Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

இந்தியா பறந்தார் அனுரகுமார! 

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட நால்வர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் மேலும் இருவரும் இன்று (05) காலை புதுடில்லிக்கு பயணித்ததாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் கட்சி முதலில் மக்கள் விடுதலை முன்னணியினால் கட்டமைக்கப்பட்டதுடன், அந்தக் கட்சி முன்பு இந்தியாவுக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றியது.

இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையின் போது, மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாகவே அதற்கு எதிராக செயல்பட்டு இந்திய விரிவாக்கத்திற்கு எதிரான ஒரு சித்தாந்தத்தை வழிநடத்தியது.

இந்தியாவின் தலையீட்டுடன் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இலங்கையில் மாகாண சபை முறைமை கொண்டுவரப்படுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்படும் போது அவர்களுக்கு நடத்தப்பட்ட ஐந்து வகுப்புகளில் இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றி கற்பிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சிறந்த தொலைநோக்கு பார்வையுடன் இந்தியாவுடன் செயற்பட தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்னர் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க அனுரகுமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
https://tamil.adaderana.lk/news.php?nid=183638

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் அனுரகுமார

05 Feb, 2024 | 09:10 PM
image
 
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜேவிபியின் தலைவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவலை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது பிராந்திய பாதுகாப்பு இந்தியா இலங்கையுடன் தொடர்புபட்ட இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத்தும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்

https://www.virakesari.lk/article/175657

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுர இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார்

anura.jpg

தேசிய மக்கள் படையின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (05) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரை சந்தித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது X கணக்கில், நமது இருதரப்பு உறவைப் பற்றியும், அது மேலும் ஆழமடைவதால் ஏற்படும் பரஸ்பர நன்மைகள் பற்றியும், இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி பற்றியும் இருவருக்கிடையில் கருத்து பரிமாற்றம் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று காலை இந்தியாவிற்கு புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/290609

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலம் பதில் சொல்லும்.....என்பது இதை தான்...
இவரது கட்சி பிரதிநிதிகள் ஒருகாலத்தில் 77/83 இனகலவரங்களின் பொழுது  "அப்பட்ட எப்பா மசால வட ,தோசை,பருப்பு" என கூறி தமிழர்களை புறந்தள்ளியவர்கள்
தமிழர்கள் ஊடாக இந்தியா தமது விரிவாக்கத்தை செய்யும் என சிங்கள மக்களை தூண்டிவிட்டவர்கள்
இந்திய பொருட்களுக்கு தடை விதிக்க வேணும் பிரச்சாரம் செய்தவர்கள்
இவர்களின் முன்னாள் தோழர்களை (71 ஆம் ஆண்டு) அழித்து சிரிமாவின் ஆட்சியை காப்பாற்றிய இந்தியாவுடன் பேச்சுவார்த்தை.....

தமிழர் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுப்பதை விட சிங்கள  இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்தால் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம் என இந்திய‌ புலனாய்வு அதிகாரிகள் நினைக்கின்றனர் போலும்
 
3 hours ago, ஏராளன் said:

அது மேலும் ஆழமடைவதால் ஏற்படும் பரஸ்பர நன்மைகள் பற்றியும், இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி பற்றியும் இருவருக்கிடையில் கருத்து பரிமாற்றம் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீ ஆட்சிக்கு வந்தால் முதலில் எங்க நாடுக்குத்தான்  முதல் உத்தியோக விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் ....பீளிஸ்....மாலை தீ ஜனாதிபதி செய்தது போல் வேறு நாடுகளுக்கு போய் விடாதே .....

  • Like 3
Posted
1 hour ago, putthan said:

காலம் பதில் சொல்லும்.....என்பது இதை தான்...
இவரது கட்சி பிரதிநிதிகள் ஒருகாலத்தில் 77/83 இனகலவரங்களின் பொழுது  "அப்பட்ட எப்பா மசால வட ,தோசை,பருப்பு" என கூறி தமிழர்களை புறந்தள்ளியவர்கள்
தமிழர்கள் ஊடாக இந்தியா தமது விரிவாக்கத்தை செய்யும் என சிங்கள மக்களை தூண்டிவிட்டவர்கள்
இந்திய பொருட்களுக்கு தடை விதிக்க வேணும் பிரச்சாரம் செய்தவர்கள்
இவர்களின் முன்னாள் தோழர்களை (71 ஆம் ஆண்டு) அழித்து சிரிமாவின் ஆட்சியை காப்பாற்றிய இந்தியாவுடன் பேச்சுவார்த்தை.....

