Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் துயிலுமில்லத்தில் புதிய தலைவர் சிறிதரன் 

  2024 ஜனவரி 22 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான சிறிதரன் எம்.பி தனது பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து இன்று ஆரம்பித்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

“ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக்கோரிய பயணத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக எனக்குரித்தாக்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து, கொள்கைரீதியில் ஒருமித்திருப்போரை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ள பலம் மிக்க பயணத்தை  கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து இன்று ஆரம்பித்தோம்.” R

image_7e5cd91d12.jpegimage_f414022564.jpegimage_0b3504547d.jpegimage_9832d45bc6.jpeg
 
https://www.tamilmirror.lk/வன்னி/மாவீரர்-துயிலுமில்லத்தில்-புதிய-தலைவர்-சிறிதரன்/72-331933

  • கருத்துக்கள உறவுகள்

ஒடுக்கப்படும் சாமானிய மக்களுக்காக தமிழ் அரசு கட்சியின் புதிய தலைமைத்துவம் செயற்பட வேண்டும் : சிறிதரனுக்கான வாழ்த்தில் சந்திரகாந்தன் கோரிக்கை !

kugenJanuary 22, 2024
 
_114004618_pillayan01.jpg

மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் சாமானிய மக்களின் நலன்பேணும் தலைமையாக தமிழரசுக்கட்சியின் வரலாற்றுப் பாத்திரமானது புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புவதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசு கட்சியின் தலைமைத் தேர்வு முடிவுகள் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள்அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நீண்ட நெடிய அரசியல் வரலாற்றினை கொண்ட எம் சமூகத்தின் பழம் பெரும் கட்சி ஒன்றுக்கு தலைமை ஏற்றிருக்கும் தங்கள் பயணம் வெற்றுக் கோச சித்தாந்த அரசியலுக்கப்பால் தமிழ் மக்களின் நிலம், நிருவாகம், உரிமை மற்றும் இருப்பு சார்ந்து வெற்றியடைய வேண்டும் என விரும்புகின்றேன்.

மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் அடிமட்ட சாமானிய மக்களின் நலன்பேணும் தலைமையாக தங்கள் வரலாற்றுப் பாத்திரமானது புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
 
https://www.battinews.com/2024/01/blog-post_438.html

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2024 at 22:05, Cruso said:

அதாவது இந்தியாவின் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தெரிவு வெற்றி பெற்றுள்ளது. இந்திய சுமந்திரனின் தெரிவை விரும்பவில்லை. எப்படியோ கட்சி இரு பிரிவாக செயல்படப்போகின்றது. நிச்சயமாக அடுத்த தேர்தலில் இதன் விளைவுகளை காணலாம். 

எப்படி இருந்த போதிலும் இந்தியாவை தவிர இலங்கையிலும் மற்றைய நாடுகளிலும் ஸ்ரீதரனின் (மாவை 2 ) கருத்தைவிட சுமந்திரனின் கருத்துக்கு பெறுமதி இருக்கும். அதுவும் கட்சியின் ஒற்றுமையை பாதிக்கும். பொறுத்திருந்து பார்ப்பம். 

இன்று வீரகேசரி பத்திரிகையில் சி . அ. யோயதிலிங்கம் எழுதிய சமகால அரசியல் கட்டுரையை வாசிக்கவும். 

இந்தியா சிறிலங்காவின் தலமையை, மற்றும் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் அளவுக்கு நாட்டில் செல்வாக்கு செலுத்துகின்றது இந்த நிலையில் நாம் எம்மாத்திரம்...மாலைதீவு இந்தியாவின் கை விட்டு அகன்றதின் பின் மேலும் மேலும் சிறிலங்காவை இறுக பற்றிகொள்ள இந்தியா நிச்சயம் முயற்சி செய்யும்...

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Cruso said:

இப்படி எல்லாம் செய்திகள் போடக்கூடாது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடை பெற்றது. 😜

யார் ஊடக பேச்சாளராக இருந்தால்  என்ன? இந்தியாவை தவிர இலங்கையும் மற்ற நாடுகளும் சுமந்திரன் என்ன சொல்லுகிறார் என்பதைத்தான் பார்க்கும். இத்தேட்கெல்லாம் அவசர பட கூடாது.  😛

சுமத்திரன் தனிகட்சி தொடங்கினால் அது சாத்தியப்படும்....தலமைக்கு தெரியாமல் இவர் இனி ஊடக அறிக்கை விட முடியாது என நினைக்கிறேன்...அப்படி வெளியிட்டால் தலமை கண்மூடிக்கொண்டு ஆமா போடக் கூடாது ....

