Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ரஸ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார்.

தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 87 வீதமான வாக்குகள் புட்டினுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி புட்டின் ஐந்தாம் தடவையாகவும் ரஸ்யாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

வாக்கு பதிவு

ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி | Kremlin Vladimir Putin Claim Landslide

கடந்த மூன்று நாட்களாக ரஸ்யாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலப் பகுதியில் பல்வேறு எல்லைப் பகுதிகளில் உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தேர்தலில் புட்டினை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர் என்பதுடன் அவர்கள் பெயரளவில் தேர்தலில் போட்டியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புட்டினுக்கு எதிரான போட்டியிடக் கூடிய வலுவான வேட்பாளர்கள் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.

ரஸ்யாவின் அபிவிருத்தியை மேற்குலக நாடுகள் தடுக்கின்றன

ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி | Kremlin Vladimir Putin Claim Landslide

 

எதிர்பார்க்கப்பட்டவாரே தேர்தலில் தாம் வெற்றியை பதிவு செய்ததாக புட்டின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்தியை மட்டுப்படுத்தும் நோக்கில் மேற்குலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளின் முயற்சிகளை முறியடித்து ரஸ்ய மக்கள் தங்களது ஒற்றுமையை தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், இராணுவத்தை விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என புட்டின் தெரிவித்துள்ளார்.

இம்முறை தேர்தலில் 74 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக ரஸ்ய அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

https://tamilwin.com/article/kremlin-vladimir-putin-claim-landslide-1710720576

 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜோசப் ஸ்டாலினை கடந்து அதிக காலம் ரஷ்யாவை கட்டி ஆளும் புடின்!

adminMarch 18, 2024
puttin.jpg

ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88% வாக்குகளைப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.

இந்தியாவை விட பல மடங்கு பெரியதாக விளங்கும்  ரஷ்யா, உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தாலும்    15 கோடி மக்கள் தொகையை கொண்டதாகவே விளங்குகிறது.

அங்கே ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். ரஷ்யாவில் சர்வ வல்லமை பெற்ற தலைவராக இருப்பவர் விளாடிமிர் புடின். இவர் கடந்த 1999 முதல் அங்கே அசைக்கவே முடியாத தலைவராக இருக்கிறார்.

இந்த நிலையில் அங்கே புதிய ஜனாதிபதி தேர்வு தேர்தல் நடந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் வென்றதாக முதற்கட்ட தேர்தல் முடிவுகளில் தெரியவருகிறது. இதன் மூலம் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவியில் தொடர்வது உறுதியாகி இருக்கிறது.

ரஷ்யாவில் பதிவான வாக்குகளில் 87.8% வாக்குகள் புடினுக்கு கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பின் ரஷ்யாவில் நடந்த தேர்தலில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச வாக்குகள் இதுவாகும். 1999இல் அதிகாரத்திற்கு வந்த புடின், ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்துள்ளார்.

ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த 200 ஆண்டுகளில் அதிக காலம் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ஜோசப் ஸ்டாலினை புடின் கடந்துள்ளார்.

உக்ரைன் போருக்குப் பிறகு அங்கே நடக்கும் முதல் தேர்தலாக இது இருக்கும் நிலையில், புடின் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

அதேநேரம் ரஷ்யாவில் நடக்கும் தேர்தலை மேற்குலக நாடுகள் எப்போதும் விமர்சித்தே வருகிறார்கள்.  அங்குள்ள எதிர்க்கட்சிகள் போட்டியிட அனுமதிக்கப்படுவதில்லை. வேறுமனே பெயரளவில் சில கட்சிகளை மட்டும் போட்டியிட அனுமதிக்கிறார்கள் என்ற விமர்சனமும் உள்ளது.

இந்த முறையும் கூட புடினை வலிமையாக எதிர்க்கும் அளவுக்கு எந்தவொரு வேட்பாளரும் களத்தில் இல்லை என்பதே உண்மை.

ரஷ்யாவை பொறுத்தவரை அங்கே ஒரே நபரால் தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபரா இருக்க முடியாது என்ற விதி இருந்தது. இதன் காரணமாகவே 1999இல் பதவிக்கு வந்த புதின் 2008இல் ஜனாதிபதி பதவியைத் தனது நண்பர் டிமிட்ரி மெட்வெடேவ் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு முறை மட்டும் பிரதமராக இருந்தார்.

