாள். கோல்பேஸ்  ஹொட்டலில் மனைவி, உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடினான்அன்றுதான் நான் அந்த ஹொட்டலுக்கு முதன் முதலாகப் போனேன்வெளிநாட்டுத் தலைகள்  ஹொட்டலில் அதிகமாகத் தெரிந்தன. "விரும்பியதைச் சாப்பிடு" என்று என்னிடம் சொல்லிவிட்டு நண்பர்களுடன் தன் விருந்தை அனுபவித்தான்.

IMG-8626.jpg

கோல் பேஸ் ஹொட்டலில் பாரம்பரியமாக ஒவ்வொரு வருடமும் நடக்கும் கிறிஸ்மஸ் கேக் நிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்மஸுக்கு ஒருமாதம் முன்பே பழங்களை மது பானங்களில் ஊற வைத்து, பின்னர் கேக் தயாரிப்பார்கள். என்னிடமும் ஒரு போத்தல் விஸ்கி தந்தார்கள். பழங்களில் ஊற்றி விட்டு வந்தேன்.

Edited by Kavi arunasalam
எழுத்துப்பிழை திருத்தப்பட்டது
  • Like 12
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, nochchi said:

ஆற்றிலை போட்டாலும் அளந்து போடுவதைப் பின்பற்றும் மனிதர்.

வாழைப்பழம் வாங்கி குடுக்குறதிலையுமோ? 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/1/2024 at 20:56, கிருபன் said:

ஒரு சுவாரசியமும் இல்லாத வெள்ளவத்தை வாழ்க்கை!

சுத்தமான காத்து இல்லாத கொழும்பு வாழ்க்கைக்கு ஊர்ப்பக்கம் எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் பலர் இன்னமும் கொழும்பைத்தான் விரும்புகின்றார்கள்!

 

On 3/1/2024 at 21:36, நிழலி said:

எனக்கு ஊர் வாழ்க்கையை விட கொழும்பு வாழ்க்கை மிகவும் பிடித்த ஒன்று. வெள்ளவத்தை, கல்கிசை போன்ற இடங்கள் எனக்கு மிக பிடித்தமான இடங்கள். 

ஆனால் ஓய்வு காலத்தில், ஊருக்கோ அல்லது கொழும்புக்கோ போய் வாழும் எண்ணம் இல்லை.

கொழும்பு கடற்கரையில் போய் இருந்தாலே பொழுது போவதே தெரியாது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/1/2024 at 15:07, Kavi arunasalam said:

 வீக்கம் குறைந்து மணிக்கட்டில் நோ போய்விட்டதுகைக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்காததாலா? பாரங்கள் அதிகம் தூக்காததாலா? அல்லது எண்ணை பூசிக் கொண்டதாலா? என்பது எனக்குத் தெரியவில்லை.

இது உங்களுக்கு மருந்து தந்த ஆயுள்வேத டொக்ரருக்கும் தெரியாது😂!

(மீண்டும் கண்டது மகிழ்ச்சி!)

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் உங்கள் நண்பர் உங்களை திரும்ப, திரும்ப வைத்தியர் மாரிடமே அனுப்பி விட பார்க்கிறார்..✍️

  • Haha 2
Posted
2 minutes ago, யாயினி said:

ஏன் உங்கள் நண்பர் உங்களை திரும்ப, திரும்ப வைத்தியர் மாரிடமே அனுப்பி விட பார்க்கிறார்..✍️

ஒரு அன்பில் தான் யாயினி.🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

கொழும்பு கடற்கரையில் போய் இருந்தாலே பொழுது போவதே தெரியாது 

 அது ஆரோடை போய் இருக்கிறம் எண்டதை பொறுத்து இருக்கு..... சில வேளை நேரம்  போதாமல் இருக்கும்....😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, யாயினி said:

ஏன் உங்கள் நண்பர் உங்களை திரும்ப, திரும்ப வைத்தியர் மாரிடமே அனுப்பி விட பார்க்கிறார்..✍️

யாயினி இந்தக் கேள்வி என்னிடமும் இருந்தது.

