Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   08 FEB, 2024 | 12:04 AM

image

ஆர்.ராம்

தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக சீனாவுடனான போட்டியினால் அதனைக் கையாள்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான வில்லி நிக்கில், டிபோத் ரொஸ், ஜம்மி ரஸ்கின், டெனி கே.டேவிஸ் ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்துள்ளார். 

இந்தச் சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் தீர்மானம் 427 காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் தமிழர்கள் மீது கரிசனைகளைக் கொண்டுள்ள அவர்களுடனான சந்திப்பில் தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைத்தோம். 

விசேடமாக ராஜபக்ஷக்களின் காலத்தில் தமிழ் மக்கள் மீதும், தமிழர் தேசத்தின் மீதும் கடுமையான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது. 

இந்தத் தருணத்தில் தமிழர்களின் தேசத்தினை மிக வேகமாக இல்லாதொழிக்கின்ற செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  பௌத்த மயமாக்கல், அபிவிருத்தியின் பெயரில் தமிழர்களின் நிலங்களைப் பறித்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுதல், தமிழர்களின் பூர்வீக நிலங்களிலிருந்து தமிழர்களை பாரிய அபிவிருத்தியின் பெயரால் வெளியேற்றுதல், அடிப்படை உரிமைகளான பேச்சு சுதந்திரம், நினைவுகூருகின்ற சுதந்திரம், கருத்து வெளியிடுகின்ற சுதந்திரம் ஆகிய ஜனநாயக விரோதமான செயற்பாடுகளைத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுத்தல், உள்ளிட்ட செயற்பாடுகளே தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன.  

அதேநேரம், உள்நாட்டில் பூகோள போட்டித்தன்மை காணப்படுகின்றது. விசேடமாகச் சீனாவுடன் மேற்குலக நாடுகள் போட்டிப்போடுகின்ற தன்மைகள் காணப்படுகின்றன. தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதற்குப் பதிலாக அரசாங்கம் சீனாவுடனான விடயங்களைக் கட்டப்படுத்தும் செயற்பாடுகளையே மேற்கத்தேய நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. 

தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள. இதனால் அதற்கு பாரிய நிதி உதவிகள் தேவையாக உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தினை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகள், இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்குச் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வொன்றை வழங்குவதற்கும், பொறுப்புக்கூறலைச் செய்வதற்காகச் சர்வதேச குற்றவியல் விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கும் தங்களுடைய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.

அத்தோடு. தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதோடு, பொறுப்புக்கூறலுக்காவும், இனப்பிரச்சினை தீர்வுக்காகவும் தீர்மானங்களைத் தொடர்ச்சியாக அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார்.

https://www.virakesari.lk/article/175846

  • கருத்துக்கள உறவுகள்

@alvayan@kandaiya

தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்

Rate this topic

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமுத்திரத்தில்  சீனாவின் பிரசன்னத்தைக் கட்டுப்படுத்துவதற்கு US+West எடுத்திருக்கும் போடுதடி India. ஆகவே இலங்கையில் இந்தியாவின் பிரசன்னத்தை ஓரளவுக்கேனும் மேற்கு அனுமதித்துத்தான் ஆக வேண்டும். அதனால் இலங்கை இனப்பிரச்சனையில் தற்போதைய நிலையில் இந்தியாவை மீறி எதனையும் மேற்கு செய்யப்போவதில்லை. 

 தனது தேவைக்கு பாவிக்க மேற்குலகு எம்மை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க விரும்பும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

75 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டை உருவாக்கி அதை தமது நலனுக்கா  இதுவரை காலமும் கட்டி காத்து வருகிறது ....

கடலில் தீவுகளை உருவாக்கி சீனா  வல்லாதிக்க ஆசையை நிறை வேற்ற துடிப்பது போல ....மேற்கு 75 வருடங்களுக்கு முதலே இதை செய்ய தொடங்கி விட்டது ....இந்தியா பலம் பொருந்திய நாடாக வரும் பொழுது அதை கட்டுப்படுத்த அருகில் ஓர் தீவு தேவை  என்பது அவர்களின் அன்றைய அரசியல் வியூகம்....
அவர்கள் உருவாககிய நாட்டை சீனா வந்து குத்தகைக்கு எடுக்க இலகுவில் விட மாட்டார்கள்....

