Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பக்தாத்தில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் - ஈரான் சார்பு குழுவின் முக்கிய தளபதி பலி

Published By: RAJEEBAN   08 FEB, 2024 | 10:48 AM

image

ஈராக் தலைநகரில் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் ஈரான் சார்பு ஆயுதகுழுவின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கட்டாப் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஒருவரும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் ஆளில்லா விமானதாக்குதலிற்கு இலக்காகியது எனவும்  பக்தாத் தலைநகரிலிருந்து கிழக்கே உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிராந்தியத்தில் அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்களை வழிநடத்திய தளபதியே ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

ஜோர்தானில் அமெரிக்க தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கும் இந்த குழுவிற்கும் தொடர்புள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

iraq_drone_attack11.jpg

பக்தாத்தின் மஸ்டால் என்ற பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது பல வெடிப்புச்சத்தங்கள் கேட்டுள்ளன.

சனசந்தடி நிறைந்த வீதியில் கார் துல்லியமாக தாக்கப்பட்டது இதனால் கார் முற்றாக எரியுண்டுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

அபுபக்கிர் அல் சடாடி என்ற தளபதியே கொல்லப்பட்டுள்ளார்.

பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்டு முன்னெடுப்பதற்கு பொறுப்பான தளபதியே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்க மத்திய கட்டளைபீடம் தெரிவித்துள்ளது.

பாரிய அழிவோ பொதுமக்களிற்கு உயிரிழப்போ ஏற்படவில்லை என அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.

அந்த பகுதிக்கு பிபிசி செய்தியாளர்கள் சென்றவேளை அமெரிக்காவே பெரும் தீமை என மக்கள் கூச்சலிட்டுள்ளனர்.

பிபிசி செய்தியாளர்கள் அந்தவாகனத்தை நெருங்க முயன்றவேளை அங்கிருந்தவர்கள் பத்திரிகையாளர்களிற்கு அனுமதியளிக்க முடியாது என தெரிவித்து அவர்களை அங்கிருந்து துரத்தியுள்ளனர்.

நீங்கள் வெளிநாட்டவர்கள் வெளிநாட்டவர்களே இதற்கு காரணம் என ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/175861

Posted

ஈரான் வெறும் வாய் சவடால் அடிக்காத தான் சரி. இஸ்ரேல் காசா நோக்கி படையெடுத்தால் தாம் சும்மா இருக்கப் போவதில்லை என்று முதலில் சூளுரைத்தனர். இஸ்ரேல் படையெடுப்புத் தொடங்கி மூன்று மாதம் முடியப் போகுது, ஆனால் ஈரான் பம்மிக் கொண்ஂடு இருக்கின்றது.

அதே போல், சிரியா / ஈராக்கில் உள்ள தன் சார்பு அமைப்புகள் மீது தாக்குதல் தொடுத்தால், சும்மா இருக்க மாட்டேன் என்றது. ஆனால் அமெரிக்காவும் பிரித்தானியாவும் , "இந்தா அடிக்கப் போறம்" என்று கால அவகாசம் கொடுத்து தாக்குதல் செய்யும் போதும், அடியை வாங்கிக் கொண்டு இருக்கின்றது.

பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கும் பாகிஸ்தான் மீது மட்டும் தான் ஒரு சிறு தாக்குதலைச் செய்தது.

தன் நாட்டில் உள்ள மக்களில், முக்கியமாக பெண்களின் அடிப்படை உரிமைகள் எல்லாவற்றையும் இராணுவக் கரம் கொண்டு நசுக்கி, மீறும் பெண்களை அடித்தே கொல்லும் ஈரானிய அரசு, மற்ற விடயங்களில் வெறும் வாய்சவடால்களுடன் காலத்தைக் கடத்துகின்றது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, நிழலி said:

ஆனால், அதனை சுற்று உள்ள எல்லா பயங்கரவாதிகளுக்கும் ஆயுதமும், பயிட்சியும் , பணமும் வழங்கி தனது கடமையை செய்கின்றது. மத்திய கிழக்கு கொந்தளிப்புக்கு ஈரான்தான் முக்கிய காரணம். 

Posted

அமெரிக்காவை அல்லது பிரிட்டனை ஒருக்கால் ஈரானுக்குள் இறங்கி அடிக்க பார்க்க ஆசையாக உள்ளது. வாழ்நாளில் நடக்காது போலுள்ளது. 🙃
அது சரி இஸ்ரேலுக்குள் கார் குண்டு தாக்குதல் நடாத்தியது யார்? (ஒரு மாதம் இருக்கும் என நினைக்கிறேன்). மேற்கு ஊடகங்கள் பம்மியது நினைவில் உள்ளது.🙂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Cruso said:

ஆனால், அதனை சுற்று உள்ள எல்லா பயங்கரவாதிகளுக்கும் ஆயுதமும், பயிட்சியும் , பணமும் வழங்கி தனது கடமையை செய்கின்றது. மத்திய கிழக்கு கொந்தளிப்புக்கு ஈரான்தான் முக்கிய காரணம். 

பாவம் சிறு குழந்தை அமெரிக்கா விரல் சூப்பிக்கொண்டிருக்கிறது. 

(உங்கள் இலங்கை தொடர்பான practical நடைமுறை சார் பதிவுகள் எல்லாம் பக்கச் சார்பான/ உண்மையற்ற மேற்குலகு சார் நிலைப்பாட்டால் அடிபட்டுப்போகின்றன.)

🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kapithan said:

பாவம் சிறு குழந்தை அமெரிக்கா விரல் சூப்பிக்கொண்டிருக்கிறது. 

(உங்கள் இலங்கை தொடர்பான practical நடைமுறை சார் பதிவுகள் எல்லாம் பக்கச் சார்பான/ உண்மையற்ற மேற்குலகு சார் நிலைப்பாட்டால் அடிபட்டுப்போகின்றன.)

