Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதினின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டுவர முயன்ற, ரஷ்யாவுக்கு நல்லதை செய்ய முயன்ற  நவல்னி தளது  இலட்சியங்களுக்காக தன்னை தியாகம் செய்துள்ளார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.bbc.com/news/live/world-68316979?src_origin=BBCS_BBC

மிக அதிர்ச்சியான செய்தி.

இறுதியாக நஞ்சூட்டப் பட்டு சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு கொண்டு செல்லப் பட்டுக் குணமான பின்னர், அங்கேயே தங்கியிருக்க அவருக்கு வாய்ப்புகள் இருந்தன. "ரஷ்யாவுக்கு வெளியே இருந்து எதுவும் செய்ய முடியாது" என்று மீண்டும் மொஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் நஞ்சூட்டப் பட்டு, ஆபத்தான நிலையில் இருந்தமை உலகச் செய்திகளாக வெளிவந்திருந்த நிலையிலும், "நீதிமன்றிற்கு வழக்கிற்கு வரத் தவறினார்" என்று உடனே கைது செய்து இரண்டு சிறைத் தண்டனைகள் கொடுத்திருந்தார்கள்.

துணிவான ஒரு மனிதர், இப்படியானவர்களை இப்போது மேற்கு நாடுகளில் கூட  காண இயலாது!

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா: புதினை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸே நவால்னி சிறையில் மரணம்.

கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட அலெக்ஸி நவல்னி, ஆர்க்டிக் வட்டத்திலுள்ள சிறையில் இறந்துவிட்டதாக, சிறைத்துறை செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய செய்தி முகமைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அதிபர் விளாதிமிர் புதினின் மிகக் கடுமையான விமர்சகராகப் பார்க்கப்பட்டவர் நவல்னி. நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்மீது போடப்பட்ட வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாகப் பரவலாகக் கருதப்பட்டது.

கடந்த ஆண்டு இறுதியில் கடுமையான சிறைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆர்க்டிக் தண்டனை காலனி சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

யமலோ-நெனெட்ஸ் மாவட்டத்தில் உள்ள சிறைத்துறை, அவரது மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய முயன்று வருகிறது எனக் கூறியுள்ளதாக, டாஸ்(Tass) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், நவால்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ், “அவரது மரணம் குறித்துத் தங்களுக்கு இன்னும் எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை,” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அலக்ஸே நவால்னி

பட மூலாதாரம்,EPA

யார் இந்த அலக்ஸே நவால்னி?

அலக்ஸே நவால்னி ரஷ்ய அதிபர் புதினின் தீவிர விமர்சகராகப் பார்க்கப்படுகிறார்.

ரஷ்ய அதிகார மையத்தின் ஊழல்களைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் அம்பலப்படுத்தி வருகிறார். இவரது விசாரணை வீடியோக்கள் கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

மக்களை ஈர்க்கும் பிரசாரகராக பார்க்கப்பட்ட இவர், 2018ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வந்தார். அதற்காக பிராந்திய அளவிலான பிரசார அலுவலகங்களையும்கூட அமைத்தார். ஆனால், இறுதியில் அவரே வாக்களிப்பதில் இருந்து தடை விதிக்கப்பட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு இவர் நரம்பு மண்டலங்களைப் பாதிக்கும் விஷ அமிலம் செலுத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானார். இதற்கு ஜெர்மனியில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், அச்சுறுத்தல்களைத் தாண்டியும் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ரஷ்யாவுக்குள் நுழைந்தார்.

ரஷ்யா வந்து இறங்கிய உடனே அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, அவர் தனது மனைவி யூலியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மாஸ்கோவில் வசித்து வந்தார்.

அலக்ஸே நவால்னி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிறையில் நவால்னி

நவால்னிக்கு சிறையில் என்ன நடந்தது?

கடந்த சில மாதங்களாகக் கடுமையான சிறைகளில் ஒன்றான யமலோ-நெனெட்ஸ் மாவட்டத்தில் உள்ள ஆர்க்டிக் தண்டனை காலனி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நவால்னி.