இவரை தனிகட்சி தொடங்கும்படி நீங்கள் கூறும் சர்வதேசங்கள் ஊக்கப்படுத்தலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

நடக்கிறதை கதையுங்க நுணா.

சிறிதரனின் வெற்றிக்கு மறுவன்புலவு சச்சியும் உழைத்தவர்.

இதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பல வருடங்களுக்கு முன்னே தொடங்கி விட்டார்கள் புலிகள் இருக்கும் காலத்திலயே தொடங்கி விட்டார்கள் ....ஆஞ்சநேயர் இணுவிலில் குடியேறும் பொழுது , ....பிரமான்டமான பெருமாள் கோவில் திருகோண மலையில் கட்டும் பொழுதே தொடங்கிவிட்டது....அதன் அறுவடை தான் இது ...

மக்கள் மொழியை விட மத நம்பிக்கையில் அதிக பற்று உடையவர்கள். அதை  இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நன்றாகவே கையாள்கின்றனர்.

மேலும் கிறிஸ்தவ மதகுருமாரும் சிறிதரனுட நிற்பதை காணலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இப்படி ஒரு செய்தியும் வந்திருக்கின்றது. எல்லோரும் ஒன்றாக நிற்பதை பார்க்க மகிழ்சியாக இருக்கின்றது. எம் இரத்த உறவுகளுக்கு நல்லது நடந்தால் சந்தோசம்.🙏🏼

GEdIFv_WMAAY3Qa?format=jpg&name=small

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழன்பன் said:

புலி எதிர்ப்பு பலமாகிவிடும்.

புலி எதிர்ப்பு 🤔  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை சொல்கின்றீர்களா

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2024 at 09:47, தமிழ் சிறி said:

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி.சிறிதரன் அவர்களுக்கு வாழ்த்துகள். நெருக்கடியான சூழலில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் தலைவருக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது. அனைவரையும் இணைத்துப் பயணிக்கத் துணிய வேண்டும். அப்போதுதான் ஒரு சிறந்த தலைமையாக இருக்க முடியும். தமிழ்த் தேசிய அரசியலில் உதிரிகளாக நின்று எதையும் அடையமுடியாது என்பதைப் புரிந்து கொண்டு புதிய தலைவர் செயற்பட்டால் மட்டுமே தமிழருக்கு நன்மை.

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறிதரனுக்கு வாழ்த்துக்கள்  🙏

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

ஒருவரை சந்திக்கும் போது வணக்கம் தெரிவிப்பது வழமை…

IMG-1773.webp

அப்படியா ? நீங்கள் சொல்லிய பிறகு இன்றைக்குத்தான் எனக்கு தெரியும். நண்றி.😛

5 hours ago, putthan said:

மேலும் கிறிஸ்தவ மதகுருமாரும் சிறிதரனுட நிற்பதை காணலாம்...

அதேட்கெல்லாம் காரணம் இருக்கிறது. சோழியன் குடும்பி சும்மா ஆடாது. இந்தியாவின் ஆசி அதட்கும் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

இந்தியா சிறிலங்காவின் தலமையை, மற்றும் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் அளவுக்கு நாட்டில் செல்வாக்கு செலுத்துகின்றது இந்த நிலையில் நாம் எம்மாத்திரம்...மாலைதீவு இந்தியாவின் கை விட்டு அகன்றதின் பின் மேலும் மேலும் சிறிலங்காவை இறுக பற்றிகொள்ள இந்தியா நிச்சயம் முயற்சி செய்யும்...

இவ்வளவு இருக்க பற்றி மாலைதீவில் வைத்திய சாலைகள் கட்டி, பாதுகாப்பு வழங்கி, இன்னும் சொல்லை முடியாத அளவு அபிவிருத்திகளை செய்த இந்தியாவையே தள்ளி விடுவார்களாக இருந்தால் இலங்கை இந்தியாவை தள்ளிவிட அதிக காலம் செல்லாது.

அரசியல் நிலைமைகள் அப்படிதான் மாறிக்கொண்டு போகின்றது. இப்போது சீனா ஜேவிபி இனருக்கு ஆதரவு வழங்கி வளர்த்து வருவதை உங்களில் எதனை பேருக்கு தெரியுமோ தெரியாது.

