Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படத்தில்  இருப்பதுதான் சிலோன் ஆலிவ் எனப்படும் வெரளு.

பச்சை காய் அம்பரில்லா.

முன்பு சிங்கள இடங்களில் பள்ளிக்கு வெளியால் வைத்து விற்பார்கள்.

எமது பகுதியில் இல்லை என நினைக்கிறேன்.

@பெருமாள் 👆🏼 பதில் உங்கள் கேள்விக்கு.

large.IMG_6936.jpeg.75c0c4d4b2f325e4c02508d9cf9c8953.jpeg

Edited by goshan_che

  • Replies 364
  • Views 38k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

  • Thumpalayan
    Thumpalayan

    எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, island said:

@goshan_che சிகிரியாவுக்கு அண்மையில் உள்ள village tour செய்தீர்களா?  பாரம்பரிய முறையில் சமைத்த கிராமிய உணவுவகைகள் பரிமாறப்படும்   காணொளி பார்ததேன். 

இல்லை ஐலண்ட் - ஆனால் சிங்கள பகுதிகளால் போகும் போது சிறிய சிறிய கடைகளில் அல்லது வீடுகளிலோ கூட வெளியில் ஒரு போர்ட்டில் அல்லது கார்போர் மட்டையில் “பத் கமு” (சோறு சாப்பிடுங்கோ) என எழுதி வைத்திருப்பர். போனால் நல்ல பாரம்பரிய உணவு கிடைக்கும்.

அதேபோல் வீதியோரங்களில் சோளம், எருமைத்தயிர்+கித்துள் பானியும் கிடைக்கும். ரட்ட கஜு என கேட்டா கச்சானும்,  தெம்பு ரட்டகஜு என கேட்டால் அவித்த கச்சானும் வாங்கலாம்.

தெற்கு அதிவேக சாலையின் சர்வீஸ்கள் பற்றி எழுதினேன் அல்லவா, அங்கேயும் பாரம்பரிய உணவுகள் எல்லாம் கிடைக்கிறது. ஆனால் அந்த feel மிஸ்ஸிங்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

படத்தில்  இருப்பதுதான் சிலோன் ஆலிவ் எனப்படும் வெரளு.

எங்கடை ஊர் நெல்லிக்காய் ஊறுகாய் போல கிடக்கு.....:cool:

இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதை........😂
என்னத்தை சொல்ல....மாய உலகம்.🤣

large.IMG_6936.jpeg.75c0c4d4b2f325e4c02508d9cf9c8953.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

எங்கடை ஊர் நெல்லிக்காய் ஊறுகாய் போல கிடக்கு.....:cool:

இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதை........😂
என்னத்தை சொல்ல....மாய உலகம்.🤣

large.IMG_6936.jpeg.75c0c4d4b2f325e4c02508d9cf9c8953.jpeg

🤣 நெல்லிக்காய் ஊறுகாய் தேடினேன் கிடைக்கவில்லை. உப்பில் ஊறவைத்த நெல்லியும் கிடைக்கவில்லை.

ஆனால் இது நெல்லி போல இராது. சுவை 40% ஓலிவ் போல இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

🤣 நெல்லிக்காய் ஊறுகாய் தேடினேன் கிடைக்கவில்லை. உப்பில் ஊறவைத்த நெல்லியும் கிடைக்கவில்லை.

ஆனால் இது நெல்லி போல இராது. சுவை 40% ஓலிவ் போல இருக்கும்.

