Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   05 JUL, 2024 | 11:57 AM

image
 

பிரிட்டன் தேர்தலில் இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட உமாகுமரன் வெற்றிபெற்றுள்ளார்.

ஸ்டிரபோர்ட் அன்ட் போவின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட  அவர் அவர் 19 ஆயிரத்து 145 வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்தொகுதியில் கிறீன்ஸ் கட்சி சார்பில் களமிறங்கிய வேட்பாளர் 7 ஆயிரத்து 511 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

uma_kumaran.jpg

இந்த வெற்றிமூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது ஈழத் தமிழ் பின்னணிகொண்ட பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் என  உமாகுமரன்தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும் - பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/187738

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

Published By: RAJEEBAN   05 JUL, 2024 | 11:57 AM

image
 

பிரிட்டன் தேர்தலில் இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட உமாகுமரன் வெற்றிபெற்றுள்ளார்.

ஸ்டிரபோர்ட் அன்ட் போவின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட  அவர் அவர் 19 ஆயிரத்து 145 வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்தொகுதியில் கிறீன்ஸ் கட்சி சார்பில் களமிறங்கிய வேட்பாளர் 7 ஆயிரத்து 511 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

uma_kumaran.jpg

இந்த வெற்றிமூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது ஈழத் தமிழ் பின்னணிகொண்ட பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் என  உமாகுமரன்தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும் - பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/187738

வாழ்த்துக்கள்   நம்பிக்கை தரும் முதலாவது வெற்றி  🙏🙏🤣👍

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும் - பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

உமாகுமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ........!  

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் 

  • கருத்துக்கள உறவுகள்

உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள்.

இவர்கள் யாருமே வெற்றி பெறமாட்டார்கள் @கிருபன் என்று  சொன்னாரே?

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள்.
ஈழ மக்கள் பிரச்சினையையும், உங்கள் கட்சியிலும்  பாராளுமன்றிலும் எடுத்து சொல்லுங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய தேர்தலில் சாதனை படைத்த ஈழத்தமிழ் பெண்!

பிரிட்டன் | 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கும் தொழிளாளர் கட்சி;  எம்.பி.யான முதல் தமிழ்ப் பெண் | Uma Kumaran becomes first Britain Tamil  woman MP

பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமா குமரன், ஸ்ராட்போட் மற்றும் பௌவ் (Stratford and Bow) தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தொழிற்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், உமா குமரன் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கமைய அவர் 44.1 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஈழத்தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவாகியுள்ள நிலையில் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

https://thinakkural.lk/article/305326

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள்.

இவர்கள் யாருமே வெற்றி பெறமாட்டார்கள் @கிருபன் என்று  சொன்னாரே?

கிருஷ்ணி வெல்லமுடியாது என்றுதான் சொல்லியிருந்தேன். உமா போட்டியிட்டது தொழிற்கட்சி இலகுவாக வெல்லக்கூடிய தொகுதியில். 

தமிழர்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை. கட்சி என்ன சொல்கின்றதோ, அதைத்தான் செய்வார்.

அவரது தொகுதியில் உள்ள முஸ்லிம்களின் வாக்குக்காக காஸாவில் உடனடிப் போர்நிறுத்தம் வேண்டும் என்று அவரது பக்கத்தில் சொல்லியிருக்கின்றார். அதற்கு மேல் ஏதும் செய்யப்போவதில்லை!

https://www.umakumaran.co.uk

  • கருத்துக்கள உறவுகள்

உமா குமரன் வெல்வார் என்று அன்றே சொன்னேன்.

உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தமிழர்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை. கட்சி என்ன சொல்கின்றதோ, அதைத்தான் செய்வார்.

பிரித்தானியாவில் தனது  தொகுதியில் வாழும் மக்களுக்கு நன்மை செய்வார் தானே. ஆளும் கட்சியாக இருப்பதனால் அதை செய்ய முடியும் தானே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது; உமா குமரனின் வெற்றி குறித்து சீமான் கருத்து – வாழ்த்து தெரிவிப்பு

06 JUL, 2024 | 12:28 PM
image
 

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இலங்கை வம்சாவளி தமிழரான உமா குமரனிற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இங்கிலாந்து நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள அன்புத்தங்கை உமா குமரன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் தமிழர் என்ற பெருமையை தங்கை உமா குமரன் அவர்கள் பெற்றுள்ளது மிகுந்த மனமகிழ்வை அளிக்கிறது. 

