Jump to content

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

நீங்க வேற.

அவர் தான் அடுத்த போராட்டத்தை முன்னெடுக்க போகும் தலைவர். அதிலும் ஆயுதப் போராட்டத்தில் நடந்த தவறுகளை தவிர்க்க விரும்புகிறார் என்றால் என்ன போராட்டம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. ஆனால் அதற்கு இங்கே யாழ் களத்தில் கூட அவருடன் சேர்ந்து தவறுகளை தேடி இவருடன் குத்தி முறியும் ஒரு சிலரைத் தவிர வேறு எவரும் ஆதரவில்லை என்பது தான் நிஜம். 

விசுகர், 

இத்தனை தியாகங்களைச் செய்த வி புக்களின் மீது  பழி வந்து விழுமோ என்கிற பயம் தங்களின் எழுத்துக்களில் தெரிகிறது. அது தேவையற்றது என நினைக்கிறேன்.  ஏனென்றால் ஆயுதப் போராட்டம் என்பது தனியே விபு க்களுடன் மட்டுமே தொடர்புபட்டது அல்ல. பொது மக்கள், அத்தனை ஆயுதப் போராட்ட இயக்கங்கள், அரசியல்வாதிகள் என எல்லோரும் இதற்குள் அடங்குகின்றனர். விபு க்களது செயற்பாடுகளை அதிகம் ஆய்வு செய்ய வேண்டி ஏற்படுவதற்குக் காரணம்  அவர்கள் மட்டுமே ஆயுதப் போராட்டத்தை வளர்த்து எடுத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர் என்பதினாலாகும். 

விபு க்கள் மக்களுக்காகவே போராடினார்கள். அவர்கள் தமக்காகப் போராடவில்லை. எனவே  எமது மக்களுக்கு எந்தச் செயற்பாடு நன்மை பயக்குமோ அதைத்தான் எல்லோரும் தெரிவு செய்ய வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

புலிகளை போற்றுகிறோம் என்றபடி இங்கே அவர்களது தவறுகளை மட்டும் கண்டு பிடித்து வறுத்து மகிழ்கிறீர்கள். தமிழரது போராட்டத்தின் தியாகம் உறுதி கொடுத்த விலை தெரிந்த எந்த தமிழரும் அதை தோண்டார் நோண்டார். 

தலைவர் சொன்னது தான். தமிழரை தொட்டுப்பார் என் கோபத்தை பார்ப்பாய். நான் சொல்வது இங்கே புலிகளை தொட்டுப்பார் என் கோபத்தை பார்ப்பாய். டொட். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறுகள்   பாகம்… 1

1.   தமிழரசு கட்சி கிராமங்களில் கட்சி கிளைகளை நிறுவதாது தவறு 

2,.தமிழரசு கட்சி நகரங்களின் கிள் இல்லாதது தவறு  

3,..தமிழரசு கட்சிக்கு மாநகரங்கில். கிளைகள் இல்லாதது தவறு   

4,.1,2,3.   உள்ளவர்கள் இணைந்து மாகாணத்தில் கிளை. அமைக்காதது தவறு

5,   .....மாகாண கிளைகளை இணைத்து நாடு தழுவிய கிளை இல்லை என்பது தவறு 

6,  1948 இல். இருந்த எண்ணிக்கையில் பொது சபை உறுப்பினர்கள் இருக்கிறது தவறு 

7,..இந்த பொது சபை உறுப்பினர்களை. தலைவர் பதவிக்கு போட்டு இடும் தலைவர்கள் நியமிப்பது தவறு 

8,...அதே பொது சபை உறுப்பினர்கள்  தலைவரை தெரிவு.  செய்வது தவறு 

9.....தேர்தல் நேரங்களில் மட்டுமே கட்சி கூட்டம் நடத்துவது தவறு

10, ...இந்த தவறுகளை நான் தவறு. என்று சுட்டி காட்டி எழுதியது தவறு   

பாகம்… ஒன்று இத்துடன் நிறைவு  பெறுகிறது   🤣🙏🤣

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2024 at 18:47, putthan said:

உப்படி எதிர்கருத்காளர்களை உசுப்பேதினால் பிறகு நானும் எழுதி அதிக பச்சைகளை பெற்று விடுவேன் ...

தற்போது புலி எதிர்ப்பு கருத்து வைத்தால் அல்லது சொந்த இனத்தை கெக்கே பிக்கே என்று நக்கல் அடித்தால் குழுவாக வந்து பச்சை போடுகிறார்கள் இந்த திரியே சாட்சி .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

தற்போது புலி எதிர்ப்பு கருத்து வைத்தால் அல்லது சொந்த இனத்தை கெக்கே பிக்கே என்று நக்கல் அடித்தால் குழுவாக வந்து பச்சை போடுகிறார்கள் இந்த திரியே சாட்சி .

உண்மை

எந்த இனமும் 100% மனித பண்புகளுடன் வாழவில்லை...இதை புரிந்து கொள்ளாத படியால் தான் இந்த  கருத்துக்கள் வருகின்றனர்... 

நேற்று ஹாமாஸின் உயர்மட்ட பேச்சாளர் நைஜீரியாவில் ஒர் பேட்டியில் சொல்கின்றார் ஒக்டம்பர் 7 ஆம் திகதி தாங்கள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்  ஒர் இராணுவ நடவடிக்கை என்று....

