Jump to content

இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை

adminJune 22, 2024

சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால், மகன் அஜய் மருமகள் நம்ரதா  ஆகியோா்   சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணிக்மர்த்தி, அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதாகவும், அதிக மணி நேரம் வேலை செய்யுமாறு மிரட்டுவதாகவும் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, இந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு   23.51 பிராங்க்  செலவு செய்யும் அதேவேளை  வீட்டுப் பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு 7 பிராங்க்   மட்டுமே வழங்குவதாகவும்  ஊழியர்களின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்து அவர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர் எனவும்  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது

இந்த வழக்கு தொா்பில்  தீர்ப்பு வழங்கிய சுவிட்சர்லாந்து நீதிமன்றம்  இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால் இருவருக்கும் தலா   நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்களும்  அவரது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதாவுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும்  விதித்து தீா்ப்பளித்ள்ளது.

எனினும் அவர்கள் மீது தொடரப்பட்ட மனிதக் கடத்தல் தொடர்பான வழக்கை மட்டும் தள்ளுபடி செய்துள்ளது.

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்துஜா குழுமம். இந்தியாவில் அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் பேங்க் , ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் லிமிடெட், ஹிந்துஜா லஹிந்துஜா லேலண்ட் பைனான்ஸ் லிமிடெட் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருவதுடன்  37-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனங்களின் கிளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது

hinduja-800x757.jpg

 

 

https://globaltamilnews.net/2024/204557/

  • Like 2
Link to comment
Share on other sites

நல்ல தீர்ப்பு. இவர்கள் குடும்பத்துக்கே அவமானம்.

புதிதாக இவர்கள எந்தத் தவறும் செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக ஏழை மக்களை வருத்தி வேலை வாங்குவது இந்திய பணக்காரர்களுக்குச் சாதாரண விடயம். சக மனிதரை மதிக்கத் தெரியாதவர்கள். தனக்குக் கீழ் உள்ளவரை மிதிப்பதூம் மேலுள்ளவர்களுக்குப் பணிந்து போவதும் கலாச்சாரத்தில் ஊறிய ஒன்று. 

பிரான்சில் சில வருடங்களுக்கு முன் பிரான்சிலுள்ள இந்திய தூதரகத்தில் வேலை செய்த பணிப்பெண் ஒருவர் அவர்கள் செய்த கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து வெளியே வந்து தனக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படுத்தியிருந்தார். இவரும் சரியான தூக்கமின்றி ஒரு நாளைக்கு 16 மணித்தியாலம் வேலை செய்துள்ளார்.

உலகிலுள்ள ஏனையவர்களும் இத் தீர்ப்பைப் பார்த்து ஓரளவாவது அறிவு பெறட்டும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெரும் தொழிலதிபர்களால்… அவர்களின்  வீட்டு வேலை செய்யும் மனிதர்களை மதித்து உரிய சம்பளம் கொடுக்க மனம் இடம் கொடுக்கவில்லை.
இப்போ வசமாக மாட்டுப் பட்டு, வருடக் கணக்கில் களி தின்னப் போகின்றார்கள். சுவிஸ் நீதிமன்றத்துக்கும், கடுமையான தண்டனை வழங்கிய நீதிபதிக்கும் பாராட்டுக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2013ம் ஆண்டில் அப்பொழுது அமெரிக்காவிற்கான இந்தியாவின் துணை தூதுவராக இருந்த தேவயாணியும் (தமிழ் நடிகை அல்ல....😜) இதே போன்ற ஒரு குற்றச்சாட்டில் நியூயோர்க்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் அது இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு முறுகலானது.

https://en.wikipedia.org/wiki/Devyani_Khobragade_incident

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, இணையவன் said:

ஆண்டாண்டு காலமாக ஏழை மக்களை வருத்தி வேலை வாங்குவது இந்திய பணக்காரர்களுக்குச் சாதாரண விடயம். சக மனிதரை மதிக்கத் தெரியாதவர்கள். தனக்குக் கீழ் உள்ளவரை மிதிப்பதூம் மேலுள்ளவர்களுக்குப் பணிந்து போவதும் கலாச்சாரத்தில் ஊறிய ஒன்று. 