இனவழிப்பு தந்த காயங்களோடும் கண்ணீரோடும் ஊரிழந்து உறவிழந்து உரிமையிழந்து உயிர் சுமந்த உடல்களாக அடைக்கலம் தேடி அலைகின்ற  நூற்றாண்டுப் பெருந்துயரைக் கண்ட தமிழினத்திற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் இதுபோன்ற சிறுசிறு அதிகாரப்பகிர்வும் அங்கீகார நிமிர்வும் மிகவும் இன்றியமையாததாகும். தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது என்பதால் தங்கை உமா குமரனின் வெற்றி உலகத்தமிழினத்தின் வெற்றியாகும். தம்மைத் தேர்ந்தெடுத்த  ஸ்ட்ராட்ஃபோர்ட்ரூபோ தொகுதி மக்களின் மேம்பாட்டிற்கும் நல்வாழ்விற்கும் சிறப்புற பணியாற்றவும் உலகத்தமிழர்களின் உரிமைக்குரலாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்கவும் தங்கை உமா குமரனுக்கு  என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்!  

GRul3y0X0AAOt80.jpg

அவரைபோன்றே தொழிலாளர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை கிருஷ்ணி ரிசிகரன் தாராள சனநாயகவாதிகள் கட்சி  சார்பில் போட்டியிட்ட அன்புத்தம்பி ஜாகிர் ஹுசேன் ஆகியோர் இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்தபோதிலும் அதற்காக எவ்வித தற்சோர்வும் அடைய வேண்டாம்; ‘தோல்வியே வெற்றியின் தாய்’ என்னும் முதுமொழிக்கேற்ப  தொடர்ந்து மக்கள் பணியாற்றினால்இ எதிர்காலத்தில் உறுதியாக வெற்றிப்பெறுவீர்கள். மக்கள் தொண்டாற்ற வேண்டுமென்ற உங்களின் முயற்சிக்கும் உழைப்புக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்! 

இங்கிலாந்து நாட்டில் பெருவெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்துள்ள தொழிலாளர் கட்சிக்கும் பிரதமராக பதவியேற்கும் கெய்ர் ஸ்டார்மர் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி அடைந்துள்ள ஆட்சி அதிகாரமானது இங்கிலாந்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு மட்டுமல்லாது ஈழத்தில் வாழ்கின்ற தமிழர்களின் வாழ்விலும் புதிய மலர்ச்சி ஏற்படவும் ‘ஈழத்தாயக விடுதலை’ எனும் தமிழர்களின் இலட்சிய கனவு வென்றிடவும் உறுதுணையாய் இருக்குமென நம்புகிறேன்.

https://www.virakesari.lk/article/187818

  • கருத்துக்கள உறவுகள்

உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2024 at 12:44, ஏராளன் said:

பிரிட்டன் தேர்தலில் இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட உமாகுமரன் வெற்றிபெற்றுள்ளார்.

large.IMG_6836.jpeg.4b153533a764fe362aff

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உமா குமரன்: பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான 'தமிழ் அகதிகளின் பிள்ளை'

உமா குமரன்

பட மூலாதாரம்,WWW.UMAKUMARAN.CO.UK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெயப்பிரகாஷ் நல்லுசாமி
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பிரிட்டனில் ஜூலை 4-ஆம் திகதி நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார் இலங்கைத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட உமா குமரன்.

இந்தத் தேர்தலில் லேபர் கட்சி பெருவெற்றி பெற்று 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

அந்தக் கட்சியின் சார்பில் தலைநகர் லண்டனில் பல்வேறு சமூகங்கள் செறிந்துவாழும் ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போ (Stratford and Bow) என்ற புதிய தொகுதியில் ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களைக் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் உமா குமரன் தோற்கடித்துள்ளார்.

உமா குமரனின் பெற்றோர், இலங்கையில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக 1980-களில் அங்கிருந்து வெளியேறி லண்டனில் குடியேறியவர்கள்.

36 வயதான உமா குமரன், லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் அரசியல் சிறப்பு இளங்கலைப் பட்டப்படிப்பையும் பொதுக் கொள்கை முதுகலைப் பட்டப்படிப்பையும் கற்றுள்ளார்.

