Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம்சாட்டிய சிறிசேன - முன்னாள் ஜனாதிபதியின் புதிய சகாவே இந்த குற்றச்சாட்டிற்கு காரணமா என அரசாங்கம் விசாரணை

Published By: RAJEEBAN   31 MAR, 2024 | 02:05 PM

image

சண்டே டைம்ஸ் 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கியவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே உள்ளதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சண்டே டைம்ஸ் மைத்திரிபால சிறிசேனவுடன் சமீபத்தில் இணைந்து கொண்டுள்ள நபர் ஒருவரே இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளரா என  அரசாஙகமட்டத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து சண்டேடைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது,

easter_sunday_attack_main.jpg

கடந்த காலங்களில் வெளியான விடயங்களை தலைகீழாக மாற்றும் விதத்தில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றை மாற்றியமைக்கும் விதத்தில்  புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு சில நாட்கள் இருக்கையில் அவர் இந்த புதிய தகவலை வெளியிட்டார்.

கண்டிக்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டவேளை தனக்கு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து புதிய விடயங்கள் தெரியவந்துள்ளதை அவர் கோடிட்டுக்காட்டியிருந்தார்.

கண்டியில் தனது நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் அவர் ஊடகவியலாளர்களுடன் உரையாடினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை தான் அறிந்துகொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர்கள் யார் என்பதை அவ்வேளை அவர் தெரிவிக்கவில்லை. நான் நீதிமன்றத்தின் முன்னிலையிலேயே அதனை தெரிவிப்பேன் என தெரிவித்த மைத்திரிபால சிறிசேன இந்த தகவலின் மிக முக்கிய தன்மை காரணமாக தனக்கு மேலதிக பாதுகாப்பையும் கோரவுள்ளதாக குறிப்பிட்டார்.

கொழும்பில் சிறிசேன ஊடகங்களிற்கு பேட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை அவரின் இரண்டு உதவியாளர்கள் மேற்கொண்டிருந்தமை அவ்வேளையில் புலனாகியது.

சிறிசேனவின் இந்த தகவலிற்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்குவதே அவர்களின் நோக்கம்.

எனினும் இந்த தகவல் வெளியானதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற அழுத்தங்களிற்குள்ளானார். குற்றச்செயல்கள் குறித்த விபரங்களை மறைத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதியை கைதுசெய்யவேண்டும் என சில தரப்பினர் வாதிட்டனர்.

பொலிஸ்மா அதிபர் ஊடாக மைத்திரிபால சிறிசேனவை விசாரணை செய்யவேண்டும் என்ற உத்தரவை அமைச்சர் பிறப்பித்தார்.

மிக முக்கியமாக முன்னாள் ஜனாதிபதி சிஐடிக்கு அழைக்கப்பட்டார் அவரின் வாக்குமூலம்பதிவு செய்யப்பட்டது.

ஐந்து மணிநேரத்திற்கு மேல் விசாரணைகள் இடம்பெற்றதாக  பொலிஸ்வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியா உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கியுள்ளார் என சண்டே டைம்சிற்கு தெரியவந்துள்ளது.

அவருக்கு எப்படி தெரியும்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இந்திய இராஜதந்திரியொருவர் தனக்கு தெரிவித்தார். என்ன காரணங்களிற்காக அந்த தாக்குதல் இடம்பெற்றது என்பதையும் அவர்  தெரிவித்தார் என சிஐடியினரிடம் தெரிவித்துள்ள சிறிசேன அந்த இராஜதந்திரியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இந்தியா தனது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்படாமையே இந்த தாக்குதலிற்கான காரணம் என அந்த இராஜதந்திரி தெரிவித்தார் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

உதாரணத்திற்கு மத்தல விமானநிலையம் போன்ற திட்டங்கள்.

சிறிசேனவிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளதா?

easter_sunday__attack22.jpg

அரசாங்கம் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பதாக  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனதான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் பாரதூரதன்மையை உணரவில்லை போல தோன்றுகின்றது.

எந்த இராஜதந்திரியும் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டிற்கு சென்று நாங்கள்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டோம் என தெரிவிக்கப்போவதில்லை - சித்த சுவாதீனமற்றவர் மாத்திரமே அவ்வாறு செயற்படுவார்.

இந்தியாவின் ரோ அமைப்பிடமிருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியான எச்சரிக்கையை முதலில் அறிந்தவர் சிறிசேன.