🤣அப்பு!  இஞ்சையும் உப்புடி ஊறவைச்ச ஆலிவ் விக்குது கண்டியளோ....அதுவும் பயங்கர உறைப்போடை......😂
😎வெளிநாட்டிலை இருக்கிற நான் ஆலிவ் சாப்பிட சிலோனுக்கு போக மாட்டன்😄

MUNDO AG - Pronto Grüne Oliven mit Chili, scharf, ohne Stein

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

🤣அப்பு!  இஞ்சையும் உப்புடி ஊறவைச்ச ஆலிவ் விக்குது கண்டியளோ....அதுவும் பயங்கர உறைப்போடை......😂
😎வெளிநாட்டிலை இருக்கிற நான் ஆலிவ் சாப்பிட சிலோனுக்கு போக மாட்டன்😄

MUNDO AG - Pronto Grüne Oliven mit Chili, scharf, ohne Stein

🤣 விதையில்லாத ஆலிவ், அநேகமா கொஸ்டோரிக்காவில் இருந்துதான் வந்திருக்கும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

படங்கள் V

சொர்கத்தின் சுவை, taste of paradise 

large.97779cc8-bd91-494b-a0b6-e7365e4acf02.jpeg.fc28e72a06c3f60fced8d90923475ed1.jpeg

கெக்கிராவையில் ஒரு சிங்கள சாப்பாடு👆🏼.

large.7bea9b28-7f3b-419c-9d9a-908da65a0bf6.jpeg.ab7eb5bc02cfd03160a48e5187700f09.jpeg

கொழும்பு புதுக்கடை தெருவோர “சவன்”.

large.IMG_7382.jpeg.7637f572a0d77ea53ee87de16a71469f.jpeg

👆🏼யாழ்பாணத்தில் தினேஷ் வெதுப்பகத்தில்.

large.65fa8b71-faa5-468b-9c1c-33b03568f756.jpeg.c639bb5cddabd91a835104d45f611721.jpeg

👆🏼ஏறாவூர் கடையில் பாலாண்டி.

————-

👇கொழும்பு வெள்ளவத்தை யாழ் உணவகம். பம்பலபிட்டியவில் மட்டு நகர் முறையில் பாடும்மீன் உணவகம்.

large.fa701b1c-46c7-459c-bbb0-40584bcfef18.jpeg.afe40908b53bae7a43f96477f203ad76.jpeglarge.IMG_6234.jpeg.fe13ecafbd6d038ce2178f54973ea275.jpeg

காலிமுகத்திடலில் இஸ்சு வடே, கந்தர் மடத்தில் பனங்கிழங்கு, சிலாபத்தில் கடலுணவு, சிலோன் ஒலிவ் எனப்படும் வெரளு, அம்பரில்லா👇.

large.IMG_6833.jpeg.bd2065ed7979f4a9c07f16adb645ac41.jpeglarge.IMG_5970.jpeg.dc8154ac8e91e40eb411288ab32fb33f.jpeglarge.IMG_6288.jpeg.f0b911100d420f6dbe9750d7109f9642.jpeglarge.IMG_6936.jpeg.75c0c4d4b2f325e4c02508d9cf9c8953.jpeglarge.IMG_7381.jpeg.a896d6fda2f4af992e208a7b05e33779.jpeg

கடைசியாக டிஸேர்ட் - வெள்ளவத்த பொம்பே ஸ்வீட்டில் ஒரு ஐஸ்கிரீம் பலூதா👇

large.IMG_7379.jpeg.92d3f337b2d5cef420ca8ec8f4d024a6.jpeg

ஏன் திரும்ப வந்தீர்கள்.  ??  அங்கேயே  இப்படியாக சுத்தி சுத்தி சாப்பிட்டுக்கொண்டு   வாழ்ந்து இருக்கலாம் ......🤣😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Kandiah57 said:

ஏன் திரும்ப வந்தீர்கள்.  ??  அங்கேயே  இப்படியாக சுத்தி சுத்தி சாப்பிட்டுக்கொண்டு   வாழ்ந்து இருக்கலாம் ......🤣😂

என்ன கந்தையர் விசயம் தெரியாமல் கதைக்கிறியள்´? 😂
காசு மரம் இஞ்சை தானே நிக்குது 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2024 at 23:14, island said:

யாழ்பாணத்தின் சுற்றுலா செய்ய வேண்டிய இடங்கள். 

