Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
23 MAR, 2024 | 06:35 AM
image

ரஷ்யாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் அரங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குரோகஸ் சிட்டி ஹோல் என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு பலர் கூடியிருந்தனர்.

அப்போது ரஷ்ய இராணுவ உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் 5 பேர், இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த பார்வையாளர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் தீ வைப்பு சம்பவங்களும் இடம்பெற்றதால் அப்பகுதியில் தீ பரவியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டடுள்ளது.

இணையத்தில் பரவும் பல தாக்குதல் காணொளிகளில், இசை நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் தரையில் வீழ்ந்து பாதுகாப்பைத் தேடுவதும், இருக்கைகளுக்குப் பின்னால் மறைந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதும் துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் மற்றும் கூச்சல் இடம் சந்தம் கோட்பதையும் அங்கிருந்து பலர் வெளியே பாதுகாப்புத் தேடி ஓடுவதையும் வெளிப்படுத்துகின்றது.

தாக்குதலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த ரஷ்யா பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இந்த தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/179471

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மொஸ்கோ தாக்குதல் - ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியது

Published By: RAJEEBAN   23 MAR, 2024 | 06:55 AM

image

மொஸ்கோவின் மிகவும் பிரபலமான இசைநிகழ்ச்சி அரங்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ள அதேவேளை  ஐஎஸ்ஐஎஸ்  அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது.

டெலிகிராமில் ஐஎஸ் அமைப்பு தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது எனினும் இந்த தாக்குதலை தான் மேற்கொண்டமைக்காக ஆதாரங்கள் எவற்றையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை.

இதேவேளை இந்த தாக்குதலை ஐஎஸ் அமைப்பே மேற்கொண்டுள்ளது என்பதை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

ஐஎஸ் அமைப்பு ரஸ்யாவில் தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்ற தகவல்கள் நவம்பர் மாதம் முதல் கிடைத்தன என அமெரிக்க புலனாய்வு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகள் பாதி;க்கப்பட்டுள்ள போதிலும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ஐஎஸ்தாக்குதல் குறித்த எச்சரிக்கையை ரஸ்யாவிடம் பகிர்ந்துகொண்டன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொஸ்கோவில் உள்ள அமெரிக்கர்கள் பொதுமக்கள் பெருமளவில் கூடும் நிகழ்வுகளை தவிர்க்கவேண்டும் குறிப்பாக இசைநிகழ்ச்சிகளை தவிர்க்கவேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இரண்டுவாரங்களிற்கு முன்னர் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாககுதலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல்களை உன்னிப்பாக அவதானிப்பதாக  அமெரிக்க இராஜாங்க திணைக்களம தெரிவித்திருந்தது.

https://www.virakesari.lk/article/179474

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யா: மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதலில் 93 பேர் பலி, நால்வர் கைது; முன்பே எச்சரித்த அமெரிக்கா - என்ன நடந்தது?

மாஸ்கோ தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மாஸ்கோவில் "பெரிய கூட்டங்களை" குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவை எச்சரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பால் கிர்பி & ஆண்ட்ரே ரோடன்-பால்,
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 23 மார்ச் 2024, 06:42 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்

மாஸ்கோவின் எல்லையில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிபிசி சரிபார்த்த வீடியோ காட்சிகளின்படி, வடமேற்கு புறநகர் கிராஸ்னோகோர்ஸ்கில், குறைந்தது நான்கு பேர் உடல் முழுவதும் மறைத்தவாறு உடை அணிந்துகொண்டு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குரோகஸ் சிட்டி ஹால் வளாகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருந்தது. அப்போது அரங்கிற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது தீவிரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் கட்டடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது மட்டுமின்றி, மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதில் பலியானவர்களில் குழந்தைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்த "பயங்கரவாத தாக்குதலை" கடுமையாக கண்டனம் செய்துள்ளது.

