Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, Kapithan said:

வாசிப்பவர்கள் எல்லோரும் முட்டள்கள் என்று தமிழ்வின் நினைப்பதன் எதிரொலிதான் மேற்குறித்த செய்தியும் தலையங்கமும். 

வாசிப்பவர்களில் சிலருக்காவது பகுத்தறியும் தன்மை இருப்பது தமிழ்வின்னுக்குப் புரியாதது வியப்பைத் தரவில்லை. 

எழுதியவர் நடிகர் லிவிங்ஸ்ரனாயிருக்குமோ 🤣

உங்களால் ஏதும் ஆதார‌த்தை காட்ட‌ முடியுமா

யாழ்ப்பாண‌த்து ம‌க்க‌ள் ச‌ம்ப‌ந்த‌ருக்கு இறுதி அஞ்ச‌லி செய்த‌தை.....................

சோச‌ல் மீடியாக்க‌ளில் ச‌ம்ப‌ந்த‌ரின் ப‌ட‌த்தை போட்டு இர‌ங்க‌ள் கூட‌ யாரும் தெரிவிச்ச‌த‌ நான் பார்க்க‌  வில்லை...................நீங்க‌ள் க‌ண்டால் இணைத்து விடுங்கோ. நீங்க‌ளும் க‌ண்ட‌ மேனிக்கு இதுக்கை நிறைய‌ அடிச்சு விடுகிறீங்க‌ள் ஆனால் அது உண்மை ஆகி விடாது.......................ம‌க்க‌ளை ஏமாற்றி பிழைச்ச‌ எவ‌ரும் ஒரு நாள் ஒதுக்க‌ ப‌டுவின‌ம் என்ற‌துக்கு ச‌ம்ப‌ந்த‌ரின் இறுதி ச‌ட‌ங்கு ந‌ல்ல‌தொரு எடுத்துக் காட்டு😉........................இந்த‌ திரியில் ஒரு சில‌ உற‌வுக‌ளை த‌விற‌

ச‌ம்ப‌ந்த‌ரை வெறுத்த‌ உற‌வுக‌ள் தான் அதிக‌ம்.......................அது அவ‌ர்க‌ளின் எழுத்தின் மூல‌ம் தெரியுது😄.......................

  • Like 1
  • Replies 328
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

நிழலி

சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

ஈழப்பிரியன்

கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, விசுகு said:

அங்கே நடந்ததற்கு பல கதைகள் உண்டு. ஆனால் புலிகள் கூட்டமைப்பை கூட்டி பேசி வைத்து இருந்திருந்ததே இவ்வாறு ஒரு நிலை வந்தால் வெளியில் பேசத்தான். ஆனால் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஒழிந்து இருந்து  அனுமதித்து ஊக்கிவித்தது தான் அழிவை பல மடங்கு அதிகமாக்கியது. இது எனது கருத்து. 

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சுதந்திரமாக செயற்பட முடியாது. எலஙா அரசியல் முடிவுகளையும் நாம் புலிகள் மட்டும் தான் எடுக்கிறோம். புலிகள் சொல்வதை பேச மட்டும் தான் அவர்களால் முடியும் என்று அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாக ஊடகங்களுக்கு  தெரிவித்த  பின்பு,  அங்கு நடப்பவை பற்றி கூட்டமைப்பினர் என்ன கூறினாலும் அது புலிகள் கூறுவதாக தானே உலக நாடுகள் எடுக்கும். அப்படியருக்க அவர்கள் கூறிலாலென்ன கூறமல் விட்டாலென்ன. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, விசுகு said:

அங்கே நடந்ததற்கு பல கதைகள் உண்டு. ஆனால் புலிகள் கூட்டமைப்பை கூட்டி பேசி வைத்து இருந்திருந்ததே இவ்வாறு ஒரு நிலை வந்தால் வெளியில் பேசத்தான். ஆனால் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஒழிந்து இருந்து  அனுமதித்து ஊக்கிவித்தது தான் அழிவை பல மடங்கு அதிகமாக்கியது. இது எனது கருத்து. 

 ஒரு சொற்பிரயோகம் இருக்கிறது: "தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் சேதம்- self-inflicted injury".

