Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1-638x375.png

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அதன்படி, இன்று முதல் 3 நாட்களுக்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதுடன். ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்நிலையில், வாக்குரிமையை உணர்ந்து வாக்காளர்கள் செயற்பட வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யா தற்போது ஜனாதிபதி தேர்தலை சந்தித்திருக்கிறது.

உக்ரைன் போரால் இராணுவச் செலவினம் அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெபெற்று வருகிறது.

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வரும் புடின், சுமார் 20 வருடமாக ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

இதனிடையே உக்ரைன் மீது போர் தொடங்கிய பிறகு புடினுக்கு உள்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

மேலும் சமீபத்தில் ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி மர்மமான முறையில் உயிரிழந்ததும் புடினுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.

இந்த தேர்தல் புடினின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால், புடின் வெற்றி பெற்றி மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றார்.

அதன்படி, இந்த ஜனாதிபதி தேர்தலில் புடின் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

புடினை எதிர்த்து மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 3 கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த 06 ஆண்டுகளுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதியாக புடின் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் சுமார் 11.4 கோடி பேர் வாக்களிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

https://athavannews.com/2024/1373584

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

வாக்குரிமையை உணர்ந்து வாக்காளர்கள் செயற்பட வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

IMG-6022.jpg

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kavi arunasalam said:

IMG-6022.jpg

இவருக்கு உள்நாட்டில் எதிரிகளும் உயிருடன் இல்லை. வாரிசுகளும் இல்லை. அடுத்த கட்ட தலைவர்களும் இல்லை. இவர் போன பின், ரஷ்யா ஒரு அதிகாரப் போட்டியில் சிக்கித் தவிக்கப் போகின்றது என்று நேற்று ஒரு ஆங்கில ஊடகத்தில் கட்டுரையொன்று வந்திருந்தது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG-6022.jpg

இந்த மருந்து, மாயங்கள், மந்திரங்கள் ரஷ்யாவில் மட்டும்தானா? அல்லது நம் கண்கள் பார்க்க மறுக்கின்றனவா? :cool:

என்னைப் பொறுத்தவரைக்கும் ஐரோப்பாவில் சில நாடுகளை தவிர உலகில் உள்ள மற்ற நாடுகளில் எல்லாவற்றிலும் பயங்கர சுத்துமாத்து தேர்தல் தான் 😛

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் புதினுக்கு எவ்வளவு வெற்றி அதிகம் என்று காட்டுகின்றதோ அவ்வளவிற்கு ரஷ்யாவில் அவருக்கு உண்மையான ஆதரவு மிகவும் குறைவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புடின் தேர்தலில் தோல்வியுற்றால், அவரின் நிலை என்னாகும்? யாரின் நிலையோடு ஒப்பிடலாம் அவரை? கிட்லர்.....? முசோலினி....? எதற்கும் ஒரு முடிவுண்டு. அது அவரின் அழிவோடுதான் தொடங்கும். இருபது ஆண்டுகளாக உலக மக்களின் மன அமைதியை அழித்து ரசித்தது போதாதா இவருக்கு? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

20 ஆண்டுகளாக ரஸ்யா எத்தனை நாடுகளுக்கெதிராக படையெடுத்து உலக மக்களின் அமைதியை அழித்தது என்பதையும் கூடவே கூறினால் அறிந்து,  புரிந்து, தெளிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, satan said:

இதென்ன கோதாரி புதுக்கதையாய் கிடக்கு? புட்டினாலை உலக அமைதி கெட்டதா? எப்பிடியெண்டு ஒருக்கால் சொல்லுங்கோ...😂
சாத்தனார் நித்திரைப்பாயால எழும்பி வந்து கதைக்கிறார் எண்டு நினைக்கிறன்...🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

புடின் தேர்தலில் தோல்வியுற்றால், அவரின் நிலை என்னாகும்?