இப்போது இந்தியா முன்னேஸ்வரம் கோவிலுக்கு அருகில் திருப்பதி வெங்கடாச்சல (Copy)  கோவில் கட்டிட போகிறார்கள். இப்போதே இங்கு மக்கள் குழம்பி விடடார்கள். இது இன்னும் சீனாவுக்கு சாதகமாக போகின்றது. 

5 hours ago, putthan said:

சுமத்திரன் தனிகட்சி தொடங்கினால் அது சாத்தியப்படும்....தலமைக்கு தெரியாமல் இவர் இனி ஊடக அறிக்கை விட முடியாது என நினைக்கிறேன்...அப்படி வெளியிட்டால் தலமை கண்மூடிக்கொண்டு ஆமா போடக் கூடாது ....

இவரை தனிகட்சி தொடங்கும்படி நீங்கள் கூறும் சர்வதேசங்கள் ஊக்கப்படுத்தலாம்...

கட்சி அவரை நீக்கிய பின்னரும் அவரது கருத்துக்கு மற்றவர்களின், மற்றைய அரசியல் கட்சிகளின் கருத்தைவிட அதிக பெறுமதி இருக்கும். இந்தியாவை தவிர மற்றைய நாடுகளை , இலங்கை அரசை அணுகுவது மிகவும் இலகு.  அது நிச்சயம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

இவ்வளவு இருக்க பற்றி மாலைதீவில் வைத்திய சாலைகள் கட்டி, பாதுகாப்பு வழங்கி, இன்னும் சொல்லை முடியாத அளவு அபிவிருத்திகளை செய்த இந்தியாவையே தள்ளி விடுவார்களாக இருந்தால் இலங்கை இந்தியாவை தள்ளிவிட அதிக காலம் செல்லாது.

அரசியல் நிலைமைகள் அப்படிதான் மாறிக்கொண்டு போகின்றது. இப்போது சீனா ஜேவிபி இனருக்கு ஆதரவு வழங்கி வளர்த்து வருவதை உங்களில் எதனை பேருக்கு தெரியுமோ தெரியாது.

இப்போது இந்தியா முன்னேஸ்வரம் கோவிலுக்கு அருகில் திருப்பதி வெங்கடாச்சல (Copy)  கோவில் கட்டிட போகிறார்கள். இப்போதே இங்கு மக்கள் குழம்பி விடடார்கள். இது இன்னும் சீனாவுக்கு சாதகமாக போகின்றது. 

கட்சி அவரை நீக்கிய பின்னரும் அவரது கருத்துக்கு மற்றவர்களின், மற்றைய அரசியல் கட்சிகளின் கருத்தைவிட அதிக பெறுமதி இருக்கும். இந்தியாவை தவிர மற்றைய நாடுகளை , இலங்கை அரசை அணுகுவது மிகவும் இலகு.  அது நிச்சயம். 

உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

புலி எதிர்ப்பு 🤔  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை சொல்கின்றீர்களா

அதெல்லாம் ஒரு ஒரு கட்சியா , பெயரில் புலி இருந்தால் சரியா ? 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Cruso said:

இவ்வளவு இருக்க பற்றி மாலைதீவில் வைத்திய சாலைகள் கட்டி, பாதுகாப்பு வழங்கி, இன்னும் சொல்லை முடியாத அளவு அபிவிருத்திகளை செய்த இந்தியாவையே தள்ளி விடுவார்களாக இருந்தால் இலங்கை இந்தியாவை தள்ளிவிட அதிக காலம் செல்லாது.

அரசியல் நிலைமைகள் அப்படிதான் மாறிக்கொண்டு போகின்றது. இப்போது சீனா ஜேவிபி இனருக்கு ஆதரவு வழங்கி வளர்த்து வருவதை உங்களில் எதனை பேருக்கு தெரியுமோ தெரியாது.

இப்போது இந்தியா முன்னேஸ்வரம் கோவிலுக்கு அருகில் திருப்பதி வெங்கடாச்சல (Copy)  கோவில் கட்டிட போகிறார்கள். இப்போதே இங்கு மக்கள் குழம்பி விடடார்கள். இது இன்னும் சீனாவுக்கு சாதகமாக போகின்றது. 