என்னிடம் உள்ள அக்கறையாக இருந்திருக்கலாம். இல்லை என்னைவிட தான் சுகதேகி எனக் காட்டுவதாகவும் இருக்கலாம். அல்லது சமுதாயத்தில் தனக்கு பலரை தெரியும் எனக் காட்டுவதாகக் கூட இருக்கலாம். இத்தனைக்கும்  மேலாக மணியன் எனது இனிய நண்பன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, Kavi arunasalam said:

உனக்கு பல்லெல்லாம் ஓகேதானே?” என்று என்னைக் கேட்டான்.

சிரிக்கும் போது சூத்தையைக் கண்டுட்டாரோ?

14 hours ago, யாயினி said:

ஏன் உங்கள் நண்பர் உங்களை திரும்ப, திரும்ப வைத்தியர் மாரிடமே அனுப்பி விட பார்க்கிறார்..✍️

மினி ஏஜென்ட் போல இருக்கு.

15 hours ago, ரதி said:

 

கொழும்பு கடற்கரையில் போய் இருந்தாலே பொழுது போவதே தெரியாது 

கொஞ்ச சனம் இருக்க போகுது.

கொஞ்ச சனம் இருக்கிறவையை பார்க்க போகுது.

அதுவும் குடையோடு இருந்தால் கண்ணாலே ஸ்கான் பண்ணி விடுவார்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 கொழும்பில் இருந்து கொண்டே அவ்வப்போது மணியனைக் கூட்டிக் கொண்டு வெளியிடங்களுக்குப்  போய் வந்து கொண்டிருந்தேன். விடுமுறைக்கு வருபவர்கள்எலாவிற்கு விரும்பிப் போவார்கள். நாங்களும் போனோம். எலாவின் இயற்கையான சூழல் என்னை மிகவும் கவர்ந்தது. தெறித்து விழும் அருவியின் சாரல் படும் போது உடல் குளிர்ந்ததுசாரல் பட்டு நனைந்து வீதி ஓரத்தில் ஆங்காங்கே இருந்த குரங்குகளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

Untitled Artwork

 

Untitled Artwork

Untitled Artwork

இராவணனை பெரிதாக, பலமானவனாக வடிவமைத்திருந்தார்கள்.  ‘இராவணன்’ ‘இராவணாவாக மாறி மஹா வம்சத்தில் ஏற்கனவே இணைக்கப் பட்டுவிட்டாரா அல்லது இனித்தானா என்பது தெரியவில்லை.  

Flying Ravana விலும் பறந்து பார்த்தேன். பறப்பதற்கு முன்னர் பாதுகாப்பிற்காக பட்டி இட்டு தலைக்கவசத்தையும் மாட்டி விட்டார்கள். பலரின் வியர்வைகள் சங்கமித்த அந்த தலைக்கவசம் கொஞ்சம் அசெளகரியமாக இருந்தது. சத்தி வந்து விடுமோ என்ற அச்சமும் கூடவே இருந்தது.

Untitled Artwork

கவனம், அட்டைகள் இருக்கு. மழையும் பெய்கிறது. புல் தரைக்குள் போகாதீர்கள் என்று எச்சரித்தார்கள். எவ்வளவு கவனமாக இருந்த போதும் இரண்டு அட்டைகள் உடலில் ஏறி விட்டன. ஒன்றை உடனடியாகக் கண்டதால் அப்புறப் படுத்தி விட்டேன். மற்றொன்று துணிச்சலாக எனது கையில் ஏறி இரத்தம் குடித்து விட்டது.

Untitled Artwork

 

எலாவில் இருந்து வரும் வழியில் நுவரெலியாவுக்குப் போனோம். குட்டி இலண்டன் என்று அழைக்கப்படும் நுவரெலியா அந்தப் பெயருக்குப் பொருத்தமாக இருந்தது. குளிருக்கு ஏற்ப சுடச்சுட கிடைத்த சிற்றுண்டிகள் சுவை சேர்த்தன.

 

Untitled Artwork

 

Untitled Artwork

 

  • Like 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மிரிசா கடற்கரைக்குச் சென்றோம். வெளிநாட்டவர்கள் அதிகமாக இருந்தார்கள். “போதைப் பொருள் இங்கே தாராளம்என்றும் சொன்னார்கள். அழகான கடற்கரை என்பதை மறுப்பதற்கில்லை. உல்லாசப் பயணிகளை கவர்வதற்காக  பெரிய பெரிய  ஹொட்டல்களைக் கட்ட முயன்றிருக்கிறார்கள். பொருளாதார அலைக்குள் சிக்குண்டு இப்பொழுது அவை பாதியிலேயே அநாதைகளாக, கடல் காற்றும் வெய்யிலும் பட்டு கறுத்துப் போய் நிற்கின்றன.