🤨

உள்நாடு என்பது வேறு, வெளிநாடு என்பது வேறு. பயங்கரவாதிகளை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அது சிலருக்கு வெறுப்பை ஏட்படுத்தலாம். ஒன்றும் செய்வதட்கில்லை. 😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, Cruso said:

உள்நாடு என்பது வேறு, வெளிநாடு என்பது வேறு. பயங்கரவாதிகளை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அது சிலருக்கு வெறுப்பை ஏட்படுத்தலாம். ஒன்றும் செய்வதட்கில்லை. 😛

பயங்கரவாதத்தின் தொட்டில் மேற்குலகுதானே 😀 

வெறுப்பது என்றால்  உங்கள் கோபம் மேற்கை நோக்கியே இருக்க வேண்டும். 

😉

  • Like 1
Posted
38 minutes ago, Kapithan said:

பயங்கரவாதத்தின் தொட்டில் மேற்குலகுதானே 😀 

😉

அந்த தொட்டிலில் தான் நீங்கள் வாழ்கின்றீர்கள். உங்கள் குழந்தைகள் நிம்மதியாக வள்ர்கின்றார்கள்.

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, Kapithan said:

பயங்கரவாதத்தின் தொட்டில் மேற்குலகுதானே 😀 

வெறுப்பது என்றால்  உங்கள் கோபம் மேற்கை நோக்கியே இருக்க வேண்டும். 

😉

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் . ஆனால், மேட்குலகை மட்டும் குற்றம் சாடட முடியாது. இலங்கையில் என்ன நடந்தது? பயங்கரவாதம் என்பது அரச பயங்கரவாதமாக இருக்கலாம் அல்லது இன குழுமங்களின் பயங்கரவாதமாக இருக்கலாம். 

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுவாக நாடுகள் தமது சுயநலனின் அடிப்படையில் தமது படைகளை வேறு நாடுகளில் நிலைநிறுத்துகிறது, அதற்கு இந்தியா கூட விதிவிலக்கில்லை, தற்ப்போது அமெரிக்கபடைகள் உல்கெங்கிலும் ஏறத்தாழ 800 நிலைகள் அளவில் கொண்டுள்ளது என கருதுகிறேன்.

அமெரிக்க நிலைகள் இவ்வாறு உலகளவில் பரந்திருப்பது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரிதும் உதவுகிறது, உதாரணமாக இரண்டாம் உலகப்போரின் போது தனது பிரத்தான் வழ்ங்கல் பாதையில் முள்ளாக இருந்த முத்து துறைமுகத்தினை ஜப்பான் அழித்தது.

தனிய தேசிய பாதுகாப்பு மட்டுமன்றி பொருளாதார நலனடிப்படையிலும் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் அந்த படையினருக்கான செலவினை அந்தந்த நாடுகளே பொறுப்பேற்கவேண்டும் அதே நேரம் அந்த தொகை குறித்த நாடுகளின் படை செலவினை விட அதிகமாகும் என நாடுகள் குறைபட்டாலும் அந்த தொகையினை செலுத்த முன்வருவதன் நோக்கம் குறித்த நாட்டின் எதிரிகள் தாக்கும்போது அமெரிக்க படையினன் ஒருவர் பாதிக்கப்பட்டாலே அமெரிக்கா ஒரு முழு அளவிலான போர் பிரகடந்த்துடன் எதிரி நாட்டுடன் மோதும் என்ற எதிர்பார்ப்பு.

இந்த படைகள் குறித்த நாட்டில் பல சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடுகின்ற நிலையில் உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளினிடையே படைகள் தங்கியுள்ளன, கடந்த காலத்தில் போதைவஸ்து போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் ஊடாக வரும் பணத்தில் அமெரிக்க உளவு நிறுவனம் நாடுகளில் குழப்பத்தினை ஏற்படுத்தும் குழுக்களை போசித்தது.

நாடுகளின் ஜனநாயக அரசுகள் கூட கவிழ்க்கப்பட்டு, தற்போதுள்ள சர்வாதிகார சூழ்நிலைக்கு வித்திட்டு தனது நலஙளை பின்னர் அவர்களுடனும் மோதும் நிலையில் அமெரிக்கா இருந்து வருகிறது, இதனை குறையாக கூறவில்லை யதார்த்தினை கூறுகிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

அந்த தொட்டிலில் தான் நீங்கள் வாழ்கின்றீர்கள். உங்கள் குழந்தைகள் நிம்மதியாக வள்ர்கின்றார்கள்.

அதுவும் உண்மைதான்.  அதற்காக பிழையான ஒன்றைச் சரியென்று கூற முடியாது அல்லவா? 

தனது நலனுக்காக அரசுகள் எதையும் செய்ய ஆயத்தமாகவே உள்ள. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, Kapithan said:

அதுவும் உண்மைதான்.  அதற்காக பிழையான ஒன்றைச் சரியென்று கூற முடியாது அல்லவா? 

தனது நலனுக்காக அரசுகள் எதையும் செய்ய ஆயத்தமாகவே உள்ள. 

சும்மா கதை விட்டு நம்மை துடைக்க வேண்டாம்.

அரசு என்பதே மக்களுக்கானதே. அதில் தான் நமக்கு உணவு உறையுள் கல்வி மருத்துவம் எல்லாமே. பிழைகளை சொல்ல முதல் இவற்றை மறுக்க வேண்டும். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே மேற்கை ஆதரிப்போரும், எதிர்ப்போரும் புரியும் வாதங்களுக்கு நடுவிலே ஒருவர் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறிவிட்டுப் போகிறார். அது உங்கள் இருவரினதும் கண்களுக்குத் தெரியவில்லை, நீங்கள் உங்கள் சண்டையில் மும்முரமாக இருக்க, சந்தில் சிந்துபாடிவிட்டு ஒருத்தர் போயிருக்கிறார். முடிந்தால், புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று கூறுங்கள் . அல்லது, அமைதியாக இருந்து அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். கத்தோலிக்கர்களின் இயல்பான மேற்குச் சார்பு நிலையும், வேதாகமத்தின் வழியான யூதச் சார்பு நிலையும் சொந்த மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று கொச்சைப்படுத்திவிட்டுச் செல்ல தூண்டியிருக்கிறது.

உங்களுக்கென்ன, அமெரிக்கா ஈரான் சண்டையில் நீங்கள் திளைத்திருங்கள் !

