Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈரானிய மதபயங்கரவாத ஆட்சியாளர்கள் ஒரு பாடம் படிப்பது அடக்கபடுவது அல்லது முடிவுக்கு கொண்டுவருவது தான் ஈரானுக்கும் மத்தியகிழக்கிற்கும், உலகுக்கும் நல்லது

  • Thanks 1
  • Replies 180
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஈரானிய மதபயங்கரவாத ஆட்சியாளர்கள் ஒரு பாடம் படிப்பது அடக்கபடுவது அல்லது முடிவுக்கு கொண்டுவருவது தான் ஈரானுக்கும் மத்தியகிழக்கிற்கும், உலகுக்கும் நல்லது

ஈரான் ஒரு செத்த பாம்பு. இனி இஸ்ரேல் கொன்றேன் என்று பெயர் எடுக்கப் போகிறது 😭 

  • Like 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிரியாவுக்குள் ஈரானிய தூதரகத்தை தாக்கியது மிகவும் மோசமான இஸ்ரேலின் சர்வதேச பயங்கரவாதமாகும். இதனை யதார்த்தமாக சர்வதேசம் கண்டித்திருக்க வேண்டும்..! ஆனால் இஸ்ரேலும் அதன் அமெரிக்க மேற்குலக அடிவருடிகளும் செய்தியை வெளியிடுவதோடு அடங்கிவிட்டார்கள்.

இரண்டாம் உலகப் போர் கூட ஒரு தூதரக அதிகாரியின் கொலையுடனே தான் ஆரம்பமானது... என்ன தான் பல உள் காரணிகள் இருப்பினும்.

இஸ்ரேலின் எல்லை தாண்டிய உலக பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை.. இஸ்லாமிய மதப் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது கடினம்.

ஈரான் என்ற சுயாதிபத்திய நாட்டின் தூதரகத்தை தாக்கி அதன் அதிகாரிகளை கொலை செய்த இஸ்ரேலின் பயங்கரவாதம் சர்வதேச நீதியின் பால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக.. ஈரானின் பலவீனமான பதில் தாக்குதலால் அல்ல என்பதுவே எங்கள் கணிப்பு.  

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 hours ago, குமாரசாமி said:

சீனா உட்பட ரஷ்யாவும் வட கொரியாவும் மறைமுகமாக ஈரானுக்கு கை கொடுக்கும் என நம்பலாம். பலகால ஒத்திகைகளை பார்க்கும் போது பாவம் இஸ்ரேல் என தோன்றுகின்றது.
அமெரிக்க தேர்தல் திருவிழாக்காலம் என்பதால் பல சம்பவங்கள் நடைபெறும் வருடமாக இது இருக்கும். 😎

ர‌ஸ்சியா வெளிப்ப‌டையா ஈரானுக்கு ஆத‌ர‌வு த‌ர‌ தயார் நிலையில் இருக்கிறோம் என்று அறிவித்து விட்டார்க‌ள் ச‌ற்று முன்

ர‌ஸ்சியா ஈரானுக்கு அணுகுண்டு ம‌றைமுக‌மாய் குடுக்க‌ கூடும் என்று சில‌ விம‌ச‌க‌ர்க‌ள் சொல்லுகின‌ம்..................

வ‌ட‌கொரியாவின் ம‌றைமுக‌ ஆத‌ர‌வு ஈரானுக்கு எப்ப‌வும் உண்டு

சீனா இதுக்கை மூக்கை நுழைக்காத்து வெறும‌ன‌ வேடிக்கை தான் பார்க்கும்.........................

இஸ்ரேல் ஈரானை தாக்கினால் 
நேற்று இர‌வு ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல‌ விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌மான‌ தாக்குத‌லை மீண்டும் ந‌ட‌த்துவோம் என‌ ஈரான் அறிவித்து விட்ட‌து......................

நெத்த‌னியாகு பொறுமை காக்கும் ந‌ப‌ர் கிடையாது ஏதும் கிறுக்குத‌ன‌மான‌ செய‌லில் இற‌ங்கினால் 4 ப‌க்க‌த்தில் இருந்தும் இஸ்ரேல‌ தாக்குவார்க‌ள் அது பெருத்த‌ அழிவை இஸ்ரேலுக்கு கொடுக்கும்...................இஸ்ரேனின் விமான‌ நிலைய‌ம் த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆகி விட்ட‌து ம‌க்க‌ள் ப‌ய‌த்தில் தெறித்து ஓடுகின‌ம்.......................

ப‌ல‌ஸ்தீன‌ நாட்டை த‌னி நாடாக‌ போன‌ வ‌ருட‌மே அறிவித்து இருந்தா இந்த‌ போர் கைமீறி போய் இருக்காது.......................பெரிய‌ அழிவை  க‌ண்டாப் பிற‌க்கு தான் நெட்டோ நாடுக‌ள் பேச்சு வார்த்தை மூல‌ம் க‌தைச்சு தீர்ப்போம் என்று அழைப்பின‌ம்........................நெட்டோ நாடுக‌ள் நெத்த‌னியாகுவுக்கு முட்டுக் கொடுத்து கொடுத்து உல‌க‌ அள‌விள் இவ‌ர்க‌ள் நீதியின் ஞாய‌ம் ப‌ர்க்க‌ம் நிக்க‌ வில்லை வெறும‌ன‌ம் த‌ங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு ஆடுகின‌ம் என்ற‌ குற்ற‌சாட்டும் இருக்கு..........................தென் ஆபிரிக்கா இந்த‌ போரை நிறுத்த‌ நேர்மையா செய‌ல் ப‌ட்ட‌து அமெரிக்கா அதையும் குழ‌ப்பி அடிச்சு ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளை கைக்குள் வைத்து கொண்டு நெத்த‌னியாகு செய்வ‌து ச‌ரி என்று சொன்ன‌ கோமாளிக‌ள்😡............................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, nedukkalapoovan said:

சிரியாவுக்குள் ஈரானிய தூதரகத்தை தாக்கியது மிகவும் மோசமான இஸ்ரேலின் சர்வதேச பயங்கரவாதமாகும். இதனை யதார்த்தமாக சர்வதேசம் கண்டித்திருக்க வேண்டும்..! ஆனால் இஸ்ரேலும் அதன் அமெரிக்க மேற்குலக அடிவருடிகளும் செய்தியை வெளியிடுவதோடு அடங்கிவிட்டார்கள்.