Untitled Artwork

அடுத்து காலி. இலங்கையின் இரு முனைகளில் ஒன்று பனை முனை (பருத்தித்துறை). மற்றது தெய்வேந்திர முனை(காலி). காலியில் கோட்டைக்குள்ளேயே அரச அலுவலகங்களை வைத்திருந்தார்கள். நகரின் பழமையை நன்றாகப் பராமரித்து வெளிநாட்டவர்களை க் கவர்ந்து கொண்டிருக்கிறார்கள். காலியில் இருந்த பராமரிப்பு பருத்தித்துறை (முனை)யில் எங்களிடம் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு பனை, ஒரு வெளிச்ச வீடு,  இவை மட்டுந்தான் எங்களிடம் இருக்கின்றன.

Untitled Artwork

இருந்தாலும் பல சிங்களச் சுற்றுலாப் பயணிகளை பருத்தித்துறை வெளிச்ச வீட்டின் அருகே என்னால்  காண முடிந்தது.

காலியில் கடற்கரை ஓரமாக, ஒரு வீட்டை இரண்டு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தோம். “இங்கே சிங்கறால் (Lobster) கிடைக்காதா?” என்று சும்மாதான் மணியனிடம் கேட்டேன். மாலையில் வெளியே போய்விட்டு வந்து பார்த்தால், சட்டிக்குள் இரண்டு சிங்கறால்கள் துடித்துக் கொண்டிருந்தன

Untitled Artwork

களுத்துறையும் நல்லதொரு இடம். அங்கே அனந்தரா ஹொட்டல் என்று ஒன்று இருக்கிறது. அந்தக் ஹொட்டலை வடிவமைத்தது ஒரு பிரெஞ் ஆக்கிடெக். நல்லாயிருக்கும். நான் அங்கே அடிக்கடி போவேன்என்று மணியன் களுத்துறைக்கு அழைத்துப் போனான். மணியன் சொன்னதில் உண்மை இருந்தது.

Untitled Artwork

ஹொ ட்டலின் வாசலில்  நான்கு  இளம் பெண்கள் காத்திருந்தார்கள். நாங்கள் ஹொட்டலுக்குள் நுளைந்தவுடன், சிங்கள இசை முழங்கப் பாடியபடியே தங்களது பாரம்பரிய நடனத்துடன் எங்களை வரவேற்றார்கள். உண்மையிலேயே எங்களுக்குத்தான் அந்த வரவேற்பு நடனமா என முதலில் எனக்குச் சந்தேகம் வந்தது. திரும்பிப் பார்த்தேன் எங்களுக்குப் பின்னால் யாரும் இல்லை. ஆக அந்த வரவேற்பு நடனம் எங்களுக்குத்தான் என்பது தெளிவான பிறகு ஒரு உற்சாகம் பிறந்தது.

Untitled Artwork

ஹொ ட்டலின் நிர்வாகத்தில் உள்ள ஒருவர் வந்து, பணிவுடன் இரு கரம் கூப்பி வணங்கி ஆயுபவன்( ayubowan)சொல்லி வரவேற்பறையில் உட்கார வைத்தார். இருக்கையில் அமர்ந்து  ஹொட்டலின் அழகை உள்வாங்கிக் கொண்டிருக்கையில் ஆடிய ரம்பைகளில் ஒருத்தி கையில் பானங்களுடன் வந்து நின்றாள். தேங்காய்ச் சிரட்டைகளில் சிவந்த குளிர் பானங்களுடன் சிதம்பரத்தை பூ வைத்த தட்டை வைத்துக் கொண்டு புன்னகைத்தாள். தேங்காய் சிரட்டைகளைக் கண்டவுடன் சட்டென்று எனது நினைவுக்கு வந்தவர்கள் அன்றைய பிள்ளைவாள்களும் முதலியார்களும்தான்.