அவுஸ்ரேலியாவுக்கு அருகில் பப்புவாகினி என்ற நாட்டிலும் இதே நிலை 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

மேட்கு நாடுகள் இலங்கையில் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், இந்தியா தன்னை மீறி எதுவும் நடக்க கூடாது என்பதில் அவதானமாக இருக்கிறது. இப்போது இந்தியா முழுமையாக திருகோணமலை பகுதியை கட்டுக்குள் கொண்டுவந்து விட்ட்து. அந்த பகுதியில் தொழில்  பேடடைகள், அபிவிருத்தி எல்லாமே அவர்கள் கைகளில். இன்னும் ETCA ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்துப்பட இருக்கிறது. எனவே அமெரிக்கா, மேட்கு நாடுகளை விட இவர்களின் ஆதிக்கம்தான்  அதிகரிக்க சந்தர்ப்பம் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Cruso said:

மாலைதீவை போல் கைமீறி  போகாமல் அனைத்து கைங்கரியங்களையும் இந்தியா செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

மாலைதீவை போல் கைமீறி  போகாமல் அனைத்து கைங்கரியங்களையும் இந்தியா செய்யும்.

நிச்சயமாக. அதைத்தான் விரைவாக செய்து கொண்டிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

மேட்கு நாடுகள் இலங்கையில் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், இந்தியா தன்னை மீறி எதுவும் நடக்க கூடாது என்பதில் அவதானமாக இருக்கிறது. இப்போது இந்தியா முழுமையாக திருகோணமலை பகுதியை கட்டுக்குள் கொண்டுவந்து விட்ட்து. அந்த பகுதியில் தொழில்  பேடடைகள், அபிவிருத்தி எல்லாமே அவர்கள் கைகளில். இன்னும் ETCA ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்துப்பட இருக்கிறது. எனவே அமெரிக்கா, மேட்கு நாடுகளை விட இவர்களின் ஆதிக்கம்தான்  அதிகரிக்க சந்தர்ப்பம் இருக்கிறது. 

வடக்கு கிழக்கில் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

வடக்கு கிழக்கில் 

வடக்கு கிழக்குடன் மேட்கிலும் (கொழும்பு) இருப்பை உறுதி படுத்தி இருக்கிறார்கள். இன்னும் உள்ளூர் அரச நிறுவனங்களும் இந்தியாவின் பக்கம் சாய்கின்றது. தேடகில் ஹம்பாந்தோட்டையை தவிர மற்ற இடங்களுக்கும் போட்டி நடக்கின்றது. பொறுத்திருந்து பார்ப்பம். ETCA உடன்படிக்கை என்பது நாடு முழுவதும் உள்ளடக்கப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

அதனால் இலங்கை இனப்பிரச்சனையில் தற்போதைய நிலையில் இந்தியாவை மீறி எதனையும் மேற்கு செய்யப்போவதில்லை. 

நாங்கள்  இந்தியாவே ஒன்றும் செய்யப்போவதில்லை என்கிறோம் நீங்கள் ஒரேயடியாக மேற்க்கிற்கே போய்விட்டீர்கள்.பேசாமல் சிங்களவனுடன் சேர்ந்து அவன் தருவதை வாங்கிக்கொண்டு இருந்தால் கோவணமாவது மிஞ்சும்.அதைவிட்டு  இந்தியாவுக்கு வால்பிடிச்சுக்கொண்டு திரிந்தால் சோத்துக்கே சிங்கியடிக்கும் நிலைதான் வரும். இப்பவே  முக்கால்வாசி அந்த நிலை தான். நாட்டில் முக்கால்வாசி மூளைசாலிகள் வெளியேறிவிட்டார்கள், ஏற்கனவே மூன்றாம் பெரும்பாண்மை இனி இந்தியா பிடித்துத்தரும் தமிழீழத்தில் 60 தாண்டிய  கிழடு கட்டைகள் தான் சீவிக்கப்போயினம்     

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நீங்கள் கூறுவது உண்மை.