இரண்டாம் உலகப் போர் கூட ஒரு தூதரக அதிகாரியின் கொலையுடனே தான் ஆரம்பமானது... என்ன தான் பல உள் காரணிகள் இருப்பினும்.

இஸ்ரேலின் எல்லை தாண்டிய உலக பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை.. இஸ்லாமிய மதப் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது கடினம்.

ஈரான் என்ற சுயாதிபத்திய நாட்டின் தூதரகத்தை தாக்கி அதன் அதிகாரிகளை கொலை செய்த இஸ்ரேலின் பயங்கரவாதம் சர்வதேச நீதியின் பால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக.. ஈரானின் பலவீனமான பதில் தாக்குதலால் அல்ல என்பதுவே எங்கள் கணிப்பு.  

அழிக்க‌னும் என்று நினைப்ப‌வ‌ன் அழிந்து போன‌து தான் உல‌க‌ வ‌ர‌லாறு ( அது இஸ்ரேலுக்கும் பொருந்தும் ) 
ஈரான் ப‌ல‌ த‌ட‌வை பொறுமை கார்த்த‌து ப‌ல‌ விடைய‌ங்க‌ளில்

50 நாடுக‌ள் சேர்ந்து ர‌ஸ்சியாவை ஆட்ட‌வும் முடிய‌ல‌ அசைக்க‌வும் முடிய‌ல‌ 
அதே ர‌ஸ்சியா ஈரான் கூட‌ நிப்ப‌து  ஈரானுக்கு அது மிக‌ப் பெரிய‌ ப‌ல‌ம்.........................................

ஈரானும் ப‌ல‌ ச‌க்தி வாய்ந்த‌ ஆயுத‌த்தை வைச்சு இருக்கு..................தொழிநுட்ப‌த்தில் அசுர‌ வ‌ள‌ர்ச்சி க‌ண்ட‌ நாடு

இதுக்கு முடிவு பேச்சு வார்த்தை
பேச்சு வார்த்தை இல்லை போர் தான் என்றால் இஸ்ரேல‌ அந்த‌ ஆண்ட‌வ‌ர் தான் காப்பாற்ற‌ணும்🤲🙏...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சிறுவ‌ய‌தில் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு த‌மிழ‌ர்க‌ளின் நில‌ ப‌ர‌ப்பில் போட்ட‌ குண்டுக‌ளே எவ‌ள‌வு அழிவை த‌ந்த‌து.......................அதோட‌ க‌த‌றி அழுத‌ ப‌டியே  ஓடின‌ எம‌க்கு தான் தெரியும் போர் எவ‌ள‌வு ஆவ‌த்தான‌து என்று😢😞...................

குண்டு ச‌த்த‌ம் கேட்க்க‌ முத‌லே புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்த‌வ‌ர்க‌ள் தாங்க‌ள்  வாழும் நாடுக‌ள் எதை செய்தாலும் ச‌ரி என்று முட்டுகொடுப்ப‌தை பார்க்க‌ அருவ‌ருப்பாய் இருக்கு😡...................

பாலாலில‌  நின்ற‌ சிங்க‌ள‌ இராவ‌ம் அடிச்ச‌ ஒவ்வொரு குண்டும் அந்த‌ கால‌த்தில் நில‌ ந‌டுக்க‌ம் போல் ஒரு ஊரே அதிர்ந்த‌து

இதை எல்லாம் அனுப‌வித்து விட்டு தான் புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்தோம்...................நெட்டோ நாடுக‌ளுட‌ன் சேர்ந்து டென்மார்க் அர‌சு செய்யும் கேலி கூத்து ப‌ல‌ரின் முக‌த்தை சுளிக்க வைக்கிறது😡

நாம‌ அமெரிக்காவில் வ‌சித்தாலும்

அவுஸ்ரேலியாவில் வ‌சித்தாலோ

ஜ‌ரோப்பிய‌ நாட்டில் வ‌சித்தாலும் 

நாம‌ இற‌ந்து போனால் வெள்ளைய‌ன் சொல்லுவான் வெளி நாட்ட‌வ‌ன் தான் இற‌ந்து போய் விட்டான் என்று.........இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌ 

என‌க்கு என்ர‌ தாய் நாடு த‌மிழீழ‌ம் என்று சொல்லுவ‌து தான் பெருமை🙏🙏🙏.............................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, பையன்26 said:

சீனா இதுக்கை மூக்கை நுழைக்காத்து வெறும‌ன‌ வேடிக்கை தான் பார்க்கும்.........................

சீனா காரியக்கள்ளர்.. ஒண்டுக்கையும் மூக்கை நுழைக்காது.. அறிக்கை மட்டும் விடும்.. தெமு,விஸ், அலிபாப வியாபாரம் படுத்திடும்..

53 minutes ago, பையன்26 said:

...................இஸ்ரேனின் விமான‌ நிலைய‌ம் த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆகி விட்ட‌து ம‌க்க‌ள் ப‌ய‌த்தில் தெறித்து ஓடுகின‌ம்.......................