நவால்னியின் உடல்நிலை குறித்து அந்த சிறைச்சாலை கொடுத்துள்ள அறிவிப்பில், வெள்ளிக்கிழமை நடைபயிற்சி முடிந்து வந்த பிறகு அவர் “உடல் நலமற்றுக் காணப்பட்டதாக” கூறப்பட்டுள்ளது.

மேலும், “அதன் பிறகு அவர் சுயநினைவை இழந்துவிட்டார். உடனே மருத்துவக் குழு அழைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டபோதும், அது பலனளிக்கவில்லை” என்றும் கூறப்பட்டுள்ளது.

“அவசர சிகிச்சை மருத்துவர்கள் சிறைவாசி இறந்துவிட்டதாக அறிவித்ததாகவும், மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும்” அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புதினை எதிர்த்ததால் மரணம்’

ரஷ்யா: புதினை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸே நவால்னி சிறையில் மரணம்

பட மூலாதாரம்,EPA

நவால்னியின் “துயர்மிகு மரணத்திற்கு” ரஷ்ய ஆட்சியே “முழுப் பொறுப்பு” ஏற்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கருதுவதாக அதன் தலைவர் சார்லஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நவால்னி “சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் மதிப்புகளுக்காகப் போராடினார்” என்றும் அவரது லட்சியங்களுக்காகத் தனது “இறுதி தியாகத்தை” செய்தார் என்றும் பதிவிட்டுள்ளார்.

அவரது குடும்பத்தாருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், “போராளிகள் இறக்கலாம், ஆனால், சுதந்திரத்திற்கான போராட்டம் ஒருபோதும் முடிவுக்கு வராது,” என்றும் கூறியுள்ளார்.

அலக்ஸே நவால்னியின் மரணம் குறித்த தனது எக்ஸ் பதிவில், “ரஷ்ய அடக்குமுறைக்கு எதிராக” நவால்னி “தனது உயிரைக் கொடுத்துள்ளதாக” பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் செஜோர்னே குறிப்பிட்டுள்ளார்.

“தண்டனை காலனியில் அவரது மரணம் விளாதிமி புதினின் ஆட்சியில் உள்ள எதார்த்தத்தை நமக்கு நினைவூட்டுவதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுவது என்ன?

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, “நவால்னியின் மரணம் குறித்து மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டுகள் அவர்களின் ‘சுயமான வெளிப்பாடுகளே” என்று குறிப்பிட்டுள்ளார்.

டெலிகிராமில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவால்னியின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான தடயவியல் பகுப்பாய்வின் முடிவுகள் தற்போது வரை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், மேற்கு நாடுகள் ஏற்கெனவே அவற்றின் சொந்த முடிவுகளுக்கு வந்துவிட்டதாகத் தான் நம்புவதாகவும் ஜாகரோவா கூறியுள்ளார்.

ரஷ்யா: புதினை எதிர்த்த அலக்ஸே நவால்னி சிறையில் மரணம் - யார் அவர்? என்ன நடந்தது? - BBC News தமிழ்

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

தனி மனித சுதந்திரம் மற்றும் சர்வாதிகாரம் என்றால் என்ன என்று இங்கே பலருக்கும் இனியாவது புரியட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

அலக்ஸே நவால்னி: ரஷ்ய அதிபர் புதினை அச்சுறுத்திய இவர் யார்? எதிர்கொண்ட பிரச்னைகள் என்ன?

அலக்ஸே நவால்னி: புதின் அரசை அச்சுறுத்திய இருந்த இவர் யார்? சிறையில் இறந்தது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரசாரகரான அலக்ஸே நவால்னி, அதிபர் விளாதிமிர் புதினுக்கு எதிரான முக்கிய முகமாகக் கருதப்படுகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் தற்போது உடல்நலம் மோசமாகி உயிரிழந்துள்ளதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிகார மட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள ஊழலை வெளிப்படுத்தி இவர் வெளியிட்ட ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

இன்று வரையிலும் இவர் கிரெம்ளினுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார். புதினுக்கு எதிராக தேர்தலில் நிற்க முயற்சி செய்து அது முடியாமல் போனாலும், தனது தொடர் இயக்கத்தின் மூலமாகப் பல லட்சம் ரஷ்ய மக்கள் விரும்பும் நபராக அவர் உருவெடுத்துள்ளார்.