இணையத்தில் பரவிவரும் சரிபார்க்கப்படாத அறிக்கையின்படி, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஐஎஸ் தீவிரவாதக் குழு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் குறித்து முன்பே எச்சரித்த அமெரிக்கா

மாஸ்கோ தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

மாஸ்கோ இசை அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதல்

இதுகுறித்து பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தி முகமையிடம் பேசியுள்ள அமெரிக்க அதிகாரிகள், ஐஎஸ் அமைப்பு ரஷ்யாவை தாக்க உள்ளது என உளவுத் தகவல் கிடைத்ததாகக் கூறினர்.

மேலும், மாஸ்கோவில் "பெரிய கூட்டங்களை" குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவை எச்சரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிப்பதற்காக சம்பவ இடத்தில் சிறப்புப் பிரிவுகள் செயல்பட்டு வருவதாக ரஷ்யாவின் தேசிய காவல் அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய உயர் அதிகாரிகளும் கிராஸ்னோகோர்ஸ்க்கு சென்றுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, "தீவிரவாதிகள் மாஸ்கோவில் பெரிய கூட்டங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் திட்டங்களைக் கொண்டுள்ளனர்," என்ற தகவல் குறித்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள அமெரிக்க குடிமக்கள் பெரிய கூட்டங்களைத் தவிர்க்குமாறும் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை செய்தது.

பின்னர் வெள்ளிக்கிழமை மாலை தனது அறிவிப்பைப் புதுப்பித்து வெளியிட்ட அமெரிக்கா, தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் இருப்பதைத் தவிர்க்குமாறு தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

மாஸ்கோ தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இசைக்குழு மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார்.

குரோகஸ் சிட்டி ஹால் வளாகத்தில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிக்காக 6,000க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் குவிந்தனர். இந்நிலையில் இசைக்குழு மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார். அதேநேரம் இசைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தற்போது வரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேரடியாக மக்களிடம் பேசவில்லை. ஆனால், அவரது அலுவலகத்தைச் சேர்ந்த மற்றுமொரு அதிகாரி, பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து நலம்பெறத் தனது ஆறுதல்களைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது நுழைவுவாயில் ஒன்றில் பணியில் இருந்த காவலர் ஒருவர், எப்படி இந்த வன்முறை கும்பல் ஆயுதங்களோடு அரங்கிற்குள் நுழைந்தது என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

"அங்கு மூன்று பாதுகாவலர்கள் இருந்தனர். தாக்குதல் மேற்கொண்டவர்களைப் பார்த்தவுடன் அவர்கள் ஒரு விளம்பரப் பலகையின் பின்னால் ஒளிந்து கொண்டனர்," என்று அவர் ரஷ்ய டெலிகிராம் சேனலான பாசாவிடம் கூறியுள்ளார்.

மேலும் "தாக்குதல் மேற்கொண்ட அந்த நபர்கள் எங்களிடமிருந்து 10 மீ [30 அடி] தொலைவில் நின்றுகொண்டு, தரைத் தளத்தில் இருந்தவர்களை நோக்கி கண்முன் தெரியாமல் சுடத் தொடங்கினர்," என்று தெரிவித்துள்ளார் அவர்.

அரங்கின் உள்ளே இருந்த பெண் ஒருவர், தானும் மற்ற பார்வையாளர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதை உணர்ந்தவுடன், மேடையை நோக்கி ஓடியதாக ரஷ்ய தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார் .

"அங்கிருந்த ஸ்டாலில் ஒரு நபரை ஆயுதத்துடன் பார்த்தேன். அங்கு துப்பாக்கிச் சூடு நடந்தது. நான் ஒலிபெருக்கியின் பின்னால் மறைந்தவாறு செல்ல முயன்றேன்," என்று அவர் கூறியுள்ளார்.

மாஸ்கோ தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தாக்குதலின்போது, அந்த வளாகத்தில் குழந்தைகளும் இளைஞர்களும் இருந்ததாக நேரில் கண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்டடத்தின் இரண்டு மேல்தளங்களில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் முகப்புப் பகுதி தீயில் சிக்கிக்கொண்டது. இதன் விளைவாக எழுந்த புகை வானத்தில் பரவத் தொடங்கியது.

தாக்குதல் நடத்தியவர்கள் வீசிய ஒருவகை நெருப்பு உண்டாக்கும் கருவியின் விளைவாகவே தீ பற்றியதாகத் தெரிய வந்துள்ளது.

