Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன.

https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault

 

 

https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC

 

  • கருத்துக்கள உறவுகள்

இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல்

பிபிசி
19 ஏப்ரல் 2024, 03:01 GMT
புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்

இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது.

இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும்.

இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது.

இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது.

அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.

 

பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி

இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது.

பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது.

Instagram பதிவை கடந்து செல்ல
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Instagram பதிவின் முடிவு

எண்ணெய், தங்கம் விலை உயர்வு

இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன.

வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது.

ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன.

கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

இரானிய அமைச்சர் எச்சரிக்கை

இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.

"இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார்.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன.

இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்?

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது.

தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை.

அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார்.

இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானும், இஸ்ரேலும் சும்மா நொட்டி விளையாடிக் கொண்டு இருக்கின்றார்கள். தம்மிடம் இருக்கும் அணு, இரசாயன ஆயுதங்களை பாவித்து தமது பலத்தை உலகறிய செய்யவேண்டும். புண்ணிய பூமி - மத்திய கிழக்கு வெடித்து சிதறுவதை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் ஈரான் மீதுதாக்குதல் தொடங்கிவிட்டதா.
நான் பையன்26 றின் சகோதரி கல்யாணி அக்கா  இஸ்ரேல் தாக்குதலை 22 ம் திகதி தொடங்கும் என்பதை நம்பி திங்கள் லீவுக்கு விண்ணப்பித்து விட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இஸ்ரேல் ஈரான் மீதுதாக்குதல் தொடங்கிவிட்டதா.
நான் பையன்26 றின் சகோதரி கல்யாணி அக்கா  இஸ்ரேல் தாக்குதலை 22 ம் திகதி தொடங்கும் என்பதை நம்பி திங்கள் லீவுக்கு விண்ணப்பித்து விட்டேன்

இஸ்ரேல் ந‌ட‌த்தின‌து சிறு தாக்குத‌ல் தான்
இனி ஈரான் என்ன‌ செய்ய‌ போகின‌மோ தெரியாது உற‌வே

அணுகுண்டு போடும் நிலை வ‌ந்தால் உல‌க‌ம் அழிந்து விடும்
அமெரிக்க‌ன் ஜ‌ப்பான் மீது போட்ட‌  இர‌ண்டு இட‌ங்க‌ளில் ம‌க்க‌ள் அங்கு இப்ப‌வும் வாழ‌ முடியாது ,  ஹிரோஷிமா ம‌ற்றும்  நாகசாகி  இந்த‌ இட‌த்துக்கு போகுவில் முக‌த்துக்கு மாஸ் போட‌னும் அதோட‌ வேறு உடை போட‌னும்...........79வ‌ருட‌ம் க‌ட‌ந்தும் ஜ‌ப்பானில் அணுகுண்டின் தாக்க‌ம் இப்ப‌வும் இருக்கு..................அப்போது வீச‌ப் ப‌ட்ட‌ அணுகுண்டு  மிக‌ சின்ன‌ன்

இப்ப‌ ஒரு அடியா ஒட்டு மொத்த‌ ஜ‌ரோப்பாவை அழிக்கும் அணுகுண்டு ர‌ஷ்சியாவிட‌ம் இருக்கு.........................
அணுகுண்டு போர் வேண்டாம் 
வேண்டாம் வேண்டாம் அப்ப‌டி ஒரு போர் வ‌ர‌வே கூடாது உற‌வே🙏🙏🙏........................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது.

இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது.

ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும். 

ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு.

மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.  

உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம்.

ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது.

இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது.

CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது.

Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது.

ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள்.


முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர்.

(முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது). 

முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது. 

(சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ). 

(இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

ஈரானும், இஸ்ரேலும் சும்மா நொட்டி விளையாடிக் கொண்டு இருக்கின்றார்கள். தம்மிடம் இருக்கும் அணு, இரசாயன ஆயுதங்களை பாவித்து தமது பலத்தை உலகறிய செய்யவேண்டும். புண்ணிய பூமி - மத்திய கிழக்கு வெடித்து சிதறுவதை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். 

விடுமுறைகள் தொடங்க போகுது.

நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள்.

ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

ஈரானும், இஸ்ரேலும் சும்மா நொட்டி விளையாடிக் கொண்டு இருக்கின்றார்கள். தம்மிடம் இருக்கும் அணு, இரசாயன ஆயுதங்களை பாவித்து தமது பலத்தை உலகறிய செய்யவேண்டும். புண்ணிய பூமி - மத்திய கிழக்கு வெடித்து சிதறுவதை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். 

எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது.

இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இஸ்ரேல் ஈரான் மீதுதாக்குதல் தொடங்கிவிட்டதா.
நான் பையன்26 றின் சகோதரி கல்யாணி அக்கா  இஸ்ரேல் தாக்குதலை 22 ம் திகதி தொடங்கும் என்பதை நம்பி திங்கள் லீவுக்கு விண்ணப்பித்து விட்டேன்

சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ.

ஆள் அவசரப்பட்டுட்டார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது.

இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.

 

பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு

19 APR, 2024 | 12:04 PM
image
 

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/181443

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது.

இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.

இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம்.

ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅.

யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம்.

ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅.

யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 

🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம்.

அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம்.

சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும்.

—————

உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)…..

சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர்.

இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே. 

இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய்.

அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம்.

ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல், இரான், ஜோ பைடன், பெஞ்சமின் நெதன்யாகு, காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெரெமி போவன்
  • பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும்.

சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார்.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது.

அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது.

அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்கா ஆவேசம்

இஸ்ரேல், இரான், ஜோ பைடன், பெஞ்சமின் நெதன்யாகு, காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார்.

வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.

 

இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு

இஸ்ரேல், இரான், ஜோ பைடன், பெஞ்சமின் நெதன்யாகு, காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார்.

காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.

கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார்.

காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.

 

அமெரிக்காவின் மனநிலை

இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதல் நெதன்யாகுவின் அரசியல் வாழ்க்கைக்கு கிடைத்த இறுதி வாய்ப்பா?

பட மூலாதாரம்,UGC

கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது.

குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது.

“இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது.

“இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு

இஸ்ரேல், இரான், ஜோ பைடன், பெஞ்சமின் நெதன்யாகு, காஸா
படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள்

அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது.

இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.

ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின.

காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது.

இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.

 

மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன?

இஸ்ரேல், இரான், ஜோ பைடன், பெஞ்சமின் நெதன்யாகு, காஸா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம்

அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார்.

இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது.

காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர்.

அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது.

இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது.

ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.

இஸ்ரேல்-இரான் பகை

இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர்.

கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது.

தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம்.

பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.

 

காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு

இஸ்ரேல், இரான், ஜோ பைடன், பெஞ்சமின் நெதன்யாகு, காஸா
படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார்.

இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது.

காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும்.

இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம்.

இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம்.

இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும்.

https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

விடுமுறைகள் தொடங்க போகுது.

நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள்.

ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.

நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி. 

😁

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான்.

ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ? 

😁

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம்.

அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு.

இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ?

விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சென்ரல் கொமாண்டின் மறுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தமிழை புரியாது, விஞ்ஞானத்தை, தமது பிம்பப்படி, பிரயோகிக்க எத்தனிக்கும் விஞ்ஞான அதிமேதாவி கொசுக் கடி   தொல்லை தாங்க  முடியவில்லை. 

இவ்வளவுக்கும், சுழித்தோ, நெளித்தோ எழுதவில்லை.

இப்போதைய ஈரான் சனத்தின் பொது நிறத்தை வைத்து - அந்த நேர எந்த சனத்தின் நிறத்தை சொல்லலாம்.

(இந்த விஞ்ஞான விளக்கத்தின் படி , குளிர் பிரித்தானியாவில், தொடக்க ( ~ 12, 000) கறுப்பர் இருந்து இருக்க  கூடாது.)

அதுவும் சொந்த மொழியையும், விஞ்ஞானத்தையும் போட்டு குழப்பி, உணர்வு கொப்பளிக்கும் கொசு கடி  தொல்லை. 

எடுகோள் கொசு கடி, மற்றவர்கள் எதோ  ஒரு வழியால் வரலாம், திராவிடர் வனத்தில் இருந்து விழுந்து முளைத்தவர்கள். 

கப்பில்,   விவிலியம் சொல்லுவது கொசு கடி பிம்பத்துக்கு ஆகா, ஓகோ. அதில் உள்ள அடையாள வேறுபாடு கூட தெரியவில்லை. 

அப்போ மகாவம்சத்தை ஏற்று  கொண்டு, orientalists சொன்ன  இலங்கைத் தீவு சிங்கள  தீவு என்று  சுருட்டிக் கொண்டு இருக்க வேண்டியது தானே. (அதை தான் வாழைப்பழ ஊசி ஏற்றுகிறார்களோ என்பது- வாசகர் தீர்மானிக்க வேண்டியது).

 

 


 

 

 

 


 

  • கருத்துக்கள உறவுகள்

'இஸ்ரேல் நடத்­தி­ய­து' ஒரு தாக்­கு­தலே அல்ல என்கிறது ஈரான்; சிறுவர் விளையாட்டு என விமர்சனம்

Published By: SETHU   22 APR, 2024 | 11:19 AM

image

ஈரான்மீது இஸ்ரேல் நடத்­தி­ய­தாகக் கூறப்­படும் பதி­ல­டி­யா­னது 'ஒரு தாக்­கு­தலே அல்ல' என ஈரான் விமர்­சித்­துள்­ளது. அது சிறு­வர்­களின் விளை­யாட்டைப் போன்­றது என ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் கூறி­யுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடை­யி­லான போர் அபாய அச்­சத்தை தணிப்­ப­தாக இக்­க­ருத்­துகள் உள்ளன.

சிரி­யா­வி­லுள்ள ஈரா­னிய துணைத்­தூ­த­ர­கத்தின் மீது இஸ்ரேல் கடந்த முதலாம் திகதி நடத்­திய தாக்­கு­தலில் ஈரா­னிய இரா­ணுவ அதி­கா­ரிகள் உட்­பட பலர் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர். 