அதைத் தான் இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் விபரிப்பின் படி வன்னித் தலைமையின் சிந்தனை "மக்கள் போகாமல் தடுத்துப் பார்ப்போம், சிங்களவன் - எல்லோரும் எதிர்பார்ப்பது போலவே- மக்கள் மீது குண்டு போட்டுப் பேரழிவை ஏற்படுத்துவான். அந்த நேரம் தெற்கில் இருக்கும் கூட்டமைப்பை இதைப் பகிரங்கப் படுத்தி சிங்களவனை யுத்தத்தை நிறுத்த நிர்ப்பந்திப்போம்" இதையா பேசி வைத்த திட்டம் என்கிறீர்கள்? இதில், இந்த "தடுத்தல்" என்ற முதல்படியை, முடிவை எடுத்திருக்கா விட்டால் இழப்பு இன்னும் குறைந்திருக்குமே? சிம்பிள் கணக்கு. தடுத்து வைக்கும் முதல் முடிவை - நீங்கள் சொல்வது போல திட்டமிட்டு - எடுத்த தரப்பை எவ்வளவு ஆக்ரோஷமாக நீங்கள் திட்ட வேண்டும் நியாயப் படி? 

  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, island said:

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சுதந்திரமாக செயற்பட முடியாது. எலஙா அரசியல் முடிவுகளையும் நாம் புலிகள் மட்டும் தான் எடுக்கிறோம். புலிகள் சொல்வதை பேச மட்டும் தான் அவர்களால் முடியும் என்று அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாக ஊடகங்களுக்கு  தெரிவித்த  பின்பு,  அங்கு நடப்பவை பற்றி கூட்டமைப்பினர் என்ன கூறினாலும் அது புலிகள் கூறுவதாக தானே உலக நாடுகள் எடுக்கும். அப்படியருக்க அவர்கள் கூறிலாலென்ன கூறமல் விட்டாலென்ன. 

உண்மையிலேயே இது நடந்து தான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் யாரோ அமெரிக்க அதிகாரியிடம் (றொபர்ட் பிளேக் அல்லது தென்னாசிய வெளியுறவு இணைச் செயலாளராக இருக்கலாம்) "யுத்தத்தை நிறுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுங்கள்" என்று ஒரு தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பில் கேட்ட போது "புலிகளை மக்களை வெளியேற அனுமதிக்க நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனப் பதில் கூறப் பட்டிருக்கிறது. அதற்கு "நீங்கள் எங்களுக்கு Hobson's choice தந்திருக்கிறீர்கள்" என்று அந்த தமிழ் பிரதிநிதிகள் கூறியதாக நினைவில் இருக்கிறது. 

Hobson's choice: ஒரேயொரு தெரிவு மட்டும் இருக்கும் போது பல தெரிவுகள் இருப்பது போல தெரியும் மாய நிலை - an illusion of choices.  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Justin said:

 ஒரு சொற்பிரயோகம் இருக்கிறது: "தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் சேதம்- self-inflicted injury".

அதைத் தான் இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் விபரிப்பின் படி வன்னித் தலைமையின் சிந்தனை "மக்கள் போகாமல் தடுத்துப் பார்ப்போம், சிங்களவன் - எல்லோரும் எதிர்பார்ப்பது போலவே- மக்கள் மீது குண்டு போட்டுப் பேரழிவை ஏற்படுத்துவான். அந்த நேரம் தெற்கில் இருக்கும் கூட்டமைப்பை இதைப் பகிரங்கப் படுத்தி சிங்களவனை யுத்தத்தை நிறுத்த நிர்ப்பந்திப்போம்" இதையா பேசி வைத்த திட்டம் என்கிறீர்கள்? இதில், இந்த "தடுத்தல்" என்ற முதல்படியை, முடிவை எடுத்திருக்கா விட்டால் இழப்பு இன்னும் குறைந்திருக்குமே? சிம்பிள் கணக்கு. தடுத்து வைக்கும் முதல் முடிவை - நீங்கள் சொல்வது போல திட்டமிட்டு - எடுத்த தரப்பை எவ்வளவு ஆக்ரோஷமாக நீங்கள் திட்ட வேண்டும் நியாயப் படி? 

புலிகளை வன்னித் தலைமை என்பவர்களுடன் பேசுவதில்லை. ஆகக்குறைந்த தமிழர் வரலாறு தெரியாதவர்கள் என்பது என் முடிவு. நன்றி. வணக்கம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, விசுகு said:

புலிகளை வன்னித் தலைமை என்பவர்களுடன் பேசுவதில்லை. ஆகக்குறைந்த தமிழர் வரலாறு தெரியாதவர்கள் என்பது என் முடிவு. நன்றி. வணக்கம். 

 கருத்தியல் ரீதியாக உரையாட முடியாத போது உண்மைகளை ஏற்றுகொள்ள முடியாதபோது  தப்பியோட கிடைத்த நொண்டிச் சாட்டு. கிடைத்த சாட்டை விடாமல் …. Escape………. Escape 😂😂😂😂😂

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகளது சமாதான காலத்தில் அப்போதைய கூட்டமைப்பினது நாடாளுமன்ற உறுப்பினர்களில் அனேகமாணோர் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தவர்கள். அந்தக் காலத்தில் சம்பந்தன் ஐயா அவர்கள் பின்லாந்துக்குச் சக உறுப்பினர்களுடன் வந்திருந்தார்.