அதன் பின் மீண்டும் 2012இல் அதிபரான அவர், இந்தச் சட்டத்தை மாற்றினார். அதாவது ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்ந்து ஜனாதிபதியாக இருக்கலாம் என்று விதியை மாற்றினார்.

மேலும், ஜனாதிபதி பதவிக் காலமும் அப்போது 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது புடின் பிரதமராக இருந்த போது 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.

புடின் சாகும் வரை ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததாக விமர்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2024/201236/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேர்தல் முடிவுகள் ரஸ்யா மீதான மேற்கின் நெருக்குதல்கள் ரஸ்யர்களை ஒன்று சேர்த்துவிட்டன என்று கூறலாமா? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, Kapithan said:

தேர்தல் முடிவுகள் ரஸ்யா மீதான மேற்கின் நெருக்குதல்கள் ரஸ்யர்களை ஒன்று சேர்த்துவிட்டன என்று கூறலாமா? 

எல்லாம் கள்ள ஓட்டுக்கள் எண்டு சொன்னாலும் சொல்லுவினம் 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் கள்ள ஓட்டுக்கள் எண்டு சொன்னாலும் சொல்லுவினம் 🤣

இதுவரை ஒருவரும் மூச்சு விடவில்லை.  மக்களிடம் போணியாகாது (🤣) என்று புரிந்துகொண்டனர் போலத் தெரிகிறது. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது மகளிடம் இத்தேர்தல் பற்றி கேட்டேன். தன்னுடன் படிக்கும் இரு ரசிய பிள்ளைகள் சொன்னார்களாம் அது தேர்தலே அல்ல வெறும் நாடகம் என்று. 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

icegif-105.gif

அமோக வெற்றியீட்டிய ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு வாழ்த்துக்கள். 🥰

  • Haha 1
Posted
51 minutes ago, விசுகு said:

எனது மகளிடம் இத்தேர்தல் பற்றி கேட்டேன். தன்னுடன் படிக்கும் இரு ரசிய பிள்ளைகள் சொன்னார்களாம் அது தேர்தலே அல்ல வெறும் நாடகம் என்று. 

உண்மையான நாடகம் கார்த்திகையில் வரவுள்ளது. Stay tuned.🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

எனது மகளிடம் இத்தேர்தல் பற்றி கேட்டேன். தன்னுடன் படிக்கும் இரு ரசிய பிள்ளைகள் சொன்னார்களாம் அது தேர்தலே அல்ல வெறும் நாடகம் என்று. 

அவர் நியாயமான தேர்தலை நடத்த முடியாது,.....அப்படி நடத்தி தோல்வி அடைந்தால் [ கண்டிப்பாக தோல்வி அடைவார்] ..ரஷ்யாவில் தெருக்களில் சாதாரணமாக மற்றைய குடிமகன்கள் போல நடந்து திரிய முடியாது ..அங்கு வாழும் மக்களே  இந்த உலகத்தை விட்டு அனுப்பி வைப்பார்கள்   இது புடினுக்கு   100 % தெரியும்  எனவே… ஒரு மனிதன் வாழட்டும் ஆளட்டும். வாழ்த்துக்கள்  🙏.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதின்: 'போக்கிரி' சிறுவன் முதல் எதிராளியே இல்லாமல் 5-வது முறை ரஷ்ய அதிபரானது வரை - எப்படி சாதித்தார்?

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,GAVRIIL GRIGOROV/POOL/AFP

2 மணி நேரங்களுக்கு முன்னர்

விளாதிமிர் புதின் ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராகவிருக்கிறார்.

ரஷ்யாவில் 2000-ஆம் ஆண்டு முதல் அவர் அதிகாரத்தில் உள்ளார்.

சோவியத் யூனியனின் முன்னாள் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு எந்தவொரு ரஷ்ய தலைவரும் இவ்வளவு நீண்டகாலம் ரஷ்யாவின் தலைமைப் பொறுப்பில் இருந்ததில்லை.