பார்த்தேன், ரசித்தேன், 10/10 எடுத்தே😎.

21 minutes ago, Kandiah57 said:

ஏன் திரும்ப வந்தீர்கள்.  ??  அங்கேயே  இப்படியாக சுத்தி சுத்தி சாப்பிட்டுக்கொண்டு   வாழ்ந்து இருக்கலாம் ......🤣😂

பிறகு பெடியன் அங்கிள் எண்டெல்லே கூப்பிடுவான்🤣.

15 minutes ago, குமாரசாமி said:

என்ன கந்தையர் விசயம் தெரியாமல் கதைக்கிறியள்´? 😂
காசு மரம் இஞ்சை தானே நிக்குது 😎

நல்லா கேளுங்க எசமான்…அவர் எல்லாரும் தன்னை போல் மல்டி பில்லியனர் என நினைக்கிறார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2024 at 22:54, ஈழப்பிரியன் said:

வணக்கம் தும்பளையான் நீண்ட காலத்திற்குப் பின் கண்டது மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

துடுப்பாட்டப் போட்டியில் பங்கு கொண்டு போட்டியை சிறப்பிக்கலாம்.

On 9/4/2024 at 23:41, நிழலி said:

தும்ஸ், நீண்ட காலத்துக்கு பின் மீண்டும் கண்டது சந்தோசம்!

On 10/4/2024 at 00:42, பெருமாள் said:

தும்பளையானைக் கண்டது சந்தோஷம்

On 10/4/2024 at 02:46, goshan_che said:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தும்பளையான்.

உங்கள் மாமாவின் கருத்தே எனதும். இடையில் எண்ணத்தை கைவிட்டிருந்தாலும், இப்போ ஓய்வூதிய காலத்தை பாதியளவு ஊரில் கழி(ளி)க்கலாம் என்ற நினைப்பு மீண்டும் துளிர் விடுகிறது. 

பிகு

ஓய்வூதியம் எடுக்க இன்னும் 20+ வருடம் இருக்கு.

இதெல்லாம் ஜுஜிபி. 

🦁+💃 கதையையே எவரும் கேள்வி கேட்கவில்லை.

இப்படி எல்லாம் மினெகெடாமலே….🤣

On 10/4/2024 at 03:21, சுவைப்பிரியன் said:

தும்பளையானைக் கண்டது சந்தோஷம்.

On 10/4/2024 at 03:47, Justin said:

வணக்கம் தும்ஸ், தொடர்ந்து நில்லுங்கோ.

இந்த அக்கரையிலும் இக்கரையிலும் "வீடு வைச்சிருக்கும்" பழக்கமும் புலம் பெயர்ந்து வந்து விட்டது. கனடாவில் இருந்து கியூபாவில் வடலி வளர்த்துக் கள்ளுக் குடிப்போர் இருக்கிறார்கள் என அறிந்தேன் (அமெரிக்காவில் இருந்து கியூபா போக முடியாது என்பதால், நாம் சிங்கிள் எஞ்சின் தான்😂!)

On 10/4/2024 at 03:50, suvy said:

வணக்கம் தும்பளையான் ......கண்டது மகிழ்ச்சி........!  😁

எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக்தியை தாறது. கொஞ்ச நாளைக்கு "முன் லைனிலே, பொசிசன் எடுத்து நிக்கப்போறன் - ஓவர்"

ஒருகாலத்தில் (மைத்திரி வந்த போது) கொழும்பில் போய் இருப்பது (ஊரில் இருக்க முடியுமா தெரியவில்லை) திட்டமாக இருந்தது. கோத்தபாயவின் வருகை, கொரோனாவின் தாக்கம், பொருளாதார நெருக்கடி இதனால் முடிந்தவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு ஓடியதால் தற்போது வந்திருக்கும் Brain Drain போய் இருக்கும் எண்ணத்தை வெகுவாக பாதித்துள்ளது. இப்பத்தான் 38ஆவது வயசு நடப்பதால் பென்சன் எடுக்கும் காலம் பத்தி இப்போதைக்கு யோசிக்கவில்லை. 