ஆனாலும் இலங்கையில் தனது செல்வாக்கை முன்நிலைப்படுத்த புலம்பெயர் தமிழரூடாகத் தொடர்ச்சியாக மேற்கு முயற்சிக்கும். 

எமது தமிழ்த் தேசிய உணர்வு நிலத்தில் தொடர்ச்சியாகப் பேணப்பட வேண்டுமாயின் நிலத்திலுள்ளவர்களது பொருளாதார, சமூக, அரசியல் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Cruso said:

வடக்கு கிழக்குடன் மேட்கிலும் (கொழும்பு) இருப்பை உறுதி படுத்தி இருக்கிறார்கள். இன்னும் உள்ளூர் அரச நிறுவனங்களும் இந்தியாவின் பக்கம் சாய்கின்றது. தேடகில் ஹம்பாந்தோட்டையை தவிர மற்ற இடங்களுக்கும் போட்டி நடக்கின்றது. பொறுத்திருந்து பார்ப்பம். ETCA உடன்படிக்கை என்பது நாடு முழுவதும் உள்ளடக்கப்படும். 

டெல்லி JVP யினரின் காலில் விழும் காரணம் இதுதானா? 

இலங்கையில் சிங்களத்தின் மத்தியில்   இந்தியாவிற்கு எதிரான மனநிலை/கிளர்ச்சி மீண்டும் ஏற்படுமாயின் அது JVP யின் ஊடாகத்தான் ஏற்பட முடியும். அதைத் தடுக்கவே இந்தியா JVP யின் காலில் வீழ்கிறது. 

ஆனால் இந்த முறை JVP மேற்குலகின் கைகளில்.

ஆக, இலங்கைத் தமிழரும் சிங்களமும் ஒருபோதும் இந்தியாவை நம்பப்போவதில்லை. ஏற்கனவே ஈழத்தமிழர் மேற்கின் செல்வாக்கிற்கு உட்பட்டுவிட்டனர். சிங்களத்தின் ஒரு பகுதியினர் ஏற்கனவே மேற்குலகின் வாழ்க்கைமுறைக்கு இசைவானவர்கள்.  மாக்ஸிட் சோஸலிட் JVP அந்தக் கொள்கையைக் கைவிட்டு  தற்போது மேற்கின் செல்வாக்கிற்குள் வந்துவிட்டது. 

ஆக மொத்தத்தில் இலங்கை மேற்கின் செல்வாக்கிற்கு முழுமையாக ஆட்கொள்ளப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை நிலவரம்.

எனவே தேவையேற்படும்போது,  மேற்கு இலங்கையர்கள் எல்லோரையும் இந்தியாவிற்கு எதிராகப் பாவித்து இலங்கையில் இருந்து தக்க தருணத்தில் இந்தியாவை வெளியேற்றும். 

🤨

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

75 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டை உருவாக்கி அதை தமது நலனுக்கா  இதுவரை காலமும் கட்டி காத்து வருகிறது ....

கடலில் தீவுகளை உருவாக்கி சீனா  வல்லாதிக்க ஆசையை நிறை வேற்ற துடிப்பது போல ....மேற்கு 75 வருடங்களுக்கு முதலே இதை செய்ய தொடங்கி விட்டது ....இந்தியா பலம் பொருந்திய நாடாக வரும் பொழுது அதை கட்டுப்படுத்த அருகில் ஓர் தீவு தேவை  என்பது அவர்களின் அன்றைய அரசியல் வியூகம்....
அவர்கள் உருவாககிய நாட்டை சீனா வந்து குத்தகைக்கு எடுக்க இலகுவில் விட மாட்டார்கள்....

அவுஸ்ரேலியாவுக்கு அருகில் பப்புவாகினி என்ற நாட்டிலும் இதே நிலை 

ஆக இலங்கைக்குள் பிரச்சனை நீடிப்பது இந்தியாவுக்கும் மேற்குக்கும்  தத்தமது நோக்கத்துக்காக எப்போதும் தேவை.