ஏன் அவர் தற்போது உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முன்னர் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்.

சிறிசேனவுடன் சமீபத்தில் இணைந்து கொண்டுள்ள  வாகன இறக்குமதியாளருக்கும் இந்த குற்றச்சாட்டுகளிற்கும் இடையில் தொடர்புள்ளதா என அரசாங்கத்தின் சில மட்டத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுடன் இணைந்து செயற்பட்டவர் மோசமான நடவடிக்கைகள் காரணமாக அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த நபர் தொடர்ந்தும் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலத்தினை சிஐடியினர் பதிவு செய்துகொண்டிருந்தவேளை இந்த நபர் மேற்குலக இராஜதந்திரியுடன் உணவகமொன்றில் காணப்பட்டார்.

சிறிசேன தனது வாக்குமூலத்தை பூர்த்தி செய்ய முன்னரே இந்த இராஜதந்திரி இந்தியாதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில்உள்ளதாக தனது தொடர்பில் உள்ளவர்களிற்கு தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன சிஐடியினருக்கு வழங்கிய வாக்குமூலம் குறித்து அரசாங்கத்தின் உயர்வட்டாரங்கள் ஆராய்ந்துள்ளன.

இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதாலேயே  அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளன.

சட்டமா அதிபரின் அறிவுரையின் கீழ் சிஐடியினர் நீதிமன்றத்தில் பி அறிக்கையை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நான்காம் திகதி நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜரானால் சிஐடியினர் முன்னிலையில் தெரிவித்த அனைத்து விடயங்களையும் அவர் பகிரங்கமாக தெரிவிக்கவேண்டிய நிலையேற்படும்.

இதனை விட மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இதற்கு இந்திய அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய நிலை உருவாகும்.

உள்நோக்கம் உள்ளதா இல்லையா தெரியவில்லை. இந்தியா குறித்து குற்றம் சாட்டுவது இந்த விடயம் குறித்து இதுவரை தெரிவிக்கப்பட்ட அறியப்பட்ட அனைத்தையும் முற்றாக மாற்றியுள்ளது.

இலங்கை முஸலீம்களே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என்பது நன்கு அறியப்பட்ட விடயம்.

ஏன் தாக்குதலிற்கு இந்தியா ஒரு சமூகத்தை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டும்.

மேலும் இந்த விடயத்தில் ஐஎஸ் அமைப்பு மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதும் சிறிசேன தெரிவித்துள்ள விடயங்களை அர்த்தமற்றதாக்குகின்றது.

சிறிசேனவின் குற்றச்சாட்டுகள் தற்போதைய அரசாங்கத்தின் தலைமை மீது கடும் தாக்கத்தினை செலுத்தக்கூடும் 

மைத்திரிபால சிறிசேனவை தொடர்புகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

https://www.virakesari.lk/article/180066

  • கருத்துக்கள உறவுகள்

சஹ்ரான் இஸ்லாமியர்களல்லாத காபிர்களை மூட்டுமூட்டாக வெட்டி கொல்லுங்கள் என்று பேசி வீடியோ விட்டு பல மாதங்களின் பின்னரே தாக்குதல் நடைபெற்றிருந்தது.

சாதாரணமா புலிகளின் தலைவரின் படத்துக்கு பேஸ்புக்கில் ஒரு லைக் போட்டாலே நாலாம் மாடிக்கு கொண்டுபோய் புலன் விசாரணை நடத்தும் இலங்கை படைகள் , சஹ்ரானின் காணொளியை கண்டும் காணாமல் விட்டபோதே எங்கோ ஒரு அபாயம் காத்திருகிறது என்பது இலங்கை பாதுகாப்பு அமைப்பினருக்கு தெரிந்திருக்கும் .

மதவெறியோடு இருந்தவர்களை பதவிவெறி கொண்டவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதே பெரும்பாலானவர்களின் இன்றுவரையான சந்தேகம்.

என்னவோ ஏதோ..ஆனால் ஒன்று நிதர்சனம்..

மஹிந்த குடும்பத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து விட்டார்கள் என்பதே அது.

மீண்டும் ஒரு தேர்தலின் பின்னர் கோட்டபாய மறுபடியும்  இலங்கை ஜனாதிபதி ஆனாலும் ஒன்றும் ஆச்சரியபடுவதற்கில்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கியவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே உள்ளதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சண்டே டைம்ஸ் மைத்திரிபால சிறிசேனவுடன் சமீபத்தில் இணைந்து கொண்டுள்ள நபர் ஒருவரே இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளரா என  அரசாஙகமட்டத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

இப்ப இந்தியா இதுக்கு என்ன சொல்லப்போகுது?   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இப்ப இந்தியா இதுக்கு என்ன சொல்லப்போகுது?   