பொருளாதார ரீதியில் சிறு உற்பத்தி ஏற்றுமதிகளோட மட்டுமில்லாமல் தகவல்  நுட்பத் துறை சார்பான ஏற்றுமதிகளை எமது பக்கங்களில் ஊக்குவிப்பது தான் இப்போதைக்கு நாங்கள் லடயஸ்பொறா டமில்ஸ் செய்ய வேண்டியது/செய்யக் கூடியது.

ஆனால் யாழ் மாவட்டத்தில் வேலை வாங்குவது மிகவும் கடினம். உதாரணத்துக்கு எனது நண்பன் ஒருவன் ஒரு சுயதொழில் செய்தார். அவரின் operations ஐ பாத்தவுடனேயே அதில் பல குறைபாடுகளை கண்டு பிடித்துவிட்டேன். இந்த இந்த மாதிரி செய், இத ட்ரை பண்ணு இன்னும் லாபத்தில ஓடும் எண்டு சொன்ன போது உதெல்லாம் வெளிநாட்டுக்குத்தான் சரி, எங்கட ஆக்களுக்கு உதுகள செய்ய பஞ்சி எண்டு சொல்லிப் போட்டான். ரெண்டு வாரியத்தில அவனிண்ட லாபத்தை விட கால்வாசி சம்பளத்தில அரச வேலை  வந்தவுடனேயே பிஸினசையும் மூடிப்போட்டு இருக்கிறார். அரச வேலை இல்லாதவர்கள் சாப்பாட்டுக்கடை, ஹைஏஸ் வான்/ஆட்டோ, பான்சி கடை/சூப்பர் மார்க்கட் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர கஷ்டப்படுகிறார்கள். பொருளாதார இறுக்கத்தின் பின்னர் எனது நண்பர்களில் பல்கலை போன 90% எஞ்சினியர்/டொக்டர் ஊரிலே இல்லை. இருப்பவர்கள் ஆங்கில அறிவு போதாமையால் போகமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Thumpalayan said:

உங்களின் மனநிலைதான் எனக்கும்.

ஆனால் வயது நாற்பதின் நடுப்பகுதியை விட்டு விலக ஆரம்பித்திருப்பதால் அடுத்த கட்டங்கள் பற்றி சிந்திக்கவாவது முனைகிறேன். 

ஒவ்வொரு முறையும் உணர்வதுதான் ஆனால் இந்த முறை இதை கொஞ்சம் அதிகமாகவே உணர்ந்தேன்👇.

என்ன மாயமோ தெரியவில்லை, அங்கே போனதும் சிறு, சிறு உடல் உபாதைகள், நோவுகள் எல்லாம் காற்றாய் பறந்து விடுகிறன.

உடல் சோர்வதில்லை, மூட்டு வலிப்பதில்லை, தடிமன் காய்ச்சல் கூட மிக அரிதே. அதே போல் கும்பகர்ண விருந்து சாப்பிட்டாலும் கூட ரத்த சீனியின் அளவை மிக இலகுவாக கட்டுப்படுத்த முடிகிறது.

Feeling healthy என்பார்களே இது ஊரில் நிச்சயம் ஒரு மடங்கால் கூடுகிறது.

இது தனியே கொலிடே மனநிலை மட்டும் இல்லை என நினைக்கிறேன். ஏதோ ஒரு பெளதீக மாற்றமும் உள்ளது. சூரிய ஒளி/வைட்டமின் டி யாக இருக்கலாம்.

