Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்

TorontoCanada
 2 மணி நேரம் முன்
 
Share
  • விளம்பரம்
 
கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்த பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன் போது, பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்டனம்

இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனேடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பேரவை மீதான வெறுப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

எமது சமூகத்தினரால் கனடாவுக்குள் கொண்டு வரப்பட்ட சமாதானம், பாதுகாப்பு மற்றும் வன்முறையில் இருந்து விடுதலை ஆகிய மதிப்புகளுக்கு எதிராக குறித்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய தமிழர் பேரவை

கனேடிய தமிழர் பேரவை எப்போதும் பன்முகத்தன்மை மற்றும் எங்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கும் சூழலை வளர்ப்பதற்காக செயல்படுகிறது. 

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம் | Canadian Tamil Congress Toronto Office Fire Attack

இந்த நிலையில், நமது மதிப்புகள் மற்றும் நாம் விரும்பும் கொள்கைகளுக்கு எதிராக இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வேதனை அளிக்கிறது.

https://ibctamil.com/article/canadian-tamil-congress-toronto-office-fire-attack-1706632055

  • Replies 88
  • Views 9.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நான் இதுபற்றி ஒரு காணொளி பார்த்தேன் கனடா டமிழர் பேரவை சார்பில் ஒரு பெண் உட்பட்ட மூவர் சில விளக்கங்களைச் சொன்னார்கள் அதில் தாங்கள் பயணம் தொடர்பான விடையங்களை ஒருவரிடம் கொடுத்ததாகவும் அவர் தங்களுக்கு

  • வாலி
    வாலி

    இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரினதும் (குடியுரிமை பறிக்கப்பட்டு) நாடுகடத்தப்படவேண்டும்!

  • இதையும் பார்த்து புல் சவுண்டு கொடுங்க ... 2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர்களுக்கான சரியான தலைமை இல்லை, எமது மக்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் பலமான நேர்மையான அமைப்பு எதுவும் இல்லை என்பது பலரது கவல

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Suren Surenthiran  London ல் இருப்பதால்  அவர் தப்பிப் பிழைத்தார். 

யாழ் களத்தில் துரோகியாக முத்திரை குத்தப்படுபவர்களின் நிலை ......🥺

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அதாவது மாற்று கருத்துக்கு இடமில்லை என்று சொல்லுகிறீர்கள். அப்படி என்றால் கனடாவில் எத்தனை குழுக்கள் இயங்குகின்றனா  என்று தெரிந்து கொள்ளலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Cruso said:

அதாவது மாற்று கருத்துக்கு இடமில்லை என்று சொல்லுகிறீர்கள். அப்படி என்றால் கனடாவில் எத்தனை குழுக்கள் இயங்குகின்றனா  என்று தெரிந்து கொள்ளலாமா?

எல்லாமே மோடர் கூடம். கனடாவிற்கு வந்தும் திருந்தாத கூட்டத்தின் அங்கத்தவர் எண்ணிக்கை மிக மிக  அதிகம்.  ☹️

இந்த எரிப்பு செயற்கையாக இருக்குமானால் அது,  இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள எத்தனிக்கும் அனைவருக்குமான எச்சரிக்கையாகத்தான் இருக்க முடியும். 

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை ஒன்று  ஆரம்பமானால் அதனால் யாருக்கு நட்டம். ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கனடாவில்தான் நடந்திருக்கு....புரிஞ்சுக்கோங்க..

( முகப் புத்தகத்தில் பிரதி பண்ணப் பட்டது.... செய்தி 100 வீதம் உண்மை)

 · 
தமிழீழத் தேசியச் சின்னங்கள் மீது கனடாவில் நிரந்தரத் தடை கொண்டு வரும் நாசகாரச் சதியை நோக்காகக் கொண்டு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது சிறீலங்கா இன அழிப்பு அரசின் பின் புலத்தில் இயங்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய நிர்வாகம் தொடுத்த வழக்கை ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் அவருக்கான இழப்பீட்டுத் தொகையாக 73,769.12 கனடியன் டொலர்களை முப்பது நாட்களுக்குள் செலுத்துமாறும் தீர்ப்பளித்திருக்கிறது.
புலத்தில் தமிழ்த் தேசியச் செயற்பாடுகளை - செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்கும் நோக்குடன் எல்லை கடந்த அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு தோல்வியில் முடிந்திருக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ இன அழிப்பு அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கிய ஐயப்பன் கோவில் நிர்வாகம் மக்கள் முன் அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கிறது.
கார்த்திக் நந்தகுமார் தனி மனிதன் அல்ல - அவர் தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதி. இந்த வழக்கில் அவருக்குப் பக்க பலமாக உலகெங்கும் பரந்து வாழும் நூற்றுக்கணக்கான தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் அணிவகுத்திருந்தார்கள்.
இது அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு அல்ல - இன அழிப்பைச் சந்தித்துத் தொடர்ந்து இன அழிப்புக்கு முகம் கொடுத்தபடியே நீதி வேண்டி நிற்கும் ஒரு இனத்தின் நீதியின் மீது - தமிழீழ தேசியச் சின்னங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு.
ஐயப்பன் கோவில் நிர்வாகம் மட்டுமல்ல இனியும் அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலுக்குள் பலியாகி புலத்தில் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் - செயற்பாட்டாளர்கள் மீதும் வழக்குத் தொடுக்கும் ஒவ்வொருவரும் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
இல்லையேல் மக்கள் முன் இப்படித்தான் அம்பலப்பட்டு நிற்க வேண்டும். உங்கள் தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கும், சுய அரிப்புகளுக்கும் தமிழீழ விடுதலை என்பது ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல.
இனியும் இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்தால் உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு என்ன விலை கொடுத்தாவது அதை முறியடிப்போம்.
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

முகப்புத்தகச் செய்திதானே .....😏

இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்தால் உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு என்ன விலை கொடுத்தாவது அதை முறியடிப்போம்.

கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத கனேடிய டமில்ஸ் வானம் ஏறி வைகுண்டம் போவது என்பது சும்மா பேச்சுக்குத்தான் ....😏

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியலில்  காடைத்தனம் செய்வது இயல்பான நடை முறை தானே. இது ஏதோ முதல் முறையா?  கடந்து சென்று விட வேண்டியது தான்😂 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரினதும் (குடியுரிமை பறிக்கப்பட்டு) நாடுகடத்தப்படவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரினதும் (குடியுரிமை பறிக்கப்பட்டு) நாடுகடத்தப்படவேண்டும்!

பப்புவா நியூகினியாவிற்கு ...😁

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Cruso said:

அதாவது மாற்று கருத்துக்கு இடமில்லை என்று சொல்லுகிறீர்கள்.

11 hours ago, island said:

தமிழர் அரசியலில்  காடைத்தனம் செய்வது இயல்பான நடை முறை தானே.

அரபிகள் போன்று நடந்து கொள்ளும்  ஈழதமிழர்களின் இந்த வன்முறை போக்கு மாற்றி அமைக்கபட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதையும் பார்த்து புல் சவுண்டு கொடுங்க ...

2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர்களுக்கான சரியான தலைமை இல்லை, எமது மக்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் பலமான நேர்மையான அமைப்பு எதுவும் இல்லை என்பது பலரது கவலை.

ஆனால், தமிழ்த் தேசியம் தன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கிறது என்பதே உண்மை.

தலைமை, அமைப்பு, கட்சி பற்றிய எந்தக் கவலையுமின்றி யாருக்காகவும் காத்திராமல் தனது மக்களுக்கூடாக தமிழ்த் தேசியம் அடுத்த கட்டத்தை நோக்கி பரிமணித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அண்மையில் கனடாவில் தமிழ்த் தேசியப் பற்றாளர், தீவிர செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது தொடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்ட வழக்கு இதற்கு நல்ல உதாரணம்.

கனடாவில், 2021 கார்த்திகை மாதம்...

மாவீரர் வாரத்தில் கார்த்திக் நந்தகுமார் என்பவர் கார்த்திகைப் பூக்களை பெருமளவில் இறக்குமதி செய்து, அவற்றைக் கொண்டு ஒரு பிரமாண்டமான மாலை செய்து ஐயப்பன் ஆலயத்தில் கொடுத்து அதனை வைத்து சுவாமி ஐயப்பனிற்கு அலங்காரம் செய்யுமாறு ஆலய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இதனை ஆலய நிர்வாகத்தில் தமிழர் தேசியத்துக்கு எதிராக அந்நிய சக்திகளோடு இயங்கும் ஒரு சிலர் மறுத்ததோடு அந்த மாலையைக் குப்பையில் வீசினர். இந்த நிகழ்வு தமிழ் இளையோர் மற்றும் ஐயப்பன் கோவில் பக்தர் மத்தியில் பெரும் அதிர்வை விளைவித்ததோடு அவர்கள் ஆலய முன்றலில் ஆலயத்தின் நிர்வாக சபையின் அங்கத்தவர்களும் இலங்கை இனப்படுகொலை அரசுக்கு ஆதரவாக செயற்படுபவர்களாக கருத்தப்பட்ட தலைவர் மற்றும் செயலாளருக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தினார்.

அதன் விளைவு : "கோவில் நிர்வாகம் கார்த்திக் மீது கனடா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது"

கார்த்திக் நந்தகுமாரின் தேசியம் தொடர்பான செயற்பாடுகளை சுட்டிக்காட்டியும், அவரின் தனிப்பட்ட வாழ்வியலை காரணம் காட்டியும், குறிப்பாக, அவர் தேசியத் தலைவரை முன்னிலைப் படுத்தி திருமணம் செய்தமை மற்றும் அவரின் உருவம் தாங்கிய தாலியை அணிவித்தமை, பிள்ளைகளுக்கு, தீரன்பிரபாகரன், நந்திக்கடலோன் என்று பெயர் சூட்டியமை மற்றும் அவரின் வியாபார நிறுவனத்தின் வெளிப்புறத்தில் கார்த்திகை பூக்களின் படங்களை வைத்திருந்தமை என பல தகவல்கள் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்து கார்த்திக் நந்தகுமார் புலிகளை மீளுருவாக்கம் செய்கிறார் என ஐயப்பன் ஆலய நிர்வாகத்தின் சார்பாக குற்றம் சாட்டப் பட்டது.

மொத்தத்தில் ஒரு தமிழ்த்தேசியச் செயற்பாட்டளானை முடக்குவதற்கும், அவரை அழிப்பதற்கும் அதனை ஏனைய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு ஒரு பாடமாக ஆக்குவதற்மான வகையிலேயே இந்த வழக்கு கார்த்திக் மீது தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை கடந்த 16 ஆம் திகதி நீதிமனறத்தில் நடைபெற்றது. ON-LINE இல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது பொது மக்களும் பார்வையாளரகளாகக் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பல தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் உலகெங்கிலும் இருந்து இதில் பார்வையாளராகக் கலந்து கார்த்திக்குக்கு தமது ஆத்மாத்த அதரவைத் தெரிவித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி J.T. Akbarali J. தனது தீர்ப்பில்,

"ஐயப்பன் ஆலயம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையை தள்ளுபடி செய்வதாக அறிவித்ததோடு, இந்த வழக்கில் பிரதிவாதி கார்த்திக் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார்"

எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு சூட்சுமமாக ஒரு செய்தியைச் சொல்கிறது. அதாவது....

தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்பது ஈழத்தமிழரின் உரிமை, ஈழத்தமிழரின் விடுதலை, தமிழர் அறம் தமிழர் பண்பாடு சார்ந்த விடயம் மட்டுமல்ல; அது உலக அறம் சார்ந்த நிலைப்பாடு, அது நீதி சார்ந்த நிலைப்பாடு; அது அனைத்து அநீதிகளுக்கும் எதிரான நிலைப்பாடு!

அது ஈழத்தமிழர்களின் உரிமை சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல அது மனித உரிமை சார்ந்த நிலைப்பாடு!

அது தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல மனிதப் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிலைப்பாடு!

அது மனித நாகரீகம் சார்ந்த நிலைப்பாடு; மனித ஒழுக்கம் சார்ந்த நிலைப்பாடு!

மொத்தத்ததில் அது மனிதம் சார்ந்த நிலைப்பாடு, கோட்பாடு, வாழ்வியல் முறை!

“இந்த வழக்கில் பிரதிவாதி கார்த்திக் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார்” என்னும் நீதிபதியின் கூற்று அதனையே சுட்டிக் காட்டுகிறது. அதாவது தமிழ்த்தேசிய நிலைப்பாடு என்பது உலக நீதி, மனித அறம், மனித ஒழுக்கம், மனிதப் பண்பாடு மற்றும் மனித நாகரீகம் மனித உரிமை சார்ந்த நிலைப்பாடு என்பது இங்கு நிரூபணமாகியுள்ளது.

தமிழ்த் தேசியம் சார்ந்த விடயங்களை இனிமேலும் சட்டவிரோத நடவடிக்கையாகவோ, பயங்கரவாதப் போர்வைக்குள்ளே முடக்கிவிட முடியாது.

தமிழ்த்தேசியம் தனது மக்களுக்கூடாக அடுத்த கட்டத்தை நோக்கிச் பரிமணித்துக் கொண்டுதான் இருக்கிறது என ஆரம்பத்தில் நான் கூறிய கூற்றுக்கான ஆதாரமாக இந்த வழக்கின் வெற்றியை நான் பார்க்கிறேன்.

ஆம்! இது எமக்கான காலம். எமக்கெதிரான குற்றச்சாட்டுகள், வழக்குகள், பிரச்சாரங்களை நாம் துணிவோடும் ஒருமித்தும் எதிர்கொண்டால் நாம் வெல்வதும் வாழ்வதும் நிட்சயமானது என்னும் பெரு நம்பிக்கையைத் தருகிறது இந்த வழக்கின் வெற்றி.

பாராட்டுகள் Karthick Nanthan

பி.கு: கனடாவில் உள்ள ஐயப்பன் கோவிலானது இலங்கையில் உள்ள போர்க்குற்றவாளிகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வேலையைச் செய்து வருகிறது எனவும் அதன் பின்னணியில் கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உள்ளது எனவும் அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

(copy from... நண்பரின் முகப்புத்தக பதிவில் இருந்து பிரதி செய்யப்பட்டது)

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2024 at 03:02, Kapithan said:

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை ஒன்று  ஆரம்பமானால் அதனால் யாருக்கு நட்டம். ? 

ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்த்திருக்கும். தமிழ் மக்களுக்கு பாரிய நட்டம்.   

அந்த நட்டம். பேச்சுவார்த்தை தொடங்க முதலே தெரியும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்த்திருக்கும். தமிழ் மக்களுக்கு பாரிய நட்டம்.   

அந்த நட்டம். பேச்சுவார்த்தை தொடங்க முதலே தெரியும் 

முன்னோட்டம் ஒன்று விட்டிருக்கிறன்....முகமூடிகள்  கிழியத்தொடங்கியிருக்கு...அமைதி பொன்போன்றதுதானே.....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

இதையும் பார்த்து புல் சவுண்டு கொடுங்க ...

2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர்களுக்கான சரியான தலைமை இல்லை, எமது மக்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் பலமான நேர்மையான அமைப்பு எதுவும் இல்லை என்பது பலரது கவலை.

ஆனால், தமிழ்த் தேசியம் தன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கிறது என்பதே உண்மை.

தலைமை, அமைப்பு, கட்சி பற்றிய எந்தக் கவலையுமின்றி யாருக்காகவும் காத்திராமல் தனது மக்களுக்கூடாக தமிழ்த் தேசியம் அடுத்த கட்டத்தை நோக்கி பரிமணித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அண்மையில் கனடாவில் தமிழ்த் தேசியப் பற்றாளர், தீவிர செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது தொடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்ட வழக்கு இதற்கு நல்ல உதாரணம்.

கனடாவில், 2021 கார்த்திகை மாதம்...