மேற்குலகின் அனுமதியோடு, இந்தத் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. அதற்கு மதவெறி மூடர்களைப் பயன்படுத்திக்கொண்டது. 

இந்தத் தாக்குதல் மூலம் இலங்கையின் உல்லாசப் பயணத்துறையை  இல்லாதொழித்து இலங்கையை பூரணமாக சரணடைய வைத்தது. அதன் பின்னரான காலப் பகுதியில் இலங்கையில் இந்தியா தனது காலை அகலப் பதித்துக்கொண்டது. 

இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். 

இனி இந்தியா மறுத்தும் பிரயோஜனம் ஏதும் இல்லை. ஒருவரும் இந்தியாவை நம்பப்போவதும் இல்லை. 

அடுத்த குண்டுகள் எப்போது எங்கே வெடிக்கும் என்பதுதான் மில்லியன் டொலர் கேள்வி. 

அது வடக்கு கிழக்கில் வெடிக்கும்.  ஆனால் (அதில்  விபுலிகளின் பெயர் இருக்காது. )

அது எப்போது? 

  • கருத்துக்கள உறவுகள்

கெனடி இன்னும் உயிரோடிருப்பது "எல்லோருக்கும்" தெரிந்திருப்பது போலவே, இனி மேற்கும் இந்தியாவும் சேர்ந்து குண்டு வைத்ததும் "எல்லோருக்கும்" தெரிந்திருக்கிறது😂!

இந்தியாவிடம் இருந்து கிடைத்த எச்சரிக்கை பற்றிய தகவலை மறைத்தமைக்காக, சிறையில் வாட வேண்டிய சந்தேக நபர் சிறிசேன! அவர் இனி வந்து "செவ்வாய்க் கிரக வாசிகள் தான் வைத்தார்கள்" என்று புள்ளி வைத்தால் கோலம் போட முட்டாப் பீசுகள் எங்களிடையே இருக்கிறார்கள்!  இந்த லட்சணத்தில் சிங்களவன் முட்டாள் என்று தங்களுக்குத் தாங்களே கிச்சு கிச்சு மூட்டிக் கொள்வோர் இருக்கிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வெடித்த அடுத்த கணமே அது மேற்கு +இந்தியா வின் வேலை என்பதை சிறு குழந்தையும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் மேற்கின் மாயையால் மூடப்பட்ட  சிலருக்கு  மட்டும் இது புரியாது. 

இதை மறைத்து முண்டு கொடுக்க வேண்டிய தேவை யாருக்கேனும் இருக்கலாம். 

😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்திய இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பத்திரிகை செய்தி தொடர்பில் ஹர்ஷ விசனம்

Published By: VISHNU   31 MAR, 2024 | 10:12 PM

image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆங்கில பத்திரையொன்று அடிப்படையற்ற காரணிகளை சுட்டிக்காட்டி கட்டுரையொன்றை பிரசுரித்துள்ளது. குறித்த கட்டுரையில் இலங்கை - இந்தியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விசனம் வெளியிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அது தொடர்பில் பிரபல ஆங்கில பத்திரிகையொன்றின் அரசியல் கட்டுரையில், மைத்திரி இந்தியாவிலுள்ள பிரபல இராஜதந்திரயொருவர் தொடர்பிலேயே தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனமையே இதற்கான காரணமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறெனில் இதுவரை இந்த தாக்குதல்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு என்னவானது? இதன் மூலம் யாருக்கு வெள்ளையடிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது? புதிதாக வெளிவரும் இந்த அரசியல் சூழ்ச்சி என்ன?