அசாத்திய நினைவாற்றல் உதாரணமாக எந்தவிதக் குறிப்புகள் இல்லாமல் அனைவரது தொலைபேசி இலக்கங்களையும் சொல்லுவார். நாங்கள்தான் அவர்கூறும் தொலைபேசி இலக்கங்களை அழுத்திக்கொடுப்பது. 

அந்தவேளை சுமந்திரன் அவருடன் தாயகத்தில் பணியாற்றியிருந்தார் என நினைக்கிறேன். அதாவது சட்டத்தரணியாக.

சம்பந்தன் ஐயா அடிக்கடி சுமந்திரனுடன் தொலைபேசி அழைப்பை எடுத்துக் கதைப்பார் அந்த வேளையில் இலகுவான வாட் அப்போ வைபரோ இருப்பதில்லை நேரடி அழைப்புத்தான் அனைத்தையும் புலிகளது கிளைதான் ஏற்பாடு செய்திருந்தது.

அவர் பலமுறை சுமந்திரனுடன் பேசும்போது உடனிருந்திருக்கிறேன் மரியாதை கருதி அவர் என்ன பேசுகிறார் என்பதைக் கூர்ந்து கவனிப்பதில்லை. ஆனால் அவர் சுமந்திரனை விளிக்கும்போது முழுப்பெயரும் சொல்லி அழைப்பதில்லை சமன் சுமன் என ஒரு குழந்தைப்பிள்ளையை கூப்பிடும் பாசத்துடன் அழைப்பார். ஏதோ கடிதங்கள் மற்றும் வழக்குகள் சம்பந்தமாகக் கதைக்கிறர் என நான் நினைப்பதுண்டு. பிற்காலத்தில் அந்தாளது புகழுக்குக் கொள்ளிவைக்கும் ஒரு ஆளாகக் கட்சிக்குள் சுமந்திரன் என்பவர் நுளைவார் என்பதை யார் கண்டது.

சம்பந்தன் ஐயாவது பிற்காலத்தில் அவரது அனைத்துச் செயல்களுக்கும் பின்னாடி நின்றது சுமந்திரந்தான் அறிக்கை விடுவதிலிருந்து அரசியல் முடிவுகள் எடுப்பதுவரை தன்ர எண்ணத்துக்கு அவரது பெயரைச்சொல்லி அந்தாளை நாசமாக்கிப்போட்டார்.

சம்பந்தன் ஐயா ஒரு அரசியல்வாதியாக இருந்து தமிழர்கள் விடுதலைக்காக இறுதிவரை நேர்மையாகச் செயல்பட்டிருந்தால் அவரது பூதவுடலை பொகழுடலாகத் தமிழினம் தாங்கியிருக்கும்.

தந்தை செல்வா எனும் ஒரு நேர்மையாளனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் நேற்றுவரை உயிருடன் இருந்த மூத்த தலைவர் எனும் மிகப்பெரிய பெருமை சம்பந்தன் ஐயாவுக்கு இருக்கு, ஆனால் அதை எல்லாம் அவர் பெருமைப்படும்விதத்தில் தமிழர் மனங்களில் விதைக்காது வெறுப்பினை விதைத்துவிட்டார்.

ஆனால் இனிவரும் காலங்களில் மூன்று சந்ததிகள் கண்ட ஒரு அரசியல்வாதியைக் காண்பது அரிது.

சுமந்திரனுக்கும் சாவு வரும் அது இதைவிடக்கேவலமானதாக இருக்கும் என்பதை இன்று அவர் உணர்ந்திருப்பார். ஆனால் அவர் திருந்தமாட்டார். 

சம்பந்தன் ஐயா யாழ் களத்தின் உறுப்பினர்கள் உங்களைப்பற்றி அவதூறாகப் பதிவிடுவது வேதனையின் வெளிப்பாடே ஒரு அங்கலாய்ப்பே. இனிமேலாவது உங்களைப்போன்ற தலைவர்கள் தமிழர் உரிமை, தமிழர் விடுதலை, தமிழர்களது கண்ணியம் இவைக்காகப் பாடுபடவேண்டும் எனும் போரவாவினாலேயே, அதை விடுத்து எங்களுக்கு உங்கள் மீது தனிப்பட்ட வெறுப்புகள் எதுவும் இல்லை. நாம் ஒரு நேர்மை மிக்க தலைவனை எமது வாழும் காலத்தில் கண்டுள்ளோம் சரி பிழைகளைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் தனை தவறுகளையும் ஏற்றுத்தான் அத்தலைவன் தனக்குத் தானே தீர்ப்பை எழுதிக்கொண்டான். அதில் ஒருவிகித உண்மையாவது எம்முடன் அரசியல் செய்வோரிடம் நாம் எகிர்பார்ப்பது தவறில்லையே.