அதற்காக தான் புடின்  ஏற்கெனவே எதிர்கட்சிகாரர்களை ஒழித்து கிளீன் பண்ணி எல்லாம் வைத்திருக்கிறார். இந்த தேர்தல் அவர் காட்டும் ஒரு நாடகம் ஒரு ஷோ.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

20 ஆண்டுகளாக ரஸ்யா எத்தனை நாடுகளுக்கெதிராக படையெடுத்து உலக மக்களின் அமைதியை அழித்தது என்பதையும் கூடவே கூறினால் அறிந்து,  புரிந்து, தெளிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். 

சீ சீ

அவரது ஆயுதம் நஞ்சுப்போத்தல் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

சீ சீ

அவரது ஆயுதம் நஞ்சுப்போத்தல் மட்டுமே.

புடினால் உலக் அமைதி கெட்டது என்று கூறினால் அதற்கு ஆதாரம் கொடுங்கள். இல்லையென்றால் உங்கள் வாதம் அபவாதமாகிவிடும்  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Kapithan said:

புடினால் உலக் அமைதி கெட்டது என்று கூறினால் அதற்கு ஆதாரம் கொடுங்கள். இல்லையென்றால் உங்கள் வாதம் அபவாதமாகிவிடும்  😁

ஆதாரம் இருந்தால் தானே குடுக்கிறது😁. ஆனால் மேற்குகின் நடவடிக்கைகளினால்த்தான் இந்த உலக அமைதி கெட்டது எண்டதுக்கு கண்ணுக்கு முன்னே நிறைய ஆதாரங்கள் இருக்கு 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஆதாரம் இருந்தால் தானே குடுக்கிறது😁. ஆனால் மேற்குகின் நடவடிக்கைகளினால்த்தான் இந்த உலக அமைதி கெட்டது எண்டதுக்கு கண்ணுக்கு முன்னே நிறைய ஆதாரங்கள் இருக்கு 😎

காமாளைக் கண்களாக இருக்குமோ? 🥺

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி  மற்றும் கனடா ...போன்ற நாடுகளை  புதின். ஆட்சியில் இருப்பதாக கற்பனை செய்வோம்’’,.....ஜேர்மனியிலும்  கனடாவிலும். தொடர்ந்து வாழ்வீர்கள். அல்லது நாட்டை விட்டுட்டு வெளியேறுவீர்களா?? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனி  மற்றும் கனடா ...போன்ற நாடுகளை  புதின். ஆட்சியில் இருப்பதாக கற்பனை செய்வோம்’’,.....ஜேர்மனியிலும்  கனடாவிலும். தொடர்ந்து வாழ்வீர்கள். அல்லது நாட்டை விட்டுட்டு வெளியேறுவீர்களா?? 

கனடா மற்றும் ஜேர்மனியில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன என தெரியுமா?
அந்தந்த கட்சிகளின் கொள்கைகள் என்னவென்று தெரியுமா?

சரி கனடா வேண்டாம். ஜேர்மனியில் உள்ள கட்சிகளின்  கொள்கைகள் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தொடங்கி யேர்மனி  அஸ்ரேலியா வரை ஏதாவது ஒரு மேற்குலக நாட்டில்  புதின்  ஆட்சி அங்கே இருந்தால் , நான் அந்த நாட்டில் வாழ்வதற்கு பிரவேசிப்பதை நினைத்து கூட பார்க்க மாட்டேன். ஆகவே அந்த நாட்டில்  புதின் ஆட்சியில் இருந்தால் தொடர்ந்து வாழ்வீர்களா அல்லது நாட்டை விட்டுட்டு வெளியேறுவீர்களா என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடுகின்றது.  நான் மட்டுமல்ல மேற்குலகநாடுகளில் குடியேறிய அத்தனை ஈழதமிழர்ககளின் நிலையும் அது தான் என்பது நான் சொல்லி தான் தெரிய வேண்டியது இல்லை.
புதின் கனடாவில் ஆட்சியில் இருந்தால் கனடா நாசம் அஸ்ரேலியாவில் அல்லது யேர்மனியில் ஆட்சியில் இருந்தால்  அந்த நாடுகள் நாசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்ரேலியா , கனடா ,ஜேர்மனி , பிரான்ஸ் ,   பெரிய பிரித்தானியா போன்ற சுகபோக , மனித உரிமைகளுக்கு பொங்கியெழும் மேற்குலக நாடுகள் தான் இலங்கையில் நடந்த / நடந்து கொண்டிருக்கும் அழிவுகளையும் மனித உரிமை மீறல்களையும் கண்டும் காணாமலும் இருக்கின்றன. அவற்றை விவாதிக்க வக்கில்லாமல்..... ரஷ்ய/ நேட்டோ அரசியலுக்குள் வந்து தம் சுக போக வாழ்க்கைக்காக குத்தி முறிவதன் நோக்கங்களும் யாவருக்கும் புரிந்ததே.

