Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!

adminMay 12, 2024
02-2-1170x871.jpeg

பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (12.05.24)  காலை சிவசேனையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், நாக விகாரை விகாராதிபதி, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் உள்ளிட்டவர்களுடன் சிவசேனை அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

02-4-800x596.jpeg

https://globaltamilnews.net/2024/202755/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, கிருபன் said:

சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன்

முதலில் இந்தக் கைக்கூலியான சிவசேனை மாட்டை ஒழிப்பவற்கே எனது வாக்கு.

  • Like 2
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிவசேனையின் கூட்டைக் கவனிக்கவும் ; 

மறவன்புலவு சச்சிதானந்தன், நாக விகாரை விகாராதிபதி, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தான தலைவர் கலாநிதிஆறுதிருமுருகன். 

🤣

கழுவுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனி ஒரு மனிதனுக்கு மாட்டு கொத்து இல்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்!

இவ்வண்,

உடான்ஸ் சாமியார்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

பிஸ்டேக் & மாட்டுகொத்து நுகர்வோர் பேரவை

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, கிருபன் said:

பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

large.IMG_6472.jpeg.0761dfe70e0175b6b177

  • Like 4
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kapithan said:

சிவசேனையின் கூட்டைக் கவனிக்கவும் ; 

மறவன்புலவு சச்சிதானந்தன், நாக விகாரை விகாராதிபதி, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தான தலைவர் கலாநிதிஆறுதிருமுருகன். 

🤣

கழுவுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? 

இவர்கள் கழுவுகிறார்கள் கத்துகிறார்கள்.

சத்தமே இல்லாமல் கறையான் புத்தெடுத்த மாதிரி அலேலூயா ரொம்பவும் அரித்துக் கொண்டே போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் கழுவுகிறார்கள் கத்துகிறார்கள்.

சத்தமே இல்லாமல் கறையான் புத்தெடுத்த மாதிரி அலேலூயா ரொம்பவும் அரித்துக் கொண்டே போய்விட்டது.

மாட்டிறைச்சியை உண்ணாவிட்டால் சைவ சமயம் பாதுகாக்கப்படுமா? 

மாட்டிறைச்சிக்கெதிராக போராடுவதற்குப் பதிலாக சைவ மறுமலர்ச்சிக்காக உழைத்தால் சைவமும் தழைத்தோங்கும் கறையானும் புற்றெடுக்காது. 

ஆனால் அவர்களின் நோக்கம் சைவ சமயத்தைப் பாதுகாப்பதில்லையே. தாழ்வுச் சிக்கலால் பாதிக்கிப்பட்டு கிறீத்துவர்களுக்கு  எதிராக வன்மத்தைக் கொட்டுகிறார்கள். 

புத்திசாலிகள் சைவ மறுமலர்ச்சிக்காத்தான் உழைப்பார்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலக பொதுமறை திருக்குறள் புலால் மறுத்தல் பற்றி பேசுகின்றது. பசுவதை தவிர்க்கப்படல் வேண்டும் என்பது ஒரு புதிய சிந்தனை அல்ல. 

அதேசமயம் நடைமுறை உலக ஒழுங்கில் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் மாட்டிறைச்சியின் பங்கு முக்கியமானது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நியாயம் said:

அதேசமயம் நடைமுறை உலக ஒழுங்கில் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் மாட்டிறைச்சியின் பங்கு முக்கியமானது. 

அதே போன்று  பூயின் சுற்று புற சூழல் மாசு அடைவதற்கும் மாட்டு இறைச்சியின் பங்கு மற்றய  மரக்கறி உணவுகள்  மற்றய இறைச்சிகளை விடவும் மிகவும் அதிகமானது. சிவசேனை மாட்டு இறைச்சியை எதிர்ப்பதால்  இப்படி பார்க்கபடுகின்றது.எனக்கு தெரிந்த வேறு இனத்தவர்கள் மரகறி இறைச்சி பாவிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதே போன்று  பூயின் சுற்று புற சூழல் மாசு அடைவதற்கும் மாட்டு இறைச்சியின் பங்கு மற்றய  மரக்கறி உணவுகள்  மற்றய இறைச்சிகளை விடவும் மிகவும் அதிகமானது. சிவசேனை மாட்டு இறைச்சியை எதிர்ப்பதால்  இப்படி பார்க்கபடுகின்றது.எனக்கு தெரிந்த வேறு இனத்தவர்கள் மரகறி இறைச்சி பாவிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