சம்பந்தன் ஐயா உங்களுக்கு எங்கள்

"இறுதி வணக்கங்கள்"

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரிய‌ பெரிய‌ அறிவு ஜீவிக‌ள் புலிக‌ளுக்கு ஆலோச‌னை சொல்லி கொடுக்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் எல்லாம் அமெரிக்கா ஜ‌ரோப்பா என‌ ஓடி வ‌ந்து விட்டு....................2009க‌ளில் யாரும் எதிர் பார்த்து இருக்காத‌ அழிவை ச‌ந்திச்சு தங்களின் உயிரை நாட்டுக்காக அர்ப்பணித்தவர்களை ப‌ற்றி  தூற்றுவது ஏற்புடையதல்ல😉...................

வ‌ன்னித் த‌ல‌மை சிறு பிழைக‌ள் விட்டு இருந்தாலும் க‌ட‌சியில் அவ‌ர்க‌ளும் நாட்டுக்காக‌ த‌ங்க‌ளின் குடும்ப‌த்தோட‌ உயிரை தியாக‌ம் செய்த‌வை அதை மற‌க்க‌ வேண்டாம்🙏🙏🙏....................நாட்டுக்காக‌  உயிரை விட்ட‌வ‌ர்க‌ளை தரம் தாழ்த்தி எழுதுவது ஏற்புடையது அல்ல🫤.....................

இந்த‌ திரியில் விவாதிக்க‌ப் ப‌ட‌ வேண்டிய‌ விடைய‌ம் ச‌ம்ப‌ந்த‌ர்  அர‌சிய‌லில் இருந்து த‌மிழ‌ர்க‌ளுக்கு என்ன‌ செய்தார்...................2009க்கு பிற‌க்கு விடுவிக்க‌ப் ப‌ட்ட‌ போராளிக‌ளுக்கு ம‌க்க‌ளுக்கு ஏதும் ந‌ல்ல‌து செய்த‌வ‌ரா..........................ஆராய்ந்து பார்க்க போனால் பதில் இல்லை................ச‌ம்ப‌ந்த‌ர் குட்டி க‌ருணாநிதி போல‌ குடும்ப‌த்துக்காக‌ அர‌சிய‌லில் இருந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு ம‌றைந்து விட்டார்😉.........................

அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா நோய்வாய் ப‌ட்டு இற‌ந்த‌ போது ஜ‌யா சீக்கிர‌ம் எம்மை விட்டு பிரிந்து விட்டாரே என்று புல‌ம்பி அழுத‌ ம‌க்க‌ள் . த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் த‌ன‌க்கு ப‌ல‌ இன்ன‌ல்க‌ள் வ‌ந்த‌ போது தான் தொர்ட‌வு கொள்வ‌து அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யாவை தான் என்று சொல்லி இருந்தார்☹️..................

2007. நவ‌ம்ர் 2ம் திக‌தி த‌மிழ்செல்வ‌ன் அண்ணா அர‌சிய‌லில் இருந்த‌ போது சிங்க‌ள‌ விமான‌ தாக்குத‌லில் கொல்ல‌ப் ப‌ட்டார் அந்த‌ நாள் உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளின் த‌லையில் இடி விழுந்த‌ நாள்....................ப‌ல‌ர் ம‌ன‌துக்குள் அழுதவை சில‌ர் த‌மிழ் செல்வ‌ன் அண்ணாவின் இழ‌ப்பை தாங்க‌ முடியாம‌ பொது வெளியில் அழுத‌வை...................கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நின்று எதுக்கும் இட‌ம் கொடுக்காம‌ எம்மை விட்டு பிரிந்து போன‌வ‌ர் தான் த‌மிழ்செல்வ‌ன் அண்ணா

இவ‌ர்க‌ளின் தியாக‌ங்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது ச‌ம்ப‌ந்த‌ர் ஒரு சாதார‌ன‌ ந‌ப‌ர்😉

