Jump to content

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் உள்ள காழ்ப்புணர்வால் உங்கள் கற்பனையில் தோன்றுவதை யதார்த்தம்  என்று நினைத்து எழுதுகிறீர்கள்.

மேலே இணைத்த கட்டுரையையாவது வாசித்திருக்கலாம்.

என‌து பார்வையில் யாழில் சாமி தாத்தா க‌ற்ப‌னையில் ஏதும் எழுதின‌ மாதிரி தெரிய‌ல‌ இணைய‌வ‌ன் அண்ணா.............யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு சாமி தாத்தாவின் எழுத்தை விரும்பி வாசித்த‌ உற‌வுக‌ளில் நானும் ஒருவ‌ன்....................அத‌ன் அடிப்ப‌டையில் தான் இதை எழுதுகிறேன்.................சாமி தாத்தா மூளைய க‌ச‌க்கி எழுதின‌ ப‌திவுக‌ள் நிறைய‌ இருக்கு யாழில்....................அப்ப‌டி சாமி தாத்தா எழுதின‌ ஒரு ப‌திவை 2012க‌ளில் என்ற‌ ந‌ண்ப‌னுக்கு சொல்லி இருந்தேன் அவ‌னுக்கு அது பிடிச்சு போய் ம‌ச்சி ம‌று ப‌டியும் சொல்ல‌டா என்று என்னிட‌ம் அன்போடு கேட்டான் நான் அதை மீண்டும் அதை சொல்லி காட்டினேன்..............ந‌ண்ப‌ண் கேட்டான் எப்ப‌டி இதெல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறாய் என்று.............உண்மையை மூடி ம‌றைக்க‌ கூடாது நான் ந‌ண்ப‌னுக்கு சொன்னேன் இது யாழ்க‌ளம் என்ற‌ க‌ருத்துக் க‌ளத்தில் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் எழுதின‌து என்று.............அந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் சாமி தாத்தா கூட‌ நான் போனில் தொட‌ர்வில் இருந்த‌து இல்லை........................இப்ப‌டி ப‌ல‌ இருக்கு சாமி தாத்தாவை ப‌ற்றி சொல்ல‌🙏..................

Link to comment
Share on other sites

  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்

திமுக கூட்டணியில் கமல்ஹாசன்: தேர்தல் பிரச்சாரம் எப்போது?

SelvamMar 24, 2024 17:36PM
Screenshot-2024-03-24-173059.jpg

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மார்ச் 29-ஆம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று (மார்ச் 24) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “ரிமோட் எடுத்து டிவியில அடிச்சீங்களே, அந்த ஆளு தான இப்போம் திமுக கூட்டணிக்கு போகுறீங்கன்னு சொல்றாங்க…

ரிமோட் இன்னும் என் கையில தான் இருக்கிறது. டிவியும் அங்கே தான் இருக்கிறது. நம் வீட்டு டிவி, நம் வீட்டு ரிமோட். ஆனால், அந்த டிவிக்கான கரண்ட்டையும், ரிமோட்டுக்கான பேட்ரியையும் மத்தியில் ஒரு சக்தி உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

இதை நான் இனிமேல் எறிந்தால் என்ன? வைத்திருந்தால் என்ன? அந்த மாதிரி செய்கைகளுக்கு இனி அர்த்தமே இல்லாமல் போய்விடும். நான் ஒரு தனிப்பட்ட மனிதரை என்றுமே தாக்கியதில்லை.

அரசியல் களத்தில் தன் எதிரி யார் என்பதை முடிவு செய்தால் தான் வெற்றி நிச்சயம். நான் என் எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன். என் அரசியல் எதிரி என்றென்றும் நினைவு தெரிந்ததில் இருந்து நினைவு போகும் வரை சாதியம் தான். சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் எத்தனை பேர் விலங்கிடப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சார பயண திட்டம் வெளியாகியுள்ளது.

Screenshot-2024-03-24-150922.png

அதன்படி,

மார்ச் 29 – ஈரோடு

மார்ச் 30 – சேலம்

ஏப்ரல் 2 – திருச்சி

ஏப்ரல் 3 – சிதம்பரம்

ஏப்ரல் 6 – ஸ்ரீபெரும்பதூர், சென்னை

ஏப்ரல் 7 – சென்னை

ஏப்ரல் 10 – மதுரை

ஏப்ரல் 11 – தூத்துக்குடி

ஏப்ரல் 14 – திருப்பூர்

ஏப்ரல் 15 – கோவை

ஏப்ரல் 16 – பொள்ளாச்சி

https://minnambalam.com/political-news/kamal-haasan-starts-election-campaign-dmk-alliance/

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, கிருபன் said:

க‌ம‌ல் பேசின‌ பேச்சு என்ன‌ தொலைக் காட்சியை டாச் ல‌யிட்டால் உடைத்து போட்டு சொன்ன‌ வார்த்தை என்ன‌ ஹா ஹா.............இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ளால் தான் இலைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அர‌சில் ஒரு சாக்க‌டை என்று ஒதுங்குதுக‌ள்😁.....................

Edited by பையன்26
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மார்ச் 29-ஆம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இவரது கட்சி சார்பில் இவரா வேறு யாராவதா போடடியிடுகிறார்கள்?

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

எனக்கு ஏன் தனிப்பட்ட காழ்ப்புணர்வு வரவேண்டும். நான் திராவிடனுமல்ல ஆரியனும் அல்ல. நான் ஒரு தமிழன். நாடு முன்னேறி என்ன பயன். எல்லாம் சாதிவாரியாக இருக்கும் போது திராவிடம் ஏன் என்றுதான் கேட்கின்றேன்.
உங்களுக்கு நேரம் இருந்தால் திராவிட  கொள்கைகள் என்னவென்பதை பத்து வரியில் எழுதிவிடுங்கள். பலருக்கு உதவியாக இருக்கும்.

அநாவசிய திசைதிருப்பல்கள் வேண்டாம். தமிழ்நாடு 100 வருடம் பிந்தங்கியுள்ளது என்று ஏன் எழுதினீர்கள் என்பதை விளக்கினால் நீங்கள் அரசியல் அறிஞர் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். முடியாவிட்டால் பதில் தரவேண்டாம். பொய்யான கற்பனைத் தகவல்கள் யாழுக்கு நல்லதல்ல.

  • Thanks 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக vs பாஜக: தமிழ்நாட்டில் முக்குலத்தோர் வாக்குகள் யாருக்கு கிடைக்கும்?

அதிமுக vs பாஜக

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டில் இரண்டாண்டு இடைவெளியில் தேர்தல் கூட்டணி கணக்குகள் முற்றிலுமாக மாறிப் போய்விட்டிருக்கின்றன. 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் ஒரே அணியாக இருந்த அதிமுகவும், பாஜகவும் தற்போது தனித்தனியாக களம் காண்கின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட்டு 5.38% வாக்குகள் பெற்ற டிடிவி தினகரனும், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர் செல்வமும் இந்த முறை பாஜக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளனர். இவர்கள் மொத்தமாக மூன்றே தொகுதிகளில் மட்டுமே களமிறங்குகின்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கடந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் பெற்ற வாக்குகளில் கணிசமானவை முக்குலத்தோர் சமுதாய வாக்குகள். இந்த முறை அந்த வாக்குகள் தினகரன், ஓ.பி.எஸ். மூலமாக பாஜக கூட்டணிக்குச் கிடைக்குமா அல்லது முக்குலத்தோர் கட்சி என்று அரசியல் அரங்கில் பேசப்படும் அளவுக்கு அதிமுக வாக்கு வங்கியாக இருந்த அவர்கள் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு வாக்களிப்பார்களா?

தமிழ்நாட்டின் தேர்தல் களம்

தமிழ்நாட்டின் தேர்தல் களம் இந்த முறை நான்கு முனைப் போட்டியாக அமைந்திருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, ஐயுஎம்எல், கொ.நா.ம.தே.க கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும், பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தாமாக, புதிய நீதி கட்சி, ஐ.ஜே.கே ஆகிய கட்சிகளும் உள்ளன. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்தே போட்டியிடுகிறது.

வட தமிழ்நாட்டில் வன்னியர் சமூக வாக்கு வங்கியை கணிசமாக கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும், தென்மாவட்டங்களில் பரவலாக உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினரிடையே செல்வாக்கு பெற்றவர்களாக கருதப்படும் தினகரன், ஓபி.எஸ். ஆகியோரும் வலு சேர்ப்பார்கள் என்று பாஜக கருதுகிறது.

முக்குலத்தோர் சமூக மக்கள் மதுரை, தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக வாழ்கின்றனர்.

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளைப் பொறுத்தவரை அதிமுகவிற்கே முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம். இதற்கான பின்னணியில் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் அந்த சமூகத்தைச் சேர்ந்த வி.கே.சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முக்கியப் பொறுப்புகளில் இருந்ததே காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பாஜக Vs அதிமுக

பட மூலாதாரம்,TTV DHINAKARAN FACEBOOK PAGE

அமமுகவிற்கு முக்குலத்தோர் வாக்குகள் கிடைத்ததன் பின்னணி என்ன?

கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றார்.

பின்னர் அவர் ராஜினாமா செய்ய, ஜெயலலிதாவின் தோழியான வி.கே சசிகலா முதலமைச்சராக வேண்டி, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். அடுத்த ஓரிரு நாட்களில் சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பு வர அவர் கைது செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்களால், எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு வி.கே.சசிகலா சிறைக்குச் சென்றார். அதிமுகவில் டிடிவி தினகரன் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஓரணியில் சேர்ந்து டிடிவி தினகரனை அதிமுகவை விட்டு வெளியேற்ற, 2018-ம் ஆண்டு அவர் அமமுக என்ற தனிக்கட்சி கண்டார்.

காலச் சக்கரத்தின் சுழற்சியில் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசமாகிட, டிடிவி தினகரனோ அதிமுகவை மீட்போம் என்ற முழக்கத்துடன் அமமுகவை நடத்துகிறார். மறுபுறம் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து தினகரனை வெளியேற்றிய ஓ.பன்னீர்செல்வமும் அதே வழியில் அதிமுகவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பாஜக Vs அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமமுகவால் அதிமுகவிற்கு சரிந்த தென் மாவட்ட வாக்கு வங்கி

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி 38 தொகுதிகளில் களமிறங்கியது. அதுவரையிலும் அதிமுகவை ஆதரித்து வந்த முக்குலத்தோர் சமுதாய மக்களின் ஆதரவு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கிடைக்க, அக்கட்சி கணிசமான வாக்குகளை பெற்றது.

