Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனிமேல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகர வீதி சமிஞ்சைகளுக்கருகில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1000215521.jpg

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் பெறுவோருக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

 
 
 
அதன்படி, யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
 
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடையில் பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 

யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம்

2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில், கொழும்பில் போக்குவரத்து விளக்குகளில் உள்ள யாசகர்களின் அச்சுறுத்தலான செயற்பாடு தாக்கம் செலுத்தியதாக இலங்கை ஆட்டோமொபைல் சங்கத்தின் செயலாளர் தேவப்பிரிய ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், 2015 இல் கொழும்பில் SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டுடன் தொடர்புடைய ஆசிய பசுபிக் பிராந்திய II கூட்டத்தை இலங்கை நடத்தியது, இதில் 150 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சர்வதேச வாகன உச்சி மாநாடு

2025 ஆம் ஆண்டு SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை நடத்துவதற்கான முயற்சியை இலங்கை சமர்ப்பித்த பொதுக் கூட்டம் ருவாண்டாவில் இடம்பெற்றது.

யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம் | Intl Summit Avoids Sri Lanka Due To Beggar

 

கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள போக்குவரத்து விளக்குகளில் யாசகம் பெறுபவர்கள் கொழும்பில் பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது விரும்பத்தகாத அனுபவங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துவதை அவதானித்ததாக அவர் கூறினார்.

ஏலத்தில் வெற்றி பெற்றால், இந்நிகழ்வுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பிரதிநிதிகள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, நாட்டிற்கு கணிசமான வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித்தரும்.

 

 

எவ்வாறாயினும், கொழும்பு நகர எல்லைக்குள் போக்குவரத்து விளக்குகளில் யாசகர்களின் அச்சுறுத்தல் காரணமாக SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த முடியாது என ருவாண்டாவில் நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் பெறப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நற்பெயருக்குக் களங்கம்

மேலும், நகர எல்லைக்குள் யாசகம் பெறுபவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது நமது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.

யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம் | Intl Summit Avoids Sri Lanka Due To Beggar

எனவே, 2025 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வாகனத் தொழிற்துறை கூட்டத்தை இலங்கை நடத்த விரும்பினால், கொழும்பில் இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்கள் எங்களை வலியுறுத்தினர்.

ஏப்ரல் 2023 இல், திட்டங்கள் வகுக்கப்பட்டன, மேலும் சிக்கலைச் சமாளிக்க ஒரு மூலோபாயக் குழு நிறுவப்பட்டது.

 

 

இறுதியில், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைபடுத்த தீர்மானிக்கப்பட்டது.

மேலும் கொழும்பு நகர எல்லைக்குள் போக்குவரத்து விளக்குகளில் யாசகம் பெறுபவர்களுக்கு எந்த உதவியும் வழங்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியுள்ளார்.

https://tamilwin.com/article/intl-summit-avoids-sri-lanka-due-to-beggar-1714443745

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1661580442-yasaham-2-650x375.jpg

யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு அபராதம்!

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில், இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடையில் பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

https://athavannews.com/2024/1380319

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் மட்டும் பிச்சை எடுக்கலாம். 😂
பிச்சைக்காரன் பிச்சை எடுத்தால்... அரசாங்கத்துக்கு ரோசம் வந்திட்டுது. 🤣

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அரசாங்கம் மட்டும் பிச்சை எடுக்கலாம். 😂
பிச்சைக்காரன் பிச்சை எடுத்தால்... அரசாங்கத்துக்கு ரோசம் வந்திட்டுது. 🤣

அருமையான ஜோக்🤣.

தனியே செய்தால் கொலை, ஊரே திரண்டு செய்தால் கலவரம் - அதே லொஜிக்தான் போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அருமையான ஜோக்🤣.

தனியே செய்தால் கொலை, ஊரே திரண்டு செய்தால் கலவரம் - அதே லொஜிக்தான் போலும்.

தனக்கொரு நீதியும், மற்றவனுக்கு ஒரு நீதியும் வைத்திருக்கின்ற  வினோதமான உலகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அருமையான ஜோக்🤣.

தனியே செய்தால் கொலை, ஊரே திரண்டு செய்தால் கலவரம் - அதே லொஜிக்தான் போலும்.

குஜராத்தில் மோடி சொன்ன மாதிரி இருக்கே?

பொலிசாரே உருமறைத்து வந்து சந்தியில் நின்று அரசுக்கு பெரும் வருமானம் ஈட்டப் போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

பொலிசாரே உருமறைத்து வந்து சந்தியில் நின்று அரசுக்கு பெரும் வருமானம் ஈட்டப் போகிறார்கள்.