ரஷ்ய அதிபர் தேர்தல் முடிந்து, 71 வயதாகும் புதின் ஐந்தாவது முறையாக அதிபராகத் தயாராகி வரும் நிலையில், அவரை எதிர்க்க ரஷ்யாவில் யாரும் இல்லை என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் விரும்பினால், 2036 வரைகூட அதிபராக நீடிப்பதைத் தடுக்க முடியாது.

ஆனால், புதின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முற்றிலும் தற்செயலானது.

கேஜிபி என்றழைக்கப்படும் சோவியத் யூனியன் உளவுத்துறையின் முன்னாள் பணியாளரான புதின், அவருக்கு முன் அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சினின் உள்வட்டத்தில் சரியான நேரத்தில் இணைந்தார்.

‘நான் ஒரு போக்கிரியாக இருந்தேன்’

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

புதின், ஜூடோ, சாம்போ போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டார்

விளாதிமிர் புதின் தனது குழந்தைப் பருவத்தை, கம்யூனிஸ்ட் லெனின்கிராட் நகரில் உள்ள ஒரு பொதுக் குடியிருப்பில் கழித்தார்.

அந்நாட்களில் தெருக்களில் தன்னைவிட பெரிய, வலுவான சிறுவர்களுடன் அவர் சண்டை போடுவார். அந்நாட்களைத் நினைவுகூர்ந்து, தான் ‘போக்கிரித்தனமாக’ இருந்ததாக அவரே கூறியிருக்கிறார்.

அந்த நினைவுகளைப் பற்றி 2015-இல் பேசிய அவர், “அந்த தெருச்சண்டைகள் முக்கியமான ஒன்றை எனக்குக் கற்றுக்கொடுத்தன. சண்டையைத் தவிர்க்க முடியாதெனில், நாம் தான் முதல் அடியை அடிக்க வேண்டும்,” என்றார்.

பின்னாட்களில் ஜூடோ, சாம்போ போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டார். தனது பால்யகால நண்பர்களான அர்காடி ரோட்டன்பர்க் மற்றும் போரிஸ் ரோட்டன்பர்க் ஆகியோருடன் இன்று வரை நெருக்கமாக இருக்கிறார்.

 

கேஜிபி புலனாய்வுப் பிரிவில் பணி

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,OTHER

படக்குறிப்பு,

1985-ஆம் ஆண்டு, கேஜிபி-யின் கிழக்கு ஜெர்மனி பிரிவில் பணியமர்த்தப்பட்டார் புதின்

லெனின்கிராட் மாநிலப் பல்கலைக்கழகத்தில் தனது சட்டப் படிப்பை முடித்தபின் சோவியத் உளவுத் துறையில் பணிக்குச் சேர்ந்தார். அப்பணி அவருக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது.

1985-ஆம் ஆண்டு, கேஜிபி-யின் கிழக்கு ஜெர்மனி பிரிவில் பணியமர்த்தப்பட்ட அவர், 1989-ஆம் ஆண்டு அந்த கம்யூனிஸ்ட் அரசின் வீழ்ச்சியை நேரில் கண்டார்.

கிளர்ச்சியாளர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது அவர்களை எச்சரித்துத் துரத்தினார். ஆனால் அவருக்கு ரஷ்ய அரசிடமிருந்து எந்த உதவியும் வரவில்லை.

அடுத்த ஆண்டு அவர் ரஷ்யாவுக்குத் திரும்பியபோது, ரஷ்ய கம்யூனிச அரசியல் கட்டமைப்பே ஒரு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது.

புதினால் கேஜிபி-யில் பெரும் பதவிகளுக்குச் செல்ல முடியவில்லை. அவரது உயரதிகாரியாக இருந்த நிகோலாய் லியோனோவ், புதினை பெரும் திறமைகளற்ற சாதாரணமான பணியாளர் என்று கருதினார்.

அதிவேக அரசியல் வளர்ச்சி

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,POOL/AFP

படக்குறிப்பு,

அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் யெலிட்சினின் (இடது) நிர்வாகத்தில் பணியமர்த்தப்பட்டார் புதின்

1991-ஆம் ஆண்டு புதின், அப்போது லெனின்கிராட் நகரத்துக்கு புதிய மேயராகப் பொறுப்பேற்ற அனடோலி சோப்சாக் என்பவருக்குக் கீழ் துணை மேயரானார்.

