Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை இன்று சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயலாகத்தான் பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியது: "கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்குத்தான். கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ள அந்தக் கட்சி 71 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அந்தக் கட்சி கர்நாடகாவுக்கு கேஸ் சிலிண்டர் சின்னமும், ஆந்திராவுக்கு கேஸ் ஸ்டவ் சின்னம் வாங்கியிருக்கிறது. அக்கட்சியின் தலைவரே சொல்லியிருக்கிறார், கரும்பு விவசாயி சின்னத்தை நான் கேட்கவில்லை; அவர்களாகவே கொடுத்தார்கள் என்று. அதில், தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களுக்குச் சேர்த்து கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, இடைத்தேர்தல், சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டிருக்கிறது. 7 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் இருப்பதிலேயே தனித்துவமான கட்சி என்று பார்த்தால், திமுக, அதிமுகவுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சிதான். அதை கணக்கில் கொள்ளாமல், அவர் முதலில் மனு கொடுத்ததாக கூறுகின்றனர்.

வெள்ள பாதிப்பு பணிகள் காரணமாக, நாங்கள் மனு அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த கால அளவுக்குள்தான் நாங்களும் மனு அளித்தோம். டார்ச் லைட் சின்னத்தை மநீமவுக்கு ஒதுக்கியப் பிறகுதான் எங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் விஷயமே எங்களுக்குத் தெரியவந்தது.

உண்மை என்னவென்றால், கர்நாடகாவில் இருந்து வந்தவர், கடந்த டிசம்பர் 17-ம் தேதி மனு கொடுத்திருக்கிறார். அவருக்கு முதல் நாளே கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் எப்படி வந்தது தெரியுமா?

தேர்தல் அறிவித்து 10 நாட்களுக்குப் பிறகு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்தனர். ஆனால், இந்த முறை தேர்தல் அறிவிக்கவே இல்லை. டிசம்பர் 17-ம் தேதியே எப்படி அந்த சின்னத்தை ஒதுக்கீடு செய்தார்கள்?

எனவே, திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகத்தான் இதை நான் கருதுகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் இருக்கக் கூடாது என்றுதான் நான் இதைப் பார்க்கிறேன். நாங்கள் கட்சி ஆரம்பித்தது, விவசாயி சின்னம் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கவில்லையே? நான் கொண்டுபோனதால்தான் அந்த சின்னம் விவசாயி” என்றா சீமான்.

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல் | Seeman met CEO of TamilNadu regarding Election Symbol issue - hindutamil.in

  • Replies 397
  • Views 22k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி சின்னம் சர்ச்சை குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பாண்டே பேட்டி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

கரும்பு விவசாயி சின்னம்.. வாய்ப்பில்ல ‘ராஜா’.. சீமானை சீண்டிய கட்சி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உச்சநீதிமன்றத்தில் விவசாயி சின்னம் வழக்கிற்காக நடத்தப்பட்ட திராவிட சதி பிரஸ்மீட்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காகத் தானோ வேலோடு வேங்கையையும் சேர்ந்துக் கொண்டீர்களோ சீ மான் ......உங்களுக்கு வருடத்pற்கு ஒரு சின்னம் தேவைபட்டால் என்ன செய்ய முடியும்.....வேலோடு வேங்கையை எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது அது தான் சொன்னேன்..✍️

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, யாயினி said:

அதுக்காகத் தானோ வேலோடு வேங்கையையும் சேர்ந்துக் கொண்டீர்களோ சீ மான் ......உங்களுக்கு வருடத்pற்கு ஒரு சின்னம் தேவைபட்டால் என்ன செய்ய முடியும்.....வேலோடு வேங்கையை எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது அது தான் சொன்னேன்..✍️

GIn-Uq-CVWs-AA2-Gq.jpg

இந்த லூசு கேள்வியை கேட்டே அங்கு அவங்கள் முன்னுக்கு வந்து விட்டாங்க .இனி ஒரே வழி லட்சுமியை கூப்பிடனும் ?........................😃

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் புதிய சின்னம் ஓட்டோவா??