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யேசுநாதரின் மூதாதையர் எனும் காரணத்திற்காக யூத ஆக்கிரமிப்பாளர்களை ஆதரிக்கும் ஒரு சிலர் இங்கு உலவுகிறார்கள். ஆனால், 1980 களின் நடுப்பகுதியில் இஸ்ரேலிய மொசாட் ஈழத்தமிழர் விடயத்தின் என்ன செய்துகொண்டிருந்தது என்பதை இந்த அடிவருடிகள் அறிந்துகொள்வது நல்லது.

மணலாற்றில் சிங்கள மயமாக்கலினைச் செய்யுமுன் நெடுங்கேணியில் இருந்து தமிழர்களை மொசாட்டின் ஆலோசனனியின்படி எப்படிச் சிங்களப் பேரினவாதம் விரட்டியது என்பதற்கான சிறிய வரலாற்றுக் குறிப்பு ஒன்று,

"MOSSAD’s plan was nothing but the classic counterinsurgency program – complete evacuation and destruction of villages supporting the insurgents along with destruction of crops and prevention of cultivation.  The British implemented that scheme in Malaya (Malaysia) during the communist insurgency of the ‘fifties and Israel modified it to suit its needs by establishing Jewish border settlements to plug the infiltration and movement of Palestinian guerillas.  MOSSAD advised Athulathmudali to do the same: plug the routes and dry up the supplies.  Israeli advice suited Athulathmudali’s mission of destroying the territorial base of Tamil Eelam and his ambition of becoming Jayewardene’s successor". 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அமெரிக்கா.. மத்திய கிழக்கு எங்கும் தனது இராணுவ பிரசன்னத்தை வைச்சிருக்குது. அண்மையில் அபுடாபி விமான நிலையம் போனப்போ.. அங்கு சர்வதேச விமான நிலையத்தை அண்டி அமெரிக்க விமானப்படை விமானங்கள் அடுக்கி விடப்பட்டுள்ளதுடன் அடிக்கடி பறப்புகளில் ஈடுபட்டத்தை அவதானிக்க முடிகிறது.

வட அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரு நாட்டுக்கு மத்திய கிழக்கில் என்ன வேலை. அமெரிக்கா ரஷ்சியாவுக்கு வகுப்பெடுக்க ஒரு அருகதையும் கிடையாது. ஏனெனில்.. அமெரிக்கா எந்த நாட்டினதும்.. சுயாதிபத்தியத்தையும்.. தன் ஏகாதிபத்தியத்திற்கு முன் மதிப்பதில்லை. 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, விசுகு said:

சும்மா கதை விட்டு நம்மை துடைக்க வேண்டாம்.

அரசு என்பதே மக்களுக்கானதே. அதில் தான் நமக்கு உணவு உறையுள் கல்வி மருத்துவம் எல்லாமே. பிழைகளை சொல்ல முதல் இவற்றை மறுக்க வேண்டும். 

ஸாரி விசுகர், 

சரி பிழைகளைச் சுட்டிக்காட்டுவது ஒவ்வொரு பிரசையினதும் கடமை. 

வியட்னாம்அ-மெரிக்கப் போரின் போது அமெரிக்கர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டும்போது அவர்கள் தமக்கான தேவைகளை மறுக்கவில்லை. பிரஞ்சுப் புரட்சியின்போதும் மக்கள் பட்டினி கிடக்கவில்லை. 

எனது உழைப்பில் நான் உண்கிறேன். எனது வரியில் எனக்கான சேவைகளை அரசு வழங்குகிறது. இவற்றை மறுக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது? 

ஊரில் இருந்த ஆண்டான் அடிமை முறையில்தான் அடிமை வாய் பொத்தி ஆண்டானுக்கு சேவகம் செய்தது. தாங்கள் இன்னும் அந்த மனநிலையில் இருந்து மாறவில்லை போலத் தெரிகிறது. 

1 hour ago, ரஞ்சித் said:

இங்கே மேற்கை ஆதரிப்போரும், எதிர்ப்போரும் புரியும் வாதங்களுக்கு நடுவிலே ஒருவர் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறிவிட்டுப் போகிறார். அது உங்கள் இருவரினதும் கண்களுக்குத் தெரியவில்லை, நீங்கள் உங்கள் சண்டையில் மும்முரமாக இருக்க, சந்தில் சிந்துபாடிவிட்டு ஒருத்தர் போயிருக்கிறார். முடிந்தால், புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று கூறுங்கள் . அல்லது, அமைதியாக இருந்து அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். கத்தோலிக்கர்களின் இயல்பான மேற்குச் சார்பு நிலையும், வேதாகமத்தின் வழியான யூதச் சார்பு நிலையும் சொந்த மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று கொச்சைப்படுத்திவிட்டுச் செல்ல தூண்டியிருக்கிறது.

உங்களுக்கென்ன, அமெரிக்கா ஈரான் சண்டையில் நீங்கள் திளைத்திருங்கள் !

உங்களுக்கு அவர் பெயரைச் சொல்லும் துணிச்சல் இல்லையென்றால் பிறகெதற்கு அதனை இங்கே சுட்டிக்காட்டுகிறீர்கள்? 

நான் ஒரு கத்தோலிக்கன். Cruso வின் மேற்கூறப்பட்ட நிலைப்பாட்டிற்கு நேரெதிரானவன். எனவே Cruso வின் நிலைப்பாட்டை கத்தோலிக்கர்களின் நிலைப்பாடாக பொதுமைப்படுத்தத் தேவையில்லை. அத்துடன் தங்கள் பொதுமைப்படுத்தல், ஈழப் போராட்டத்தில் கிறீஸ்தவர்களின் பங்களிப்பை தாங்கள் கிஞ்சித்தும் அறியாமல் இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. 

அதுதவிர, 

Cruso கத்தோலிக்கர் இல்லை. 

Edited by Kapithan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, Kapithan said:

உங்களுக்கு அவர் பெயரைச் சொல்லும் துணிச்சல் இல்லையென்றால் பிறகெதற்கு அதனை இங்கே சுட்டிக்காட்டுகிறீர்கள்? 