சிங்களம் இன்னும் தன்னை எவ்வாறு பாதுக்காக்கின்றது என்பது இதில் இருந்தே புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. ஜே.வி.பி இன்றைய உலக ஒழுக்கையும், முக்கியமாக தென்னாசியாவில் இந்தியாவின் பங்கையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள முயல்கின்றது. நாளைக்கு சீனா அழைத்தாலும், மாலைதீவு அழைத்தாலும் அது அங்கும் செல்லும். 

அரசியல் நிரந்தர பகைவர்கள் என்றும் நிரந்தர நண்பர்கள் என்றும் எதுவும் இல்லை.

எமக்கு இந்த அடிப்படை கூட புரியாது இருக்கும் எல்லாவற்றையும் இழந்து கொண்டு இருக்கின்றோம்.

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, putthan said:

எப்பா மசால வட ,தோசை,பருப்பு" என கூறி தமிழர்களை புறந்தள்ளியவர்கள்

அறிந்தேன். தமிழ் தொழிலாளர்கள், தமிழ் பாட்டாளிகளையும் சேர்த்து புறந்தள்ளிய கம்யூனிஸ்ட்டுகள்.

Edited by விளங்க நினைப்பவன்
  • Like 1
Posted

இந்தியாவின் திட்டம்!? | ஜனாதிபதியாகும் அநுரகுமார!? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று காலை இந்தியாவிற்கு புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்கு எதிராக இப்ப இருந்தே வியூகம் வகுக்க தொடங்கிவிட்டனர்.

அமெரிக்காவுக்கும் இவரில் ஒரு கண்.

பாவம் சயித் தான் தனித்து விடப்படுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, putthan said:

காலம் பதில் சொல்லும்.....என்பது இதை தான்...
இவரது கட்சி பிரதிநிதிகள் ஒருகாலத்தில் 77/83 இனகலவரங்களின் பொழுது  "அப்பட்ட எப்பா மசால வட ,தோசை,பருப்பு" என கூறி தமிழர்களை புறந்தள்ளியவர்கள்
தமிழர்கள் ஊடாக இந்தியா தமது விரிவாக்கத்தை செய்யும் என சிங்கள மக்களை தூண்டிவிட்டவர்கள்
இந்திய பொருட்களுக்கு தடை விதிக்க வேணும் பிரச்சாரம் செய்தவர்கள்
இவர்களின் முன்னாள் தோழர்களை (71 ஆம் ஆண்டு) அழித்து சிரிமாவின் ஆட்சியை காப்பாற்றிய இந்தியாவுடன் பேச்சுவார்த்தை.....

தமிழர் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுப்பதை விட சிங்கள  இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்தால் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம் என இந்திய‌ புலனாய்வு அதிகாரிகள் நினைக்கின்றனர் போலும்
 
நீ ஆட்சிக்கு வந்தால் முதலில் எங்க நாடுக்குத்தான்  முதல் உத்தியோக விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் ....பீளிஸ்....மாலை தீ ஜனாதிபதி செய்தது போல் வேறு நாடுகளுக்கு போய் விடாதே .....

இந்தியா இப்போது குழம்பி போய் இருக்கிறது. அதாவது அரசியலில் உள்ள யாரையுமே விட்டு வைக்காமல் எல்லோரையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

இன்னுமொரு முயிஸு உருவாகிவிடா கூடாதென்ற எண்ணத்தில் இந்திய அரசு செயல்படுகின்றது. உண்மையாகவே முயிஸுவை உருவாக்கியது இந்தியாதான். அவர் ஒரு தீவிர இஸ்லாமிய பற்றுள்ளவர். இந்தியாவில் சங்கிகளால் அங்குள்ள முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயத்தை பார்த்து தீவிர இந்திய எதிர்ப்பாளராக மாறினார். சீனா அதனை நன்றாக பயன்படுத்தி கொண்டது.

