Jump to content

Recommended Posts

Posted
43 minutes ago, Kapithan said:

(ஒரு உதாரணத்திற்காக மாத்திரம்) உங்கள் குழந்தைகளை ஓரினச் சேர்க்கையாளர்கள் தத்தெடுத்து வளர்க்க ஒப்புதல் தருவீர்களா? 

உதாரணத்துக்கு

என் பிள்ளைகளை வளர்க்க முடியாமல் நான் தத்துக் கொடுக்கும் நிலை வரின் அது நானும் மனைவியும் அகால மரணம் அடைந்து இருந்தால் மாத்திரமே சாத்தியமாகி இருக்கும்.

ஆனால் அப்படி ஆகவில்லை.

எனவே அப்படி தத்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் போது நான் முடிவெடுக்க வேண்டி வரும் என்பதற்கு ஊகத்தின் அடிப்படையில் எப்படி நான் பதில் தருவது?

கேள்வியை சற்று விளக்கி கேட்டால் நல்லது

  • Replies 108
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

kandiah Thillaivinayagalingam

"ஒருபால் திருமணம்"   [நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக

ரஞ்சித்

உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால

Kavi arunasalam

கடந்த வருட ஆரம்பத்தில், யேர்மனியில்,   இரயிலில் பயணிப்பதற்காக,  இணையமூலமாக ஒருவர் ரிக்கெற் பதிவு செய்ய விரும்பி யேர்மனி இரயில் திணைக்களத்தின்  இணையத்தளத்தில் முயன்றிருக்கிறார். இணையத்தில் இருந்த படிவத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, நிழலி said:

உதாரணத்துக்கு

என் பிள்ளைகளை வளர்க்க முடியாமல் நான் தத்துக் கொடுக்கும் நிலை வரின் அது நானும் மனைவியும் அகால மரணம் அடைந்து இருந்தால் மாத்திரமே சாத்தியமாகி இருக்கும்.

ஆனால் அப்படி ஆகவில்லை.

எனவே அப்படி தத்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் போது நான் முடிவெடுக்க வேண்டி வரும் என்பதற்கு ஊகத்தின் அடிப்படையில் எப்படி நான் பதில் தருவது?

கேள்வியை சற்று விளக்கி கேட்டால் நல்லது

உங்கள் பிள்ளைகள் என்று கேட்டதற்கு மன்னிக்கவும். விடயத்தின் தீவிரத்தன்மையை விளக்குவதற்காகத்தான் அப்படிக் கேட்டேன். 

ஓரினச்சேர்க்கையாளர்கள் குழந்தைகளை தத்தெடுப்பதை ஆதரிக்கிறீர்களா? 

(தப்பிக்க வழி தேடாதீர்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சிலரது கருத்துக்களைப் பார்த்தால் தன்பாலீர்ப்பு, இருபாலீர்ப்பு பற்றிய அடிப்படைப் புரிதல்கள் இல்லை என்று தெரிகின்றது.  பாலியல்வரட்சியால் சிறுபையன்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களையும், தன்பாலீர்ப்பாளர்களையும் குழப்பிக்கொள்கின்றார்கள் போலிருக்கின்றது.

குழந்தைகளையும், சிறுவர்களையும், மனவளர்ச்சி குன்றியவர்களையும், பிறவகையில் பாதுகாப்பாற்றவர்களையும் துஷ்பிரயோகம் செய்வது பாரிய குற்றங்கள். இப்படியானவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள், தன்பாலீர்ப்பாளர்கள் என்று குழப்பக்கூடாது.

Edited by கிருபன்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, கிருபன் said:

ஊரில் இது காய்ச்சமாடு கம்பில விழும் நிலையிலேயே இருந்தது.

ஆனால் கடந்த 40 வருடங்களில் அது அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படுவதால் சமூகத்தில் தவறுகளை குறைக்க முடியும் என்ற அளவில் வந்து விட்டது. ஆனால் நாம் இன்னும் ஊரில் பார்த்த பார்வையிலேயே உள்ளோமா?? என்று தான் தோன்றுகின்றது?

எனது குடும்பத்திற்குள்ளேயே இது நடைமுறையில் வந்து விட்டது. அமெரிக்காவில் உள்ள எனது ஒன்று விட்ட அண்ணரின் மகன் இவ்வாறு தான் திருமணம் செய்து வாழ்கிறார். வந்து சித்தா என்று கட்டிப்பிடித்தால் தட்டி விடவா முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, நிழலி said:

ஆனால் எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, பலர் ஏற்றுக் கொண்டு சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூகத்தினரை அழித்தொழிக்க வேண்டும் என்பது எந்த விதமான நியாயம்? தனக்கு ஒவ்வாத விடயம் எனில் அதை அழித்தொழிக்க வேண்டும் என்பது எந்தவகை அறம்?

ஓம்...நீங்கள் சொல்லுறதும் சரிதான்...
அழித்தொழிக்கப்பட வேண்டும் என எழுதியது அறம் இல்லைத்தான்.
ஆனால் நான் அவர்களை ஆதரிக்க மாட்டேன்.

  • Thanks 1
Posted
10 hours ago, Kapithan said:

(தப்பிக்க வழி தேடாதீர்கள் 🤣

முதலில் மன்னிப்பு என்று விட்டு, பின் நான் எழுதியதை தப்பித்தல் என்கின்றீகள்.

நான் ஊகத்தின் அடிப்படையில் எல்லா விடயங்களுக்கும் பதிலளிக்க முடியாது என்ற அடிப்படையில் தான் உங்களிற்கு பதில் எழுதியிருந்தேன். ஆனால் அதை தப்பித்தல் என்கின்றீர்கள்.

இதில் கேட்ட கேள்விக்கு என் பதில்:

ஓம், நான் ஆதரிக்கின்றேன். 