அந்தத் தேர்தலில் அமமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லையென்றாலும் 22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. 20 தொகுதிகளில் அக்கட்சி மூன்றாமிடம் பெற்றது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளில் 5.38% வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

திருச்சி, தஞ்சை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகரில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இது அதிமுகவின் வெற்றியை தடுத்துவிட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறினர்.

பாஜக Vs அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமமுக வாக்கு சரிவு, ஓ.பி.எஸ் நீக்கம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரனின் செயல்பாட்டில் அமமுகவினர் அதிருப்தியடைந்தனர். அவரை நம்பி அதிமுக எம்.எல்.ஏ பதவியை விட்டு வந்தவர்கள் மீண்டும் திமுக, அதிமுகவை நோக்கி நகரத் தொடங்கினர்.

அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இதனால் கடந்த 2021இல் நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமமுகவின் வாக்கு வங்கி 5.5 சதவிகிதத்திலிருந்து 2.5 ஆக குறைந்தது. அமமுகவின் கணிசமான வாக்குகள் திமுகவிடம் சென்றன.

சட்டமன்ற தேர்தல் தோல்வி அதிமுகவில் கடுமையாக எதிரொலித்தது. அடுத்தடுத்த மாற்றங்களால் கட்சியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேற்றப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இன்றும் உரிமை கோரும் ஓ.பி.எஸ்.சால் அக்கட்சியின் கொடி மற்றும் சின்னத்தைக் கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு நீதிமன்ற உத்தரவு அவரை கட்டிப் போட்டிருக்கிறது.

பாஜக Vs அதிமுக

பட மூலாதாரம்,ANNAMALAI/FACEBOOK

தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்ததா பாஜக?

பாஜக கூட்டணியில் பாஜக 19 தொகுதிகள், பாமகவிற்கு 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3, அமமுகவிற்கு 2, ஓ.பி.எஸுக்கு 1 (சுயேச்சை சின்னம்), புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 4 கட்சிகளும் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.

பாஜக Vs அதிமுக

பட மூலாதாரம்,ARUN KARTHICK

அதிமுக vs பாஜக

திருச்சி, தஞ்சை மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த முறை அமமுக ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்ற 8 தொகுதிகளில் அதிமுக களமிறங்குகிறது. இதில் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் பாஜகவுடனும், திருச்சி, தேனி, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் தினகரன், ஓ.பி.எஸூக்கு எதிராகவும் அதிமுகமோதுகிறது

இத இடத்தில்தான் ஒரு கேள்வி எழுகிறது. பாஜக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முக்குலத்தோர் வாக்குகள் கிடைக்குமா அல்லது அதிமுகவை நோக்கி அந்த வாக்குகள் மீண்டும் திரும்புமா?

பாஜக Vs அதிமுக

பட மூலாதாரம்,PRIYAN

படக்குறிப்பு,

மூத்த பத்திரிகையாளர் பிரியன்

முக்குலத்தோர் வாக்குகள் யாருக்கு?

பாஜக கூட்டணிக்கு முக்குலத்தோர் வாக்குகள் செல்லாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும்போது,

“தமிழ்நாட்டில் 6-7% வரையிலான முக்குலத்தோர் வாக்கு வங்கியிருக்கிறது. அதில் 75% அதிமுகவிற்கே கிடைத்து வந்தJ. இதற்கு முக்கிய காரணம் அந்த சமூகத்தைச் சேர்ந்த சசிகலா, டிடிவி, ஓ.பி.எஸூக்கு கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்.

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்ட அதேநேரத்தில், பாஜகவை எதிர்த்த சசிகலாவும் டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதன் அடிப்படையில் முக்குலத்தோரின் வாக்குகள் சசிகலா, தினகரனை நோக்கியே இருந்தன.

இதன் காரணமாகவே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் வாக்குகள் பெருவாரியாக அமமுக பக்கம் சாய்ந்தன. அந்த தேர்தலில் தினகரன் ஐந்தரை சதவீதம் வாக்குகளை பெற்று இருந்தார்.

அதேநேரத்தில், ஏழு உட்பிரிவு சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கலாம் என பாஜக அரசு சட்டம் கொண்டு வந்தது. தங்களது சமூகத்தை பாஜக கண்டு கொள்ளவில்லை என்ற ஒரு உணர்வும் அந்த சமூக மக்களிடையே இருந்து வருகிறது.

இந்த நிலையில் டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்தாலும் அந்த சமூக வாக்குகள் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளன” என்றார்.

பாஜக Vs அதிமுக

டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் முக்குலத்தோர்

தொடர்ந்து பேசிய அவர் “முக்குலத்தோருக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் தினகரனுக்கு எதிரான ஒரு மனநிலை உருவாகி இருக்கிறது.

எனவே, இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கான பிரதிநிதியாக தினகரனை பார்க்க மட்டார்கள். அதே சமயம் இந்த வாக்குகள் அதிமுகவிற்கும் செல்லாது. அதிமுக முன்பு முக்குலத்தோரின் ஆதரவு நிலையில் உள்ள கட்சியாக பார்க்கப்பட்டது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி வருகைக்குப் பிறகு அது கொங்கு வேளாளர் அதிக்கம் நிறைந்ததாக கட்சியாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த முறை வாக்குகள் அனைத்தும் பாஜக கூட்டணிக்கும் அதிமுகவிற்கும் செல்லாது. மாறாக அது திமுகவுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன”, என்றார்.

சாதி ரீதியாக வாக்குகள் செல்லாது

மக்களவைத் தேர்தலில் சாதி ரீதியாக வாக்குகள் செல்லாது என்று கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர மணி. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர்,

“தற்பொழுது நடக்க இருப்பது நாடாளுமன்ற தேர்தல். எனவே, சாதி பார்த்து வாக்களிக்கும் மனநிலையில் மக்கள் இருக்க மாட்டார்கள். குறிப்பாக தினகரன், ஓபிஎஸ் என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கட்சி ஆகியவற்றை பார்ப்பார்கள். சிலர் சாதி சார்ந்து வாக்களிக்க முயன்றாலும் அதற்கேற்ப அந்த கட்சியினர் அந்த குறிப்பிட்ட தொகுதியில் அந்த சாதியைச் சேர்ந்த வேட்பாளரையே நிறுத்தலாம்.

கட்சி பிடிக்கவில்லை என்றாலும் கூட சாதியைச் சார்ந்த நபர் நிற்பதால் அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும். இந்த முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் பாஜக கூட்டணி நோக்கி நகரும் என கூற முடியாது.

தினகரன் 2019இல் இருந்த அவரது நிலை தற்பொழுது இல்லை. அவர் பாஜகவுடன் இணைந்திருப்பதால் அவருக்கு எந்த அளவிலான வாக்குகள் செல்வது என்பதே கேள்விக்குறியாகவே இருக்கும்.

எனவே, இந்த தேர்தலில் குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் குறிப்பிட்ட கட்சிக்கு செல்லும் என கூற முடியாது. வாக்காளர்கள் பரவலாக பல்வேறு காரணிகள் அடிப்படையில் தங்களது வாக்கை செலுத்த உள்ளனர்”, என்றார்.

பாஜக Vs அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

முக்குலத்தோர் வாக்கு வங்கியை நிரூபிக்கவே ஓபிஎஸும், தினகரனும் களமிறங்கி இருப்பதாக கூறுகிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. இருகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர்,

"எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியதிலிருந்து, முக்குலத்தோர் சமுதாயத்துக்கு எதிரான மனநிலையில் கட்சி இருப்பதாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

இதனால் டிடிவி தினகரன் ஓபிஎஸ்-க்கு அவர்களின் வாக்குகள் அதிகம் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. பல தொகுதிகளில் நின்றால் வாக்குகள் சிதறக்கூடும் என்பதற்காகவே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக தினகரன் முடிவெடுத்து இருந்தார்

அதனால் தான், நான் ஒன்று கேட்டேன் பாஜக இரண்டு தொகுதி கொடுத்ததாக அவர் தெரிவித்தார். ஓபிஎஸ், டிடிவி தினகரனும் முக்குலத்தோர் சமூகம் அதிகம் உள்ள பகுதிகளில் களமிறங்கி அதிமுகவிற்கு கடும் போட்டியை கொடுப்பார்கள்.

சில இடங்களில் அதிமுகவிற்கு டெபாசிட் கூட இழக்க வாய்ப்புகள் உள்ளன. முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவிற்கு செல்லாது. மாறாக திமுக, நாம் தமிழர் என பல்வேறு கட்சிகளுக்கு அது பிரியும்", என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c3ge1g383lro

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

நீங்கள் அரசியல் அறிஞர் என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

எதற்காக இந்த சீண்டல்? 😠
நான் என்றாவது என்னை நானே உயர்த்தி புகழ்ந்து எழுதியிருக்கின்றேனா? அல்லது நான் அந்தப்படிப்பு இந்தப்படிப்பு படித்தேன் என தம்பட்டம் அடித்தேனா? இது கருத்துக்களம். எனக்கு தெரிந்ததை அறிந்ததை இங்கே எழுதுகின்றேன். அதை மறுதலிக்க அல்லது அகற்ற உங்களுக்கு அதிகாரம் உண்டு.நான் எழுதுவதின் உண்மை பொய் பற்றி வாசிப்பர்களுக்கும் தெரியும்.

அதை விடுத்து நக்கல் நையாண்டிகள் தேவையற்றது. 👈🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இவரது கட்சி சார்பில் இவரா வேறு யாராவதா போடடியிடுகிறார்கள்?

இவரின் கட்சி சார்பாக எவரும் போட்டியிடவில்லை. இவரின் கட்சிக்கு வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. ஒரு ராஜ்யசபா இடம் பின்னர் வழங்கப்படும் என்பதே ஒப்பந்தம்.

நாட்டு நலனுக்காக தான் இந்த முடிவை எடுத்ததாக கமல் பின்னர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். 

அரசியலை விட்டு விட்டு, இன்னும் ஒரு நான்கு நல்ல படங்களையாவது நடித்து விட்டு போயிருக்கலாம். அவை நின்று இவர் பெயர் சொல்லியிருக்கும்.....

  • Haha 2
Link to comment
Share on other sites

8 minutes ago, குமாரசாமி said:

எதற்காக இந்த சீண்டல்? 😠
நான் என்றாவது என்னை நானே உயர்த்தி புகழ்ந்து எழுதியிருக்கின்றேனா? அல்லது நான் அந்தப்படிப்பு இந்தப்படிப்பு படித்தேன் என தம்பட்டம் அடித்தேனா? இது கருத்துக்களம். எனக்கு தெரிந்ததை அறிந்ததை இங்கே எழுதுகின்றேன். அதை மறுதலிக்க அல்லது அகற்ற உங்களுக்கு அதிகாரம் உண்டு.நான் எழுதுவதின் உண்மை பொய் பற்றி வாசிப்பர்களுக்கும் தெரியும்.