ஆனால் இந்த இந்தியா பேசினால்   நீதி   தர்மம்  புண்ணிய பூமி இந்தியா  என்று எத்தனை சுத்துமாத்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால் இந்த இந்தியா பேசினால்   நீதி   தர்மம்  புண்ணிய பூமி இந்தியா  என்று எத்தனை சுத்துமாத்துக்கள்.

அந்த மேல் தட்டு கொள்கை வகுப்பாளர்களின் முடிவே நாம் இப்படி நாடிழந்து தெரு தெருவாய் அலைவதுக்கு ஒரு  காரணம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

பிரான்சில் சில வருடங்களுக்கு முன் பிரான்சிலுள்ள இந்திய தூதரகத்தில் வேலை செய்த பணிப்பெண் ஒருவர் அவர்கள் செய்த கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து வெளியே வந்து தனக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படுத்தியிருந்தார். இவரும் சரியான தூக்கமின்றி ஒரு நாளைக்கு 16 மணித்தியாலம் வேலை செய்துள்ளார்.

1 hour ago, இணையவன் said:

புதிதாக இவர்கள எந்தத் தவறும் செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக ஏழை மக்களை வருத்தி வேலை வாங்குவது இந்திய பணக்காரர்களுக்குச் சாதாரண விடயம். சக மனிதரை மதிக்கத் தெரியாதவர்கள். தனக்குக் கீழ் உள்ளவரை மிதிப்பதூம் மேலுள்ளவர்களுக்குப் பணிந்து போவதும் கலாச்சாரத்தில் ஊறிய ஒன்று. 

இதே போல் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் தூக்கமின்றி,இட வசதியின்றி ஆக குறைந்த சம்பளத்தில் இன்றும் வேலை செய்கின்றார்கள். அதுவும் தமிழ் முதலாளிகளின் கீழ்.....
நான் கூட இன்றும் நாளொன்றிற்கு 14 மணித்தியாலம் வேலை செய்கின்றேன்.
ஜேர்மனிக்கு வந்த புதிதில் 17 மணித்தியாலம் கூட வேலை செய்திருக்கின்றேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனிக்கு வந்த புதிதில் 17 மணித்தியாலம் கூட வேலை செய்திருக்கின்றேன்

உண்மை தான் இந்தியர்கள் மட்டுமல்ல எல்லா நாட்டவரும்
தங்கள் வசதிக்கேற்ப சம்பளம் கொடுப்பார்கள்.
85  இல் நான் ஜெர்மனி வந்து முதல் வேலை செய்தது

இத்தாலி பீசா கடை
ஒரு நாள் பத்து மணி நேரம் வேலை
நாள் சம்பளம் 20  ஜெர்மன் மார்க்  
அதாவது மணித்தியாலம் இரண்டு மார்க்

இப்போது கட்டாய சம்பளம் மணித்தியாலம்  12  யூரோ
வேலை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இந்தச் சம்பளம்
கொடுத்தே ஆக வேண்டும்🙃

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://usa.akshardham.org/

நியூயேர்சியில் 150 ஏக்கர் வரையான நிலப் பரப்பில் பிரமாண்டமான கோவில் கட்டவென்று இந்தியாவிலிருந்து ஆட்களை கொண்டுவந்து குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்வித்ததை பிடித்து பெரிய பிரச்சனை நடந்தது.

https://m.thewire.in/article/labour/new-jerseys-akshardham-temple-that-allegedly-flouted-labour-wage-laws-opens/amp

சம்பளம் 1 டாலர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கோடீஸ்வர குடும்பத்தினருக்கு சுவிட்சர்லாந்தில் 4 ஆண்டு சிறைத் தண்டனை - என்ன காரணம்?