சோப்சாக் பதவியிழந்தபின், புதின் மாஸ்கோவில் அதிபர் போரிஸ் யெல்ட்சினின் நிர்வாக அலுவலகத்தில் வேலை செய்ய அழைக்கப்பட்டார். அதன்பின் வந்த வருடங்களில்தான் அவரது அரசியல் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது.

அவர் சிலகாலம் கேஜிபி-க்கு பதிலாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு பாதுகாப்புச் சேவைக்குத் தலைமை தாங்கினார். அதன்பின் அதிபருக்குக் கீழ் இயங்கிய பாதுகாப்புக் குழுவின் செயலாளரானார்.

1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உடல்நிலை குன்றியிருந்த அதிபர் போரிஸ் யெல்ட்சின், தனது பிரதம மந்திரியை நீக்கிவிட்டு, அப்பதவியில் புதினை அமர வைத்தார்.

2000-ஆம் ஆண்டில் வரவிருந்த அதிபர் தேர்தலுக்கு முந்தைய சீர்திருத்தங்களை புதின் கவனித்துக் கொண்டார்.

அப்போது மாஸ்கோ நகரில் பல குண்டுவெடிப்புகள் நிழந்தன. அதைத் தொடர்ந்து செச்னியா மாகாணத்தில் கிளர்ச்சியை ஒடுக்க ராணுவத்தை அனுப்பினார். அதில் பல செச்னிய மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் புதினின் முயற்சி வெற்றியடைந்தது.

இந்தக் காலகட்டத்தில் அவர் வேகமாக பிரபலம் அடைந்தார். 1999-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் பொறுப்பு அதிபராகப் பதவியில் அமர்த்தப்பட்டார். சில மாதங்கள் கழித்து தேர்தலுக்குப் பிறகு முதல்முறை முழுநேர ரஷ்ய அதிபரானார்.

 

அதிபர் பதவியின் ஆரம்ப நாட்கள்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

புதினின் அதிபர் பதவியின் ஆரம்ப வருடங்கள் பல அசம்பாவித நிகழ்ச்சிகளால் நிரம்பியிருந்தது

அதிபர் புதினுக்கு முதல் சவால் வந்தது 2000-ஆம் ஆண்டில்.

குர்ஸ்க் எனப்பட்ட ரஷ்ய அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல் பேரன்ட்ஸ் கடலில் மூழ்கியது. அப்போது புதின் விடுப்பில் இருந்தார். மேற்கத்திய நாடுகளின் உதவியை மறுத்தார். கப்பலில் இருந்த 118 பேரும் மீட்கப்படக் காத்திருந்த நிலையிலேயே இறந்தனர்.

நான்கு ஆண்டுகள் கழித்து செச்னிய கிளர்ச்சியாளர்கள் வடக்கு ஒசெடியா எனும் இடத்தில் இருந்த ஒரு பள்ளியில் 1,000 ரஷ்ய மக்களைப் பிணைக்கைதிகளைப் பிடித்து வைத்திருந்தனர். இதில் பலர் குழந்தைகள். ரஷ்ய காவலர்கள் அங்கு நுழைந்து தாக்குதல் நடத்தியதில், 330 பேர் இறந்தனர்.

செச்னிய கிளர்ச்சியாளர்களின் திட்டம் குறித்து ரஷ்ய உளவுத்துறை முன்பே அறிந்திருந்தும் செயல்படவில்லை என்று பின்னாளில் தெரியவந்தது.

புதினின் அதிபர் பதவியின் ஆரம்ப வருடங்கள் இப்படி பல அசம்பாவித நிகழ்ச்சிகளால் நிரம்பியிருந்தது.

புதின், 1990-களில் அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்திவந்த பெரும்பணக்காரர்களை அழைத்து, அரசியலில் இருந்து விலகியிருந்து, தன்னை மட்டும் ஆதரித்தால், அவர்களது சொத்துகள் பாதுகாக்கப்படும் என்று அவர்களிடம் தெரிவித்தார். இப்படியாக அவர்களை ‘வழிக்குக் கொண்டுவந்தார்’. மறுபுறம் மக்கள் ஆதரவையும் அவர் சம்பாதித்தார்.