Solar panel பாவிப்பதுபோல . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடயம் என்னவென்றால் யாழில் மாட்டிறைச்சியை நுகர்வேர் பெரும்பான்மையானோர் யாரென்று நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை. 

சச்சி & கோ இந்த பெரும்பான்மை மக்களை சாப்பிடவேண்டாம் என அறிவுறுத்தலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, நியாயம் said:

உலக பொதுமறை திருக்குறள் புலால் மறுத்தல் பற்றி பேசுகின்றது. பசுவதை தவிர்க்கப்படல் வேண்டும் என்பது ஒரு புதிய சிந்தனை அல்ல. 

அதேசமயம் நடைமுறை உலக ஒழுங்கில் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் மாட்டிறைச்சியின் பங்கு முக்கியமானது. 

கொல்லான், புலால் மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்றுதான் வள்ளுவர் கூறுகிறார். 

இது புலால் (சகல வகை இறைச்சி) உண்ணாதோரை உயிர்கள் மெச்சும் என மட்டுமே சொல்கிறது. அதாவது புலால் மறுத்தலை ஏற்றுகிறது. இது மீனுக்கும், கோழிக்கும், ஆட்டுக்கும் பொருந்தும் (புலால் மறுத்தல் அதிகாரம் முழுவதும்).

இதில் இருந்து தனியே மாட்டை உண்ணாமைக்கு கோடு கீற முடியுமா?

மாட்டை கொல்ல கூடாது என்பது ஒரு மதம் சார் நம்பிக்கை. அதை ஏனையோர் மீது திணிக்க, வள்ளுவரை இழுத்தாலும், முடியாது.

இல்லை வள்ளுவர் வாக்கின் படி ஒழுகுவோம் என்றாலும் ஓகே, மீன், முட்டை, கோழி என சகலதையும் தடைசெய்யும் போது மாட்டையும் தடை செய்யலாம்.

உணவு என்பது அவரவர் தனி உரிமை.

56 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதே போன்று  பூயின் சுற்று புற சூழல் மாசு அடைவதற்கும் மாட்டு இறைச்சியின் பங்கு மற்றய  மரக்கறி உணவுகள்  மற்றய இறைச்சிகளை விடவும் மிகவும் அதிகமானது. சிவசேனை மாட்டு இறைச்சியை எதிர்ப்பதால்  இப்படி பார்க்கபடுகின்றது.எனக்கு தெரிந்த வேறு இனத்தவர்கள் மரகறி இறைச்சி பாவிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

மீதேனை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

இது உண்மைதான். ஆனால் இது பால், வெண்ணை, தயிர், சீஸ் க்காக வளர்த்து, பின் கொல்லாமல் இயற்கை மரணம் அடையும் மாடுகளில் இருந்தும் வரும்.

ஆகவே சகல பால்-விளை பொருட்களையும் தடை செய்ய வேண்டும்.

உண்மையில் பால் கொடுக்க முடியாத மாடுகளை இறைச்சியாக்குவதன் மூலம், மாடுகள் வெளிவிடும் மீதேனின் அளவு குறைகிறது என்பதே உண்மை.

ஆகவே ஒன்றில் பால் உட்பட எந்த தேவைக்கும் மாட்டை வளர்க்க கூடாது, அல்லது மாட்டை எல்லா உணவு தேவைகளுக்காகவும் வளர்க்கலாம்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, வாலி said:

விடயம் என்னவென்றால் யாழில் மாட்டிறைச்சியை நுகர்வேர் பெரும்பான்மையானோர் யாரென்று நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை. 