பணியாளர்களை கொடுமைப்படுத்திய வழக்கில் ஹிந்துஜா குடும்பத்திற்கு சுவிஸ் நீதிமன்றம் வழங்கிய தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், இமோஜென் ஃபாக்ஸ்
  • பதவி, பிபிசி ஜெனிவா
  • 22 ஜூன் 2024
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

வீட்டுப் பணியாளர்களை கொடுமைபடுத்திய குற்றத்திற்காக பிரிட்டனில் வசித்து வரும் பணக்கார 'ஹிந்துஜா’ குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

'ஹிந்துஜா’ குடும்பத்தினர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள தங்களுடைய வீட்டில் பணிபுரிய சில பணியாளர்களை இந்தியாவில் இருந்து அழைத்து வந்துள்ளனர்.

பிரகாஷ் ஹிந்துஜா, கமல் ஹிந்துஜா, மற்றும் அவர்களது மகன் அஜய் மற்றும் மருமகள் நம்ரதா ஆகியோர் சட்டவிரோதமாகப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியது மற்றும் சுரண்டலில் ஈடுபட்டதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அவர் நான்கு முதல் நான்கரை ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். இருப்பினும், ஆள்கடத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ஹிந்துஜா குடும்பத்தினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது வழக்கறிஞர் ராபர்ட் அசெல், "இது அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் இறுதிவரை போராடுவோம்," என்றார்.

ஹிந்துஜா குடும்பம் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வேலை செய்ததற்கு ஏழு பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.740) மட்டுமே வழங்கியதாகக் குற்றம் சாட்டினார் இந்தியாவிலிருந்து அவரால் அழைத்துச்செல்லப்பட்ட மூன்று ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சுவிஸ் சட்டத்தின்படி, ஊழியர்களுக்கு இதற்கு குறைந்தபட்சம் 70 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7400) வரை வழங்கி இருக்க வேண்டும்.

தங்களது பாஸ்போர்டைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு, சுதந்திரமாக நடமாடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 
பணியாளர்களை கொடுமைப்படுத்திய வழக்கில் ஹிந்துஜா குடும்பத்திற்கு சுவிஸ் நீதிமன்றம் வழங்கிய தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நீதிமன்றத்தில் விசாரணைக்கு செல்லும் ஹிந்துஜா குடும்பம்

பணியாளர்களை விட நாய்களுக்கு அதிகம் செலவிட்டனர்

ஜெனிவாவில் உள்ள ஒரு வீட்டில் ஊழியர்களைச் சுரண்டி வேலை வாங்குவது தொடர்பாக ஹிந்துஜா குடும்பத்திற்கெதிராக விசாரணை தொடங்கப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இந்த குடும்பத்தை சுவிஸ் நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

47 பில்லியன் டாலர் (சுமார் 4 லட்சம் கோடி இந்திய ரூபாய்) வணிக மதிப்பு கொண்ட கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தைக் கொண்ட ஒரு குடும்பம், தங்கள் வேலையாட்களை விட அவர்களின் நாய்க்கு அதிக பணத்தைச் செலவழிப்பதாக வழக்குத் தொடரப்பட்டது.

ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கையின்படி, அரசாங்க வழக்கறிஞர் யவ்ஸ் பெர்டோசா, நீதிமன்றத்தில், "ஹிந்துஜா குடும்பத்தினர் ஒரு பணியாளரை விட தங்கள் நாய்க்கு அதிகம் செலவழித்துள்ளனர்," என்று கூறினார்.

அந்த வீட்டில் ஒரு முதிர் பணிப்பெண் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வேலை செய்துள்ளார். அதற்கு அவருக்கு கொடுக்கப்படும் ஊதியம் வெறும் $7.84 (ரூ.655.13) தான். அதே நேரத்தில் அந்த குடும்பம் தங்கள் நாய்க்கான உணவு மற்றும் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு $10,000 (ரூ.8,35,629.50) செலவழித்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன.