அதை விடுத்து நக்கல் நையாண்டிகள் தேவையற்றது. 👈🏽

நல்லது. தனிப்பட்ட காழ்ப்புணர்வினால் தமிழ்நாடு பின் தங்கியுள்ளது என்ற தவறான கருத்தை எழுதியதை ஒப்புக் கொண்டதற்காக. 

இது தொடர்பாக மேற்கொண்டு விவாதிக்க எதுவுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அதிமுக vs பாஜக: தமிழ்நாட்டில் முக்குலத்தோர் வாக்குகள் யாருக்கு கிடைக்கும்?

அதிமுக vs பாஜக

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டில் இரண்டாண்டு இடைவெளியில் தேர்தல் கூட்டணி கணக்குகள் முற்றிலுமாக மாறிப் போய்விட்டிருக்கின்றன. 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் ஒரே அணியாக இருந்த அதிமுகவும், பாஜகவும் தற்போது தனித்தனியாக களம் காண்கின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட்டு 5.38% வாக்குகள் பெற்ற டிடிவி தினகரனும், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர் செல்வமும் இந்த முறை பாஜக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளனர். இவர்கள் மொத்தமாக மூன்றே தொகுதிகளில் மட்டுமே களமிறங்குகின்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கடந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் பெற்ற வாக்குகளில் கணிசமானவை முக்குலத்தோர் சமுதாய வாக்குகள். இந்த முறை அந்த வாக்குகள் தினகரன், ஓ.பி.எஸ். மூலமாக பாஜக கூட்டணிக்குச் கிடைக்குமா அல்லது முக்குலத்தோர் கட்சி என்று அரசியல் அரங்கில் பேசப்படும் அளவுக்கு அதிமுக வாக்கு வங்கியாக இருந்த அவர்கள் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு வாக்களிப்பார்களா?

தமிழ்நாட்டின் தேர்தல் களம்

தமிழ்நாட்டின் தேர்தல் களம் இந்த முறை நான்கு முனைப் போட்டியாக அமைந்திருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, ஐயுஎம்எல், கொ.நா.ம.தே.க கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும், பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தாமாக, புதிய நீதி கட்சி, ஐ.ஜே.கே ஆகிய கட்சிகளும் உள்ளன. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்தே போட்டியிடுகிறது.

வட தமிழ்நாட்டில் வன்னியர் சமூக வாக்கு வங்கியை கணிசமாக கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும், தென்மாவட்டங்களில் பரவலாக உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினரிடையே செல்வாக்கு பெற்றவர்களாக கருதப்படும் தினகரன், ஓபி.எஸ். ஆகியோரும் வலு சேர்ப்பார்கள் என்று பாஜக கருதுகிறது.

முக்குலத்தோர் சமூக மக்கள் மதுரை, தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக வாழ்கின்றனர்.

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளைப் பொறுத்தவரை அதிமுகவிற்கே முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம். இதற்கான பின்னணியில் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் அந்த சமூகத்தைச் சேர்ந்த வி.கே.சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முக்கியப் பொறுப்புகளில் இருந்ததே காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பாஜக Vs அதிமுக

பட மூலாதாரம்,TTV DHINAKARAN FACEBOOK PAGE

அமமுகவிற்கு முக்குலத்தோர் வாக்குகள் கிடைத்ததன் பின்னணி என்ன?

கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றார்.

பின்னர் அவர் ராஜினாமா செய்ய, ஜெயலலிதாவின் தோழியான வி.கே சசிகலா முதலமைச்சராக வேண்டி, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். அடுத்த ஓரிரு நாட்களில் சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பு வர அவர் கைது செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்களால், எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு வி.கே.சசிகலா சிறைக்குச் சென்றார். அதிமுகவில் டிடிவி தினகரன் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஓரணியில் சேர்ந்து டிடிவி தினகரனை அதிமுகவை விட்டு வெளியேற்ற, 2018-ம் ஆண்டு அவர் அமமுக என்ற தனிக்கட்சி கண்டார்.

காலச் சக்கரத்தின் சுழற்சியில் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசமாகிட, டிடிவி தினகரனோ அதிமுகவை மீட்போம் என்ற முழக்கத்துடன் அமமுகவை நடத்துகிறார். மறுபுறம் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து தினகரனை வெளியேற்றிய ஓ.பன்னீர்செல்வமும் அதே வழியில் அதிமுகவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பாஜக Vs அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமமுகவால் அதிமுகவிற்கு சரிந்த தென் மாவட்ட வாக்கு வங்கி

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி 38 தொகுதிகளில் களமிறங்கியது. அதுவரையிலும் அதிமுகவை ஆதரித்து வந்த முக்குலத்தோர் சமுதாய மக்களின் ஆதரவு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கிடைக்க, அக்கட்சி கணிசமான வாக்குகளை பெற்றது.

அந்தத் தேர்தலில் அமமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லையென்றாலும் 22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. 20 தொகுதிகளில் அக்கட்சி மூன்றாமிடம் பெற்றது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளில் 5.38% வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

திருச்சி, தஞ்சை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகரில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இது அதிமுகவின் வெற்றியை தடுத்துவிட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறினர்.

பாஜக Vs அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமமுக வாக்கு சரிவு, ஓ.பி.எஸ் நீக்கம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரனின் செயல்பாட்டில் அமமுகவினர் அதிருப்தியடைந்தனர். அவரை நம்பி அதிமுக எம்.எல்.ஏ பதவியை விட்டு வந்தவர்கள் மீண்டும் திமுக, அதிமுகவை நோக்கி நகரத் தொடங்கினர்.

அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இதனால் கடந்த 2021இல் நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமமுகவின் வாக்கு வங்கி 5.5 சதவிகிதத்திலிருந்து 2.5 ஆக குறைந்தது. அமமுகவின் கணிசமான வாக்குகள் திமுகவிடம் சென்றன.

சட்டமன்ற தேர்தல் தோல்வி அதிமுகவில் கடுமையாக எதிரொலித்தது. அடுத்தடுத்த மாற்றங்களால் கட்சியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேற்றப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இன்றும் உரிமை கோரும் ஓ.பி.எஸ்.சால் அக்கட்சியின் கொடி மற்றும் சின்னத்தைக் கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு நீதிமன்ற உத்தரவு அவரை கட்டிப் போட்டிருக்கிறது.

பாஜக Vs அதிமுக

பட மூலாதாரம்,ANNAMALAI/FACEBOOK

தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்ததா பாஜக?

பாஜக கூட்டணியில் பாஜக 19 தொகுதிகள், பாமகவிற்கு 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3, அமமுகவிற்கு 2, ஓ.பி.எஸுக்கு 1 (சுயேச்சை சின்னம்), புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 4 கட்சிகளும் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.

பாஜக Vs அதிமுக

பட மூலாதாரம்,ARUN KARTHICK

அதிமுக vs பாஜக

திருச்சி, தஞ்சை மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த முறை அமமுக ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்ற 8 தொகுதிகளில் அதிமுக களமிறங்குகிறது. இதில் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் பாஜகவுடனும், திருச்சி, தேனி, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் தினகரன், ஓ.பி.எஸூக்கு எதிராகவும் அதிமுகமோதுகிறது

இத இடத்தில்தான் ஒரு கேள்வி எழுகிறது. பாஜக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முக்குலத்தோர் வாக்குகள் கிடைக்குமா அல்லது அதிமுகவை நோக்கி அந்த வாக்குகள் மீண்டும் திரும்புமா?

பாஜக Vs அதிமுக

பட மூலாதாரம்,PRIYAN

படக்குறிப்பு,

மூத்த பத்திரிகையாளர் பிரியன்

முக்குலத்தோர் வாக்குகள் யாருக்கு?

பாஜக கூட்டணிக்கு முக்குலத்தோர் வாக்குகள் செல்லாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும்போது,

“தமிழ்நாட்டில் 6-7% வரையிலான முக்குலத்தோர் வாக்கு வங்கியிருக்கிறது. அதில் 75% அதிமுகவிற்கே கிடைத்து வந்தJ. இதற்கு முக்கிய காரணம் அந்த சமூகத்தைச் சேர்ந்த சசிகலா, டிடிவி, ஓ.பி.எஸூக்கு கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்.

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்ட அதேநேரத்தில், பாஜகவை எதிர்த்த சசிகலாவும் டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதன் அடிப்படையில் முக்குலத்தோரின் வாக்குகள் சசிகலா, தினகரனை நோக்கியே இருந்தன.

இதன் காரணமாகவே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் வாக்குகள் பெருவாரியாக அமமுக பக்கம் சாய்ந்தன. அந்த தேர்தலில் தினகரன் ஐந்தரை சதவீதம் வாக்குகளை பெற்று இருந்தார்.

அதேநேரத்தில், ஏழு உட்பிரிவு சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கலாம் என பாஜக அரசு சட்டம் கொண்டு வந்தது. தங்களது சமூகத்தை பாஜக கண்டு கொள்ளவில்லை என்ற ஒரு உணர்வும் அந்த சமூக மக்களிடையே இருந்து வருகிறது.

இந்த நிலையில் டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்தாலும் அந்த சமூக வாக்குகள் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளன” என்றார்.

பாஜக Vs அதிமுக

டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் முக்குலத்தோர்

தொடர்ந்து பேசிய அவர் “முக்குலத்தோருக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் தினகரனுக்கு எதிரான ஒரு மனநிலை உருவாகி இருக்கிறது.

எனவே, இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கான பிரதிநிதியாக தினகரனை பார்க்க மட்டார்கள். அதே சமயம் இந்த வாக்குகள் அதிமுகவிற்கும் செல்லாது. அதிமுக முன்பு முக்குலத்தோரின் ஆதரவு நிலையில் உள்ள கட்சியாக பார்க்கப்பட்டது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி வருகைக்குப் பிறகு அது கொங்கு வேளாளர் அதிக்கம் நிறைந்ததாக கட்சியாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த முறை வாக்குகள் அனைத்தும் பாஜக கூட்டணிக்கும் அதிமுகவிற்கும் செல்லாது. மாறாக அது திமுகவுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன”, என்றார்.