மாவீரர் வாரத்தில் கார்த்திக் நந்தகுமார் என்பவர் கார்த்திகைப் பூக்களை பெருமளவில் இறக்குமதி செய்து, அவற்றைக் கொண்டு ஒரு பிரமாண்டமான மாலை செய்து ஐயப்பன் ஆலயத்தில் கொடுத்து அதனை வைத்து சுவாமி ஐயப்பனிற்கு அலங்காரம் செய்யுமாறு ஆலய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இதனை ஆலய நிர்வாகத்தில் தமிழர் தேசியத்துக்கு எதிராக அந்நிய சக்திகளோடு இயங்கும் ஒரு சிலர் மறுத்ததோடு அந்த மாலையைக் குப்பையில் வீசினர். இந்த நிகழ்வு தமிழ் இளையோர் மற்றும் ஐயப்பன் கோவில் பக்தர் மத்தியில் பெரும் அதிர்வை விளைவித்ததோடு அவர்கள் ஆலய முன்றலில் ஆலயத்தின் நிர்வாக சபையின் அங்கத்தவர்களும் இலங்கை இனப்படுகொலை அரசுக்கு ஆதரவாக செயற்படுபவர்களாக கருத்தப்பட்ட தலைவர் மற்றும் செயலாளருக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தினார்.

அதன் விளைவு : "கோவில் நிர்வாகம் கார்த்திக் மீது கனடா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது"

கார்த்திக் நந்தகுமாரின் தேசியம் தொடர்பான செயற்பாடுகளை சுட்டிக்காட்டியும், அவரின் தனிப்பட்ட வாழ்வியலை காரணம் காட்டியும், குறிப்பாக, அவர் தேசியத் தலைவரை முன்னிலைப் படுத்தி திருமணம் செய்தமை மற்றும் அவரின் உருவம் தாங்கிய தாலியை அணிவித்தமை, பிள்ளைகளுக்கு, தீரன்பிரபாகரன், நந்திக்கடலோன் என்று பெயர் சூட்டியமை மற்றும் அவரின் வியாபார நிறுவனத்தின் வெளிப்புறத்தில் கார்த்திகை பூக்களின் படங்களை வைத்திருந்தமை என பல தகவல்கள் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்து கார்த்திக் நந்தகுமார் புலிகளை மீளுருவாக்கம் செய்கிறார் என ஐயப்பன் ஆலய நிர்வாகத்தின் சார்பாக குற்றம் சாட்டப் பட்டது.

மொத்தத்தில் ஒரு தமிழ்த்தேசியச் செயற்பாட்டளானை முடக்குவதற்கும், அவரை அழிப்பதற்கும் அதனை ஏனைய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு ஒரு பாடமாக ஆக்குவதற்மான வகையிலேயே இந்த வழக்கு கார்த்திக் மீது தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை கடந்த 16 ஆம் திகதி நீதிமனறத்தில் நடைபெற்றது. ON-LINE இல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது பொது மக்களும் பார்வையாளரகளாகக் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பல தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் உலகெங்கிலும் இருந்து இதில் பார்வையாளராகக் கலந்து கார்த்திக்குக்கு தமது ஆத்மாத்த அதரவைத் தெரிவித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி J.T. Akbarali J. தனது தீர்ப்பில்,

"ஐயப்பன் ஆலயம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையை தள்ளுபடி செய்வதாக அறிவித்ததோடு, இந்த வழக்கில் பிரதிவாதி கார்த்திக் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார்"

எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு சூட்சுமமாக ஒரு செய்தியைச் சொல்கிறது. அதாவது....

தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்பது ஈழத்தமிழரின் உரிமை, ஈழத்தமிழரின் விடுதலை, தமிழர் அறம் தமிழர் பண்பாடு சார்ந்த விடயம் மட்டுமல்ல; அது உலக அறம் சார்ந்த நிலைப்பாடு, அது நீதி சார்ந்த நிலைப்பாடு; அது அனைத்து அநீதிகளுக்கும் எதிரான நிலைப்பாடு!

அது ஈழத்தமிழர்களின் உரிமை சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல அது மனித உரிமை சார்ந்த நிலைப்பாடு!

அது தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல மனிதப் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிலைப்பாடு!

அது மனித நாகரீகம் சார்ந்த நிலைப்பாடு; மனித ஒழுக்கம் சார்ந்த நிலைப்பாடு!

மொத்தத்ததில் அது மனிதம் சார்ந்த நிலைப்பாடு, கோட்பாடு, வாழ்வியல் முறை!

“இந்த வழக்கில் பிரதிவாதி கார்த்திக் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார்” என்னும் நீதிபதியின் கூற்று அதனையே சுட்டிக் காட்டுகிறது. அதாவது தமிழ்த்தேசிய நிலைப்பாடு என்பது உலக நீதி, மனித அறம், மனித ஒழுக்கம், மனிதப் பண்பாடு மற்றும் மனித நாகரீகம் மனித உரிமை சார்ந்த நிலைப்பாடு என்பது இங்கு நிரூபணமாகியுள்ளது.

தமிழ்த் தேசியம் சார்ந்த விடயங்களை இனிமேலும் சட்டவிரோத நடவடிக்கையாகவோ, பயங்கரவாதப் போர்வைக்குள்ளே முடக்கிவிட முடியாது.

தமிழ்த்தேசியம் தனது மக்களுக்கூடாக அடுத்த கட்டத்தை நோக்கிச் பரிமணித்துக் கொண்டுதான் இருக்கிறது என ஆரம்பத்தில் நான் கூறிய கூற்றுக்கான ஆதாரமாக இந்த வழக்கின் வெற்றியை நான் பார்க்கிறேன்.