இத்­தாக்­கு­த­லுக்கு பதி­ல­டி­யாக இஸ்ரேல் மீது கடந்த 13 மற்றும் 14ஆம் திக­தி­களில் சுமார் 300 ஆளில்லா விமா­னங்கள்இ ஏவு­க­ணை­களை ஈரான் ஏவி­யது. இவற்றில் 99 சத­வீ­த­மா­னவை சுட்­டு­வீழ்த்­தப்­பட்­ட­தா­கவும் இஸ்­ரே­லுக்கு சிறிய பாதிப்­பு­களே ஏற்­பட்­ட­தா­கவும் இஸ்ரேல் தெரி­வித்­தி­ருந்­தது.

எனினும் இத்­தாக்­கு­த­லுக்கு பதி­ல­டி­யாக ஈரான் மீது இஸ்ரேல் வெள்­ளிக்­கி­ழமை (19)  அதி­காலை தாக்­குதல் நடத்­தி­ய­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­தது. அன்­றைய தினம் ஈரானின் இஸ்­பஹான்  நகரில் வெடிப்புச் சத்­தங்கள் கேட்­ட­தாக செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது.

3 சிறிய ஆளில்லா விமா­னங்கள் சுட்­டு­வீழ்த்­தப்­பட்­ட­தாக ஈரா­னிய அதி­காரி ஒருவர் தெரி­வித்­தி­ருந்தார். 

ஈரான்மீது இஸ்ரேல் வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை தாக்­குதல் நடத்­தி­ய­தாக அமெ­ரிக்கா கூறிய போதிலும் அத்­தாக்­கு­தலை தான் நடத்­தி­ய­தாக இஸ்ரேல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­ந­ட­வ­டிக்­கைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயுதம் தொடர்­பிலும் முரண்­பா­டான தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. அது ஏவு­கணைத் தாக்­­குதல் என அமெ­ரிக்கா தெர­ிவித்­தி­ருந்­தது. எனினும் ஆளில்லா விமா­னங்­களை (ட்ரோன்­கள்) சுட்­டு­வீழ்த்­தி­ய­தாக ஈரான் கூறு­கி­றது.

இந்­நி­லையில் இது ஒரு தாக்­கு­தலே அல்ல என ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் ஹொஸைன் அமீர் அப்­துல்­லா­ஹியன் கூறி­யுள்ளார்.

பதில் தாக்­குதல் திட்­ட­மில்லை

அமெ­ரிக்­காவின் என்.பி.சி. அலை­வ­ரி­சைக்கு வெள்­ளிக்­கி­ழமை அளித்த செவ்­வி­யொன்றில் இது தொடர்­பாக அவர் கூறு­கையில்இ 

 'நேற்­றி­ரவு நடந்­தது தாக்­குதல் அல்ல. அது ஈரானில் எமது சிறு­வர்கள் பயன்­ப­டுத்தும்  விளை­யாட்டுப் பொரு­ளான 'குவாட்-­-கொப்­டர்'­க­ளுக்கு இடை­யி­லான மோதலைப் போன்­றது. அவை ஆளில்லா விமா­னங்கள் அல்ல' என வெள்­ளிக்­கி­ழமை அவர் கூறி­யுள்ளார்.

ஐ.நா. பாது­காப்புச் சபை நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­று­வ­தற்­காக நியூ யோர்க்­குக்கு  சென்­றி­ருந்த நிலையில் அமைச்சர் அப்­துல்­லா­ஹியன் இந்த செவ்­வியை அளித்­துள்ளார்.

இஸ்ரேல் குறிப்­பி­டத்­தக்­க­வொரு தாக்­கு­தலை நடத்­தினால் தவிர, இஸ்ரேல்மீது பதில் தாக்­குதல் நடத்தும் திட்டம் ஈரா­னிடம் இல்லை எனவும் அவர் கூறி­யுள்ளார். 

ஆனால்இ ஈரான்மீது இஸ்ரேல் தாக்­குதல் நடத்­தினால் ஈரானின் பதி­லடி துரி­த­மா­கவும் கடு­மை­யா­கவும் இருக்கும் என அவர் கூறினார்.  

அதே­வேளைஇ இஸ்ரேல்மீது ஈரான் நடத்­திய ஏவு­கணை, ஆளில்லா விமானத் தாக்­குதல் ஓர் எச்­ச­ரிக்கை நோக்­க­மு­டை­யது எனவும் அமைச்சர் அப்துல்லாஹின் கூறினார்.

'எம்மால் (இஸ்ரேலிய நகரங்களான) டெல் அவிவ் அல்லது ஹைஃபாவை தாக்கியிருக்க முடியும். இஸ்ரேலின் அனைத்து பொருளாதார துறைமுகங்களையும் தாக்கியிருக்கலாம். 

'ஆனால், எமது சிவப்புக் கோடுகள் பொது­மக்கள் ஆவர்இ இராணுவ நோக்கம் மாத்திரமே எம்மிடமிருந்தது' என அவர் கூறினார். (சேது)

https://www.virakesari.lk/article/181636

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.