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இவ்வாறானதொரு செய்தி வெளியிடப்பட்டுள்ளமையை, இரு நாடுகளுக்கிடையில் முரண்பாடுகளை தோற்விக்கும் செயலாகவே நாம் பார்க்கின்றோம். இதுவரைக் காலமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, 100 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான செய்தி வெளியாகியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இன்னும் சில மாதங்களில் உருவாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி வழங்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/180091

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஆதாரவு பெற்ற ஜனாதிபதி இலங்கையில் வெற்றியடையாமல் இருப்பதற்காக இந்த வாக்குமூலத்தை சிறிசேனா வழங்கியுள்ளார்..
நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல் நடை பெற போகின்றது ...கிறிஸ்தவ மக்களுக்கு இந்தியா மீது ஏற்கனவே வெறுப்புணர்வு ,இஸ்லாமிர்களும்  இந்தியா மீது அதே வெறுப்புணர்வுடன் தான் இருக்கின்றனர் ..
இந்த இரு சிறுபான்மை சமுகத்தின் வாக்குகளும் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது ...இது
ஜனாதிபதி யாக ரணில் வருவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும்...
அனுராவின் வாக்கு வங்கி நிச்சயமாக வீழ்ச்சியடைய வாய்ப்பு உண்டு அவர் தனது இடது சாரி கொள்கையை புறந்தள்ளி இந்தியா,அமெரிக்கா மீது மோகம் கொண்டமை....
நாட்டின் முன்னெற்றத்தை விட வெறுப்புணர்வு வாக்குகளை பெற்று அரசியல் தலைவராக 
வருவதை சிறிலங்கா அரசியல் வாதிகள் விரும்புகின்றனர்...
ரணில் ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்கா மகிழ்ச்சியடையும்..இந்தியா விரும்பாவிட்டாலும் சகித்து கொள்ளும்.

மைத்திரி தேர்தல் வரும் வேளையில்  ,ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடை பெற்ற நினைவு தினத்தில் இந்த அறிவிப்பு செய்தமை  நிச்சயமாக முஸ்லீம் ,கிறிஸ்தவ வாக்குகளை அவர் சார்ந்த கட்சிக்கு பெற்று கொள்வதற்கே...

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இப்ப இந்தியா இதுக்கு என்ன சொல்லப்போகுது?   

ஒரு நாட்டின் இறையாண்மையில் நாங்கள் தலையிடுவதில்லை என இந்தியா அறிக்கை விடும்

திருச்சி சிறப்பு முகாமில்  சிறிலங்காவின் மூவின மக்கள் பிரதிநிதிகளும்  இருக்கின்றனர் ...அவர்களுக்கு தான் தெரியும்...

14 minutes ago, putthan said:

இந்தியாவிலும் மோடி அரசு வீழ்ச்சி அடைய வேணும் என மேற்குலகு விரும்புகிறது ..இந்தியாவில் கிறிஸ்தவ இஸ்லாமிய வாக்குகளை மோடிக்கு எதிராக திசை திருப்பவும் இவரின் இந்த அறிக்கை உதவலாம்...
தமிழ் நாட்டில் திமுக ஆட்சி இருந்தால் கஞ்சா கடத்தல் செய்வது இலகுவாக இருக்கும் என சிலர் விரும்பியும் இருக்க்லாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இந்தியாவின் ஆதாரவு பெற்ற ஜனாதிபதி இலங்கையில் வெற்றியடையாமல் இருப்பதற்காக இந்த வாக்குமூலத்தை சிறிசேனா வழங்கியுள்ளார்..
நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல் நடை பெற போகின்றது ...கிறிஸ்தவ மக்களுக்கு இந்தியா மீது ஏற்கனவே வெறுப்புணர்வு ,இஸ்லாமிர்களும்  இந்தியா மீது அதே வெறுப்புணர்வுடன் தான் இருக்கின்றனர் ..
இந்த இரு சிறுபான்மை சமுகத்தின் வாக்குகளும் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது ...இது
ஜனாதிபதி யாக ரணில் வருவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும்...
அனுராவின் வாக்கு வங்கி நிச்சயமாக வீழ்ச்சியடைய வாய்ப்பு உண்டு அவர் தனது இடது சாரி கொள்கையை புறந்தள்ளி இந்தியா,அமெரிக்கா மீது மோகம் கொண்டமை....
நாட்டின் முன்னெற்றத்தை விட வெறுப்புணர்வு வாக்குகளை பெற்று அரசியல் தலைவராக 
வருவதை சிறிலங்கா அரசியல் வாதிகள் விரும்புகின்றனர்...
ரணில் ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்கா மகிழ்ச்சியடையும்..இந்தியா விரும்பாவிட்டாலும் சகித்து கொள்ளும்.

மைத்திரி தேர்தல் வரும் வேளையில்  ,ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடை பெற்ற நினைவு தினத்தில் இந்த அறிவிப்பு செய்தமை  நிச்சயமாக முஸ்லீம் ,கிறிஸ்தவ வாக்குகளை அவர் சார்ந்த கட்சிக்கு பெற்று கொள்வதற்கே...