இது தெரிந்தும் நாங்கள் என்ன செய்யப்போகின்றோம்?மீண்டும் மீண்டும் சிங்களவரைக் குற்றம் சாட்டி அவர்களுடன் கொழுவிக்கொண்டே இருந்து இந்தியாவுக்கும் மேற்குக்கும் துருப்புச் சீட்டாக்கவே இருந்து சீரழியப் போகின்றோமா அல்லது சிங்களவர் கொடுப்பதை வாங்கி அவர்களுடன் இணைந்து வாழ்ந்து தமிழரும் சிங்களவரும் ஒற்றுமையாக வாழ முயற்சி எடுக்கப் போகின்றோமா?

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது தமிழப் பழ மொழி தான் என்றாலும் அது இலங்கையர்களாக சிங்கள தமிழ் மக்கள் இருவருக்கும் பொருந்தும் 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kapithan said:

எனவே தேவையேற்படும்போது,  மேற்கு இலங்கையர்கள் எல்லோரையும் இந்தியாவிற்கு எதிராகப் பாவித்து இலங்கையில் இருந்து தக்க தருணத்தில் இந்தியாவை வெளியேற்றும். 

🤨

அது இலகுவாக நடக்க கூடிய காரியம் இல்லை. எப்படியும்  இலங்கையில் இந்திய சொட்ப்படி இயங்கவும்  தமிழ் கட்சிகள்  அதட்கு ஒரு நாளும் அனுமதிக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகிடி said:

ஆக இலங்கைக்குள் பிரச்சனை நீடிப்பது இந்தியாவுக்கும் மேற்குக்கும்  தத்தமது நோக்கத்துக்காக எப்போதும் தேவை.

இது தெரிந்தும் நாங்கள் என்ன செய்யப்போகின்றோம்?மீண்டும் மீண்டும் சிங்களவரைக் குற்றம் சாட்டி அவர்களுடன் கொழுவிக்கொண்டே இருந்து இந்தியாவுக்கும் மேற்குக்கும் துருப்புச் சீட்டாக்கவே இருந்து சீரழியப் போகின்றோமா அல்லது சிங்களவர் கொடுப்பதை வாங்கி அவர்களுடன் இணைந்து வாழ்ந்து தமிழரும் சிங்களவரும் ஒற்றுமையாக வாழ முயற்சி எடுக்கப் போகின்றோமா?

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது தமிழப் பழ மொழி தான் என்றாலும் அது இலங்கையர்களாக சிங்கள தமிழ் மக்கள் இருவருக்கும் பொருந்தும் 

சேர் பொன் ராமநாதன் போன்ற மேற்கத்தைய செல்வாக்கு உடைய தலைவர்கள் அன்றே மேற்குலகுடன்  இணைந்து பல்லின தேசியமாக நாடு வெற்றி நடை போட வேணும் என விரும்பினார்கள் .....ஆனால் சிங்களவர்கள் அதை விரும்பவில்லை சிங்கள தேசியமாக சிறிலங்கா திகழ வேணும் என்ற வக்கிர புத்தியால் இன்று நாடு ....வெத்திலை பெட்டி யின் நிலைக்கு போய் விட்டது ....
சிறிலங்கா இனி தமிழன் ,சிங்கள்வன் ,முஸ்லீம்கள் எல்லாம் ஒன்றாக கட்டி பிடிச்சு நல்லிணக்கத்துடன் வாழ்ந்தாலும் ....பெரியண்ணன்,மற்றும் மேற்குலகு,சீனா  சொல்லுற இடத்தில தான் முத்த்ம் கொடுக்கலாம்,கட்டி பிடிக்கலாம்.....சிறிலங்காவின் தலைஎழுத்தை இனி புத்தர் மீண்டும் அவதாரம் எடுத்தாலும் காப்பாற்ற முடியாது...

அடம்பன் கொடி எங்கே திரள் வேணும் என்ற முடிவும் அவர்கள் கையில் தான்..