 
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,TIMM SCHAMBERGER/DDP/AFP

படக்குறிப்பு,

முதலில் மேற்கத்திய நாடுகளுடன் புதின் நட்புறவைப் பேணினாலும் பின்னாட்களில் அந்த உறவு கசந்தது

மேற்கத்திய நாடுகளுடன் உறவுகள்

ஆரம்ப நாட்களில் புதின் மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவைப் பேணினார்.

2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களின் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை முதன்முதலில் அழைத்துப் பேசிய தலைவர்களில் ஒருவர் புதின்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மேல் தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு உதவவும் செய்தார் புதின்.

அப்போது அமெரிக்க அதிபர் புஷ், புதினை ‘மிகவும் நம்பத்தகுந்தவர்’ என்றழைத்தார்.

ஆனால் விரைவிலேயே இந்த நட்புறவு கசப்பாக மாறியது.

2006-ஆம் ஆண்டு புதினை எதிர்த்து வந்த அலெக்ஸாண்டர் லிட்வினென்கோ என்ற முன்னாள் கேஜிபி அதிகாரி இங்கிலாந்தில் கொலை செய்யப்பட்டபோது, இங்கிலாந்துடனான புதினின் உறவு கசப்பானது.

2007-ஆம் ஆண்டு, ம்யூனிக் பாதுகாப்புக் கூட்டத்தில், அமெரிக்கா தனது எல்லைகளைத் தாண்டி மற்ற நாடுகளின் விஷயங்களில் தலையிடுவதாகக் குற்றம்சாட்டினார் புதின்.

இது மீண்டும் ஒரு பனிப்போர் சூழ்நிலையை உருவாக்கியதாக அப்போது கருதப்பட்டது.

 
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

புதின் நேரடியாகத் தனக்குக் கீழ் வேலைசெய்யும் ஒரு தேசிய காவல்படையைக் கட்டமைத்துள்ளார்

மேற்கத்திய உலகுக்கு மேலும் நெருக்கடி கொடுத்த புதின்

2008-ஆம் ஆண்டு, மூன்றாவது முறையாகத் தொடர்ந்து அதிபராக இருக்க ரஷ்ய அரசியல் சட்டம் அனுமதிக்காததால், அவர் பிரதம் மந்திரியாக அதிகாரத்தில் இருந்தார். ஆனாலும் அவர் மிக அதிகப்படியான அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்.

இந்தக் காலகட்டத்தில், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக இருந்த முன்னாள் சோவியத் நாடுகளின் மீது ராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

உதாரணமாக ஜார்ஜிய ராணுவத்தை தோற்கடித்து, அப்காஸியா, தெற்கு ஒஸெட்டியா ஆகிய பகுதிகளின் தன்னாட்சியை ரஷ்ய ராணுவம் நிலைநிறுத்தியது.

எதிர்ப்பை முற்றிலும் ஒழித்த புதின்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,ALEXEY DRUZHININ/SPUTNIK/AFP

படக்குறிப்பு,

புதினின் ஆதரவோடு பல வருடங்கள் இயங்கிவந்த யெவ்ஜெனி ப்ரிகோசின் 2023-ஆம் ஆண்டு புதினுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை முன்னெடுத்தார். அது முறியடிக்கப்பட்டது. பின்னர், ப்ரிகோசின் ஒரு மர்மமான விமான விபத்தில் இறந்தார்

கடந்த 2021-ஆம் ஆண்டு, மூன்றாவது முறை தொடர்ந்து அதிபராவதைத் தடுக்கும் சட்டத்தை வளைத்து, தான் ஐந்தாவது மற்றும் ஆறாவது முறையும் அதிபர் ஆவதற்கான சாத்தியத்தை உறுதிப்படுத்தினார்.

புதினை விமர்சிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் காலப்போக்கில் காணாமல் போயிருக்கிறார்கள்.

2011-இல் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்திய போரிஸ் நெம்ட்சோவ், 2015-இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

புதினை மிகக் கடுமையாக எதிர்த்துவந்த அலெக்ஸெய் நவால்னி மீது, 2020-இல் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் சிறையில் அடைக்கப்படார். அவர், கடந்த மாதம் (பிப்ரவர்ய் 2024) இறந்தார். நவால்னியின் மனைவி, புதின்தான் நவால்னியைக் கொலைசெய்துவிட்டதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.