இதை எமது போராளிகள் செய்தால் பயங்கரவாதம் என அவர்கள் இல்லாத பொழுதும் பக்கம் பக்கமாக விமர்சனம் வைப்பார்கள் .....ஆனால் பலஸ்தீனருக்காக பக்கம் பக்கமாக 
நியாயபடுத்தல்கள் ....

3 hours ago, விசுகு said:

புலிகளை போற்றுகிறோம் என்றபடி இங்கே அவர்களது தவறுகளை மட்டும் கண்டு பிடித்து வறுத்து மகிழ்கிறீர்கள். தமிழரது போராட்டத்தின் தியாகம் உறுதி கொடுத்த விலை தெரிந்த எந்த தமிழரும் அதை தோண்டார் நோண்டார். 

ஏன் தோண்டுகிறார்கள் ,நோண்டுகிறார்கள் என்பது மில்லியன் டொலர் கேள்வி...ஏதாவது பலன் ?
விட்ட தவறிலிருந்து பாடம் கற்க வேணும் என பாடம் எடுப்பினம்...

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளது பிரசன்னம் இலங்கைத்தீவின் அரசியல் களத்திலும் போராட்ட களத்திலும் தவிர புலம்பெயர் தேசம்க்களிலும் 2009 பின்பு படிப்படியாக அற்றுப்போய்விட்டது. அதன் பின்பு இலங்கைத் தீவில் தமிழர் அரசியல் பேசுபவர்கள் ஜனநாயக வழியிலேயே நாம் தமிழர் உரிமையைப்பெற்றுக்கொள்ளப்போராடுகிறோம் என புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டமைப்பு எனும் மிகப்பெரிய செல்வாக்கான அமைப்புக்குள் நின்று போராட்டத்தை முன்னெடுத்தனர் அவர்கள் இதுவரை காலமும் நடாத்திய போராட்டம் அதன்மூலமாகப் பெற்றுக்கொண்டவை கற்றுக்கொண்டவை இவைகளைப்பற்றி கணக்கில் எடுத்தால் எதுவுமே இல்லை. இதில் ஒருசில தலைவர்கள் சொல்லுகிறார்கள் சிங்களவரது மனதை வெல்லவேண்டுமென அதற்காக ஒரு தலைவர் சிங்களத் தலைவர் ஒருவரது கைகளிலிருந்த சிறீலங்காவின் தேசியக்கொடியை யாழ்ப்பாணத்தில் பறித்துக்கூட அசைத்துக்காட்டினார்.இன்னுமொருவர் நான் எனது சிறுவயதில் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து விளையாடி படித்து மகிழ்ந்ததை எனது வாழ்வின் பெரும்பேறாகக் கருதுகிறேன் என சிங்கள ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கியிருந்தார். தவிர புலிகள் முஸ்லீம் மக்களை யாழ் குடாவிலிருந்து வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பு எனக்கூறினார். தவிர புலிகள் பல சந்தர்ப்பங்களில் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டார்கள் எனவும் கூறினார் ஆனால் இவைகள் அனைத்தும் செய்தும் சிங்களவர் மனம் இன்னமும் மாறவில்லை.

ஆக இப்போது கடந்த 2009 ல் இருந்து புல்கள் அகற்றப்பட்ட தமிழர் அரசியல் பரப்பில் விரும்பியபடி அரசியல் செய்து தமிழர் உரிமையைப்பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பை அதுவும் ஜனநாயக வழிமுறைகளில் தழ்க்கட்சிகள் அனைத்தும் பெற்றுள்ளது.

புலிகளதும் ஏனைய ஆயுதமேந்திய இயக்கங்களது காலமும் கிட்டத்தட்ட முப்பதுவருடமாகும் இதில் புலிகளைத் தவிர ஏனைய ஆயுதமேந்திய விடுதலை இயக்கங்கள் அனைத்தும் புலிகளது அச்சுறுத்தல் அல்லது போர்க்கால ஜனநாயக விதிமீறகளால் இல்லாதொழிக்கப்பட்டார்கள். 

ஆனால் புலிகளது இராணுவ மற்றும் அரசியல் 
(சிலர் நினைக்கலாம் அவர்களிடம் என்ன அரசியல் நிலைப்பாடு இருந்த்தது என அப்படி எண்ணுபவர்கள் அவர்களும் ஏதோ அரசியல் என காமடி செய்தார்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள்)
ஆகியவற்றின் உச்சம் எனப்படுவது 1994  ந் பின்னதான காலப்பகுதியாகும் அதில் அதி உச்சம் எனப்படுவது ஆனையிறவின் வீழ்ச்சி அதன்பின்னதான ஒரு சில போர்முனைகள் அரசியலில் பல சர்வதேசநாடுகளில் நடந்த பேச்சுவார்த்தைகள். அவை அனைத்தும் 2009 டன் இல்லாதொழிந்துவிட்டது ஆக ஒரு பதினைந்து வருடத்துக்குள்ளான புலிகளது காலம் விலகி  2009 ல் இருந்து 2023 வரைக்குமான தமிழர் அரசியல் கட்சியினரது ஜனநாயக வழிமுறைகளிலான போராட்டம் எதையாவது பெற்றுத்தந்ததா?
மாறாக போதைவஸ்துப்பாவனை அதன் விற்பன சர்வதேச சந்தைக்குக் கைமாற்றிவுடும் தளம் ஆகியனவற்றின் சொர்க்கபுரியாக இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதி மாறியிருக்கிறது. வடக்குக் கிழக்கில் வாழும் மக்கள் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் அனுப்பிய தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் நீங்கள் நாடாளுமன்றில் தமிழர் இனப்பிரச்சனையை மட்டும் கதையுங்கோ அது தீர்ந்துவிட்டால் தமிழ்ர் பகுதியில் பாலாறும் தேனாறும் ஓடத்தொடங்கும் எனச்சொல்லியா அனுப்பிவிட்டவர்கள். சரி அவர்கள் அப்படிச் சொல்லியிருந்தாலும் இவர்கள் யாருக்காக உரிமை எடுத்துத் தரப்போகிறார்கள் மூளை மந்தமாக்கப்பட்ட இளையோரை உள்ளடக்கிய ஒரு சந்ததிக்கான உரிமையையா எடுத்துத் தரபோகிறார்கள்?

நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப்பிரச்சனையில் போதைப்பாவனைப் பிரச்சனை மதன்மையாக இருக்கின்றது இந்தப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துக்கட்சிகளும் வேற்றுமை சுயநலம் பாராது மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து இந்தப்போதை அரக்கனிடமிருந்து இலையோரையும் எதிர்காலச்சந்ததிகளையும் காப்பாற்ற வேண்டும் எனும் எண்ணம் இல்லாத தமிழர் அரசியல்வாதிகள் எமக்கான தீர்வுக்காக நேர்மையாகப் பொராடுவார்கள் என எப்படி உறுதிகூறமுடியும்.

அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனையை வீரியமாக எதிர்கொண்டு போராடி வெற்றிபெற்றால் நீண்டகாலமாக இருக்கும் தமிழர் உரிமைதொடர்பான பிரச்சனைக்கான போராட்டத்தை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கான அனுபவம் கிடைக்கும் மாறாக சிங்களம் இவர்களது போராட்டம் வலிமையானது இதனை நாம் தட்டிக்கழிகமுடியாது எனப்பயப்படும் தவிர நாம் கையேந்தி நிற்கிறோமே எமை அழித்த இந்தியாவும் மேற்குலக நாடுகளும் எமது போராட்ட அணுகுமுறைகளுக்கு நேர்மையான முறையில் முகம்கொடுக்கும்.

அதைவிடுத்து ஒரு கட்சியின் தலைவர் செயலாளர் பதவிக்காக காலை வாரிவுடும் நிகழ்ச்சியில் எப்போதோ இல்லாதொழிக்கப்பட்ட புலிகளை உள் இழுத்து உங்களது வக்கிரத்தை வாந்தி எடுக்காதீர்கள்

புலிகள் ஜனநாயக விரோதிகளாக போர்க்குற்றவாளிகளாக இருந்துவிட்டுப்போகட்டும் அத்வே உண்மையாகவும் இருக்கட்டும் சர்வதேச விசாரண என வரும்போது உங்களது ஜனநாஜகத்தின்மீதான கரிசனையை விசாரணை ஆணையத்தின்முன்பு வையுங்கள் அதுவரை அந்தக்குற்றச்சாட்டுகளுக்கான சாட்சிகளைச் சேகரியுங்கள் நிரல்படுத்துங்கள்.

உண்மை காலம் கடந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ளும்.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறுகள்     பாகம், .......2 

1,  தமிழர் விடுதலை கூட்டணி  இலங்கையில் தமிழருக்கு பிரச்சனைகளுண்டு என்றது தவறு 

2,. தமிழர் விடுதலை கூட்டணி  தனி தமிழ் ஈழம் என்று தீர்மானம் நிறைவேற்றியது தவறு 

3. .... தமிழ் ஈழம் பெறும் வழி  ஆயுதம் ஏந்தி போராடுவது என்ற தீர்மானம் தவறு

4 .....தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆயுதப்பயிற்சியைப். பெற்றுக் கொள்ளாமலிருந்தது தவறு   

5,.......இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் களத்தில் நின்று போராடாமல் விட்டது தவறு 

6,......புலிகள் இளைஞர்களை திரட்டி ஆயுதப்பயிற்சியைக் கொடுத்தது தவறு 

7,.  .புலிகள் போராடியது தவறு 

8,..   ....இராணுவ முகாமைத் தாக்கி அளித்து ஆயுதங்களை கைப்பற்றியது தவறு 

9........அரசாங்கத்துடன் யுத்த நிறுத்தம் செய்தது தவறு 

10.      அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இல் ஈடுபட்டது தவறு 

11,.......ஆயுதங்களைக் போட்டு விட்டு சரண் அடையாமால்  போரிட்டது  தவறு 

12,....இனவழிப்பு.  போர் குற்றம்   என்று முறையீடுவது தவறு    

13,.  ......ஒரே விடயத்தை எல்லா திரிகளிலும்.  எழுதுவது தவறு    

14,....... இலங்கையர்களை தமிழர்கள் என்பது மிக தவறு 

இரண்டாவது பகுதி நிறைவு    🤣🙏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, putthan said:

ஏன் தோண்டுகிறார்கள் ,நோண்டுகிறார்கள் என்பது மில்லியன் டொலர் கேள்வி...ஏதாவது பலன் ?
விட்ட தவறிலிருந்து பாடம் கற்க வேணும் என பாடம் எடுப்பினம்...