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு, இஸ்ரேலிய பிராந்திய வல்லரசு என்று எத்தனை பலம்பொருந்திய நாடுகள் வந்தாலும் கூட, தாம் இவர்களுக்கெதிரான யுத்தத்தில் ஒருபோதும் வெல்லப்போவது கிடையாது என்று தெரிந்தும், இன்றுவரை தம்மால் முடிந்தளவு இந்தப் பலங்களுக்கு அழிவை ஏற்படுத்த பலஸ்த்தீனர்களும், ஏனைய முஸ்லீம்களும் ஏன் முயல்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. கெஞ்சியும், இரைஞ்சியும், கால்களில் வீழ்ந்தும் கேட்டாயிற்று. பல லட்சக் கணக்கில் உயிர்களைக் கொடுத்தும் அனுதாபத்தையோ நீதியையோ அவர்களால் தேட முடியவில்லை. ஆகவேதான் திருப்பியடிக்கிறார்கள். எடுப்பார் கைப்பிள்ளைகளாகி ஒருநாள் அழிவதைக் காட்டிலும் திருப்பியடித்து அழிந்துபோனாலும் பரவாயில்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்களில் தவறில்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க மேற்குலக சார்ப்பு ராஜதந்திரம் மட்டுமே வேர்க் அவுட் ஆகும் என்று கனவு கண்டதன் விளைவு இது. நீங்கள் ஹிந்தியாவையும்.. மேற்கையும் தாஜா பண்ணுவதால் மட்டும்.. எதையாவது பெறலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால்.. உங்களை விட சிங்களவன் இவர்களை நன்கு தாஜா பண்ண கற்றிருக்கிறான்.

தமிழர்கள் சார்ப்பில் வலுவான உள்ளூர்.. சர்வதேச ராஜதந்திர அணுகுமுறைகள் இன்றி.. யாரையும் இலகுவில் தமிழர்கள் சார்ப்பாக முடியாது. சீனாவை.. ரஷ்சியாவை ஒதுக்கி வைப்பதோ.. இலத்தீன் அமெரிக்காவை விட்டு வைப்பதோ.. ஆபிரிக்காவை கண்டும் காணாமலும் விடுவதோ.. மத்திய கிழக்கை.. கணக்கே எடுப்பதில்லையோ.. தென்கிழக்காசியா பற்றி அக்கறை இன்மை.. இப்படி.. பல படிநிலைகளில்.. தமிழர்களிடம்.. தமிழ் அரசியல்வாதிகளிடமும் ராஜதந்திர அணுகுமுறைகள்.. ராஜீய உறவுகளை பேணுதல் இல்லை.

வெறுமனவே.. மேற்கையும்.. ஹிந்தியாவையும்.. நம்பிக் கொண்டு.. வாய் பார்த்திருந்தால்.. இப்படித்தான் அங்கலாய்க்க நேரிடும்.

தமிழர்கள் சார்ப்பில்.. சார்ப்பான முடிவெடுக்க மேற்கிற்கோ.. ஹிந்தியாவுக்கு.. அழுத்தம் கொடுக்கக் கூடிய சர்வதேச ராஜதந்திர நடைமுறைகள் அணுகுமுறைகள் எதுவும் தமிழர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அது 2009 தோடு காலி. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

நீங்கள் கூறுவது உண்மை.

ஆனாலும் இலங்கையில் தனது செல்வாக்கை முன்நிலைப்படுத்த புலம்பெயர் தமிழரூடாகத் தொடர்ச்சியாக மேற்கு முயற்சிக்கும். 

எமது தமிழ்த் தேசிய உணர்வு நிலத்தில் தொடர்ச்சியாகப் பேணப்பட வேண்டுமாயின் நிலத்திலுள்ளவர்களது பொருளாதார, சமூக, அரசியல் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட வேண்டும். 