கட்சி அவரை நீக்கிய பின்னரும் அவரது கருத்துக்கு மற்றவர்களின், மற்றைய அரசியல் கட்சிகளின் கருத்தைவிட அதிக பெறுமதி இருக்கும். இந்தியாவை தவிர மற்றைய நாடுகளை , இலங்கை அரசை அணுகுவது மிகவும் இலகு.  அது நிச்சயம். 

ஜெவிபி வருவதை அமெரிக்கா விரும்பாது ... வந்தால் .மீண்டும் பொருளாதரத்தின் ஊடாக ஆட்சியை கவிழ்க நினைப்பார்கள் .
புத்தர், ராமரின் ஒர் அவதாரம் என பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டணர் .அயோத்தியில் குழந்தை ராமரின்  சிலைக்கு  மேலே அவரின் 10 அவதாரங்களின் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாம் ..அதில் ஒன்று புத்தராம் ... புத்தரும் நம்ம ஆளு என சொல்லி பாரதம் காய் நகர்த்த வெளிக்கிட்டு பல வருடங்களாகி விட்டது ...பார்ப்போம் சிங்கள ஆட்சியாளர்களின் ராஜதந்திரத்திற்கு இந்தியா தாக்கு பிடிக்குமா என...அல்லது யூடியுப் ஊடாக இந்தியா மக்களை உசுப்பி விடுகிறார்களா? முட்டாளாகின்றனரா?

நான் நினைக்கிரேன் இந்தியா சிறிலங்காவின் காலில் விழுந்தாவ்து திருகோணமலையில் ஒர் மூலையில் இருக்க அனுமதி கேட்பினம்...

அதற்கும் சிறிலங்கா அசையவில்லை என்றால் மாலை தீவை கை விட்டு லட்ச்ச தீவில் ஓடி ஒழிந்து கொண்டது போல ...சீ சீ இந்த பழம் புளிக்கும் என சொல்லி கச்ச தீவில் போய் நிற்பினம்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் தலைவரை தெரிவு செய்த நிகழ்வுக்கு பின்பு தமிழ்செய்திகளை பார்த்தால் தமிழரசு கட்சி தான் தமிழர்களின் கட்சி போன்று தெரிகின்றது. கூட்டமைப்பு கஜே கோஷ்டி பேச்சையே காணோம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

ஜேவிபி இன்னாரை அமெரிக்கா விரும்பாதுதான். நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் சீனா அதில் தீவிரமாக இருக்கிறது. ரணில் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. 

இந்தியா வடக்கு கிழக்கில் அமைக்கும் பவுத்த விகாரைகள் பற்றி அக்கறைப்பட வில்லை. நீங்கள் சொன்ன மாதிரி புத்தரும் அவர்களுடைய ஆள்தான் என்பதுடன் இலங்கையுடன் எந்த விதமான மோதலையும் தவிர்க்கவே விரும்புகின்றது.

எப்படியோ சீன மாலைதீவுக்குள் புகுந்து விட்ட்து. மற்றைய  முஸ்லீம் நாடுகளும் அதனையே விரும்புவதாக தெரிகின்றது.

அவர்கள் கச்சத்தீவில் ஒளிவதட்கு நாம் அதனை விட்டு கொடுக்க முடியாது. இப்போதே எமது மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்து கொண்டு போகின்றது. கச்சத்தீவும் போனால் அம்போதான். 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன் இந்தியாவின் தெரிவா.? - மறுதலிக்கிறார் சிறிதரன்..

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2024 at 09:43, Cruso said:

அழகான படம். வாழ்த்து தெரிவிக்கிறார்களா இல்லை ஆளை ஆள் கும்பிடுகிறார்களா? 

கிழவருக்கு ரணிலால் பின்கதவால் கொண்டுவந்த சுத்து மாத்தய் தலைவராக்க முடியலை எனும் ஆற்றாமை .சிறியருக்கு சம்மந்தரை விட்டால் தமிழருக்கு வேறு ஆள் கிடயாது என்று சம்மந்தரை பிடிக்காதவர்கள் கூட சொல்ல வைத்த மாயம் என்ன என்ற வியப்பு.😀

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழரசுக் கட்சியின் தலைவரை தெரிவு செய்த நிகழ்வுக்கு பின்பு தமிழ்செய்திகளை பார்த்தால் தமிழரசு கட்சி தான் தமிழர்களின் கட்சி போன்று தெரிகின்றது. கூட்டமைப்பு கஜே கோஷ்டி பேச்சையே காணோம்.