சச்சி & கோ இந்த பெரும்பான்மை மக்களை சாப்பிடவேண்டாம் என அறிவுறுத்தலாமே!

தனியே முஸ்லிம்கள் மட்டும் அல்ல, தாழ்த்தப்பட்ட இந்துக்கள், கிறிஸ்தவர்களிடமும் மாட்டு இறைச்சி உண்ணும் வழக்கம் உண்டு.

இப்படியே போனால் நாளைக்கு எல்லாரும் மரக்கறிதான் சாப்பிட வேண்டும் என சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6472.jpeg.0761dfe70e0175b6b177

முதலில் வெடுக்கு  லிங்கேஸ் வரரை சிங்கள இனவாத அரசிடம் இருந்து  விடுதலை செய்து விட்டு இந்த கோரிக்கையை வைக்க சொல்லுங்க .

கவி அருணாசலம் ஐயா உங்கடை ai யை இங்கையும் பாய விடுங்க புண்ணியமா போகும் .

இந்தியாவில் சிவன் எப்படி மதிக்கப்படுகிறார் அதே சிவன் வெடுக்கு நாறி இலங்கையில் புத்த பிக்குகளால் கைது செய்யப்பட்டு கொடுமை படுத்துகிறார் அப்படியொரு ai  கார்டுடூன்  பல தாக்கம்களை  உருவாக்கும் .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொசுறு:

யாழ் நண்பர்களின் 10வது ஆண்டு நிறைவு விழாவும் சமூகப்  பெரியோரின் கெளரவிப்பும் - 2024 எனும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(May 19,2024) அந்த நிகழ்வுக்குத் தலைமை  CVK சிவஞானம். Guest of Honour இந்திய துணைத் தூதரகத்தின் Counsel மனோச் குமார். 

கெளரவிக்கப்படுவோரில் முக்கியமானவர்கள் வண. சிறி விமல தேரர். (சாட்சாத் மேலேயுள்ள தேரரேதான்.) Major General Don Dharshana  Udaya Kumara Hetiyarachchi (க்UNITED NATIONS HUMAN RIGHTS Comission  ஆல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்)

(CVK மிக மோசமான சமயத் துவேசி சாதி வெறியன் என்று அடையாளம் காணப்பட்டவர்)

இப்போது, யார் யாருக்கு எதிரி ? 

😁

Posted
15 hours ago, goshan_che said:

தனியே முஸ்லிம்கள் மட்டும் அல்ல, தாழ்த்தப்பட்ட இந்துக்கள், கிறிஸ்தவர்களிடமும் மாட்டு இறைச்சி உண்ணும் வழக்கம் உண்டு.

இந்த வார்த்தையை தவிர்த்து இருக்கலாம்...? மாட்டுறைச்சி சாப்பிடுகின்ற இந்துக்களை சாதியத்துடன் தொடர்பு படுத்தியதாக இது அமைந்திருக்கு என உணர்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

இந்த வார்த்தையை தவிர்த்து இருக்கலாம்...? மாட்டுறைச்சி சாப்பிடுகின்ற இந்துக்களை சாதியத்துடன் தொடர்பு படுத்தியதாக இது அமைந்திருக்கு என உணர்கின்றேன்.

இல்லையே - தாழ்த்த பட்ட - என்பது சரிதானே?

தாழ் சாதியினர் என்ற மோசமான பதத்தை பிரதியீடு செய்து, அவர்கள் தாழ்ந்தவர்கள் அல்ல, மாறாக தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை குறிக்கும் பதம் அல்லவா இது?

தமிழ் நாட்டில் பல முற்போக்கு சிந்தனையாளர், தலித்திய அரசியலாளர் கூட இதை பயன்படுத்துகிறரே?

https://www.vikatan.com/news/tamilnadu/what-is-the-right-word-to-mention-scheduled-castes-in-tamil

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

`இந்திய சாதிய அமைப்பு முறை பற்றிய சரியான புரிந்துணர்வு அற்றவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல்லை அவமதிப்பான சொல்லாகக் கருதுகிறார்கள்” என்கிறார் `தலித் முரசு’ இதழ் ஆசிரியர் புனித பாண்டியன்.