இவ்வாறு, ஊரில் உள்ள விடயங்களை விதந்து பேசினாலும், இள, மத்திய வயது குடும்பங்கள் ஊர் மீளுவதை, குறிப்பாக பிள்ளைகளுடன் போவதை மோசமான முடிவு என்றே இன்னும் கருதுகிறேன். ஊர் போய் வந்த பின் இந்த கணிப்பு மேலும் இறுகியுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 படங்கள் V

தாமரைக்கோபுரம்

large.IMG_6843.jpeg.1efb55d1ac3004c799581598c0e879af.jpeglarge.IMG_6844.jpeg.c8e44814da6ef058a2e644ec9a8a9c84.jpeg

உருவாகி வரும் இண்டர் கொண்டினெண்டல் ஹோட்டல், கொழும்பு மாநகரசபை கட்டிடம், வெளி ஊர்களில் இருந்து, உறபத்தியாளர்கள் நேரடியாக புறக்கோட்டைக்கு மரக்கறிகளை கொணர்ந்து விற்கும், இரவுச்சந்தை.

large.IMG_6831.jpeg.845fffcc1e2b27aa198b32cb8527966b.jpeglarge.IMG_6581.jpeg.aaaa63c41afc4f824f5627dc1d202e46.jpeglarge.IMG_6227.jpeg.6795b08a20457509fb871522026e8ab9.jpeg

தென்னிலங்கை கடற்கரைகளும், ஐரோப்பிய பயணிகளும்

large.IMG_6654.jpeg.b6abaa2ec4e456b28e7bdcd5164bdfc8.jpeglarge.IMG_6640.jpeg.3eece283b1f269b2df8e0a9fc47586a5.jpeglarge.IMG_6443.jpeg.fb473a5de6b66349902ebcb2748f2b1d.jpeglarge.IMG_6707.jpeg.38947a02ab5d8283a2166bf48f1d7281.jpeg

காலி கோட்டை உள்ளே

large.IMG_6496.jpeg.b5162625f0bb46b525f39dc973239b1d.jpeglarge.IMG_6493.jpeg.209e79bcaa0e2972909e88676bdb5779.jpeg

கொழும்பு புறநகர் ரயில் - காதல் ஜோடியும் கச்சான் வியாபரியும். பழைய ஆனால் சுத்தமான ரயில் பெட்டிகள்.

large.IMG_6260.jpeg.91ed18812b733cb28960c42759bb6cc7.jpeg

அதே ரயிலில் பாட்டு பாடி யாசகம் எடுப்பவரும், பயணிகளும்.large.IMG_6332.jpeg.b453509817e17af208a05495656bfbba.jpeg

……அதிலும் கொடுமை இளமையில் துறவு🥲…..

large.IMG_6094.jpeg.5c5d72a52eb735f1092fa74be8b9cc69.jpeg

என் வீட்டுத்தென்ங்கன்றை இப்போதே கேட்டுப்பார்😀. உன்பெயர் சொல்லுமே🤣…..

large.IMG_5866.jpeg.aa64c9e2c38a94fb2dc65e8e9f7736ba.jpeg

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

உங்களின் மனநிலைதான் எனக்கும்.

ஆனால் வயது நாற்பதின் நடுப்பகுதியை விட்டு விலக ஆரம்பித்திருப்பதால் அடுத்த கட்டங்கள் பற்றி சிந்திக்கவாவது முனைகிறேன். 

ஒவ்வொரு முறையும் உணர்வதுதான் ஆனால் இந்த முறை இதை கொஞ்சம் அதிகமாகவே உணர்ந்தேன்👇.

என்ன மாயமோ தெரியவில்லை, அங்கே போனதும் சிறு, சிறு உடல் உபாதைகள், நோவுகள் எல்லாம் காற்றாய் பறந்து விடுகிறன.

உடல் சோர்வதில்லை, மூட்டு வலிப்பதில்லை, தடிமன் காய்ச்சல் கூட மிக அரிதே. அதே போல் கும்பகர்ண விருந்து சாப்பிட்டாலும் கூட ரத்த சீனியின் அளவை மிக இலகுவாக கட்டுப்படுத்த முடிகிறது.

Feeling healthy என்பார்களே இது ஊரில் நிச்சயம் ஒரு மடங்கால் கூடுகிறது.