நான் ஒரு கத்தோலிக்கன். Cruso வின் மேற்கூறப்பட்ட நிலைப்பாட்டிற்கு நேரெதிரானவன். எனவே Cruso வின் நிலைப்பாட்டை கத்தோலிக்கர்களின் நிலைப்பாடாக பொதுமைப்படுத்தத் தேவையில்லை. 

சிலரது பெயரைக் குறிப்பிடும் அளவிற்கு அவர்களை நான் உயர்த்த விரும்பவில்லை. மற்றும்படி எவருக்கும்  பயந்துபோய் நான் பெயரைத் தவிர்த்து எழுதவில்லை.

அவரது கருத்துக்களைப் பார்த்தும், அவர் வாழும் பிரதேசத்தை ஊகித்துமே அவர் கத்தோலிக்கராக அல்லது கிறீஸ்த்தவராக இருக்கலாம் என்று அனுமானித்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kapithan said:

அதுவும் உண்மைதான்.  அதற்காக பிழையான ஒன்றைச் சரியென்று கூற முடியாது அல்லவா? 

தனது நலனுக்காக அரசுகள் எதையும் செய்ய ஆயத்தமாகவே உள்ள. 

இந்த மேற்கின் சதியால்தான் நாம் சொந்த ஊரைவிட்டு இடம் பெயர வேண்டியிருந்த து, இல்லாவிட்டில் சொந்த மண்ணில் மானத்துடன் வாழ்ந்திருப்போம்

இங்கு வந்து இப்படியொரு கேள்விக்கு ஆளாகியிருக்கமாட்டோம்

பிரச்சனைகளை சமாளித்து ஈழத்தில் வாழ்பவர்கள்👍🙏

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, ரஞ்சித் said:

சிலரது பெயரைக் குறிப்பிடும் அளவிற்கு அவர்களை நான் உயர்த்த விரும்பவில்லை. மற்றும்படி எவருக்கும்  பயந்துபோய் நான் பெயரைத் தவிர்த்து எழுதவில்லை.

அவரது கருத்துக்களைப் பார்த்தும், அவர் வாழும் பிரதேசத்தை ஊகித்துமே அவர் கத்தோலிக்கராக அல்லது கிறீஸ்த்தவராக இருக்கலாம் என்று அனுமானித்தேன். 

ஏற்றுக்கொள்கிறேன்.

முகமறியாத ஒருவருடைய குறியீட்டுப் பெயரைக் குறிப்பிடுவதால் ஒருவர் பெரியவர் /சிறியவர் ஆகலாம் என்பது கேள்விக்குறியே. 

15 minutes ago, உடையார் said:

பிரச்சனைகளை சமாளித்து ஈழத்தில் வாழ்பவர்கள்👍🙏

100% உண்மை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, உடையார் said:

இந்த மேற்கின் சதியால்தான் நாம் சொந்த ஊரைவிட்டு இடம் பெயர வேண்டியிருந்த து, இல்லாவிட்டில் சொந்த மண்ணில் மானத்துடன் வாழ்ந்திருப்போம்

இங்கு வந்து இப்படியொரு கேள்விக்கு ஆளாகியிருக்கமாட்டோம்

பிரச்சனைகளை சமாளித்து ஈழத்தில் வாழ்பவர்கள்👍🙏

இது எமக்கு மட்டுமன்றி இந்த நூற்றாண்டில் விடுதலைக்காக போராடும் அத்தனை சிறுபான்மை இனங்களுக்கும் பொருந்தும்.. அது மட்டுமின்றி  இந்தியா போன்ற பல தனித்துவ இனங்களை நசுக்கி மேற்குலகி விட்டுச்செல்லும்போது நாடாக உருவாக்கப்பட்டிருக்கும் பெரிய நாடுகளில் மொழியை கலாச்சாரத்தை காக்கப்போராடும் சிறுபான்மை இனங்களுக்கும் பொருந்தும்..

உடையார் எழுதியது இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் நசுக்கப்பட்டும் அளிக்கப்பட்டும் கொண்டிருக்கும் சிறுபான்மை இனங்களின் வரலாற்று துயரத்தின் விதை/வேர்..

இந்த நூற்றாண்டில் விடுதலைக்காக போராடும் மற்றும் போராடிய இனங்களின் அந்த போராட்ட தேவையின் ஆரம்ப புள்ளியை தேடிப்போனால் உடையார் எழுதியதில்தான் வந்து நிற்கும்..

இன்று உணவும் உடையுளும் தந்து நம்மை வாழவிட்டிருக்கிறார்கள் என்பதற்காக நாம் உட்பட பலநூறு சிறிபான்மை இனக்குழுக்களின் கட்டப்பொம்மன்களாக நாம் மாறி மேற்கை சகட்டுமேனிக்கு போற்ற முடியாது.. 

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Kapithan said:

அதுவும் உண்மைதான்.  அதற்காக பிழையான ஒன்றைச் சரியென்று கூற முடியாது அல்லவா? 

தனது நலனுக்காக அரசுகள் எதையும் செய்ய ஆயத்தமாகவே உள்ள. 

உண்மை. உலகில் உள்ள எல்லா அரசுகளும் அப்படிதான். அப்படி என்றால் நீங்கள் ஒரு பக்கத்தை மட்டும் குற்றம் சாடட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ரஞ்சித் said:

கத்தோலிக்கர்களின் இயல்பான மேற்குச் சார்பு நிலையும்

கத்தோலிக்க மதத்தவர்களைவிட பெரும்பான்மை இந்து ஈழதமிழர்கள் மேற்குலகுசார்ந்த பாதுகாப்பு உரிமைகள் கொண்ட பொருளாதார சிறப்பு வாழ்கை பெற்றுள்ளார்கள் அண்ணா. அவர்கள் நீங்கள் குறிப்பிடுகின்ற அவர்களின் இயல்பான சார்பு இந்து நாடுகளிடமோ அல்லது முஸ்லிம் நாடுகளிலோ ஈரானிலோ நிரந்தரமாக வாழ தயாராக இல்லை.