பல வேலையாட்கள் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டியிருந்தது என்றும், அவர்களது சம்பளமும் இந்திய ரூபாயில் தான் இருக்கும் என்றும் பிராங்க் நாணய மதிப்பில் கொடுக்கப்படுவதில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.

ஹிந்துஜா குடும்பத்தினர் தரப்பு வீட்டில் வேலைக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு போதிய வசதிகளைச் செய்து கொடுத்ததாகவும், அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

பணியாளர்களை கொடுமைப்படுத்திய வழக்கில் ஹிந்துஜா குடும்பத்திற்கு சுவிஸ் நீதிமன்றம் வழங்கிய தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,10 டவுனிங் தெருவுக்கு அருகில் அமைந்திருக்கும் ஹிந்துஜா குழுமத்தின் ஹோட்டல்

சர்ச்சைக்குரிய கருத்துக்கள்

பிபிசி ஜெனிவா செய்தியாளர் இமோஜென் ஃபாக்ஸ் (Imogen Fox) அறிக்கையின்படி, 'குறைந்த சம்பளம்’ என்ற குற்றச்சாட்டை ஹிந்துஜா குடும்பத்தின் வழக்கறிஞர்கள் மறுக்கவில்லை, ஆனால் பணியாட்கள் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்பட்டு கெளரவத்துடன் நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.

"சம்பளத்தை குறைக்கக் கூடாது," என்று வழக்கறிஞர் யேல் ஹயாத் கூறினார்.

பணியாட்களிடம் நீண்ட நேரம் வேலை வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் மறுக்கப்பட்டன, அதில் குழந்தைகளுடன் திரைப்படங்களைப் பார்ப்பதை வேலையாகக் கருத முடியாது என்று ஒரு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

ஹிந்துஜா தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், "பாதிக்கப்பட்டோம் எனக் கூறும் பலர் ஹிந்துஜா குடும்பத்திற்காக பல சந்தர்ப்பங்களில் பணிபுரிந்துள்ளனர். பணிச்சூழலில் அனைவரும் திருப்தி அடைந்திருப்பதை இது காட்டுகிறது," என்றனர்.

அக்குடும்பத்துக்காக வாதாடிய வழக்கறிஞர்கள், குடும்பத்திற்காக முன்பு பணியாற்றிய பலரையும் சாட்சியாக அழைத்தனர்.

அவர்கள் நீதிமன்றத்தில் ஹிந்துஜா குடும்பத்தை நன்னடத்தை கொண்டவர்கள் என்றும், அவர்கள் தங்கள் வேலையாட்களை மரியாதையுடன் நடத்தியதாகவும் தெரிவித்தனர்.

ஹிந்துஜா குடும்பத்தின் வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் மீது அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டினார்.

 
பணியாளர்களை கொடுமைப்படுத்திய வழக்கில் ஹிந்துஜா குடும்பத்திற்கு சுவிஸ் நீதிமன்றம் வழங்கிய தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேச கவனம் பெற்றுள்ள ஹிந்துஜா குடும்பம்

இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட ஹிந்துஜா குடும்பம், அதே பெயரில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறது.

கட்டுமானம், ஆடை, ஆட்டோமொபைல், எண்ணெய், வங்கி மற்றும் நிதி போன்ற துறைகளில் ஹிந்துஜா குழுமம் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.

ஹிந்துஜா குழுமத்தின் நிறுவனர் பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜா, சுதந்திர இந்தியாவில் நன்கு அறியப்பட்ட சிந்தி நகரமான ஷிகர்பூரில் பிறந்தார்.

1914-இல், அவர் இந்தியாவின் வர்த்தக மற்றும் நிதியின் தலைநகரான பம்பாய்க்கு (இப்போது மும்பை) பயணம் செய்தார்.

ஹிந்துஜா குழுமத்தின் இணையதளத் தகவலின்படி, அவர் அங்குள்ள வணிகத்தின் நுணுக்கங்களை விரைவாகக் கற்றுக்கொண்டார்.