முக்கியமாக கனடாவில் இவ்வாறான தம்பதியினர் தத்தெடுக்கும் விடயத்துக்கு ஆதரவழிக்கின்றேன். ஏனெனில் ஒரு குழந்தையை தத்தெடுப்பது இங்கு வெகு கடினமான ஒரு Process . பல விடயங்களை சீர் தூக்கிப் பார்த்தே தத்தெடுக்கும் அனுமதியை Child and Family Services  வழங்குவார்கள். எனவே இந்த முறைமையினூடாக அவர்கள் குழந்தையை தத்தெடுக்கும் போது, அதை நான் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

Posted
7 hours ago, விசுகு said:

எனது குடும்பத்திற்குள்ளேயே இது நடைமுறையில் வந்து விட்டது. அமெரிக்காவில் உள்ள எனது ஒன்று விட்ட அண்ணரின் மகன் இவ்வாறு தான் திருமணம் செய்து வாழ்கிறார். வந்து சித்தா என்று கட்டிப்பிடித்தால் தட்டி விடவா முடியும்?

கடந்த மாதம் நெருங்கிய உறவில் தமிழ் பெண் ஒருவரின் வளைகாப்பு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். அங்கு அவர்களை வாழ்த்த வந்த தமிழ் தம்பதிகளில் ஒரு தம்பதி பெண்-பெண் தம்பதி. அத் தம்பதியுடன் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஏனைய தமிழர்கள் வெகு இயல்பாக உரையாடிக் கொண்டு இருந்தது மட்டுமன்றி, கர்ப்பிணிக்கு காப்பு போடவும் விட்டனர்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, நிழலி said:

முதலில் மன்னிப்பு என்று விட்டு, பின் நான் எழுதியதை தப்பித்தல் என்கின்றீகள்.

நான் ஊகத்தின் அடிப்படையில் எல்லா விடயங்களுக்கும் பதிலளிக்க முடியாது என்ற அடிப்படையில் தான் உங்களிற்கு பதில் எழுதியிருந்தேன். ஆனால் அதை தப்பித்தல் என்கின்றீர்கள்.

இதில் கேட்ட கேள்விக்கு என் பதில்:

ஓம், நான் ஆதரிக்கின்றேன். 

முக்கியமாக கனடாவில் இவ்வாறான தம்பதியினர் தத்தெடுக்கும் விடயத்துக்கு ஆதரவழிக்கின்றேன். ஏனெனில் ஒரு குழந்தையை தத்தெடுப்பது இங்கு வெகு கடினமான ஒரு Process . பல விடயங்களை சீர் தூக்கிப் பார்த்தே தத்தெடுக்கும் அனுமதியை Child and Family Services  வழங்குவார்கள். எனவே இந்த முறைமையினூடாக அவர்கள் குழந்தையை தத்தெடுக்கும் போது, அதை நான் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

1) "🤣" போட்டிருக்கிறேன் கவனிக்கவில்லையோ  ? 🤣

2) 50% நேர்மையான பதில்  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, நிழலி said:

இங்கே வருடத்தில் ஒரு முறை இப் பேரணி நடக்கும். இப் பேரணிகளை, பாடசாலைகளில் வைக்கப்படும் rainbow flags களை LGBTQ சமூகத்தை சக சமூகமாக அங்கீகரியுங்கள் என்பதை வலியுறுத்த, அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என காட்ட இவற்றை நடாத்துகின்றனர். 

அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என காட்ட....... என்று சொல்ல வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன், நிழலி............👍

  • Thanks 1
Posted
14 minutes ago, ரசோதரன் said:

அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என காட்ட....... என்று சொல்ல வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன், நிழலி............👍

அடடா...ஒரு சொல்லைத் தவற விட்டமையால் சொல்ல வந்த விடயத்தையே தலைகீழாக எழுதியிருக்கின்றேன். 

நமக்கு இன்னும் பயிற்சி தேவை போல இருக்கு.

நன்றி ரசோ!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
"ஒருபால் திருமணம்"
 
[நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன்  விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும்  கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்]
 
திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும், ஒரு நிரந்தர மற்றும் பிரத்தியேக அர்ப்பணிப்புகளுடன் ஒன்றிணைவதுடன், இயற்கையாகவே (இயல்பாகவே அமையப்பெற்ற) குழந்தைகளை பெற்று ஒன்றாக வளர்ப்பதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அதாவது,  ஆண் பெண் பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் என்று பொதுவாக சொல்லப்படுகிறது.
 
அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பைக் [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. எனவே, இதற்கு புறம்பாக, எதாவது ஒன்றை திருமணம் என்று அழைப்பது திருமணம் ஆகா. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான உடன்படிக்கை ஆகும். இது அதன் இயல்பாகவே, குழந்தைகளின் இனப்பெருக்கம் அவர்களின் கல்வி, வாழ்க்கைத் துணைகளின் ஒற்றுமை மற்றும் நல்வாழ்வு  நோக்கி தம்பதியர்களுக்கு அறிவுறுத்துகிறது அல்லது கட்டளையிடுகிறது.
 
ஆனால் ஒருபால் திருமணத்தை ஆதரிப்பவர்கள் அல்லது அதை ஊக்கிவிப்பவர்கள், இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றையே  முன்மொழிகிறார்கள். அதாவது இரு ஆண்களுக்கு இடையில் அல்லது இரு பெண்களுக்கு இடையில் இதை முன்மொழிகிறார்கள். இது சுயமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காணப்படும் உயிரியல், உடலியல் மற்றும் உளவியல் வித்தியாசங்களையும், அதனால் திருமணத்தில் இணைந்து அவர்கள் காணும் வாழ்வின் முழுமையையும் மறுக்கிறது. அது மட்டும்  அல்ல, மனித இனத்தின் பெருக்கம் மற்றும் குழந்தைகளை அவர்களின் இயற்கையான இரு பெற்றோர்களுடன் வளர்வதையும் தடுக்கிறது. அதாவது, சிலவேளை அதில் ஒருவருக்கு வேறு யாராவதின் மூலம் ஒரு அல்லது பல குழந்தை இருந்து அவர்களுடன் வாழ நேரிட்டால், ஒரு பால் திருமணம் அந்த குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையின் முழுமையான பங்கை உணர முடியாமல் தடுத்து விடுகிறது.
 