😂 இப்ப தான் நீங்கள் நித்திரையால் எழும்பி வந்து ஏன் நோண்டுகிறார்கள்? என்ன பயன்? என்று கேட்கிறீர்கள்!

 இந்த திரியிலும், வேறு சில திரிகளிலும் "மாற்றுக் கொள்கையுடையவர்களைப் போட்டுத் தள்ளுவது ஓகே" என்ற தொனியிலான கருத்துக்கள் வந்த பின்னர் தான் இதை நோண்ட வேண்டிய தேவையே வந்தது. மற்றபடி அடுத்த ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து, இதே தவறுகள் நடக்காமல் நடத்த வேண்டுமென்ற நோக்கமெல்லாம் இங்கே யாருக்கும் இல்லை -  ஒரு ஆயுதப் போராட்டம் இனி நடக்காது.

ஆனால், புலிகளைச் சிரம் மேல் வைத்திருக்கிறேன், இதயத்தில் வைத்திருக்கிறேன் என்று சொல்வோர் "புலிகள் செய்த அரசியல் படுகொலைகள் - அதுவும் நிராயுத பாணிகளின் படுகொலைகள் கூட- புனிதமானவை" என்று புளகாங்கிதம் அடையும் போது, தற்காலத்திலும் இதே வன்முறை தமிழர்களிடையே அதிகம் திட்டு வங்கும் சுமந்திரன் போன்ற அரசியல் வாதிகளை நோக்கிப் பாயும். ஏற்கனவே "அவர் யோசப் பரராஜசிங்கம் போல வாழ வேணுமெண்டு" பூடகமாகச் சொன்னவர் இங்கே திரிகிறார். இது நடக்கக் கூடாதென்பதே நோண்டலின் நோக்கம்.

பெரிய நகைச்சுவை என்னவென்றால், ஒரு தவறு நடக்கும் போது ஆத்திரம், கோபம் கொள்ளாதவர்கள், அந்த தவறைப் பேசினால் ஆத்திரம் கொள்கின்றனர்! இத்தகைய கண்மூடித் தனமான பக்தியா அல்லது அரசியல் வன்முறை இல்லாத அடுத்த தலைமுறையா என்றால், இரண்டாவது தான் என் தெரிவு! 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் வன்முறை இல்லாத ஒர் சமுகம் உலகம் பூராவும் இருக்க வேண்டும் என்பது  எனது தெரிவு மட்டுமல்ல சகல மனிதர்களின் விருப்பம் .....அதை தான் மக்கள் விரும்புகின்றனர் ....
மக்கள் மீது அரசியல் வன்முறைகள் திணிக்கப்படுகிறது ...காலம் காலமாக ......
இன்று நாம் ஒல்லாந்தர்கள்  படையெடுத்தார்கள் போத்துகீசர் படையெடுத்தார்கள்,மக்களை கொன்று வீடுகளை இடித்தழித்தார்கள்,சோழர்கள் படையெடுத்து வந்து அட்டுழியங்கள் செய்தார்கள் இதை எல்லாம் நாங்கள் கடந்த 75 வருடங்களுக்கு முதலிருந்து பேசவே இல்லை ....அவற்றையெல்லாம் கடந்து வந்து விட்டோம்....அவர்கள் செய்ததும் அரசியல் வன்முறையே..
போராளிகள் என்ற போர்வையில் செய்த வன்முறைகளை நாம் காலம் காலமாக கடந்து வந்துள்ளோம் ...காவியும் செல்கின்றோம் ...சிவப்பு சிந்தனையாளர்கள் செய்த அரசியல் வன்முறைகளை புரட்சியாளர்கள் என்ற முத்திரை குத்தி இன்றும் எடுத்து செல்லப்படுகிறது 

வன்முறைகள் அற்ற சமுகம் உலகத்தில் மலரட்டும் ....என்ற கற்பனையில் நான் ...

இனிவரும் காலங்களில் மத நம்பிக்கையின் அடிப்படையில் போர் தடுக்க முடியாத ஒன்றாக இருக்கும் என  நான் நம்புகிறேன்....அது வன்முறை கலந்த ஒன்றாக உலகை ஆட்டிப்படைக்கும்.....

38 minutes ago, Justin said:

😂 இப்ப தான் நீங்கள் நித்திரையால் எழும்பி வந்து ஏன் நோண்டுகிறார்கள்? என்ன பயன்? என்று கேட்கிறீர்கள்!

 இந்த திரியிலும், வேறு சில திரிகளிலும் "மாற்றுக் கொள்கையுடையவர்களைப் போட்டுத் தள்ளுவது ஓகே" என்ற தொனியிலான கருத்துக்கள் வந்த பின்னர் தான் இதை நோண்ட வேண்டிய தேவையே வந்தது. மற்றபடி அடுத்த ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து, இதே தவறுகள் நடக்காமல் நடத்த வேண்டுமென்ற நோக்கமெல்லாம் இங்கே யாருக்கும் இல்லை -  ஒரு ஆயுதப் போராட்டம் இனி நடக்காது.