 

யார் இந்த அலெக்ஸே நவால்னி?

அலக்ஸே நவால்னி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அலெக்ஸே நவால்னி ரஷ்ய தலைநகரான மாஸ்கோவுக்கு மேற்குப் பகுதியில் உள்ள பியுடன் எனும் கிராமத்தில் 1976ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி பிறந்தவர். இவர் தனது சட்டபடிப்பை 1998இல் மாஸ்கோவில் உள்ள சட்டப் பல்கலைக் கழகத்தில் முடித்தார்.

கடந்த 2010இல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைகழகத்தில் ஆய்வு உதவியுடன் கூடிய Yale World Fellow திட்டத்தில் மாணவராக ஓராண்டு் ககாலம் கழித்தார். நவால்னிக்கு யூலியா என்ற மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

நவால்னி எப்படி பிரபலமானார்?

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் தீவிர எதிர்ப்பாளராக அறியப்படும் 47 வயது நவால்னி ரஷ்யாவின் அதிகார மையத்தில் நிலவும் ஊழலை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காகவே மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதுவே அவருக்குப் பல இன்னல்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அலக்ஸே நவால்னி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அலக்ஸே நவால்னி ஓவியம்

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடவும் அவர் முயற்சி செய்தார். அதற்கான பிரசாரப் பணிகளைத் தொடங்கி, பிராந்திய அளவிலான குழுக்களையும் அமைத்தார்.

ஆனால், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதால், அவரால் அந்தத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. ஆனாலும், பல ரஷ்யர்களிடையே அவரது குரல் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ரஷ்ய அரசுக்கு அவர் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தார்.

அவரது ஊழலுக்கு எதிரான குழுவினர் மேற்கொண்ட பிரசாரங்கள், ரஷ்ய அரசின் ஒவ்வொரு மட்டத்திலும் இருந்த ஊழல்களை அம்பலப்படுத்தின. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் உலகம் முழுவதும் உள்ள பல லட்சம் பேரிடம் பிரபலமானார்.

நவால்னி சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும், யுக்ரேன் போருக்கு எதிராக உள்நாட்டில் எழுந்த குரல்களில் முக்கியமானவராக இருந்தார். 2022ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், யுக்ரேன் போர் குறித்துப் பேசிய இவர், “புதின் ஒரு முட்டாள்தனமான போரை ஆரம்பித்து வைத்திருப்பதாக” கூறினார்.

 

புதின் மற்றும் ரஷ்ய அரசை நோக்கித் தொடர் விமர்சனம்

அலக்ஸே நவால்னி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நவால்னி 2008ஆம் ஆண்டுதான் ரஷ்ய அரசியலில் பெரிய சக்தியாக வளரத் தொடங்கினார். ஏனெனில் ரஷ்யாவின் ஒரு சில பெரிய மாகாணங்களில் முறைகேடுகள், ஊழல்கள் நடந்தது குறித்து அவர் தனது இணையப் பக்கத்தில் எழுதி வந்தார்.

அவருடைய ஓர் உத்தி என்னவெனில், பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒரு சிறு பங்குதாரராக இணைந்துகொள்வார். பின்னர் மேலதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்விக்கு உள்ளாக்குவார்.

இவர் ரஷ்யாவில் 2011இல் நடந்த போராட்டங்கள் மூலம் பிரபரலமானார். அப்போது தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி தொடர்ந்து கேள்வி எழுப்பினார். அதனால் ரஷ்யா கடந்த சில தசாப்தங்களில் சந்திக்காத மிகப்பெரிய போராட்டங்களைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து நவால்னி கைது செய்யப்பட்டபோது அது இன்னும் அவரை பிரபலமாக்கியது.

மோசடி வழக்கு என்ற பெயரில் அவர் 2013 ஜுலை மாதம் சிறையில் அடைக்கப்பட்டபோது அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாவே பார்க்கப்பட்டது.

