Jump to content

ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

460509219_927848529380120_63223135428812

 

460507311_927308322767474_49491650542353

 

 

460646922_927851962713110_95617186493641

 

 

460562992_927218999443073_69381329728376

ஜனாதிபதி தேர்தலில் மூன்று நிலைப்பாட்டில் நிற்கும் தமிழரசுட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

460534847_927898129375160_83340248677130

 

 

May be an illustration of text

 

459761904_928570642641242_85069161273642

 

May be an image of text

 

460718071_927959989368974_88501988487193

 

460636400_927897686041871_20242044743944

 

 

460714173_928633055968334_71293667112409

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களிப்புக்கு பாதகமான சம்பவங்கள் இடம்பெற்றால் வாக்களிப்பு நிலையம் சூனியமாக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழு

Published By: VISHNU   21 SEP, 2024 | 02:00 AM

image
 

வாக்களிப்பு நிலையங்களில் வன்முறை சம்பவங்கள் எதுவும் இடம்பெற்று வாக்களிப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டால், குறித்த வாக்களிப்பு நிலையம் முற்றாக செயலிழக்கப்பட்டு மீண்டும் வாக்களிப்பு நடத்தப்படும். அதுவரை தேர்தல் பெறுபேறு வெளியிடப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்தார்.

இன்று இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இரண்டு பேருக்கு அங்கு தங்கி இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வாக்களிப்பு இடம்பெற்று முடியும்வரை அந்த இடத்திலிருந்து வெளியில் வரமுடியாது. அதேபோன்று வேறு பிரதிநிதிகளுக்கு அந்த நிலையங்களுக்கு செல்லவும் முடியாது.  அதேபோன்று வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் யாரும் கூடி இருக்கவேண்டாம். இதுதொடர்பில் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன்.

அதேபோன்று  வாக்களிப்பு நிலையத்தில் ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றால் அல்லது வாக்களிப்புக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் நாசகார நடவடிக்கை ஏற்பட்டால், குறித்த வாக்களிப்பு நிலையத்தை முற்றாக (சூன்யமாக்க) செயலிழக்கச்செய்ய நடவடிக்கை எடுப்போம்.

அவ்வாறு பல வாக்களிப்பு நிலையங்கள் செயலிழக்கச்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, அதனால் மொத்த தேர்தல் பெறுபேற்றை வெளியிடுவதற்குப் பாதிப்பு ஏற்பட்டால், அந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு மீண்டும் வாக்களிப்பு நடத்திய பின்னரே தேர்தல் பெறுபேறு வெளியிட வேண்டிவரும். அதுவரை தேர்தல் பெறுபேற்றை வெளியிட எமக்கு முடியாமல் போகும்.

அதனால் வன்முறை, நாசகார சம்பவங்களுக்கு இடமளிக்காமல் அமைதியான தேர்தல் ஒன்றை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துள்ளோம். கிராமங்களின் வாக்குப்பெட்டியை பாதுகாப்பது அந்த கிராம மக்களின் பொறுப்பாகும்.

அதனால் வெளிநபர்கள் கிராமங்களுக்குள் வந்து அசம்பாவிதங்களை ஏற்படுத்தாமல் பாதுகாத்துக்கொள்ள ஊர் மக்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/194217

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க 9ஆவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது  ஜனாதிபதி தேர்தல் இன்று

Published By: VISHNU   21 SEP, 2024 | 10:05 AM

image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21)  இடம்பெறவுள்ளது.

இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில்,  17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுதந்திரமானதும், நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சகல பிரஜைகளிடமும்  தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில்  13421  வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தம் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆவணங்கள் நேற்று காலை கையளிக்கப்பட்டன. 22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள் , கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாளர் அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திர அட்டை உட்பட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்லுமாறு வலியுறுத்தப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ஷ 6,924, 255 வாக்குகளை பெற்று  52.25 சதவீத வாக்குகளுடன் நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

 அதேபோல் அத்தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,564, 239  வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க 41, 553 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிடுகையில்;

வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை பிரஜைகள் அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக அமைய கூடாது. தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அத்துடன் சுதந்திரமாகவும்இ நியாயமானதாகவும் தேர்தலை நடத்த  சகல பிரஜைகளும் ஒத்துழைக்க வேண்டும்.

வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு செல்லும் போது வாக்காளர் அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரம், ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்தில் அமைதியை பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

 தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு காரணியாக அமைவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்களித்ததன் பின்னர் அமைதியான முறையில் செயற்படுங்கள் . ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவை உங்களின் குடும்பமே எதிர்க்கொள்ள நேரிடும். ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது. ஆகவே தமது குடும்பத்தை நினைவில் வைத்துக் கொண்டு செயற்படுங்கள் என்று நாட்டு பிரஜைகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/194220

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிற்பகல் இரண்டு மணியளவில் வாக்கு நிலவரம்:

யாழ்ப்பாணத்தில் பலர் நித்திரை அல்லது கஜே கோஸ்டியின் வேண்டுகோளின்படி பகிஸ்கரிக்கின்றார்கள் போலிருக்கு!

 

Kurunegala – 65%

Kegalle – 65%

Gampaha – 62%

Galle – 61%

Puttalam – 57%

Nuwara Eliya – 70%

Matara – 64%

Rathnapura – 60%

Colombo – 60%

Kalutara – 60%

Mannar – 60%

Badulla – 56 %

Trincomalee – 54%

Monaragala – 65%

Hambantota – 60%

Vanni – 58%

Jaffna – 49%

Ampara – 60%

Anuradhapura – 70%

Mullathivu – 57%

Kilinochchi – 56%

Kandy – 65%

 

https://www.newswire.lk/2024/09/21/presidential-election-2024-voter-percentage-as-of-noon/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீவிர தமிழ் தேசியவாதம் என்ற போர வையில  சிங்கள இனவாதத்துக்கு சமமாக தமிழ் இனவாதம் பேசும் தரப்புகள  ஶ்ரீலங்காவில் ஒரு கடும் இனவாத ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்றே எப்போதும் எதிர் பார்கிறார்கள். அதன் மூலமே தமது தமது வியாபாரம் செல்வ செழிப்புடன் நடைபெறும் என்றே  எப்போதும் நினைக்கிறார்கள்.  அந்த வகையில் ஐரோப்பாவில் இருக்கும் கடும் தமிழ் இனவாதியின் முகநூல் பதிவு  இப்படி கூறுகிறது.

 அனுர வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகப் பிந்திய செய்திகள் சொல்கின்றன.
மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால் இதுவரை தமிழர் தேசம் சந்திக்காத பாசிச இன ஒடுக்குதல்களை ஜேவிபியிடமிருந்து எதிர்பார்க்கலாம். அதற்கு வரலாற்றில் ஏகப்பட்ட சாட்சியங்களும் இருக்கின்றன.

ஜே ஆர், சந்திரிக்கா, மகிந்த, கோத்தாவை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு பாசிசம் முறுக்கேறிய ஒரு இயக்கம்தான் ஜேவிபி.

எமக்கும் இதுதான் தேவை. ஏனெனில் மைத்ரி, ரணில் போன்றவர்களை வைத்து  தமிழ்த் தேசக் கோட்பாட்டிற்கு உள்ளக / வெளியக சக்திகளால் வைக்கப்பட்ட செக் இதன் வழி தகர்க்கப்பட்டிருக்கிறது.

நாளையிலிருந்து தமிழீழம்  நம்பிக்கையுடன் தனது புதிய பாய்ச்சலை தொடங்கும்.

வெல்வோம் ❤️ வென்றே தீருவோம் 🔥

இவரை போன்ற  சுயநலமிகளின் சிந்தனை தான் தமிழினத்தை இன்றைய  அதல பாதாள அவல நிலைக்களுள் கொண்டு வந்திருக்கிறது.  இவரின் எதிர்பார்ப்பை வெல்லப் போகும் ஜனதிபதி நிறைவேற்ற கூடாது என்பதே தமிழர்  எதிர்பார்பபு. 

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டை கிழித்த இளைஞர் கைது 

21 SEP, 2024 | 01:10 PM
image
 

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர் வாக்குச்சீட்டை கிழித்ததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (21) வாக்களிக்கச் சென்ற இளைஞர், தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்குச்சீட்டினை கைகளில் பெற்ற பின்னர், வாக்களிக்காமல், வாக்குச்சீட்டினை கிழித்துள்ளார். 

அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து, பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின்போது, அந்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

https://www.virakesari.lk/article/194268

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இச்சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

இப்படியான சொறிச்சேட்டை விடும் நபர்களுக்கு மிகப்பெருந்தொகையான தண்டப்பணம் அறவிடப்படவேண்டும்.0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர் வாக்குச்சீட்டை கிழித்ததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வாக்களிக்காமலே விட்டிருக்கலாம்.

ஒருவேளை கஜே குழுவின் ஆதரவாளராக இருப்பாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கணிப்பின்படி 
அநுரவுக்கு 52%
சஜித்துக்கு 27%
ரணிலுக்கு 17%
மற்ற சில்லறைகளுக்கு  4% கிடைக்கும்


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பிற்பகல் இரண்டு மணியளவில் வாக்கு நிலவரம்:

யாழ்ப்பாணத்தில் பலர் நித்திரை அல்லது கஜே கோஸ்டியின் வேண்டுகோளின்படி பகிஸ்கரிக்கின்றார்கள் போலிருக்கு!

large.IMG_7063.jpeg.1d8c6c3435a569d5b454

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாலி said:

எனது கணிப்பின்படி 
அநுரவுக்கு 52%
சஜித்துக்கு 27%
ரணிலுக்கு 17%
மற்ற சில்லறைகளுக்கு  4% கிடைக்கும்


 

இது முற்றிலும் தவறாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

இது முற்றிலும் தவறாக இருக்கும்.

இருந்தால் இருந்திட்டிப்போகிது. கொள்விலையில் நட்டமா இல்லை விற்றவிலையில் நட்டமா?!

ஆனால் அரியத்துக்கு இருக்கு ஆப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களித்தார் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் 

21 Sep, 2024 | 04:31 PM
image
NSC-_976x90_.gif

தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் மட்டக்களப்பு அம்பிளாந்துறை முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், மட்டு. அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் தமது வாக்கினைப் பதிவு செய்தார்.

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றைய தினம் சனிக்கிழமை (21) நடைபெற்று வருகிறது. 

நாட்டின் தலைவரைத் தெரிவு செய்வதற்காக காலை 7 மணி முதல்  தமது வாக்குகளை மக்கள் பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிகிறது.

அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர்.

வாக்களித்தார் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன்  | Virakesari.lk

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

அரியத்துக்கு இருக்கு ஆப்பு!

அண்ணை பல இடங்களில் பலமாக சங்கூதப்பட்டுள்ளது, பார்ப்போம் என்ன முடிவு என!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

எனது கணிப்பின்படி 
அநுரவுக்கு 52%
சஜித்துக்கு 27%
ரணிலுக்கு 17%
மற்ற சில்லறைகளுக்கு  4% கிடைக்கும்


 

புராணத்தில் வாலி எதிராளிகளிடமிருந்து அவர்களின் பலத்தில் அரைவாசியை பிடுங்கி எடுத்து விடுவார் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. வாலியின் அநுரகுமார இங்கே அப்படி எடுக்கின்றார் போல...........🤣.

மூன்று பேரும் முப்பத்தி சொச்சம் எடுக்கட்டும்........... இந்த இரண்டாவது வாக்குகளை எண்ணும் algorithm நடைமுறையில் எப்படிப் போகுது என்று பார்ப்பதற்கு இதுதான் ஒரேயொரு சந்தர்ப்பம்.........

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஏராளன் said:

அண்ணை பல இடங்களில் பலமாக சங்கூதப்பட்டுள்ளது, பார்ப்போம் என்ன முடிவு என!

அவரது கோரிக்கை வட கிழக்கு  இணைந்த தமிழர் சுயாட்சி என்பதை வட கிழக்கு மாகாண மக்கள் விரும்புகிறார கள் என்பதை  சர்வதேசத்துக்கும் தென்பகுதிக்கும் எடுத்து அறைகூவி  சொல்வது என்று இன்று வாக்களித்த பின்னரும் ஶ்ரீதரன் தெரிவித்தார். ஆகவே வட கிழக்கில் 50 வீதத்துக்கு மேல் எடுக்காமல் விட்டால் குண்டு சட்டிக்குள்  சங்கூதி   ஒரு மண்ணுக்கும் பிரயோசனம் இல்லை. 75 வருடங்களாக எமது எனேர்ஜி எல்வற்றையும்  தவறான வழியில் பிரயோகித்து அனைத்தையும் இழந்ததை போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