24lives-jumbo.jpg?quality=75&auto=webp&d

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

சீமானின் புதிய சின்னம் ஓட்டோவா??

Default-A-mustache-turtle-with-sunglasse

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

Default-A-mustache-turtle-with-sunglasse

தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை. 

👎🏿

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

Default-A-mustache-turtle-with-sunglasse

இதுவும் நல்லா தான் இருக்கு.

முயலை மாதிரி ஓடி களைத்து படுக்கிறதை விட

ஆமை வேகத்தில் நிதானமா மெதுவா போய் முன்னேறலாம்.

நாம் தமிழரும் ஆமை வேகத்தில் மெதுமெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

சீமானின் புதிய சின்னம் ஓட்டோவா??

24lives-jumbo.jpg?quality=75&auto=webp&d

இல்லை அண்ணா இந்த‌ ஆட்டோ சின்ன‌மும் உப்பு ச‌ப்பில்லா க‌ட்சிக்கு போய் விட்ட‌து................திராவிட‌மும் ஆரிய‌மும் ஏதோ ச‌தியோட‌ தான் இந்த‌ முறை இற‌ங்கி இருக்கின‌ம்..............க‌ட்சி பிள்ளைக‌ள் பாவ‌ங்க‌ள் ர‌த்த‌தை வேர்வை ஆக்கி ம‌க்க‌ளிடம் கொண்டு சேர்த்த‌ சின்ன‌ம் விவ‌சாயி.............

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை. 

👎🏿

 

27 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுவும் நல்லா தான் இருக்கு.

முயலை மாதிரி ஓடி களைத்து படுக்கிறதை விட

ஆமை வேகத்தில் நிதானமா மெதுவா போய் முன்னேறலாம்.

நாம் தமிழரும் ஆமை வேகத்தில் மெதுமெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இப்ப‌டி சீண்ட‌ல் ந‌க்க‌ல் நையாண்டி செய்த‌ ப‌டியால் தான் கோவ‌ப் ப‌ட்டு யாழ்க‌ள‌மே வேண்டாம் என்று யாழை விட்டு போனான் போன‌ வ‌ருட‌ம்............பிற‌க்கு மோக‌ன் அண்ணாவின் அழைப்பை ஏற்று வ‌ந்தேன்................ஆனால் யாழில் குர‌ங்கு சேட்டை ஓய்ந்த‌ மாதிரி தெரிய‌ல.................என்னை அறியாம‌லே ர‌த்த‌ கொதிப்பு வ‌ரும் சில‌ரின் சேட்டைய‌ பார்த்தால்

இதை எல்லாம் க‌ட‌ந்து போவ‌து தான் சிற‌ப்பு...........

வெந்த புண்ணில் சுடுத‌ண்ணீர‌ ஊத்துவ‌து ம‌னித‌ குள‌த்துக்கே அழ‌கில்லை.............க‌ட்சி சின்ன‌த்தை மீட்க்க‌ அல்ல‌து புது சின்ன‌த்தை பெற‌ இர‌வு ப‌க‌ல் பாராது க‌ட்சி வழக்கறிஞர்கள் க‌டின‌மாய் பாடு ப‌டுகின‌ம்................உதவி செய்யாட்டியும் உவ‌த்திர‌ம் செய்ய‌க் கூடாது.........................
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இதுவும் நல்லா தான் இருக்கு.

முயலை மாதிரி ஓடி களைத்து படுக்கிறதை விட

ஆமை வேகத்தில் நிதானமா மெதுவா போய் முன்னேறலாம்.

நாம் தமிழரும் ஆமை வேகத்தில் மெதுமெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

ஆமைகளின் வழித்தடத்தை பின்பற்றி கடல்வழிகளை கண்டறிந்து உலகம் முழுவதும்  கடல்வழிப்பயணம் மேற்கொண்ட தமிழனின் பெருமை அறியாதோர் ஆமையினை இழிவாக பார்ப்பர். ஆமையினது வாழ்க்கை முறைகளை அறியாதோர்  அதனை கேவலமாக பார்ப்பர்.