ஆனால், அதே ஆண்டில் அவர் மாஸ்கோ மேயர் தேர்தலில் பிரசாரம் செய்ய அனுமத்திக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் புதின் கூட்டாளி செர்கே சோபியானியிடம் தோற்றார். அதற்குக் காரணாமாக இவருக்கு தொலைக்காட்சி ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது கூறப்பட்டது.

வெறும் இணையதளம் மற்றும் வாய்வழிப் பிரசாரமே அவர் செய்ய முடிந்தது. எனவே இவரது ஆதரவாளர்கள் எதிரணியின் வெற்றி ஒரு நாடகம் என்று கூறினார்கள்.

 

புதின் மீது கடுமையான விமர்சனம்

அலக்ஸே நவால்னி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நவால்னி தொடர்ந்து புதின் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்தார். ரஷ்யாவின் ரத்தத்தை உறிஞ்சி எடுப்பவர் என்று அதிபரை குற்றம் சாட்டினார்.

இவர் எளிமையான ரஷ்ய மொழியில் பேசியதால், வேகமாக ரஷ்ய இளைஞர்களின் குரலாக உருவெடுத்தார். சமூக ஊடகங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். ரஷ்யாவின் செல்வாக்கான பிரபலங்களின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரது யூட்யூப் சேனலில் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டது.

அதில் குறிப்பாக இவரது ஊழலுக்கு எதிரான குழு, புதினின் அரண்மனை குறித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது. அதில், புதினின் பணக்கார நண்பர்கள் அவருக்கு அரண்மனை ஒன்றைப் பரிசளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த வீடியோ மட்டும் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

ஆனால் அதை ஒரு போலி விசாரணை வீடியோ என்றும், அந்த வீடியோ போரடிப்பதாகவும் புதின் கூறினார். மேலும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் மறுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து யுக்ரேன் போர், ரஷ்ய அதிகார மட்டத்தில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் அதனோடு அதிபர் புதினுக்கு உள்ள தொடர்பு என அரசு என அதிபரை தீவிரமாக விமர்சிப்பவராகப் பார்க்கப்பட்டார் நவால்னி.

இந்த நிலையில் பலமுறை அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்படி 2020ஆம் ஆண்டு அவர் மீது நடத்தப்பட்ட நச்சுத்தாக்குதலில் அவர் கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

 

தொடர் தாக்குதல்கள்

அலக்ஸே நவால்னி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மனைவியுடன் அலக்ஸே நவால்னி

கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ஆம் தேதி, சைபீரியாவில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் வந்தபோது திடீரென நவால்னி மயங்கி விழுந்தார்.

ஓம்ஸ்க் நகரில் விமானம் தரையிறக்கப்பட்டு அவசர உதவி விமானத்தில் ஜெர்மனி அழைத்து வரப்பட்ட நவால்னிக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் நச்சு ரசாயன தாக்கத்துக்கு ஆளானதாகக் கண்டறியப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பின்னர் ஜெர்மானிய இதழான டெர் ஸ்பீகலுக்கு நவால்னி அளித்த பேட்டியில், நோவிசோக் எனப்படும் நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடிய ரசாயன தாக்குதலுக்குத் தாம் ஆளாக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார். இவரது கூற்றானது பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனிலுள்ள ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

அலக்ஸே நவால்னி: புதின் அரசை அச்சுறுத்திய இருந்த இவர் யார்? சிறையில் இறந்தது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நோவிசோக் நச்சு ரசாயனத்தைப் பயன்படுத்துவதற்கான உத்தரவை ரஷ்யாவின் மூன்று உளவு அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமே பிறப்பிக்க முடியுமென்றும், அவர்கள் அனைவருமே புதினுக்கு கீழே பணிபுரிபவர்கள் என்றும் அவர் கூறினார்.

ஆனால், நவால்னியின் நேரடி குற்றச்சாட்டு குறித்துப் பதிலளித்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர், நோவிசோக் நச்சு ரசாயன தாக்குதலுக்கு நவால்னி உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லையென்று தெரிவித்தார்.