ஆனால், புலிகளைச் சிரம் மேல் வைத்திருக்கிறேன், இதயத்தில் வைத்திருக்கிறேன் என்று சொல்வோர் "புலிகள் செய்த அரசியல் படுகொலைகள் - அதுவும் நிராயுத பாணிகளின் படுகொலைகள் கூட- புனிதமானவை" என்று புளகாங்கிதம் அடையும் போது, தற்காலத்திலும் இதே வன்முறை தமிழர்களிடையே அதிகம் திட்டு வங்கும் சுமந்திரன் போன்ற அரசியல் வாதிகளை நோக்கிப் பாயும். ஏற்கனவே "அவர் யோசப் பரராஜசிங்கம் போல வாழ வேணுமெண்டு" பூடகமாகச் சொன்னவர் இங்கே திரிகிறார். இது நடக்கக் கூடாதென்பதே நோண்டலின் நோக்கம்.

பெரிய நகைச்சுவை என்னவென்றால், ஒரு தவறு நடக்கும் போது ஆத்திரம், கோபம் கொள்ளாதவர்கள், அந்த தவறைப் பேசினால் ஆத்திரம் கொள்கின்றனர்! இத்தகைய கண்மூடித் தனமான பக்தியா அல்லது அரசியல் வன்முறை இல்லாத அடுத்த தலைமுறையா என்றால், இரண்டாவது தான் என் தெரிவு! 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2024 at 18:16, கிருபன் said:

சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

IMG-5879.jpg

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-political-issues-1708427477?fbclid=IwAR11nw5rXppZqueW37iXPjerp5OBhP7bggCcpP7ns5H_kf5qV398LeXBhuc

பிரதான விடயத்தை திசை திருப்ப சுமந்திரன் சதி! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா எச்சரிக்கைhttps://www.youtube.com/watch?v=ntqnnMKOUmo&embeds_referring_euri=https%3A%2F%2Ftamilwin.com%2F&source_ve_path=Mjg2NjY&feature=emb_logo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kavi arunasalam said:

IMG-5879.jpg

பச்சை முடிந்து விட்டது இந்த திரியில் யார் திசைமாறி கூட்டமாக இருப்பதை பாருங்கள் அவர்கள் எண்ணப்படி நடக்கவில்லை அதனால் புலிகளை இழுத்து தாங்கள்தான் நீதிபதி போல் எப்போதோ அழிந்து போன புலிகள் மீது போர்குற்றம் சொல்கிறார்கள் இவர்கள் யார் புலிகளை குற்றம் சொல்ல ?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இவர்கள் யார் புலிகளை குற்றம் சொல்ல ?

உலக  ஜனநாயக வாதிகள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

தொடர்ந்து கருத்து எழுதுங்கோ குருசோ.உண்மைகள்  யாதர்த்தம் தெரியவர வேண்டும்
இங்கே உள்ள நிலமை  தவறான தகவலை சொல்லி சீமான் பாணியிலான Vasee யின் கருத்தை இரு தமிழர்கள் விரும்பி உள்ளார்கள் ☹️

இங்கு சிலர் போராளிகளின் தவறுகளை, விஸேடமாக புலிகளின் தவறுகளை சுட்டி காடட கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறார்கள்.

மனடையன் குழு, ஈபிடிபி, ப்ளட் போன்ற  இயக்கங்களை பற்றி எழுதினபோது எதிர்க்கருத்து இல்லை. நன்றாக பச்சை குத்தினார்கள். இப்போது நிலைமை வேறாக மாறி இருக்கிறது.

நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே. 

Edited by Cruso
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 20/2/2024 at 20:24, Justin said:

1) சுட்டுக் கொல்லப் பட்ட இரு வன்முறை சாரா அரசியல்  தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டு வேரோடு பிடுங்கி எறிந்தனர் எனும் போது "ரோசாக் கண்டைப் பிடுங்கி எறிந்தனர்" என்றா அர்த்தம் கொண்டீர்கள்😂?

2) அங்கேயே இருந்து ஏதோ செய்து கொண்டிருந்த போது கொல்லப்பட்டவர்களை இப்படி விளிக்கும் போது நீங்கள் இருக்கும் இடம், தமிழர் போராட்டத்தில் ஒரு பங்களிப்பும் செய்யாமல் மற்றவர் என்ன நன்மை செய்தார் என்று கேட்கும் கேள்வியின் மெத்தனம் இவற்றைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு தவறும் இல்லை.

3) எனவே, 2009 வரை நின்றவன் மட்டுமல்ல, உங்களை விட அங்கே நின்று வாழ்ந்து வந்தவனையும் இன்னும் வாழும் குறுசோ போன்றவர்களையும் கொஞ்சம் அவதானமாக் கையாளுங்கள்.

4) சுருக்கமாக, உங்கள் நிலையை மனதின் ஓரத்தில் நிறுத்தி வைத்த படி இங்கே இருப்பவர்களோடு உரையாடுவது நல்லது என நினைக்கிறேன். சும்மா சின்னத் திரையில் ஸ்னப் ஷொட் எடுத்து ஒட்டி விட்டு, கோராவில் எழுதி விட்டு "நான் தான் இன்ஸ்பெக்ரர்" என்று படம் காட்டினால், இங்கே ஒரு முன்னாள் போராளி உங்களுக்கு முன்னர் சொன்னது போல  "கெதியா வரலாற்றை எழுதி முடியுங்கோ" என்று புன்னகையோடு கடந்து போவர் பலர்😎!