உடையார் பிரச்சனைகளை சமாளித்து ஈழத்தில் வாழ்பவர்களை பாராட்டி உள்ளார் அதை முழுமையாக ஏற்று கொள்கிறேன்.ஈழத்தில் வாழ்பவர்கள் மேற்குலகை திட்டினால் அதை அவதானமாக கேட்கலாம்.
ஊருக்கு உபதேசம் எனக்கு இல்லை என்று இங்கே இருப்பவர்களுடையதை  இல்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, Kapithan said:

ஸாரி விசுகர், 

சரி பிழைகளைச் சுட்டிக்காட்டுவது ஒவ்வொரு பிரசையினதும் கடமை. 

வியட்னாம்அ-மெரிக்கப் போரின் போது அமெரிக்கர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டும்போது அவர்கள் தமக்கான தேவைகளை மறுக்கவில்லை. பிரஞ்சுப் புரட்சியின்போதும் மக்கள் பட்டினி கிடக்கவில்லை. 

எனது உழைப்பில் நான் உண்கிறேன். எனது வரியில் எனக்கான சேவைகளை அரசு வழங்குகிறது. இவற்றை மறுக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது? 

ஊரில் இருந்த ஆண்டான் அடிமை முறையில்தான் அடிமை வாய் பொத்தி ஆண்டானுக்கு சேவகம் செய்தது. தாங்கள் இன்னும் அந்த மனநிலையில் இருந்து மாறவில்லை போலத் தெரிகிறது. 

உங்களுக்கு அவர் பெயரைச் சொல்லும் துணிச்சல் இல்லையென்றால் பிறகெதற்கு அதனை இங்கே சுட்டிக்காட்டுகிறீர்கள்? 

நான் ஒரு கத்தோலிக்கன். Cruso வின் மேற்கூறப்பட்ட நிலைப்பாட்டிற்கு நேரெதிரானவன். எனவே Cruso வின் நிலைப்பாட்டை கத்தோலிக்கர்களின் நிலைப்பாடாக பொதுமைப்படுத்தத் தேவையில்லை. அத்துடன் தங்கள் பொதுமைப்படுத்தல், ஈழப் போராட்டத்தில் கிறீஸ்தவர்களின் பங்களிப்பை தாங்கள் கிஞ்சித்தும் அறியாமல் இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. 

அதுதவிர, 

Cruso கத்தோலிக்கர் இல்லை. 

இங்கு சில எனது பெயர் குறிப்பிடாமல் ஏதேதோ எழுதுகிறார்கள். எனக்கு இங்கு கருது எழுதுபவர்களின் மன நிலையும் அவர்கள் எப்படியான கருத்துக்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதும் எனக்கு நன்றாகவே விளங்கும். அப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்த எழுதவும் முடியும். நிச்சயமாக அப்படி எழுத மாடடேன்.

இங்கு நிறைய down vote எனக்கு கிடைத்தது என்று சொல்லலாம். அதற்ககாக நான் எனது கொள்கையையோ, கருத்தையோ மாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை. நீங்கள் உங்கள் கருத்தை எழுதுகிறீர்கள், நான் எனது கருத்தை எழுதுகிறேன். அதட்கு மேல் சொல்வதட்கு ஒன்றுமில்லை.

எமது மூதாதையர் இந்துவாக இருந்து கத்தோலிக்கராக மாறியவர்கள். இதனால்தான் சங்கிலியன் அங்கு வந்து மக்களை வெட்டி கொன்றதை சரித்திரம் தெரிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். நான் ஒரு கிறிஸ்தவன். கத்தோலிக்கர் கிறிஸ்தவர்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/2/2024 at 12:27, Kapithan said:

ஸாரி விசுகர், 

சரி பிழைகளைச் சுட்டிக்காட்டுவது ஒவ்வொரு பிரசையினதும் கடமை. 

வியட்னாம்அ-மெரிக்கப் போரின் போது அமெரிக்கர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டும்போது அவர்கள் தமக்கான தேவைகளை மறுக்கவில்லை. பிரஞ்சுப் புரட்சியின்போதும் மக்கள் பட்டினி கிடக்கவில்லை. 

எனது உழைப்பில் நான் உண்கிறேன். எனது வரியில் எனக்கான சேவைகளை அரசு வழங்குகிறது. இவற்றை மறுக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது? 

ஊரில் இருந்த ஆண்டான் அடிமை முறையில்தான் அடிமை வாய் பொத்தி ஆண்டானுக்கு சேவகம் செய்தது. தாங்கள் இன்னும் அந்த மனநிலையில் இருந்து மாறவில்லை போலத் தெரிகிறது. 

மரக்கிளையில் இருந்தபடி மரக்கிளையை வெட்டும் பைத்தியமும் அதற்கு ஒரு காரணத்தை  வைத்திருக்கும். நாம் பாவம் இன்னும் கொஞ்ச நேரத்தில் புரிந்து விடும் என்று விட்டு நமது நேரத்தை வீணாக்காமல் நகர்வது நல்லது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

மரக்கிளையில் இருந்தபடி மரக்கிளையை வெட்டும் பைத்தியமும் அதற்கு ஒரு காரணத்தை  வைத்திருக்கும். நாம் பாவம் இன்னும் கொஞ்ச நேரத்தில் புரிந்து விடும் என்று விட்டு நமது நேரத்தை வீணாக்காமல் நகர்வது நல்லது. 

எனது கருத்தைக் கூறும்போது அதற்குப் பைத்தியம் எனப் பூடகமாகக் கூறுவது பொருத்தமற்ற செயல். 