சிந்துவில் தொடங்கிய அவரது வணிகப் பயணம் 1919-இல் இரானில் ஒரு அலுவலகத்தைத் தொடங்கி சர்வதேச அரங்கில் நுழைந்தார்.

குழுவின் தலைமையகம் 1979 வரை இரானில் இயங்கியது. அதன் பிறகு ஐரோப்பாவிற்கு மாற்றப்பட்டது.

ஆரம்ப ஆண்டுகளில், ஹிந்துஜா குழுமத்தின் செயல்பாடுகளின் இரண்டு முக்கிய அடித்தளங்களாக வணிக வங்கி மற்றும் வர்த்தகம் செயல்பட்டன.

ஹிந்துஜா குழும நிறுவனர் பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜாவின் மூன்று மகன்கள் -- ஸ்ரீசந்த், கோபிசந்த் மற்றும் பிரகாஷ் ஆகியோர் செயல்பாடுகளைக் கையிலெடுத்து, நிறுவனத்தை வெளிநாடுகளில் விரிவுபடுத்தினர்.

2023-ஆம் ஆண்டில் ஸ்ரீசந்த் ஹிந்துஜாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது இளைய சகோதரர் கோபிசந்த் அவருக்குப் பதிலாக குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றார். சுவிட்சர்லாந்தில் மனித கடத்தல் (human trafficking) வழக்கை எதிர்கொண்டிருந்த பிரகாஷ், மொனாக்கோவில் தேக்கமடைந்த ஒரு வணிகத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.

ஹிந்துஜா குடும்பம் பிரிட்டனில் பல மதிப்புமிக்க சொத்துக்களை வாங்கியுள்ளது.

 

சகோதரர்களுக்கிடையே பிரச்னை

ஹிந்துஜா குழுமம் செப்டம்பர் 2023-இல் லண்டனின் ஓல்ட் வார் அலுவலகமான வைட்ஹாலில் ராஃபிள்ஸ் (Raffles) ஹோட்டலைக் கட்டியது. இது முன்னர் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகமாக இருந்தது. இந்த ஹோட்டலின் தனித்துவமான அம்சம், இது கிரேட் பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் தெருவில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்தக் குழு கார்ல்டன் ஹவுஸின் மாடியில் ஒரு தளத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. அதில் பல அலுவலகங்கள், குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. தவிர, இது பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தங்கள் நிறுவனங்களில் 2 லட்சம் பேர் பணிபுரிவதாக ஹிந்துஜா குழுமம் கூறுகிறது.

ஜூன் 2020-இல் பிரிட்டன் நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வாக்குமூலத்தின்படி, ஹிந்துஜா சகோதரர்களுக்கு இடையேயான உறவில் சில சிக்கல்கள் இருந்தது.

சகோதரர்களில் மூத்தவரான ஸ்ரீசந்த், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள வங்கியின் உரிமையைப் பெறுவதற்காக தனது இளைய சகோதரருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன.

ஜெனிவாவின் இருண்ட பக்கம்

பணியாளர்களை கொடுமைப்படுத்திய வழக்கில் ஹிந்துஜா குடும்பத்திற்கு சுவிஸ் நீதிமன்றம் வழங்கிய தண்டனை

பட மூலாதாரம்,MEDIA

உலக பணக்காரர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் மையமாக இருக்கும் ஜெனிவாவில் பணியாட்களை கொடுமைப்படுத்துவதாக பதிவு செய்யப்படுவது இது முதல் வழக்கு அல்ல.