தெமு டிறோன்ஸ் ஜோர்டான் பார்டர்கூட தாண்டேல்ல..இதென்ன புதுக்கதையா இருக்கு.. எந்த நியூசில் இது வந்தது..? தம்பி லிங்கை தரமுடியுமா..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

  தம்பி லிங்கை தரமுடியுமா..?

இவ‌ர் வீடியோவை ஆதார‌த்தோடு போட்டு இருக்கிறார் ஓணாண்டி காணொளிய‌ முழுதா பார்க்க‌வும்....................இவ‌ர் எப்ப‌வும் ந‌டு நிலையா உண்மையை சொல்ப‌வ‌ர்..................
பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌ல் ந‌ட‌ப்ப‌தால் இவ‌ரின் வீடீயோவை சில‌ மாத‌ம் பார்க்காம‌ விட்டு விட்டேன்

இர‌ண்டு நாளுக்கு முத‌லே ஒரு காணொளி போட்டு இருந்தார் இந்த‌ முறை ஈரான் இஸ்ரேல‌ தாக்கும் என்று அத‌ன் ப‌டி ந‌ட‌ந்து விட்ட‌து...................

நேற்று இஸ்ரேல் மீது
ஈரான் 
ஹ‌வூதிஸ்
ஹிஸ்புள்ளா என்று ப‌ல‌ த‌ர‌ப்பில் இருந்து தாக்கினார்க‌ள்.............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
59 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீனா காரியக்கள்ளர்.. ஒண்டுக்கையும் மூக்கை நுழைக்காது.. அறிக்கை மட்டும் விடும்.. தெமு,விஸ், அலிபாப வியாபாரம் படுத்திடும்..

தெமு டிறோன்ஸ் ஜோர்டான் பார்டர்கூட தாண்டேல்ல..இதென்ன புதுக்கதையா இருக்கு.. எந்த நியூசில் இது வந்தது..? தம்பி லிங்கை தரமுடியுமா..?

எரிகிற வீட்டுக்கு எண்ணெய ஊற்றினால் அது இன்னும் ப‌த்தி எரிந்து கொண்டு தான் இருக்கும்.....................அமெரிக்காவின்ட‌ ட‌வுள் கேமால் தான் இந்த‌ போர் இந்த‌ நிலைக்கு வ‌ந்து இருக்கு..................வெளியில் தாங்க‌ள் நேர்மையான‌வ‌ர்க‌ள் போல் காட்டி கொண்டு உள்ள‌டி நாச‌கார‌ செய‌லை செய்ய‌ தூண்டி விடுவ‌தே அமெரிக்காவும் அத‌ன் நெட்டோ நாடுக‌ளும்.......................அமெரிக்கான்ட‌ ந‌ரிக் குன‌ம் தெரிந்து தான் அந்த‌க் கால‌த்திலே அமெரிக்காவின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளை த‌ங்க‌ட‌ நாட்டில் அனும‌திக்க‌ மாட்டோம் என்று ஈரான் அர‌சு சொன்ன‌து........................

பேரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள்

போரை விரும்ப‌ மாட்டின‌ம்........................

ஈரான் நாட்டுக்குள் குண்டு விழுந்தால் இது மூன்றாம் உல‌க‌ போரா மாறும்....................அது நெட்டோ நாடுக‌ளையும் பாதிக்கும்.......................இதுக்கெல்லாம் சிற‌ந்த‌ தீர்வு பேச்சு வார்த்தை

கொரோனாவுக்கு முத‌ல் உல‌க‌ம் கொஞ்ச‌ம் த‌ன்னும் ந‌டு நிலையா இருந்த‌து போர் இல்லாத‌ உல‌காய்.......................ஜ‌ரோப்பா தொட‌ங்கி ஆசிய‌ வ‌ரை இந்த‌ போர் நீண்டு விட்ட‌து............................

இஸ்ரேலின் இழ‌ப்பை  எந்த்த‌னை கால‌த்துக்கு தான் மூடி ம‌றைக்க‌ போகின‌ம் இஸ்ரேல் நாட்டுக்குள் வ‌சிக்கும் ம‌க்க‌ளே வீடியோ பிடிச்சு அதை வ‌ட்சாப்பில் போட்டால் தான் அங்கு ந‌ட‌க்கும் உண்மை நில‌வ‌ர‌ம் தெரியும்.................ஈரான் தாக்கியும் த‌ங்க‌ட‌ ஜ‌டோம‌ வைச்சு த‌டுத்து விட்டோம் என்று எவ‌ள‌வு கால‌த்துக்கு பொய்யை அவுட்டு விட‌ போகின‌ம்......................................................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? தீர்மானிக்கும் பொறுப்பு இஸ்ரேலின் போர்க்கால அமைச்சரவையிடம் - மத்திய கிழக்கில் பாரிய மோதல் ஆபத்து தொடர்கின்றது

Published By: RAJEEBAN    14 APR, 2024 | 11:47 AM

image

theguardian

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து எவ்வாறான பதில் நடவடிக்கையை எடுப்பது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை இஸ்ரேலிய போர் அமைச்சரவையிடம் இஸ்ரேலிய அமைச்சரவை கையளித்துள்ள அதேவேளை மத்திய கிழக்கில் பாரிய யுத்தமொன்றிற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன.

நள்ளிரவில் கூடிய இஸ்ரேலிய அமைச்சரவை அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கும் பொறுப்பை இஸ்ரேலிய பிரதமர் உட்பட மூவர் அடங்கிய போர் அமைச்சரவையிடம் ஒப்படைத்துள்ளது.