டார்வின் தனது இயற்கைத் தேர்வு என்ற அத்தியாயத்தில், வெற்றிகரமான உயிரினங்கள், இறக்கும் தன் மூத்தவர்களை ஈடு செய்வதற்கு தேவையானதை விட,  அதிக சந்ததிகளை ஒவ்வொரு தலைமுறையிலும் உருவாக்குகின்றன என்கிறார். மேலும் பல்வேறு இயக்கங்களின் தாக்கங்களைச் சமாளிக்கவல்ல தனிப்பட்ட உயிர் மற்றும் உயிரினங்கள் செழித்துத் தமது நன்மைபயக்கும் உயிர்ப் பண்புகளைத் தமது அடுத்த தலைமுறைக்குச் செலுத்தி, உயிர்வாழ்வு மற்றும் இனப்பெருக்கத்தை தக்கவைக்கும் என்கிறார்.
 
உதாரணமாக ஒரு பால் உறவு, இயற்கையானது என்றால் அது ஏன் இனப்பெருக்கம் செய்யவில்லை ?.ஏனென்றால் அந்த இனம் தொடர்ந்து பிழைத்து வாழ அது மிக மிக முக்கியம். 
 
ஒருபால் மக்களுக்கு திருமணத்தை மறுப்பதால், அவர்களை மற்றொரு நபருடன் அன்பான அர்ப்பணிப்புக்கு மறுப்பதாக நீங்க ஒருவேளை நினைக்கலாம்?. உண்மையில் அது தவறு. மக்கள் எல்லா நேரமும் மற்றவர்களை நேசிப்பதுடன் அர்ப்பணிப்பும் செய்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் திருமணம் என்று கூறுவதில்லை, ஏனென்றால் அந்த உறவிற்கு என தனிப்பட்ட இயல்புகள் உண்டு.
 
வேண்டும் என்றால், குழப்பம் இல்லாமல் இந்த ஒருபால் உறவுகளுக்கு வேறு ஒரு பெயரை வைக்கலாம் ?. உதாரணமாக ஒருபால் கூட்டு (same sex union) அல்லது அப்படியான வேறு இன்னும் ஒரு சொல். அதன் வரைவிலக்கணமும் அதற்குத் தக்கதாக, ஒரே பால் இனத்தை சேர்ந்த இருவர், அன்பு அல்லது நட்பு, பாலுறவு, பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக, இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு கூட்டு இதுவாகும் என்று வரையறுக்கலாம்.
 
ஆனால் திருமணம் என்று இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு உறவுக்கும், இனப்பெருக்கம் ஆற்றல் உள்ள ஒரு உறவுக்கும் ஒரே மாதிரி வைப்பது தான் பிழை என்கிறோம்?  
 
ஒரு பால் உறவு அல்லது தற்பால்சேர்க்கை என்பது, ஒருவர் தனது பாலை சேர்ந்த இன்னும் ஒருவருடன் பாலியல் தொடர்பு வைப்பது ஆகும். உதாரணமாக ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் ஆகும். உலக வரலாற்றில், வெவ்வேறு கால கட்டங்களில், ஒரு பால் உறவு பல்வேறு விதமாக அங்கீகரிக்கப்பட்டும் , பொறுத்துக்கொள்ளப்பட்டும், தண்டிக்கப்பட்டும் மற்றும் தடைசெய்யப்பட்டும் வந்துள்ளது.
 
பண்டைய உலகில் ஒரு பால் உறவுகளுக்கான பல ஆதாரங்களை, அதிகமாக பண்டைய கிரீஸ், ரோம், பண்டைய மெசொப்பொத்தேமியா, சீனாவின் சில பகுதி, மற்றும் இந்தியாவின் இதிகாசங்களிலும் புராணங்களிலும் சில ஆலய சிற்பங்களிலும் காண்கிறோம். எனவே ஒரு பால் உறவு ஒன்றும் புதிது அல்ல.
 
என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னைய காலத்தில் சந்ததிகளை உற்பத்தி செய்ய இயலாமை காரணமாக, இதை ஒரு திருமண பந்தத்தில் ஏற்கப் படவில்லை. 
 
கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் தற்பால் சேர்க்கை உள்ள ஆண்களே வீரம் நிறைந்தவர்களாக இருப்பர் என்று சொல்லுகிறார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும், அது போலவே இந்து புராணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். அதற்கு பாடல் 33 இல், திருமால், சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று கேட்பதை காண்கிறோம்.
 
 "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந்
தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால்
முன்பு கேட்டது மன்று முதல்வநீ
வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" [1463] 
 
ஏன் ஒவ்வொரு சமுதாயமும், மனித குல வரலாற்றில், ஆதியில் இருந்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை ஆதரித்தது அல்லது முதன்மை கொடுத்தார்கள்? ஏன் இந்த தனித்துவமான உறவு "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது?
 