புதின் ஆதரவோடு பல வருடங்கள் இயங்கிவந்த யெவ்ஜெனி ப்ரிகோஜின் 2023-ஆம் ஆண்டு புதினுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை முன்னெடுத்தார். அது முறியடிக்கப்பட்டது. பின்னர், ப்ரிகோஜின் ஒரு மர்மமான விமான விபத்தில் இறந்தார்.

புதின் ரஷ்ய பழமைவாத தேவாலயத்தின் ஆதரவைப் பெற்றிருக்கிறார்.

நேரடியாகத் தனக்குக் கீழ் வேலைசெய்யும் ஒரு தேசிய காவல்படையைக் கட்டமைத்துள்ளார்.

ரஷ்ய ஊடகங்கள் பெரும்பாலும் புதினின் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருக்கின்றன.

புதின் 2014-இல் க்ரைமியா தீபகற்பத்தைக் கைப்பற்றிய போதே யுக்ரேன் மீதான புதினின் யுத்தம் துவங்கிவிட்டது என்கின்றனர் நிபுணர்கள். கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ராணுவத் தாக்குதலைத் தொடங்கினார். அந்தப் போர் இன்றுவரை தொடர்கிறது.

இந்நிலையில்தான் புதின் ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராகவிருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cn0w5v99035o

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

icegif-105.gif

அமோக வெற்றியீட்டிய ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு வாழ்த்துக்கள். 🥰

 

9 hours ago, Kandiah57 said:

 எனவே… ஒரு மனிதன் வாழட்டும் ஆளட்டும். வாழ்த்துக்கள்

மனிதனாக வாழுவார் உலகையும் வாழவிடுவார் போல் தெரியவில்லையே அவருடைய தேர்தலின் பின்னான அறிவிப்பு. மூன்றாம் உலகப்போர், "ஒரு அடி தூரத்திலேயே" உள்ளது என எச்சரிக்கிறாரே. வாழ்த்த பயமாக இருக்கிறது. நமது வாழ்வின் முடிவு ஒரு அடி தூரத்திலிருக்கும்போது எப்படி வாழ்த்த முடியும்? நாமே அழிவை அழைப்பது போலுள்ளதே.      

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

புதினை மிகக் கடுமையாக எதிர்த்துவந்த அலெக்ஸெய் நவால்னி மீது, 2020-இல் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் சிறையில் அடைக்கப்படார். அவர், கடந்த மாதம் (பிப்ரவர்ய் 2024) இறந்தார். நவால்னியின் மனைவி, புதின்தான் நவால்னியைக் கொலைசெய்துவிட்டதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.

புட்டின் தனது எதிராளிகளை கொல்ல நினைத்தால் காதும் காதும் வைத்த மாதிரி யாருக்குமே தெரியாமல் செய்ய முடியும். ஏனெனில் அவர் ஆட்சியில் இருக்கும் சர்வ வல்லமை பொருந்திய அரசியல் தலைவர். 
ரஷ்ய அரசு மட்டத்தில் இருக்கும் பரம ரகசியங்கள் மேற்குலகிற்கு தெரிய வருகின்றது என்றால் ஏன் இது வரைக்கும் மேற்குலகால் அந்த கட்டமைப்பை உடைக்க முடியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, satan said:

மனிதனாக வாழுவார் உலகையும் வாழவிடுவார் போல் தெரியவில்லையே அவருடைய தேர்தலின் பின்னான அறிவிப்பு. மூன்றாம் உலகப்போர், "ஒரு அடி தூரத்திலேயே" உள்ளது என எச்சரிக்கிறாரே. வாழ்த்த பயமாக இருக்கிறது. நமது வாழ்வின் முடிவு ஒரு அடி தூரத்திலிருக்கும்போது எப்படி வாழ்த்த முடியும்? நாமே அழிவை அழைப்பது போலுள்ளதே.      