2008-இல், லிபிய முன்னாள் சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் மகன் ஹன்னிபால் கடாபியும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து அல்பைன் நகர காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஹன்னிபால் கடாபியும் அவரது மனைவியும் தங்கள் வேலைக்காரரை அடித்து கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த வழக்கு முடிக்கப்பட்டது, ஆனால் இதன் காரணமாக லிபியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் ராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டது, பழி வாங்கும் விதமான இரண்டு சுவிஸ் குடிமக்கள் திரிபோலியில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு, நான்கு பிலிப்பைன்ஸ் பணியாளர்கள், பல ஆண்டுகளாக தங்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2024 at 23:56, வாத்தியார் said:

உண்மை தான் இந்தியர்கள் மட்டுமல்ல எல்லா நாட்டவரும்
தங்கள் வசதிக்கேற்ப சம்பளம் கொடுப்பார்கள்.
85  இல் நான் ஜெர்மனி வந்து முதல் வேலை செய்தது

இத்தாலி பீசா கடை
ஒரு நாள் பத்து மணி நேரம் வேலை
நாள் சம்பளம் 20  ஜெர்மன் மார்க்  
அதாவது மணித்தியாலம் இரண்டு மார்க்

இப்போது கட்டாய சம்பளம் மணித்தியாலம்  12  யூரோ
வேலை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இந்தச் சம்பளம்
கொடுத்தே ஆக வேண்டும்🙃

நீங்கள் சொல்வது உண்மைதான்.


நான் வேலை செய்ய ஆரம்பித்த போது வேலை செய்ய அனுமதியில்லை. கள்ள வேலை.  அப்போது சோசல் காசு 220 மார்க் கையில் மாதாமாதம் சாப்பாட்டு செலவிற்காக தருவார்கள். என் முதலாளியோ அதி புத்திசாலி. சோசல் காசையும் தான் தரும் சம்பளத்தையும் கூட்டிப்பார்த்து மாதம் 400 மார்க் கையில் தந்தார். காலையில் 10 மணிக்கு வேலைக்கு போக வேண்டும். சலாட் மற்றும் கோப்பை என் பொறுப்பு. நானும் முகம் சுளிக்காமல் வேலை செய்ய செய்ய இன்னும் பல வேலைகளை அதிகமாக்கினார் என் முதலாளி. நாடும் புதிது.மொழியும் புதிது. மக்களும் புதிது வேலைகளும் புதிது.காலநிலையும் புதிது. அத்துடன் எதையும் தாங்கும் என் உடல்நிலையும் வயதும். எருமை மாடு போல் 400 மார்க்குக்கு வேலை செய்தேன். இரவு 12 மணி வரைக்கும் வேலை செய்தேன். கோலா போத்தில் குடிக்க வைப்பார்கள். நான் அதை முழுவதும் குடித்து முடிப்பதால்.....தண்ணீர் விடாய் என்றால் பைப் தண்ணீர் குடிக்குமாறு சொன்னார்கள்.
 

சனி ஞாயிறு முதல் விடுமுறை நாட்கள் என எல்லா நாட்களிலும் வேலை செய்தேன். 3 வருடங்களாக வழமையான விடுமுறை ஏதுமில்லை. எனக்கு சட்டதிட்டங்கள் சொல்லித்தர எவருமில்லை. 

விசா பயம்,திருப்பி அனுப்பிவிடுவார்கள், இருக்கும் இடத்தை விட்டு வேறு இடங்களுக்கு போக அனுமதியில்லை இந்த பயத்தினால் சில வருடங்கள் இருண்ட வாழ்க்கை வாழ்ந்தேன்

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2024 at 23:19, குமாரசாமி said:

இதே போல் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் தூக்கமின்றி,இட வசதியின்றி ஆக குறைந்த சம்பளத்தில் இன்றும் வேலை செய்கின்றார்கள். அதுவும் தமிழ் முதலாளிகளின் கீழ்.....
நான் கூட இன்றும் நாளொன்றிற்கு 14 மணித்தியாலம் வேலை செய்கின்றேன்.
ஜேர்மனிக்கு வந்த புதிதில் 17 மணித்தியாலம் கூட வேலை செய்திருக்கின்றேன்

 

இவை இரண்டும் வெவ்வேறு அண்ணா 

இங்கே யாரும் உங்களை கட்டாயப் படுத்தி வேலை வாங்கவில்லை. 17 மணித்தியாலம் என்பது உங்கள் முடிவு. அது ஜேர்மனி சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதையும் மீறி......?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 22/6/2024 at 23:56, வாத்தியார் said:

உண்மை தான் இந்தியர்கள் மட்டுமல்ல எல்லா நாட்டவரும்
தங்கள் வசதிக்கேற்ப சம்பளம் கொடுப்பார்கள்.
85  இல் நான் ஜெர்மனி வந்து முதல் வேலை செய்தது

இத்தாலி பீசா கடை
ஒரு நாள் பத்து மணி நேரம் வேலை
நாள் சம்பளம் 20  ஜெர்மன் மார்க்  
அதாவது மணித்தியாலம் இரண்டு மார்க்

இப்போது கட்டாய சம்பளம் மணித்தியாலம்  12  யூரோ
வேலை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இந்தச் சம்பளம்
கொடுத்தே ஆக வேண்டும்🙃

இவை முட்டையா கோழியா என்பது போன்ற இழுபறி நிலை.

எமக்கான தேவை மற்றும் சுமைகளே எம்மை இவற்றை செய்ய திணிக்கின்றன. பின்னர் கொஞ்சம் வளர்ந்த பின்னர் அவை தெவிட்டி விடுகின்றன. ஆனால் உண்மையில் என்னை பொறுத்தவரை சரி பிழைகளுக்கு அப்பால் அவையே எமக்கு, எம் குடும்பங்களுக்கு அந்த நேரத்தில் சோறு போட்டன. 

இது ஒரு வட்டம் 

இப்படி திரட்டியபடி தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்த சிலர் இப்போது தாம் முதலாளி ஆகியதும் அதையே இன்னொருவருக்கு செய்து கொண்டு இருப்பது கண்கூடு.

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இவை இரண்டும் வெவ்வேறு அண்ணா 

இங்கே யாரும் உங்களை கட்டாயப் படுத்தி வேலை வாங்கவில்லை. 17 மணித்தியாலம் என்பது உங்கள் முடிவு. அது ஜேர்மனி சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதையும் மீறி......?

நான் ஜேர்மனிக்கு வந்த புதிசில மணித்தியாலம் 1மார்க்குக்கு கட்டாய வேலையாய் வேலை செய்தனான் விசுகர்.றோட்டு கூட்டுற வேலை.காலமை 6 மணிக்கு தொடங்கினால்  பின்னேரம் இரண்டு மணி வரைக்கும் ஒரே கூட்டுத்தான் றோட்டால போறவாற சனங்கள் என்னை ஏதோ சேக்க்ஸ்ல நிக்கிறவனை பாக்கிற மாதிரி பாத்துக்கொண்டு போவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர உயரப் பறந்தாலும், ஊர்க் குருவி பருந்தாகா. 