அவரது கோரிக்கை வட கிழக்கு  இணைந்த தமிழர் சுயாட்சி என்பதை வட கிழக்கு மாகாண மக்கள் விரும்புகிறார கள் என்பதை  சர்வதேசத்துக்கும் தென்பகுதிக்கும் எடுத்து அறைகூவி  சொல்வது என்று இன்று வாக்களித்த பின்னரும் ஶ்ரீதரன் தெரிவித்தார். ஆகவே வட கிழக்கில் 50 வீதத்துக்கு மேல் எடுக்காமல் விட்டால் குண்டு சட்டிக்குள்  சங்கூதி   ஒரு மண்ணுக்கும் பிரயோசனம் இல்லை. 75 வருடங்களாக எமது எனேர்ஜி எல்வற்றையும்  தவறான வழியில் பிரயோகித்து அனைத்தையும் இழந்ததை போல. 

உண்மை தான் அண்ணை. ஆனால் பல கட்சிகளாக சிதறுண்டுபோய் இருப்பவர்களை ஒரு குடையின் கீழ் ஒன்றாக்க ஒரு இறுதிச் சந்தர்ப்பம் இது என நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

உண்மை தான் அண்ணை. ஆனால் பல கட்சிகளாக சிதறுண்டுபோய் இருப்பவர்களை ஒரு குடையின் கீழ் ஒன்றாக்க ஒரு இறுதிச் சந்தர்ப்பம் இது என நான் நினைக்கிறேன்.

நிச்சயமாக இல்லை ஏராளன். கிடைக்காத பதவி என்பதால் வெற்று கோசங்களை வைத்து ஒற்றுமையை காட்டுவதாக நடிக்கிறார்கள். அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக தகுதியான வேட்பாளர்களை ஒற்றுமையுடன் நிறுத்தி தற்போதைய நிலையில் நடைமுறை சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு திட்டத்ததை உருவாக்கி   ஒற்றுமையாக தொடர்சசியாக அரசியல் வேலைதிட்டங்களை முன்னெடுத்து இலங்கையில் தமிழரின் அரசியல், பொருளாதார பலத்தை அதிகரிக்கும் வகையில் செயற்பட்டால் அது தான் உண்மையான ஒற்றுமை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் அமைதியான தேர்தல்: தமிழர் பகுதிகளின் வாக்குபதிவு நிலவரம்

முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தல், இலங்கையில் இதுவரை நடைபெற்றவற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என்ற வரலாற்றில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 69.47  சதவீதத்ததுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி

வன்னி தேர்தல் தொகுதியில் எவ்விதமான வன்முறை சம்பவங்களும் இன்றி சுமூகமான முறையில் தேர்தல் வாக்களிப்பு முடிவு பெற்றுள்ளது.

வரலாற்றில் அமைதியான தேர்தல்: தமிழர் பகுதிகளின் வாக்குபதிவு நிலவரம் | Presidential Polls Close With 70 Turnout

வவுனியா மாவட்டத்தில் 72 வீதம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளது.

வன்னித் தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் 71.76 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இன்னும் சில நேரங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் 

யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா

நுவரெலியா மாவட்டத்தில் 72 சதவீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி செயலாளர் நந்தன கலபட குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வரை 56.34 வீதமான வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் 23.88 வீதம் வாக்களிப்பு உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் தெரிவித்தார்.

மன்னார் 

மன்னார் மாவட்டத்தில் மிகவும் சுமூகமான முறையில் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் மாலை 3 மணி வரை 59 ஆயிரத்து 730 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

இது மொத்த வாக்குகளில் 65.92 வீதமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 73 .83 வீதம் வாக்குப்பதிவு.

https://ibctamil.com/article/presidential-polls-close-with-70-turnout-1726919080#google_vignette

Link to comment
Share on other sites

ஊரடங்கு சட்டம் இரவு 10ல் இருந்து காலை வரை போடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

ஊரடங்கு சட்டம் இரவு 10ல் இருந்து காலை வரை போடப்பட்டுள்ளது.

என்னவோ… நடக்கப் போகுது. 😮

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.