எனக்கு மேற்குலகில் நடக்கும் சில பல அரசியல் கொள்கைகள் எப்படி பிடிப்பதில்லையோ அது போல் கிரம்ளின் அரசியல் கொள்கைகளும் சில பிடிப்பதில்லை. இருந்தாலும் புட்டினுக்கு ரஷ்யாவில் பலத்த ஆதரவு இல்லை என்று சொல்வதற்கில்லை. அவர் பின்  பலமான ரஷ்ய மக்கள் பின் நிற்கின்றார்கள். இதை பல ஊடகங்களே சொல்லி நிற்கின்றன.

ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மேற்குலகு லிபியாவிலும் ஈராக்கிலும் எதை செய்து கிழித்தார்கள் என இன்றும் எனக்கு புரியவில்லை? மாறாக  உள்நாட்டு கலவரங்களை உருவாக்கி மக்களை அகதிகளாக்கியது தான் மிச்சம். எனவே இந்த மேற்குலகு தங்களுக்கு பிடிக்காத அரசாட்சி உள்ள நாடுகளை குட்டை குப்பைகளாக்கியதுதான் மிச்சம்.

மேற்குலகுடைய சேட்டைகளின் பாதிப்பில் இலங்கை பிரச்சனையும் அடங்கும்.

மேற்குலகு எவ்வளவிற்கு தீவிரமாக நேட்டோ எனும் போர்வையில் ரஷ்யாவை ஒடுக்க நினைக்கின்றதோ அந்த அளவிற்கு ரஷ்ய தேசியவாதிகளும் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள். இருக்கின்றார்கள்.

ரஷ்யர்களும் தமது நாடு தமது கொள்கை என்ற வீராப்புடன் இருப்பதை நாமும் ஏற்றுக்கொண்டே ஆகும் சூழ்நிலை அல்லது கட்டாயமும் உண்டு.

இன்றைய ரஷ்யா அன்று சோவியத்யூனியனாக இருந்த போது ஐரோப்பாவிடம்  இருந்த பரஸ்பர  பொருளாதார ஒப்பந்தங்களும் அரசியல் புரிந்துணர்வுகளும் இன்று இல்லாமல் போனதின் காரணம் என்ன? இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பேச்சுவார்த்தைகள் தானே பல பிரச்சனைகளை தீர்த்து வைத்தது. அந்த பேச்சுவார்த்தைகள் ஏன் இன்று நடை பெறவில்லை? ஆயுத முன்னேற்றமா அல்லது ஆயுத பரீட்சார்த்தமா?

ரஷ்ய தேர்தல் நேர்மையாக நடந்ததா இல்லையா என்பதற்கப்பால் ரஷ்ய அதிபர் புட்டின் பின்னால் பெரும்பான்மை மக்கள் நிற்கின்றார்கள் என்பது கண்கூடு.தேர்தல் முடிவை விட அவர் பக்கம் மக்கள் நிற்கின்றார்கள்.இது வெளிப்படையாகவே தெரிந்த விடயம்

நாம் அணு ஆயுதத்தை  பயன்படுத்துவோம் என புட்டின் சொல்வதும் மேற்குலகினர் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவோம் என சூளுரைப்பதும் ஒரே குட்டைக்குள் ஊறிய மட்டைகள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

 

மனிதனாக வாழுவார் உலகையும் வாழவிடுவார் போல் தெரியவில்லையே அவருடைய தேர்தலின் பின்னான அறிவிப்பு. மூன்றாம் உலகப்போர், "ஒரு அடி தூரத்திலேயே" உள்ளது என எச்சரிக்கிறாரே. வாழ்த்த பயமாக இருக்கிறது. நமது வாழ்வின் முடிவு ஒரு அடி தூரத்திலிருக்கும்போது எப்படி வாழ்த்த முடியும்? நாமே அழிவை அழைப்பது போலுள்ளதே.      

புட்டின். ..இரண்டு ஆண்டுகளுக்கு முன்  உக்கிரேன்  போர் தொடங்கும் போதும்  சொன்னார் நடந்ததா ?? இல்லை இவர் சொன்ன உடனும். மூன்றாவது உலகப்போர்  வரும் என்பதில்லை  ஒருசில செயல்கள் நடக்கலாம்   பெரும்பாலானவை நடப்பதில்லை  இது ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் ....புட்டின்,..பைடன்.   மோடி,.........நினைப்பது எல்லாம் நடந்து விடவில்லை நடந்து விடப்போவதுமில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

ரஷ்ய அரசு மட்டத்தில் இருக்கும் பரம ரகசியங்கள் மேற்குலகிற்கு தெரிய வருகின்றது என்றால் ஏன் இது வரைக்கும் மேற்குலகால் அந்த கட்டமைப்பை உடைக்க முடியவில்லை

இது கேள்வி 

1 hour ago, குமாரசாமி said:

ஏனெனில் அவர் ஆட்சியில் இருக்கும் சர்வ வல்லமை பொருந்திய அரசியல் தலைவர். 