எத்தனை பிறவியெடுத்தாலும் இந்தியன் இந்தியனே. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்பாவிகளை பொதுமக்களை கொல்வதால் என்ன பயன்? அரசன் கொன்றால் அரசனைஅல்லவா கொல்ல வேண்டும். எத்தனையோ நாட்களுக்கு முதலே எரிச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் ஏதோ ஒரு தேவையின் நிமித்தம் வீதிகளில் உலாவுகிறார்கள்.
    • சாத்தான்... வேதம் ஓதுகின்றது.  எங்களை நம்பட்டாம். 😂 சுமந்திரன் பதவி விலகினால்... பக்கத்தில் உள்ள தேவாலயத்தில் 10 மெழுகு திரி கொழுத்துவேன். 
    • மிகபெரும் போர் நடந்துகொண்டிருக்கும்போது, இஸ்ரேலையே அழித்துவிடுவோம் என்று வீரவசனம் பேசிக்கொண்டு, லெபனானில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தலைவரா இஸ்ரேல் தூக்கி கொண்டிருக்கும்போது, பேஜர் வாக்கி டாக்கி என்று கற்பனைக்கெட்டாத தொழில்நுட்ப தாக்குதல்  செய்துகொண்டு, பெய்ரூட்வரை போய் விமானதாக்குதல் செய்துகொண்டு இருக்கும்போது  எந்தவித பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுமில்லாமல் மிக இலகுவாக இலக்கு வைக்க கூடிய நகரத்தின் நடுவே உள்ள அவர்களின் தலைமையகத்தில் போய் இருந்திருக்காரே இந்த மூளையை வைச்சுக்கொண்டு எப்படி இஸ்ரேலை வெல்ல போகிறார்கள்? வெறும் அல்லாஹ் அல்லாஹ் என்றால் எதிரிகளை எதிர்கொள்ள முடியாது என்பதை ஹிஸ்புல்லா கமாஸ் தலமைகளின் ஒட்டுமொத்த அழிவு காண்பிக்கிறது. இத்தனைக்கும் காரணம் ஈரான். பயிற்சிகளும் ஆயுதங்களும் கொடுத்து இவர்களை உருவாக்கி ரத்தத்தை சூடாக்கி உசுப்பேத்திவிட்டு  இஸ்ரேலை அழிக்கபோகிறோம் என்று பிலிம் காட்டிவிட்டு இவர்களை முன்னே தள்ளிவிட்டு  தலைபோகும் நேரங்களில் சத்தம் போடாமல் தான் ஒதுங்கி கொள்கிறது, தற்போது ஈரானிய ஆன்மீக தலைவரிலிருந்து அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு ஈரான் நகர்த்திவிட்டது என்றும் செய்தி வருகிறது. கமாஸ் ஹிஸ்புல்லா வரிசையில் இனிமே ஹுத்திகள்மேலே இஸ்ரேல் தனது கவனத்தை திருப்பும் என்று எதிர்பார்க்கலாம். இஸ்ரேலை வெல்ல அல்லாஹ் போதாது இஸ்ரேல்போல அறிவுகூர்மை வேண்டுமென்பதை காலம் இஸ்ரேலிய எதிர்ப்பு இஸ்லாமிய இயக்கங்களுக்கு உணர்த்திக்கிட்டே இருக்கும்.
    • சாத்தான்....  இந்த இக்கட்டான சூழ்நிலையில், விக்னேஸ்வரனின் முன் மாதிரியை பாராட்டியே ஆக வேண்டும். சுமந்திரனிடம்... அப்படியான முன்மாதிரி  இருக்குமா என்பது கேள்விக்குறியே.  சுமந்திரன் கதையை கொடுத்து, ஆட்களை திசை திருப்பி  காரியம் சாதிப்பதில் கில்லாடி. ஆன படியால்... இவரை  நம்ப முதல், நாற்பது தரம் யோசிக்க வேணும். 😂
    • இவர் விலக தேவையில்லை அப்படியே இருக்கட்டும்   தமிழரசு கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்கு போடாமல்   அனுரவின். கட்சிக்கு போடாலாம் மயிலிட்டி மிகப்பெரிய இராணுவ முகம்  தமிழ் மக்களின் வீடுகள் காணிகள்  இல்  அமைக்கப்பட்டிருந்தது   அங்குள்ள வீடுகளில் கதவுகள் யன்னல்கள்.  கூரைகள்.  எவையுமோ இல்லை   ஆனால்  அந்த முகமை   விட்டுட்டு இராணுவம் பூரணமாக வெளியேறி உள்ளது”   🙏👍  2009 இலிருந்து ஒவ்வொரு ஆட்சியிலும்.  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்  கோப்பி தேனீர் குடித்து சாப்பிட்டு   கதைத்தவர்கள்.  என்ன பலன்??  எதுவுமில்லை   இவர்களை பாராளுமன்றம் அனுப்பினால் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவார்கள்.   ஒருபோதும் பிரச்சனைகளை தீர்க்க போவதில்லை   எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் அனுர இராணுவத்தை வெளியேற்றியுள்ளார்   🙏 வாழ்த்துக்கள்   
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.