மூவரும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கவுள்ள நிலையில் பிராந்தியத்தின் தலைவிதி அவர்களின் கரங்களில் தற்போது தங்கியுள்ளது.

download.jpg

யுத்த அமைச்சரவையின் கூட்டத்திற்கு முன்னரான பதற்றமான நிமிடங்களில் அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேலிய பிரதமரும் 25 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த உரையாடலில் இஸ்ரேல் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும் என பைடன் வலியுறுத்தினார் என இஸ்ரேலிய ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.

இந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பைடன் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் என்ன தெரிவித்தார் என்பதை தெரிவிக்கவில்லை  எனினும் ஈரான் செலுத்திய ஏவுகணைகள் ஆளில்லா விமானங்கள் அனைத்தும் அமெரிக்காவின் உதவியுடன் வீழ்த்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மிகச்சிறந்த தற்பாதுகாப்பு திறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது என்ற தெளிவான செய்தி எதிரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என பைடன் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தாக்குதல் காரணமாக பத்துவயது சிறுவன் ஒருவன் மாத்திரமே காயமடைந்துள்ளதாக இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் பாலைவனத்தில் அந்த நாட்டின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பெடோனியஸ் சமூகத்தை சேர்ந்த சிறுவன் காயமடைந்துள்ளான்.

தென்பகுதி இராணுவதளமொன்றும் சிறிய சேதங்களை சந்தித்துள்ளது.

இந்த தாக்குதலிற்கு முன்பாக ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அதன் ஏவுகணைகளால் இஸ்ரேலை நெருங்க முடியாது அவை பாலைவனத்தில் விழுந்து வெடிக்கலாம் உயிரிழப்பு ஏற்படாது என அமெரிக்க அதிகாரிகள் சரியாக கணித்திருந்தனர்.

அவ்வாறான சூழ்நிலையில் இஸ்ரேல் கண்மூடித்தனமான நடவடிக்கைகளில் இறங்ககூடாது என அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என ஊகங்கள் வெளியாகியிருந்தன.

ஈரான் கடுமையான பதிலடியை எதிர்பார்க்கவில்லை என்பது அது வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் புலனாகியுள்ளது - தனது பதில் தாக்குதலை தொடர்ந்து இந்த விடயம் முடிவிற்கு வந்துவிட்டதாக கருதுவதாக ஈரான் ஐநாவிற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் இஸ்ரேலிய பிரதமர் ஈரானின் அணுஉலைகளை அழிக்க விரும்புவார் என்பது ஈரானிற்கும் அமெரிக்காவுக்கும் நன்கு தெரிந்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் தனது நாட்டின் இருப்பிற்கு அச்சுறுத்தல் என அதனை பல காலமாக கருதிவருகின்றார்.

எனினும் அமெரிக்காவின் உதவியின்றி அவற்றை அழிப்பது மிகவும் கடினம்.

எனினும் இந்த தருணத்தை பயன்படுத்தி அவரும் போர்க்குணம் மிக்க சகாக்களும் ஈரானின் அணுஉலைகளை தாக்க முயலக்கூடும்.

எதிர்விளைவுகள் குறித்து சிந்திக்காமல் ஈரானின் தாக்குதலிற்கு இஸ்ரேல் பதில் நடவடிக்கை எடுக்கலாம் என ஜோ பைடனின் அதிகாரிகள் கரிசனை கொண்டுள்ளனர் என என்பிசி செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/181066

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பையன்26 said:

ஸ்சியா வெளிப்ப‌டையா ஈரானுக்கு ஆத‌ர‌வு த‌ர‌ தயார் நிலையில் இருக்கிறோம் என்று அறிவித்து விட்டார்க‌ள் ச‌ற்று முன்

அப்பனுக்கே அரைக்கோவணம்….

இழுத்தி போத்திகடா மகனே என்றாராம்🤣

  • Haha 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விசுகு said:

ஈரான் ஒரு செத்த பாம்பு. இனி இஸ்ரேல் கொன்றேன் என்று பெயர் எடுக்கப் போகிறது 😭 

ரஸ்யாவையும் இப்படித்தான் ஆரம்பத்தில் கூறினார்கள். தற்போது எப்படி அதை நிறுத்துவது என்று யோசிக்கத் தொடங்கிவிட்டனர். 

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஈரானிய மதபயங்கரவாத ஆட்சியாளர்கள் ஒரு பாடம் படிப்பது அடக்கபடுவது அல்லது முடிவுக்கு கொண்டுவருவது தான் ஈரானுக்கும் மத்தியகிழக்கிற்கும், உலகுக்கும் நல்லது

multy-polar world என்பது நிதர்சனமாகிவிட்டது. 

இனி இதை யாராலும் தவிர்க்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

இவ‌ர் வீடியோவை ஆதார‌த்தோடு போட்டு இருக்கிறார் ஓணாண்டி காணொளிய‌ முழுதா பார்க்க‌வும்....................இவ‌ர் எப்ப‌வும் ந‌டு நிலையா உண்மையை சொல்ப‌வ‌ர்..................
பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌ல் ந‌ட‌ப்ப‌தால் இவ‌ரின் வீடீயோவை சில‌ மாத‌ம் பார்க்காம‌ விட்டு விட்டேன்

இர‌ண்டு நாளுக்கு முத‌லே ஒரு காணொளி போட்டு இருந்தார் இந்த‌ முறை ஈரான் இஸ்ரேல‌ தாக்கும் என்று அத‌ன் ப‌டி ந‌ட‌ந்து விட்ட‌து...................

நேற்று இஸ்ரேல் மீது
ஈரான் 
ஹ‌வூதிஸ்
ஹிஸ்புள்ளா என்று ப‌ல‌ த‌ர‌ப்பில் இருந்து தாக்கினார்க‌ள்.............................................