👆🏼 விகடன் கட்டுரையில் இருந்து. இதுதான் என் நிலைப்பாடும்.

இதே போல் காந்தி தலித் மக்களை ஹரிஜன் என அழைத்த போது, அவர்கள் அதை தலையை தடவும் போக்கு (patronizing) என கூறி, தம்மை தலித் என்று தொடர்ந்தும் அடையாளப்படுத்தினார்கள்.

அவர்கள் தாழ்த்தப் பட்டவர்கள் என்பது வரலாற்று உண்மை. அந்த உண்மையை எந்த வெண் பூச்சு பதத்தாலும் மறைக்க கூடாது.

ஒவ்வொரு தடவை இந்த வார்த்தை பாவிக்கப்படும் போதும் இந்த வரலாற்று உண்மை, வரலாற்று அநீதி மீள மீள நினைவுபடுத்தப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, விளங்க நினைப்பவன் said:

அதே போன்று  பூயின் சுற்று புற சூழல் மாசு அடைவதற்கும் மாட்டு இறைச்சியின் பங்கு மற்றய  மரக்கறி உணவுகள்  மற்றய இறைச்சிகளை விடவும் மிகவும் அதிகமானது. சிவசேனை மாட்டு இறைச்சியை எதிர்ப்பதால்  இப்படி பார்க்கபடுகின்றது.எனக்கு தெரிந்த வேறு இனத்தவர்கள் மரகறி இறைச்சி பாவிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சியை மூக்கு முட்ட பிடிச்சுப்போட்டு குளிசைகளை போட்டுக்கொண்டு சீவிப்பது பலருக்கு பழகிவிட்டது. 

ஏதோ மாட் கவ் வியாதி என்று முன்னம் ஏதோ சொன்னார்கள். 

என்ன சொல்லப்படுகின்றது என்பதை விட யாரால் சொல்லப்படுகின்றது என்பதுதான் முக்கியத்துவம் பெறுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, நியாயம் said:

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சியை மூக்கு முட்ட பிடிச்சுப்போட்டு குளிசைகளை போட்டுக்கொண்டு சீவிப்பது பலருக்கு பழகிவிட்டது. 

ஏதோ மாட் கவ் வியாதி என்று முன்னம் ஏதோ சொன்னார்கள். 

என்ன சொல்லப்படுகின்றது என்பதை விட யாரால் சொல்லப்படுகின்றது என்பதுதான் முக்கியத்துவம் பெறுகின்றது.

உண்மையான காரணங்களைப் புரிந்து கொள்ள இயலாத tone-deaf ஆட்கள் அல்ல யாழில் இருப்பது😂!

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றியிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகள் இதய நலனுக்கு ஒவ்வாதவை என்பது மருத்துவ அறிவியல் உண்மை. ஆனால், அந்த மருத்துவக் காரணங்களாலா "மாட்டிறைச்சி தடை" கேட்கிறார்கள் என்கிறீர்கள்?

இங்கே இவர்கள் கேட்பது "பெரும்பான்மையாக இந்தப் பிரதேசங்களில் வாழும் இந்துக்களால் வணங்கப் படும் ஒரு விலங்கை, இந்து அல்லாதோரும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்" என்ற திணித்தல் முயற்சி. இது தான் எதிர்க்கப் பட வேண்டியது. ஒருவருக்கு தன் ஆரோக்கியம் காரணமாக மாட்டிறைச்சி சரி வரவில்லையானால் தாராளமாக அவர் தவிர்க்கலாம். ஆனால், தனக்குப் பக்கத்தில் இருப்பவனும் சாப்பிடக் கூடாதென்று சட்டம் இயற்றக் கோருவது, சாப்பாட்டை ஒரு மத நம்பிக்கைக்கேற்ப கட்டுப் படுத்தும் அவசியமற்ற திணிப்பு.