இங்கிலாந்தின் தேசிய சுகாதாரத்துறை ஊழியராக (NHS) தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய உமா, இளவயதிலேயே லேபர் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.

 
உமா குமரன்

பட மூலாதாரம்,WWW.UMAKUMARAN.CO.UK

படக்குறிப்பு,லேபர் கட்சித் தலைவர் கியர் ஸ்டாமரின் கீழ் சில முக்கிய அரசியல் பொறுப்புகளை வகித்தவர் உமா குமரன்

முதல் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

அந்தக் கட்சியின் பல்வேறு தளங்களிலும் பல பொறுப்புக்களை வகித்துள்ள அவர், லண்டன் மாநகர மேயர் சாதிக் கானின் மூத்த ஆலோசகராகவும் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

சுமார் 100 உலக நகரங்கள் அங்கம் வகிக்கும் 'C40 Cities Climate Leadership Group' என்ற பருவநிலை மாற்றம் தொடர்பான குழுவின் ஊடாக ஐ.நா. உள்ளிட்டப் பல்வேறு பன்னாட்டுத் தளங்களிலும் பணியாற்றியுள்ள உமா, லண்டன் மாநாகரின் சில உள்ளூராட்சி மன்றங்களிலும் லேபர் கட்சியின் ஆலோசனைப் பீடத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

வடமேற்கு லண்டனின் ஹரோ பகுதியில் இரண்டு வெவ்வேறு தொகுதிகளில் 2010, 2015-ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

லேபர் கட்சித் தலைவர் கியர் ஸ்டாமரின் கீழ் சில முக்கிய அரசியல் பொறுப்புகளை வகித்திருந்த உமா, கிழக்கு லண்டனில் புதிதாக உருவாக்கப்பட்ட Stratford and Bow தொகுதியில் போட்டியிட்டு அந்தத் தொகுதியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராக இம்முறை தெரிவாகியுள்ளார்.

இலங்கையில் இருந்து போர்ச் சூழ்நிலை காரணமாக புலம்பெயர்ந்த தமிழர்களில் பலரும், அவர்களின் பிள்ளைகளும் பிரிட்டனில் வணிகம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக ஒருவர் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.

 
உமா குமரன்

பட மூலாதாரம்,WWW.UMAKUMARAN.CO.UK

படக்குறிப்பு,இம்முறை வெற்றிபெற்றுள்ள 263 பெண்களில் இளவயது உறுப்பினர்களில் ஒருவராக உமா குமரனும் இடம்பிடித்துள்ளார்

“எனது பெற்றோர் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிவந்தவர்கள்... எனது குடும்பமும் எம்மைப் போன்ற ஏனையவர்களும் இன்றுவரை அந்தப் போரின் வடுக்களுடேனேயே வாழ்கின்றோம்,” என்று தமது அதிகாரபூர்வ இணையதளத்தில் கூறியுள்ளார் உமா குமரன்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 650 உறுப்பினர்கள் கொண்ட பொதுமக்கள் அவையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை அதிக பெண்கள் தெரிவாகியுள்ளனர்.

இம்முறை வெற்றிபெற்றுள்ள 263 பெண்களில் இளவயது உறுப்பினர்களில் ஒருவராக உமா குமரனும் இடம்பிடித்துள்ளார். ( 2019-ஆம் ஆண்டு தேர்தலில் 220 பெண்கள் வெற்றிபெற்றிருந்தனர்.)

இம்முறை நாடாளுமன்றம் செல்லும் 335 புதிய முகங்களில் ஒருவரான உமா, இனச் சிறுபான்மை பின்புலத்தைக் கொண்ட 90 உறுப்பினர்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.

உமா குமரனின் வெற்றிக்கு அவரது ஆதாரவாளர்களைத் தாண்டி, பெருமளவிலான தமிழர்கள் உலகம் எங்கிலும் இருந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உமா குமரன் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்," என அவரது X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"தமிழ் அகதிகளின் பிள்ளை நான். பாரபட்சத்தையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்த ஒரு சமூகத்தின் பிள்ளை நான். நியாயத்துக்காக நான் எப்போதும் போராடுவேன்," என்று தனது தேர்தல் வெற்றி உரையின்போது கூறினார் உமா குமரன்.

  • கருத்துக்கள உறவுகள்

உமா குமரனின் கணவர் மாரடைப்பு  வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.