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிக்க நன்றி ரஞ்சித். யாழில் நீண்ட விளக்கம் கொடுக்க கூடிய மிக அரிதான கருத்தாளர்களில் நீங்களும் வழவனும் அடக்கம்.    உங்களை ஏன் @ பண்ணினேன் என்பதை வழவனுக்கான பதிலில் காண்க🙏. நான் போட்ட ஜெய்ஹிந்தின் அர்த்தம் அநேகமாக அனைவரும்கும் விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். அதுதான் முழு நேர மேற்கு எதிர்ப்பு பிரச்சாரகர்களின் உண்மையான கபட நோக்கம். ஏனையவர்களின் பிரச்சனை வேற. அவர்கள் நல்லவர்கள். ஆனால் எமக்கு நடந்த பிழைக்கு மேற்கு மட்டுமே தவறு என்பது போல் அவர்களை புல் டைம் காரர் மூளை சலவை செய்கிறார்கள். அதுதான் நீங்கள் சுட்டிய அளவுக்கு கொள்கை பிறழ்வு ஏற்பட காரணம். அதே போல் எப்போதும் ஒரு hero worship இல் இருந்து இவர்களுக்கு பழகிவிட்டது. அதனால்தான் தலைவருக்கு பின், சீமான், புட்டின் என அலைகிறார்கள். உப்பு கல்லும் வைரமும் ஒன்றென கருதி. இவர்களை போலவே முழு புலம்பெயர் சமூகத்தையும் மந்தைகள் ஆக்கி விடலாம் என்பதுதான் புல்டைம் காரர்களின் திட்டம். பார்க்கலாம்…. We are fighting a good fight, keep at it👍 இது எம்போன்றோருக்கு சரி… ஆனால் சம்பளத்து வேலை செய்பவர்கள் சதா அதே விடயத்தை எழுதி கொண்டே இருக்க வேண்டும்… அல்லது டெல்லியில் இருந்து கோல் வரும்🤣
    • போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 2 மீன் அடிச்ச ஆப்பு !   மணலாறு காட்டுக்குள் அலைந்து திரிந்த அந்த மனிதர்களின் வீரம் பற்றி யாரும் அறிய மாட்டார்கள். குண்டுகளும் துப்பாக்கிகளும் கிளைமோர்களும் தான் அவர்களுக்கு அதிகம் பிடித்தவை. உணவு என்பது அவசியமற்று போகும் போதெல்லாம் எங்கோ ஒரு இலக்கில் எதிரி சிதறப் போகும் யாதார்த்தம் நிமிர்ந்து நிற்கும். இலக்குக்காக அந்த மனிதர்கள் அலைந்த நாட்கள் கொஞ்சமல்ல. ஓய்வு என்பது மரணத்துக்கு பின் என்பது அவர்களது இயல்பாக இருக்கலாம். ஓய்வின்றி தேசியத்தலைவரின் எண்ணங்களுக்கு அந்த மனிதர்கள் வண்ணம் பூசி வெற்றி என்ற பாதையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். 1996 முல்லை மண்ணில் முப்படைகளும் குந்தி இருந்து எம் மக்களுக்கு கொடுத்த பெரும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளியிட்டனர் விடுதலைப்புலிகளின் சண்டையணிகள். யாழ்ப்பாணத்தை தம் ஆளுகைக்குள் கொண்டு வந்த பின் விடுதலைப்புலிகள் பலமிழந்துவிட்டதாக பரப்புரை செய்து கொண்டிருந்த சிங்களத்துக்கு நெத்தியடி கொடுத்த விடுதலைப்புலிகளின் அணிகளில் இவர்களும் இருந்தார்கள். பெரும் வெற்றியை எமக்குத் தந்துவிட்டு மீண்டும் மணலாறுக் காட்டை வதிவிடமாக கொண்டு எதிரிக்காக அலைந்து கொண்டிருந்தார்கள். இவ்வாறு தான் அவர்களில் இருந்த வேவுப் போராளிகளின் அணி ஒன்று வேவுக்காக சென்று திரும்பிய போது புன்னகையோடு இலக்கை கூறுகிறார்கள். “மரியதாஸ் ( பின்நாட்களில் “ஜெயசிக்குறு” நடவடிக்கையில் கப்டன் மரியதாஸ் வீரச்சாவு) அண்ண 10 பேரண்ண வடிவா குடுக்கலாம்…” ரைபிள் எல்லாத்தையும் நிலத்தில வைச்சிட்டு சென்றிக்கு ஒருத்தன் மட்டும் நிக்கிறான் மற்றவ குளிக்கிறாங்கள் கிளைமோர் ஒன்று செட் பண்ணினால் 10 பேரையும் தூக்கலாம்” எந்த இடத்தில? தளபதி ஆவலோடு வினவுகிறார். அண்ண எங்கட சின்னக் குளத்தில அண்ண. மணலாறு காட்டிடையே விடுதலைக்காக பயணித்துக் கொண்டிருந்த மூத்த போராளியும் அந்த வேவு அணிகளுக்கான அணித்தலைவனாகவும் இருந்த மரியதாஸ்க்கு வேவுத்தகவல் பிரியோசனமானதாகவே தோன்றியது. அந்த இலக்கு அவர்களின் வேவு வலயத்துக்குள் கொண்டுவரப்படுகிறது. அடிச்சால் பத்து சிங்களப் படையைக் கொண்ட எதிரியின் ஒரு அணி உயிரிழக்கும். அந்த குளம் எம்மவர்களின் பார்வை வீச்சில் இருந்து தப்பிக்க முடியாத அளவிற்கு வேவுப் போராளிகள் காத்திருந்தார்கள். தளபதி ஊடாக தலைவரின் அனுமதிக்காக திட்டம் அனுப்பப்படுகிறது. உடனடியாக திட்டம் அனுமதிக்கப்பட மகிழ்வில் பூரித்து போகிறார்கள் அவர்கள். குளத்தின் இந்தக்கரை எம்மவர்களாலும் மறு கரை இராணுவத்தாலும் சூழப்பட்டருந்தது. தினமும் குளிப்பதற்காக குறித்த நேரத்தில் அந்த அணி வந்து போகிறது. இது அந்த காலத்தில் அரியதான ஒரு இலக்கு. தொடர் வேவுகள் இலக்கை உறுதிப்படுத்திக் கொள்ள அன்றைய காலை வேளை அவர்களுக்காக குளத்துக்குள் ஒரு கிளைமோர் தயாராக காத்திருக்கிறது. இரவோடு இரவாக மரியதாஸ் கிளைமோரை குளத்து நீரின் அடியில் புதைத்திருந்தான். காத்திருக்கிறார்கள். அடிச்ச மறு நிமிடம் தங்களை எதிர்த்து தாக்க வேறு அணி