இதை எமது பல புலம்பெயர் உறவுகள் செய்கின்றனர் ....முக்கியமாக பொருளாதார கட்டமைப்புக்கள் நன்றாகவே நடை பெறுகிறது ..ஆனால் அரசியல் அதிகார  கட்டமைப்பு வேறு ஓர் இனத்தின் விருப்புக்கு ஏற்ப நடக்க வேண்டிய் நிலையில் உள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரஞ்சித் said:

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு, இஸ்ரேலிய பிராந்திய வல்லரசு என்று எத்தனை பலம்பொருந்திய நாடுகள் வந்தாலும் கூட, தாம் இவர்களுக்கெதிரான யுத்தத்தில் ஒருபோதும் வெல்லப்போவது கிடையாது என்று தெரிந்தும், இன்றுவரை தம்மால் முடிந்தளவு இந்தப் பலங்களுக்கு அழிவை ஏற்படுத்த பலஸ்த்தீனர்களும், ஏனைய முஸ்லீம்களும் ஏன் முயல்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. கெஞ்சியும், இரைஞ்சியும், கால்களில் வீழ்ந்தும் கேட்டாயிற்று. பல லட்சக் கணக்கில் உயிர்களைக் கொடுத்தும் அனுதாபத்தையோ நீதியையோ அவர்களால் தேட முடியவில்லை. ஆகவேதான் திருப்பியடிக்கிறார்கள். எடுப்பார் கைப்பிள்ளைகளாகி ஒருநாள் அழிவதைக் காட்டிலும் திருப்பியடித்து அழிந்துபோனாலும் பரவாயில்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்களில் தவறில்லை. 
 
20 hours ago, ரஞ்சித் said:

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு, இஸ்ரேலிய பிராந்திய வல்லரசு என்று எத்தனை பலம்பொருந்திய நாடுகள் வந்தாலும் கூட, தாம் இவர்களுக்கெதிரான யுத்தத்தில் ஒருபோதும் வெல்லப்போவது கிடையாது என்று தெரிந்தும், இன்றுவரை தம்மால் முடிந்தளவு இந்தப் பலங்களுக்கு அழிவை ஏற்படுத்த பலஸ்த்தீனர்களும், ஏனைய முஸ்லீம்களும் ஏன் முயல்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. கெஞ்சியும், இரைஞ்சியும், கால்களில் வீழ்ந்தும் கேட்டாயிற்று. பல லட்சக் கணக்கில் உயிர்களைக் கொடுத்தும் அனுதாபத்தையோ நீதியையோ அவர்களால் தேட முடியவில்லை. ஆகவேதான் திருப்பியடிக்கிறார்கள். எடுப்பார் கைப்பிள்ளைகளாகி ஒருநாள் அழிவதைக் காட்டிலும் திருப்பியடித்து அழிந்துபோனாலும் பரவாயில்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்களில் தவறில்லை. 
 
பலஸ்தீனத்திற்கு ஏனைய இஸ்லாமிய நாடுகள் பணம் கொடுப்பது உலகம் இஸ்லாமிய மயமாக மாற வேணும் என்ற எண்ணத்தில்.....இஸ்ரேல் என்ற நாடு அதில் இருப்பது அவர்களுக்கு மிக பெரிய தடையாக உள்ளது  வட ஆபிரிக்கா    தொடக்கம் இந்தோனேசியா வரை இருக்கும்  இஸ்லாமிய பெல்டில் ஒர் வேற்று மத நாடா ....என்ற நிலையில் அதை பலஸ்தீனர்களின் அழிவை கண்டுகொள்லாமல் ஏனைய இஸ்லாமிய நாடுகள் பணம் கொடுக்கின்றனர்...

பலஸ்தீன கமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய அரசு முற்றாக அழித்த பின்பு பலஸ்தீனர்கள் இஸ்ரேலியருடன் இணக்க அரசியல் செய்ய வேணும் என்பது எனது கருத்து

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, putthan said:

பலஸ்தீன கமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய அரசு முற்றாக அழித்த பின்பு பலஸ்தீனர்கள் இஸ்ரேலியருடன் இணக்க அரசியல் செய்ய வேணும் என்பது எனது கருத்து

எப்பிடியண்ணை, புலிப் பயங்கரவாதிகளை சிங்கள அரசு அழித்த பின்னர் மீதமாய் இருக்கிற தமிழர்கள் இன்று சிங்களவருடன் இணக்க அரசியல் செய்வது போலவோ?  சுதந்திரத்துக்குப் பின்னர் இருந்து இணக்க அரசியல்தானே செய்துகொண்டிருக்கிறம், ஒரு 26 வருஷத்தைத் தவிர‌?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