இந்த லிங் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா @பாலபத்ர ஓணாண்டி 🤣🤣🤣

இஸ்ரேலில் ஒரு சிறுமிக்கு தலையில் சிராய்ப்பு காயம். அதை விட வேறொன்றும் இல்லை.

இது தன் மக்கள் மத்தியில் நானும் ரவுடிதான் என காட்ட ஈரான் செய்த புஸ்வாண வேடிக்கை.

——-

உண்மையில் தூதரகத்தை தாக்குவது மிக மோசமானதும், எதிர்பாராத பின்விளைவுகளை தரகூடியதும், சட்டமீறலுமாகும். 

ஆனால் இஸ்ரேல் தந்திரமாக உரிமை கோரவில்லை. 

ஆனால் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு உரிமை கோரி ஈரானிய முல்லா அடிப்படைவாத அரசு நீண்ட சிக்கலில் மாட்டியுள்ளது.

@வாலி இதை பற்றி முன்னர் எழுதினார்.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கு இதுவரை நடந்தது புரொக்சி யுத்தம். ஹமாஸ், ஹிஸ்புல்லாவை வைத்து ஈரானும், உரிமை கோராமல் இஸ்ரேலும் தாக்கி கொண்டன.

உள்நாட்டில் ஏலவே பலர் எதிர்க்கும் ஈரானிய முல்லா அடிப்படைவாதம் - இஸ்ரேல் மீது கை வைத்தால், ஈரானில் தன் இருப்புக்கே ஆபத்து என்பதை உணர்ந்து நேரடியாக இறங்குவதில்லை.

ஆனால் மேற்கு, இஸ்ரேல் படிபடியாக முல்லாகளிடம் இருந்து ஈரானை மீட்பது (regime change) என்ற முடிவுக்கு வந்து, ஈரானை சீண்டி இந்த நிலையை உருவாக்கியுள்ளன.

தூதரக தாக்குதல் ஈரானுக்கு ஒரு செக்மேட்.

பதிலடி கொடுக்காவிட்டால் - உள், வெளிநாட்டில் முல்லாக்கள் மீதான, பயம், மரியாதை போய் விடும்.

பதிலடி கொடுத்தால் - முல்லாக்கள் ஆட்சியையே ஆட்டம்காண வைக்க கூடிய போர் வரக்கூடும்.

ஆனால் நடந்தது என்ன? ஈரான் தாக்கியும், ஒரு பாதிப்பும் இல்லை. மொக்கேனப்பட்டதே மிச்சம். ஆனால் இனி இதை வைத்தே இஸ்ரேல் எழும்பி ஆடும்.

இது மட்டும் அல்ல, முதலில் ரஸ்யாவை உக்ரேனில் அரக்க முடியாமல் மாட்ட வைத்ததும் - சிரியா போல் இங்கேயும் ராஸ்யா தலையிடுவதை தடுக்க அல்லது தலையீட்டின் பாதிப்பை குறைக்க.

இங்கே நடப்பது ஒரு 4D chess விளையாட்டு.

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, goshan_che said:

அப்பனுக்கே அரைக்கோவணம்….

இழுத்தி போத்திகடா மகனே என்றாராம்🤣

நீங்கள் சொல்வ‌து நீங்க‌ள் முட்டுக்கொடுப்ப‌வ‌ர்க‌ளுக்கும் இது ந‌ல்லாவே பொருந்து ச‌கோ😁😁😁😁😁😁😁.......................

Posted

ஈரானுக்கு இருக்கவே இருக்கு proxy கள். அவர்களை வைத்தே இஸ்ரேல் வாழ் நாள் பூராக தாக்குதல் நடாத்திக்கொண்டே இருக்கும். செங்கடல் பக்கம் மேற்கின் ஒரு கப்பலும் போக முடியாத படி பண்ணி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
35 minutes ago, goshan_che said:

இந்த லிங் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா @பாலபத்ர ஓணாண்டி 🤣🤣🤣

இஸ்ரேலில் ஒரு சிறுமிக்கு தலையில் சிராய்ப்பு காயம். அதை விட வேறொன்றும் இல்லை.

இது தன் மக்கள் மத்தியில் நானும் ரவுடிதான் என காட்ட ஈரான் செய்த புஸ்வாண வேடிக்கை.

——-

உண்மையில் தூதரகத்தை தாக்குவது மிக மோசமானதும், எதிர்பாராத பின்விளைவுகளை தரகூடியதும், சட்டமீறலுமாகும். 

ஆனால் இஸ்ரேல் தந்திரமாக உரிமை கோரவில்லை. 

ஆனால் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு உரிமை கோரி ஈரானிய முல்லா அடிப்படைவாத அரசு நீண்ட சிக்கலில் மாட்டியுள்ளது.

@வாலி இதை பற்றி முன்னர் எழுதினார்.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கு இதுவரை நடந்தது புரொக்சி யுத்தம். ஹமாஸ், ஹிஸ்புல்லாவை வைத்து ஈரானும், உரிமை கோராமல் இஸ்ரேலும் தாக்கி கொண்டன.

உள்நாட்டில் ஏலவே பலர் எதிர்க்கும் ஈரானிய முல்லா அடிப்படைவாதம் - இஸ்ரேல் மீது கை வைத்தால், ஈரானில் தன் இருப்புக்கே ஆபத்து என்பதை உணர்ந்து நேரடியாக இறங்குவதில்லை.

ஆனால் மேற்கு, இஸ்ரேல் படிபடியாக முல்லாகளிடம் இருந்து ஈரானை மீட்பது (regime change) என்ற முடிவுக்கு வந்து, ஈரானை சீண்டி இந்த நிலையை உருவாக்கியுள்ளன.

தூதரக தாக்குதல் ஈரானுக்கு ஒரு செக்மேட்.