இது தனியே கொலிடே மனநிலை மட்டும் இல்லை என நினைக்கிறேன். ஏதோ ஒரு பெளதீக மாற்றமும் உள்ளது. சூரிய ஒளி/வைட்டமின் டி யாக இருக்கலாம்.

இவ்வாறு, ஊரில் உள்ள விடயங்களை விதந்து பேசினாலும், இள, மத்திய வயது குடும்பங்கள் ஊர் மீளுவதை, குறிப்பாக பிள்ளைகளுடன் போவதை மோசமான முடிவு என்றே இன்னும் கருதுகிறேன். ஊர் போய் வந்த பின் இந்த கணிப்பு மேலும் இறுகியுள்ளது.

எங்களுக்கு பழகிய சூழலாக இருப்பதால் உங்களுக்கு feeling healthy யாக இருப்பதில் வியப்பில்லை. அதோட வேலை டென்சன், காசு டென்ஷனுகள் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். பச்சைப் பசேல் என்ற ரம்மியமான இயற்கை, அழகிய கடற்கரைகள், உறவுகள், கோயில் திருவிழாக்கள் என்பன மனசை இலகுவாக்க கூடியன. அதேவேளை கண்ட இடத்திலும் குப்பை, வாகன கோர்ன் சத்தம், ஆட்களை ஆக்கள் நெருக்கியடிக்கும் வரிசைகள், ஊழியர்களின் அசமந்தம், நீதி ஒழுங்கின்மை என்பன BP யை எகிற வைப்பன.   

படங்கள் அருமை - நன்றி  

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2024 at 02:55, goshan_che said:

ஆம்… இப்போ @satan இதில் உள்ள கைரேகையை வைத்து நான் யார் என துப்பு துலக்க துவங்கி இருப்பார்

அட தெய்வமே! நீங்கள் இன்னுமா நிக்கிறீர்கள்?  ம்ம்..... சும்மாவே சாத்தான் எத்தனை பக்கங்கள் எழுதுகிறார், எத்தனை பேர்  பச்சை குத்துகிறார்கள்? என்று என்னை பின்தொடர்வது தாங்கள், அதில் என்னை கொழுவி வலிய இழுப்பது. களத்தில் நாங்கள் அறிமுகமானோம், அங்கேயே உரையாடலும் உறவும் கொள்ளுப்பாடும் அதோடு முடிந்துவிடும். அதை  வெளியில் கொண்டு போவது, தேடுவது எனது குணமல்ல. இதை நீங்கள் நம்பலாம். இல்லையேல் என்னோடு உரையாடுவதை தவிர்க்கலாம்.  

On 9/4/2024 at 22:40, ஈழப்பிரியன் said:

https://sigiriyafortress.com/sigiriya-opening-hours-sigiriya-ticket-prices/

இதுவே சிகிரியா போனால் இலங்கையர்களுக்கு 120 ரூபாவும்

வெளிநாட்டினருக்கு 36 டாலர்களும் அறவிடப்படுகின்றன.

முப்பத்தாறு டொலர்கள் இலங்கை மதிப்பில் எத்தனை ரூபாய்கள்? சும்மா தெரிந்து கொள்வதற்காக கேக்கிறேன், வேறு ஒன்றுமில்லை ...

On 11/4/2024 at 02:11, தமிழ் சிறி said:

அதை பிடித்து இருப்பது உங்கள் கையா...? 
ஊர் வெய்யிலுக்கு கறுத்துப் போனியள்  போலை கிடக்கு.  😂

  நான் கேக்க நினைத்ததை, நீங்கள் கேட்டுவிட்டீர்கள்!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

அட தெய்வமே! நீங்கள் இன்னுமா நிக்கிறீர்கள்?  ம்ம்..... சும்மாவே சாத்தான் எத்தனை பக்கங்கள் எழுதுகிறார், எத்தனை பேர்  பச்சை குத்துகிறார்கள்? என்று என்னை பின்தொடர்வது தாங்கள், அதில் என்னை கொழுவி வலிய இழுப்பது. களத்தில் நாங்கள் அறிமுகமானோம், அங்கேயே உரையாடலும் உறவும் கொள்ளுப்பாடும் அதோடு முடிந்துவிடும். அதை  வெளியில் கொண்டு போவது, தேடுவது எனது குணமல்ல. இதை நீங்கள் நம்பலாம். இல்லையேல் என்னோடு உரையாடுவதை தவிர்க்கலாம்.  