ஆம்! இது எமக்கான காலம். எமக்கெதிரான குற்றச்சாட்டுகள், வழக்குகள், பிரச்சாரங்களை நாம் துணிவோடும் ஒருமித்தும் எதிர்கொண்டால் நாம் வெல்வதும் வாழ்வதும் நிட்சயமானது என்னும் பெரு நம்பிக்கையைத் தருகிறது இந்த வழக்கின் வெற்றி.

பாராட்டுகள் Karthick Nanthan

பி.கு: கனடாவில் உள்ள ஐயப்பன் கோவிலானது இலங்கையில் உள்ள போர்க்குற்றவாளிகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வேலையைச் செய்து வருகிறது எனவும் அதன் பின்னணியில் கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உள்ளது எனவும் அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

(copy from... நண்பரின் முகப்புத்தக பதிவில் இருந்து பிரதி செய்யப்பட்டது)

இந்த செய்தி உண்மையானால் வாழ்த்துக்கள் வழக்குக்கு எதிராக போராடிய ஆதரவு செய்த அனைவருக்கும்.. கனடா உறவுகள் யாரும் இதைப்பற்றி மூச்சே விடவில்லை.. அதிலும் அரசியல் செய்திகள் விடயங்களில் கருத்து எழுதும் கனடா உறவுகள் கூட மூச்… இதுவே தமிழ்தேசியாவாதிகள் ஏதாவது சின்ன பிழை செய்திருந்தாலும் பந்தி பந்தியாக எழுதி விவாதிப்பார்கள்.. அது தப்பில்லை.. ஆனால் அதேபோல் நல்லவிடயங்களையும் எழுதி ஊக்குவித்து பரப்பவேண்டாமா..?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்படி ஒரு வழக்கு  இடம்பெற்ற விடயம் யாழ் களம் மூலமாகத்தான் தெரிய வருகிறது. 

குறிப்பு : இந்தக் கோவிலுக்குச் செல்பவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள் என்பது மிகவும் முக்கியமான விடயம். அவர்கள் அந்தக் கோவிலுக்குச் செல்லாமல் தவிர்த்தாலே அந்தக் கோவில் முடங்கிவிடும். அதை விடுத்து இங்கே வந்து கரித்துக்கொட்டுவதால்(தாங்கள் அல்ல ) பலன் ஏதும் இல்லை. 

தற்போதைய தமிழ்த் தேசியத்தின் நிலை குரங்கின் கையில் கூரிய வாள் போன்றது.  அந்தக் குரங்குகள் மீதம் இருக்கும் கொஞ்சநஞ்ச ஆதரவையும் இல்லாமல் செய்துவிடும். 

எனக்கு இருக்கும் கேள்வி? 

CTC கட்டட எரிப்பிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு? 

🥺

Edited by Kapithan

4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த செய்தி உண்மையானால் வாழ்த்துக்கள் வழக்குக்கு எதிராக போராடிய ஆதரவு செய்த அனைவருக்கும்.. கனடா உறவுகள் யாரும் இதைப்பற்றி மூச்சே விடவில்லை.. அதிலும் அரசியல் செய்திகள் விடயங்களில் கருத்து எழுதும் கனடா உறவுகள் கூட மூச்… இதுவே தமிழ்தேசியாவாதிகள் ஏதாவது சின்ன பிழை செய்திருந்தாலும் பந்தி பந்தியாக எழுதி விவாதிப்பார்கள்.. அது தப்பில்லை.. ஆனால் அதேபோல் நல்லவிடயங்களையும் எழுதி ஊக்குவித்து பரப்பவேண்டாமா..?

இந்த சம்பவம் பற்றி, அது நிகழ்ந்த சமயத்தில் செய்திகள் பல வெளியாகின. யாழிலிலும் இச் சம்பவம் தொடர்பாக வாழும் புலம் பகுதியில் செய்தி பகிர்ந்து இருந்தனர். ஆனால், இத் தீர்ப்பு பற்றி சமூக வலைத்தளங்களில், முக்கியமாக வட்ஸ் அப் இல் பகிரப்பட்டதுக்கு அப்பால் தேசியம் என்ற ஒரே ஒரு இணையச் செய்தித் தளத்தை தவிர வேறு எங்கும் வந்ததாக நான்(னும்) காணவில்லை. எனவே இத் தீர்ப்பின் உண்மைத் தன்மை பற்றி தெளிவில்லை.  

தேசியம் தளத்தில் வந்த செய்தி:
https://thesiyamnation.com/36430/

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2024 at 16:07, alvayan said:

இதுவும் கனடாவில்தான் நடந்திருக்கு....புரிஞ்சுக்கோங்க..

( முகப் புத்தகத்தில் பிரதி பண்ணப் பட்டது.... செய்தி 100 வீதம் உண்மை)