சாதி ரீதியாக வாக்குகள் செல்லாது

மக்களவைத் தேர்தலில் சாதி ரீதியாக வாக்குகள் செல்லாது என்று கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர மணி. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர்,

“தற்பொழுது நடக்க இருப்பது நாடாளுமன்ற தேர்தல். எனவே, சாதி பார்த்து வாக்களிக்கும் மனநிலையில் மக்கள் இருக்க மாட்டார்கள். குறிப்பாக தினகரன், ஓபிஎஸ் என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கட்சி ஆகியவற்றை பார்ப்பார்கள். சிலர் சாதி சார்ந்து வாக்களிக்க முயன்றாலும் அதற்கேற்ப அந்த கட்சியினர் அந்த குறிப்பிட்ட தொகுதியில் அந்த சாதியைச் சேர்ந்த வேட்பாளரையே நிறுத்தலாம்.

கட்சி பிடிக்கவில்லை என்றாலும் கூட சாதியைச் சார்ந்த நபர் நிற்பதால் அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும். இந்த முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் பாஜக கூட்டணி நோக்கி நகரும் என கூற முடியாது.

தினகரன் 2019இல் இருந்த அவரது நிலை தற்பொழுது இல்லை. அவர் பாஜகவுடன் இணைந்திருப்பதால் அவருக்கு எந்த அளவிலான வாக்குகள் செல்வது என்பதே கேள்விக்குறியாகவே இருக்கும்.

எனவே, இந்த தேர்தலில் குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் குறிப்பிட்ட கட்சிக்கு செல்லும் என கூற முடியாது. வாக்காளர்கள் பரவலாக பல்வேறு காரணிகள் அடிப்படையில் தங்களது வாக்கை செலுத்த உள்ளனர்”, என்றார்.

பாஜக Vs அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

முக்குலத்தோர் வாக்கு வங்கியை நிரூபிக்கவே ஓபிஎஸும், தினகரனும் களமிறங்கி இருப்பதாக கூறுகிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. இருகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர்,

"எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியதிலிருந்து, முக்குலத்தோர் சமுதாயத்துக்கு எதிரான மனநிலையில் கட்சி இருப்பதாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

இதனால் டிடிவி தினகரன் ஓபிஎஸ்-க்கு அவர்களின் வாக்குகள் அதிகம் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. பல தொகுதிகளில் நின்றால் வாக்குகள் சிதறக்கூடும் என்பதற்காகவே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக தினகரன் முடிவெடுத்து இருந்தார்

அதனால் தான், நான் ஒன்று கேட்டேன் பாஜக இரண்டு தொகுதி கொடுத்ததாக அவர் தெரிவித்தார். ஓபிஎஸ், டிடிவி தினகரனும் முக்குலத்தோர் சமூகம் அதிகம் உள்ள பகுதிகளில் களமிறங்கி அதிமுகவிற்கு கடும் போட்டியை கொடுப்பார்கள்.

சில இடங்களில் அதிமுகவிற்கு டெபாசிட் கூட இழக்க வாய்ப்புகள் உள்ளன. முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவிற்கு செல்லாது. மாறாக திமுக, நாம் தமிழர் என பல்வேறு கட்சிகளுக்கு அது பிரியும்", என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c3ge1g383lro

ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகின்றார். ராமநாதபுரம் முக்குலத்தோர் அதிகமான தொகுதி அல்ல என்றே நினைக்கின்றேன். மதுரை, தேனீ போன்றவையே முக்குலத்தோர் செறிந்து வாழும் இடங்கள்.

தர்மயுத்தம் என்று ஆரம்பித்து, கடைசியில் இவரின் நிலை இப்படி ஒரு தொகுதியில் சுயேட்சையாக முடிந்து விட்டதே என்று ஓபிஎஸ்ஸின் நிலை பற்றி மின்னம்பலத்தில் எழுதியிருந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இணையவன் said:

நல்லது. தனிப்பட்ட காழ்ப்புணர்வினால் தமிழ்நாடு பின் தங்கியுள்ளது என்ற தவறான கருத்தை எழுதியதை ஒப்புக் கொண்டதற்காக. 

இது தொடர்பாக மேற்கொண்டு விவாதிக்க எதுவுமில்லை.

இப்பவும் சொல்கிறேன் நானறிந்த/கேள்விப்பட்ட வரையில் தமிழ்நாடு பின் தங்கித்தான் உள்ளது. எல்லாம்  சங்கரின் படங்களை பார்த்து விட்டு கருத்து எழுதுவதினால் வரும் பிரச்சனைகள்....

2 minutes ago, ரசோதரன் said:

முக்குலத்தோர்

முக்குலத்தோர் என்றால் யார்? உண்மையில் தெரிந்து கொள்ளத்தான் கேட்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இப்பவும் சொல்கிறேன் நானறிந்த/கேள்விப்பட்ட வரையில் தமிழ்நாடு பின் தங்கித்தான் உள்ளது. எல்லாம்  சங்கரின் படங்களை பார்த்து விட்டு கருத்து எழுதுவதினால் வரும் பிரச்சனைகள்....

முக்குலத்தோர் என்றால் யார்? உண்மையில் தெரிந்து கொள்ளத்தான் கேட்கின்றேன்.

கள்ளர், மறவர், அகமுடையார் என்னும் மூன்று குல மக்கள் சேர்ந்தது முக்குலத்தோர். இவர்களை தேவர்கள் என்றும் சொல்கின்றனர். ஒரு காலத்தில் போர் வீரர்களாக இருந்த குடிகள். இன்றும் இவர்களில் பலர் இந்தப் பெருமையுடன் வாழ்கின்றனர்.

மதுரை, தேனீ, இன்னும் சில தென் மாவட்டங்களில் இவர்கள் செறிவாக வாழ்கின்றனர்.

நடிகர் சிவாஜி கணேசன் கள்ளர் என்னும் குலத்தை சேர்ந்தவர் என்று தமிழக நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் அதிமுக வின் கோட்டை இவர்கள். ஆனால் இன்று அதிமுக கொங்கு நாட்டவரான (கவுண்டர்கள்) ஈபிஎஸ் வசம் போன பின், இவர்கள் அதிமுக விசுவாசிகளாக இருக்க மாட்டார்கள் என்பதே பொதுவான ஊகம்.  

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

உங்கள் விளக்கத்திற்கு நன்றி
இவர்கள் சாதியாக பார்க்கப்படுகின்றார்களா? இல்லை இனமாக பார்க்கப்படுகின்றார்களா? இவர்கள் தமிழர்கள் என்ற குடைக்குள் எங்கே எப்போது எப்படி இணைகின்றார்கள்?

அல்லது எமது ஊர்களில் உள்ள சாதி வேற்றுமைகள் போல் இவர்களுக்குள்ளும் உண்டா?

இவர்கள் சாதியாகவே பார்க்கப்படுகின்றார்கள். 'சாதி' என்ற சொல்லை எழுதுவதற்கு எனக்கு கொஞ்சம் அசூசையாக இருந்தது, அதனாலேயே நான் குலம், இனம் என்று வேறு சில சொற்களை உபயோகித்தேன்.

சாதி வேற்றுமை இவர்கள் மூவருக்குமிடையில் இல்லை என்று நினைக்கின்றேன், ஆனால் மற்றவர்களுடன் உண்டு. என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவன் தேனீ மாவட்டத்தை சேர்ந்தவன். அவன் இவர்களில் ஒருவன். அவனின் தந்தை ஒரு உண்மையான கம்யூனிஸ்ட். நண்பனும் ஓரளவிற்கு அப்படியே. அவன் எனக்கு சொன்ன விபரங்களே இவை.

எப்பொழுது தோன்றினார்கள், எப்பொழுது இணைந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் கதைப்பதைப் பார்த்தால், அன்றைய பாண்டிய மன்னர்களின் போர் வீரர்கள் போன்றே தெரிகின்றனர். இன்றும் கொஞ்சம் அடாவடிக்கு பேர் போனவர்கள் தான். சிவாஜி, கமல் நடித்த 'தேவர் மகன்' பார்த்திருப்பீர்கள் தானே..............   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

உங்கள் விளக்கத்திற்கு நன்றி
இவர்கள் சாதியாக பார்க்கப்படுகின்றார்களா? இல்லை இனமாக பார்க்கப்படுகின்றார்களா? இவர்கள் தமிழர்கள் என்ற குடைக்குள் எங்கே எப்போது எப்படி இணைகின்றார்கள்?

அல்லது எமது ஊர்களில் உள்ள சாதி வேற்றுமைகள் போல் இவர்களுக்குள்ளும் உண்டா?

சாமி தாத்தா நீங்க‌ள் நான் சிறுவ‌னாய் இருக்கும் போது புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து விட்டீங்க‌ள்..............த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஈழ‌த்தில் ஜாதி மெது மெதுவாக‌ அழிந்து கொண்டு வ‌ந்த‌து..............எங்க‌ட‌ ஊரில் எத்த‌னையோ ஜாதி இருக்கி ஆனால் ஒரு போதும் ஜாதி ச‌ண்டை வ‌ந்த‌து கிடையாது............ நான் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு  வ‌ந்த‌ பிற‌க்கு என்ற‌ ப‌ள்ளி தோழ‌ன் ம‌ற்ற‌ ஜாதி வீட்டை எல்லாம் போய் சாப்பிட்டு இருக்கிறான்.............எங்க‌ட‌ கோயில் எல்லாரையும் இணைத்த‌து பாட‌சாலை எல்லாரையும் ஒரு தாய் பிள்ளை போல் பார்த்த‌து..................
ஜாதி க‌ல‌வ‌ர‌த்தை யாரும் தூண்டின‌து கிடையாது அப்ப‌டி செய்து இருந்தா த‌மிழீழ‌ காவ‌ல்துறை ப‌ச்சை ம‌ட்ட‌டை வ‌யித்திய‌ம் தான்................இது தான் பிர‌பாக‌ரனின் ம‌ந்திர‌ம்..............2009க்கு பிற‌க்கு ஜாதிய‌ மீண்டும் உருவாக்கி விட்டார்க‌ள்............இப்ப‌ தெரியுதா  த‌லைவ‌ரின் அருமை பெருமை

வாழ்க்க‌ பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

அநாவசிய திசைதிருப்பல்கள் வேண்டாம். தமிழ்நாடு 100 வருடம் பிந்தங்கியுள்ளது என்று ஏன் எழுதினீர்கள் என்பதை விளக்கினால் நீங்கள் அரசியல் அறிஞர் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். முடியாவிட்டால் பதில் தரவேண்டாம். பொய்யான கற்பனைத் தகவல்கள் யாழுக்கு நல்லதல்ல.