அந்த சைக்கிள் கூட்டமும் ரணிலின் ஏவல் ........வேலையாட்கள் தான் சுத்துமாத்து சுமத்திரன் இப்போதைக்கு அரசியல் ஓய்வுக்கு போனால் ஸ்ரீதரன் கள்ள மணல் மூலம் ஆசியாவின் முதல் பணக்காரார் ஆகி விடுவார் அங்குள்ள  தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு வருடம் வரும் திபாவளிக்கு தீர்வு வரும் என்று இலவு காத்த கிளிக்கு போட்டியாய் இருக்க வேண்டியதுதான் . 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Cruso said:

அவர்கள் கச்சத்தீவில் ஒளிவதட்கு நாம் அதனை விட்டு கொடுக்க முடியாது. இப்போதே எமது மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்து கொண்டு போகின்றது. கச்சத்தீவும் போனால் அம்போதான். 

சிறிலங்கா கச்சதீவை கொடுக்காவிடில்..... இந்தியா தணுஸ்கோடி ,அல்லது ராமேஸ்வரத்தில் நின்று வடிவேல் பாணியில் சவுண்ட் விட வேண்டிய் நிலை வரும்...

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2024 at 14:28, putthan said:

இதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பல வருடங்களுக்கு முன்னே தொடங்கி விட்டார்கள் புலிகள் இருக்கும் காலத்திலயே தொடங்கி விட்டார்கள் ....ஆஞ்சநேயர் இணுவிலில் குடியேறும் பொழுது , ....பிரமான்டமான பெருமாள் கோவில் திருகோண மலையில் கட்டும் பொழுதே தொடங்கிவிட்டது....அதன் அறுவடை தான் இது ...

மக்கள் மொழியை விட மத நம்பிக்கையில் அதிக பற்று உடையவர்கள். அதை  இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நன்றாகவே கையாள்கின்றனர்.

மேலும் கிறிஸ்தவ மதகுருமாரும் சிறிதரனுட நிற்பதை காணலாம்...

419453894_7299516213475097_6769271091082

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

கிழவருக்கு ரணிலால் பின்கதவால் கொண்டுவந்த சுத்து மாத்தய் தலைவராக்க முடியலை எனும் ஆற்றாமை .சிறியருக்கு சம்மந்தரை விட்டால் தமிழருக்கு வேறு ஆள் கிடயாது என்று சம்மந்தரை பிடிக்காதவர்கள் கூட சொல்ல வைத்த மாயம் என்ன என்ற வியப்பு.😀

சிறியர் இப்போது தலைவர்தான். அதை ஏற்று கொள்ளுகிறேன். இனிதான் தெரிய வரும் அவர் சம் சும்மா இல்லை சிறி சும்மா என்று. அப்படி ஒன்றும் தலைமை பதவிக்கு வந்தவுடன் ஒன்றும்நடக்கப்போவதில்லை.

சும்முக்கு அரசியல் தந்திரம் தெரியவில்லை, அதை சிறியர் இந்தியாவின் உதவியுடன் பயன்படுத்தி கொண்டார். இனி என்ன இந்தியாவின் உத்தரவின்றி அணுவும் அசையாது.😜

இருந்தாலும் சும் அதுக்கெல்லாம் அசைந்து கொடுக்க மாடடார் என்று நம்பலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

சிறிலங்கா கச்சதீவை கொடுக்காவிடில்..... இந்தியா தணுஸ்கோடி ,அல்லது ராமேஸ்வரத்தில் நின்று வடிவேல் பாணியில் சவுண்ட் விட வேண்டிய் நிலை வரும்...

இப்போது அங்கிருந்துதான் சவுண்ட் விடுகிறார்கள். அதட்காகத்தான் இப்போது இலங்கை இந்தியா இணைப்பு பாலம் பற்றி பேசப்படுகின்றது. என்னை பொறுத்த வரைக்கும் அது ஒரு நல்ல விடயம்தான்.

இங்கிருந்து கோவிலுக்கு செல்வத்தாட்கொ வியாபாரதிட்கு செல்வதட்கோ அது இலகுவாகவும் குறைந்த கடடனமாமாகவும்  இருக்கும். நிச்சயமாக சீனாவோ, சிங்கள தீவிரவாதிகளா அதை அனுமதிக்கமாட்ட்டார்கள்.

ஆனால் தமிழர்கள் இப்படி இருக்க வேண்டும், இதுதான் முடிவு எண்டு இந்தியா தீர்மானிக்க முடியாது. இதில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.