Jump to content

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   24 APR, 2024 | 11:01 AM

image
 

அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கொலம்பிய பல்கலைகழகம் வகுப்பறை கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. நியுயோர்க் பல்கலைகழகத்திலும் யால் பல்கலைகழகத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

america_students_pro44.jpg

இதேவேளை அமெரிக்காவின் பல பல்கலைகழகங்கள் ஹமாசிற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்தினால் உருவாகியுள்ள பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

கொலம்பிய பல்கலைகழகத்தின் வெளியே முகாமிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டனர்.

அதேவேளை ஏனைய பல்கலைகழகங்களில் கொலம்பிய பல்கலைகழகத்தில் ஏற்பட்ட நிலை உருவாகியுள்ளது.

நியுயோர்க் பல்கலைகழகத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பல்கலைகழத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர்.

america_students_pro1.jpg

முதலில் அவர்களை வெளியேற சொன்னோம்  எனினும் நிலைமை குழப்பகரமானதாக மாறிய பின்னர் பொலிஸாரை அழைத்தோம் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மிரட்டும் கோசங்கள் மற்றும் யூத எதிர்ப்பு கோசங்களை கேட்க முடிந்ததாக  பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வளாகத்திற்குள் மாணவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு பல்கலைகழகம் அனுமதிப்பது கடும் கண்டணத்திற்குரியது என நியுயோர்க் பல்கலைகழக சட்டககல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

america_students_pro.jpg

ஆர்ப்பாட்டங்கள்காரணமாக மாணவர்கள் மத்தியிலான பதற்றமும் அதிகரித்து காணப்படுகின்றது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை தங்களது பல்கலைகழகங்கள் கண்டிக்கவேண்டும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் இருந்து விலகியிருக்கவேண்டும் என பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

இதேவேளை இஸ்ரேலிற்கு எதிரான விமர்சனங்கள் அனேகமாக யூதஎதிர்ப்பை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய மாணவர்கள் தாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதுடன் ஹமாஸ் இன்னமும் பணயக்கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொலம்பிய பல்கலைகழகத்திலும் பதற்ற நிலை அதிகமாக காணப்படுகின்றது.

 

america_students_pro_3.jpg

https://www.virakesari.lk/article/181819

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பல்கலைகழகங்களில் பாலஸ்தீன சார்பு போராட்டங்கள் தீவிரம் - 100க்கும் அதிகமான மாணவர்கள் கைது

Published By: RAJEEBAN   25 APR, 2024 | 12:15 PM

image
 

அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவகளிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ள பொலிஸார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கைதுசெய்துள்ளனர்.

அவுஸ்டினின் டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட 34 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

america_students_pro_46.jpeg

தென்கலிபோர்னியா பல்கலைகழகத்தில் 50க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுடன் தொடர்புகளை கொண்டுள்ள ஆயுதவியாபாரிகளுடனான  தொடர்பை துண்டிக்கவேண்டும் என கோரி நியுயோர்க்கின் கொலம்பியா பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழகத்தை சூழ கூடாரங்களை அமைத்து போராட்டங்களை ஆரம்பித்ததை தொடர்ந்து அமெரிக்காவின் பல பல்கலைகழங்களில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் பல்கலைகழகங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவில் யுசிபேர்க்லே மற்றும் யுஎஸ்சி பல்கலைகழங்களில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

கலிபோரினா அரச பொலிடெக்னிக் பல்கலைகழகத்தில் தளபாடங்கள் கூடாரங்கள் போன்றவற்றை பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் பல்கலைகழகத்திற்குள் முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டதால்  பல்கலைகழகம் மூடப்பட்டது.

america_students_pro_47.jpg

பாலஸ்தீன ஆதரவு குழுவை சேர்ந்த மாணவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டமைக்கும் காசா யுத்தத்திற்காக பல்கலைகழகம் இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தும்  ஹவார்ட் பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழக வளாகத்திற்குள் கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாசசூட்ஸ் முதல் கலிபோர்னியா வரை பல பல்கலைகழங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணிகள் மற்றும் பல்கலைகழகங்களை சுற்றி முற்றுகையிடும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/181925

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை மாளிகைக்கு அருகில் பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

26 Apr, 2024 | 11:18 AM
image

அமெரிக்காவில் வெள்ளைமாளிகைக்கு அருகில்  அமெரிக்க மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக மாணவர்கள் வோசிங்டனில் ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திற்கு அருகில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

காசா யுத்தத்தின் மத்தியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் அமெரிக்க பல்கலைகழகங்கள் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களில் தங்களுக்கு உள்ள தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதற்காகவும்  வோசிங்டனை சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் செயற்பாட்டாளர்களும் அங்குகுழுமியுள்ளனர்.

george_wash_uni_protest.jpg

அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழகங்களை போல ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திலும் மாணவர்கள் வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழக மாணவர்களிற்கான எங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவும் அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழக மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காகவும் நாங்கள் இங்குவந்திருக்கின்றோம் என அனா வெசெல்ஸ் என்ற மாணவி அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கும்இராஜாங்க திணைக்களத்திற்கும் அருகில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

தலைநகரில் நாங்கள் எதனையாவது செய்யாவிட்டால் நாங்கள் எங்கள் தார்மீக கடப்பாடுகளை நிறைவேற்றவில்லை என்பதே அர்த்தம் என மாணவி வெசெல்ஸ் தெரிவித்துள்ளார்.

 

 

https://www.virakesari.lk/article/181994

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீன ஆதரவு; இஸ்ரேல் எதிர்ப்பு விவகாரம் - அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழ்மாணவி கைது

27 APR, 2024 | 11:16 AM
image

நியூஜெர்சி: அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ளனர்.

சொந்த மண்ணில் பாலஸ்தீனிய அரேபியர்கள் அகதிகளாக வாழும்நிலைக்கு இஸ்ரேல் யூதர்களால் ஆளாக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை வலுவாக முன்வைத்து அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக இஸ்ரேல் ராணுவம் காசா யுத்தத்தில் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவிப்பதைக் கண்டித்து நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலை மாணவர்கள் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது.

இதன் தொடர்ச்சியாக தற்போது பிரின்ஸ்டன் பல்கலையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரின்ஸ்டன் பல்கலை மாணவர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி: பிரின்ஸ்டன் பல்கலை வளாகத்தின் முற்றத்தில் மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் கூடாரமிட்டுக் கடந்த சில நாட்களாக பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வந்தனர். பின்னர் பல்கலையின் பிற மாணவர்கள் சில பேராசிரியர்கள் வெளிநபர்கள் உட்பட பலர் அவர்களுடன் இணைந்து பாலஸ்தீனை ஆதரித்தும்இ இஸ்ரேலை எதிர்த்தும் கோஷமிட்டனர்.

மேற்கொண்டு கூட்டங்கள் நடத்த அவர்கள் திட்டமிட்டு வந்தனர். இதனிடையில் கடந்த புதன்கிழமை அன்று பல்கலை வளாகத்தில் இவ்வாறு கூடாரம் இடுவது விதிமுறை மீறலென நிர்வாகம் எச்சரித்து மின்னஞ்சல் அனுப்பியது. இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகிய இருவரும் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகியஇருவரும் பல்கலையின் விடுதியில் தங்க தடை விதிக்கப்பட்டி ருப்பதாகப் பல்கலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் பல்கலையைவிட்டு வெளியேற்றப் படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டமாணவி அசிந்தியா சிவலிங்கன் பிரின்ஸ்டன் பல்கலையில் சர்வதேச வளர்ச்சிக்கான பொது விவகாரத் துறையில் முதுநிலைப் பட்டம் படித்து வருகிறார்.

https://www.virakesari.lk/article/182076

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2024 at 13:53, ஏராளன் said:

பாலஸ்தீன ஆதரவு; இஸ்ரேல் எதிர்ப்பு விவகாரம் - அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழ்மாணவி கைது

இதையும் செய்தி ஆக்கிட்டானுகள் 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அங்கே????????