திருமணம் உண்மையில் தனித்துவமானதே, ஏனென்றால், இது உங்களுடன் தொடர்பில்லாத ஒருவருடன் உறவை உருவாக்கத் தேர்வு செய்வதுடன், அந்த தேர்வு பல பிணைப்புகளையும், உதாரணமாக, காதல் மற்றும் உடல் / பாலியல் கூறுகளையும் கொண்டுள்ளது.
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குறுந்தொகை - 40, மிக ஆழமாக, சுருக்கமாக, அழகாக அந்த தனித்துவமான உறவை எடுத்து கூறுகிறது. என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்? நான் உன்னையும், நீ என்னையும் எந்த வகையில் அறிவோம். அப்படி இருந்தும் நம் அன்பு உள்ளங்கள் ஒன்றோடொன்று கலந்துவிட்டன. செம்மையான நிலத்தில் (மணல் பாங்கோ, களர் பாங்கோ இல்லாத நிலத்தில்) பெய்த மழைநீர் போலக் கலந்து நிலைபெற்றுவிட்டன. (இனி நிலமும் நீரும் பயிரை வளர்க்கும்)
 
"யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."
 
இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. அது நிலத்திற்கு செழிப்பைக் கொடுக்கிறது, அவ்வாறே இந்த தனித்துவ உறவும் மனித குலத்திற்கு செழிப்பு கொடுத்து அதன் தொடர் வளர்ச்சியையும் பாது காத்து ஊக்குவிக்கிறது. அது நடைபெறா விட்டால் இந்த விவாதமே தேவை வராது?
 
இது மனித உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையையும் (stability), தனித்துவமான ஒரு கருத்தையும் (பொருளையும்) தருகிறது, இல்லையெனில் அது முழுமையடையாது. இது ஒருபோதும் தனிநபர்களுக்கோ அல்லது தம்பதிகளுக்கோ மட்டும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். எம் மனித சமுதாயம் தொடரவும் வளரவும் இந்த தனித்துவமான உறவு ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இதைத்தான் திருமணம் என்கிறார்கள்.
 
ஆகவே அந்த இயல்பு இல்லாத எதையும் அதே சொற்களால் அழைக்கலாமா?, நீங்களே முடிவு எடுங்கள்?
 
உங்களுக்கு அன்பும் துணையும் மற்றும் பாலியல் இன்பமும் தரக்கூடிய எந்த நபருடனும் நீங்க ஒன்றாக வாழலாம். அது உங்கள் விருப்பம், ஆனால் அதையும் திருமணம் என்று சொல்லலாமா என்பதே எம் வாதம்.
 
திருமணம் என்பது பொதுவாக சில முக்கிய தனித்துவ அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளது. எனவே அங்கு காணப்பட்ட முதன்மை இயல்பு முற்றாக இல்லாத ஒன்றிற்கும் அதே பெயரை குறிக்க முடியாது. அதனால் தான் அதை "ஒருபால் கூட்டு" (same sex union) என்று கூறலாம் என்கிறோம்? 
 
ஆண் - பெண் திருமணம், கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை, ஒரு தலை முறையில் இருந்து மற்ற தலை முறைக்கு மாற்றுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் மனித இனம் செழிக்கிறது. இதன் காரணமாகவே இந்த திருமணம் என்ற ஆண் - பெண் சங்கமம், முழு சமுதாயத்திற்கு நன்மை பயக்கிறது.  
 
உதாரணமாக, தமிழருக்கிடையில், கி மு 700 இல் முதல் தோன்றிய ஆண் - பெண் கூட்டு களவு என் அழைக்கப்பட்டது. இது தனக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளும் முறையாகும். என்றாலும் இது பல காரணங்களால் இடையூறுகள் அல்லது ஒருவரை ஒருவர் கைவிடுதல் ஏற்பட்டதால், தொல்காப்பியர் கூறியது போல, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (கற்பியல்,4), பலர் அறியத் திருமணம் என்ற சடங்கு (கரணம்) நடத்தும் வழக்கம் சங்க காலத்தில் ஏற்பட்டது. 
 
எனவே, மனித குல வரலாறு எங்கும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, உலகின் ஒவ்வொரு நிலப்பரப்பிலும், திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடை பெரும் ஒரு சமூக நெறியாக இருந்து வந்து உள்ளது. இவை வெறுமனே விதிவிலக்குகள் இல்லை!
 
ஒரு பால் கூட்டை ஆதரிப்பவர்கள், நிகழ் காலத்திலும், அதை தொடர்ந்து வரும் காலத்திலும் சோதிக்கப்படாத ஒரு சமூக நடைமுறையாக, ஈடுசெய்ய முடியாத ஆண் மற்றும் பெண்ணின் மதிப்புகள் முக்கிய காரணியாக அமையாத, பாலின மதிப்புக்கள் அற்ற, ஒரு பால் கூட்டை, குடும்பம் ஒன்றிற்கு உண்மையில் பரிந்து உறைகிறார்கள். இது தான் பிரச்சனையாகிறது.
 
ஏன் என்றால் அந்த குடும்பம் அடுத்த தலை முறைக்கு தானாக போகும் வாய்ப்பை இழந்து விடுகிறது. சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது அல்லது அவர்களுக்கிடையில் அதற்கான நோக்கம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள்.
 
ஒன்றை கட்டாயம் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும், ஒரு பால் கூட்டுக்கு, புது பெயர் தேடாமல், இருக்கும் திருமணம் என்ற பெயருக்குள்ளேயே அதை அடக்க முற்படும் பொழுது, நீங்கள் அதன் கருத்தை அல்லது வரையறை விரிவுபடுத்தப்பட்டு, அதை உள்வாங்க வேண்டி உள்ளது. இதனால் முன்னைய தனித்துவமான கருத்து தொலைக்கப் பட்டு, அவை மேலும் மேலும் விரிவாக்கக் கூடிய நெகிழ்வு தன்மையை பெறுகிறது. எனவே கட்டாயம் வரும் காலத்தில் அது மேலும் விரிவு படுத்தப்படலாம் ?.
 
உதாரணமாக, இரு சகோதரர்களுக்கு அல்லது சகோதரிகளுக்கு இடையில் அல்லது தாய்க்கும் மகளுக்கும் இடையில் ... ஏன் சிலவேளை ஒருவருக்கும் அவரின் செல்லப் பிராணிக்கும் இடையில் .. இப்படி நீட்டப் படலாம் , அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ? 