இப்போது சீன ஜேவிபி இனருக்கு பண உதவி செய்வதுடன் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதையும் இப்போதுதான் இந்திய அறிந்ததோ தெரியவில்லை. கடந்த வாரம் கூட சீனா வழங்கிய உதவி பொருட்களை கிளிநொச்சி மக்களுக்கு JVP வழங்கி வைத்தது.

இப்போதைக்கு ஜேவிபி இந்தியாவுடன் அனுசரித்து செல்லவே முயட்சிக்கும். ஆட்சிக்கு வந்தால் எல்லாமே இன்னுமொரு மாலைத்தீவாக மாற சந்தர்ப்பம் உருவாக்கலாம் . அந்த நாள் தொடக்கம் இந்திய எதிர்ப்பு கொளகையை உடையவர்கள் ஜேவிபி இணர். இப்போது அரசியல் காரணங்களுக்காக இந்தியா சென்றிருப்பதை இந்தியா தவறாக புரிந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நிழலி said:

சிங்களம் இன்னும் தன்னை எவ்வாறு பாதுக்காக்கின்றது என்பது இதில் இருந்தே புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. ஜே.வி.பி இன்றைய உலக ஒழுக்கையும், முக்கியமாக தென்னாசியாவில் இந்தியாவின் பங்கையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள முயல்கின்றது. நாளைக்கு சீனா அழைத்தாலும், மாலைதீவு அழைத்தாலும் அது அங்கும் செல்லும். 

அரசியல் நிரந்தர பகைவர்கள் என்றும் நிரந்தர நண்பர்கள் என்றும் எதுவும் இல்லை.

எமக்கு இந்த அடிப்படை கூட புரியாது இருக்கும் எல்லாவற்றையும் இழந்து கொண்டு இருக்கின்றோம்.

நாங்கள் CTC அலுவலகத்தை எரிப்பதில் ரொம்ப பிசி 

🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted

India Vs JVP | Rj Chandru Report

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

spacer.png

spacer.png

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Cruso said:

கடந்த வாரம் கூட சீனா வழங்கிய உதவி பொருட்களை கிளிநொச்சி மக்களுக்கு JVP வழங்கி வைத்தது.

இந்தியாவின் திட்டம் என்ற வீடியோவில் செய்தியாளர் சொல்கின்றார் அந்த கட்சி தலைவர் சீனாவை மிகவும் எதிர்த்தாக அது உண்மையா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேவிபி தலைவரின் இந்திய விஜயம் - நாமல் தெரிவித்திருப்பது என்ன?

Published By: RAJEEBAN   06 FEB, 2024 | 05:51 PM

image

கடந்தகாலங்களில்  இந்திய எதிர்ப்பு கொள்கையை பின்பற்றிய ஜேவிபியின் இந்திய விஜயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை கடந்தகாலங்களில் பல இந்திய முதலீடுகளை முதலீட்டாளர்களை இழந்தமைக்கு ஜேவிபியே முக்கிய காரணம்எனஅவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபியின் இந்திய எதிர்ப்புகொள்கையால்  சம்பூர் மின்திட்டம் கைவிடப்பட்டமை இதற்கான ஒரு உதாரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜேவிபி தற்போது வேறு கொள்கையை பின்பற்றுகின்றது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றது இது சிறந்த விடயம என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய விஜயத்தின் பின்னர் ஜேவிபி இலங்கைக்குள் முதலீட்டாளர்கள் வருவதற்கு ஆதரவளிக்கும் என  அவர் நம்பிக்கை  வெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/175735

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, ஈழப்பிரியன் said:

ரணிலுக்கு எதிராக இப்ப இருந்தே வியூகம் வகுக்க தொடங்கிவிட்டனர்.

அமெரிக்காவுக்கும் இவரில் ஒரு கண்.

பாவம் சயித் தான் தனித்து விடப்படுகிறார்.