எங்கள் யாழ் கள சனநாயகத்தின் தூண்களில் ஒருவரைக் கூடக்  காணோம்? 

பொந்திற்குள் ஒடுங்கிக்கொண்டனரோ? அல்லது சாயம் கழன்றுவிடும் என்று அச்சமுறுகின்றனரோ? 

அல்லது மெளன விரதமோ? 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இதையும் செய்தி ஆக்கிட்டானுகள் 😎

 

ஒரு தமிழ் பிள்ளை அமெரிக்க போராட்டத்தில் கைது ஆனால் அது எமக்கு செய்திதானே ஐயா. இந்திய மாணவிகள் இருவர் களவெடுத்து அமெரிக்காவில் கைதாகிய விடயம் விவாதிக்கப்படலாம் என்றால் அதைவிட முக்கியமான விடயம் இது. 

மற்றையது அமெரிக்கா பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் அதிக மதிப்பு உடையது. அங்கு அனுமதி கிடைப்பதே கடினம் என பொதுவான கருத்து உள்ளது. 

இந்த மாணவி கைது எமது சமூகத்திற்கு முக்கியமான விடயம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாணவியைப் பார்க்கும்போது ஸஹ்ரான் குழுவில் இருந்த புலஸ்தீனியின் ஞாபகம் வந்து தொலைக்கின்றது. நட்பு அப்படி.

மேலும் இப்படியான பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் மாணவர்கள் மேலை நாடுகளில் இருந்து நாடுகடத்தப்படவேண்டும். அல்லது ரஸ்யா, இரான் போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

ஒரு தமிழ் பிள்ளை அமெரிக்க போராட்டத்தில் கைது ஆனால் அது எமக்கு செய்திதானே ஐயா.

தமிழ் நாட்டு பூர்விகம் தானே ..அதுதான் பப்ளிக் ஸ்டண்ட் 
நேரடியாக பாலஸ்தீனத்திற்கு அனுப்பி அங்கே போய் போராடு என்று அனுப்பிவைத்தால் தெரியும் 
அம்மணியின் போராட்ட குணம் எப்படி காற்றில் பறக்கிறது என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடப் பக்கமே ஒதுங்காதவர்கள் போல இருக்கிறது பலரின்  நடிப்புக்கள். 🤦🏼‍♂️

எல்லோரும் தங்கள் பாத்திரங்களை மிகத் திறமையாகச் செய்கிறார்கள் யாழ் களத்து போலி சனநாயகவாதிகள் உட்பட. 

😩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் மாணவர் போராட்டம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது - லாஸ் ஏஞ்சலஸில் இரு தரப்பினர் மோதல்

அமெரிக்காவில் மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,AFP

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மேட் மர்ஃபி
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 1 மே 2024

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் பாலத்தீனத்திற்கு ஆதரவாகப் போராடி வரும் மாணவர்களைக் கலைப்பதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் உள்ளே நுழைந்தனர்.

பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஒரு கூடத்தில் இருந்த மாணவர்களை அகற்றுவதற்காக போலிசார் ஏணியில் ஏறிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகின. மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாகவே, போராடும் மாணவர்கள் இடத்தைக் காலிசெய்ய வேண்டும் அல்லது அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கொலம்பியா பல்கலைக்கழகம் எச்சரித்திருந்தது.

இஸ்ரேல் காஸா மீது நடத்திவரும் தாக்குதலால் மனிதாபிமானச் சிக்கல்கள் தீவிரமடைந்து வருவதால், கொலம்பியா பல்கலைக்கழகம் இஸ்ரேலில் இருக்கும் தனது மூலதனங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என போராடும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பல முக்கிய பல்கலைக் கழகங்களிலும் மாணவர்கள் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்தும், பாலத்தீனத்திற்கு ஆதரவகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் புறக்கணிக்கக் கோரி அமெரிக்கா முழுவதும் பல்வேறு நகரங்களிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவின் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் மாணவர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், பல முக்கியப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளுகக்கு எதிராகப் போராடும் மாணவர்களை 'யூத வெறுப்பாளர்கள்' என்று யூத மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொலம்பியா மற்றும் வேறு சில பல்கலைக் கழகங்களில் உள்ள யூத மாணவர்கள் தங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைப் போல் உணர்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

ஆயினும் பல யூத மாணவர்களும் இஸ்ரேலுக்கு எதிரான இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.

 
இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் கூடத்திற்குள் நுழையும் நியூ யார்க் நகரக் காவல்துறையினர்

'போலீசார் மாணவர்களை மோசமாகக் கையாண்டனர்'

மாணவப் போராட்டக்காரர்கள், கலைந்து செல்வதற்குக் கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடுவை மீறியதால், நியூ யார்க் காவல் துறை (NYPD) அதிகாரிகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய, பல்கலைக்கழக அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 80-100 போலீசார் கட்டிடத்திற்குள் நுழைந்ததாக ஒரு மாணவர் பிபிசி-யிடம் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளகத்தில் இருந்த ஹாமில்டன் கூடம் 'ஆக்கிரமிக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு, முற்றுகையிடப்பட்ட பிறகு, எங்களுக்கு வேறு வழியில்லை' என்று கொலம்பியா பல்கலைக்கழகம் கூறியது. நியூ யார்க் காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில், பல்கலைக் கழகத் தலைவர் மினூஷ் ஷபிக், 'மிகுந்த வருத்தத்துடன்' காவல்துறை உதவியைக் கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் வளாகத்தினுள் நுழைந்தவுடன் அதிகாரிகள் 'போராட்டக்காரர்களை திசைதிருப்ப' வீரியம் குறைந்த 'ஸ்டன் கையெறி குண்டுகளைப்' பயன்படுத்தினர் என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

 
இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்
படக்குறிப்பு,ஒரு மாணவர் பிபிசி-யிடம் காவல்துறை அத்துமீறல்களை விவரித்துக்கொண்டிருந்த போதே, ஒரு காவலர் ஜன்னலை மூடினார்

கட்டடத்திற்குள் நுழைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களைப் பிடித்து இழுத்தும் தள்ளியும் மோசமாக நடத்தியதாக சில மாணவர்கள் குற்றம் சாட்டினர். அவர்களில் ஒருவர் ஜன்னல் வழியே பிபிசி-யிடம் பேசினார். நியூ யார்க் காவல் அதிகாரிகள் மூன்று மாணவர்களை படிக்கட்டுகளில் இருந்து கீழே தள்ளியதாகக் கூறினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு காவல் அதிகாரி குறுக்கிட்டு ஜன்னலை வலிந்து மூடியதால், நேர்காணல் தடைப்பட்டது.

இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கைது செயப்பட்ட மாணவர்கள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்

50 மாணவர்கள் கைது

நியூ யார்க் காவல்துறையின் பொதுத் தகவல் உதவி ஆணையர், கார்லோஸ் நீவ்ஸ், காவல் அதிகாரிகளுக்கு ஆதரவாகப் பேசினார். மாணவர்கள் ஹாமில்டன் கூடத்தின் கதவுகளை 'மேசைகள், நாற்காலிகள் அல்லது சோடா இயந்திரங்களைக்' கொண்டு 'தடுத்து' வைத்திருந்ததாக அவர் கூறினார். அதிகாரிகள் உள்ளே 'பார்க்க முடியாதபடி' செய்தித்தாள்கள் கொண்டு ஜன்னல்களையும் மூடிவைத்திருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

இச்சம்பவத்தில் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொலம்பியா பல்கலைக் கழகத்தில் இருந்து செய்தியறிக்கை அளித்த பிபிசி-யின் அமெரிக்கச் செய்தியாளர் நோமியா இக்பால், பல நியூ யார்க் காவல்துறைப் பேருந்துகள் பல்கலைக் கழக வளாகத்திலிருந்து வெளியேறுவதைக் கண்டதாகக் கூறினார். அவற்றில் போராட்டக்காரர்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் தங்கள் கைகள் கட்டப்பட்டு அணிவகுத்து அழைத்துச் செல்லப்பட்டபோது, போராட்டக்காரர்கள் அவர்களுக்கு ஆதரவாகப் பெரும் கோஷங்களை எழுப்பினர். `அவர்களைப் போக விடுங்கள்` என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

அந்தக் கட்டடத்தில் இருந்தபடி போராடிய மாணவர்கள் அனைவரும் அகற்றப்பட்டதாகவும், யாருக்கும் எந்த காயங்களும் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை என்றும் நியூ யார்க் காவல்துறை கூறியது.