 · 
தமிழீழத் தேசியச் சின்னங்கள் மீது கனடாவில் நிரந்தரத் தடை கொண்டு வரும் நாசகாரச் சதியை நோக்காகக் கொண்டு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது சிறீலங்கா இன அழிப்பு அரசின் பின் புலத்தில் இயங்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய நிர்வாகம் தொடுத்த வழக்கை ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் அவருக்கான இழப்பீட்டுத் தொகையாக 73,769.12 கனடியன் டொலர்களை முப்பது நாட்களுக்குள் செலுத்துமாறும் தீர்ப்பளித்திருக்கிறது.
புலத்தில் தமிழ்த் தேசியச் செயற்பாடுகளை - செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்கும் நோக்குடன் எல்லை கடந்த அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு தோல்வியில் முடிந்திருக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ இன அழிப்பு அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கிய ஐயப்பன் கோவில் நிர்வாகம் மக்கள் முன் அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கிறது.
கார்த்திக் நந்தகுமார் தனி மனிதன் அல்ல - அவர் தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதி. இந்த வழக்கில் அவருக்குப் பக்க பலமாக உலகெங்கும் பரந்து வாழும் நூற்றுக்கணக்கான தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் அணிவகுத்திருந்தார்கள்.
இது அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு அல்ல - இன அழிப்பைச் சந்தித்துத் தொடர்ந்து இன அழிப்புக்கு முகம் கொடுத்தபடியே நீதி வேண்டி நிற்கும் ஒரு இனத்தின் நீதியின் மீது - தமிழீழ தேசியச் சின்னங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு.
ஐயப்பன் கோவில் நிர்வாகம் மட்டுமல்ல இனியும் அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலுக்குள் பலியாகி புலத்தில் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் - செயற்பாட்டாளர்கள் மீதும் வழக்குத் தொடுக்கும் ஒவ்வொருவரும் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
இல்லையேல் மக்கள் முன் இப்படித்தான் அம்பலப்பட்டு நிற்க வேண்டும். உங்கள் தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கும், சுய அரிப்புகளுக்கும் தமிழீழ விடுதலை என்பது ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல.
இனியும் இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்தால் உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு என்ன விலை கொடுத்தாவது அதை முறியடிப்போம்.

இது ஒரு தனிப்பட்ட இரு தரப்பினருக்கிடையேயான பிணக்காக தெரிகிறது, தன்னை மக்கள் செயற்பாட்டாளராக காட்ட முனைந்து சுய தீர்மானத்தினடிப்படையில் மலர் மாலையினை கோவில் நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார், அதனை அணிவிப்பதும் அணிவிக்காததும் கோவில் நிர்வாகத்தின் விருப்பம் அதனால் ஏற்பட்ட பிணக்கினை நிதிமன்றில் தீர்த்து கொண்டுள்ளார்கள் அவ்வளவே, அவருக்கு சட்ட ரீதியான தீர்வு கிடைத்துள்ளது, அந்த சம்பவத்தினை தனது சுய விளம்பரத்திற்காக குறிப்பிட்ட நபர் பயன்படுத்தியுள்ளதனை போல உள்ளது.

கனடிய தமிழர் பேரவையின் கட்டடத்தினை தாக்கினவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், இவ்வாறான செயற்பாடுகளை தமிழர் நலன் விரும்பிகள் செய்திருந்தால் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் (கனடிய தமிழர் பேரவை தந்து நிலைப்பாட்டினை தெளிவாக கூறிய பின்னும் அதற்கான மறுவினையாக இந்த சம்பவம் இருந்தால்).

சிங்கள அரசின் கைகூலிகளின் வேலையாக இருக்கவும் சாத்தியமுள்ளது ஏன் கனடிய தமிழர் பேரவை கூட செய்திருக்கலாம் (அப்படி செய்திருந்தால் அவர்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்).

சிட்னியில்  சில காலத்தின் முன்னர் எரிபொருள் நிலையத்தில் வேலையில் இருந்த  இலங்கையர் தனது வாகன காப்புறுதி கட்டமுடியாமல் தனது உறவினர் உதவியினுடன் எரிபொருள் நிலையத்திலிருந்து காரினை எடுத்து சென்று ( அவர் அப்போது கடமையில் இருந்தார்.) ஒரு சிறிய கணப்பொழுதுகள் கண்காணிப்பு கருவிகளில் பதிவாகுமாறு தடயமில்லாமல் இருப்பதற்காக நீர்நிலை ஒன்றில் தள்ளிவிட்டு அந்த பணத்தினை பெற்று கொண்டாராம்.

தற்போது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் நிகழ்வுகளை பார்ர்கும்போது இரண்டே இரண்டு செயற்பாட்டாளர்கள்தான் அதிகளவில் செயற்படுகிறார்கள்.
1. தமிழர் விரோத சிங்கள அரசின் நேரடி கை கூலிகள்.
2. தமிழர் நல் செயற்பாட்டாளர் எனும் போர்வையில் இந்தமாதிரி பாதகமான செயல்களை செய்யும் சிங்கள அரசின் கைகூலிகளின் இரண்டாவது அணி.
 
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஈழதமிழர்களின் இந்த வன்முறை போக்கு மாற்றி அமைக்கபட வேண்டும்.

தமிழ் மக்களின் போக்கு இவ்வளவு மலினப்ப்ட்டு போவது வருந்ததக்க விடயம்தான் (அதனை செய்திருந்தால்).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இப்படி ஒரு வழக்கு  இடம்பெற்ற விடயம் யாழ் களம் மூலமாகத்தான் தெரிய வருகிறது. 

 . 

தற்போதைய தமிழ்த் தேசியத்தின் நிலை குரங்கின் கையில் கூரிய வாள் போன்றது.  அந்தக் குரங்குகள் மீதம் இருக்கும் கொஞ்சநஞ்ச ஆதரவையும் இல்லாமல் செய்துவிடும். 

எனக்கு இருக்கும் கேள்வி? 

CTC கட்டட எரிப்பிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு? 

🥺

தொடர்பு இருக்கிறபடியால்தான் போட்டிருக்கின்றேன்...ஆழ்ந்து வாசித்தால் தொடர்பு தெரியு...