உலக வரலாற்றை நோக்கும் பொழுது பல ஆட்சியாளர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். என்றாலும் அவர்கள் திருமணம் செய்யும் பொழுது, கட்டாயம், உதாரணமாக ஆட்சியாளர் ஆணாக இருக்கும் தருவாயில், மற்றவர் பெண்ணாகவே இருக்கிறார். எனவே திருமணம் என்பது தன்னிச்சையான கட்டுமானம் அல்ல; அது ஒரு “கெளரவமான அமைப்பு“.

இது ஆண் பெண்களின் வேறுபட்ட மற்றும் இணக்கமான இயல்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் தான் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், தொல்காப்பியர் இயம்பியவாறு சடங்குகளால் வலுப்படுத்தப்பட்டு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு நன்றாகவே தெரியும், இதயத்திற்கு இரத்தத்தை உந்தி தள்ளும் செயல்பாடு உள்ளது, அப்படியே கண்ணுக்கு பார்க்கும் செயல்பாடு உள்ளது, எனவே கட்டாயம் மனித நிறுவனங்களுக்கு (human institutions) மிகவும் வெளிப்படையாக ஒரு தேவை இருக்கும். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அப்படி தனித்துவமான ஒன்றும் இல்லை என்று நீங்கள் நம்பினால், திருமணம் கூட தேவை இருக்காது, அப்படி என்றால்  அதைப்பற்றி வாதாடுவதை கூட இத்துடன் நிறுத்தி விடலாம் ? 

நீங்கள் திருமண பழக்கவழக்கங்களை வெளிப்படையாக, வரலாறு முழுவதும் உற்று நோக்கினால், அங்கே சில பொதுப்படையான காரணிகளை காணலாம். அவை அதிகமாக, திருமணத்திற்கு புறம்பான பாலியல் நடவடிக்கைகளுக்கு தடை, திருமணத்திற்குள் நம்பகத்தன்மை அல்லது ஒருவருக்கு ஒருவர் உண்மையாய் இருத்தல், வாழ்வு முழுவதும் ஒருவருக்கு ஒருவர் அர்ப்பணித்தல், திருமண வாழ்வில் ஒரு பிள்ளை பிறந்தால், அதன் தந்தை கணவரே என்ற அனுமானம், பரம்பரை தொடர்பான பழக்கவழக்கங்கள் மற்றும் குடும்ப சொத்துக்கள், திருமணம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருத்தல் (e.g. taboos against sex outside marriage, fidelity within marriage, life-long commitment, the assumption that a child born to a woman during a marriage is the child of her husband, customs concerning inheritance and family wealth, and ahem , the marriage being between a man and a woman) போன்றவற்றை காணலாம். இவை எல்லாம் கட்டாயம் இனப் பெருக்க நோக்கம் கொண்டவையாகவும், பெற்றோர் இருவருமே என உறுதி படுத்துவதுடன், உயிரியல் தாய் தந்தையர் கண்காணிப்பில் பிள்ளைகளுக்கு ஆதரவை நிலைநாட்டுவதும் ஆகும். 
 
எனவே தான் என்னை பொறுத்தவரையில், ஒருபால் கூட்டுக்கு அல்லது சமூக கூட்டு (civil partnerships - a new institution with a new purpose) ஒன்றிற்கு எந்த பிரச்சினையும் எனக்கு இல்லை.
 
ஆனால் அதை திருமணம் என்று வரையறுப்பதில் தான் உடன்பாடு இல்லை, ஏன் என்றால் கருத்து முக்கிய விடயத்தில் முற்றாக அல்லது எதிர்மறையாக மாறுகிறது.
 
இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்ல வேண்டும், ஒரு ஆணின் உடலையோ அல்லது ஒரு பெண்ணின் உடலையோ, ஒரு பால் உறவு வைக்குமாறு அல்லது ஓரின சேர்க்கை செய்யுமாறு இயற்கை கட்டாயம் வடிவமைக்கவில்லை.
 
ஒருவேளை அப்படித்தான் வடிவமைத்து இருந்தால், நாம் எல்லோரும் ஒரு இருபால் உயிரியாகவே (hermaphrodites!) இருந்திருப்போம்.
 
உயிரின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இனப்பெருக்கம். உயிர் தன் எளிய கட்டத்தில் இருந்து மேலும் சிக்கலான கட்டத்துக்கு படிமலர்ந்தது போலவே. இனப்பெருக்க முறைகளும் எளிய நிலையில் இருந்து சிக்கலான நிலைக்கு படிமலர்ந்து உள்ளது.
 
தொடக்கத்தில் இனப்பெருக்கம் வெறும் மீளுருவாக்கமாகவே (replicating process), கலவியற்ற இனப்பெருக்கமாகவே (Asexual reproduction) நிலவியது. உதாரணமாக வைரஸ், பற்றீரியா, அதிநுண்ணுயிரி போன்றவை.
 
சிக்கலான உயிரிகளில், இனப்பெருக்கத்திற்கான பாலணுக்களை பால் உறுப்புகள் தாம் உருவாக்கிப் பரிமாறுகின்றன. உதாரணமாக விலங்குகள், மனிதர்கள். ஆகவே நாம் மில்லியன் மில்லியன் ஆண்டுகளாக  படிமலர்ந்து அல்லது பரிணமித்து இன்று இந்த நிலைக்கு தேவைகளின் அடிப்படையில் வந்துள்ளோம். எனவே இதை நாம் கவனத்தில் எப்பவும் எடுக்கவேண்டும். 
 
அண்மைய ஆய்வுகள், உலகில் இதுவரை 450 விலங்கு இனங்களிடையே ஓரினச்சேர்க்கை நடத்தைகள் காணப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன என எல்லாமே அடங்கும். இதில் மனிதர்களுக்கு நெருக்கமான உறவு கொண்ட போனோபோஸ் [bonobos] ஆண் மற்றும் பெண்ணும் அடங்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் இனப்பெருக்க காரணங்களும் உள்ளன.
 