நான் ஜேர்மனியின் ஒரு கட்சி சார்ந்து கருத்துக்களை பகிர்கின்றேன். அவ்வளவுதான்.
 
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கனடா தொடங்கி யேர்மனி  அஸ்ரேலியா வரை ஏதாவது ஒரு மேற்குலக நாட்டில்  புதின்  ஆட்சி அங்கே இருந்தால் , நான் அந்த நாட்டில் வாழ்வதற்கு பிரவேசிப்பதை நினைத்து கூட பார்க்க மாட்டேன். ஆகவே அந்த நாட்டில்  புதின் ஆட்சியில் இருந்தால் தொடர்ந்து வாழ்வீர்களா அல்லது நாட்டை விட்டுட்டு வெளியேறுவீர்களா என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடுகின்றது.  நான் மட்டுமல்ல மேற்குலகநாடுகளில் குடியேறிய அத்தனை ஈழதமிழர்ககளின் நிலையும் அது தான் என்பது நான் சொல்லி தான் தெரிய வேண்டியது இல்லை.
புதின் கனடாவில் ஆட்சியில் இருந்தால் கனடா நாசம் அஸ்ரேலியாவில் அல்லது யேர்மனியில் ஆட்சியில் இருந்தால்  அந்த நாடுகள் நாசம்.

மேற்கு நாடுகளில் உள்ள சனநாயக அரசியல் முறைகளைக் கேட்டு , தெளிந்து, அங்கே அகதிகளாகக் குடியேறி,  பின்னர்  பார்த்து தெளிந்த பின்னரே எம்மககள் அங்கே அகதிகலாகச் செல்கிறார்கள் என்று தாங்கள் நம்புவீர்களானால் யாழ் களத்திலுள்ள மிகப் பெரும்பாலானோர் ஒரு நமுட்டுச் சிரிப்புத்தான் சிரிப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒடிசாவில் இறந்த இராணுவத்தினர்

⚠️#Ukraine - Détails sur la frappe Iskander🇷🇺 sur Odessa -3/4- ▪️Encadrants étrangers (OTAN) éliminés identifiés : Klaus Fischer🇩🇪, Jurgen Schmidt🇩🇪, Kevin Miller🇺🇸, Philippe Leblanc🇫🇷, Stefan Dragomirescu🇷🇴 ⏬
 
Image
 
⚠️#Ukraine - Détails sur la frappe Iskander🇷🇺 sur Odessa -4/4- ➡️Au total, plus de 45 à 50 étrangers et militaires🇺🇦 ont été tués par la frappe, tandis que le nombre de blessés dépasse les 100 personnes (et non pas 550 comme évalué précédemment)
 
Image
 
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

20 ஆண்டுகளாக ரஸ்யா எத்தனை நாடுகளுக்கெதிராக படையெடுத்து உலக மக்களின் அமைதியை அழித்தது

21 hours ago, Kapithan said:

இருபது ஆண்டுகளாக உலக மக்களின் மன அமைதியை அழித்து ரசித்தது போதாதா இவருக்கு? 