அர‌சிய‌லில் இருந்து சொந்த‌ ம‌க்க‌ளுக்கு துரோக‌ம் செய்து குடும்ப‌த்துட‌ன் உல்லாச‌ வாழ்க்கை வாழ்ந்து விட்டு இற‌ந்து விட்டார்.........................இந்த‌ க‌வோதிய‌ ந‌ம்பி வ‌ன்னி த‌ல‌மை ஏமாந்து போன‌து தான் மிச்ச‌ம்...................காசுக்கும் கொண்ட‌ கொள்கைக்கும் விலை போகாத‌ ந‌ப‌ர்க‌ளை சிங்க‌ள‌ம் ஒரு போதும் விட்டு வைக்காது எப்ப‌டியாவ‌து அவ‌ர்க‌ளை கொன்று விடுவார்க‌ள் இது க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாறு😉..............................
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Elugnajiru said:

சுமந்திரனுக்கும் சாவு வரும் அது இதைவிடக்கேவலமானதாக இருக்கும் என்பதை இன்று அவர் உணர்ந்திருப்பார். ஆனால் அவர் திருந்தமாட்டார். 

😂 இந்தா அடுத்த இலக்கு றெடி! உண்மையில், சும்மிற்குப் பிறகு போட்டு மொங்கவும் ஆள் றெடி: "சிங்களக் காதலி" வைத்திருக்கும் சாணக்கியன். இனி அடுத்த 20 வருடத்திற்கு மொத்தல் பைக்கு (punch bag) பஞ்சமில்லை. தமிழர்களுக்கு புதிய தலைவர்களும் தேவையில்லை எனலாம்😎.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, வீரப் பையன்26 said:

வ‌ன்னித் த‌ல‌மை சிறு பிழைக‌ள் விட்டு இருந்தாலும்

அவ்வளவு தான் விசுகு இனி உங்களுடனும் பேசமாட்டார் உறவே. 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Justin said:

😂 இந்தா அடுத்த இலக்கு றெடி! உண்மையில், சும்மிற்குப் பிறகு போட்டு மொங்கவும் ஆள் றெடி: "சிங்களக் காதலி" வைத்திருக்கும் சாணக்கியன். இனி அடுத்த 20 வருடத்திற்கு மொத்தல் பைக்கு (punch bag) பஞ்சமில்லை. தமிழர்களுக்கு புதிய தலைவர்களும் தேவையில்லை எனலாம்😎.

ந‌டேச‌ன் ஜ‌யாவின் மனைவி அவ‌ங்க‌ளும் சிங்க‌ள‌ம் தான்
அத‌ற்காக‌ ந‌டேச‌ன் ஜ‌யா எங்க‌ட‌ இன‌த்துக்கு ஏதும் தீங்கு செய்தாரா.............................

என்ர‌ சித்தி திரும‌ண‌ம் செய்த‌து சிங்க‌ள‌வ‌னை ஆனால் சித்தியின் ம‌க‌ன் எம் போராட்ட‌த்தில் வீர‌ச்சாவு 1990 அந்த‌ கால‌ப் ப‌குதியில்.......................சாணக்கியன் சிங்க‌ள‌ காத‌லி வைச்சு இருந்தாலும் துணிவு மிக்க‌ த‌மிழ‌ன் . தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்.................பழக மிகவும் எளிமையானவர்......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, வீரப் பையன்26 said:

பையன், கருத்தின் பின்னணி தெரியாமல் எனக்கு பதில் எழுதியிருக்கிறீர்கள். "சிங்களக் காதலி" இருப்பதே உறுதியாகாத வதந்தி. அந்த வதந்தியை முன் வைத்து சாணக்கியனை யாழ் களத்தில் சில மாதங்கள் முன்னர் தாக்கிப் பேசியவர் @Elugnajiru.

எனவே, அவருக்கு உங்கள் கருத்தை எழுதி, அவருக்குத் தெளிவூட்டுங்கள். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Justin said:

ம‌ன்னிக்க‌னும்

அவ‌ர் க‌ட‌ந்த‌ கால‌த்தில் எழுதின‌தை நான் வாசிக்க‌ வில்லை........................நான் நினைச்சேன் சாணக்கியன் ப‌ற்றி நீங்க‌ள் இப்ப‌ எழுதினது என்று......................தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தில் எதிரியாக இருந்தாலும்,அனாதையாக இருந்தாலும் ஒரு மரண நிகழ்வு நடந்தால் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரும் கூடி நின்று மரண நிகழ்வை நடத்துவர். ஆனால்  ஒரு பழம்பெரும் எமது அரசியல்வாதி இறந்த பின் நடக்கும் கொடுமைகளையும் , பல இணைய  தளங்களில் வரும் கருத்தோட்டங்களை பார்க்கும் போது.......இப்போதிருக்கும் தலைவர்கள் சுதாகரித்து கொள்வார்களாக.....