உதாரணமாக, ஆண் கூடைட் மீன் [Goodeid fish], தன்னுடன் போட்டியிடும் மற்ற ஆண் கூடைட் மீன்களை 
[போட்டியாளர்களை] ஏமாற்றுவதற்க்காக, இப்படி நடிக்கின்றன, மற்றும் படி, உண்மையில் அப்படியல்ல.
 
என்றாலும் ஒரே பாலின தோழர்களுக்கு இடையிலான நீண்ட கால உறவு மிருகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் 6% ஆண் பெரியகொம்பு செம்மறி ஆடுகள் [bighorn sheep] திறம்பட ஓரினச்சேர்க்கை மிருகமாகவே இருக்கின்றன. என்றாலும் விஞ்ஞானிகள் மனித ஓரினச்சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள். மேலும் விலங்குகளில் இருந்து எத்தனையோ மில்லியன் ஆண்டுகளாக ஒரு தேவை அல்லது ஒரு இலக்கை நோக்கி பரிணமித்து தான், நாம் இன்றைய நிலைக்கு முன்னேறி வந்துள்ளோம்.
 
ஆகவே மனித சமுதாயத்தில் எது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதற்கு ஆதாரம் காட்டுவதற்கு விலங்குகளைக் குறிப்பிடுவதில் அல்லது விலங்குகளிடம் இருந்து எமக்கு உதாரணம் எடுப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 
"ஓரினச்சேர்க்கை: மனிதர்களை எதிர்ப்பீர்கள்; சிங்கங்களை என்ன செய்வீர்கள்?" , என்று ஒருவரின் கட்டுரையை [By ஜெயராணி • 17/10/2019] பார்த்தேன், விலங்கு உலகில் ஆவணப்படுத்தப்பட்ட தன்னின ஊன் உண்ணும் ஆதாரம் உள்ளது, மேலும் சிங்கம் தன் குட்டிகளையே சாப்பிடுகிறது. ஆகவே மனிதர்களுக்கும் சிசுக்கொலை மற்றும் நரமாமிசம் (infanticide or cannibalism) சரியானதாக இருக்கும் என்று வாதாடலாமா  ?. 
 
மனித ஓரினச்சேர்க்கை நடத்தை பற்றிய முக்கிய வாதங்களில் ஒன்று இது ஆண் குழுக்களை, உதாரணமாக, அவர்கள் வேட்டை அல்லது போரில் இருக்கும் பொழுது, அவர்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது என்கிறார் பேராசிரியரும் பரிணாம உயிரியலாளருமான ராபின் டன்பார் [Robin Dunbar is a professor of evolutionary psychology]. உதாரணமாக, பண்டைய கிரீஸில் ஸ்பார்டன்ஸ் [the Spartans, in ancient Greece], தமது சிறந்த மேம்பட்ட துருப்புகளுக்கு [elite troops] இடையில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவித்தார்கள். இரு ஆண்களுக்கு இடையில் அப்படி ஒரு உறவு இருந்தால், ஒருவருக்கு ஒருவர் தமது மற்ற நபர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.
 
மேலும் ஓரினச்சேர்க்கைக்கு ஒரு செயல்பாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இது வேறொன்றின் கிளை விளைவு என்றும் [a spin-off or by-product] மற்றும் பரிணாம வளர்ச்சிக்கான முக்கியத்தை இது கொண்டிருக்கவில்லை என்றும் கூறுகிறார் [It could be a spin-off or by-product of something else and in itself carries no evolutionary weight.].
 
அவர் மேலும், உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை போதுமான வலுவானதாக இருந்தால் அல்லது மிகையாக வழிந்து கொட்டினால், அது வாலில்லாக் கருங்குரங்கு [போனோபோஸ்] மற்றும் செம்முகக் குரங்கு [மாகேக்] செயல்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, உற்பத்தி செய்யாத உடலுறவில் அந்த வேட்கை பரவக்கூடும் என்கிறார் [if the urge to have sex is strong enough it may spill over into nonreproductive sex, as suggested by the actions of the bonobos and macaques.].
 
இதன் விளைவால் அல்லது தாக்கத்தால், அவர்கள் வளரும் சமூக சூழலின் விளைவாக, அவர்களின் வாழ்நாள் முழுவதும், ஓரினச்சேர்க்கை யாளராகவே வாழ வாய்ப்பு உள்ளது அல்லது அப்படியான உணர்வுகளுக்குள் முடங்கி விட வாய்ப்பு உள்ளது என்கிறார். இதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். என்றாலும், மனித ஓரினச்சேர்க்கைக்கான காரணங்களை முழுமையாக நாம் அறிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ தூரம் ஆராச்சியில் செல்ல வேண்டும் என்கிறார் ராபின் டன்பார்.
 