பதிலடி கொடுக்காவிட்டால் - உள், வெளிநாட்டில் முல்லாக்கள் மீதான, பயம், மரியாதை போய் விடும்.

பதிலடி கொடுத்தால் - முல்லாக்கள் ஆட்சியையே ஆட்டம்காண வைக்க கூடிய போர் வரக்கூடும்.

ஆனால் நடந்தது என்ன? ஈரான் தாக்கியும், ஒரு பாதிப்பும் இல்லை. மொக்கேனப்பட்டதே மிச்சம். ஆனால் இனி இதை வைத்தே இஸ்ரேல் எழும்பி ஆடும்.

இது மட்டும் அல்ல, முதலில் ரஸ்யாவை உக்ரேனில் அரக்க முடியாமல் மாட்ட வைத்ததும் - சிரியா போல் இங்கேயும் ராஸ்யா தலையிடுவதை தடுக்க அல்லது தலையீட்டின் பாதிப்பை குறைக்க.

இங்கே நடப்பது ஒரு 4D chess விளையாட்டு.

 நெட்டோ நாடுக‌ளுக்கு க‌க்கா போனால் அவ‌ர்க‌ளுக்கு பின்னால் க‌ழுவி விட‌வும் த‌ய‌ங்க‌ மாட்டீங்க‌ள்🤣😁😂.................

இந்த‌ காணொளியில் பாருங்கோ ஈரானின் இர‌ண்டு ரோன் இஸ்ரேல் மீது விழுந்து வெடிக்குது....................ஈரான் ஒரு நாடு

ஆனால் ஈரான் அனுப்பிய‌ ரோன‌ தாக்கி அழிக்க‌ அமெரிக்கா இங்லாந் தொட்டு ப‌ல‌ நாடுக‌ளின் உத‌வியோடு தான் அழிக்க‌ப் ப‌ட்ட‌து / போர் விமான‌ம் ஜ‌டோம் இவை அனைத்தும் தேவை ப‌ட்டு இருக்கு....................

ஈரான் ஒரு ரோன‌ செய்ய‌ அமெரிக்க‌ன் டொல‌ரில் பார்த்தா 1000 டொல‌ர் போதும் ஆனால் அந்த‌ ரோன‌ சுட்டு வீழ்த்துவ‌துக்கு இவ‌ர்க‌ள் பாவிக்கும் ஏவுக‌னைக‌ள் ப‌ல‌ ஆயிர‌ம் டொல‌ர்😁.....................................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பையன்26 said:

நீங்கள் சொல்வ‌து நீங்க‌ள் முட்டுக்கொடுப்ப‌வ‌ர்க‌ளுக்கும் இது ந‌ல்லாவே பொருந்து ச‌கோ😁😁😁😁😁😁😁.......................

உங்களை போல் முட்டு, கொடுத்து கொடுத்து…இப்போ மிக மோசமன மத, இன, பாலின அடக்குமுறையாளரான முல்லாக்களுக்கும் முட்டு கொடுக்கும் நிலையில் நான் இல்லை ப்ரோ…

#முல்லாக்களுக்கு முரட்டு முட்டு
# மு (ல்லா)ட்டு சந்து

—————

ஆனால் அமெரிக்க கூட்டணிக்கு அரை கோவணம் இல்லை. முழு கோவணம்தான்.  ஏன்?

1. உக்ரேனுக்கு ஆதரவளித்து, மூன்று வருடமாய் முக்கி  21% நிலத்தை மட்டுமே பிடிக்க கூடியவாறு செய்து, அரக்க முடியாத நிலையில் (படைகளை தாம் நேரடியா இறக்காமலே) ரஸ்யாவை, அதன் பலத்தை முடக்கியமை.

2. தனது சகாவான தென் கொரியா, ஜப்பான் மீது தாக்காமல் வடகொரியாவை கட்டுக்குள் வைத்துள்ளமை.

3. இதையே பெரும் சக்தியான சீனாவுக்கு கூட தைவான் விடயத்தில் செய்தமை.

4.சகாவான இஸ்ரேலை நோக்கி  ஈரான் அனுப்பிய 99% அனுமான் ராக்கெட்டை, ஜோர்தானில் வைத்து ஊதி நூத்தமை.

இதெல்லால்லாம்தான் ஒரு உலக வல்லரசின் அடையாளங்கள்.

இது முட்டு இல்லை. நடப்பதை பட்டியல் இட்டுள்ளேன்.

இது முழுக்கோவணம்தான்.

பக்கதில் இருக்கும், ஒரு கோமாளியால் வழி நடத்தப்படும் உக்ரேனை 48 மணியில் பிடிப்போம் என வெளிக்கிட்டு, 3 வருடமாய், 21% சதவீத நிலத்தை மட்டுமே பிடித்ததும், இதுவும் ஒன்றா?

👆🏼இது அரைகோவணம்தான். 

8 minutes ago, பையன்26 said:

இர‌ண்டு ரோன் இஸ்ரேனல் மீது விழுந்து வெடிக்குது...................

2/300!

வீரவேல்…வெற்றிவேல்🤣.

அதிலும் சேதம் ஏதுமில்லை.

9 minutes ago, பையன்26 said:

ஆனால் ஈரான் அனுப்பிய‌ ரோன‌ தாக்கி அழிக்க‌ அமெரிக்கா இங்லாந் தொட்டு ப‌ல‌ நாடுக‌ளின் உத‌வியோடு தான் அழிக்க‌ப் ப‌ட்ட‌து / போர் விமான‌ம் ஜ‌டோம் இவை அனைத்தும் தேவை ப‌ட்டு இருக்கு....................

ஓம்…அதுதான் உலக வல்லரசு கூட்டணியின் சகாவாக இருப்பதில் உள்ள நன்மை.