கொலம்பியா பல்கலைக் கழக மாணவர்கள் கிட்டத்தட்ட கடந்த இரண்டு வாரங்களாக பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரம் அமைத்துப் போராடி வருக்கின்றனர்.

 
இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரண்டிருக்கும் காவலர்கள்

மற்ற பல்கலைக்கழகங்களிலும் கைது நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை இரவு நியூ யார்க்கில் கருப்பினத்தவர் அதிகம் வசிக்கும் ஹார்லெம் பகுதியில் உள்ள நகரக் கல்லூரியிலும் போலீசார் நுழைந்து பல மாணவர்களைக் கைது செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ், கலிபோர்னியா, ஜார்ஜியா, வட கரோலினா, யூட்டா, வர்ஜீனியா, நியூ மெக்ஸிகோ, நியூ ஜெர்சி, கனெக்டிகட் மற்றும் லூசியானா ஆகிய மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களிலும், 1,000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இஸ்ரேல் ஆதரவு மற்றும் பாலத்தீன ஆதரவு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் மோதல்

அமெரிக்காவின் மேற்கு கரையில், லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் நிர்வாகிகள் 'சட்ட விரோதமானவை' என்று அவர்கள் அழைக்கும் போராட்டக்காரர்களின் முகாமை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். அதைத்தொடர்ந்து இஸ்ரேல் ஆதரவு மற்றும் பாலத்தீனர் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தன. இது நீண்ட நேரம் தொடர்ந்தது.

கறுப்பு உடை அணிந்த இஸ்ரேல் ஆதரவாளர்கள் அமெரிக்க நேரப்படி நள்ளிரவில் வளாகத்திற்கு வந்தனர். அவர்கள் முகாமைச் சுற்றியிருந்த தடுப்புகளை அகற்ற முயற்சித்தனர், என்று 'லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோ காட்சிகள் கலவரங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் சுடர்கள் மற்றும் பட்டாசுகள் வெடிப்பதைக் காட்டின. மற்ற வீடியோ காட்சிகள் இரு குழுக்களிடையே நடந்த மோதலைக் காட்டின.

அமெரிக்காவில் மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,நள்ளிரவில் மோதிக் கொண்ட மாணவர்கள்

லாஸ் ஏஞ்சலஸ் மேயர் கரேன் பாஸ் இந்த காட்சிகளை 'வெறுக்கத்தக்கவை, மன்னிக்க முடியாதவை' என்று விவரித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் வளாகத்திற்கு வந்ததாகக் கூறினார்.

சில அதிகாரிகள் மாணவப் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மற்றவர்கள், காவல்துறையினரை அழைத்தனர்.

தேசிய அரசியல்வாதிகள் சிலர், இந்தப் போராட்டங்களில் யூத வெறுப்பு வெளிப்படுவதாகக் கூறி, கல்லூரிகள் இதனைச் சமாளிக்க மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் மாணவர் போராட்டம்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,இஸ்ரேல் ஆதரவு மாணவர்களின் தாக்குதலுக்குப் பிறகு பாலத்தீனர் ஆதரவு மாணவர்கள் தங்களது போராட்ட முகாமை காவல் காத்து நின்ற காட்சி

https://www.bbc.com/tamil/articles/cjr7ldqew20o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் உங்களிற்கு எங்கள் இதயத்திலிருந்து நன்றிகள் - அமெரிக்க கனடா பல்கலைகழக மாணவர்களிற்கு பாலஸ்தீன சிறுவர்கள்

02 MAY, 2024 | 11:05 AM
image
 

காசாபள்ளத்தாக்கின் மத்தியில் உள்ள டெய்ர் எல் பலாவில் இடம்பெற்ற பேரணியில் அமெரிக்கா கனடாவில் தங்களிற்காக குரல்கொடுக்கும்மாணவர்களிற்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்களுடன் பாலஸ்தீன சிறுவர்கள் காணப்படும் படங்கள் வெளியாகியுள்ளன.

gaza_children333.jpg

gaza_children_334.jpg

கொலம்பியா பல்கலைகழக மாணவர்களிற்கும் ஏனைய பல்கலைகழக மாணவர்களிற்கும் அவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/182463

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலிபோர்னியா பல்கலைகழகத்திற்குள் பொலிஸார் - பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்ற முயற்சி - பெரும் பதற்ற நிலை

Published By: RAJEEBAN   02 MAY, 2024 | 03:53 PM

image
 

அமெரிக்காவின் கலிபோர்னியாபல்கலைகழக வளாகத்திற்கு கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பாலஸ்தீன மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ள பொலிஸார்  ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

california_pro.jpg

சில பகுதிகளில் மாணவர்களிற்கும்  பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன.

califor_pro2.jpg

எங்களின் பல்கலைகழகத்திலிருந்து வெளியேறு என மாணவர்கள் கோசம்  எழுப்பிவருகின்றனர்.

califor_pro.jpg

நூற்றுக்கணக்கான பொலிஸார் உள்ளே நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.

https://www.virakesari.lk/article/182495

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2024 at 21:53, ஏராளன் said:

பாலஸ்தீன ஆதரவு; இஸ்ரேல் எதிர்ப்பு விவகாரம் - அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழ்மாணவி கைது

27 APR, 2024 | 11:16 AM
image

நியூஜெர்சி: அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ளனர்.

சொந்த மண்ணில் பாலஸ்தீனிய அரேபியர்கள் அகதிகளாக வாழும்நிலைக்கு இஸ்ரேல் யூதர்களால் ஆளாக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை வலுவாக முன்வைத்து அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக இஸ்ரேல் ராணுவம் காசா யுத்தத்தில் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவிப்பதைக் கண்டித்து நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலை மாணவர்கள் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது.

இதன் தொடர்ச்சியாக தற்போது பிரின்ஸ்டன் பல்கலையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரின்ஸ்டன் பல்கலை மாணவர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி: பிரின்ஸ்டன் பல்கலை வளாகத்தின் முற்றத்தில் மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் கூடாரமிட்டுக் கடந்த சில நாட்களாக பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வந்தனர். பின்னர் பல்கலையின் பிற மாணவர்கள் சில பேராசிரியர்கள் வெளிநபர்கள் உட்பட பலர் அவர்களுடன் இணைந்து பாலஸ்தீனை ஆதரித்தும்இ இஸ்ரேலை எதிர்த்தும் கோஷமிட்டனர்.