ரஷ்யாவில் அவர் எந்நேரமும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற நிலையிலேயே இருந்தார். அவர் மீது நடத்தப்பட்ட நோவிசோக் நச்சுத் தாக்குதலுக்கு முன்பாகவே, பல முறை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். அடிக்கடி கைதும் செய்யப்பட்டார்.

அவர் மீது பலமுறை ரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒருமுறை அவர் மீது கிரீன் டை தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் கண்களில் கடும் எரிச்சலை அனுபவித்தார் நவால்னி.

 

சிறைவாசம்

அலக்ஸே நவால்னி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நீதிமன்றத்தில் அலக்ஸே நவால்னி

கடந்த 2013ஆம் ஆண்டே மோசடி வழக்கு ஒன்றில் இவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தேர்தலில் பங்கேற்பதற்காக அவர் சிறையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்.

இந்தத் தண்டனை நிறுத்தத்திற்கான வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், அதன் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டது. அதாவது 2020 காலகட்டத்தில் வழக்கமான காவல்நிலைய வருகையை அவர் கடைபிடிக்கவில்லை எனக் கூறி மீண்டும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கு எதிர்வாதமாக நவால்னியின் வழக்கறிஞர்கள், அவர் அந்த நேரத்தில்தான் நச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சையில் இருந்தார் என்பதை முன்வைத்தனர். ஆனாலும், 2021ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாஸ்கோ திரும்பிய உடனேயே அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நவால்னி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நவால்னிக்கு சிறைத் தண்டனையை 9 ஆண்டுகளாக அதிகரித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பின்னர், தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றுக்கு நிதியுதவி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு நவால்னிக்கு கூடுதலாக 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

 

இறுதி சிறை

அலக்ஸே நவால்னி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அலக்ஸே நவால்னியை விடுவிக்குமாறு நடத்தப்பட்ட போராட்டம்

கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட அலெக்ஸி நவால்னி, இறுதியாக ஆர்க்டிக் வட்டத்திலுள்ள ஆர்டிக் பீனல் காலனி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் சிறையிலேயே இறந்துவிட்டதாக, சிறைத்துறை செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய செய்தி முகமைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதுகுறித்து யமலோ-நெனெட்ஸ் பிராந்தியத்தில் உள்ள சிறைத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை நடைப்பயிற்சிக்குச் சென்று வந்த நவால்னி உடல் நலமற்றுக் காணப்பட்டதாகவும், திடீரென்று சுயநினைவற்று விழுந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவசர சிகிச்சை மருத்துவர்கள் வந்து உடனே சிகிச்சையளித்தும், பலனின்றி அவர் இறந்துவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய மருத்துவர்கள் முயன்று வருகிறார்கள் என சிறைத்துறை கூறியுள்ளதாக, டாஸ்(Tass) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நவால்னியின் மனைவி யூலியா, “இந்தச் செய்தியை நம்புவதா என்று தெரியவில்லை. இதுவரை அரசுத் தரப்பில் இருந்து மட்டுமே செய்திகள் வந்துள்ளன. புதின் அரசை நம்மால் நம்ப முடியாது. இந்தச் செய்தி மட்டும் உண்மை என்றால் இதற்கும், ரஷ்யாவிற்கு செய்தவற்றுக்கும் புதின் மற்றும் அவரது கூட்டாளிகளே பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cqqx7071k05o

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெர்யமனிதனுக்கு இது வேணும் காரணம் இவருக்கு 2021 ல விசம் வைத்துச் சாக்கட்டப்பார்த்து ஜேர்மனியில வைத்து வைத்தியம் செய்து காப்பாத்திவிட ஆற்ரையோ கயித்தை விழுங்கிப்போடு ரஸ்யாவுக்குத் திரும்பினால் போய்ச்சேரவேண்டியதுதான். 

முள்ளிவாய்க்கலுக்குள்ள கடைசிவரைக்கும் முண்டுபிடிச்சுக்கொண்டு நிண்டதா கேள்விப்பட்டன் அது உண்மையாக இருந்தால் அதைப்போலதான் இதுவும்.