நீலன் தமிழருக்கு செய்த நல்லதுகளை எழுதுங்கள் என்று ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன். சட்டிக்குள் ஒன்றுமே இல்லாததால் வாதப்பிழைப்பிற்கு என் மீது எத்தனை தனிமனித தாக்குதல்கள் அகப்பையிலிருந்து வருகின்றன.😆😆

1) எப்படியேனும் என் மீது பிழை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஒரு "வலிந்து பொருள் கோடல்". வேறொன்றுமில்லை.😂

2) ஏதோ அல்ல, இவர்கள் தீவுக்குள் இருந்து தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட துடித்துக்கொண்டிருந்தார்கள், அதனால் அங்கேயே இருந்து தப்பியோடாமல் தேசத்தின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்தவர்கள் காலத்திற்கேற்ற முடிவுகளை எடுத்துக் கொன்றார்கள். 

அம்முடிவுகளை - தமிழர் போராட்டத்தில் ஒரு பங்களிப்பும் செய்யாமல் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டு விடுதலைப் போராளிகள் செய்தவற்றில் பிழைபிடிக்கும் உங்களின் மெத்தனத்திற்கு எதிர்ப்புக்காட்டுவதில் ஒரு தவறும் இல்லை. 

உங்கள் வாயாலையே என்ன நன்மை செய்தார்கள் என்பது தெரியவில்லை என்றுவிட்டீர்கள். பேந்தேன் மினக்கட்டு வெள்ளையடிக்கிறியள், உங்கள் ஆட்களுடன் சேர்ந்து? புலிகள் மீது சேறடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இதனை செய்கிறீர்கள். 

3) அறிவேன். அதனால் தான் "சரியான அவதானமாக" கையாள்கிறேன்.

4) நன்றி

----------------------

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியில்லாததால் மலிவான தனிமனிதத் தாக்குதல்கள் வாதாட்டமாகியுள்ளன.

மொத்தத்தில் உங்கள் தராதரத்திற்கு அளவாக மலிவாக எழுதியுள்ளீர்கள்...

அம்புட்டுத்தான்.

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் அப்பாவிகள் கொல்லப்பட்டது உண்மைதான் 
 உதாரணமாக, மத்திய வங்கி குண்டு வெடிப்பு, அதிபர் ஆனந்தராஜ, கெபிடிகொல்லாவா  படுகொலை போன்றவைகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

நீலன் தமிழருக்கு செய்த நல்லதுகளை எழுதுங்கள் என்று ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன்.

நீலன் திருச்செல்வம் ஒரு சிறந்த சட்டவாளர், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற புலமை மிகுந்தவர்.  தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்படாமல் பாராளுமன்ற உறுப்பினராக 83 இலும் பின்னர் 94 இலும் இருந்தவர். அடிப்படையில் அவர் ஒரு கறுவாத் தோட்டத்து உயர்குழாத்தினர்.

அவர் செய்த நன்மை என்னவென்றால், இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஜீ.எல். பீரீஸுடன் சேர்ந்து ஒரு தீர்வுப்பொதியைத் தயாரித்தவர். இப்பொதி இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களுடன் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பரவலாக்கும் திட்டங்களைக் கொண்டிருந்தது. 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே சென்று ஒரு தீர்வை முன்வைத்தது. ஆக, சமஸ்டி என்று எழுத்தில் சொல்லாமல் ஒரு சமஸ்டித் தீர்வை முன்வைத்தது. இந்தப் பொதியை சிங்கள கடும்போக்கினரும், விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பொதியை தயாரித்தமையால்தான் அவர் “துரோகி” என அடைமொழி கொடுக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும்படி அவர் எவரையும் காட்டிக்கொடுத்ததாக வரலாறு இல்லை. அதாவது, அவர் படுகொலை செய்யப்படுமளவிற்கு ஒரு தீமைகளும் செய்யவில்லை.

இந்தப் பொதி தயாரிக்கப்ப்பட்டு 30 வருடங்களின் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இந்திய- இலங்கை ஒப்பந்தமூடாக வந்த (13ஆவது திருத்தச்சட்டம்) நீர்த்துப்போன, அதிகாரம் இல்லாத, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு மேலாக இருக்காது.

சந்திரிக்கா காலத்து பொதியைப் பற்றி அறிய

https://noolaham.net/project/36/3532/3532.pdf

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இங்கு நீலன் திருச்செல்வம் என்ன , வேறு எவராவது உருப்படியான எதையாவது செய்திருக்கிறார்களா என்றுகேடடாள் யாருக்குமே பதில் இருக்காது. எவராவது கொலை , கொள்ளை , கடத்தல் செய்திருக்கிறார்களா எண்டால் நிறையவே எழுதலாம்.

இருந்தாலும் நீலன்  திருச்செல்வம் மற்றவர்கள் காண வேண்டும், பேச வேண்டும் என்பதட்கு அப்பால் மறைமுகமாக நிறையவே காரியங்களைச்செய்து கொண்டிருந்தார். வெளி நாட்டு ராஜதந்திரிகளுடனும் , உள்நாட்டு அரசியல்வாதிகளுடனும் பல பேச்சுவார்த்தை நடத்தி ஒருதேர்வு திடத்தை நகர்த்தி இருந்தார். அப்படியான ஒன்று இப்போது கனவிலும் நடக்காது. 