இசைநிகழ்ச்சி அரங்கில் பால்கனியில் இருந்த விட்டலி தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதைப் பார்த்துள்ளார். இதுகுறித்து விவரித்த அவர், "அவர்கள் சில பெட்ரோல் குண்டுகளை வீசினர், அனைத்தும் எரிய ஆரம்பித்தன. நாங்கள் வெளியேறும் வழியை நோக்கி ஓடத் தொடங்கினோம்,” என்றார்.

தாக்குதலின்போது, அந்த வளாகத்தில் நடைபெற்ற பால்ரூம் நடனப் போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களும் இருந்ததாக நேரில் கண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரங்கில் இருந்தவர்களில் சிலர் மேடையில் இருந்து பார்க்கிங் பகுதிக்கு தப்பிச் செல்ல முடிந்தது. மற்றவர்கள் மேல்பகுதிக்குச் சென்றனர். மேலும் 100 பேர் கட்டடத்தின் அடித்தளத்தின் வழியாக தப்பிச் சென்றதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

டஜன் கணக்கான அவசர ஊர்திக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

மாஸ்கோ தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்தச் சம்பவத்தை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும், இதுவொரு கொடூரமான குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தையொட்டி தலைநகரில் நடைபெற இருந்த அனைத்து பொது நிகழ்வுகளையும் ரத்து செய்துள்ள மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான், "பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக நான் வருந்துகிறேன்," என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அடுத்த சில மணிநேரங்களில் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உட்பட பல பிராந்தியங்களும் நடக்கவிருந்த பொதுநிகழ்வுகளை ரத்து செய்துள்ளன.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்தச் சம்பவத்தை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும், இதுவொரு கொடூரமான குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா யுக்ரேன் மீது இரண்டு ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று யுக்ரேன் கூறியுள்ளது.

"யுக்ரேனுக்கு நடந்துள்ளது என்னவாகினும், அதற்கான முடிவு போர்க்களத்தில் மட்டுமே தீர்மானிக்கப்படும்" என்று யுக்ரேன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

ஆறு நாட்களுக்கு முன்புதான் ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாதிமிர் புதின் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் உண்மையான எதிர்க்கட்சிகள் எதுவும் இல்லை, தேர்தல் சுதந்திரமானதோ அல்லது நியாயமானதோ அல்ல என்று மேற்கத்திய நாடுகள் கண்டனம் செய்துள்ளன.

யுக்ரேனிய ராணுவ புலனாய்வு செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரி யூசோவ் இந்தத் தாக்குதல் எந்த ஆதாரமும் இல்லாமல், "புதினின் சிறப்பு சேவைகளால் வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்ட செயல்" என்று கூறியுள்ளார்.

மாஸ்கோ தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மாஸ்கோவில் மக்களை நோக்கி நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும்.

இது 2002இல் தலைநகரில் நடத்தப்பட்ட தியேட்டர் தாக்குதலை நினைவுபடுத்தியுள்ளது. அந்தச் சமபவத்தில் 40 செச்சென் போராளிகள் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 900க்கும் மேற்பட்ட மக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.

இறுதியில் அந்த தியேட்டர் அரங்கிற்குள் நுழைந்த ரஷ்ய பாதுகாப்புப் படை தூக்க வாயுவை உள்ளே செலுத்தியது. இந்தச் சம்பவத்தில் 130 பணயக் கைதிகள் இருந்தனர்.

தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, துப்பாக்கிச் சூடு காட்சிகள் "பயங்கரமானதாகவும் பார்ப்பதற்கு கடினமாகவும் இருந்தன" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் "இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே எங்களது சிந்தனை இருக்கும்," என்று அவர் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/ckd8n7lv0n4o

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

டெலிகிராமில் ஐஎஸ் அமைப்பு தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது எனினும் இந்த தாக்குதலை தான் மேற்கொண்டமைக்காக ஆதாரங்கள் எவற்றையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை.