எப்பிடியண்ணை, புலிப் பயங்கரவாதிகளை சிங்கள அரசு அழித்த பின்னர் மீதமாய் இருக்கிற தமிழர்கள் இன்று சிங்களவருடன் இணக்க அரசியல் செய்வது போலவோ?  சுதந்திரத்துக்குப் பின்னர் இருந்து இணக்க அரசியல்தானே செய்துகொண்டிருக்கிறம், ஒரு 26 வருஷத்தைத் தவிர‌?

இஸ்ரேல் ஹமாஸ் மீது செய்யும் சகல  இராணுவ நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு விடுதலை புலிகளுக்கு எதிராக செய்தது....இஸ்ரேலும் சிறிலங்கா அரசும் பயங்கரவாத அரசுகள் என்பதில் எனக்கு மாற்று கருத்துக்கு இடமில்லை...
ஹமாஸ்க்கு பல இஸ்லாமிய நாடுகள் நிதி உதவியும்,ஆயுத உதவியும் செய்வதால் இன்று வரை தாக்கு பிடிக்கின்றனர்...

எமது போராட்டை கொச்சைப்படுத்தி பலஸ்தீனரின் போராட்டம் நியாயமானது என வக்காலத்து வாங்கும் சிலர் சொல்லுகின்றனர் ....சிங்களவர்களுடன் இணக்க அரசியல் நாங்கள் செய்ய வேணுமாம்....பலஸ்தீனருக்கு மட்டும்  தனி நாடு தேவையாம் ....இது எப்படி ...ஆகவே தான் நான் சொல்லுகின்றேன் நாங்கள் சிங்களவருடன் இணக்க அரசியல் செய்ய வேணும் என்றால் பலஸ்தீனர்களும் இஸ்ரேலுடன் இணக்க அரசியல் செய்யலாம் அல்ல‌

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, putthan said:

எமது போராட்டை கொச்சைப்படுத்தி பலஸ்தீனரின் போராட்டம் நியாயமானது என வக்காலத்து வாங்கும் சிலர் சொல்லுகின்றனர் ....சிங்களவர்களுடன் இணக்க அரசியல் நாங்கள் செய்ய வேணுமாம்....பலஸ்தீனருக்கு மட்டும்  தனி நாடு தேவையாம் ....

இப்படியொரு குழுவினர் இருப்பது எனக்குத் தெரியாது. பாலஸ்த்தீனர்களது போராட்டம் நியாயம் என்று தெரியுமளவிற்கு எமது போராட்டம் நியாயமாகத் தெரியவில்லையோ? தமிழர்களுக்குள்த்தான் இவர்கள் இருக்கிறார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரஞ்சித் said:

இப்படியொரு குழுவினர் இருப்பது எனக்குத் தெரியாது. பாலஸ்த்தீனர்களது போராட்டம் நியாயம் என்று தெரியுமளவிற்கு எமது போராட்டம் நியாயமாகத் தெரியவில்லையோ? தமிழர்களுக்குள்த்தான் இவர்கள் இருக்கிறார்களா? 

அநேமாக சிவப்பு கச்சை கோஸ்டிகள் ....கவிதை கட்டுரை எல்லாம்  எழுதிவினம் பலஸ்தீனம் சார்பாக...அல்லது அந்த கட்டுரைகள் கவிதைகளை சமுக ஊடகங்களில் பொஸ்ட் பண்ணுவினம்...

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, putthan said:

அநேமாக சிவப்பு கச்சை கோஸ்டிகள் ....கவிதை கட்டுரை எல்லாம்  எழுதிவினம் பலஸ்தீனம் சார்பாக...அல்லது அந்த கட்டுரைகள் கவிதைகளை சமுக ஊடகங்களில் பொஸ்ட் பண்ணுவினம்...

உண்மைதான், நானும் பார்த்திருக்கிறேன். கேட்டால் இடதுசாரிகளாம். புண்ணாக்கு!
 
Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.