கனடா வருவார் என்கிறீங்க  😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தியா; உங்கள் Demands என்ன அனுர,

சோல்லு ..சொல்லு,..சொல்லு. நீதான் ரொம்ப தைரியமான ஆளாச்சே, ..... 

அனுர;  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,.......

No North and East இணைப்பு , No 13th Amendment, No மாகாண சபை 

இந்தியா; Yes yes,... yes. Okay, Bye Bye 🥶

Edited by Kapithan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

அனுர;  No North and East இணைப்பு ,

அது ஏற்கனவே இணைந்து தான் இருக்கிறது,நீங்கள் அதை பிரிக்கமால். விட்டால் போதும் 

2 hours ago, Kapithan said:

இந்தியா; Yes yes,... yes. Okay, Bye Bye 

இதை பகிங்கமாக. சொல்லட்டும். பார்ப்போம்  யாழ்ப்பாணத்தில்  வேண்டாம்  கொழும்பில் வேண்டாம் புதுடெல்லியில். வைத்து சொல்லட்டும்.  முடியாது  தப்பி தவறி சொன்னால்  மோடி  அடுத்த பிரதமர் இல்லை அனுர  ஐனதிபதியும் இல்லை   

Posted
8 minutes ago, Kandiah57 said:

அது ஏற்கனவே இணைந்து தான் இருக்கிறது,நீங்கள் அதை பிரிக்கமால். விட்டால் போதும் 

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்து இருக்கின்றனவா? தவறான தகவல் இது.

இந்திய இலங்கை ஒப்பத்தத்தின் மூலம் இணைந்து இருந்ததை எதிர்த்து இதே ஜேவிபி தான் வழக்கு தாக்கல் செய்து உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிக்க வைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Kandiah57 said:

அது ஏற்கனவே இணைந்து தான் இருக்கிறது,நீங்கள் அதை பிரிக்கமால். விட்டால் போதும் 

இதை பகிங்கமாக. சொல்லட்டும். பார்ப்போம்  யாழ்ப்பாணத்தில்  வேண்டாம்  கொழும்பில் வேண்டாம் புதுடெல்லியில். வைத்து சொல்லட்டும்.  முடியாது  தப்பி தவறி சொன்னால்  மோடி  அடுத்த பிரதமர் இல்லை அனுர  ஐனதிபதியும் இல்லை   

நோ டெஞ்சன் கந்தையர்,...  உங்க உடம்புக்கு ஆகாது ....🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

அனுர;  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,.......

No North and East இணைப்பு , No 13th Amendment, No மாகாண சபை 

இந்தியா; Yes yes,... yes. Okay, Bye Bye 🥶

😄 இருபகுதிக்மும் இடையே உடன்பாடு இனிதே நிறைவேறியது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, நிழலி said:

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்து இருக்கின்றனவா? தவறான தகவல் இது.

இந்திய இலங்கை ஒப்பத்தத்தின் மூலம் இணைந்து இருந்ததை எதிர்த்து இதே ஜேவிபி தான் வழக்கு தாக்கல் செய்து உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிக்க வைத்தது.

எனக்கு தெரியும்   நீதிபதி சரத் சில்வா  இருக்கலாம்    இதை பிரிந்தவர்.  ஆனால் இடையில் மதில் கட்டவில்லை  தமிழ் மக்கள் மனத்தளவில் இணைந்து தான் இருக்கிறார்கள்  கலாசாரம் பண்பாடு ...   இப்படி அனைத்து விடயங்களிலும். இணைந்து இருக்கிறார்கள்   இந்த பிணைப்புகள் இருந்தால்  என்றோ ஒருநாள் வடக்கு கிழக்கு இணையும்  ஜேர்மனி இணைந்ததுபோல். 

11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😄 இருபகுதிக்மும் இடையே உடன்பாடு இனிதே நிறைவேறியது .