இதேவேளை இந்த தாக்குதலை ஐஎஸ் அமைப்பே மேற்கொண்டுள்ளது என்பதை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

எல்லை தாண்டிய உலக பயங்கரவதி

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சர்வ வல்லமை பொருந்திய புட்டின்???

எப்படி இருந்த ரசியா......

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, உடையார் said:

எல்லை தாண்டிய உலக பயங்கரவதி

ISIS க்கும் இதற்கும் தொடர்பு  இல்லை என ரஸ்யா சார்பு ஊடகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன. 

19 minutes ago, விசுகு said:

சர்வ வல்லமை பொருந்திய புட்டின்???

எப்படி இருந்த ரசியா......

கொலைகளை விசுகர் இரசிக்கிறார் ? 

13 minutes ago, nunavilan said:

உலகத்தின் பார்வையில் இஸ்ரேல் ஏற்கனவே ஹமாஸ் - இஸ்ரேல்  யுத்தத்தில் தோற்றுவிட்டது. 

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, விசுகு said:

சர்வ வல்லமை பொருந்திய புட்டின்???

எப்படி இருந்த ரசியா......

இதை தான் மூன்று உலகப்போர்  என்றாரே??,........இதனை யார் செய்தார்கள் என்று கூட கண்டு பிடிக்க முடியவில்லை உக்ரேனை சாட்டி.  கண்டவன் நின்றவன். எல்லாம் ரஷ்யாவை தாக்குவது கவலையளிக்கிறது 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kandiah57 said:

இதை தான் மூன்று உலகப்போர்  என்றாரே??,........இதனை யார் செய்தார்கள் என்று கூட கண்டு பிடிக்க முடியவில்லை உக்ரேனை சாட்டி.  கண்டவன் நின்றவன். எல்லாம் ரஷ்யாவை தாக்குவது கவலையளிக்கிறது 

அவரது நாட்டுக்குள் தான் இனி போர். அதைத் தான் சொல்லி இருக்கிறார். நாம் தான் விளங்காத்தனமா புட்டின் இன்றி ரசியாவில் புல்லும் அசையாது என்றபடி...  உலகமே அவர் கை விரலில் என்று படம் காட்டுகிறோம். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

US warned Russia about imminent terrorist attack in March — White House

The US government had information about a planned terrorist attack in Moscow - potentially targeting large gatherings, to include concerts, and shared with Russian authorities, spokesperson for the White House National Security Council Adrienne Watson said
 
WASHINGTON, March 23. /TASS/. In March, the United States shared information with Russian authorities about a terrorist attack being planned in Moscow, spokesperson for the White House National Security Council Adrienne Watson told Reuters.

"Earlier this month, the US government had information about a planned terrorist attack in Moscow - potentially targeting large gatherings, to include concerts - which prompted the State Department to issue a public advisory to Americans in Russia. The US government also shared this information with Russian authorities in accordance with its longstanding ‘duty to warn’ policy," Watson said.

A terrorist attack was carried out at the Crocus City Hall music venue in the city of Krasnogorsk near Moscow on Friday evening. Unidentified gunmen armed with assault rifles went on a shooting spree. An explosion rocked the building, starting a fire. The special services are conducting a search operation. Moscow Mayor Sergey Sobyanin canceled all mass events in the capital in the next two days, and a number of other Russian regions followed suit.

https://tass.com/world/1764563

MFA comments on US embassy’s warning about "terrorist attack threats" in Russia

Maria Zakharova asked the U.S. embassy in Russia, if they have transferred the data about allegedly existing threats of terrorist attacks
 
MOSCOW, February 21. /TASS/. Russian Foreign Ministry Spokeswoman Maria Zakharova asked the U.S. embassy in Russia, if they have transferred the data about allegedly existing threats of terrorist attacks in public places in Moscow and St. Petersburg as well as along the Russian-Ukrainian border to their Russian colleagues.

"My question to the U.S. embassy in Moscow: Did you transfer the relevant data to your Russian colleagues via our partnership channels? If no - how should we understand all this?" she wrote in her Telegram channel on Sunday.

On Sunday, the US embassy in Moscow has warned American nationals about alleged threats of terror attacks in public places in Moscow and St. Petersburg, as well as in areas near the Russian-Ukrainian border.