மேற்கொண்டு கூட்டங்கள் நடத்த அவர்கள் திட்டமிட்டு வந்தனர். இதனிடையில் கடந்த புதன்கிழமை அன்று பல்கலை வளாகத்தில் இவ்வாறு கூடாரம் இடுவது விதிமுறை மீறலென நிர்வாகம் எச்சரித்து மின்னஞ்சல் அனுப்பியது. இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகிய இருவரும் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகியஇருவரும் பல்கலையின் விடுதியில் தங்க தடை விதிக்கப்பட்டி ருப்பதாகப் பல்கலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் பல்கலையைவிட்டு வெளியேற்றப் படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டமாணவி அசிந்தியா சிவலிங்கன் பிரின்ஸ்டன் பல்கலையில் சர்வதேச வளர்ச்சிக்கான பொது விவகாரத் துறையில் முதுநிலைப் பட்டம் படித்து வருகிறார்.

https://www.virakesari.lk/article/182076

சமூக நீதிக்காக போராடுபவர்கள் சுயநலமாக இருப்பதில்லை, ஆனால் இதனால் இப்படியானவர்கள் மற்றவர்களுக்காக சில வேளைகளில் தமது கல்வி, எதிகாலம் என்பவற்றை தூக்கி எறிந்துவிடுவார்கள், அப்படி இல்லாமல் தனது கல்வியினை இந்த குழந்தை சிறப்பாக முடித்து எதிர்காலத்தில் ஒரு மிக சிறந்த ஆளுமை நிறைந்த தலைமத்துவங்களை பெற்றால் சமூகத்திற்கும் மிக உதவியாக இருக்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

சமூக நீதிக்காக போராடுபவர்கள் சுயநலமாக இருப்பதில்லை, ஆனால் இதனால் இப்படியானவர்கள் மற்றவர்களுக்காக சில வேளைகளில் தமது கல்வி, எதிகாலம் என்பவற்றை தூக்கி எறிந்துவிடுவார்கள், அப்படி இல்லாமல் தனது கல்வியினை இந்த குழந்தை சிறப்பாக முடித்து எதிர்காலத்தில் ஒரு மிக சிறந்த ஆளுமை நிறைந்த தலைமத்துவங்களை பெற்றால் சமூகத்திற்கும் மிக உதவியாக இருக்கும்.

தாங்கள் சொல்ல வருவதென்ன ? 

இப்படிப்  போராடாமல் கல்வியைத் தொடர்ந்து கற்று முடித்தால் சமூகத்திற்கு பாரிய உதவியாக இருக்கும் என்கிறீர்களா? 

அப்படியானால் இதே theory கோட்பாடு, இலங்கையில் கல்வியை இடைநடுவில் கைவிட்டு  ஆயுதம் தூக்கி போராடியவர்களுக்கும் பொருந்துமா? 

@விசுகு

"ஆட்டுக்க மாட்டை செருக வேண்டாம்" என்று கூறாதீர்கள். 

 

(சமூக மாற்றங்களுக்கான அடிப்படையே இப்படியான போராட்டங்கள்தான்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

தாங்கள் சொல்ல வருவதென்ன ? 

இப்படிப்  போராடாமல் கல்வியைத் தொடர்ந்து கற்று முடித்தால் சமூகத்திற்கு பாரிய உதவியாக இருக்கும் என்கிறீர்களா? 

அப்படியானால் இதே theory கோட்பாடு, இலங்கையில் கல்வியை இடைநடுவில் கைவிட்டு  ஆயுதம் தூக்கி போராடியவர்களுக்கும் பொருந்துமா? 

@விசுகு

"ஆட்டுக்க மாட்டை செருக வேண்டாம்" என்று கூறாதீர்கள். 

 

(சமூக மாற்றங்களுக்கான அடிப்படையே இப்படியான போராட்டங்கள்தான்)

அவர் சொல்ல வருவதை உள் வாங்கி பதில் எழுதவும். நன்றி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

அவர் சொல்ல வருவதை உள் வாங்கி பதில் எழுதவும். நன்றி 

 

அவர் என்ன சொல்ல வருகிறார்? நீங்கள் கூறுங்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அவர் என்ன சொல்ல வருகிறார்? நீங்கள் கூறுங்கள்? 

ஒவ்வொரு கரும்புலியும் உயிரை கொடுக்கும் போதும் மிகவும் வருந்தியதுண்டு. ஏன்???

ஒரு உயிர் போவதென்ற கவலை தாண்டி அந்த உன்னத மக்கள் விரும்பிகள் போல அந்த உன்னத சேவையாளர்கள் போல மக்கள் தலைவர்கள் கிடைக்கமாட்டார்கள் எவரை எம் இனம் இழக்க கூடாதோ அவர்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதால் ...

இதை புரிந்து கொண்டால் மேலே அவர் எழுதியதும் புரியும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

ஒவ்வொரு கரும்புலியும் உயிரை கொடுக்கும் போதும் மிகவும் வருந்தியதுண்டு. ஏன்???

ஒரு உயிர் போவதென்ற கவலை தாண்டி அந்த உன்னத மக்கள் விரும்பிகள் போல அந்த உன்னத சேவையாளர்கள் போல மக்கள் தலைவர்கள் கிடைக்கமாட்டார்கள் எவரை எம் இனம் இழக்க கூடாதோ அவர்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதால் ...

இதை புரிந்து கொண்டால் மேலே அவர் எழுதியதும் புரியும்.

சாரி பெரியவா, 

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம். விடயத்திற்கு நேராக  வரவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

தாங்கள் சொல்ல வருவதென்ன ? 

இப்படிப்  போராடாமல் கல்வியைத் தொடர்ந்து கற்று முடித்தால் சமூகத்திற்கு பாரிய உதவியாக இருக்கும் என்கிறீர்களா? 

அப்படியானால் இதே theory கோட்பாடு, இலங்கையில் கல்வியை இடைநடுவில் கைவிட்டு  ஆயுதம் தூக்கி போராடியவர்களுக்கும் பொருந்துமா? 

@விசுகு

"ஆட்டுக்க மாட்டை செருக வேண்டாம்" என்று கூறாதீர்கள். 

 

(சமூக மாற்றங்களுக்கான அடிப்படையே இப்படியான போராட்டங்கள்தான்)

போராட்டத்தினை வேண்டாம் என கூறவில்லை, ஆனால் எதிர்காலத்தில் இவ்வாறான சமூக அக்கறையுள்ளவர்கள் உயர் பதவிகளில் வருவதற்கு இடையூறாக தற்போதய நடவடிக்கைகள் அமைந்துவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

பெரும்பாலும் கல்விகற்றவர்கள் உயர்பதவிகளை சுயநல அடிப்படையிலேயே குறிவைப்பார்கள், பின்னர் அவர்கள் ஊழல் போன்ற நடவடிக்கையிலும் ஈடுபடுபவர்களாகவும் மாறுகின்ற நிலை ஏற்படும்.

சமூக சிந்தனை உள்ளவர்கள் இந்த உயர்பதவிகளை பெற்றால் தேவையற்ற களைகள் சமூகத்தலைமைகளை பெறுவதனை தடுக்கலாம்.

உங்களிடம் ஒரு கேள்வி, சமுக சிந்தனை கொண்டவருக்கு சார்பாக கருத்திட்ட என்னிடம் கேள்வி கேட்ட நீங்கள், அவரையும் அவரது போராட்டத்தினையும் கேவலப்படுத்துகின்ற கருத்தாளர்களிடம் ஏன் எந்த கருத்தினையும் கூறவில்லை?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, vasee said:

போராட்டத்தினை வேண்டாம் என கூறவில்லை, ஆனால் எதிர்காலத்தில் இவ்வாறான சமூக அக்கறையுள்ளவர்கள் உயர் பதவிகளில் வருவதற்கு இடையூறாக தற்போதய நடவடிக்கைகள் அமைந்துவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

பெரும்பாலும் கல்விகற்றவர்கள் உயர்பதவிகளை சுயநல அடிப்படையிலேயே குறிவைப்பார்கள், பின்னர் அவர்கள் ஊழல் போன்ற நடவடிக்கையிலும் ஈடுபடுபவர்களாகவும் மாறுகின்ற நிலை ஏற்படும்.

சமூக சிந்தனை உள்ளவர்கள் இந்த உயர்பதவிகளை பெற்றால் தேவையற்ற களைகள் சமூகத்தலைமைகளை பெறுவதனை தடுக்கலாம்.

உங்களிடம் ஒரு கேள்வி, சமுக சிந்தனை கொண்டவருக்கு சார்பாக கருத்திட்ட என்னிடம் கேள்வி கேட்ட நீங்கள், அவரையும் அவரது போராட்டத்தினையும் கேவலப்படுத்துகின்ற கருத்தாளர்களிடம் ஏன் எந்த கருத்தினையும் கூறவில்லை?