த‌மிழ் நாடு முன்னேற‌ இன்னும் நிறைய‌ இருக்கு..............த‌மிழ் நாட்டை அபிவிருத்தி செய்ய‌னும்.........அதுக்கு காசு தேவை..............ப‌ல‌ கோடி கோடிய‌ ஊழ‌ல் செய்து காசு பூரா அர‌சிய‌ல் வாதிக‌ளின் வீட்டில் வெளி நாட்டு வ‌ங்கிய‌லிட‌ம் இருக்கும் போது த‌மிழ் நாடு எப்ப‌டி முன்னேற்றத்தை காணும்...........எத்த‌னையோ ம‌க்க‌ள் த‌மிழ் நாட்டில் வீடு வாச‌ல் இல்லாம‌ ம‌ர‌த்த‌டிக்கு கீழ‌ ச‌மைச்சு அதே இட‌த்தில் தூங்கி வாழ்க்கைய‌ ஓட்டுதுக‌ள்.................. 1967க‌ளில் இருந்து இதுவ‌ரை திராவிட‌ம் த‌மிழ‌ர்க‌ளை ஏமாற்றி பிழைச்ச‌து.............ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டையும் சுத்தி பாருங்கோ எத்த‌ன‌ இட‌ங்க‌ளில் மின்சார‌ம் இல்லை என்று............இதெல்லாம் ஆட்சியாள‌ர்க‌ள் ம‌ன‌ம் வைச்சா சில‌ மாத‌ங்க‌ளில் செய்து முடிக்க‌லாம்................திராவிட‌ அர‌சிய‌ல் மாபியா கும்ப‌லுக்கு ப‌ண‌ம் பண‌ம் இது தான் அவ‌ங்ளுக்கு முக்கிய‌ம்..............ஈழ‌த்தை அழிக்க‌ துணை போன‌தே திமுக்கா அதே ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ளை க‌ஞ்சா என்ற‌ போதையில் மித‌க்க‌ விடுவ‌தே திமுக்கா திருட்டு கும்ப‌ல்................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீன உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் இந்தியாவின் ஹிந்தி பேசுகின்ற மக்களின் மாகாணங்கள் எல்லாம் முன்னேறி பணக்கார மாகாணங்களக மாறி தமிழர்கள் எல்லாம் இப்போது வேலை தேடி அங்கே தான் செல்கின்றனராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்திர‌ பிர‌தேஸ் மானில‌த்தில் 24 கோடி ம‌க்க‌ள் வ‌சிக்கின‌ம்

அந்த‌ மானில‌த்தின் பாட‌சாலைக‌ளை பார்க்க‌னும் அப்ப‌ தெரியும் அந்த‌ மானில‌ம் எவ‌ள‌வு பின் த‌ங்கி இருக்கு என்று

இந்தியாவிலே த‌மிழ் நாடு தானாம் முன்னேறின‌ மானிலம் த‌மிழ் நாட்டிலே ப‌ல‌ குறைக‌ள் இருக்கு ச‌ரி செய்ய‌.............அப்ப‌ ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளின் நில‌மை எப்ப‌டி இருக்கும்..............அன்டை நாடு சீன‌னின் அவ‌னின் நாட்டை நாடு மாதிரி வைச்சு இருக்கிறான் ஒரு குறையும் இல்லாம‌............ஆனால் இந்தியா நாடும் நாட்டு ம‌க்க‌ளும் எக்கேடு கெட்டு போனால் ந‌ம‌க்கேன்ன‌ ஹிந்தியை தினித்தோமா.............பொய் வ‌ழக்கு ம‌ற்ற‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை விலைக்கு வாங்கி ச‌ர்வாதீகார‌ ஆட்சி செய்யும் நாடாய் மோடி மாற்றி விட்டார்...........இந்த‌ மோடியின் 10ஆண்டு ஆட்சியில் இந்தியா என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு.............எத்த‌னையோ கோடி இந்திய‌ர்க‌ள் இர‌வு நேர‌ சாப்பாடு இல்லாம‌ தூங்கின‌மாம்...............ப‌ல‌ நூறு கோடி காசு கொடுத்து ர‌ஸ்சியாவிட‌ம் இருந்து போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்டி குவிக்கும் மோடி அர‌சு..............நாட்டு ம‌க்க‌ளுக்கு என்ன‌ தேவையோ அதை செய்வ‌தில்லை..............இந்த‌ வ‌ருட‌ம் புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் ந‌ட‌க்க‌ போகுது இந்தியா மிஞ்சி போனால் இர‌ண்டு ப‌த‌க்க‌ம் தான் வெல்லும்.............அமெரிக்க‌ன் நூறுக்கு மேல் ப‌ட்ட‌ ப‌த‌க்க‌த்தை வெல்வார்க‌ள்............அடுத்து சீன‌ன் குறைந்த‌து 25தில் இருந்து 30 ப‌த‌க்க‌ம் வெல்ல‌க் கூடும்.................இந்தியா என்ற‌ நாடு முன்னேறி செல்ல‌ வில்லை பின் நோக்கி செல்லுது.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி தமிழ்நாட்டு வேலையாளர்களால் நிரம்பி வழியுது. 
தொழில் நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலைகள் என.....
கோவில்கள் , குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள்,தமிழ்பாடசாலைகள் எல்லாவற்றிலும் அவர்கள் முன்னணி வகிக்கின்றார்கள்.

அவர்களிடம் தமிழ்நாட்டை பற்றி கேட்டால்........?!
அவர்கள் சொல்வதை இங்கே எழுதினால் ஒரு சிலருக்கு ஊமைக்கோபம் மூக்கின் மேலே வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரை வைகோ உடைந்து அழக் காரணம் என்ன? சின்னத்துக்காக மதிமுகவை அழுத்துகிறதா திமுக?

மதிமுக

பட மூலாதாரம்,DURAIVAIKO/FACEBOOK

படக்குறிப்பு,

தனது அப்பா ஒரு அரசியல் சகாப்தம் என்று கூறிய துரை வைகோ, மதிமுகவின் நலனுக்காகவே அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

மதிமுக முதன்மைச் செயலாளரான துரை வைகோ அண்மையில் திமுக நிர்வாகிகள் முன்பு உணர்ச்சிவசப்பட்டு அழுத நிகழ்வு தமிழ்நாட்டு அரசியலில் கூர்ந்து கவனிக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ வேட்பாளராக களம் காண்கிறார்.

அதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி ஆகியவற்றை சேர்ந்த கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பரப்புரையில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மதிமுக கட்சிக்கு இன்னும் சின்னமே ஒதுக்கப்படாத நிலை நீடித்து வருகிறது. இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்துள்ளதா என்ற கேள்வியும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் தேர்தல் கூட்டம் ஒன்றில் துரை வைகோ, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்பே மேடையில் பேசிய திமுக நிர்வாகி மதிமுக உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

இந்நிலையில், இதற்கு எதிர்வினை ஆற்றிய துரை வைகோ திடீரென்று உணர்ச்சிவயப்பட்டு அழுதுவிட்டார். இதன் பின்னணி என்ன? மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதா என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

மதிமுக

பட மூலாதாரம்,DURAI VAIKO / X

படக்குறிப்பு,

2001இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

மதிமுக தேர்தல் சின்னம் தொடர்பான வழக்கு

1994ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து வந்த வைகோ மதிமுகவை தொடங்கினார். அதற்கு பின்னர் நடைபெற்ற 1996ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட மதிமுக, பம்பரம் சின்னத்தில் தேர்தலை சந்தித்தது.

அதிமுக - திமுக இல்லாமல் இடதுசாரிகள் மற்றும் ஜனதா தளம் கூட்டணியில் இந்த தேர்தலில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அதனை தொடர்ந்து 1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக மூன்று தொகுதிகளில் வெற்றிபெற்றது.

அதன் பிறகு ஒரே ஆண்டில் மீண்டும் நடத்தப்பட்ட 1999 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - திமுக கூட்டணியில் இணைந்த மதிமுக நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 6% வாக்குகளையும் பெற்றது.

அதன்பிறகு 2001இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதோடு அதன் வாக்கு சதவீதம் 6 சதவிகிதத்துக்கும் கீழ் சென்றது. அதற்கு பின் மாறி மாறி அதிமுக, திமுக உள்ளிட்ட கூட்டணிகளில் இடம்பெற்றாலும் மதிமுகவால் பெரியளவிலான வாக்கு வங்கியை பெற முடியவில்லை.

இந்நிலையில் 6 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளை கொண்டுள்ள கட்சி என்று கூறி 2010ஆம் ஆண்டு மதிமுகவின் மாநில கட்சி அந்தஸ்த்தை திரும்ப பெற்றுக்கொண்டது தேர்தல் ஆணையம். இதோடு நிலையான தேர்தல் சின்னம் கிடைக்காது என்றாலும் அடுத்து வந்த தேர்தல்கள் சிலவற்றில் பம்பரம் சின்னத்தை விண்ணப்பித்து பெற்றுக்கொண்டது மதிமுக.

மதிமுக

பட மூலாதாரம்,VAIKO / X

படக்குறிப்பு,

2016ஆம் ஆண்டு மக்கள்நலக் கூட்டணி அமைத்து தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியுடன் களம் கண்ட மதிமுக அந்த தேர்தலிலும் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிட்டது.

துரை வைகோ பேசியது என்ன?

திமுக கூட்டணியின் தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை திருச்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து தொடங்கினார்.

இந்நிலையில் 23.3.2024 சனிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ், துரை வைகோ முன்னிலையிலேயே மேடையில் பேசிய திமுக நிர்வாகி திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதை அங்கிருந்த திமுக தொண்டர்களும் கூச்சலிட்டு வரவேற்பது போல் செய்தனர். இதனை தொடர்ந்து பேசிய துரை வைகோ ஒருகட்டத்தில் உடைந்து அழத் தொடங்கிவிட்டார்.

மதிமுக

பட மூலாதாரம்,VAIKO / X

படக்குறிப்பு,

2001இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

தனது அப்பா ஒரு அரசியல் சகாப்தம் என்று கூறிய அவர், மதிமுகவின் நலனுக்காகவே அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்து என்ன சின்னம் என்று சொல்லவும் என தொண்டர்கள் கூச்சலிட, “உயிரே போனாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். அப்படி முடியாவிட்டால் விலகிக்கொண்டு திமுகவே நிற்கட்டும், நாங்கள் ஆதரவு தருகிறோம். ஆனால், ஒருபோதும் சின்னத்தை விடமாட்டோம்” என்று கூறினார்.