இருக்கலாம்  

ஆனாலும் உண்மை உண்மைதானே ? 

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர், இந்தக் குண்டுவெடிப்பின் பின்னர் ISIS ஐ வெளிநாடுக்ள் தமது தேவைக்காகப் பாவித்தன என்றும் இதில் இந்தியாவின் பங்கு முருமளவு உள்ளதென்றும் கூறியிருந்தேன். அதனைத் தற்போது மைத்திரி பகிரங்கமாகக் கூறியுள்ளார். அவ்வளவுதான். 

அதனை கூறுவதற்கு ஞானக்கண் ஒன்றும் தேவையிருக்கவில்லை. இலங்கை அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் குழந்தைக்குக் கூட இலங்கையின் பொருளாதாரத்தை முடக்க வேண்டிய தேவை யார் யாருக்கு இருந்தது என்று புரிந்துகொள்ள முடிந்தது. அதன் அடிப்படையில் அந்தத் தேவை முக்கியமாக இந்தியாவுக்கு இருந்தது, இருக்கிறது, இருக்கும். 

எனவே, இலங்கை எப்போதெல்லாம் தன் பிடியை விட்டு நழுவ முனைகிறதோ அப்போதெல்லாம் இலங்கையில் வன்முறையை இந்தியா உருவாக்கும். 

இந்தக் குண்டுவெடிப்பின் பக்க விளைவு; முஸ்லிம்கள் மீது இலங்கையர்கள் நம்பிக்கை இழந்தனர். இன வேறுபாட்டைக் கடந்து கிறீஸ்தவர்களை ஒன்று சேர்த்தது. இன வேறுபாட்டுக்கப்பால் கிறீஸ்தவர்கள் ஓரணியில் திரளுவார்களானால் இலங்கையின் மக்கள் தொகையில் பெரிய பகுதி ஒன்று புதிதாக உருவாகும். 

அது யாருக்குப்  பாதகமாய் முடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்

@Kapithan

யாருக்கு சாதகம்?

சிறீலங்கா தமிழ் கிறீஸ்தவர்களை அழிப்பதற்கு அனுமதித்த மேற்குலகை ஆதரிக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கில் எல்லோரு மிக இலகுவாக சிங்கள பெளத்த இனவாதியும், இனக்கொலையாளியுமான கோத்தபாயவின் பங்கினை இக்குண்டுவெடிப்பிலிருந்து மறைத்துவிடுட்டுச் செல்வது தெரிகிறது. இது எதைக் குறிக்கிறதென்றால், அவனுக்கு வெள்ளையடித்து, அவன் மீது குற்றமில்லை என்று அறிவித்து, மீண்டும் அவனைப் பதவியில் சிங்களவர்களைக் கொண்டே ஏற்றிவைக்க எடுக்கப்படும் நடவடிக்கை. 
2009 இற்குப் பின்னரும் இந்தியா ராஜபக்ஷேக்களைப் பாதுகாத்துத்தான் வந்தது. 2019 கூட இந்தியாவின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட படுகொலையாக இருக்கலாம். ஆனால், அதுகூட கோத்தாவுக்காகத்தான் நடத்தப்பட்டது.  
 
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரஞ்சித் said:

யாருடைய அதிகாரத்தை அகற்றுவதற்காக குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டது? 

28 minutes ago, MEERA said:

@Kapithan

யாருக்கு சாதகம்?

சிறீலங்கா தமிழ் கிறீஸ்தவர்களை அழிப்பதற்கு அனுமதித்த மேற்குலகை ஆதரிக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது?

பார்றா ....மீராவுக்கு வந்த கேள்வியை?

(தமிழரை அழித்த இந்தியாவை ஆதரிக்க உங்களுக்கு எப்படி மனம் வந்ததோ அப்படித்தான்,..😁)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, MEERA said:

@Kapithan

யாருக்கு சாதகம்?

சிறீலங்கா தமிழ் கிறீஸ்தவர்களை அழிப்பதற்கு அனுமதித்த மேற்குலகை ஆதரிக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது?

உங்கள் பார்வையில் இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை யார் நடத்தியது?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலையில் ஹிந்தியாவின் கூட்டுப்பங்களிப்பை ரசித்து உருசித்த சிங்களம்.. இப்போ தம் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுந்தவுடன்.. அதில் இருந்து தம்மை தற்காக்க ஹிந்தியாவை காட்டிக்கொடுக்கின்றனர்.