Untitled Artwork

100க்கு மேற்பட்ட அறைகள். பழமைவாய்ந்த பொருட்களை காட்சிக்கும், அழகிய கலைப்படைப்புகளை சுவர்களிலும் மாட்டியிருந்தார்கள். லிப்றில் மேல் நோக்கிப் போகும் அடையாள விளக்கில் புத்தர் இருந்தார்.

Untitled Artwork

வரவேற்பு இடத்துக்கு அருகேயேபார்இருந்ததால் மணியன் பெரும்பாலும் அங்கேயே இருந்து விட்டான். அங்கிருந்த அழகை எல்லாம் ரசித்து விட்டு மணியனிடம் வந்தால். “ நாங்கள் இஞ்சை வாறதெண்டால் இரண்டு நாள் தங்குவம். இப்பிடி நல்லா என்ஜோய் பண்ணி Buffet இலே ஒரு பிடி பிடிச்சிட்டுப் போவம். நீயும் இருகிறாய். யேர்மனியிலை என்னத்தைத்தான் கிழிச்சியோ?” என்று என்னைக் கிண்டல் செய்தான்.

Untitled Artwork

மாலையில் சூரிய அஸ்தமனத்திலும் நீச்சல் தடாகத்தின் அருகே ஒரு நடனம் இருந்தது. மஞ்சள்வெயிலில் பளபளக்கும் நீச்சல் குளத்தின் அருகே அந்த நடனம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.

b8b544f1-80da-4848-81b2-40244384a753

இரண்டு நாட்களின் பின்னர் அனந்தரா ஹொட்டலில் இருந்து  புறப்படும் போது வாசலில் வைத்து மந்திரம் சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். அங்கிருந்தவர் சொன்ன மந்திரம் அச்சு அசலாக எங்கள் ஐயர் சொல்லும் மந்திரம் போலவே இருந்தது. நாவூறு பட்டுவிடும் என்ற எச்சரிக்கையோ? அல்லது ரம்பைகளை மறந்து விடச் சொல்லிய மந்திரமோ? திரும்பி வரவழைவைக்கப் போகும் (வசிய) மந்திரமோ? தெரியவில்லை.

Edited by Kavi arunasalam
எழுத்துப் பிழை திருத்தப்பட்டது
  • Like 9
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படங்களுடன் பயண அனுபவங்களும் நன்றாக இருக்கின்றன.........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல அனுபவங்கள் உங்கள் நேரம் எழுத்து ஆகியவற்றுகு நன்றிகள்   அடுத்த வருடமும் போய் வாருங்கள்   🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிதம்பரத்தை பூ - செம் பரத்தை?? செவ்வரத்தை என்றுதான் நாங்கள் சொல்லுவது..

அனந்தரா ஹொட்டலுக்கு போகவேண்டும் போலிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kavi arunasalam said:

இரண்டு நாட்களின் பின்னர் அனந்தரா ஹொட்டலில் இருந்து  புறப்படும் போது வாசலில் வைத்து மந்திரம் சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். அங்கிருந்தவர் சொன்ன மந்திரம் அச்சு அசலாக எங்கள் ஐயர் சொல்லும் மந்திரம் போலவே இருந்தது. நாவூறு பட்டுவிடும் என்ற எச்சரிக்கையோ? அல்லது ரம்பைகளை மறந்து விடச் சொல்லிய மந்திரமோ? திரும்பி வரவழைவைக்கப் போகும் (வசிய) மந்திரமோ? தெரியவில்லை.

விலாசத்தையும் போட்டுவிட்டால் விரும்பியவர்கள் போய் ரம்பைகளை பார்க்கலாமே.

5 minutes ago, கிருபன் said:

அனந்தரா ஹொட்டலுக்கு போகவேண்டும் போலிருக்கு!

கையோட கம்மாரிஸ்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

நல்ல அனுபவங்கள் உங்கள் நேரம் எழுத்து ஆகியவற்றுகு நன்றிகள்   அடுத்த வருடமும் போய் வாருங்கள்   🤣

கந்தையர் நீங்களும் பக்கததில தானே அடுத்த முறை சேர்ந்தே போனால் மணியனை வெட்டிவிட்டு இரண்டு பேரும் ரம்பைகளை போய் பார்த்து வரலாம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

அனந்தரா ஹொட்டலுக்கு போகவேண்டும் போலிருக்கு!

உங்கள் மனைவியுடன் போய் வாருங்கள்   




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.