அதுசரி... அந்த சுரேன் விடையத்தில் ...நீங்கள் 8 பக்கம்   நீட்டினது எந்த கட்டக்கரியில்...அதுகூடப்  பரவாயில்லை/\...அமெரிக்காவில் இருக்கிற அண்ணனே ..ஆங்கில . பரவாயில்லை..உங்கட ஆதார..பொழிப்புக்களைப்பார்த்து..தலையச் சொறிந்தது ..ஞாபகம்..இல்லையோ..😋

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

தமிழ் மக்களின் போக்கு இவ்வளவு மலினப்ப்ட்டு போவது வருந்ததக்க விடயம்தான் (அதனை செய்திருந்தால்).

☹️

5 hours ago, vasee said:

இது ஒரு தனிப்பட்ட இரு தரப்பினருக்கிடையேயான பிணக்காக தெரிகிறது, தன்னை மக்கள் செயற்பாட்டாளராக காட்ட முனைந்து சுய தீர்மானத்தினடிப்படையில் மலர் மாலையினை கோவில் நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார், அதனை அணிவிப்பதும் அணிவிக்காததும் கோவில் நிர்வாகத்தின் விருப்பம் அதனால் ஏற்பட்ட பிணக்கினை நிதிமன்றில் தீர்த்து கொண்டுள்ளார்கள் அவ்வளவே, அவருக்கு சட்ட ரீதியான தீர்வு கிடைத்துள்ளது, அந்த சம்பவத்தினை தனது சுய விளம்பரத்திற்காக குறிப்பிட்ட நபர் பயன்படுத்தியுள்ளதனை போல உள்ளது.

அதே தான் 👍

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள சீனியர் உறவு பாலபத்ர ஓணாண்டி இந்த முகநூல் தகவலுக்காக ஏன் இவ்வளவு தூரம் மகிழ்ச்சி அடைகின்றார் என்பது விளங்கவே இல்லை. யார் இப்படி கோவில் மாலை செய்ய கூடியவர்கள் என்பதை  Vasee தெளிவுபடுத்தியுள்ளார்.

5 hours ago, vasee said:

தற்போது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் நிகழ்வுகளை பார்ர்கும்போது இரண்டே இரண்டு செயற்பாட்டாளர்கள்தான் அதிகளவில் செயற்படுகிறார்கள்.
1. தமிழர் விரோத சிங்கள அரசின் நேரடி கை கூலிகள்.
2. தமிழர் நல் செயற்பாட்டாளர் எனும் போர்வையில் இந்தமாதிரி பாதகமான செயல்களை செய்யும் சிங்கள அரசின் கைகூலிகளின் இரண்டாவது அணி.

  • கருத்துக்கள உறவுகள்

வாண வாடிக்கை: தமிழ் மரபுத் திங்களின் அடுத்த பரிமாணம்

மாயமான்

கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழ் மரபுத் திங்கள் வாண வாடிக்கையுடன் கோலாகலமாக முடிவுக்கு வந்திருக்கிறது. கனடிய தமிழர் பேரவை அலுவலகம் உடைக்கப்பட்டு எரியூட்டப்பட்டதைச் சொல்கிறேன். 27ம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3:15 மணிபோல் எனக்கூறப்படுகிறது. சீ.சீ.டி.வி. காமெராக்களின் பதிவுகளைப் பார்த்தேன். இருவர், மூடிக்கட்டியிருந்த நிலையிலும் நடை-உடை-பாவனையில் தமிழ் மரபு தெரிந்தது. மிகுதி காவல்துறையின் வெண்திரையில். நமக்கேன் வம்பு.

‘இமாலயம்’ சக்திவாய்ந்தது என்று தெரியும் ஆனால் இந்தளவுக்கு? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பிரகடனப்படுத்தப்பட்ட ‘பிரகடனத்தின்’ விளைவுகளில் இதுவுமொன்று. பின்னால் யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் வெட்ட வெளிச்சம். கனடிய பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் வாங்கியவர்களும் இதில் இருக்கிறார்கள் எனும்போது கல்விக்கும் வன்முறைக்கும் சம்பந்தமிருப்பது புரியக்கூடியதாகவுள்ளது. இயங்கியவர்கள் அப்பாவிகள். நியாயம் தெரிந்த நல்ல மனிதர்கள் எமது சமூகத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குரல்களை எழுப்பாதவர்கள். வாக்குகளை மட்டும் அவ்வப்போது அமைதியாகத் திணித்துவிட்டு அப்பால் போபவர்கள். தமிழுக்காகவும், தமிழனுக்காகவுமென அவர்கள் எதையும் செய்பவர்கள். அவர்கள் தாகம் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என்பதற்கு இச்சம்பவமும் ஒரு உதாரணம். துப்பாக்கிச்சூடு, எரிப்பு, திரை கிழிப்பு, வாகனமுடைப்பு, தனிமனித தாக்குதல், கடையுடைப்பு, கூட்டம் குழப்புதல் என அனைத்து வன்முறைகளும் இங்கும் அரங்கேறியவைதான். கடந்த நாற்பது ஆண்டுகளாக நாம் இவற்றைப் பார்த்து வந்தவர்கள். தமிழுக்காகவும், தமிழனுக்காகவும் இவை மன்னிக்கப்பட்டவை. இம்மரபு தொடரும் என்பதற்கு சமூக ஊடகப் பதிவுகள் சாட்சியம் கூறுகின்றன.