நாம் தமிழர் கட்சிக்கு ஆமை சின்னம் பொருத்தமானதே. ஏனெனில் அது இயற்கையோடு ஒன்றி வாழும் உயிரினம். யாருக்கும் தீங்கு செய்யாத உயிரினம்.ஆறறிவு படைத்த மனிதனை விட நீண்ட காலம் வாழும் உயிரினம். ஆயிரம் முட்டைகள் போட்டாலும் அமைதியாய செல்லும் உயிரினம். ஆமையிடமிருந்து மனிதன் இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை படிக்க வேண்டும்.
 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

 

இப்ப‌டி சீண்ட‌ல் ந‌க்க‌ல் நையாண்டி செய்த‌ ப‌டியால் தான் கோவ‌ப் ப‌ட்டு யாழ்க‌ள‌மே வேண்டாம் என்று யாழை விட்டு போனான் போன‌ வ‌ருட‌ம்............பிற‌க்கு மோக‌ன் அண்ணாவின் அழைப்பை ஏற்று வ‌ந்தேன்................ஆனால் யாழில் குர‌ங்கு சேட்டை ஓய்ந்த‌ மாதிரி தெரிய‌ல.................என்னை அறியாம‌லே ர‌த்த‌ கொதிப்பு வ‌ரும் சில‌ரின் சேட்டைய‌ பார்த்தால்

இதை எல்லாம் க‌ட‌ந்து போவ‌து தான் சிற‌ப்பு...........

வெந்த புண்ணில் சுடுத‌ண்ணீர‌ ஊத்துவ‌து ம‌னித‌ குள‌த்துக்கே அழ‌கில்லை.............க‌ட்சி சின்ன‌த்தை மீட்க்க‌ அல்ல‌து புது சின்ன‌த்தை பெற‌ இர‌வு ப‌க‌ல் பாராது க‌ட்சி வழக்கறிஞர்கள் க‌டின‌மாய் பாடு ப‌டுகின‌ம்................உதவி செய்யாட்டியும் உவ‌த்திர‌ம் செய்ய‌க் கூடாது.........................
 

பையா

ஒரு கட்சி வளரரும் போது அதை இழிவுபடுத்த பலர் வருவார்கள்.ஒவ்வொருவரிடமும் போய் காலில் விழுவது கோழைத்தனம்.

அதையும் தாண்டி முன்னேறணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

`ஆட்டோ... படகு... மைக்...' - நாதக-வின் புதுச் சின்னம் சாய்ஸ் என்ன?

தேர்தல் நெருங்கிக் கொண்டே இருப்பதால், கட்சியின் சின்னம் என்ன என்ற ஆவல் கட்சிக்குள்ளும் நா.த.க ஆதராவாளர்கள் மத்தியிலும் கிளம்பியுள்ளது. அதே சமயம் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Published:Today at 9 AMUpdated:Today at 9 AMசீமான் | நாம் தமிழர்

சீமான் | நாம் தமிழர்

 
கரும்பு விவசாயி சின்னம் வேறுக் கட்சிக்கு வழங்கப்பட்டிருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு என்ன சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தக்கூடிய மற்றும் எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய சின்னங்களின் பட்டியலில் என்னென்ன இருக்கிறதென விசாரித்தோம்.
 
படகில் சீமான்
 
படகில் சீமான் ட்விட்டர்

2019 மற்றும் 2021 தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தாமதமாக விண்ணபித்தார்கள் எனக் கூறி, அந்தச் சின்னம் வேறுக் கட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தை நா.த.க நாடியபோது, வழக்கு தள்ளுபடியானது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நா.த.க-வின் மனு விசாரிக்கப்படுவதில் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. எனவே கரும்பு விவசாயி சின்னம் இல்லை என்றாலும் பரவாயில்லை... ஏதாவது ஒரு சின்னத்தைப் பெறுவோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர் நா.த.க-வினர். புதிய சின்னத்தைத் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் வேலைகள் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.