துரை வைகோவின் இந்த உரை அவர் மீது அழுத்தம் தரப்படுகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மதிமுக

பட மூலாதாரம்,PRIYAN

படக்குறிப்பு,

“வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ தனது மகனையே வேட்பாளராக நிறுத்திவிட்டாரே என மதிமுகவின் மூத்த தலைவர்கள் ஏதாவது அழுத்தம் தந்திருக்க வாய்ப்புள்ளது."

உட்கட்சி அழுத்தம்?

இதுகுறித்து பத்திரிகையாளர் பிரியனிடம் பேசுகையில், "அவருக்கு அவரது கட்சிக்குள் இருந்து ஏதாவது அழுத்தம் வந்திருக்கலாமே தவிர, திமுக தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் வர வாய்ப்பில்லை" என்று கூறுகிறார்.

“வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ தனது மகனையே வேட்பாளராக நிறுத்திவிட்டாரே என மதிமுகவின் மூத்த தலைவர்கள் ஏதாவது அழுத்தம் தந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஏற்கெனவே தனிச்சின்னத்தில் நிற்க ஒப்புக்கொண்ட பிறகு திமுக மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி அழுத்த தர வாய்ப்பில்லை” என்று கூறுகிறார் பிரியன்.

மதிமுக

பட மூலாதாரம்,MALLAI SATHYA / X

படக்குறிப்பு,

“சின்னம் கிடைக்காத பட்சத்தில் பெருந்தன்மையோடு எங்களது சின்னத்தில் நில்லுங்கள் என்று திமுக கட்சியினர் சொல்கின்றனர். அதை நான் நேர்மறையாகவே பார்க்கிறேன்”

‘திமுகவுக்கு தர்மசங்கடம்’

வேட்பாளர் அறிமுகக் கூட்டமெல்லாம் முடிந்துவிட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் களத்திற்கு பரப்புரைக்கு சென்றுவிட்டன. இந்த நிலையில், மதிமுகவுக்கு எந்த சின்னத்தில் வாக்கு சேகரிப்பது என்பதில் தான் கூட்டணி கட்சியினரிடையே தர்மசங்கடம் நிலவுதாக கூறுகிறார் மல்லை சத்யா.

“சின்னம் கிடைக்காத பட்சத்தில் பெருந்தன்மையோடு எங்களது சின்னத்தில் நில்லுங்கள் என்று திமுக கட்சியினர் சொல்கின்றனர். அதை நான் நேர்மறையாகவே பார்க்கிறேன்” என்று கூறுகிறார் அவர்.

“களத்தில் திமுக கட்சியினர் உறுதுணையாக நிற்கிறார்கள். தற்போது வரை சின்னம் இல்லாமல் எப்படி பிரச்சாரம் செய்வது, குறுகிய காலத்தில் சின்னத்தை மக்கள் மத்தியில் எப்படி கொண்டு செல்வது என்ற அழுத்தமே நிலவுகிறது ” என்று தெரிவித்துள்ளார் மல்லை சத்யா.

மதிமுக

பட மூலாதாரம்,MAALAN / X

படக்குறிப்பு,

"மதிமுகவை பொறுத்தவரை தங்களது சின்னம், கட்சி, அரசியல் எதிர்காலம் என எல்லாவற்றையும் தக்க வைத்துக்கொள்வதற்கான முக்கியமான தேர்தல் இது."

மதிமுகவை இணைத்துக் கொள்ள நினைக்கிறதா திமுக?

சின்னம் குறித்த பிரச்னை, கூட்டணி தலைவர்களின் கருத்துக்கள் இது ஒருபுறமிருக்க மதிமுகவின் சூழலை பயன்படுத்தி அந்த கட்சியை தன்னோடு இணைத்து கொள்ள திமுக நினைப்பதாக விமர்சிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

“திமுகவில் இருந்துதான் வைகோ வெளியேறினார். தற்போது பலவீனமான சூழலில் திமுக கூட்டணியில் தான் இருக்கிறார். சின்னமும் இல்லை. இந்த சூழலில் தங்களது சின்னத்தில் போட்டியிட அழுத்தம் கொடுத்து அவர்களது கட்சி உறுப்பினர்களையும் திமுக தனது கட்சியில் இணைத்து கொள்ள விரும்புகிறது. எனவே இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு மதிமுகவிற்கு அழுத்தம் தருகிறது” என்கிறார்.

மதிமுகவை பொறுத்தவரை தங்களது சின்னம், கட்சி, அரசியல் எதிர்காலம் என எல்லாவற்றையும் தக்க வைத்துக்கொள்வதற்கான முக்கியமான தேர்தல் இது. எனவே அவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய சூழலில் இருக்கிறார்கள் என்று கூறுகிறார் மாலன்.

மதிமுக

பட மூலாதாரம்,TAMILAN PRASANNA / X

படக்குறிப்பு,

“நாட்டில் உள்ள எதிர்கட்சிகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் எனும் நடுநிலை அமைப்பை கொண்டு பல்வேறு வழிகளில் பாஜகவே அழுத்தம் தருகிறது”

திமுக தரப்பு கூறுவது என்ன?

பத்திரிகையாளர் மாலன் சொல்வது போல மதிமுகவை உதயசூரியன் சின்னத்தில் நிற்கச்சொல்லி திமுக கட்டாயப்படுத்துகிறதா என்று செய்தித்தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவிடம் கேட்டோம்.

இதற்கு பதிலளித்த அவர், “நாட்டில் உள்ள எதிர்கட்சிகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் எனும் நடுநிலை அமைப்பை கொண்டு பல்வேறு வழிகளில் பாஜகவே அழுத்தம் தருவதாக” கூறுகிறார்.

“சின்னம் குறித்த பிரச்னை திமுகவுக்கும், மதிமுகவுக்குமானது அல்ல. இது திமுகவுக்கும், பாஜகவுக்குமானது. நாட்டில் உள்ள லெட்டர்பேடு கட்சிகளுக்கும் சின்னம் மற்றும் அனுமதி வழங்கும் தேர்தல் ஆணையம், மத்திய அரசின் பேச்சை கேட்டு முக்கிய கட்சிகளுக்கு சின்னம் வழங்க மறுக்கிறது” என்கிறார் அவர்.

ஆனால், “திமுக தங்களது உள்நோக்கத்தை மறைப்பதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவின் மீது பழி போடுகிறது. அதற்கு பாஜகவே எளிய இலக்கு” என்று கூறுகிறார் பத்திரிகையாளர் மாலன்.

மதிமுக உதயசூரியன் சின்னத்தில் நிற்க திமுக தலைவர்கள் ஆலோசனை தருவது குறித்து கேட்டபோது, “வெற்றிவாய்ப்பை எந்த காரணத்திற்காகவும் இழக்கக்கூடாது என்ற குறிக்கோள் உள்ளது. சின்னம் அதில் ஒரு கூடுதல் பலன் அளிக்க கூடியது. அந்த வகையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்."

"உதாரணத்திற்கு மதிமுக தொடர்ந்து பரவலான தொகுதிகளில் நிற்கவில்லை. சின்னத்தை பயன்படுத்தவில்லை. அதனால், கூட்டணியின் நன்மைக்காக சிலர் ஆலோசனை கொடுத்திருக்கலாம். ஆனால் அதுகுறித்து இரு தலைமைகளும் முடிவெடுப்பார்கள்” என்று தெரிவித்தார் தமிழன் பிரசன்னா.

மதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

”திமுக கூட்டணி உறுதியாக அமைந்துள்ளது. பாஜக அரசை எதிர்த்து சரியான மற்றும் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையாக முன்வைத்துள்ளோம்." என்கிறார் மதிமுகவின் மல்லை சத்யா.

சின்னம் இல்லாமல் இருப்பது பின்னடைவா?

தேர்தலில் களம் காணும் இதர கட்சிகள் ஏற்கனவே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்ட நிலையில், மதிமுகவிற்கு இன்னும் சின்னமே இல்லை என்பது தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, ”திமுக கூட்டணி உறுதியாக அமைந்துள்ளது. பாஜக அரசை எதிர்த்து சரியான மற்றும் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையாக முன்வைத்துள்ளோம். எனவே, மக்களின் ஆதரவில் கண்டிப்பாக வெற்றிப்பெறுவோம்” என்று கூறினார்.

இன்னும் தேர்தலுக்கு 20 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில், ஓரிரு தினங்களில் சின்னமும் வந்து விடும். அதனால், இது பெரியளவு திமுக அல்லது மதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தாது என்று கூறுகிறார் பிரியன்.

https://www.bbc.com/tamil/articles/cp9e8ymwz3ro

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2024 at 18:25, ரசோதரன் said:

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது...

திராவிடம் என்றால் என்ன?
திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத திரிபு சொல்.

திராவிடம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இல்லை.

அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க சமக்கிருத அறிஞர்கள் மனு ஸ்மிரிதி , பிரஸ்னோத்தர ரத்னமாலிக்கா போன்ற சமக்கிருத இலக்கியங்களில் பயன்படுத்திய சொல்.

ஆதி சங்கரர் மண்டல மிஸ்ரா வுடன் வாது புரிகையில் தன்னை "திராவிட சிசு" என்று அறிமுகம் செய்கிறார்.

அதைப்போலவே ஆதி சங்கரர் திருஞான சம்பந்தரை (இவரும் ஒரு பிராமணர்) சுட்டுகையில் திராவிட சிசு என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். நால்வரில் மற்றவர்களை அப்படி சொல்லவில்லை.

மனு ஸ்ம்ரிதி தமிழர்களை சுட்ட சோழர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது , திராவிட என்ற வார்த்தையை அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க பயன்படுத்துகிறது.

நான் பல இடங்களில் சொன்ன உதாரணம் தான் மட்டை பந்து ஆட்டக்காரர் ராகுல் திராவிட் , மயிலை சமக்கிருத கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணி திராவிட் சாஸ்திரிகள் இவர்கள் அனைவரும் பிராமணர்கள் , திராவிட் என்பது அவர்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த குடும்ப பெயர்.

பிராமணர்களை பொதுவாக பஞ்ச திராவிட என்றும் பஞ்ச கௌட என்றும் இரு கூறுகளாக பிரிப்பர். இதில் பஞ்ச திராவிட என்பது தென்னகத்து பிராமணர்களை குறிக்கிறது, பஞ்ச கௌட வட பிராமணர்களை குறிக்கிறது.

திராவிட மேட்ரிமோனி என்று பிராமணர்களுக்கான தெலுங்கானாவில் பதிவு செய்த இணையங்களும் உள்ளன.

ராபர்ட் கால்டுவேல் என்ற மொழியியல் அறிஞர் பின்னாளில் தமிழ் மொழிக்குடும்பங்களை சுட்ட தமிழ் மொழி அல்லாத ஒரு பெயரை வைக்கும் எண்ணத்தில் சமக்கிருதத்திலிருந்து "திராவிட" என்ற பதத்தை எடுத்து தவறாக தமிழ் மொழி குடும்பத்தை சுட்ட பயன்படுத்தினார்.