எவருக்காக எல்லாம் ஹிந்தியா தமிழினத்தை அழித்ததோ.. அவர்களால்.. ஹிந்தியா நிச்சயம் ஏமாற்றப்பட்டு.. சீனா அதன் அருகில் நிறுத்தப்படும் கால வெகு விரைவில் உருவாகும். 

இது இந்திராவுக்குப் பின்னான ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களின் மிகப்பெரிய ராஜதந்திரத் தோல்வி ஆகும். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

அப்படியே ஆகட்டும்  🙏

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இப்ப இந்தியா இதுக்கு என்ன சொல்லப்போகுது?   

சாமியார்! அந்தப்பதிலுக்காகத்தான் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். கூழ் முட்டை மைத்திரியர் நாளைக்கு மறுப்பறிக்கை விடுவார் தான் அப்படி சொல்லவில்லை என. எப்படியிருந்தாலும் மூஞ்சூறு தானே போய் பொறியில தலையை மாட்டிருச்சு. யாருக்காக மாட்டினாரோ தெரியல. ஒன்று, சிறை அல்லது மனநோயாளர் வைத்தியசாலை காத்திருக்கு இவருக்கு. ஆனால் என் மனம் இந்தப்பொறி பத்தியெரியாதா என  ஏங்குது!

  • கருத்துக்கள உறவுகள்

@MEERA

இந்திய அடிமைகள் ஒருவரும் வாய் திறக்கவில்லை என்பதைக் கவனித்தீர்களா? 

14 hours ago, குமாரசாமி said:

உங்கள் பார்வையில் இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை யார் நடத்தியது?

ஆள் எஸ்கே,........ப்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர், இந்தக் குண்டுவெடிப்பின் பின்னர் ISIS ஐ வெளிநாடுக்ள் தமது தேவைக்காகப் பாவித்தன என்றும் இதில் இந்தியாவின் பங்கு முருமளவு உள்ளதென்றும் கூறியிருந்தேன். அதனைத் தற்போது மைத்திரி பகிரங்கமாகக் கூறியுள்ளார். அவ்வளவுதான். 

அதனை கூறுவதற்கு ஞானக்கண் ஒன்றும் தேவையிருக்கவில்லை. இலங்கை அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் குழந்தைக்குக் கூட இலங்கையின் பொருளாதாரத்தை முடக்க வேண்டிய தேவை யார் யாருக்கு இருந்தது என்று புரிந்துகொள்ள முடிந்தது. அதன் அடிப்படையில் அந்தத் தேவை முக்கியமாக இந்தியாவுக்கு இருந்தது, இருக்கிறது, இருக்கும். 

எனவே, இலங்கை எப்போதெல்லாம் தன் பிடியை விட்டு நழுவ முனைகிறதோ அப்போதெல்லாம் இலங்கையில் வன்முறையை இந்தியா உருவாக்கும். 

இந்தக் குண்டுவெடிப்பின் பக்க விளைவு; முஸ்லிம்கள் மீது இலங்கையர்கள் நம்பிக்கை இழந்தனர். இன வேறுபாட்டைக் கடந்து கிறீஸ்தவர்களை ஒன்று சேர்த்தது. இன வேறுபாட்டுக்கப்பால் கிறீஸ்தவர்கள் ஓரணியில் திரளுவார்களானால் இலங்கையின் மக்கள் தொகையில் பெரிய பகுதி ஒன்று புதிதாக உருவாகும். 

அது யாருக்குப்  பாதகமாய் முடியும்? 

தேசிய இனங்களுக்கு பாதகமாய் முடியும் ,முக்கியமாக சிறிலங்கா தேசிய இனங்களுக்கு .....ஆசியாவில் தேசிய இனங்கள் தங்கள் தனித்துவத்தை இழக்க வேணும் என்பது நீண்ட நாள் திட்டம்...இரண்டாம் உலக போரின் பின்பு வடிவமைக்கப்பட்ட உலக ஒழுங்கில் முக்கியமாக ஆசிய பிராந்தியத்தில் மதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தான் எல்லைகளை வகுத்துள்ளனர்...
மத முரண்பாடுகளுடன் போர் நடத்துவது வல்லாதிக்க சக்திகள் எடுத்த முடிவு...
இந்தியா குண்டு வெடிப்பை செய்திருக்கின்றது என்றாலும் இலங்கையின் அதிகாரா வர்க்கம் இதற்கு பல விதங்களில் உதவி செய்துள்ளது ...இந்தியா தனித்து அந்த குண்டு வெடிப்பை செய்திருக்க முடியாது ...ஆகவே இந்தியா மீது கையை காட்டி விட்டு சிறிலங்கா அதிகார வர்க்கம் தப்பித்து கொள்ள முடியாது...ஆனால் மக்கள் இதையெல்லாம் அலசி ஆராயமாட்டார்கள் ...மக்கள் வெறுப்புணர்வுடன் வாக்கு போட முன்னிற்ப்பார்கள் ...