 

இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காதபட்சத்தில் ஆட்டோ சின்னத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற பேச்சு, கட்சிக்குள் வலுவாக இருந்தது. ஆட்டோவைப் பெற்றுவிட்டால், சின்னத்தைக் கொண்டு சேர்ப்பதில் சிக்கல்கள் இருக்காது எனக் கட்சி நிர்வாகிகள் சொல்ல, சீமானும் இசைவு தெரிவித்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக அதனையும் வேறு கட்சிக்கு ஒதுக்கிவிட்டது தேர்தல் ஆணையம். இதனால் கட்சியினர் கடும் அப்செட்டாகிவிட்டனர். தேர்தலுக்கான நாள்கள்கூட மிக குறைவாக இருப்பதால், சின்னம் கிடைத்தால்தான் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரசாரத்தைத் தொடங்கக்கூடிய சூழலும் நிலவுகிறது. எனவே ஏதாவது ஒரு சின்னத்தைப் பெற்று களத்துக்குச் செல்வோம் என ஆயத்தமாகி வருகிறது நா.த.க” என்றனர்.

சீமான்
 
 

கட்சியின் உள்விவகாரமறிந்த சிலரோ, ``இந்த தேர்தலில் நா.த.க எதிர்பார்க்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் அவ்வளவு எளிதாக தந்துவிடாது. ஆட்டோ சின்னம் கிடைக்கும் என பெரிதும் நம்பினோம். அதனை மனதில் வைத்தே மஞ்சள் வண்ணத்தில் `நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்ன?' என போஸ்டரை ஊர் முழுக்க ஒட்டினோம். ஆனால் அதுவும் வேறு கட்சிக்குப் போய்விட்டது. தென்னந்தோப்பு, பேனா முனை சின்னங்களும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுவிட்டன. விவசாயம் சம்பந்தப்பட்ட எந்தச் சின்னத்தையும் பட்டியலிலேயே வைக்கவில்லை தேர்தல் ஆணையம்.

 

இதுவரை யாரும் தேர்வு செய்யாத சின்னம் என்னவென தேடினால் படகு, கப்பல், மைக், தீப்பெட்டி, பழக்கூடை, வைரக்கல், தடி உள்ளிட்ட சின்னங்கள் இருக்கின்றன. மற்றபடி தலைகவசம், ஜன்னல், செருப்பு, கால்பந்து, ஆப்பிள், சிசிடிவி கேமரா எனத் துளியும் ஏற்கத்தக்க சின்னங்களே இல்லை. அதேசமயம் என்ன சின்னத்தை தேர்வு செய்யலாம்... அதன் நடைமுறைகள் என்னவென்ற ஆலோசனைகள் கட்சிக்குள் போய்க் கொண்டிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னத்துக்கான வழக்கும் வரவுள்ளதால், நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்னவென ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றனர்.

போஸ்டர்
 
 

சின்னம் தொடர்பான வழக்குகளில் அனுபவம்பெற்ற வழக்கறிஞர் சக்திவேலிடம் இது தொடர்பாகப் பேசினோம். ``உச்ச நீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான மனுமீதான விசாரணை எப்படி நடக்கும், அதன் தீர்ப்பு எப்படி இருக்குமென இப்போதே சொல்ல முடியாது. அதேசமயம் இந்த குறுகிய காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்குமா என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. வழக்கு ஒருபக்கம் நடந்தாலும், மறுபக்கம் பொதுச் சின்னம் கேட்டு கட்சி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம். 15 சின்னங்கள் அடங்கிய பட்டியலை அவர்கள் ஆணையத்திடம் வழங்க வேண்டும் அல்லது புதியவொரு சின்னத்தை டிசைன் செய்து அதனை ஒதுக்க வேண்டுமென்றுகூட கோரிக்கை வைக்கலாம். ஆனால் தேர்தல் நெருங்கிவருவதால் என்ன நடக்குமென பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்” என்றார்.

`ஆட்டோ... படகு... மைக்...' - நாதக-வின் புதுச் சின்னம் சாய்ஸ் என்ன? | What is the new symbol of Naam Tamilar party? - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம்

12-18.jpg

பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம் என்று சீமான் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=271822

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம்

IMG-6049.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு இலவச பரப்புரையை கிந்திய அரசு வழங்கி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ சின்ன‌ம்
க‌ட்சி த‌லைமை ஏற்க்க‌ வில்லையாம்
வேறு சின்ன‌ம் கேட்டு இருக்கின‌ம்
நாளை தெரியும் என்ன‌ சின்ன‌ம் என்று...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

`மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதில் சீமான் அப்செட்? - மாற்றுச் சின்னம் கோரப்போகிறதா நாதக?