👇

பலருடைய கருத்துக்கள், அவர்களது உண்மையான இயல்பை எல்லோருக்கும் வெளிச்சம்போட்டுக் காட்டுவதால்  அப்படியே தொடரட்டும் எனச் சீண்டுவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

america-protest.jpeg

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது : தொடரும் போராட்டம்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் முன்னெடுத்து வரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வசேத ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

காசாவில் போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் இராணுவ உதவி மற்றும் ஆயத விநியோகத்தை நிறுத்துதல், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இவ்வாறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திவந்த மாணவர்களின் முகாம்களை கலவரத் தடுப்பு பொலிஸார் வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளனர்.

இதன்போது அங்கு போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி, லாஸ் ஏஞ்சலீஸ் மாநில பல்கலைக்கழகத்திலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஹெமில்டன் அரங்கில் தடுப்புகள் அமைத்து மாணவர்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பொலிஸார் கடந்த புதன்கிழமை அங்கிருந்து மாணவர்களை வெளியேற்றியிருந்தனர்.

https://athavannews.com/2024/1381061

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பலஸ்தீன ஆதரவு மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதல் தொடர்கிறது - வேர்ஜினீயாவில் 25 பேர் கைது

Published By: RAJEEBAN   05 MAY, 2024 | 01:31 PM

image
 

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை பொலிஸார் வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக தயாராகயிருக்கும் வீடியோக்கள் வெளியாகியிருந்தன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுதந்திர பாலஸ்தீனம் என கோசம் எழுப்பினர்.'

america_students_pro_48.jpg

அந்த பகுதியில் சட்டவிரோத ஒன்றுகூடல் இடம்பெறுவதாக காவல்துறையினர் சமூக ஊடகங்களில் எச்சரித்தனர்.

இதன் பின்னர் பொலிஸார் உள்ளே நுழைந்தவேளை மாணவர்கள் இழுத்து நிலத்தில் விழுத்தப்பட்டனர் இழுக்கப்பட்டனர் அவர் கண்கணில் எரிச்சலை ஏற்படுத்தும் திரவம் தூவப்பட்டது என மாணவர்களிற்கு உதவிபுரிந்த ஆங்கில பேராசிரியர் ஒருவர் வோசிங்டன் போஸ்டிக்கு தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் குறித்தே எங்கள் கரிசனைகள் காணப்படுகின்றன மாணவர்கள் பாதுகாப்பாகயில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பல்கலைகழகத்தின் கொள்கைக்கு விரோதமாக கூடாரங்களை மாணவர்கள் அமைத்துள்ளனர் என மாணவர்களிற்கு தெரியப்படுத்தினோம் அவற்றை அகற்றுமாறு கேட்டுக்கொண்டோம் பொலிஸாரின் உதவியை நாடினோம் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் கடந்த வாரம் முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள்இடம்பெற்றுள்ளதுடன் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதை நிறுத்தவேண்டும் காசா யுத்தத்திற்கு ஆதரவாக செயற்படுவதை கைவிடவேண்டும் என கோரி பல்கலைகழக வளாகங்களில்  கூடாரங்களை  அமைத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/182734

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புறம் பாரிய அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை கொடுத்துக்கொண்டு மறுபுறம் பொதுமக்களை கொல்லவேண்டாம் என கண்துடைப்பு நாடகம் நடத்தும் அமெரிக்க அரசு எதற்காக பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறது என தெரியவில்லை இதே போலவே இலங்கையிலும் பொதுமக்கள் அழிவிற்குக்காரணமான ஆயுதங்களையும் பயிற்சிகளையும் இந்த தரப்புகளே வழங்கியது, இரஸ்சியாவுடனான யுத்தத்திற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இரஸ்சியாவினால் பாதிப்பு ஏற்படலாம் என நியாயம் கூறினால் இலங்கையிலும் பலஸ்தீனத்திலும் நிகழ்த்தபட்ட, நிகழ்த்தப்படுகின்ற படுகொலையினால் அமெரிக்காவிற்கு என்ன இலாபம் என்பது புரியவில்லை.

அமெரிக்கா புதிதாக உலகை அழிப்பதற்கு புதிய ஒரு திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதா? அல்லது அமெரிக்க உலக ஒழுங்கிற்கு வைரஸ் வந்துவிட்டதா?

உண்மையில் அமெரிக்க குடிமக்கள் தம் கண்ணுக்கு முன்னால் நிகழும் படுகொலைகளை கண்டும் காணாமல் இருக்கும் சிந்தனையற்றவர்களாக இருப்பார்களா? எனும் சந்தேகமாக இருக்கின்றது (அவர்களது வரிப்பணத்தில்தான் இந்த படுகொலைகள் நிகழ்கின்றது அதனால் அவர்களும் இதற்கு தார்மீக பொறுப்புள்ளவர்கள்).