என்ன பகிடி கியிடி. விடுகிறீர்களா??   அனுகுமர   அரசாங்கத்தின் பிரதிநிதி இல்லை  உடன்பாடு போட முடியாது  சும்மா  பொழுதுபோக்குக்குத் தேனீரை அருந்தி கதைக்கலாம். இனி கருத்து கணிப்பு எடுத்தால்  அனுர   ஐனதிபதி ஆக  சாத்தியம் இல்லை   சதீஸ் தான் வருவார் என்க் கட்டும்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, Kapithan said:

நோ டெஞ்சன் கந்தையர்,...  உங்க உடம்புக்கு ஆகாது ....🤣

ஒம் ஒம்  உங்கள் ஆதரவை  மலைபோல்  நம்பி உள்ளேன்   🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, Kandiah57 said:

இனி கருத்து கணிப்பு எடுத்தால்  அனுர   ஐனதிபதி ஆக  சாத்தியம் இல்லை   சதீஸ் தான் வருவார் என்க் கட்டும்  

இருக்கலாம்.   மேலே நுணாவிலானும் புரட்சிகர தமிழ்தேசியனும் தந்த வீடியோ தயாரித்தவர்கள்  அவர் தான் வரபோகிறது போல் பயமுறுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இருக்கலாம்.   மேலே நுணாவிலானும் புரட்சிகர தமிழ்தேசியனும் தந்த வீடியோ தயாரித்தவர்கள்  அவர் தான் வரபோகிறது போல் பயமுறுத்துகிறார்கள்.

அதை. மறுக்கவில்லை  இனி. இனி. என்பதற்கு கருத்துகள் இல்லையா?? 😂🤣

Posted

https://www.lankaenews.com/news/3615/en

~

2024 Sri Lankan Presidential Election Prediction: JVP Emerges as Front Runner with 59% Support..!

-By A Special Correspondent

NPP-59-pecents-support.jpg

(Lanka-e-News -29.Dec.2023, 11.15PM) As the political landscape in Sri Lanka continues to evolve, all eyes are on the upcoming 2024 Presidential election. Recent polls and predictions suggest a significant shift in public sentiment, with the Janatha Vimukthi Peramuna (JVP) emerging as the leading contender, holding a commanding 59% of the anticipated vote. In this article, we delve into the dynamics of this prediction and explore the factors contributing to the rise of the JVP, as well as the challenges faced by other major political parties.

JVP's Surge to the Forefront:

The Janatha Vimukthi Peramuna, a leftist political party in Sri Lanka, is poised to make a significant impact in the 2024 Presidential election. With a projected 59% of voter support, the JVP has successfully resonated with a considerable portion of the electorate. This surge can be attributed to various factors, including their policy proposals, grassroots outreach, and a growing dissatisfaction with the status quo.

SJB and SLPP: The Battle for Second Place:

In contrast to the JVP's strong performance, both the Samagi Jana Balawegaya (SJB) and the Sri Lanka Podujana Peramuna (SLPP) find themselves trailing behind. The SJB is projected to secure 16% of the vote, reflecting a competitive but challenging position. Meanwhile, the SLPP, the current ruling party, is forecasted to garner only 9% support. These numbers underscore the shifting political dynamics and suggest a realignment of power in Sri Lankan politics.

Current President's Dwindling Support:

The prediction paints a challenging picture for the incumbent president, who is expected to secure only 2% of the vote. This sharp decline in support reflects a growing dissatisfaction with the current administration and highlights the demand for change among the electorate. The diminished backing for the sitting president raises questions about the effectiveness of the existing governance and the appetite for a new direction.

Undecided Voters: A Decisive Factor:

A notable aspect of the 2024 election prediction is the substantial percentage of undecided voters, comprising 14% of the electorate. The uncertainty among this segment could play a pivotal role in shaping the final outcome. Political parties will need to strategize and appeal to this undecided bloc to secure their support, making it a crucial battleground in the upcoming election.

As the 2024 Sri Lankan Presidential election approaches, the JVP stands out as the frontrunner with an impressive 59% in the prediction. The dynamics of this forecast suggest a significant realignment in the country's political landscape, with the SJB and SLPP vying for second place. The dwindling support for the current president and the presence of a sizable undecided voter bloc add complexity to the electoral landscape, making the upcoming election a closely watched and highly anticipated event in Sri Lankan politics.

-By A Special Correspondent

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.