சின்னம் இல்லாமல் காத்திருந்த நாம் தமிழர் கட்சிக்கு, `மைக்` சின்னம் ஒதுக்கியிருந்தது தேர்தல் ஆணையம். ஆனால் இச்சின்னத்தை நா.த.க ஏற்க தயாராக இல்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இது குறித்து விரிவாக விசாரித்தோம்.

 
 
 

2019 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் வசமிருந்த கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சியின் புதுச்சின்னம் என்னவென்ற ஆவல் கட்சிக்குள்ளும், கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியிலும் அதீதமாக இருந்தது. இந்நிலையில் மார்ச் 21-ம் தேதி நா.த.க-வுக்கு `மைக்' சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இச்செய்தி மார்ச் 22-ம் தேதி வெளியாகவே... சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. ஆனால் நாம் தமிழர் கட்சி தரப்பிலோ, அதன் நிர்வாகிகளோ இது குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருப்பது, பேசுபொருளாகியிருக்கிறது.

மைக் சின்னம்
 
மைக் சின்னம்

இது குறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் வழங்கப்படும் என நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இரு தினங்களாகவே ஆட்டோ, பேனா முனை, அரிக்கன் விளக்கு போன்ற சின்னங்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.

 

ஆனால் அவை அனைத்தும் வதந்தியே. கட்சியின் தலைமை, அதிகாரபூர்வமாக அறிவிக்கும்வரை எதையும் நம்ப வேண்டாம் என நோட் அனுப்பியிருக்கிறது. இதற்கிடையில் அதிகாரபூர்வமாகவே தேர்தல் ஆணையம் `மைக்` சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கியது. இருந்தும் சீமானோ... தலைமை நிர்வாகிகளோ இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தனர். `தலைமை அறிவிக்கும்வரை காத்திருங்கள்’ என அதே மெசேஜைத்தான் மீண்டும் அனுப்பினர். இதனால் கட்சிக்குள் என்ன நடக்கிறதென்ற சந்தேகம் கிளம்பியிருக்கிறது” என்றனர் .

சின்னம் போஸ்டர்
 
சின்னம் போஸ்டர்

தலைமைக்கு நெருக்கமான சிலரோ, ``நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது அதிகாரபூர்வமானதுதான். ஆனால் அதில் எங்களுக்கு ஏற்பில்லை. அன்றாடம் பயன்படுத்தும் மைக்போல் இல்லாமல் வேறு வடிவில் இருக்கிறது. இதனை வாக்குப்பெட்டியில் மக்களால் எளிதில் அடையாளம் காணமுடியுமா என்ற கேள்வி இருக்கிறது.

 

அதேசமயம் `மைக்’ என்பது ஆங்கில சொல்... `ஒலிவாங்கி` என தமிழ்படுத்தி பேசினால் மக்கள் புரிந்துகொள்வது கடினம். மேலும் எங்கள் தலைமை ஒருங்கிணைப்பாளருக்கும் அதில் ஏற்பில்லை. எனவே தேர்தல் ஆணையத்தை ஆணுகி வேறு சின்னம் கோர முடிவெடுத்துள்ளோம். ஆங்கிலச் சொல்லாக இருந்தாலும் எளிதில் சென்றடையக்கூடிய ஆட்டோ சின்னமோ... தீப்பெட்டி சின்னமோ கேட்டிருக்கிறோம். இல்லாவிடில் படகு, கப்பல் போன்ற சின்னங்களுக்கும் தேர்வு செய்து வைத்திருக்கிறோம். மார்ச் 23-ம் தேதி மாலை வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் நடக்கவுள்ளது. அதற்குள் மாற்றுச் சின்னம் கிடைக்கும் என நம்புகிறோம், அப்படி எதுவுமே வொர்க்-அவுட் ஆகாத நிலையில் `மைக்’ சின்னத்தோடு பிரசாரத்துக்குக் கிளம்புவோம்” என்றனர்.