குறைந்த பட்ச எதிர்ப்பாக இந்த இடது சாரி அரசினை வரும் தேர்தலில் தூக்கியெறியவேண்டும் அதையாவது செய்வார்களா? ஆனால் எந்த அரசு வந்தாலும் அவர்களது கொள்கைகளில் பெரிதாக மாற்றம் வராது ஏனெனில் எரியிற வீட்டில் பிடுங்குவதுதான் அவர்களது கொள்கை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அம்பிகா அன்ரி இலங்கை மனித உரிமை சபை ஆணையராக இருந்த போது என்ன பதிலை சொல்லியிருப்பாரோ அதுவே பதில். ரிட்டயர்மென்ட் கேசெல்லாம் கூத்தமைப்பு சீட்டுக்காக ஒரளவுக்கு மேல் துள்ளக்கூடாது
    • வடமாகாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான தெல்லிப்பளை யா/ மகாஜனாக் கல்லூரியின் மாணவனான சரவணபவன் தரம் பத்தில் கல்வி கற்கும் போதே மாணவர் அமைப்பில் இணைந்ததின் மூலம் தனது தாய்நாட்டுக்கான விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தான். பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில் தனது வகுப்பில் எப்போதும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று முதலாவது அல்லது இரண்டாவது தரநிலையைத் தட்டிச் செல்லுவான். கற்றல் செயற்பாடுகளில் மட்டுமல்ல விளையாட்டு ஓவியம் வரைதல் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினான். அத்துடன் முதலுதவிப் பயிற்சிகளும் பெற்று அவற்றிலும் சிறந்து விளங்கி எல்லாவற்றிலும் முன்னணி மாணவனாகத் திகழ்ந்தான்.   வீரவேங்கை சிந்து (சரவணபவன் ரகுநாதன்) உடுவில் சுன்னாகம். பிறந்த திகதி – 11.07.1974 வீரமரணம் – 25.02.1991. தாய் தந்தைக்கு குலம் தளைக்க வந்த ஒரேயொரு செல்வ மகனாக பிறந்து வளர்ந்த சரவணபவனின் குடும்பநிலையானது எந்தக் குறையுமற்ற நல்ல வசதிவாய்ப்பைக் கொண்ட பாரம்பரியமிக்கதாக அமைந்திருந்தது. தந்தையார் ரகுநாதன் அரசாங்க உதவி வைத்திய அதிகாரியாகவும் தாயார் அரசாங்க ஆசியராகவும் பணி புரிந்திருந்தனர். இவர்களது பணிகள் பெரும்பாலும் சிங்கள மொழி பேசும் மாகாணங்களிலேயே அமையப் பெற்றதனால் சரவணபவன் ஆண்டு 3 வரை தனது ஆரம்பக் கல்வியை சிங்கள மொழி பேசும் பிரதேசங்களிலேயே கற்க வேண்டிய தேவை இருந்திருந்தது. ஆனால் தமிழ் மீது பற்றுக் கொண்டிருந்த அவனது பெற்றோர் தமது ஒரேயொரு மகனின் பிரிவையும் பொறுத்துக் கொண்டு அவனது எதிர்கால தரமான கல்விக் கற்கை நெறிக்காக வலிகாமத்தில் யாழ். தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய சிறிய தாய், சிறிய தந்தையினரிடம் அனுப்பி வைத்தனர்.இதன் காரணத்தினால் தான் அவனுக்கு தெல்லிப்பளை மகாஜனா மாதாவிடம் கல்விகற்கும் சிறந்ததொரு சந்தர்ப்பம் அமைந்தது. 1987 இல் தியாகி திலீபனின் வரலாற்றுப் பதிவுத் தியாகம் அந்தச் சிறுவனின் மனதில் ஆழ வேரூன்றியதன் காரணமாக அவனது மனதில் புரட்சித்தீ கொழுந்து விட்டெரிந்தமை அப்போதே அவனது உரையாடல்கள் மூலம் இனங்காணக் கூடியதாக இருந்தது. 1989 இல் அவனது தந்தையார் இயற்கை மரணமெய்தினார். தாயாரும் சிங்களமொழி பேசும் பிரதேசத்தில் பணி புரிந்தமையினால் தந்தையை இழந்த நேரத்தின் பிறகும் அவனது தாயாருடன் ஒன்றாக வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் 1990 ஆம் ஆண்டு தை மாத முற்பகுதியில் வலிகாமம் இளவாலைப் பிரதேசத்தில் “ஐயன் முகாமில் ” தன்னை ஒரு முழுநேரப் புலிப் போராளியாக இணைக்கக் கோரிச் சென்று பின்னர் செம்மலை – நாயாறு பயிற்சிப் பாசறையில் ஆரம்பப் பயிற்சியைப் பெற்று “சிந்து” எனும் பெயருடன் தனது A. K 47 சுடுகலனை முதுகில் சுமந்தபடி பெருமிதத்துடன் தனது தாயாரைச் சந்தித்தான். துப்பாக்கியுடன் வந்த தனது செல்ல மகனைப் பார்த்து அரண்டு போன தாயிற்கு நம்பிக்கையையூட்டி அவரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டதுடன் தனது பாட்டனாரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டவன் மண்கிண்டி மலைச் சமர் போன்ற தான் பங்குபற்றிய சமர்களைப் பற்றி நகைச்சுவை கலந்த வீராப்புடன் எடுத்துக் கூறி தனது தாயினதும் மற்றைய உறவினர்களினதும் பயத்தினைப் போக்கினான். செம்மலைப் பாசறை வாழ்க்கையின் போது எமது விடுதலைப் போராட்ட அமைப்பின் கட்டளைப்படி மருத்துவப்பிரிவுடன் இணைந்து விழுப்புண்ணடைந்த, சுகவீனமுற்ற போராளிகளுக்காகக் காத்திரமான பணி புரிந்தான்.போர் முன்னரங்கப்பகுதிகளில் சுடுகலனை ஏந்தியபடி அந்த இளம் போராளி விழுப்புண்ணடைந்த போராளிகளை மிகவும் பாதுகாப்பாக மீட்டு மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சையளிப்பதில் தன்னையும் கவனியாது முன்னின்று உழைத்தான். எல்லாப் போராளிகளைப் போலவே அவனும் மற்றைய போராளிகளையும் தனது உடன்பிறப்புகள் போல கருதி தனக்கு தாயாரினால் வழங்கப்படும் அனைத்துப் பொருட்களையும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்வான்.அப்படி ஒரு சம்பவம் அவனது தாயாரினால் நினைவு கூரப்பட்டது. ஒருமுறை அவன் மட்டுவில் பகுதியிலுள்ள மருத்துவப்பிரிவு முகாமில் பணி புரிந்து கொண்டிருந்தபோது தாயாரினை வந்து சந்தித்து விட்டுப் போகும் போது அவனது தாயாரிடம் கேட்டு தனது முகாமிலுள்ள அனைத்துப் போராளிகளுக்கும் தாராளமான அளவுக்கு போதுமான உணவுப்பொருட்களை அவரைக் கொண்டு தயாரித்துக் கொண்டதுடன் அப்போது காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணத்தினால் போராளிகளுக்கு தலைக்கு வைப்பதற்கு எண்ணெய் போதுமான அளவு வழங்கப்படாத காரணத்தினால் தனது தாயாரிடம் கேட்டு அனைத்துப் போராளிகளுக்கும் போதுமான அளவுக்கு நல்லெண்ணெயையும் வாங்குவித்து அனைவருக்கும் வழங்கினான். விழுப்புண்ணடைந்த போராளிகளை ஒரு தாயைப் போன்ற மகிழ்வுடன் தலைக்கு எண்ணெய் தேய்த்து முழுகச் செய்து உணவூட்டுவான். மானிடர்கள் அந்த இளம் போராளியிடமிருந்து தான் பாச உணர்வைக் கற்றுக் கொள்ள வேண்டும். அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக விளங்கிய மேஜர் செங்கதிர், டொமினிக் அண்ணா, ஜவான் அண்ணா , மூர்த்தி மாஸ்டர், தயா மாஸ்டர் போன்ற தளபதிகள், பொறுப்பாளர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய செல்லப்பிள்ளையாக விளங்கினான். அவனது கல்வித்திறமையைக் கவனித்த அவர்கள் அவனைக் கல்வி கற்பிப்பதற்கு முயன்றும் அவன் அதனைத் தவிர்த்து போர் முன்னரங்கப் பகுதிகளில் பணியாற்றுவதிலேயே முனைப்பாக நின்றான். அவனது களப்போராட்டப் பணியில் முக்கியமானது யாழ் கோட்டை விடுவிப்புச் சமர். அங்கு போர் முன்னரங்கப்பகுதியில் தன்னுயிரையும் பாராது எதிரியை எதிர்த்து ஓர்மத்துடன் சமராடியபடியே விழுப்புண்ணடைந்த போராளிகளையும் பாதுகாப்பாக மீட்டெடுத்து மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்று காப்பாற்றி தன் பணியினைக் காத்திரமாக ஆற்றியிருந்தான் சிந்து. தன் சகபோராளிகளில் பேரன்பைக் கொண்டிருந்த சிந்து மக்களுடன் பழகுவதிலும் மிகவும் கண்ணியமானவனாகவும் ஆளுமையுடயவனாகவும் பொறுப்பாளர்களினால் இனங் காணப்பட்டான். இதன் காரணத்தினால் 1991 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அரசியல் பரப்புரைக்காக மாவீரர் மேஜர் செங்கதிர் அவர்களுக்கு உதவியாளனாக எமது அமைப்பால் வன்னிப்பகுதிக்கு அனுப்பப்பட்டான். அங்கு செல்ல முதல் தனது தாயாரிடமும் பாட்டனாரிடமும் சென்று ஆசீர்வாதம் பெற்று பிரியாவிடை பெற்றுக் கொண்டான்.