கொஞ்சம் அந்தப்பக்கம் போய் தூர நிண்டு என்ன நடக்குது எண்டு பார்த்தால் இதுகளுக்காகவோ.... என இருவரும் காறித்துப்பியிருப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Elugnajiru said:

இந்தப் பெர்யமனிதனுக்கு இது வேணும் காரணம் இவருக்கு 2021 ல விசம் வைத்துச் சாக்கட்டப்பார்த்து ஜேர்மனியில வைத்து வைத்தியம் செய்து காப்பாத்திவிட ஆற்ரையோ கயித்தை விழுங்கிப்போடு ரஸ்யாவுக்குத் திரும்பினால் போய்ச்சேரவேண்டியதுதான். 

தேடிச் சோறுநிதந் தின்று
.....
வீழ்வே னென்றுநினைத் தாயோ?

          – மகாகவி பாரதியார்

  • கருத்துக்கள உறவுகள்

நவால்னியின் மரணத்திற்கு புட்டினே காரணம் - பைடன்

Published By: RAJEEBAN

17 FEB, 2024 | 12:26 PM
image

ரஸ்ய  ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்த எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின்  மரணத்திற்கு ரஸ்ய ஜனாதிபதியே காரணம் என  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.

புட்டினே இதற்கு முழுக்காரணம் என தெரிவித்துள்ள அவர் நான் கடவுளை நம்புகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எந்த தவறுகளையும் இழைக்கவேண்டாம் புட்டினே காரணம் என அவா தெரிவித்துள்ளார்.

நவால்னியின் துணிச்சலையும் மீண்டும் ரஸ்யாவிற்கு திரும்பும் முடிவையும் பைடன் பாராட்டியுள்ளார்.

புட்டின் அரசாங்கத்தின் ஊழல் வன்முறைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் அவர் துணிச்சலாக எதிர்த்தார் என தெரிவித்துள்ள பைடன் இதற்கு பதில் புட்டின் நவோல்னிக்கு நஞ்சூட்டினார், கைதுசெய்தார், போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குதாக்கல் செய்தார், சிறையில் அடைத்தார் அங்கும் அவர் தனிமையில் வைக்கப்பட்டிருந்தார் என பைடன்  தெரிவித்துள்ளார்.

சிறையிலும் அவர் உண்மையின் குரலாக ஒலித்தார் என பைடன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176606

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய இளைஞர்களின் குரலாக இருந்த நவால்னி மரணம்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/2/2024 at 03:36, விசுகு said:

தனி மனித சுதந்திரம் மற்றும் சர்வாதிகாரம் என்றால் என்ன என்று இங்கே பலருக்கும் இனியாவது புரியட்டும். 

புரியும் ஆனால் புரிந்த மாதிரி காட்டி கொள்ள மாட்டோம்....

புட்டினுடன் இணக்க அரசியல் செய்து தனது செல்வத்தை பெருக்கி ,உயிரையும் காப்பாற்றியிருக்க வேண்டும் ...பிழைக்க தெரியாத மனுசன்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

ரஸ்ய  ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்த எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின்  மரணத்திற்கு ரஸ்ய ஜனாதிபதியே காரணம் என  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.

சிவப்பு சிந்தனை உலகம் பூராவும் பரவ வேணும் என்ற சிந்தனையுடன் கடுமையாக உழைக்கும் ரஸ்யாவின் ஜனாதிபதியை, விமர்சிக்கிறோம் என்ற போர்வையில் உங்களின் செல்ல பிள்ளை உரசி பார்க்கலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

நவால்னியின் மரணத்திற்கு புட்டினே காரணம் - பைடன்

Published By: RAJEEBAN

17 FEB, 2024 | 12:26 PM
image

ரஸ்ய  ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்த எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின்  மரணத்திற்கு ரஸ்ய ஜனாதிபதியே காரணம் என  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.

புட்டினே இதற்கு முழுக்காரணம் என தெரிவித்துள்ள அவர் நான் கடவுளை நம்புகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எந்த தவறுகளையும் இழைக்கவேண்டாம் புட்டினே காரணம் என அவா தெரிவித்துள்ளார்.

நவால்னியின் துணிச்சலையும் மீண்டும் ரஸ்யாவிற்கு திரும்பும் முடிவையும் பைடன் பாராட்டியுள்ளார்.