இப்போது போலீஸ் அதிகாரம் அதிலிருந்து அகற்ற பாராளுமன்றில் கம்மன்பில ஒரு பிரேரணை கொண்டு வந்திருக்கிறார். அது அதிகமாக நிறைவேற்ற படும். எனவே போலீஸ் அதிகாரம் முடிவுக்கு வருகின்றது. இது சரியாக முடிவுற்றால் நிச்சயமாக காணிஅதிகாரத்தை அகற்றுவதட்கும் ஒரு பிரேரணை கொண்டுவருவார்கள். அதுக்கு பிறகு என்ன, அது பூரணமான அதிகாரம் கொண்ட மாகாண சபைதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

இப்போது போலீஸ் அதிகாரம் அதிலிருந்து அகற்ற பாராளுமன்றில் கம்மன்பில ஒரு பிரேரணை கொண்டு வந்திருக்கிறார்.

ரணில் சொல்லி விட்டார் காணி  பொலிஸ் அதிகாரம்கள். தரப்படமுடியாது    என்று பொருளாதாரம். கல்வி  ஆகியவற்றை மாநிலங்களுக்கு வழங்க யோசிக்கிறோமென்று    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

இருந்தாலும் நீலன்  திருச்செல்வம் மற்றவர்கள் காண வேண்டும், பேச வேண்டும் என்பதட்கு அப்பால் மறைமுகமாக நிறையவே காரியங்களைச்செய்து கொண்டிருந்தார். வெளி நாட்டு ராஜதந்திரிகளுடனும் , உள்நாட்டு அரசியல்வாதிகளுடனும் பல பேச்சுவார்த்தை நடத்தி ஒருதேர்வு திடத்தை நகர்த்தி இருந்தார். அப்படியான ஒன்று இப்போது கனவிலும் நடக்காது. 

இவர் எழுதியது  ஒருபோதும் நடைமுறையில் வந்து இருக்காது  புலிகள் போராடிக்கொண்டு இருந்த காரணத்தால்  அதிகாரங்களை கூட. எழுத முடிந்தது  நீங்கள் குறிப்பிட்டது போல் இப்போது முடியாது தான்  காரணம் போராடுவோர் இல்லை    தீர்வு திட்டங்கள் எழுதுவது  தமிழருக்கு செய்யும் நன்மைகள் இல்லை  எழுதிய தீர்வுகளை நடைமுறை படுத்தி கட்டவேண்டும். அது தான் தமிழருக்கு செய்யும் நன்மைகள் ஆகும்   இவரது தீர்வை பாராளுமன்றம் விவாதிக்கக் கூட எடுத்திருக்கமாட்டாது   இந்த செயல் தமிழர்களை தமிழன் ஏமாற்றும் முயற்சிகள் ஆகும்  அதுவும் இனி பேசி பலனில்லை  தமிழ் ஈழம் தான் முடிவு   அதை அடையும் வழி ஆயுதப்போராட்டம் தான்  என்று முடிவு எடுத்த கட்சியின் உறுப்பினர் நீலன,... போராட்டம் நடத்து கொண்டிருந்த போது  தன்னிச்சையாக இப்படி செயல்பட்டு இருக்கக்கூடாது    அது போராட்டத்துக்கு ஒரு பின்னடைவு   மேலும் போராடியவர்களுக்கு  எந்தவொரு பாதுகாப்பும் வழங்காத தீர்வு  இந்த வரைபின் ஒரே நோக்கம் போராட்டத்தை குழப்ப வேண்டும் என்பதே   

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

நீலன் திருச்செல்வம் ஒரு சிறந்த சட்டவாளர், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற புலமை மிகுந்தவர்.  தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்படாமல் பாராளுமன்ற உறுப்பினராக 83 இலும் பின்னர் 94 இலும் இருந்தவர். அடிப்படையில் அவர் ஒரு கறுவாத் தோட்டத்து உயர்குழாத்தினர்.

அவர் செய்த நன்மை என்னவென்றால், இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஜீ.எல். பீரீஸுடன் சேர்ந்து ஒரு தீர்வுப்பொதியைத் தயாரித்தவர். இப்பொதி இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களுடன் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பரவலாக்கும் திட்டங்களைக் கொண்டிருந்தது. 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே சென்று ஒரு தீர்வை முன்வைத்தது. ஆக, சமஸ்டி என்று எழுத்தில் சொல்லாமல் ஒரு சமஸ்டித் தீர்வை முன்வைத்தது. இந்தப் பொதியை சிங்கள கடும்போக்கினரும், விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பொதியை தயாரித்தமையால்தான் அவர் “துரோகி” என அடைமொழி கொடுக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும்படி அவர் எவரையும் காட்டிக்கொடுத்ததாக வரலாறு இல்லை. அதாவது, அவர் படுகொலை செய்யப்படுமளவிற்கு ஒரு தீமைகளும் செய்யவில்லை.

இந்தப் பொதி தயாரிக்கப்ப்பட்டு 30 வருடங்களின் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இந்திய- இலங்கை ஒப்பந்தமூடாக வந்த (13ஆவது திருத்தச்சட்டம்) நீர்த்துப்போன, அதிகாரம் இல்லாத, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு மேலாக இருக்காது.

சந்திரிக்கா காலத்து பொதியைப் பற்றி அறிய

https://noolaham.net/project/36/3532/3532.pdf

நன்றி. இது போன்ற மூலங்களில் தகவல்களைத் தேடியறிய இயலாமல்,  நன்னியர் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என்பதை அவரது முன்னைய இரு கருத்துக்கள் மூலம் புரிந்து கொண்டதால் நான் பதிலளித்து மெனக்கெடவில்லை.

இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கும் தீவிர தமிழ் தேசியர்களின் "மண்ணு லாறி" (உபயம்: கோசான்😂)  தத்துவத்திற்கும் ஒரு ஒற்றுமையுண்டு:

இலங்கை பயங்கரவாத தடை சட்டத்தில், அப்பாவித் தமிழரைப் பிடித்து "No date" அடித்து சிறையில் வைத்து விட்டு, "சந்தேக நபர் குற்றமற்றவர் என்று அவர் தான் நிரூபிக்க வேண்டும்" என்பார்கள்.

இங்கால தீவிர தமிழ் தேசியர்கள் "புலிகளால் கொல்லப் பட்டவர் கொல்லப் படாமலிருக்க உண்மையில் தகுதியானவரா என்பதை கொல்லப் பட்டவரும் அவருக்கு அஞ்சலி செய்வோரும் தான் நிரூபிக்க வேண்டும்" என்பார்கள்.

பி.கு: மேலே Justice கந்தையா உங்கள் வாதத்தைக் கேட்ட பின்னர் நீலனுக்கு posthumous தீர்ப்பெழுதியிருக்கிறார் பாருங்கள்😎!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இங்கால தீவிர தமிழ் தேசியர்கள் "புலிகளால் கொல்லப் பட்டவர் கொல்லப் படாமலிருக்க உண்மையில் தகுதியானவரா என்பதை கொல்லப் பட்டவரும் அவருக்கு அஞ்சலி செய்வோரும் தான் நிரூபிக்க வேண்டும்" என்பார்கள்.

 இனவழிப்பு, போர குற்றம் என்று  சர்வதேச சமுகத்திடம் நீதி கேட்டுக்கொண்டே அநீதியான அக்கிரமமான இவ்வாறான கொலைகளை கயமைத்தனமாக  நியாயப்படுத்தி எக்காளமாக பேசுவதைப் பார்ககும் ஒரு வேளை  நாடும்   போது நாடும் அதிகாரமும் கிடைத்திருந்தால்……………. இயற்கைக்கே பொறுக்கவில்லைப் போலும்.  

  • Like 1
  • Thanks 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறுகள்,...பாகம்… 3

1,.. தந்தை செல்வா-பண்டா.  ஒப்பந்தம் தமிழருக்குகான. தீர்வு என்பது தவறு   காரணம் அமுல் செய்யப்படவில்லை 

2,. தந்தை செல்வா - டட்லி ஒப்பந்தம் தமிழர்கள் பிரச்சனைக்கான. தீர்வு என்பது தவறு   காரணம் நடைமுக்கு வரவில்லை 

3,.ஏடுகளில் எழுதப்படுவாவை எல்லாம்  நடைமுறையில் அமுலில் வரதா போது தீர்வு என்று அழைப்பது. தவறு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

அண்ணா நீங்கள் ஊரில் இருந்து எழுதுவதாக ஒரு பெயரில் வாருங்கோ. சொல்வதெல்லாம் பொன்னும் பொருளும் வரலாறுமாக அங்கீகரிக்கப்படும்.😅

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

பி.கு: மேலே Justice கந்தையா உங்கள் வாதத்தைக் கேட்ட பின்னர் நீலனுக்கு posthumous தீர்ப்பெழுதியிருக்கிறார் பாருங்கள்😎!

நான் நீலனுக்கு தீர்ப்பு எழுதவில்லை    நீலன் எழுதிய வரைபு தீர்வு என்பது தவறு என உறுதியாக கூறுகிறேன்   ஏடுகளில் எழுதுபவை எல்லாம் தமிழ் மக்களுக்கு தீர்வு ஆகிவிட முடியாது   அவை அமுல்படுத்தப்பட்டிருக்கும் போது மட்டுமே தீர்வு ஆகும்    நீலன். தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை  ஒரு கிராம சபைக்கு கூட  சிறந்த அதிகாரங்களை பெற்று தரவில்லை    

தமிழர் விடுதலை கூட்டணி   தமிழ் ஈழம். தான் தீர்வு  இனி பேசி பயனில்லை’   ஆயுதம் ஏந்துவது தான் அதற்காக வழி  என்று அறிவிக்க முதல்  நீலன். தீர்வை எழுதி அமுல் செய்திருக்கலாமே ?? எங்கே போனார்?? 

ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று  போராடிக்கொண்டு இருக்கும் போது  சீமாட்டி சந்திரிக்கா  நவாலி முல்லைத்தீவு,.......என்று தமிழ் பகுதிகளில் எல்லாம் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும் போது   தீர்வு எழுதுகிறார்   யாருக்கு??? ஆயுதமேத்திய  ஆயிரம் ஆயிரம் இளைஞர்களுக்கு  ...அவர்களை சிறையில் பிடித்தது அடைபட்டிருப்பவர்கள்  தீர்வு அமுல் பட்டிருக்கப்போவதில்லை  இது அரசியல்   மருத்துவம் இல்லை  தயவுசெய்து இதை வாசித்து  குழப்பமடையவேண்டாம் 

தமிழ் மக்களின் சாபக்கேடு. தமிழ் சட்டத்தரணிகள் பாராளுமன்றம் நீதிமன்றம்  இரண்டிலும் வித்தியாசம் இன்றி வழக்கு பேசியது தான் 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.