வரலாம் அவர்கள் எம் அணிகளை நோக்கி பாரிய தாக்குதல் செய்யலாம் என்ற நியம் மரியதாஸ் தலமையிலான போராளிகளுக்கு தெரியாமல் இல்லை. அவர்கள் அதற்கும் தயாராகவே காத்திருந்தார்கள். அப்போதெல்லாம் எம் வெடிகுண்டு தொழில்நுட்பம் வயிரின் மூலம் மின் கொடுக்கப்பட்டு வெடிக்க வைப்பதே. அதனால் நீண்ட மின் கடத்தக்கூடியதான தொலைபேசி வயரை குளத்து நீரின் அடியால் மிக சிரமத்தோடு தாட்டு கிளைமோரை நிலைப்படுத்துகிறார் மரியதாஸ். நீரிற்கு வெளியிலும் மண்ணுக்குள் வயரை தாட்டு குளக்கரையில் இருந்த பெரும் காட்டுக்குள் கொண்டு வருகிறார். இப்போது எல்லாம் தயார். மின்கலத்தின் மூலம் வெடிக்க வைக்க தயாராக காத்திருக்கிறார்கள் அந்த மனிதர்கள். மரியதாஸ் கண் இமைக்காமல் இராணுவ அணியை அவதானித்த்துக் கொண்டிருக்கிறார். தூர சில உருவங்கள் காட்டை விட்டு வெளி வருவது தெரிகிறது. இராணுவ அணி உடைகளை கழைந்து குளிப்பதற்காக குளத்துக்குள் இறங்குகின்றனர். அவர்களில் சிலர் துப்பாக்கியோடும் சிலர் குளிப்பதற்கான பொருட்களோடுமே வந்திருந்தனர். குளத்துக்குள் இறங்கி சிலர் குளிக்க இரண்டு மூன்று பேர் அருகில் இருந்த கற்களில் உடைகளை தோய்க்கத் தொடங்கி இருந்தனர். இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் நெருக்கமாக வந்து விட்டது. மரியதாஸ் மின் இணைப்பை மின்கலத்தின் மூலம் கொடுக்கிறான். “ஏமாற்றம்…” கிளைமோர் வெடிக்காமல் சதி செய்தது மின்கலத்தில் மின் இல்லை என்று நினைத்து வேறு மின்கலத்தின் மூலம் மீண்டும் முயற்சி செய்த போது அதுவும் தோல்வி. மனம் வெறுத்துப் போக குளத்தையே வெறித்து பாக்கிறார்கள். ச்சீ… தப்பீட்டாங்கள்… அனைவரும் மனம் வெறுத்து அந்த குளக்கரையோரம் நீண்டு நிமிர்ந்த மரங்களின் அடியில் படுத்து கிடக்கிறார்கள். இலக்கு தப்பி விட்டது. வந்த அணி திரும்பி விட்டது. தளபதிக்கு விடயம் தெரிவிக்கப்பட்டு இவர்களும் அன்று முழுவதும் அந்த காட்டோரம் படுத்திருந்து தாம் தயாராக்கி வைத்த கிளைமோரை மீட்க குளத்துக்குள் இறங்குகிறார்கள். கிளைமோரை தூக்கி வெளியில் வந்து பார்த்த போது சிரிப்பதா அழுவதா என்று நிலை தெரியாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.என்னண்ண ஆச்சு? இங்க பார் மீன் என்ன செய்திருக்கு என்று? அட நாசமா போன மீன்கள் இப்பிடி வயர கடிச்சு தின்டிருக்குதகள்? இடையில் அறுபட்டு கிடந்த வயரைப் பார்த்து மீன்களை திட்டத் தொடங்கினான் ஆறுமுகம். விடுடா அதுகளுக்கு தெரிஞ்சு போச்சு போல இவங்கள் ஆமிய மட்டுமல்ல எங்களையும் சேர்த்து சாகடிக்க போறாங்கள் என்று அது தான் அதுகள் எங்களுக்கு எதிரா போர்க்கொடி தூக்கி இருக்குதுகள். என்று இரகசியமாக கூறி சிரித்து விட்டு முகாம் மீண்டார்கள். அதில் ஒருவனுக்கு மட்டும் அந்த இலக்கு தவறியது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நீரைத் தவிர வேறு இடத்தில் கிளைமோரை பொருத்தினால் இலக்கு வலயத்துக்குள் அந்த அணி முழுவதும் வராது அதனால் அவர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு. அதனால் சிந்தனையை கூர்மையாக்கிக் கொண்டான். என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? யோசித்து யோசித்து களைத்த அவனுக்கு வயர்லெஸ் ( wireless ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் என்ன என்ற சிந்தனை கருத்தரித்தது. அதாவது வயர் இணைப்பு இல்லாது வெடிக்க வைக்கும் தொழில் நுட்பம். உதாரணத்துக்கு ரிமோட்கொன்ரோல் (remote control ) தனக்கு தோன்றியதை மரியதாஸ்க்கு தெரியப்படுத்தினான். மரியதாஸுக்கும் அது சரியான ஒன்றாகவே பட்டது. சிந்தனை செயலாக்கம் பெற்றது இரண்டு வோக்கிகள் அதற்காக பயன்படுத்தப்பட்டன. ஒரு வோக்கியின் ஒலிபெருக்கிக்கு செல்லும் வயரில் இருந்து கிடைக்கும் மின்சாரம் கிளைமோரோடு இணைக்கப்படுகிறது. அந்த மின்சாரத் தூண்டல் கிளைமோரை வெடிக்க வைக்க போதுமானதா என்று சரிபார்க்கப்பட்டு அதற்கான மின்சாரத் தூண்டலை அதிகரிக்க செய்யும் ஒரு இலத்திரனியல் பகுதி அதனுடன் இணைக்கப்படுகிறது. அதன் மூலம் கிளைமோருக்கான வெடிப்பிக்குத் தேவையான மின்சாரம் சரி செய்யப்படுகிறது. இப்போது இவர்கள் கையில் இருக்கும் வோக்கியின் PTT அமத்தப்பட்டால் கிளைமோருடன் இணைக்கப்பட்ட வோக்கியில் இருந்து மின்சாரம் பாச்சப்படும் அந்த மின் தூண்டல் வெடிப்பியை வெடிக்க வைத்து கிளைமோர் வெடிக்கும் இலக்கு தவறாது சிதறும். ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. அதாவது இவர்கள் அந்த திட்டத்துக்காக பயன்படுத்திய வோக்கியின் இலக்கம் 328. இதே இலக்கத்தில் எதிரியும் தொடர்பை பேணுவானாக இருந்தால் அல்லது வோக்கியின் அழைப்பு வலயத்துக்குள் இருந்து வேறு எதாவது வோக்கியில் இருந்து அந்த இலக்கத்துக்கு PTT அழுத்தப்பட்டால் கட்டாயமாக கிளைமோர் வெடித்து சிதறும். ஆனாலும் எமது அணிகளுக்கு இந்த இலக்கத்தை பாவிக்க வேணாம் என்ற ஒரு கட்டளையை வழங்கி ஆபத்தை தவிர்க்கலாம். ஆனால் எதிரி…? யோசித்த போது இறுதியாக முயற்சி செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவர்களாக நடவடிக்கையில் இறங்கினர் மரியதாஸ் தலமையிலான அணி. அந்த நெருக்கடியான காலமானது தொழில்நுட்ப அறிவியல் வளராத இயக்க வரலாற்றின் பக்கத்தை கொண்டது. ஆனாலும் கிடைக்கும் பொருட்களின் மூலம் உயர் பயன்பாட்டை பெறக்கூடிய விடுதலைப்புலிகளின் போராளிகள் தமது உயர் தொழில்நுட்ப அறிவை தம் சிந்தனைகளுக்கூடாகவே வளர்த்துக் கொண்டார்கள். அதன் ஒரு வெளிப்பாடே இந்த கிளைமோர் தாக்குதல்.சில வாரங்கள் கடந்து போக, மீண்டும் வேவுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட அந்த இரவு அவர்களுக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது சிலவேளைகளில் இதுவும் தவறினால்? அனைவரின் மனதிலும் இதுவே எழுந்த கேள்வி. வெடிக்காமல் போனால் பரவாயில்லை தவறி இலக்கு வர முன் வெடித்தால்? இலக்கு பிசகி விடும் அதே நேரம் இப்படியான இலகுவாக கிடைக்கும் இலக்குக்காக நீண்ட காலங்கள் காத்திருக்க வேண்டி வரும். அனைவரும் அந்த குளக்கரையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மரியதாஸ் கையில் வெடிக்க வைக்கும் வோக்கி இருந்தது. இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் வருகிறது. இவர்களின் மனப் பதட்டம் அதிகரிக்கிறது. வந்தவர்கள் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு தமக்கான ஆபத்து காத்திருப்பதை அறியாது சிரித்து மகிழ்கின்றனர். மரியதாஸின் கையில் இருந்த வோக்கியின் PTT அழுத்தப்படுகிறது. அந்த காலை நேரம் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாது கிளைமோர் வெடித்து சிதறிப் போக சிங்களத்து சிப்பாய்கள் 9 பேர் அந்த இடத்திலையே சிதறிப் போனார்கள் காவல் பணியில் இருந்த ஒரு இராணுவம் மட்டும் காயத்தோடு தப்பித்து சென்று விட இலக்கை துவம்சம் செய்த வோக்கிக்கு ஒரு முத்தத்தை கொடுக்கிறான் மரியதாஸ். உடனே பின்தளம் திரும்ப கட்டளையிடுகிறான். அனைவரும் வெற்றி பெற்றுக் கொண்டு தளம் திரும்பினர். மரியதாஸ் தலமையிலான மணலாறு மாவட்ட படையணியின் வேவுப் போராளிகளின் இந்த தாக்குதலானது சிங்களத்துக்கு தடுமாற்றத்தையும் எமக்கு மகிழ்வையும் தந்த போது, அடுத்த இலக்கைத் தேடி அந்த மனிதர்கள் அந்த பெரும் காட்டுக்குள் ஓய்வின்றி அலைந்து கொண்டிருந்தார்கள்… கவிமகன்.இ 22.11.2017
    • சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம்     இது வட தமிழீழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்திருந்தது.             அங்கு பயின்ற மருத்துவர்களும் தாதியரும்   நடுவில் அமர்ந்திருப்பவர் படைய மருத்துவர் லெப். கேணல் சத்தியா அவர்கள்                 பின்னாளில்         திருவுருவப்படத்திற்கு வலது பக்கம் அமர்ந்திருப்பவர் மரு. சத்தியமூர்த்தி ஆவார்.
    • பெரியார் ராமசாமியைத் தனது பேரன் என்று சீமான் ஒரு காலத்தில் அழைத்துவந்தார். இதனை ஒரு கூட்டத்தில் கிண்டலடித்துப் பேசிய பெரியாரின் உண்மையான பேரனான இளங்கோவன், "நாந்தான் பெரியாரின் உண்மையான பேரன், சீமான் கள்ளப்பேரன், அவன் பெரியாரின் சின்னவீட்டிற்குப் பிறந்தாலும் பிறந்திருப்பான்" என்று கூறியிருந்தார். அதன்பிறகு பெரியாரை தனது பேரன் என்று கூறுவதைச் சீமான் தவிர்த்து விட்டிருக்கலாம். இப்போது இளங்கோவனின் மரணத்திற்குத் துக்கம் விசாரிக்கச் சென்றிருக்கத் தேவையில்லை. அவரது அரசியல் அவருக்குத்தான் புரியும். அதனால் எமக்கேதும் நடக்கப்போவதில்லை. 
    • ரைட்டு….உங்களுக்கும் வெம்புது ஆனால் வலிக்காத மாதிரியே நடிக்கிறீர்கள்… பார்ப்போம் எத்தனை வருடங்களுக்கு இப்படி…. உள்ள அழுகிறேன்….வெளிய சிரிக்கிறேன்…நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்கிறேன் என்று இருக்கப்போகிறீர்கள் என. ———- கடந்து போயிருக்கலாம்….  செய்தே ஆக வேண்டும் என்றால்…. இரங்கலை சுருக்கமாக ஒரு டிவீட்டுடன் முடித்திருக்கலாம்…. எவன் செத்தாலும் அதை வைத்து பிண-அரசியல் செய்யும் அண்ணனுக்கு - இறந்தது இந்த இனத்தின் வஞ்சகன் என்பது கூடவா தெரியவில்லை.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.