அரசுக்கா….கோர்ட்டுக்கு இழு பட்டு 1000 கட்டபோறியா, பையில அதே 1000 ரூபாயை போடுங்க என்பதே அவர்கள் டீல்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிக்னல் லைட்டுக்கு பக்கத்திலை நிண்டுதானே பிச்சை எடுக்க வேண்டாம் எண்டு சொல்லீனம்.
மற்றும் படி பிச்சை எடுக்க அரசாங்கம் தடை போடேல்லை எல்லோ?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

அரசுக்கா….கோர்ட்டுக்கு இழு பட்டு 1000 கட்டபோறியா, பையில அதே 1000 ரூபாயை போடுங்க என்பதே அவர்கள் டீல்🤣

இப்ப கமரா பூட்டி இருக்காமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இப்ப கமரா பூட்டி இருக்காமே?

அதையெல்லாம் வாங்குவோர், கொடுப்போர் “நேக்கா” டீல் பண்ணுவார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

அரசாங்கம் மட்டும் பிச்சை எடுக்கலாம். 😂
பிச்சைக்காரன் பிச்சை எடுத்தால்... அரசாங்கத்துக்கு ரோசம் வந்திட்டுது. 🤣

இருக்கலாம்,.அரசாங்கம் தெருக்களிலும். மின்கம்பங்களுக்கு அருகில்   சிக்கினாலுக்கு அண்மையில். பிச்சை எடுக்கவில்லை   மாளிகையிலிருந்து  கடிதம் மற்றும் தொலைபேசி வயிலாகப் பிச்சை எடுக்கிறார்கள்  இது கௌரவமான  பிச்சை எடுப்பு   மக்களும் இதே முறையை பின் பற்றினால்  பிரச்சனையில்லை 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை செய்த ஒரு அரசு இப்போது ஒரு வர்க்கப்படுகொலை செய்கிறது, திடீரென இவ்வாறான அறிவுறுத்தல் மூலம் அம்மக்களுக்கு எந்த மாற்றீடு செய்யாமல் ஏற்கனவே நடுத்தெருவில் உள்ள மக்களை மீண்டும் மோசமான நடுத்தெருவில் விடுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில், இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடையில் பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஏற்கெனவே போலீஸ் நிலையங்களில் இந்தப் பிச்சைக்காரர்களின் தொல்லை தாங்க முடியவில்லை, இனி வீதியிலுமா? இல்லாதவன் பிச்சை எடுத்தால் அவமானம், அரசு பிச்சை எடுத்தால் அதற்கு என்ன பெயர்? இது மட்டுமல்ல உறவுகளை தொலைத்து வீதியில் அலையும் பெற்றோர் இவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை, அதையும் காட்டி இலங்கையின் கோரமுகத்தை எல்லோரும் பேசச்செய்ய வேண்டும். மக்களை பிச்சை எடுக்க வைக்கும் அரசாங்கம் அதை நிவர்த்தி செய்யாமல் மறைத்து கனவான் பெயரெடுக்க முயற்சிக்கிறது. இது பெரிய ராஜதந்திரம்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இனப்படுகொலை செய்த ஒரு அரசு இப்போது ஒரு வர்க்கப்படுகொலை செய்கிறது, திடீரென இவ்வாறான அறிவுறுத்தல் மூலம் அம்மக்களுக்கு எந்த மாற்றீடு செய்யாமல் ஏற்கனவே நடுத்தெருவில் உள்ள மக்களை மீண்டும் மோசமான நடுத்தெருவில் விடுகின்றனர்.