உலக மனித வரலாற்றின் படி, ஆண் - பெண் இருவருக்கும் இடையில் ஒரு இணைப்பை அல்லது கூட்டை சட்ட பூர்வமாக முதல் முதல் ஏறத்தாழ கி மு 2350 இல் மெசொப்பொத்தேமியாவில் அறிமுகம் செய்தவர்கள் சுமேரியர்கள் ஆகும். அதற்க்கு முதல் திருமணம் என்ற ஒரு சடங்கு இருக்கவில்லை. இங்கு சுமேரியர்கள் இன்றைய தமிழர்களின் முன்னையோர்கள் என அறிஞர்கள் இன்று பல எடுத்துக்   காட்டுகளுடன் வாதிடுகிறார்கள். இதற்கு முதல் ஒரு குறிப்பிட்ட பழங்குடியில் [tribe] உள்ள ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களை அணுகலாம் என்றும், அங்கு குழந்தைகள் பிறக்கும்போது, அவர்கள் முழு சமூகத்துக்கும் சேர்ந்தவர்களாக கருதப் பட்டார்கள். இது மனிதனுக்கு  வெவ்வேறு  பாலியல் அனுபவங்கள் அல்லது வகைகள் வேண்டும் என்ற ஒரு கருத்தின் அடிப்படையுடன் தொடர்புடையது எனலாம். என்றாலும் நாளடைவில், சில முக்கிய காரணங்களால், பாலியல் அறநெறி வளர்ச்சி அடைய, அதுவும் அதற்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு தொகுதி ஆண்களுக்கும் ஒரு தொகுதி பெண்களுக்கும் இடையில் திருமணம் அமைக்கப் பட்டது [‘group marriage’]. அங்கு அவர்களுக்கு இடையில் பகிரப்பட்ட பாலியல் உறவுகள் நடைபெற்றன. இதனாலேயே பின் பலகணவர் மணம் [polyandry] ஏற்பட்டது. இது இலங்கை, இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் முன்னைய காலத்தில் வழமையில் இருந்தன. 
 
விவசாய சமுதாயம் உலகில் முதல் எழுச்சி பெறும் பொழுது, உதாரணமாக, சுமேரியாவில், சமுதாயம் ஒரு நிலையான, ஓர் இடத்தில் தொடர்ந்து வாழக்கூடிய அமைப்பாக மாறியது. அதனால், குடும்ப வரிசையின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நிலையான சமூக அமைப்பை அந்த சமூகம் கோரவேண்டிய சூழ்நிலை உருவாகியது [the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability]. அதாவது திருமணத்தின் முதன்மை நோக்கம் உயிரியல் ரீதியாக அது அவரின் குழந்தை என்பதை உறுதிப் படுத்துவதே ஆகும் [to ensure that the man’s children are biologically his]. 
 
எனவே, சுமேரியாவின் தொடர்ச்சியான பண்டைய பாபிலோனில் [Babylon] பாலியல் உண்மையில் மிகவும் தாராளமாக பரந்த கொள்கையுடன் இருந்தாலும், அது ஒற்றை நபர்களுக்கு [single persons] மட்டுமே அங்கு காணப்பட்டது. ஆனால், திருமணம் ஒரு சமூக செயல்பாடாக, கடுமையாக, நெகிழ்வு தன்மையற்று கட்டுப்படுத்தப்பட்டது [marriage was rigidly stiff and controlled, as a social function]. சுமேரியன் காதல் பாடல்கள் இவ்வற்றை உறுதி படுத்துகின்றன. உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக காட்டலாம். 
 
“உங்கள் வயிறு நிரம்பட்டும் , 
உங்கள் உடைகள் சுத்தமாகட்டும் , 
உங்கள் உடல், தலை கழுவட்டும்; 
இரவும் பகலும் மகிழுங்கள், 
ஆடி பாடி மகிழுங்கள்; 
உங்கள் கைபிடிக்கும் குழந்தையை பாருங்கள், 
உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழட்டும் ! 
இதுதான் மனிதர்களின் விதி”
 
“Let your belly be full, 
your clothes clean, 
your body and head washed; 
enjoy yourself day and night, 
dance, sing and have fun; 
look upon the child who holds your hand, 
and let your wife delight in your lap! 
This is the destiny of mortals.”
 
இந்த பாடல் வரிகள் பாபிலோனியர்களின் காதல் பற்றிய எண்ணத்தை எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் இந்த 5000 ஆண்டு எண்ணம்,  இன்றைய எண்ணத்தில் இருந்து பெரிய வேறுபாடு ஒன்றையும் காட்டவில்லை. உதாரணமாக அன்றைய இன்னும் ஒரு பாடல் ஒன்று : 
 
“தூக்கமே களைந்து விடு 
என் கைகள் காதலியை தழுவட்டும் !
நீ என்னுடன் பேசுவதால்
நான் மடியும் மட்டும் இதயம் பூரிக்கும்! 
என் அன்பே, உன்னை நினைத்து  
நேற்று இரவு இமைகள் மூட மறுத்ததால் 
இரவு முழுவதும் விழித்திருந்தேன்!" 
 
“Sleep, begone! 
I want to hold my darling in my arms! 
When you speak to me, 
you make my heart swell till I could die! 
I did not close my eyes last night; 
Yes, I was awake all night long, 
my darling, thinking of you.”
 
என்று கூறுகிறது. குழந்தைகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய, ஒரு அமைப்பு ஒன்றை எவராவது வடிவமைக்க வேண்டின் அது கட்டாயம் அதிகமாக இரு பெற்றோர் அமைப்பு ஒன்றுக்கே வர நேரிடும். இது குழந்தைகளுக்கு இரண்டு பெரியவர்களின் நேரம் மற்றும் பணம் போன்றவற்றை அடையக்கூடிய வசதி இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, தரமான பெற்றோர்சார்ந்த இயல்புகளையும் அவர்கள் அனுபவிக்கக் கூடிய ஒரு பொருத்தமான சூழ்நிலையையும் அவர்களுக்கு வழங்குகிறது [it also would provide a system of checks and balances that promoted quality parenting].
 
இங்கு நீங்கள் கவனிக்கக் கூடிய தன்மை என்னவென்றால், இரு பெற்றோர்களும், அந்த பிள்ளையின் உயிரியல் பெற்றோர் என்பதால், கட்டாயம், அதிகமாக, அவர்கள் குழந்தையுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பதுடன், அந்தக் குழந்தைக்காக தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள். அது மட்டும் அல்ல, யாராவது ஒரு பெற்றோர் குழந்தையை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியத்தை குறைக்கிறது. நீங்கள் மனித வரலாற்றை நுணுக்கமாக பார்த்தால், பழமையான கலாச்சாரத்தில், திருமணம் என்பது, மனித இனப்பெருக்கத்தின், ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பாகும் [Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction]. எனவே, குடும்பமும் குடும்பங்களை சுற்றி அமைக்கப்பட்ட சமுதாயமும் நிலைத்து உயிர்வாழ்வதற்கு இது உதவுகிறது. 
 