ரஸ்யா படை எடுத்து உலக மக்களின் அமைதியை கெடுத்தது என்று நான் கூறவில்லை. அதை தேடிப்பிடிக்க எனக்கு அறிவு காணாது. ஆனால், வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி எத்தனையோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் தடுத்து அதிகார வர்க்கத்தை காப்பதும் மக்களின் அமைதி வாழ்வை கெடுப்பதே. வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இனி, புடின் ஆட்சிக்கு வந்தாலும் அவரால் முன்னுபோல் ஆட்சி செலுத்த அவரது  உடல், பிற காரணிகள் இடம் கொடுக்குமா என்பதும் கேள்விக்குறியே. இவருக்கென ஒரு துரோகி பிறக்காமலா இருப்பார்?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, satan said:

ஐயா,

ஒருவருக்குப் பிடிக்கும், இன்னொருவருக்குப் பிடிக்காது என்பதற்கப்பால் உண்மை  என்கிற ஒன்று இருக்கிறதல்லவா?

அதுதான் நிஜம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

கனடா மற்றும் ஜேர்மனியில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன என தெரியுமா?
அந்தந்த கட்சிகளின் கொள்கைகள் என்னவென்று தெரியுமா?

சரி கனடா வேண்டாம். ஜேர்மனியில் உள்ள கட்சிகளின்  கொள்கைகள் என்ன?

தெரியாது,........தெரிந்து என்ன செய்து விட முடியும்??   எத்தனை கட்சிகள் இணைந்தாலும். ஆட்சியைக் கைப்பற்றுவது 

கொள்கைகளில் வித்தியாசம் இருக்கலாம் ஆனால் செயல்களில் இல்லை ...உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள் வாசிக்கலாம் 

குறிப்பு,....நான் கேட்ட கேள்வி,...............க்கு,     பதில் எங்கே,. எங்கே,.... ???????????????????? 

5 hours ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனியின் ஒரு கட்சி சார்ந்து கருத்துக்களை பகிர்கின்றேன். அவ்வளவுதான்.

உங்கள் கட்சி  முள்ளிவாய்க்காலின்போது என்ன பணி அற்றினார்கள??    இலங்கை தமிழருக்கு என்ன தீர்வை பெற்று தருவார்கள்??   தமிழ் ஈழம்  அல்லது இலங்கை என்ற ஒற்றை ஆட்சியில் தீர்வ?? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kandiah57 said:

ஜேர்மனி  மற்றும் கனடா ...போன்ற நாடுகளை  புதின். ஆட்சியில் இருப்பதாக கற்பனை செய்வோம்’’,.....ஜேர்மனியிலும்  கனடாவிலும். தொடர்ந்து வாழ்வீர்கள். அல்லது நாட்டை விட்டுட்டு வெளியேறுவீர்களா?? 

வெளியேற மாட்டேன்.. ஏன் நான் வெளியேற வேண்டும்? 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த தேர்தல் நடக்குது?

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் போர் மூலம் அதிக அகதிகளை உருவாக்கிய பெருமை.. ஒபாமாவை சாரும்.. அவருக்கு உலக சமாதான நோபல் பரிசு.

உலகில் பேரழிவு ஆயுதம்.. அணு குண்டு வீசிய நாடு அமெரிக்கா. அதற்கு சனநாயக வேசம்.

உலகில் மாபியாக்கள் அதிகம் உள்ள நாடுகள்.. மேற்கு ஐரோப்பிய நாடுகள்.. இவைக்கு உலக மனித உரிமை காக்கும்.. வேசம். 

இதுகளோடு ஒப்பிடும் போது ரஷ்சியாவும் புட்டினும் எவ்வளவோ மேல்.

உக்ரைன் ரஷ்சியாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத வரலாற்று உண்மை தெரியாதவர்களோடு ரஷ்சியா.. புட்டின் மட்டுமல்ல.. யாராலும் எந்த உண்மையான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. உதாரணத்துக்கு சொறீலங்காவில் தமிழர் தாயக இருப்பை மறுப்பவர்களுக்கு ஒப்பானது. 

Edited by nedukkalapoovan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.