இதே போன்ற தொனியில் ஒரு தீவகப் பாடசாலையில் மச்ச உணவுத் தவிர்ப்பு  அறிவிப்பு வந்து நீண்ட விவாதம் இங்கே நடந்தது. அப்போதும் "சுத்தம், ஆரோக்கியம்" என்று மொட்டாக்கைப் போட்டுக் கொண்டு சந்து பொந்துக்கால் ஓடிக் களைத்து, இறுதியில் "உள்ளே கோயில் இருக்கிறது, அது தான் காரணம்" என்று பம்மினார்கள்😎.

  • Like 4
  • Thanks 2
  • Downvote 1
Posted
3 hours ago, goshan_che said:

இல்லையே - தாழ்த்த பட்ட - என்பது சரிதானே?

தாழ் சாதியினர் என்ற மோசமான பதத்தை பிரதியீடு செய்து, அவர்கள் தாழ்ந்தவர்கள் அல்ல, மாறாக தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை குறிக்கும் பதம் அல்லவா இது?

தமிழ் நாட்டில் பல முற்போக்கு சிந்தனையாளர், தலித்திய அரசியலாளர் கூட இதை பயன்படுத்துகிறரே?

https://www.vikatan.com/news/tamilnadu/what-is-the-right-word-to-mention-scheduled-castes-in-tamil

//``தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல் இழிசொல் இல்லை என்றாலும் பொதுச் சமூகத்தின் பார்வையில் `தாழ்ந்த’ என்கிற அர்த்தம் தொனிக்கும் சொல்லாகவே புரிந்துகொள்ளப்படும் என்பதால் `அட்டவணை சாதியினர்’ என்றே குறிப்பிடலாம்” என்கிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.//

என நீங்கள் தந்த இணைப்பில் உள்ளது. இதே போன்ற புரிதலைத் தான் நானும் கொண்டிருக்கின்றேன் என்பதால் அச் சொல்லை கண்டவுடன் கேள்வி எனக்கு எழுந்தது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

உண்மையான காரணங்களைப் புரிந்து கொள்ள இயலாத tone-deaf ஆட்கள் அல்ல யாழில் இருப்பது😂!

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றியிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகள் இதய நலனுக்கு ஒவ்வாதவை என்பது மருத்துவ அறிவியல் உண்மை. ஆனால், அந்த மருத்துவக் காரணங்களாலா "மாட்டிறைச்சி தடை" கேட்கிறார்கள் என்கிறீர்கள்?

இங்கே இவர்கள் கேட்பது "பெரும்பான்மையாக இந்தப் பிரதேசங்களில் வாழும் இந்துக்களால் வணங்கப் படும் ஒரு விலங்கை, இந்து அல்லாதோரும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்" என்ற திணித்தல் முயற்சி. இது தான் எதிர்க்கப் பட வேண்டியது. ஒருவருக்கு தன் ஆரோக்கியம் காரணமாக மாட்டிறைச்சி சரி வரவில்லையானால் தாராளமாக அவர் தவிர்க்கலாம். ஆனால், தனக்குப் பக்கத்தில் இருப்பவனும் சாப்பிடக் கூடாதென்று சட்டம் இயற்றக் கோருவது, சாப்பாட்டை ஒரு மத நம்பிக்கைக்கேற்ப கட்டுப் படுத்தும் அவசியமற்ற திணிப்பு.

இதே போன்ற தொனியில் ஒரு தீவகப் பாடசாலையில் மச்ச உணவுத் தவிர்ப்பு  அறிவிப்பு வந்து நீண்ட விவாதம் இங்கே நடந்தது. அப்போதும் "சுத்தம், ஆரோக்கியம்" என்று மொட்டாக்கைப் போட்டுக் கொண்டு சந்து பொந்துக்கால் ஓடிக் களைத்து, இறுதியில் "உள்ளே கோயில் இருக்கிறது, அது தான் காரணம்" என்று பம்மினார்கள்😎.