புட்டின் அரசாங்கத்தின் ஊழல் வன்முறைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் அவர் துணிச்சலாக எதிர்த்தார் என தெரிவித்துள்ள பைடன் இதற்கு பதில் புட்டின் நவோல்னிக்கு நஞ்சூட்டினார், கைதுசெய்தார், போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குதாக்கல் செய்தார், சிறையில் அடைத்தார் அங்கும் அவர் தனிமையில் வைக்கப்பட்டிருந்தார் என பைடன்  தெரிவித்துள்ளார்.

சிறையிலும் அவர் உண்மையின் குரலாக ஒலித்தார் என பைடன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176606

இதனை செய்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதின் கடும் தொனியில் கூறி இருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்பம்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Cruso said:

இதனை செய்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதின் கடும் தொனியில் கூறி இருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்பம்.  

செய்வித்தவரே கடும் நடவடிக்கை எடுப்பாராம் ☹️
ஏற்கெனவே நவால்னியை தனது ஆயுட்காலம் வரை வெளியே வராமுடியாதபடி 19 வருடங்கள் புதின் உள்ளே போட்டிருந்தார்.  புதினிடம் இருந்து ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு மகாநாடு ஒன்றை பல நாடுகள் யேர்மனியில் நடத்திருந்தனவாம் அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு செய்தி சொல்ல புதின் இந்த படுகொலையை செய்திருக்கலாம் என்று தொலைகாட்சியில் சிலர் கருத்து தெரிவித்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை கையளிப்பதற்கு தயங்கும் ரஸ்ய அதிகாரிகள் - நவால்னியின் சகாக்கள் தெரிவிப்பு

Published By: RAJEEBAN   18 FEB, 2024 | 10:21 AM

image

சிறையில் உயிரிழந்த ரஸ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸே நவல்னியின் உடலை அவரது தாயரிடம் கையளிப்பதற்கு ரஸ்ய அதிகாரிகள் மறுக்கின்றனர் என நவால்னியின் நெருங்கிய சகாவொருவர் தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னரே உடலை கையளிப்போம் என ரஸ்ய அதிகாரிகள் நவால்னியின் தயாரிடம் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையில் நடந்துகொண்டிருந்த வேளை தீடிரென மயக்கமடைந்து வீழ்ந்து நவால்னி உயிரிழந்தார் என  ரஸ்ய அதிகாரிகள் அவரின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.

தீடீர் இறப்பு நோய் அறிகுறி காணப்பட்டுள்ளதாக ரஸ்ய அதிகாரிகள் நவால்னியின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் இது ஒரு தெளிவற்ற பொதுவான விளக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைக்கு அருகில் உள்ள நகரமொன்றிற்கு நவால்னியின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நவால்னியின் தாயாருக்கு தெரிவித்தனர் அவர் அங்கு சென்றவேளை பிரேதஅறை மூடப்பட்டிருந்தது என நவால்னியின் சகாக்கள் தெரிவித்துள்ளனர்.

முதலாவது பிரேத பரிசோதனை முழுமையானதாக காணப்படாததால் மற்றுமொரு பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவேண்டியுள்ளது என ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடயங்களை மறைப்பதற்காக வேண்டுமென்றே நவால்னியின் உடலை  அதிகாரிகள் மறைக்கின்றனர் என தெரிவித்துள்ள நவால்னியின் சகாக்கள்  அவரது உடலை உடனடியாக குடும்பத்தினரிடம் வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/176650

  • கருத்துக்கள உறவுகள்

கணவர் மறைந்த பின் அலெக்ஸி நவல்னியின் மனைவி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள முதல் பதிவு

Published By: DIGITAL DESK 3   19 FEB, 2024 | 10:46 AM

image

சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவல்னியின் மனைவி யூலியா நவல்னாயா, தனது கணவர் குறித்து சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