இதையே நீதிக்கட்சிக்கு பெயர் மாற்றம் செய்யும் வேளையில் கிஆபெ விசுவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் பெரியாரிடம் வற்புறுத்தியும் 'தமிழர் கழகம்' என்று வைக்காமல் 'திராவிடர் கழகம்' என பெயர் மாற்றினார்.

திராவிடம் என்பது எந்த மாநிலமும் அங்கீகரிக்காத ஒரு போலி பெயர் , தமிழர்களை தமிழர் அல்லாதவர்கள் ஆள பயன்பட்ட ஒரு முக மூடி அவ்வளவே !

திராவிடம் என்ற ஒரு இனமோ, மொழியோ , பண்பாடோ தமிழர்களிடம் இருந்ததில்லை , இது வேற்று மொழி பேசுபவர்களால் தங்கள் அடையாளத்தை மறைக்க தமிழர்களை ஏய்க்க பயன்படுத்தப்பட்ட ஒரு போலிச்சொல்.

தமிழனை தமிழன் என்று நேரடியாக சுட்டாமல் போலி முகமூடி அவனுக்கு எதற்கு ? , சாதியை திராவிடம் ஒழித்துவிட்டதா இல்லை மறுத்து தான் விட்டதா ? , வன்னியருக்கு உள் ஒதுக்கீடு என்று விக்கிரவாண்டி தேர்தலுக்காக பேசியது திமுக தானே ? பிறகு எப்படி சாதி மறுத்த தமிழர்கள் திராவிடர்கள் என்றானார்கள் ? , அளந்து விடுவதை எல்லாம் நம்ப இது நைனா நாயக்கர்கள் காலமல்ல , தகவல் தொழில் நுட்பக்காலம்.

சமூக நீதி காக்கிறதா திராவிடம் … எங்கே ? இதுவரை ஒரு பொதுத்தொகுதியில் ஒரு ஆதி தமிழரையாவது நிறுத்தி இருப்பார்களா திராவிடர்கள் ? எத்தனை பெண்களுக்கு, இசுலாமியருக்கு இடம் கொடுத்துள்ளீர்கள் ?, பிறகு என்ன பம்மாத்து பேச்சு இது?

ஆரியத்தை தமிழர்களை விட வேறு யாரும் வரலாற்றில் இதுவரை எதிர்த்தது கிடையாது , ஆரியத்திற்கு அடிபணியாத ஒரே மொழி இனம் அது தமிழினம், ஆரிய படைக்கடந்த நெடுஞ்செழியன் , செங்குட்டுவன் என்று அந்த வரிசை நீள்கிறது.

ஆரியத்தை எதிர்க்க திராவிடம் வந்தது என்பது ஒரு பழைய பம்மாத்து, ஆரியம் திராவிடத்தின் பங்காளி, "ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவர் வாயிலே மண்ணு". ஆரியத்தை தமிழர்கள் தான் 2000 வருடங்களாக எதிர்த்து வந்துள்ளனர் , தமிழை மிதித்து ஆரியர்களை கோயில்களில் அனுமதித்து தெலுங்கையும், சமக்கிருதத்தையும் தலையில் வைத்து ஆடியது நாயக்கர்கள், தங்கள் பெயருக்கு முன் ‘வருணாசிரம தர்மங்கனுபாலித்த’ என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர், இவர்கள் வழி வந்த திராவிடர்கள் தான் சாதியை ஒழிக்கப்போகிறார்களா, சமூக நீதி சமத்துவத்தை நிலை நாட்டப்போகிறார்களா ?

அரசியலுக்காக திராவிடம் என்ற திரிந்த போலி வட வார்த்தை தமிழர்களுக்கு தேவை இல்லை ,

தமிழர்களை தமிழர் என்றே அழைப்போம்! , தமிழ் மொழிக் குடும்பம் என்றும் தமிழர் நாகரீகம் என்றே அழைப்போம்! , திராவிட என்ற முகமூடி தமிழர்களுக்கு தேவையில்லை!

தமிழன் தமிழனே!

கோராவில் இது போன்ற கேள்விகளுக்குப் பதில்கள் தேடினால் இதை விட "பைம்பலான" பதில்கள் கிடைக்கும். தந்தை செல்வநாயகம், தெலுங்கு அடி என்று கூடப் பதில் கிடைக்கும்😎! (இதைப் பற்றி யாழில் ஒரு சுவிங்கத் திரி ஓடியது, தேடிப் பாருங்கள்).

யாரும் வந்து எதையும் எழுதி விட்டுப் போகும் கோராவை விட, கால்ட்வெல் என்ற ஒப்பீட்டு இலக்கணவியலாளர் எழுதியதையே நீங்கள் வாசித்து "திராவிடக் குடும்ப மொழிகள்" என்று அவர் குறிப்பிடுவதைப் புரிந்து கொள்ளலாம்.

திராவிட கொள்கைகளை அரசியல் அடையாளமாக தமிழ் கட்சிகள் எடுத்துக் கொண்டதும், அதனால் தமிழ் நாட்டு மக்களுக்கும், ஏனைய சில தென் மாநில மக்களுக்கும் நன்மைகள் விளைந்ததும் அந்த மானிலங்களின் பொருளாதார வளர்ச்சியிலும், ஒப்பீட்டு ரீதியில் ஏனைய மத, இனங்களோடு சகிப்புத் தன்மை என்பன நிலவுவதிலும் தெளிவாக வெளிப்படுகிறது (உதாரணமாக, குஜராத்தில் நிகழ்ந்தது போன்ற பாரிய முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைகள், இந்த மாநிலங்களில் நினைத்துப் பார்க்க இயலாதவை).

2009 இல் கருணாநிதியின் செயற்பாடுகளோடு தான் புலத் தமிழரிடையே இந்த திராவிட காய்ச்சல் தீவிரமானது. இந்தத் திராவிடக் காய்ச்சலும் அரசியல் நோக்கம் கொண்டது தான். நாம் தமிழர் கட்சி இந்த திராவிட வெறுப்பின் அறுவடையாளர். பின்னணியில், பி.ஜே.பி யும் கொஞ்சம் நன்மையடைய முயற்சிக்கிறது. இதைத்  தவிர இந்த திராவிட தமிழர் பிரிவு என்பது ஒரு nothing burger.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தைமீது சபதம்; காரில் தொங்கிய பௌன்சர்கள்- புடைசூழ வேட்புமனு தாக்கல்செய்த வீரப்பன் மகள் வித்யா ராணிவீரப்பன் மகள் வித்யா ராணி

வீரப்பன் மகள் வித்யா ராணி

கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களமிறங்கிய வீரப்பன் மகள் வித்யா ராணி இன்றைய தினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, மேட்டூர் மூலக்காட்டில் இருக்கின்ற வீரப்பன் நினைவிடத்துக்குச் சென்று வேட்பு மனுவை வைத்து வீரவணக்கம் செலுத்தினார். அப்போது, ‘‘மொழி காக்க, இனம் காக்க, மண் காக்க, மானம் காக்க... இன்னுயிர் நீத்த மாவீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்’’ என்று கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உறுதி மொழியும் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு, வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக கிருஷ்ணகிரியில் இருக்கின்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இருந்து புடைசூழ புறப்பட்டுச் சென்றார் வித்யா ராணி.

வித்யா ராணி
 
வித்யா ராணி

இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அணிவகுத்துச் செல்ல காரின் ‘சன் ரூஃப்’ வழியாக நின்றபடி கையெடுத்து கும்பிட்டபடியே பயணித்தார் வித்யா ராணி. காரின் இருபக்கமும் பௌன்சர்கள் தொங்கிக்கொண்டு வந்தனர். முன்பக்கம் வீரப்பன் பேனர் கட்டப்பட்டிருந்தது. மாமன்னன் அருண்மொழிச் சோழன் வேடம், திருவள்ளுவர் வேடம், அம்பேத்கர் வேடம் அணிந்தபடியும், வழிநெடுக பட்டாசு வெடித்தும், மேளத்தாளம் அடித்தும் நாம் தமிழர் கட்சியினர் அமர்க்களப்படுத்தி வித்யா ராணியை அழைத்து வந்தனர். வேட்பு மனுவை தாக்கல் செய்தபோதும், தனது தந்தை வீரப்பன் மீது சபதம் எடுத்துக்கொண்டார் வித்யா ராணி.

தி.மு.க கூட்டணியை பொறுத்தமட்டில், இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிட்டிங் எம்.பி-யாக இருந்த செல்லகுமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ-வும், தொழில் அதிபருமான கோபிநாத் களமிறக்கப்பட்டிருக்கிறார். இன்றைய தினம் எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தனது குடும்பத்துடன் அமைதியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்.

அவருடன் தி.மு.க மற்றும் கூட்டணியில் இருக்கின்ற வேறு எந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் வரவில்லை. ‘கூட்டணிக்குள் அதிருப்தியா..?’ என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, ‘அப்படியெல்லாம் இல்லை. முறைப்படி, கிருஷ்ணகிரி மேற்கு, கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர்கள் இருவரிடமும் தகவல் தெரிவித்துவிட்டுதான் வந்திருக்கிறேன்’ என்றார்.

வித்யா ராணி
 
வித்யா ராணி

அ.தி.மு.க-வில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெயபிரகாஷ் களமிறங்கியிருக்கிறார். பா.ம.க-வில் பயணித்து வந்த ஜெயபிரகாஷ் கடந்த 2011-ம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க-வில் சேர்ந்தார். கிரானைட், டிரான்ஸ்போர்ட் தொழில் என வெயிட்டாக இருக்கும் ஜெயபிரகாஷ் களத்திலும் வேகம் காட்டுகிறார். பா.ஜ.க சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். இன்று அவரும் பா.ம.க, ஓ.பி.எஸ் அணியினருடன் சேர்ந்துபோய் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். தமிழகத்தில் இருக்கின்ற மற்றத் தொகுதிகளைக் காட்டிலும், கிருஷ்ணகிரி தொகுதியில்தான் ஆளும் தரப்புக்கும், எதிர் தரப்பு வேட்பாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. ஒரே காரணம், வீரப்பனின் மகள் களமிறங்கியதுதான். தொகுதியில் வன்னியர் சமூக வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. வீரப்பன் மகள் என்பதால், அந்தச் சமூக வாக்குகள் ஓரளவு அறுவடையாகும். சமுதாய வாக்குகளை குறிவைத்தும் வித்யா ராணி களத்தில் வேகம் காட்டிக்கொண்டிருக்கிறார். களமும் சூடுபிடித்திருக்கிறது.