அத்தோடு ஏனைய சிவப்பு இறைச்சிகளை விட மாட்டில் கொழுப்பு குறைவு என நினைக்கிறேன்.

சைவம் சாப்பிடுகிறோம் என நல்ல மரக்கறியோடு சோத்தை பாத்தி கட்டி அடித்தாலும் நீரிழிவு உட்பட நோய்கள் வரும்தானே.

ஆகவே எதையும் அளவோடு சுவைத்தால் அமிர்தமே.

ஆனால் என்ன செய்வது - சச்சியே சொல்லாத healthy eating காரணங்களை எல்லாம் சொல்லி சச்சிக்கு முட்டு கொடுக்க ஆசையாய் இருக்கிறது சிலருக்கு. 

1 hour ago, நிழலி said:

//``தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல் இழிசொல் இல்லை என்றாலும் பொதுச் சமூகத்தின் பார்வையில் `தாழ்ந்த’ என்கிற அர்த்தம் தொனிக்கும் சொல்லாகவே புரிந்துகொள்ளப்படும் என்பதால் `அட்டவணை சாதியினர்’ என்றே குறிப்பிடலாம்” என்கிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.//

என நீங்கள் தந்த இணைப்பில் உள்ளது. இதே போன்ற புரிதலைத் தான் நானும் கொண்டிருக்கின்றேன் என்பதால் அச் சொல்லை கண்டவுடன் கேள்வி எனக்கு எழுந்தது.

ஓம் இப்படியும் ஒரு புரிதல் இருக்கிறது என்பதால்தன் அந்த கட்டுரையை இணைத்தேன்.

உங்கள் கேள்வி நியாயமானதே. என் பதிலும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/5/2024 at 01:40, Kapithan said:

Solar panel பாவிப்பதுபோல

ஓம் .அதில் அவர்கள் காட்டும் ஆர்வம்👍

13 hours ago, நியாயம் said:

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சியை மூக்கு முட்ட பிடிச்சுப்போட்டு குளிசைகளை போட்டுக்கொண்டு சீவிப்பது பலருக்கு பழகிவிட்டது. 

ஏதோ மாட் கவ் வியாதி என்று முன்னம் ஏதோ சொன்னார்கள். 

என்ன சொல்லப்படுகின்றது என்பதை விட யாரால் சொல்லப்படுகின்றது என்பதுதான் முக்கியத்துவம் பெறுகின்றது.

நீங்கள் சொன்னது உண்மை தான்.   மேலே உள்ள மாட்டுக்கறி பாடல் என்ற வீடியோவில் மாட்டு கறியின் புகழை பாடுகிறார்கள்  என்று நம்புகிறேன்.இப்படி இது போல் நல்ல உணவுகள் சாப்பிடுங்கோ என்று பாட்டு பாடி இருப்பார்களா.

பாடலில் மாட்டுக்கறி வேறுலெவல் என்கிறார்கள்.  வேறுலெவல்  என்றால் தமிழில் ஒப்புவமையற்றது தானே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே ஒரு சிலருக்கு முஸ்லீம் நாடுகளில் பன்றி இறைச்சி ஏன் தடை என்பற்கு வியாக்கியானங்கள் வருவதில்லை.

காய்ஞ்ச இரும்பை கண்டால் கொல்லன்  (டாஸ்  டாஸ்) -----  தூக்கி தூக்கி அடிப்பானாம் 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, குமாரசாமி said:

இங்கே ஒரு சிலருக்கு முஸ்லீம் நாடுகளில் பன்றி இறைச்சி ஏன் தடை என்பற்கு வியாக்கியானங்கள் வருவதில்லை.

காய்ஞ்ச இரும்பை கண்டால் கொல்லன்  (டாஸ்  டாஸ்) -----  தூக்கி தூக்கி அடிப்பானாம் 😂

முஸ்லிம்கள் பன்றி இறைச்சியைத் தடை செய்யும்படி கோருவதில்லை, இலங்கையில் 😁

முஸ்லிம்களைப்பற்றி யார்தான் கவலைப்படுகிறார்கள்? 

😁

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.