யூலியா நவல்னாயா தனது கணவர் உயிரிழந்து இரண்டு நாட்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அலெக்சி நவல்னியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், "நான் உன்னை காதலிக்கிறேன்" (I Love You) என ரஷ்ய மொழியில் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ், நவல்னியின் மரணத்தை உறுதிப்படுத்தினார். மேலும், அவரது உடலை உடனடியாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு கோரியதோடு, உடலை ஒப்படைக்க தாமதப்படுத்த ரஷ்ய அதிகாரிகள் பொய் உரைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

26.jpg

https://www.virakesari.lk/article/176725

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை இரகசிய இடத்தில் புதைப்பதற்கு அனுமதி தரவேண்டும் -- தாயாரை மிரட்டும் ரஸ்ய அதிகாரிகள்

Published By: RAJEEBAN   23 FEB, 2024 | 10:41 AM

image

ரஸ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின்  உடலை தான் பார்வையிட்டுள்ளமதாக தெரிவித்துள்ள அவரது தாயார் தனது மகனின் உடலை இரகசியமாக புதைப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என ரஸ்ய அதிகாரிகள் வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மகனின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத அறைக்கு என்னை கொண்டு சென்றனர் நான் ஆவணங்களில் கைச்சாத்திட்டேன் என லியுட்மிலா நவல்ன்யா தெரிவித்துள்ளார்.

சட்டத்தின்படி அதிகாரிகள் எனது மகனின் உடலை கையளிக்கவேண்டும், ஆனால் தற்போது என்னை மிரட்டுகின்றனர் உடலை வழங்கமறுக்கின்றனர் என நவால்னியின் தாயார் தெரிவித்துள்ளார்.

எனது மகனின் உடலை புதைப்பதற்கு அதிகாரிகள் நிபந்தனை விதிக்கின்றனர் உடலை புதைக்கும் நேரம் உட்பட தாங்கள் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர் என நவால்னியின் தாயார் தெரிவித்துள்ளார்.

மயானத்தின் தொலைதூர பகுதியில் உள்ள புதிய புதைகுழிக்கு என்னை கொண்டு சென்று இதுதான் எனது மகனின் புதைகுழி என காண்பிப்பதற்கு அவர்கள் முயல்கின்றனர்  அதிகாரிகள் என்னை அச்சுறுத்துகின்றனர் எனவும் நவால்னியின் தாயார் தெரிவித்துள்ளார்.

இரகசியமாக உடலை புதைப்பதற்கு இணங்காவிட்டால் உடலிற்கு ஏதாவது செய்துவிடுவோம் என கண்ணை நேரடியாக பார்த்து அவர்கள் தெரிவித்தனர் உங்களிற்கு போதிய நேரம் இல்லை உடல் பழுதடைகின்றது என அவர்கள் தெரிவித்தனர் எனவும் நவால்னியின் தாயார் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177101

  • கருத்துக்கள உறவுகள்

அலெக்சி நவால்னி இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (47), மீது இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. இதனால் கடந்த 2013 இல் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் அலெக்சி நவால்னிக்கு மொத்தம் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்களில் செய்தி வெளியானது. அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

2.jpg

உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள ஜனாதிபதி புட்டினுக்கு அலெக்சி நவால்னியின் மரணம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, நவால்னியின் உடலை ரஷ்ய அரசு தங்களிடம் ஒப்படைக்க மறுப்பதாக அவரது மனைவி, தாயார் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, நவால்னியின் செய்தி தொடர்பாளர் கிரா யார்மிஷ் கூறுகையில், மாஸ்கோவின் தென்கிழக்கு மரியினோ மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு நடைபெறும். பின் அருகில் உள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/293882

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு நாட்டிற்கும்  அதற்க்கென ஒரு கொள்கை,கட்டுப்பாடு உண்டு. அதை மீறுபவர்கள்  சனநாயக நாடாக இருந்தாலும் சரி சர்வாதிகார நாடாக இருந்தாலும் சரி சட்டங்கள் தண்டனைகள் பாயும்.

யூலியா ஜேர்மனியில் நடந்த பாதுகாப்பு உச்சி மாநாட்டிற்கு வரவேண்டிய அவசியமென்ன? அதுவும் கணவர் உயிர் பிரிந்த நேரத்தில்.......??????

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.