"According to media sources, there have been threats of attacks against shopping centers, railway and metro stations, and other public gathering places in major urban areas, including Moscow and St. Petersburg as well as in areas of heightened tension along the Russian border with Ukraine," the embassy said in a press statement on its official website without giving links on specific publications.

https://tass.com/politics/1406777

30 minutes ago, Kandiah57 said:

இதை தான் மூன்று உலகப்போர்  என்றாரே??,........இதனை யார் செய்தார்கள் என்று கூட கண்டு பிடிக்க முடியவில்லை உக்ரேனை சாட்டி.  கண்டவன் நின்றவன். எல்லாம் ரஷ்யாவை தாக்குவது கவலையளிக்கிறது 

22 minutes ago, விசுகு said:

அவரது நாட்டுக்குள் தான் இனி போர். அதைத் தான் சொல்லி இருக்கிறார். நாம் தான் விளங்காத்தனமா புட்டின் இன்றி ரசியாவில் புல்லும் அசையாது என்றபடி...  உலகமே அவர் கை விரலில் என்று படம் காட்டுகிறோம். 

பிரான்சிலும் ஐரோப்பிய நகரங்களிலும், வட அமெரிக்காவிலும் துப்பாக்கிச் சூடும் குண்டு வெடிப்பும் நடைபெற்றதை தாங்கள் இன்னும் மறக்கவில்லை என நினைக்கிறேன். 

கொலைகளை குரூரமாக இரசிக்கும் ஆட்கள்தான் விபு களின் தூண்களாக ஐரோப்பாவில் வலம் வந்திருக்கின்றனர் என்பது கசப்பாக இருக்கிறது. 

☹️

  • Like 1
  • Downvote 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, Kapithan said:

கொலைகளை குரூரமாக இரசிக்கும் ஆட்கள்தான் விபு களின் தூண்களாக ஐரோப்பாவில் வலம் வந்திருக்கின்றனர் என்பது கசப்பாக இருக்கிறது. 

☹️

-1 இதற்கு....😡 

எடுத்ததுக்கெல்லாம் நெருப்பை தொடவேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
23 minutes ago, விசுகு said:

-1 இதற்கு....😡 

எடுத்ததுக்கெல்லாம் நெருப்பை தொடவேண்டாம். 

நெருப்பு மட்டுமல்ல, உண்மையும் சுடும். 

தங்களுக்குச் சுட்டது நெருப்பல்ல, உண்மை. 

தாங்கள் யார், எத்தகைய பொறுப்பில் இருந்தீர்கள், உங்கள் தோளின் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பும் கடமையும் என்ன என்று உணர்ந்திருப்பீர்களானால் பொறுப்பில்லாமல் எழுதமாட்டீர்கள். 

இனிமேலாவது பொறுப்புடன் கருத்தை வெளியிடுங்கள். எங்களுக்கு இல்லாத கூடுதல் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

பிகு. -1 இதைப்பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. -1 போடுவதற்கான காரணம் என்ன என்று அறிய விரும்புவது இயல்பு. அம்புட்டுதே. 

Edited by Kapithan
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kapithan said:

நெருப்பு மட்டுமல்ல, உண்மையும் சுடும். 

தங்களுக்குச் சுட்டது நெருப்பல்ல, உண்மை. 

தாங்கள் யார், எத்தகைய பொறுப்பில் இருந்தீர்கள், உங்கள் தோளின் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பும் கடமையும் என்ன என்று உணர்ந்திருப்பீர்களானால் பொறுப்பில்லாமல் எழுதமாட்டீர்கள். 

இனிமேலாவது பொறுப்புடன் கருத்தை வெளியிடுங்கள். எங்களுக்கு இல்லாத கூடுதல் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

பிகு. -1 இதைப்பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. -1 போடுவதற்கான காரணம் என்ன என்று அறிய விரும்புவது இயல்பு. அம்புட்டுதே. 