ப்ரோ சாத்ஸ்…என்னையா இது…அது சும்மா பகிடியா எழுதினது…டினேஷ் ஷாப்டர் துப்புதுலக்கல் பகிடியின் தொடர்சியாக…

தயவு செய்து தப்பாக எடுக்க வேண்டாம்🙏.

9 hours ago, satan said:

முப்பத்தாறு டொலர்கள் இலங்கை மதிப்பில் எத்தனை ரூபாய்கள்? சும்மா தெரிந்து கொள்வதற்காக கேக்கிறேன், வேறு ஒன்றுமில்லை

அண்ணளவாக 11,000 SLRs.

9 hours ago, satan said:

நான் கேக்க நினைத்ததை, நீங்கள் கேட்டுவிட்டீர்கள்!  

அதுக்கு பெயர் கறுப்பதல்ல, attractive tan. 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2024 at 02:11, தமிழ் சிறி said:

அதை பிடித்து இருப்பது உங்கள் கையா...? 
ஊர் வெய்யிலுக்கு கறுத்துப் போனியள்  போலை கிடக்கு.  😂

அட ...நான் யாரோ வெள்ளைக்காரனின் கையென்றெல்லா நினைத்திருந்தேன்!

On 11/4/2024 at 02:55, goshan_che said:

ஆம்… இப்போ @satan இதில் உள்ள கைரேகையை வைத்து நான் யார் என துப்பு துலக்க துவங்கி இருப்பார்🤣

12 hours ago, goshan_che said:

ப்ரோ சாத்ஸ்…என்னையா இது…அது சும்மா பகிடியா எழுதினது

இத்தனை காலமாக இங்கு நின்று களமாடும், கொழுத்தாடும் எனக்கு,   யாரோடு எதை எப்போது எப்படி எடுக்க வேண்டும் என்று  நன்றாகவே தெரியும். நீங்கள் பகிடிக்குத்தான் எழுதினீர்கள் என்பது தெரிந்தும், நான் பொதுவாக  எச்சரிக்கையாகவே எழுதினேன். இங்கு நானும் நீங்களும் மாத்திரம் உரையாடுவதுமில்லை, வாசிப்பதுமில்லை. பொருத்தமானவர்கள்  பொருத்தமான கருத்தை எடுத்துக்கொள்ளலாம். முன்பொருமுறை எதேச்சையாக எழுதிய கருத்துக்கு நான் தன்னை உளவு பார்ப்பதாக கள உறவொன்று குற்றஞ்சாட்டியிருந்தார். அதனாற்தான் அப்படி எழுதி, குறிப்பிட்டவர்கள் என்னோடு தொடர்பாடலை தவிர்த்துக்கொள்ளலாம் என குறிப்பிட்டேன். நன்றி! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

அட ...நான் யாரோ வெள்ளைக்காரனின் கையென்றெல்லா நினைத்திருந்தேன்!