9 minutes ago, பையன்26 said:

ஈரான் ஒரு ரோன‌ செய்ய‌ அமெரிக்க‌ன் டொல‌ரில் பார்த்தா 1000 டொல‌ர் போதும் ஆனால் அந்த‌ ரோன‌ சுட்டு வீழ்த்துவ‌துக்கு இவ‌ர்க‌ள் பாவிக்கும் ஏவுக‌னைக‌ள் ப‌ல‌ ஆயிர‌ம் டொல‌ர்😁.....................................

ஆனால் இஸ்ரேலுக்கு சல்லி காசு விரயம் இல்லை🤣.

ஈரானின் நிலைக்கு 1000 டொலரே பெரிய விடயம்.

எனக்கு £50 பெரிய காசு. அதுவே @பாலபத்ர ஓணாண்டி க்கு £5000 உம் டிப்ஸ் கொடுக்கும் காசு.

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

உங்களை போல் முட்டு, கொடுத்து கொடுத்து…இப்போ மிக மோசமன மத, இன, பாலின அடக்குமுறையாளரான முல்லாக்களுக்கும் முட்டு கொடுக்கும் நிலையில் நான் இல்லை ப்ரோ…

#முல்லாக்களுக்கு முரட்டு முட்டு
# மு (ல்லா)ட்டு சந்து

—————

ஆனால் அமெரிக்க கூட்டணிக்கு அரை கோவணம் இல்லை. முழு கோவணம்தான்.  ஏன்?

1. உக்ரேனுக்கு ஆதரவளித்து, மூன்று வருடமாய் முக்கி  21% நிலத்தை மட்டுமே பிடிக்க கூடியவாறு செய்து, அரக்க முடியாத நிலையில் (படைகளை தாம் நேரடியா இறக்காமலே) ரஸ்யாவை, அதன் பலத்தை முடக்கியமை.

2. தனது சகாவான தென் கொரியா, ஜப்பான் மீது தாக்காமல் வடகொரியாவை கட்டுக்குள் வைத்துள்ளமை.

3. இதையே பெரும் சக்தியான சீனாவுக்கு கூட தைவான் விடயத்தில் செய்தமை.

4.சகாவான இஸ்ரேலை நோக்கி  ஈரான் அனுப்பிய 99% அனுமான் ராக்கெட்டை, ஜோர்தானில் வைத்து ஊதி நூத்தமை.

இதெல்லால்லாம்தான் ஒரு உலக வல்லரசின் அடையாளங்கள்.

இது முட்டு இல்லை. நடப்பதை பட்டியல் இட்டுள்ளேன்.

இது முழுக்கோவணம்தான்.

பக்கதில் இருக்கும், ஒரு கோமாளியால் வழி நடத்தப்படும் உக்ரேனை 48 மணியில் பிடிப்போம் என வெளிக்கிட்டு, 3 வருடமாய், 21% சதவீத நிலத்தை மட்டுமே பிடித்ததும், இதுவும் ஒன்றா?

👆🏼இது அரைகோவணம்தான். 

2/300!

வீரவேல்…வெற்றிவேல்🤣.

அதிலும் சேதம் ஏதுமில்லை.

ஓம்…அதுதான் உலக வல்லரசு கூட்டணியின் சகாவாக இருப்பதில் உள்ள நன்மை.

ஆனால் இஸ்ரேலுக்கு சல்லி காசு விரயம் இல்லை🤣.

ஈரானின் நிலைக்கு 1000 டொலரே பெரிய விடயம்.

எனக்கு £50 பெரிய காசு. அதுவே @பாலபத்ர ஓணாண்டி க்கு £5000 உம் டிப்ஸ் கொடுக்கும் காசு.

2003 ச‌தாம் அணுகுண்டு வைத்து இருக்கிறார் இது ஒட்டு மொத்த‌ உல‌கிற்க்கு ஆவ‌த்து என்று ஈராக்கில் இற‌ங்கின‌ அமெரிக்க‌ ப‌டை ச‌தாமை க‌ண்டு பிடித்து தூக்கில் போட்டார்க‌ள் 
ச‌தாம் வைத்து இருந்த‌ அணுகுண்டு எங்கை என்ற‌ கேள்விக்கு இன்று வ‌ரை விடை இல்லை இது தான் அமெரிக்கா

அடுத்த நாட்டு இயற்கை வளங்களை கொள்ளை அடித்து கொளுத்த பூதம் தான் அமெரிக்கா.....................ஈராக்கில் எண்ணை இருக்கு அதை ஆட்டைய‌ போட‌ தான் ச‌தாம் அணுகுண்டு வைச்சு இருக்கிறார் என்று பொய் மாயை உருவாக்கி அந்த‌ நாட்டுக்குள் புகுந்த‌ ந‌ரிக‌ள்......................என‌க்கு அமெரிக்கா விளையாட்டுக‌ள் ப‌ல‌ பிடிக்கும் அமெரிக்கா அர‌சிய‌லை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது.....................யாழ்க‌ள‌த்த தாண்டி  சோச‌ல் மீடியாக்க‌ளில் த‌மிழ‌ர்க‌ள் தொட்டு அடுத்த‌ நாட்ட‌வ‌ர்க‌ள் யாரை ஆத‌ரிக்கின‌ம் என்று ஒரு க‌ன‌ம் எட்டி பாருங்கோ ச‌கோ................................