இங்கே நான் எங்கே கொலைகளை ஆதரித்தேன்? நான் எழுதுவதற்கு மட்டுமே நான் பொறுப்பு நீங்கள் கற்பனை செய்வதற்கு அல்ல. அசைக்க முடியாத புட்டினின் சாம்ராஜ்யத்திற்குள் எவ்வாறு இக்கொலைகள் அரங்கேறுகின்றன என்பதே எனது கேள்வி 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

US warned Russia about imminent terrorist attack in March — White House

The US government had information about a planned terrorist attack in Moscow - potentially targeting large gatherings, to include concerts, and shared with Russian authorities, spokesperson for the White House National Security Council Adrienne Watson said
 
WASHINGTON, March 23. /TASS/. In March, the United States shared information with Russian authorities about a terrorist attack being planned in Moscow, spokesperson for the White House National Security Council Adrienne Watson told Reuters.

"Earlier this month, the US government had information about a planned terrorist attack in Moscow - potentially targeting large gatherings, to include concerts - which prompted the State Department to issue a public advisory to Americans in Russia. The US government also shared this information with Russian authorities in accordance with its longstanding ‘duty to warn’ policy," Watson said.

A terrorist attack was carried out at the Crocus City Hall music venue in the city of Krasnogorsk near Moscow on Friday evening. Unidentified gunmen armed with assault rifles went on a shooting spree. An explosion rocked the building, starting a fire. The special services are conducting a search operation. Moscow Mayor Sergey Sobyanin canceled all mass events in the capital in the next two days, and a number of other Russian regions followed suit.

https://tass.com/world/1764563

MFA comments on US embassy’s warning about "terrorist attack threats" in Russia

Maria Zakharova asked the U.S. embassy in Russia, if they have transferred the data about allegedly existing threats of terrorist attacks
 
MOSCOW, February 21. /TASS/. Russian Foreign Ministry Spokeswoman Maria Zakharova asked the U.S. embassy in Russia, if they have transferred the data about allegedly existing threats of terrorist attacks in public places in Moscow and St. Petersburg as well as along the Russian-Ukrainian border to their Russian colleagues.

"My question to the U.S. embassy in Moscow: Did you transfer the relevant data to your Russian colleagues via our partnership channels? If no - how should we understand all this?" she wrote in her Telegram channel on Sunday.

On Sunday, the US embassy in Moscow has warned American nationals about alleged threats of terror attacks in public places in Moscow and St. Petersburg, as well as in areas near the Russian-Ukrainian border.

"According to media sources, there have been threats of attacks against shopping centers, railway and metro stations, and other public gathering places in major urban areas, including Moscow and St. Petersburg as well as in areas of heightened tension along the Russian border with Ukraine," the embassy said in a press statement on its official website without giving links on specific publications.

https://tass.com/politics/1406777

பிரான்சிலும் ஐரோப்பிய நகரங்களிலும், வட அமெரிக்காவிலும் துப்பாக்கிச் சூடும் குண்டு வெடிப்பும் நடைபெற்றதை தாங்கள் இன்னும் மறக்கவில்லை என நினைக்கிறேன். 

கொலைகளை குரூரமாக இரசிக்கும் ஆட்கள்தான் விபு களின் தூண்களாக ஐரோப்பாவில் வலம் வந்திருக்கின்றனர் என்பது கசப்பாக இருக்கிறது. 

☹️

இதற்குள். ஏன் புலிகளை இழுத்து கருத்துகள் எழுதுகிறீர்கள் ..கொலைகளை இரசிக்க ரஷ்யா தான் தேவையா  உலகில் 200. நாடுகளுக்கு மேல் கொலைகள். நாளாந்தம் நடக்கிறது இல்லையா??  அவற்றை எல்லாம் நாங்கள் இங்கே குறிப்பிடவில்லையே   ஆகவே கொலைகளை இரசிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்   

மேலும்  புட்டினின். மனநிலையில் கொள்கையில். அவரது  படையணிகள்  பூரணமாக இல்லை என்பதை கவனியுங்கள் 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kandiah57 said:

இதற்குள். ஏன் புலிகளை இழுத்து கருத்துகள் எழுதுகிறீர்கள் ..கொலைகளை இரசிக்க ரஷ்யா தான் தேவையா  உலகில் 200. நாடுகளுக்கு மேல் கொலைகள். நாளாந்தம் நடக்கிறது இல்லையா??  அவற்றை எல்லாம் நாங்கள் இங்கே குறிப்பிடவில்லையே   ஆகவே கொலைகளை இரசிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்   

மேலும்  புட்டினின். மனநிலையில் கொள்கையில். அவரது  படையணிகள்  பூரணமாக இல்லை என்பதை கவனியுங்கள் 

Power comes with responsibility. 