கனடிய தமிழர் பேரவையின் ஆரம்ப காலத்திலிருந்து அதன் பணிகளைப் பார்த்து வருபவன். அதன் படிகளில் ஏறி உச்சிக்குச் சென்ற பலர் இப்போது அதன் அத்திவாரத்தை இடித்துத் தகர்ப்பதில் முன்னணியில் நிற்கிறார்கள். அதன் வெற்றி மீதான பொறாமை. பேரவை மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடுண்டு. அவைபற்றி சில இயக்குனர்களுடனும், நிறைவேற்றுப்பணிப்பாளருடனும் காரசாரமாக விவாதித்தவன். நிறைவேற்றுப் பணிப்பாளர் டான்ரன் துரைராஜா மீது பலகுற்றச்சாட்டுகள் இருக்கலாம். ஆனால் அவரது உழைப்பு, சுயநலமற்ற அர்ப்பணிப்பு போன்றவற்றில் விமர்சனங்கள் இருக்கமுடியாது. குடும்பத்தைவிட அதிக நேரத்தை அவர் தனது பணிக்காகச் செலவிடுபவர். பேரவையின் வெற்றிக்கு மட்டுமல்ல இங்கு மேடைகளில் பிரகாசிக்கும் பல அரசியல் நட்சத்திரங்களின் வெற்றிகளுக்கும் பின்னால் அவரது உழைப்பு இருந்தது என்பதை அவரவர்களின் மனச்சாட்சிகளே உறுத்திச் சொல்லும். இன்று கனடிய பாராளுமன்ற வளாகங்களில் உலவும் பல இளையதலைமுறைனர் இதற்குச் சாட்சி. இந்த நட்சத்திரங்களை மேடையேற்றுவதற்குப் பதிலாக அவர் மேடையேறியிருந்தால் நிலைமையே வேறு.

பேரவை அலுவலகம் மீதான இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவேண்டியவர்கள் பலர். சட்டம் இந்த உடுக்கு மாஸ்டர்களை எதுவுமே செய்யப்போவதில்லை. உணர்ச்சிவசப்பட்டு உருவேறி ஆடிய சாமானியர்கள்தான் பாவம். கனடிய தமிழர் பேரவை ஈழத்தமிழருக்கும், கனடியத் தமிழருக்கும் பல சேவைகளைச் செய்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக அவற்றைப் பரப்புரை செய்வதில்லை. கனடாவின் ‘தமிழர் தெருவிழா’ உலகம் பூராவும் கனடியத் தமிழருக்கு அடையாளம் தேடித்தந்த ஒன்று. அம்மேடைகளில் ஏறி இறங்காத கனடிய அரசியல்வாதிகளே இல்லை என்றே கூறலாம். அத்தெருவிழாவைக் கையகப்படுத்துவதற்குப் பல தமிழர் அமைப்புகள் முயன்று பார்த்தன. வருடா வருடம் மானியங்களுக்கு விண்ணப்பிக்கும்போது கூடவே பேரவைக்கு எதிரான பெட்டிசன்களும் போவது வழமை. எல்லாம் தமிழின் பேரில். எங்கு போனாலும் தமிழன் தனது கலாச்சாரத்தை விட்டுக்கொடுப்பதில்லை என்பதை ஆணித்தரமாக நம்புபவன் நான். வேண்டுமானால் கலாநிதி இலகுப்பிள்ளையைக் கேட்டுப்பாருங்கள்.

இப்போதைக்கு, ஆழ்ந்த அஞ்சலி!

https://marumoli.com/வாண-வாடிக்கை-தமிழ்-மரபுத/?fbclid=IwAR2NR2ZLXGezyYCtuDp8YJyUIKEETGWkgZCWPolT98jimt12GiP2KeTk95g#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

தொடர்பு இருக்கிறபடியால்தான் போட்டிருக்கின்றேன்...ஆழ்ந்து வாசித்தால் தொடர்பு தெரியு...

அதுசரி... அந்த சுரேன் விடையத்தில் ...நீங்கள் 8 பக்கம்   நீட்டினது எந்த கட்டக்கரியில்...அதுகூடப்  பரவாயில்லை/\...அமெரிக்காவில் இருக்கிற அண்ணனே ..ஆங்கில . பரவாயில்லை..உங்கட ஆதார..பொழிப்புக்களைப்பார்த்து..தலையச் சொறிந்தது ..ஞாபகம்..இல்லையோ..😋

மாயமானின் கட்டுரையை வாசித்து கிரகித்துக்கொள்வது நன்று. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

மாயமானின் கட்டுரையை வாசித்து கிரகித்துக்கொள்வது நன்று. 

அது உங்கடை கைவண்ணம் தானே....

  6 hours ago, vasee said:

தற்போது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் நிகழ்வுகளை பார்ர்கும்போது இரண்டே இரண்டு செயற்பாட்டாளர்கள்தான் அதிகளவில் செயற்படுகிறார்கள்.
1. தமிழர் விரோத சிங்கள அரசின் நேரடி கை கூலிகள்.
2. தமிழர் நல் செயற்பாட்டாளர் எனும் போர்வையில் இந்தமாதிரி பாதகமான செயல்களை செய்யும் சிங்கள அரசின் கைகூலிகளின் இரண்டாவது அணி.

இப்படியும் இந்த திரியில் இருக்கிறதே...

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையை எவரும் ஆதரிக்கவில்லை  கனடா தமிழர் பேரவையை  இவ்வளவு காலமும் தாக்கவில்லை  இப்போது ஏன் தாக்கினார்கள்?? பேரவையின். செயல்பாடுகளில்  மாற்றங்கள் இல்லையா?? ஆரம்பத்தில் இருந்தது போல் தான்  இன்றும் செயல்படுகிறதா??  

Guest
This topic is now closed to further replies.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.