அப்போது அவனும் அறிந்திருக்கவில்லை தனது தாயாரையும் பாட்டனாரையும் சந்திப்பது இதுவே இறுதித் தடவை என்பதை… அவனது தாயாரும் அறிந்திருக்கவில்லை தனக்கென்றிருந்த ஒரேயொரு உயிர் சொத்தான ஆருயிர் மகனைக் காண்பது இதுவே இறுதி என்பதை…. வன்னிப் பகுதிக்குச் சென்ற சிந்து மேஜர் செங்கதிருடன் அரசியல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கு பற்றி மக்களுக்கு எமது போராட்டத்தின் உண்மைத் தன்மையையும் முக்கியத்துவத்தையும் அழகுற எடுத்துக் கூறி மக்களின் மனங்களில் எமது போராட்டம் பற்றிய தெளிவை உணர வைப்பதில் பெரும் பணியாற்றினான். பின்பு எமது அமைப்பினால் மேஜர் செங்கதிரையும் அவனையும் மீண்டும் யாழ் நோக்கி வருமாறு பணிக்கப்பட்டதற்கு அமைவாக யாழ் நோக்கி தாண்டிக்குளம், ஓமந்தைப் பகுதிகளினூடாக உந்துருளியில் இரவுப் பயணத்தை மேற்கொண்டான். மீண்டும் தனது தாய், பாட்டனாரையும் சக போராளிகளையும் சந்திப்பதில் பெருமகிழ்வு கொண்டு உற்சாகத்துடன் புறப்பட்ட சிந்து அங்கு தனது உயிருக்கு பேராபத்து காத்திருப்பதை உணரவில்லை. தனது பொறுப்பாளரான மேஜர் செங்கதிரை பாதுகாப்பாக கொண்டு வருவதில் முழுக் கவனத்தையும் செலுத்தியபடி சிந்து மன்னார் கல்மடு காட்டுப் பகுதியில் கும்மிருட்டில் அஞ்சாது தனது உந்துருளியை செலுத்திக் கொண்டிருந்தான். இருட்டிலே காட்டுப் பாதையிலே யாழ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது இராணுவத்தினரின் திடீர் வழி மறிப்புத் தாக்குதலுக்கு உள்ளாகி தீரமுடன் போராடி தாம் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற எமது அமைப்பின் கொள்கைப்படி சயனைட் மருந்தினை அருந்தி சிந்துவும் அவனது பொறுப்பாளரான மேஜர் செங்கதிரும் வீரமரணத்தினைத் தழுவிக் கொண்டார்கள் . அவர்களது வித்துடலும் கிடைக்கப்படவில்லை. சிறிலங்கா இனத்துவேச இராணுவத்தினால் அவர்களது வித்துடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன. சிந்துவினது விடுதலைப் போராட்ட வீரவரலாறு விடைகாணா விடுகதையானது. இந்த இளம் புலிவீரன் சிந்து தனது இளம் வயதிலேயே தனது தாய் நாட்டிற்காக தன் இன்னுயிரீந்து கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் ” நினைவுக்கல் 500 ” இல் வீரவேங்கை சிந்துவாக தன்னைப் பதிவு செய்து கொண்டு எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரவரலாறு ஆகினான். தாய் நாட்டுக்காக தனது ஒரேயொரு தனயனையீந்த அவனது தாயாரும் தற்போது தனிமரமாக தனது வீர மைந்தனின் நினைவுகளைச் சுமந்தபடி ஒரு வீரத்தாயாக தனது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் தாயைப் போன்ற எத்தனையோ வீரத்தாய்கள் எமது போராட்ட வரலாற்றில் தமது வரலாற்றைப் பதித்துச் சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. -நிலாதமிழ். குறிப்பு :- இவ் நினைவுப் பகிர்வுக்கு நினைவுக் குறிப்புகளைத் தந்து உதவியவர் வீரவேங்கை சிந்துவின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.   https://eelamhouse.com/?p=2868
    • செல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன் போர் உச்சம் பெற்றிருந்த நேரம், 1989களில் என்று நினைக்கின்றேன், லெப். கேணல். சூட்டண்ணையால், மிகவும் நெருக்கடியான நேரத்தில் அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டார். நான் சந்திக்கும் போது போராளிக்குரிய எந்த சாயலும் இல்லாது சாதாரணமாக இருந்தார். அந்த நேரத்தில் யாழ் நகரை கலக்கிய போராளிகளான சூட்டண்ணை, யவானண்ணை போன்றவர்களுடன் குமாருக்கும் முக்கிய பங்குண்டு. இவர்கள் இந்திய இராணுவத்தை நித்திரை கொள்ளவிடாமல் செய்தவர்களில் முக்கியமானவர்கள். இந்திய இராணுவம் தோல்விகளுடன் வெளியேறி சென்றபின் புதிதாக பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறை மீள் உருவாக்கம் பெற்றபோது குமாரும் அதனுள் உள்வாங்கப்பட்டார். ஆரம்பகாலங்களில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய துரோகிகளைக் களை எடுப்பதில் முக்கிய பங்காற்றினார். காலில் பல தடவைகள் செருப்பும் இல்லாது தான் குமாரைக் காணமுடியும். குமாரே சத்தியம் பண்ணி, தான் ஒரு போராளி என்று கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அவனது தோற்றம் அப்படித்தான் இருக்கும். மிக எளிமையான உடை அலங்காரத்துடன் யாழ் நகர வீதிகளில் எந்த நேரமும் காணமுடியும். 1991ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பணிக்காக அனுப்பப்பட்டிருந்தான். அங்கு சென்று சிறிது காலத்தில் அங்கு நடந்த குண்டு வெடிப்பொன்றின் காரணமாக தமிழ்நாட்டில் தங்கி இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த எல்லாப் பிரிவுப் போராளிகளும் IB யால் இலக்கு வைக்கப்பட்டு, கைது செய்ய முற்படும் போது ஒரு சில போராளிகளைத் தவிர, யுத்தகளத்தில் படுகாயமடைந்து, மருத்துவத்திற்காக தங்கி இருந்த போராளிகள் உட்பட அனைவரும் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தனர். எப்படியோ IB இன் கண்களில் மண்ணைத் தூவி குமாருடன் தொலைத்தொடர்பைச் சேர்ந்த போராளியும், இன்னுமொரு போராளியுமாக மூவரும் கரையில் புலிகளின் படகுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்காக யாரும் வரவில்லை இவர்களுக்கு உதவி செய்யவும் தமிழ்நாட்டு மக்களும் பின்வாங்கிய நேரம். அப்போது இவர்களுக்கும் குப்பியைக் கடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த முடிவுக்கு குமாரை தவிர மற்ற இரு போராளிகளும் வந்திருந்தனர். அப்போது குமார், சாவது பிரச்சனை இல்லை அதற்கு முன் தப்புவதற்கு முயற்சி செய்வோம் முடியாவிட்டால் குப்பியைக் கடிப்போம் என்று முடிவெடுத்து அன்று இருட்டிய பின் கரையில் இருந்த சிறு தோணி ஒன்றில் தங்கள் கைகளையும், துடுப்பையும் நம்பி, நம்பிக்கையுடன் தாயகம் நோக்கி புறப்பட்டார்கள். அந்த நேரத்தில் இயற்கை இவர்களுக்கு சாதகமாக காற்றும் அடுத்தமையால், தங்கள் சாரம் (லுங்கி) கொண்டு தற்காலிக பாய்மரம் ஒன்றை உருவாக்கி இருவர் அதை பிடிக்க ஒருவர் துடுப்பு பிடிக்கத் தோணி வேகமெடுத்தது. இப்படியே பாய்மரமும், துடுப்பும் போட்டு மூன்று நாட்கள் உணவும் இல்லாது கொண்டு வந்த 5L நீரும் தீர்ந்து போக அரை மயக்கத்தில் கடல்தொழிலில் ஈடுபட்டிருந்த எம் மக்களால் கரை சேர்க்கப்பட்டார்கள். அன்று குமாரின் நம்பிக்கை மூன்று போராளிகளின் உயிரைத் காத்தது. அதன் பின்னரான காலங்களில் யாழில் இருந்தபடி தனது புலனாய்வு வேலைகளை விஸ்தரித்து தனது நேரடி வழிநடத்தலில் கொழும்பில் சில தாக்குதலும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். எப்போதும் போராளிகளுடன் மென்மையான போக்கையே கையாளும் குமார் தட்டிக் கொடுத்து வேலைவாங்குவதில் கெட்டிக்காரன். ஓய்வுறக்கமின்றி சுழன்ற போராளி. சிறிது காலம் சாள்சுக்கு (கேணல்.