நீங்கள் விரும்பியபடி எதையும் கதைக்கலாம், எழுதலாம். ஏனென்றால் நீங்கள் ஒரு nobody. அதாவது மிகச் சாதாரண மனிதன். எத்தகைய பொறுப்புக்களிலும் இல்லை. 

விசுகரின் நிலை அப்படி அல்ல. அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருக்கு பொறுப்பு இருக்கிறது. அது காலம் முழுவதும் தொடரும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Moscow Attack: முன்பே எச்சரித்த America; கண்மூடித்தனமாக Gunfire நடத்திய கும்பல். எகிறும் Death toll

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் புகுந்து துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய பயங்கர தாக்குதலில், குறைந்தது 93  பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

ஏனென்றால் நீங்கள் ஒரு nobody. அதாவது மிகச் சாதாரண மனிதன். எத்தகைய பொறுப்புக்களிலும் இல்லை. 

ரொம்ப சரியானது,ஆனால் கருத்துகள் காரணத்துடனும்  கருத்துடனும். சம்பத்தப்பட்ட தலைப்புகளிலும். தான் கவனமாக எழுதுகிறேன்  சிலசமயம். பிழை விட்டீருக்கலாம்....நீங்கள் அதனை சுட்டி காட்டி திருத்த முடியும்   

மற்றது   நாங்கள் இப்போது கதைப்பது எழுதுவது ரஷ்யா பற்றி   இதில் விசுகருக்கு என்ன பொறுப்பு உண்டு  

புட்டினின். அரசாங்கத்தில். முக்கிய பதவியில் இருக்கிறார?? 

அல்லது  புட்டினின். படையணிக்கு தலைமை தங்கியிருக்கிறாரா??    விளங்கவில்லை 😀

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மொஸ்கோ இசைநிகழ்ச்சி அரங்கதாக்குதல் - கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு

23 MAR, 2024 | 04:56 PM
image
 
மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி அரங்கமொன்றில் இடம்பெற்ற தாக்குதலில கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

075749c8-87b5-43b4-9a8a-901da4490257.jpg

குரோகஸ் சிட்டியின் இசைநிகழ்ச்சி அரங்கில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது என ரஸ்யாவின் விசாரணை குழு தெரிவித்துள்ளது.

அரங்கில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கைகளின் போது மேலும் உடல்களை மீட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

5aa4c40e-8a67-409a-848b-b9d7486c0af8.jpg

இதேவேளை இந்த தாக்குதலுடன நேரடியாக தொடர்புபட்ட நால்வரை கைதுகைதுசெய்துள்ளதாக ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/179520

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயங்கரவாதிகளின் செயல் கண்டிக்கத்தக்கது. மனித குலத்துக்கெதிரான பயங்கரவாதி புட்டினுக்கே பயங்கரவாதத்துக்கான மேற்படிப்பை அய்சிஸ் பயங்கரவாதிகள் காட்டியிருக்கின்றார்கள். 

பயங்கரவாதிகளினால் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இனியாவது புட்டின் பயங்கரவாதத்தை விட்டுவிலகி நல்லவழிக்கு வரவேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைப் பலிகொண்ட பயங்கரவாதச் செயலை யார் செய்திருந்தாலும் அவர்களைத் தண்டிக்கவேண்டும். தாக்குதலை நடாத்தியவர்கள் பிடிபட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இப்போதே உக்ரைன் உடந்தை என்பதாக ரஷ்யா குற்றம் சாட்டுவதில் இருந்து புட்டின் இப்படுகொலைகளையும் தனது ஆக்கிரமிப்புப் போருக்கு சாதகமாகப் பாவிக்கும் நிலையும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்சியா இப்படியான பெரும் மனிதப் படுகொலைகளை காண்பது இது முதற்தடவை அல்ல. எகிப்துக்கு மேல் வைச்சு ரஷ்சிய விமானம் குண்டு வைச்சு தகர்க்கப்பட்டு 200 மேல் மக்கள் கொல்லப்பட்ட பின் நடக்கும் பெரும் சம்பவம் இது.