  • Like 4
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தில் எதிரியாக இருந்தாலும்,அனாதையாக இருந்தாலும் ஒரு மரண நிகழ்வு நடந்தால் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரும் கூடி நின்று மரண நிகழ்வை நடத்துவர். ஆனால்  ஒரு பழம்பெரும் எமது அரசியல்வாதி இறந்த பின் நடக்கும் கொடுமைகளையும் , பல இணைய  தளங்களில் வரும் கருத்தோட்டங்களை பார்க்கும் போது.......இப்போதிருக்கும் தலைவர்கள் சுதாகரித்து கொள்வார்களாக.....

ஒருவரின் மரணத்தில் மகிழ்வதல்ல எங்கள் இனம். ஆனால் பொறுத்த நேரங்களில் மௌனம். பதவியை காக்கவும் தனது சொந்த தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றவும் பல காலமாக பதவியை தங்க வைத்தபடி மௌனமாகியது மறக்க மன்னிக்க முடியாத குற்றமாகும். பலகாலம் தமிழினம் எதிர் பார்த்து எதிர் பார்த்து ஏமாந்ததன் கோபத்தை தான் தற்போது காட்டுகிறது. இது இனிவரும் தலைவர்களுக்கான பாடமும் கூட. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, விசுகு said:

சம்பந்தனின் மரண நிகழ்வுகள் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அவர் தம் ஆதரவாளர்களுக்கும் ஒரு  பாடமாக அமையட்டும்.
சம்பந்தனின் மரண  நிகழ்ச்சிக்கு பின்னரும் சம்பந்தனின் அரசியல் வாழ்வை யாராவது மெச்சுகின்றனர் என்றால்.....!!!!
மேலதிக விபரம் இல்லாமல் அவர்களின் சுயரூபத்தை சுலபமாகவே கணக்கிடலாம்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, island said:

ராஜீவ் கொலைவழக்கில் விடுதலையான சாந்தனின் இழப்பிற்கும், 
ராஜீவின் நண்பரான சம்பந்தனின் இழப்பிற்கும் ஈழ தமிழ் மக்கள் தரும் பதில்...

-Livingston Edinborough-
 
என்ன ஒப்பீடு இது? 

6 hours ago, Kapithan said:

எழுதியவர் நடிகர் லிவிங்ஸ்ரனாயிருக்குமோ 🤣

ஒப்பீடு 🙆‍♂️

Edinburg அழகானது எனக்கு பிடித்த இடம்

Livingston Edinborough   இந்த கற்பனை கதாசிரியரையும் தெரியாது ஊரையும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/7/2024 at 22:32, விளங்க நினைப்பவன் said:
On 2/7/2024 at 12:49, ஏராளன் said:

இங்கும் இந்த அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் இருந்தது... இருக்கிறது... தொடர்கிறது.

வேதனை அவமானம் 😟
ஆனால் தமிழ்நாட்டில்  நடப்பது போன்று ஒடுக்கபட்ட தமிழர்கள் வீடுகளை எரிப்பது கொலைகள் மற்றும் ஆணவக் கொலைகளும் இல்லை இங்கு என்று நினைக்கிறேன்.

நான் சில ஈழ தமிழர்களை விசாரணை செய்ததில் நான் சொன்னதை அவர்கள் உறுதிபடுத்தினார்கள். இலங்கையில் தமிழர்களில் சாதி ஒடுக்கு முறை இருந்தாலும் தமிழ்நாட்டு அளவுக்கு பயங்கரமாக இல்லை.சாதி மாறி திருமணம் செய்த தம்பதிகளை அவர்கள் வீட்டில் சேர்க்காவிட்டாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இலங்கையில் மற்றவர்களுடன் வாழ்கின்றார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சாதி வேண்டாம் என்று திருமணம் செய்த தம்பதிகளை வாழவே விடமாட்டார்கள் துரத்தி தேடி திரிந்து வெட்டி கொலை செய்து விடுவார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, தமிழ் சிறி said:

நாங்கள்... சாந்தன், சம்பந்தனின் செத்த வீட்டுக்கு வந்த சனத்தைப் பற்றிக் கதைக்க,
நீங்கள் கில்மிசாவின் களியாட்ட நிகழ்ச்சியை பற்றி கதைக்கின்றீர்கள். 
அப்படி என்றால்... தமன்னாவுக்கு வந்த ஆட்களையும்  ஒப்பிட்டு  பார்க்க வேண்டியதுதானே.

அதுக்கென்ன. தமன்னாவை பொதுவேட்பாளராக நிறுத்தினால் வெற்றி நிச்சயம். 