குட்ட‌ குட்ட‌ குனிய‌ இது ச‌தாம்குசைன் வாழ்ந்த‌ கால‌ம் கிடையாது...........................இவ‌ர்க‌ளால் ஹ‌வுதீஸ் போராளிக‌ளையே எதிர் கொள்ள‌ முடிய‌ல‌ இதில‌ ஈரான‌ கிழிச்சுடுவின‌ம்🤣😁😂.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே பலருக்கு உலகத்தில் என்ன நடைபெறுகிறதென்றே தெரியவில்லை. "பழைய" கீறல் விழுந்த றெக்கோட்டை திரும்பத்திரும்ப போட்டபடியே இருக்கின்றனர். 

உக்ரேனிய யுத்தத்தில் NATO சேடம் இழுக்க ஆரம்பித்துவிட்டது. 

Yemen யுத்தத்தில் சவூதி சேசம் இழுக்கிறது. பலஸ்தீன யுத்தத்தில் இஸ்ரேல் சேடம் இழுக்கிறது. 

இப்படி எல்லாமே எதிர்பார்த்ததற்கு மாறாக நடைபெறுகிறது. 

இஸ்ரேலின் உண்மையான நோக்கமே பலஸ்தீன பிரச்சனையைக் காரணம் காட்டி USA யையும் அதன் கூட்டாளிகளையும் இந்தப் பிரச்சனைக்குள் இழுத்துவிட்டு ஈரானை அழிப்பதே. 

ஆனால் அது நடக்கப்போவதில்லை என்றே தோன்றுகிறது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, பெருமாள் said:

அதாகப்பட்டது, இஸ்ரேலைத் தொட்டுத்  தாக்கும் வல்லமை ஈரானுக்கு இருக்கிறது என்பது நிரூபணமாகிறது. 

இதனூடாக ஈரான் USA க்கு சொல்ல வருவதென்ன ? 

தனது நலன்களைத் தாக்கினால்  இனிமேல் இஸ்ரேல் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் ? 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Iran Attack on Israel: போர் கவலையில் UN; இந்தியா சொன்ன 'செய்தி' இதுவரை நடந்தது என்ன? Detailed Report

ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை தொடுத்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் உள்ள இரான் துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட, இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இரானிய ராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவான ஐ.ஆர்.ஜி.சி கூறுகிறது.

அமெரிக்கா உள்பட பல நாடுகள் இரானை கண்டித்துள்ளன. பதற்றத்தை உடனடியாக தணிக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பதன் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலை எந்தக் கொம்பனாலும் அசைக்கமுடியாது! வேண்டுமென்றால் கனவு காணலாம்.  நிச்சயமாக யூதர்கள் ஜெருசலேமில் தமது தேவாலயத்தை கட்டுவார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, வாலி said:

இஸ்ரேலை எந்தக் கொம்பனாலும் அசைக்கமுடியாது! வேண்டுமென்றால் கனவு காணலாம்.  நிச்சயமாக யூதர்கள் ஜெருசலேமில் தமது தேவாலயத்தை கட்டுவார்கள்!

வாலி அண்ணா 
காமெடி ப‌ண்ணாதைங்கோ
நெத்த‌னியாகு மூன்று கிழ‌மையில் ஹ‌மாஸ்சை முற்றிலுமாய் அழித்து விடுவோம் என்று சொன்னார் 6மாத‌த்தை க‌ட‌ந்து விட்ட‌து 
ஹ‌மாஸ்சின் சுர‌ங்க‌த்தை கூட‌ இன்னும் இவ‌ர்க‌ளால் க‌ண்டு பிடிக்க‌ முடிய‌ வில்லை
அதுக்குள் போனால் இஸ்ரே ராணுவ‌ம் ந‌ர‌க‌த்துக்கு போவ‌து உறுதி......................
அதுக‌ளும் எங்க‌ளை மாதிரி த‌னி நாடு கேட்டு போராடின‌ போராளிக‌ள் என்ப‌த‌ நினைவில் வைத்து இருங்கோ அண்ணா😞................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

Yes - Iran’s drones arrive(d) - inside Israeli airspace over Jerusalem, but did they reach Jerusalem? Or cause any damage ?

இதை முதலிலே பையன் பதிந்து விட்டார். அவருக்கு ஆங்கிலம் உட்பட 4 பாசை அரைகுறை என்பதால் விளங்கபடுத்த முயலவில்லை. நீங்கள் கூகிள் டிரான்சிலேட்டர் ஆவது பாவிப்பீர்கள்தானே?

இந்த வீடியோவில் ஒரு டிரோன் மட்டும் நிலத்தை அடைவது போல படுகிறது. மிகுதி பெருவாரியானவை வானில் வைத்தே தகர்கப்படுகிறது.

அத்தோடு இதில் தெரிபவை தனியே டிரோன், அயர்ண்டோம் தடுப்பு மட்டும் அல்ல, flares உம் கூட.

பெருவாரியானவை இஸ்ரேலுக்கு வெளியே தகர்கப்பட, சில இஸ்ரேல் உள்ளே வந்து வானில் தகர்கபடுகிறன.

மிக சொற்பமானவை நிலத்தை அடைந்துள்ளன.

இஸ்ரேலுக்குள் பாரிய அழிவு ஏற்பட்டிருப்பின் அதை மறைக்க முடியாது. ஹாமாஸ் அடித்த போது, யூதர், அரபிகள் எடுத்த பகிர்ந்த எத்தனை வீடியோக்கள் வந்தன?

நிலத்தில் ஏற்பட்ட அழிவுகள் பற்றி இப்படி வீடியோ வந்தால் காட்டுங்கள். 

ஏற்கிறேன். 

அதுவும் fact check செய்தபிந்தான்.

ஏன் என்றால் முல்லாசந்தில் நிற்பவர்கள் நீங்கள் -  “டெத் டு அமேரிக்கா” என வெள்ளி கிழமை கொழும்பு அமெரிக்க தூதரகத்துக்கு முன் நின்று கத்தாதது மட்டுமே பாக்கி🤣.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.