எப்படியாகினும், கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது.

உதாரணமாக, எம்மை இறப்பு பிரிக்கும் மட்டும் ["till death do us part"] என்ற அர்ப்பணிப்பு இன்று இல்லை. மேலும் அவர்கள் குடும்பமாக இருந்தாலும், தனித்தனியாக அல்லது வெவேறாக பல விடயங்களை கையாள முடியும். எனவே உங்கள் துணையை பெரிய கட்டுப்பாடுகள் அற்று தேர்ந்து எடுக்க முடியும். உதாரணமாக ஒரு பால் துணை. ஆனால் என்னை பொறுத்த வரையில், ஒரு பால் கூட்டுக்கும் திருமணம் என்று அழைப்பது தவறு என்று எண்ணுகிறேன். ஏன் என்றால் அதற்க்கு ஒரு தனித்துவமான நீண்ட காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்து உண்டு.

மேலும் marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும்  திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை  உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony  = matri  + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு  [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும்.
 
அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம், அல்லாவிட்டால் ஒரு குழப்ப நிலை மட்டும் அல்ல மனித சமுதாயமே தேங்கும் நிலைக்கு வரலாம் ? 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
  • Like 11
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அருமையான கட்டுரை தில்லை அண்ணா.. என் மனதில் இருந்ததை கூட்டிசேர்த்து எழுத தவித்துக்கொண்டிருந்ததை ஒரு அருவிபோல கொட்டி இருக்கிறீர்கள்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, kandiah Thillaivinayagalingam said:

சொல்ல வார்த்தைகள் இல்லை 

அத்தனை மூலை முடுக்கை எல்லாம் அலசி ஆராய்ந்து பதிவிட்டிருக்கிறீர்கள். நன்றி ஐயா நேரத்திற்கும் கருத்துக்கும். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, kandiah Thillaivinayagalingam said:

சிறப்புமிக்க அருமையான தகவல்களை வரி வழங்கியுள்ளீர்கள் நன்றிகள் பல   🙏

வித்தியாசமான, ஆழமான பார்வை. சில விடயங்களில் எனக்கு மாற்றுக் கருத்து இருப்பினும் நீங்கள் ஆழ அலசி இருப்பது நன்றாக உள்ளது.

மேலும் மேலும் எழுதுங்கள்

திருமணம் என்ற சொல்லுக்கு   எதிர்சொல்.   உண்டா?? 

  • Like 1
Posted
10 minutes ago, Kandiah57 said:

திருமணம் என்ற சொல்லுக்கு   எதிர்சொல்.   உண்டா?? 

விவாகரத்து.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Pope Francis has criticised laws that criminalise homosexuality as “unjust”, saying God loves all his children just as they are, and calling on Catholic bishops who support the laws to welcome LGBTQ+ people into the church.

“Being homosexual isn’t a crime,” Francis said on Tuesday in an interview.
 கடந்த வருட ஆரம்பத்தில் The Guardianல் வந்த பாப்பரசரின் செய்தி இது. . அப்படியிருக்க இன்று அவர் தன்பாலினத்தவரைப் பற்றி வசைபாடியாதாக கூறுவது எந்தளவு தூரம் உண்மையெனத் தெரியவில்லை. ஆனால் இப்படியான செய்திகளை பெரிதுபடுத்தி அவர்களை தீண்டத்தாகதவர்களாக காட்டுவது ஊடகங்களே. தன்பாலின தம்பதிகள் இன்று உலகில் ஒரு அங்கமாக உள்ளனர். ஆகையால் அவர்களை வெறுப்பதில்லை. 

இன்று இந்த தன்பாலின தம்பதிகளுக்கு திருமண உடன்படிக்கை அவசியம் என நம்புகிறேன் ஏனெனில் அவர்களது குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் சட்டரீதியான பி்ரச்சனைகள் வராது இருக்க. மற்றப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான கொள்கைகள். அவ்வளவுதான்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Kandiah57 said:

திருமணம் என்ற சொல்லுக்கு   எதிர்சொல்.   உண்டா?? 

மணமுறிவு அல்லது மணவிலக்கு ...... இவை சரியாகுமா .......!  😴

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சில தினங்களிற்கு முன் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த LGBTQIA வினரின் சுயமரியாதை நடைபவனி

Edited by பிழம்பு
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

மணமுறிவு அல்லது மணவிலக்கு ...... இவை சரியாகுமா .......!  😴

சரி வரலாம்,.....   ஜேர்மனியில்   விண்ணப்பங்களில்.    

Heirat,...அல்லது Leidig,...என்று இருக்கும்   திருமணம் ஆனாவர்....விவாகம். ஆனாவர்.  மற்றது  தனித்து இருப்பவர்’   என்பது கருத்து ஆகும்   

திருமணம் என்பதற்கு எதிர்சொல்.   தனித்து இருப்பவர்’   என்ற. ஒரு. மயக்கம் இருந்தது அது தான் கேட்டேன்    தெரியாது விடில் கேட்டு படிக்க தானே வேண்டும்   🤣🙏🤣 ஜேர்மனியில் இருப்பவர்கள் எவருமே உதவி செய்ய முன்வரவில்லை 🤣🤣 நீங்கள்   அக்கறையுடன் தேடி பதில்கள் தந்தமைக்கு  இரு கரம் கூப்பி 🙏🙏 மனமர்ந்த. நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Kandiah57 said:

திருமணம் என்ற சொல்லுக்கு   எதிர்சொல்.   உண்டா?? 

பிரம்மச்சாரியம் (சமஸ்கிரத தழுவல்  தான்) 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.