சாள்ஸ்) அடுத்த நிலையிலும், இறுதிக்கலாங்களில் தனி நிர்வாகம் ஒன்றை பொறுப்பெடுத்து செய்த சிறந்த நிர்வாகி. 12/01/1998 அன்று குமாரின் குழந்தையின் 31 விழாவிற்கான ஆயத்தங்கள் வீட்டில் நடந்து கொண்டிருந்த போதும், இலக்கொன்றை அழிப்பதற்கு, குண்டு ஒன்றை அனுப்புவதற்கான ஆயத்தங்களின் இறுதிக் கட்டம், கடமை தான் முக்கியமாக கருதிய அந்த போராளி அந்தக் குண்டை கொண்டு செல்லும் போது தவறுதலாக அது வெடித்து வீரச்சாவைத் தழுவியிருந்தார். இந்த செய்தியை நான் செய்தி. ஊடகங்கள் ஊடக அறிந்த போது அதிர்ந்துதான் போனேன். நான் ஊர் வரும் போதெல்லாம் எனக்காக காத்திருந்த நல்ல நட்பு பாதியிலேயே போய்விட்டது. மிகவும் திறமை மிக்க போராளி ஒருவனை எம் தேசம் அன்று இழந்தது..!! – நினைவுகளுடன் ஈழத்து துரோணர்..!!!   https://eelamhouse.com/?p=2760
    • சுகந்திரபுரம் சுடுகாடாய் எரிந்து கொண்டிருந்தது எறிகணைகள் கண் மூடித்தனமாக விழுந்து வெடித்தது. எரிபொருள் களஞ்சியங்கள் தீப்பற்றி எரிந்தது.அங்கு இயங்கிய எமது தற்காலிக மருத்துவ மனையும் இடம்பெயர்ந்து போவதற்காகன ஆயத்தங்கள் நடந்தன. எனது குழந்தைகள் எனது அப்பாவுடனும் எனது மாமாவின் வீட்டாரின்(மேஜர் அரி மாறனின் தாய் தந்தையுடன்) பாதுகாப்பிலும் இருக்கின்றனர். நானும் அங்கு செல்கின்றேன் சுகந்திர புரம் பிரதான வீதி. பகுதியில் இருந்து சற்று உள்நோக்கி இருந்த எமது இருப்பிடத்தில் பிரசன்னா அண்ணாவின் மனைவியும் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். தொடர் இடப்பெயர்வுகளால் அந்த காணியில் தறப்பாள் கொட்டில்களைப் போட்டுக் கொண்டிருந்த 10 மேற்பட்ட குடும்பங்கள் அரையும் குறையுமா தறப்பாள் கொட்டில்களை பிடுங்கி இடம்மாறிவிட்டதால் அரை நாள் பொழுதில் இடம் காலியாகியது. மக்கள் வள்ளிபுனம் பகுதியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள் நாங்கள் குழந்தைகளை வங்கருக்குள் இருத்தி விட்டு வாசலில் இருக்கின்றோம் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க்க தொடங்க இனி இருக்க முடியாது ஆமி கிட்ட வந்திட்டான் என்று ஊகிக்க முடிந்தாலும் தொடர்ந்து விழுந்து கொண்டே யிருந்த எறிகைணகள் வெளியில் குழந்தைகளை அழைக்க அச்சமூட்டியது. ஆளையாள் தெரியாத மம்மல் இருட்டில் எங்கு பார்த்தாலும் தீ பற்றி எரிந்து கொண்டேயிருந்தது. அப்போது தோளில் தொங்கும் துப்பாக்கியுடன் எங்கள் முன் பிரசன்னா அண்ணா வந்து நின்றார் பிரசன்னா அண்ணா வின் குழந்தைகள் அவரின் குரலைக்கேட்டு “அப்பா என்றார்கள் குதுகலமாய். வங்கருக்க இருங்க” வரவேண்டாம் என்றார் . அவரது மனைவி எதுவும் பேசாது மெளனமாய் இருந்தார். நானும் அப்படியே அவரையே பார்த்தேன் எதையாவது களநிலை சொல்வார் என்று .. ஆனால் அவரிடம் சொல்வதற்கு அன்று நல்ல செய்தியில்லை…. “நின்ற நிலையிலையே கண்கள் கொப்பளிக்க ஏன் இன்னும் இருக்கிறிங்கள் வெளிக்கிட்டு போங்கோ என்றார். “ஆமி கிட்ட நிக்கிறான்”       இன்னும் ஒன்றையும் எனக்கும் அவரது மனைவிக்கும் தெளிவாக சொன்னார். “ஆமியிட்ட மட்டும் பிடிபட்டிராதையுங்கோ ஆமி யை கண்டாலும் ஓடுங்கோ” என்று அவசரமாக சொல்லிவிட்டு தன் கடமைக்கு திரும்பிவிட்டார் நாங்களும் உடனடியாக கால்கள் போன திசையில் குழந்தைகளுடன் அவ்விடத்தைவிட்டு நடந்தோம். இது தான் நான் அவரைப்பார்த்த இறுதி நாளும் குரலும் இன்னும் அப்படியே ஈரமாய் அப்பிக் கிடக்கிறது பிரசன்னா அண்ணா ஒரு உறவினராக இருந்தாலும் போராட்ட களங்களில் தான் நான் அதிகமாக அறிந்திருக்கின்றேன் அடிக்கடி அவரை சந்தித்துக் கொள்வது நான் வேலை செய்த மருத்துவமனையிலும் மாவீர்துயிலும் இல்லத்திலும் தான் அதை விட களமுனையிலும் அவரது திறமைகளை பார்த்து வியந்திருக்கின்றேன். ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும் வன்னேரியில் இயங்கிய நீலன் மருத்துவமனைக்கு அவரினது துறை சேர்ந்த காயமடைந்திருந்த போராளி ஒருவரை சந்திக்கவந்திருந்தார். அப்போது இரவு காயமடைந்து வந்த போராளிக்கு 0_ மைனஸ் குருதிவகை தேவைப்பட்டது . எங்களிடம் வாகன வசதியும் இருக்கவில்லை எங்களிடம் இருந்த இரு குருதி பைகளும் ஏற்றி முடிவதற்குள் இன்னுமொன்று வேணும் என்ன செய்வது என்று ஒவ்வொருவராகா தேடிக்கொண்டிருந்தேன் கடவுளைப்போல் பிரசன்னா அண்ணா வந்து இறங்கினார் ஓடிப்போய் நிலமை சொல்லி உதவிகேட்டேன் .பதில் கூட சொல்லாமல நின்ற இடத்திலிருந்து அண்மையில் இருந்த அவரது முகாங்களிற்கு தொடர்பு கொண்டு 0 மைனஸ் குருதியிருக்கிறார்களா என்று கேட்டு ஒருவர் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியபின் என்னிடம் வந்து சொன்னார் .(போராளிகளிற்கு முன்னரே குருதிவகை தெரியும்) “நான் ஒரு ஒருவரை கொண்டுவாறன்” என்று வந்த வேலையை விட்டு திரும்பி சென்று அந்த போராளியை அழைத்து வந்தார் இது அவரது பணி இல்லாவிட்டாலும் ஒவ்வொரு போராளின் உயிரின் பெறுமதி அறிந்தவர்.இப்படி காலம் தேவை அறிந்து பணி செய்பவன் போராளியாக தனித்துவம் அடைகின்றான். பல தடவைகள் விழுப்புண்ணடைந்து மீளக் களம் சென்ற வீரன். நெடிய உயரிய தோற்றமும் எப்போதும் குறு குறு என விழித்திருக்கும் புலணாய்வு கண்களும் தனியாக கம்பீரம் கொடுக்கும் . எப்போதும் மரணத்திற்குள் வாழ்ந்தவன் மரணம் அவனைக் கண்டு அஞ்சிய நாட்கள் பல உண்டு . எப்போதும் எதையோ சாதிக்க துடிப்பவன் பல்துறை ஆளுமையாளன் போர்கலையில் மட்டுமன்று விளையாட்டிலும் சிறந்த வீரன். இவனைப்பற்றி வெளியில் தெரியாத பக்கங்கள் பல உள்ளன. இவனின் இலட்சிய உறுதியின் சாட்சியாய் எமது தேசத்தையும் மக்களையும் காக்க முள்ளிவாய்க்காலில் காவியமானான் இன்னும் தொடரும் நினைவுகள் …. மிதயா கானவி 17.05.20   https://eelamhouse.com/?p=2662
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.