தந்தைமீது சபதம்; காரில் தொங்கிய பௌன்சர்கள்- புடைசூழ வேட்புமனு தாக்கல்செய்த வீரப்பன் மகள் வித்யா ராணி | krishnagiri parliamentary constituency -ntk candidate veerappan's daughter filed nomination - Vikatan

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

தென் மாநிலங்கள் மற்றைய மாநிலங்களை விட வளர்ச்சியிலும், சகிப்புத் தன்மையிலும் சில படிகள் முன்னேயே நிற்கின்றன என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. பெரியார் மற்றும் அவர் வழி வந்த சீர்திருத்தவாதிகளும், அவர்களின் உறுதியான நிலைப்பாடுகளும் தென் மாநிலங்களின் சகிப்புத் தன்மைக்கு ஒரு பெரிய காரணம் என்றே நினைக்கின்றேன். தொழிற்கல்வி மேல் தென் நாட்டவருக்கு இருக்கும் நாட்டமும், என்ணற்ற தனியார் கல்லூரிகளும், சரியான நேரத்தில் வந்த பில் கேட்ஸீம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவினார்கள்.

திராவிடம் (அரசியல் கட்சிகளும், சார்ந்தவர்களும்), தமிழ் தேசியம் (சீமான் வகையினர்), தனித் தமிழ் (தேவநேயப் பாவணர் வழி நிற்பவர்கள்) என்று மூன்று கோணங்களில் இழுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். உட் பிரிவுகள், உள்ளுக்குள்ளேயே பிடிக்காதவர்கள் என்ற, உதாரணம்: சீமான் எதிர் ரஞ்சித், பிணக்குகளும் உண்டு.

தனித் தமிழ் பிரிவினர் அரசியலில் இல்லை என்று நினைக்கின்றேன், ஆனால் அரசியல் கருத்துகள் இவர்களிடம் உண்டு. அகராதி சம்பந்தப்பட்ட பணிகளில் இவர்களின் எழுத்தை வாசித்திருக்கின்றேன். 

இவர்களில் எவரென்றாலும் ஒரு நிலையான, நீதியுள்ள சமூகத்தை உருவாக்குவார்களா என்பதே எதிர்பார்ப்பு.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ தனது மகனையே வேட்பாளராக நிறுத்திவிட்டாரே என மதிமுகவின் மூத்த தலைவர்கள் ஏதாவது அழுத்தம் தந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஏற்கெனவே தனிச்சின்னத்தில் நிற்க ஒப்புக்கொண்ட பிறகு திமுக மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி அழுத்த தர வாய்ப்பில்லை” என்று கூறுகிறார் பிரியன்

இத்துடன்  வைகொவின்  அரசியல் முடிவடைகிறது

13 minutes ago, பிழம்பு said:

தந்தைமீது சபதம்; காரில் தொங்கிய பௌன்சர்கள்- புடைசூழ வேட்புமனு தாக்கல்செய்த வீரப்பன் மகள் வித்யா ராணிவீரப்பன் மகள் வித்யா ராணி

வீரப்பன் மகள் வித்யா ராணி

கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களமிறங்கிய வீரப்பன் மகள் வித்யா ராணி இன்றைய தினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, மேட்டூர் மூலக்காட்டில் இருக்கின்ற வீரப்பன் நினைவிடத்துக்குச் சென்று வேட்பு மனுவை வைத்து வீரவணக்கம் செலுத்தினார். அப்போது, ‘‘மொழி காக்க, இனம் காக்க, மண் காக்க, மானம் காக்க... இன்னுயிர் நீத்த மாவீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்’’ என்று கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உறுதி மொழியும் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு, வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக கிருஷ்ணகிரியில் இருக்கின்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இருந்து புடைசூழ புறப்பட்டுச் சென்றார் வித்யா ராணி.

வித்யா ராணி
 
வித்யா ராணி

இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அணிவகுத்துச் செல்ல காரின் ‘சன் ரூஃப்’ வழியாக நின்றபடி கையெடுத்து கும்பிட்டபடியே பயணித்தார் வித்யா ராணி. காரின் இருபக்கமும் பௌன்சர்கள் தொங்கிக்கொண்டு வந்தனர். முன்பக்கம் வீரப்பன் பேனர் கட்டப்பட்டிருந்தது. மாமன்னன் அருண்மொழிச் சோழன் வேடம், திருவள்ளுவர் வேடம், அம்பேத்கர் வேடம் அணிந்தபடியும், வழிநெடுக பட்டாசு வெடித்தும், மேளத்தாளம் அடித்தும் நாம் தமிழர் கட்சியினர் அமர்க்களப்படுத்தி வித்யா ராணியை அழைத்து வந்தனர். வேட்பு மனுவை தாக்கல் செய்தபோதும், தனது தந்தை வீரப்பன் மீது சபதம் எடுத்துக்கொண்டார் வித்யா ராணி.

தி.மு.க கூட்டணியை பொறுத்தமட்டில், இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிட்டிங் எம்.பி-யாக இருந்த செல்லகுமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ-வும், தொழில் அதிபருமான கோபிநாத் களமிறக்கப்பட்டிருக்கிறார். இன்றைய தினம் எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தனது குடும்பத்துடன் அமைதியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்.

அவருடன் தி.மு.க மற்றும் கூட்டணியில் இருக்கின்ற வேறு எந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் வரவில்லை. ‘கூட்டணிக்குள் அதிருப்தியா..?’ என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, ‘அப்படியெல்லாம் இல்லை. முறைப்படி, கிருஷ்ணகிரி மேற்கு, கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர்கள் இருவரிடமும் தகவல் தெரிவித்துவிட்டுதான் வந்திருக்கிறேன்’ என்றார்.

வித்யா ராணி
 
வித்யா ராணி

அ.தி.மு.க-வில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெயபிரகாஷ் களமிறங்கியிருக்கிறார். பா.ம.க-வில் பயணித்து வந்த ஜெயபிரகாஷ் கடந்த 2011-ம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க-வில் சேர்ந்தார். கிரானைட், டிரான்ஸ்போர்ட் தொழில் என வெயிட்டாக இருக்கும் ஜெயபிரகாஷ் களத்திலும் வேகம் காட்டுகிறார். பா.ஜ.க சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். இன்று அவரும் பா.ம.க, ஓ.பி.எஸ் அணியினருடன் சேர்ந்துபோய் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். தமிழகத்தில் இருக்கின்ற மற்றத் தொகுதிகளைக் காட்டிலும், கிருஷ்ணகிரி தொகுதியில்தான் ஆளும் தரப்புக்கும், எதிர் தரப்பு வேட்பாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. ஒரே காரணம், வீரப்பனின் மகள் களமிறங்கியதுதான். தொகுதியில் வன்னியர் சமூக வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. வீரப்பன் மகள் என்பதால், அந்தச் சமூக வாக்குகள் ஓரளவு அறுவடையாகும். சமுதாய வாக்குகளை குறிவைத்தும் வித்யா ராணி களத்தில் வேகம் காட்டிக்கொண்டிருக்கிறார். களமும் சூடுபிடித்திருக்கிறது.

தந்தைமீது சபதம்; காரில் தொங்கிய பௌன்சர்கள்- புடைசூழ வேட்புமனு தாக்கல்செய்த வீரப்பன் மகள் வித்யா ராணி | krishnagiri parliamentary constituency -ntk candidate veerappan's daughter filed nomination - Vikatan

இவர் வென்றால் அல்லது  அதிக  வாக்குகளை பெற்றால்...?

தமிழகத்தின் போக்கில் பெரும்  மாற்றத்தை  எதிர்  பார்க்கலாம்

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

துரை வைகோ உடைந்து அழக் காரணம் என்ன? சின்னத்துக்காக மதிமுகவை அழுத்துகிறதா திமுக?

//கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது? விஷம் குடிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டது ஏன்? முழு பின்னணி..//

KN நேருவை கட்டுக்குள் வைக்க Stalin போட்ட புது கணக்கு - தத்தளிக்கும் திருச்சி திமுக . .

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன மாதிரியெல்லாம் யோசிக்கிறாங்க.
    • ஏன் இல்லை  .....எந்தவொரு தோல்வியும் அனுபவங்களை கொடுக்கும்    தோல்வி பயன். தரவில்லை என்று சொல்ல முடியாது    இங்கே முக்கியமாக  பெண்கள் துணிவு பெற்றுள்ளார்கள்  ..அவர்களின் தன்னம்பிக்கை வளர்த்து உள்ளது எற்றத்தாழ்வுகள் பெரும்பாலும் குறைத்து உள்ளது  ...இலங்கையில் தமிழர்கள் பகுதி வளர்ச்சி அடைநதுள்ளது     தமிழா.   இலங்கையில் முதலீடு செய். என்று இலங்கை அரசாங்கம் கேட்கிறது   ...முன்பு இப்படி கேட்டதில்லை   நிறையவே இருக்கிறது  எழுதலாம் ...ஆனால் முட்டாள் தான்  புரிந்து கொள்வார்கள்   🤣🤣🤣
    • பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் (63). இவர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக அளவில் சூப்பர் ஹிட்டான டைட்டானிக் படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ள இவர், அடுத்து அவதார் (2009), அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (2022) படங்களைத் தயாரித்தார். இதுவும் உலக அளவில்வெற்றி பெற்றது. இந்தப் படங்களைத் தவிர, கேம்பஸ் மேன், சோலாரிஸ், அலிடா: பேட்டல் ஏஞ்சல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மகன் ஜேமி தெரிவித்துள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஜான் லாண்டவுக்கு ஜூலி என்ற மனைவி, ஜேமி, ஜோடி என்ற மகன்கள் உள்ளனர். டைட்டானிக், அவதார் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் காலமானார் | Jon Landau: Titanic and Avatar producer dies aged 63 - hindutamil.in
    • Mayu   / 2024 ஜூலை 08 , மு.ப. 11:10 - 0      - 73 ஏ எம் கீத்  கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின்  தலைவர் கே.அண்ணாமலை இலங்கை தமிழரசுக்கட்சி யாழ் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் திருகோணமலை தமிழரசு கட்சி நகரசபை பிரதேசசபை தலைவர் உறுப்பினர்களுக்கிடையை  கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில்  நடைபெற்றது.         இதன்போது, எதிர்கால அரசியல் களநிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்  கலந்துரையாடப்பட்டன.   Tamilmirror Online || அண்ணாமலையுடன் ஆளுநர் சந்திப்பு
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.