 

சீமான்
 
சீமான்

தொடர்ந்து பேசியவர்கள், ``நாங்கள் கேட்கும் ஆட்டோ, தீப்பெட்டி ஆகிய சின்னங்கள் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. ஆனால் இப்படித்தான் 2021 தேர்தலில் வேறு கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது, சம்பந்தபட்டவரிடம் தடையில்லா சான்று பெற்று தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கொடுத்ததும், `டார்ச் லைட்’ சின்னத்தை மீண்டும் அவர்களுக்கே ஒதுக்கினர். அதுபோல் ஆட்டோ, தீப்பெட்டி சின்னத்தைப் பெற முயல்வோம்” என்றனர்.

`மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதில் சீமான் அப்செட்? - மாற்றுச் சின்னம் கோரப்போகிறதா நாதக? | Naam tamizhar Katchi dislikes Mike Symbol expects other symbol from ECI - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம் என்று சீமான் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு என்ன இனி  தேர்தல் மெசினின் சாட்டுக்கள் எல்லாம் வேவைபடாது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

சீமானுக்கு இலவச பரப்புரையை கிந்திய அரசு வழங்கி உள்ளது.

சீமான் என்றால் யார் என்றே தெரியாத ஜனம்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்து உள்ளார்கள் .அதே போல் நம்ம kavi அருணாசலம் ஐய்யா  வரைந்த ai கார்ட்டூன் ஆமை சூப்பராக உள்ளது அது அவர்களின் சின்னமாக இருந்தால் இன்னும் சூப்பர் .

என்ன இருந்தாலும் இந்திய அரசியலில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது வெகு அபூர்வம் அதை சீமான் உணராதவரை அவர் வெளியில்தான் இருப்பார் பையன்26 குறை நினைக்கவேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

சீமான் என்றால் யார் என்றே தெரியாத ஜனம்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்து உள்ளார்கள் .அதே போல் நம்ம kavi அருணாசலம் ஐய்யா  வரைந்த ai கார்ட்டூன் ஆமை சூப்பராக உள்ளது அது அவர்களின் சின்னமாக இருந்தால் இன்னும் சூப்பர் .

என்ன இருந்தாலும் இந்திய அரசியலில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது வெகு அபூர்வம் அதை சீமான் உணராதவரை அவர் வெளியில்தான் இருப்பார் பையன்26 குறை நினைக்கவேண்டாம். 

இதில் கோவிக்க‌ என்ன‌ இருக்கு பெருமாள் அண்ணா............அண்ண‌ன் சீமானின் அர‌சிய‌ல் ப‌ய‌ண‌ம் நீண்ட‌ தூர‌ம் என்று தெரியும்...............கால‌மும் நேர‌மும் கூடி வ‌ரும் போது த‌மிழ் நாட்டில் மாற்ற‌ம் வ‌ரும்.............................

Screenshot-20240323-121907-Chrome.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

என்ன இருந்தாலும் இந்திய அரசியலில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது வெகு அபூர்வம் அதை சீமான் உணராதவரை அவர் வெளியில்தான் இருப்பார் பையன்26 குறை நினைக்கவேண்டாம். 

இதையே தான் நானும் எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இதையே தான் நானும் எண்ணுகிறேன்.

யூடுப்பில் 40தொகுதி வேட்பாள‌ர்க‌ள் அறிமுக‌ கூட்ட‌த்தை பார்த்தேன்

வீர‌ப்ப‌னின் ம‌க‌ள் இந்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஒரு தொகுதியில் போட்டியிடுறா

வீர‌ப்ப‌னின் ம‌க‌ளின் பெய‌ரை சொன்ன‌தும் கை த‌ட்ட‌ல் கூச்ச‌ல் அதிக‌ம் வெளிப்ப‌டையாய் சொல்ல‌னும் என்றால் அந்த‌ இட‌மே அதிர்ந்த‌து👍👏.................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.