அந்தவகையில் இந்திய எதிர்ப்பு (முஸ்லீம்,கிறிஸ்தவ வாக்குகள்) ,தமிழ் எதிர்ப்பு(சிங்கள இனவாதிகளின் வாக்குகள் )  மேற்குலகு ஆதரவு அணி வெற்றி பெற வாய்ப்பு உண்டு ... 

தமிழர்களின் வாக்குகள் இனிவரும் ஜனாதிபதி  தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கப்போவதில்லை...பொது வேட்பாளரை வைத்தால் என்ன? விரும்பியவர்களுக்கு வாக்குகளை போடுங்கள் என் சொன்னால் என்ன ?

இந்துக்களின் வாக்குகள் என இனிவரும் காலங்களில் பிரச்சாரம் செய்வதை அவதானிக்கலாம்...

நிச்சயமாக அது சிங்கள ஜனாதிபதிகளுக்கு ஆதரவாக முடியும்....அத்துடன் மேற்கத்தைய கலாச்சாரத்துடன் ,அதாவது பிரித்தானியா காலத்தில் பெயர்களை மாற்றி அரசியல் செய்த அரசியல்வாதிகள் போன்ற அரசியல் வாதிகளின் பரம்பரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பார்கள் ...கிராமிய மைந்தர்கள்  ஜனாதிபதியாக தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாமல் இருக்கும்....

அதாவது வைன் குடிக்கிறவர்கள் ஆட்சி செய்வார்கள்.
கள்ளு குடிப்பவர்கள் ஆட்சியை தொடர்வது கடினம்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, MEERA said:

@Kapithan

யாருக்கு சாதகம்?

சிறீலங்கா தமிழ் கிறீஸ்தவர்களை அழிப்பதற்கு அனுமதித்த மேற்குலகை ஆதரிக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது?

இனிவரும் காலங்களில் தமிழ் கிறிஸ்தவர்கள் ,சிங்கள கிறிஸ்தவர்கள் .என்ற பிரிவினையை விட 
சிறிலங்கா கிறிஸ்தவர்கள் என்ற அடையாளத்தை நிலைநாட்ட முயற்சிகள் எடுப்பார்கள் ..ஏற்கனவே அது நடைமுறையில் உள்ளதுதான் ...

சிறிலங்கா தேசிய கொடியில் கிறிஸ்தவர்களுக்கு இடம் வேண்டும் என சில கோரிக்கை வந்தாலும் வரும்...

இந்த கோரிக்கையை நிறைவேற்ற  அதிகார வர்க்கமும் ,அந்நிய சக்திகளும் உதவ முன் வரலாம்

21 hours ago, nedukkalapoovan said:

தமிழினப் படுகொலையில் ஹிந்தியாவின் கூட்டுப்பங்களிப்பை ரசித்து உருசித்த சிங்களம்.. இப்போ தம் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுந்தவுடன்.. அதில் இருந்து தம்மை தற்காக்க ஹிந்தியாவை காட்டிக்கொடுக்கின்றனர்.

எவருக்காக எல்லாம் ஹிந்தியா தமிழினத்தை அழித்ததோ.. அவர்களால்.. ஹிந்தியா நிச்சயம் ஏமாற்றப்பட்டு.. சீனா அதன் அருகில் நிறுத்தப்படும் கால வெகு விரைவில் உருவாகும். 

இது இந்திராவுக்குப் பின்னான ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களின் மிகப்பெரிய ராஜதந்திரத் தோல்வி ஆகும். 