இது இஸ்லாமிய தீவிரவாதம் என்றால்.. இது மேற்குலகை அடைய அதிக காலம் எடுக்காது. இப்படித்தான் கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்காவால் பயிற்சி அளித்தவன் தான்.. இங்கிலாந்தில் மாஜ்சட்டரில்.. இதே மாதிரியான நிகழ்வில் குண்டு தாக்குதல் நடத்தி 22 பேரைக் கொன்றான்.

இஸ்லாமிய பயங்கரவாத்தை விலைக்கு வாங்கி உக்ரைன் ஆயுதமும் ஒத்துழைப்பும் ஊடுருவலும் வழங்கி இதனை நடத்தி இருக்கவும் வாய்ப்புள்ளது. அல்லது உக்ரைனே நடத்தி விட்டு இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீது பழிபோட்டும் இருக்கலாம். இதனால் ரஷ்சிய - இஸ்லாமிய உலக உறவை சிதைப்பதுவும் நோக்கமாக இருக்கலாம்.

எதுஎப்படியோ.. உயிரிழந்த அப்பாவி ரஷ்சிய மக்களுக்கு அஞ்சலிகள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, உடையார் said:

எல்லை தாண்டிய உலக பயங்கரவதி

இந்த‌ அமைப்பை அமெரிக்கா தான் உருவாக்கி விட்ட‌து என்று க‌தை வ‌ருது😮..............புட்டின் இதுக்கு த‌குந்த‌ ப‌தில‌டி கொடுப்பார்.......................

9 hours ago, உடையார் said:

எல்லை தாண்டிய உலக பயங்கரவதி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொல்லப்பட்ட 133 அப்பாவிகளுக்கும் ஆழந்த இரங்கல்கள். இதனை எவர் செய்திருப்பினும் கண்டிக்கப்பட வேண்டியதே. 

உக்ரேன் இத்தாக்குதலில் பங்குபற்றியிருக்கலாம் என்று கூறுவது பிரச்சாரத் தந்திரமே அன்றி வேறில்லை. இதனை ரஸ்ஸிய மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை.  உக்ரேன் எல்லைகளூடாகத் தப்பிச் செல்ல முனைந்தார்கள், ஆகவே உக்ரேனில் இருந்து வந்தவர்கள் தான் என்று வாதிடுவது போலத் தெரிகிறது. ஆனால், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்கள். மிகக் கொச்சையாக ரஸ்ஸிய மொழி பேசும் இவர்கள் தஜிக்கிஸ்த்தான் மொழியை ஒத்த மொழொயைப் பேசுபவர்கள் போலத் தெரிகிறது..90 களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து போன முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களில் ரஸ்ஸியா நடத்திய போர்களின்போது பாதிக்கப்பட்ட முஸ்லீம்களே இதனைச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

செச்சென் இஸ்லாமிய பயங்கரவாதிகள் முன்னரும் ரஸ்ஸியாவில் தியெட்டர்கள், பாடசாலைகள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அவ்வாறனதொரு தாக்குதல்தான் இது. இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனது உக்ரேன் ஆக்கிரமிப்புக்கா   உக்ரேனுக்கு எதிரான பிரசாரமாக இந்த பயங்கரவாத செயலை மாற்றவே புதின் முயற்சிக்கின்றார். உக்ரைனை ஆக்கிரமிப்பது, ரஷ்ய எதிர்க்கட்சிகளை மக்களை அடக்கி ஒடுக்குவதில்  புதினின் அதிகார வட்டம் காட்டிய  அதிக ஈடுபாடு காரணமாக   முஸ்லிம் பயங்கரவாதத்தின் அபாயத்தில் கவனம் செலுத்தவில்லை.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.