மகாகவி பாரதியாரை இறந்தபிறகு தூக்கிக்கொண்டு போகவும் நான்கு பேர்தானாம் என்று கேள்விப்பட்ட நினைவு. சம்பந்தர் ஒரு காலத்தில் கொண்டாடப்படலாம். யார் கண்டது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, நியாயம் said:

சம்பந்தர் போனால் என்ன இனி துவம்சம் செய்யப்படுவதற்கு சுமந்திரன் உள்ளார். சுமந்திரனை தூற்றுவதுடன் இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் போய்விடும். 

4 hours ago, Justin said:

😂 இந்தா அடுத்த இலக்கு றெடி! உண்மையில், சும்மிற்குப் பிறகு போட்டு மொங்கவும் ஆள் றெடி: "சிங்களக் காதலி" வைத்திருக்கும் சாணக்கியன். இனி அடுத்த 20 வருடத்திற்கு மொத்தல் பைக்கு (punch bag) பஞ்சமில்லை. தமிழர்களுக்கு புதிய தலைவர்களும் தேவையில்லை எனலாம்😎.

இவர்களுடைய காலம் வரைக்கும் வெளிநாட்டில் இருந்து இதை தான் செய்து கொண்டிருக்க போகிறார்கள்.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தான் பொய் சொல்கிறேன் என்று தெரிந்தும் தேர்தலுக்காக பொய் சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, நியாயம் said:

அதுக்கென்ன. தமன்னாவை பொதுவேட்பாளராக நிறுத்தினால் வெற்றி நிச்சயம். 

மகாகவி பாரதியாரை இறந்தபிறகு தூக்கிக்கொண்டு போகவும் நான்கு பேர்தானாம் என்று கேள்விப்பட்ட நினைவு. சம்பந்தர் ஒரு காலத்தில் கொண்டாடப்படலாம். யார் கண்டது. 

இன்றைய ஈழ அரசியலில் என்னென்ன முன்னேற்றங்கள் நடந்துள்ளன என்பதை பற்றி கொஞ்சம் தயவு செய்து சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, குமாரசாமி said:

இன்றைய ஈழ அரசியலில் என்னென்ன முன்னேற்றங்கள் நடந்துள்ளன என்பதை பற்றி கொஞ்சம் தயவு செய்து சொல்லுங்கள்.

அப்படி ஒன்று இருந்திருந்தால், முன்பே  சொல்லி இருப்பார்கள் தானே...😁
சம்பந்தர், பகலிலும் நித்திரை குளிசை போட்டுட்டு இருக்கிற ஆள். 😂

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

ஈழத்தில் எதிரியாக இருந்தாலும்,அனாதையாக இருந்தாலும் ஒரு மரண நிகழ்வு நடந்தால் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரும் கூடி நின்று மரண நிகழ்வை நடத்துவர். ஆனால்  ஒரு பழம்பெரும் எமது அரசியல்வாதி இறந்த பின் நடக்கும் கொடுமைகளையும் , பல இணைய  தளங்களில் வரும் கருத்தோட்டங்களை பார்க்கும் போது.......இப்போதிருக்கும் தலைவர்கள் சுதாகரித்து கொள்வார்களாக.....

நான் நினைக்கவில்லை இந்த சப்பாத்து நக்கும் கூட்டம் இருக்கும் வரை அங்குள்ள அரசியல் வாதிகள் திருந்த இடமில்லை சைக்கிளையையும் சேர்த்தே சொல்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Justin said:

"தடுத்து வைத்ததால் மக்கள் செத்தனரா?"