அடுத்தது என்ன களவு தான்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காட்டுவாசிகள் என்று தவறுதலாக வாசித்துவிட்டேன்.  😁
    • இது விளையாட்டுத் திரி. வெறுப்பே வரக் கூடாது.    
    • தமிழர்களுக்குத் தனிநாடு உருவாவதை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இன்னும் சொல்வதானால், சமஷ்ட்டி முறையிலான தீர்வையோ அல்லது இந்திய மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரத்தினை ஒத்த தீர்வையோ ரஜீவ் காந்தி தமிழர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கவில்லை. இதனை நேரடியாகவே போராளிகள் தலைவர்களான பிரபாகரன், சிறீ, பத்மநாபா மற்றும் பாலக்குமார் ஆகியோரிடம் 1985 ஆம் ஆண்டு ரஜீவ் தெரிவித்திருந்தார். மேலும், ஜெயாரினால் 1984 ஆம் ஆண்டு மார்கழியில் நடத்தி முடிக்கப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபையினையே, சற்றுத் திருத்தங்களுடன் அதிகாரப் பரவலாக்க அலகாக ஏற்றுக்கொள்ள ரஜீவ் சம்மதித்தார். .  தனது புகழ்ச்சிக்காகவும், இந்தியாவை பிராந்திய வல்லரசு எனும் தரத்திற்கு உயர்த்துவதற்காகவும் ரஜீவினால் நடத்தப்பட்ட திம்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கின்றதோ இல்லையோ, ஆனால் இந்தியா தலைமையில் பேச்சுக்கள் நடந்தன என்று சரித்திரம் எழுதப்படுவது ரஜீவிற்கு முக்கியமானதாக இருந்தது.  தமிழருக்கு ஏதாவது கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியாவிற்குக் கரிசணை இருந்தது உண்மை. ஆனால், அது தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யவேண்டுமா என்பதில் இந்தியாவிற்கு உறுதியான நிலைப்பாடு இருக்கவில்லை.  1987 இல் இந்திய அமைதிப்படை வந்ததே ஜெயாரின் வேண்டுகோளினால் எனும்போது, அது தமிழர்களுக்குச் சார்பாக இயங்கும் என்று எதிர்பார்த்தது எமது மடமை.  2015 அல்லது 2016 ஆக இருக்கலாம், அவுஸ்த்திரேலியாவின் பேர்த்த் நகரில் இந்தியாவின் முன்னாள் புலநாய்வுத்துறையின் இயக்குநரும் இன்னும் சில முக்கியஸ்த்தர்களும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் சிலரைச் சந்தித்தார்கள். இறுதி யுத்தத்தில் புலிகளை இந்தியா அழிக்க முடிவெடுத்ததன் நோக்கம் அனைவரும் எண்ணியிருந்த ரஜீவின் கொலையினைக் காட்டிலும், 1987 இல் இந்தியப்படையினை புலிகள் எதிர்க்க எடுத்த முடிவுதான் என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. பிராந்திய வல்லரசும், உலகின் ஐந்தாவது பெரிய இராணுவத்தைக் கொண்டதுமான இந்தியாவை சிறிய ஆயுத அமைப்பான புலிகள் இயக்கம் எதிர்த்துப் போரிட  முடிவெடுத்தமை இந்தியாவைப் பொறுத்தவரை பெருத்த அவமானமாகக் கருதப்பட்டது. 1991 இல் ரஜீவ் கொல்லப்பட்டாலென்ன, உயிர் தப்பியிருந்தாலென்ன, இந்தியா புலிகளைப் பழிவாங்க 1987 இலேயே முடிவெடுத்து விட்டது என்று நினைக்கிறேன்.  2005 இல் இந்திய காங்கிரஸின் தலைவியாக சோனியா வந்தமையும், இலங்கையில் மகிந்த ஆட்சிக்கு வந்தமையும் இரு நாடுகளுக்கும் சாதகமான சூழ்நிலையினை உருவாக்கிக் கொடுக்க, இந்தியா தனது சபதத்தை நிறைவேற்றிக்கொண்டது. 
    • யோவ் பெரிசு....😄 சிவனே எண்டு தனிய நிண்டு தேத்தண்ணி ஆத்திக்கொண்டிருக்கிறன்.... அந்த பெயரை சொல்லி வெறுப்பு ஏத்தாதை ஐயா....😂
    • ரஸ்ஸியா அண்மையில் ஆரம்பித்திருக்கும் இராணுவ நடவடிக்கையில் குறைந்தது 60 உக்ரேனியக் கிராமங்களைக் கைப்பற்றியிருக்கிறது. மேற்குலக நாடுகளின் உதவியிருந்தாலும் கூட உக்ரேனினால் ஓரளவு காலத்திற்கு மேல் இந்த யுத்தத்தில் தாக்குப்பிடிக்க முடியாது. களத்தில் நேரடியாக தமது இராணுவத்தினரை இறக்கி ரஸ்ஸியாவுடன் நேரடி மோதல் ஒன்றிற்குச் செல்லும் நோக்கம் மேற்கிற்கு இல்லை.  மறுபக்கம், ரஸ்ஸியா என்ன வில கொடுத்தாவது இந்த யுத்தத்தில் தான் தோற்பதைத் தடுத்தே தீரும். ரஸ்ஸிய இராணுவத்தில் இணைந்து போராட இந்தியா, நேபாளம், பெலரஸ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து முன்னாள் , இந்நாள் இராணுவ வீரர்கள் வந்து குவிகிறார்கள். இவர்களுக்கு ரஸ்ஸிய இராணுவ வீரர் ஒருவருக்கு ஒப்பான  மாதச் சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது. உக்ரேன் இராணுவத்தில் சம்பளத்திற்குச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இருப்பதாக நான் அறியவில்லை, சில இலங்கையர்களைத் தவிர.  தேவையற்ற, அநியாய, அழிவு யுத்தம். இரு தரப்பும் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்து முடிவிற்குக் கொண்டுவருவது அவசியம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.