இந்திராவும் சிறிலாங்கா விடயத்தில் தோல்வியை தழுவிய பிரதமர் ...சீனா இந்தியாவின் தென் முனையில் கூடாரம் அமைத்து அந்த நாட்டை நன்றாகவே உளவு பார்க்கின்றனர்...இந்தியா சிங்கள ஆட்சியாளர்களிடம் படு தோல்வியை சந்தித்து வருகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

போகிற போக்கில் எல்லோரு மிக இலகுவாக சிங்கள பெளத்த இனவாதியும், இனக்கொலையாளியுமான கோத்தபாயவின் பங்கினை இக்குண்டுவெடிப்பிலிருந்து மறைத்துவிடுட்டுச் செல்வது தெரிகிறது. இது எதைக் குறிக்கிறதென்றால், அவனுக்கு வெள்ளையடித்து, அவன் மீது குற்றமில்லை என்று அறிவித்து, மீண்டும் அவனைப் பதவியில் சிங்களவர்களைக் கொண்டே ஏற்றிவைக்க எடுக்கப்படும் நடவடிக்கை. 
2009 இற்குப் பின்னரும் இந்தியா ராஜபக்ஷேக்களைப் பாதுகாத்துத்தான் வந்தது. 2019 கூட இந்தியாவின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட படுகொலையாக இருக்கலாம். ஆனால், அதுகூட கோத்தாவுக்காகத்தான் நடத்தப்பட்டது.  
 
முன்னாள் ஜனாதிபதியின் புலனாய்வு அதிகாரி சு.சா குண்டு வெடிப்பு காலத்தில் இந்தியாவில் தான் இருந்திருக்கின்றார்...சிறிலங்காவின் படைகளின் உதவியின்றி இந்த குண்டு தாக்குதல் சாத்தியமில்லை ...சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனதிபதியாக வருவதற்கு அவர்கள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் நடத்திய குண்டு தாக்குதல் ...

இந்தியாவின் ஹொட்டலுக்கு குண்டு வைக்காமல் திரும்பி போன குண்டுதாரியை சிறிலங்கா பொலிசார் திசை மாற்றியிருக்கலாம்...இந்தியாவுக்கு செக் வைப்பதற்காக அதை அவர்கள் செய்திருக்கலாம்...அதை தான் முக்கிய சாட்சியாக சொல்கின்றனர் இந்தியாவின் பங்களிப்பு உண்டு என்பதற்கு....

புலனாய்வு,சதிகள் என்பவற்றில் எதுவும் நடக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் பாதுகாப்பில் அமெரிக்க புலனாய்வு துறை இரகசிய நகர்வு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

இனிவரும் காலங்களில் தமிழ் கிறிஸ்தவர்கள் ,சிங்கள கிறிஸ்தவர்கள் .என்ற பிரிவினையை விட 
சிறிலங்கா கிறிஸ்தவர்கள் என்ற அடையாளத்தை நிலைநாட்ட முயற்சிகள் எடுப்பார்கள் ..ஏற்கனவே அது நடைமுறையில் உள்ளதுதான் ...

தமிழ்க் கிறீஸ்தவர்கள் தங்களை தமிழர்களாகத்தன் இதுவரை அடையாளம் காட்டி வந்துள்ளனர். இதற்கு எமது போராட்ட வரலாறு முழுமைக்கும் கன்னியாஸ்திரிகளும் குருவானவர்களும் செய்த, செய்து வருகின்ற சேவைகளே சாட்சி. 

இதை ஒருபோதும்  இலங்கைத் தமிழ்ச் சமூகம் மறுக்கப்போவதில்லை.

ஆனால், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து கிறீஸ்தவ தலைமைகளை இல்லாதொழிக்க முற்படும் இந்தியாவுக்கு கொள்ளி கொடுக்கும் மந்திரிகளான (மிகக் குறைந்த அளவிலான) சாதி வெறிபிடித்த, சமய வெறி பிடித்த, பிரதேச வெறிபிடித்த சிறுபகுதி படித்த தமிழர்கள்,  ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலுக்கும் ஆப்பைச் செருகுகிறார்கள். 

இந்தச் செயற்பாடு தமிழ்த் தேசிய அரசியலை மிகவும் பலவீனப்படுத்த் என்பதை அவர்கள் அறிந்தே செய்கிறார்கள். 

இதன் விளைவு, இலங்கையில் தமிழர்கள் மூன்றாம் சிறுபான்மையினர் அல்லது நான்காவது சிறுபான்மையினர் எனும் நிலைக்கு எங்களைத் தள்ளும். 

இந்த ஆபத்தை அவர்கள் மிகவும் நன்றாக உணர்ந்தே செய்கிறார்கள் என்பதுதான் துயரம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.