இராணுவத்தினர் தங்கள் கிராமத்திற்குள் நுழைகிறார்கள் என்கிற செய்தி அறிந்தவுடன் உடுத்த உடையுடன் மாற்றுத்துணி கூட எடுக்காமல் மக்கள் ஏன் தப்பி ஓடினார்கள்? அவர்கள் கையில் தாம் அகப்பட்டு விடக்கூடாதே என்கிற பயத்தில். அவ்வாறு ஓடாமல் இருந்தவர்களுக்கும் தமது வீட்டை பார்ப்பதற்கு, பாத்திரங்களை எடுத்து வருவதற்கு சென்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், கடலில் மீன் பிடிக்க சென்ற வீட்டு தலைவனை சுட்டுக்கொன்ற சம்பவங்களும் ஏராளம். வன்னியில் இத்தனை லட்ஷம் மக்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? ஒவ்வொரு இடமாக சுற்றி வளைத்து, மனித குலத்திற்கு எதிரான போர் ஆயுதங்களை பயன்படுத்தி      குண்டுபோட்டு  தாக்கியழித்ததால் மக்கள் அவர்கள் முன்னேறும் பிரதேசங்களை  விட்டு  வெளியேறினர், அவர்களை புலிகள்  அழைத்துச் செல்லவில்லை. தலைநகருக்கு கிளாலிவழியாக சென்ற மக்களை கடலில் அழித்தது யார்? நவாலி தேவாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் மேல் எதற்காக குண்டு போட்டார்கள்? புலிகள் தடுத்ததாலா? தமது மரணத்தை  கழுத்திலே சுமந்தவர்கள் அவர்கள். மக்களை பலிகொடுத்து அவர்கள் வாழவில்லை. சரணடைந்த புலிகளும் மக்களும் கொல்லப்பட்டனர், காணாமல் ஆக்கப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் கூட்டிச்சேர்த்த மக்கள், போராளிகள் எல்லோரையும் கொன்று குவித்து, மக்களை புலிகள் கொன்று விட்டார்கள் நாங்கள் புலிகளை அழித்தோம் என்று அறிக்கை விட்டு எல்லோரிடமும் பாராட்டு பெறவே சிங்களம் விரும்பியது, அதற்காகவே தொண்டு நிறுவங்களை பலாத்காரமாக வெளியேற்றியது உண்மை வெளியே வராமல் இருப்பதற்காக, அங்கிருந்த மக்களின் தொகையை குறைத்துக்கூறியது, மக்களை மீட்கப் போர் செய்தவர்கள் அந்த மக்களுக்கான எந்த ஏற்பாடும் செய்திருக்கவில்லை, இறுதி நேரத்தில் தொண்டு நிறுவனங்களை செல்ல அனுமதியளித்து நல்ல பிள்ளை ஆகிக்கொண்டது. பெற்றோரால் கையளிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு, விசாரணை செய்து போட்டு விடுகிறோம் என்று அழைத்துச் சென்ற புலிகளுக்கு, கூடச்சென்ற பாதிரியாருக்கு என்ன நடந்தது? சொல்லும் பதில்: அவர்களை புலிகள் கொன்று விட்டார்கள், வெளிநாட்டுக்கு சென்று விட்டார்கள். ஆதாரம் இருக்கிறதா அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றதற்கு? முள்ளிவாய்க்காலில் எல்லாமே மௌனிக்கப்பட்டபின்பு உலங்கு வானூர்தியில் அந்த பிரதேசத்தை பார்வையிட்டமுன்னாள் ஐ. நா. செயலாளர் பான் கி மூன் தெரிவித்தது. பல அடி உயரத்திற்கு புகை மூட்டமாக இருந்ததை அவதானித்ததாக. அதை யார் செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்?  இதுதான் சிங்களம்! கடைசியில் அரசு, சர்வதேசம் சொல்வதை இந்தியா உட்பட காது கொடுத்து கேட்கவுமில்லை, மதிப்பளிக்கவுமில்லை. அதை அவர்கள் பலதடவை வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள். புலிகள் ஆற்றியது   தங்களின் தார்மீக கடமையையும், நம்பியது சர்வதேசத்தின் நடுவுநிலையையும், தங்கள் போராட்டத்தின் நிஞாயத்தை சர்வதேசம் புரிந்து உதவி செய்யுமென்றும். எல்லாம் முடிந்து அவர்களும் மடிந்து விட்டார்கள். அவர்களாலேயே இலங்கையில் நடந்த அடக்கு முறைகள் வெளிவந்திருக்கிறது. அவர்கள் போராடாமல் இருந்திருந்தாலும் எம் இனம் மௌனமாக அழிந்திருக்கும். இவர்களின் போராட்டத்தினால் காலம் தாழ்த்தியிருக்கிறது, வெளிஉலகிற்கு தெரிந்திருக்கிறது. எய்தவன் இருக்க அம்பை நோகும் உங்களை சொல்லிப்பயனில்லை, உங்களுக்கு எங்கள் வலியும் இழப்பும் தெரியப்போவதுமில்லை. யூட், கற்பகம் உட்பட. நீங்கள் விரும்பியபடி எழுதி மகிழுங்கள்.

13 hours ago, தமிழ் சிறி said:

நாங்கள்... சாந்தன், சம்பந்தனின் செத்த வீட்டுக்கு வந்த சனத்தைப் பற்றிக் கதைக்க,
நீங்கள் கில்மிசாவின் களியாட்ட நிகழ்ச்சியை பற்றி கதைக்கின்றீர்கள். 
அப்படி என்றால்... தமன்னாவுக்கு வந்த ஆட்களையும்  ஒப்பிட்டு  பார்க்க வேண்டியதுதானே

சம்பந்தரின் இழப்பை விட, கில்மிசாவின் இசையும் காளியாட்டமுமே மக்களுக்கு முக்கியம் என்பதே இங்கு ஒப்பீடு.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.