இது பதில் 

 

1 hour ago, குமாரசாமி said:

புட்டின் தனது எதிராளிகளை கொல்ல நினைத்தால் காதும் காதும் வைத்த மாதிரி யாருக்குமே தெரியாமல் செய்ய முடியு

முடியாது  ஏனெனில்   புடின் கொல்வதில்லை  இன்னொரு நபர் தான்  கொல்லப்போகிறார்,....எனவே… காலம் கடந்தும்  உண்மை வெளியில் வரும்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விளாடிமிர் புட்டினுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

04-9.jpg

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் (Xi Jinping) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றதை அடுத்து, சீனா ஜனாதிபதி இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவடைந்த ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின் 87.8 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/296250

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வட கொரிய அதிபர் ஏன் இன்னும் வாழ்த்துத் தெரிவிக்கேல்லை?!👀

Edited by வாலி
Posted

N.Korea leader Kim Jong Un congratulates Putin on re-election

Russia's President Putin and North Korea's leader Kim meet in Amur region
Russia's President Vladimir Putin and North Korea's leader Kim Jong Un attend a meeting at the Vostochny ?osmodrome in the far eastern Amur region, Russia, September 13, 2023 in this image released by North Korea's Korean Central News Agency. KCNA via REUTERS/File Photo Purchase Licensing Rights, opens new tab
SEOUL, March 18 (Reuters) - North Korean leader Kim Jong Un on Monday congratulated Russian President Vladimir Putin for his re-election, saying Pyongyang would work together with him to further develop bilateral relations.
"I will firmly join hands with you as we meet the demands of the times to provide a new turning point for the Russian-DPRK (North Korea) friendship that has long historical roots and traditions, and push forward to build a strong nation," KCNA reported Kim as congratulatory remarks sent to Putin.
Putin won a record post-Soviet landslide in Russia's election on Sunday, cementing his already tight grip on power in a victory he said showed Moscow had been right to stand up to the West and send its troops into Ukraine.
Both Kim and Chinese President Xi Jinping congratulated Putin on Monday, as both Pyongyang and Beijing have strengthened ties with Russia since the start in 2022 of its full-scale war with Ukraine.
The United States has accused North Korea of supplying Russia with artillery shells and missiles used in Ukraine. Moscow and Pyongyang deny the accusations and pledged last year to deepen military relations.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, வாலி said:

வட கொரிய அதிபர் ஏன் இன்னும் வாழ்த்துத் தெரிவிக்கேல்லை?!👀

"தேர்தல்- election"  என்றால் என்னவென்று  கூகிளில் தேடிப்பார்க்க கொஞ்சம் காலமெடுத்துக் கொண்டாராம்😎!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Indian PM Modi congratulates Vladimir Putin on election win, vows to boost ties

indian-pm-modi-congratulates-vladimir-pu
ANI

Synopsis

Modi congratulated Putin, eager to strengthen India-Russia ties. Despite the Ukraine invasion, India remains a key arms buyer from Russia, balancing US relations. The countries also deepen defence cooperation with the Quad alliance.

 
By AFP
Last Updated: Mar 18, 2024, 06:05:00 PM IST
1
Indian Prime Minister Narendra Modi said Monday in a congratulatory message to re-elected Russian President Vladimir Putin he looked forward to boosting ties to develop their "special" relationship.
Look forward to working together to further strengthen the time-tested Special and Privileged Strategic Partnership between India and Russia in the years to come," Modi wrote on social media platform X.

He offered his "warm congratulations" to Putin.
 
🤣
Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்மனிய ஜனாதிபதியும் புட்டினுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையாம்.......கலியாண வீட்டிலை மாப்பிளையின்ரை சீப்பை ஒளிச்சு வைச்ச பீலிங்......🤣



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.