சாத்ஸ்…. நீங்கள் உங்கள் கண்ணை ஒருக்கால் கண் டாக்டரிடம் காட்டுவது நல்லது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

சாத்ஸ்…. நீங்கள் உங்கள் கண்ணை ஒருக்கால் கண் டாக்டரிடம் காட்டுவது நல்லது. 😂

சும்மா.... சாரை குஷிப்படுத்துவோம் என்றால்; உங்களுக்கேன் இவ்வளவு பொறாமை? இப்படி ஏற்றி விட்டு, அடுத்தமுறை மிளகாய்தூளுக்கு சொல்லி பாருங்கள்... எவ்வளவு என்கிற  கேள்வியே இல்லாமலே சொந்தச் செலவிலேயே கொண்டுவந்து தருவார். உங்களுக்கும் குஷி வரும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2024 at 02:19, தமிழ் சிறி said:

சாத்ஸ்…. நீங்கள் உங்கள் கண்ணை ஒருக்கால் கண் டாக்டரிடம் காட்டுவது நல்லது. 😂

கண்ணை கண் டாக்டரிடம் அல்லவா காட்ட வேண்டும்?

ஏன் கால் டாக்டரிடம்? அதுவும் ஒரு கால் உள்ள டாக்டரிடம்🤣

(ரொம்ப புளிச்ச ஜோக்கோ?)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கண்ணை கண் டாக்டரிடம் அல்லவா காட்ட வேண்டும்?

ஏன் கால் டாக்டரிடம்? அதுவும் ஒரு கால் உள்ள டாக்டரிடம்🤣

(ரொம்ப புளிச்ச ஜோக்கோ?)

ஹாஹாஹா,,,,,, இந்த ஜோக்கை இப்பதான் முதன் முதல் கேள்விப்படுகிறன்.😋
"வேறை லெவல்" ஜோக். நிச்சயம் இது, முகநூல், ருவிற்றர் எல்லாம் சக்கை போடப் போகுது.🤩
இந்த ஜோக்குக்கு கீழை... கோசான் என்று எழுதி விடுங்கோ. 😁
இல்லாட்டி ஆரும் ஆட்டையை  போட்டுட்டு தங்கடை என்று உரிமை கொண்டாடி விடுவார்கள். 😂🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

ஹாஹாஹா,,,,,, இந்த ஜோக்கை இப்பதான் முதன் முதல் கேள்விப்படுகிறன்.😋
"வேறை லெவல்" ஜோக். நிச்சயம் இது, முகநூல், ருவிற்றர் எல்லாம் சக்கை போடப் போகுது.🤩
இந்த ஜோக்குக்கு கீழை... கோசான் என்று எழுதி விடுங்கோ. 😁
இல்லாட்டி ஆரும் ஆட்டையை  போட்டுட்டு தங்கடை என்று உரிமை கொண்டாடி விடுவார்கள். 😂🤣

என்ர ஜோக்கை விட அதை வச்சு நீங்க அடிச்ச ஜோக்தான் ஜோக்கா இருக்கு 🤣

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

ஹாஹாஹா,,,,,, இந்த ஜோக்கை இப்பதான் முதன் முதல் கேள்விப்படுகிறன்.😋
"வேறை லெவல்" ஜோக். நிச்சயம் இது, முகநூல், ருவிற்றர் எல்லாம் சக்கை போடப் போகுது.🤩
இந்த ஜோக்குக்கு கீழை... கோசான் என்று எழுதி விடுங்கோ. 😁
இல்லாட்டி ஆரும் ஆட்டையை  போட்டுட்டு தங்கடை என்று உரிமை கொண்டாடி விடுவார்கள். 😂🤣

5 minutes ago, goshan_che said:

என்ர ஜோக்கை விட அதை வச்சு நீங்க அடிச்ச ஜோக்தான் ஜோக்கா இருக்கு 🤣

Capture.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

Capture.jpg

இனி இந்திய தூதரகம் மறுப்பறிக்கை வரைக்கும் இது போகும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இனி இந்திய தூதரகம் மறுப்பறிக்கை வரைக்கும் இது போகும்🤣

இல்லையண்ணை மருத்துவச் சங்கங்கள் போர்க்கொடி தூக்கும்!!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

Capture.jpg

ஏராளன் இதை சிவப்பு மையில் போடும் வரை எனக்கு பகிடி விளங்கவில்லை! ஸ்ரார்ட்டர் லூசான ரியூப்லைற் நான்😂!

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.