Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images-16.jpeg?resize=300,168

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராகச் செயல்பட்டு வந்த இஸ்மாயில் ஹனியே ஈரானில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து இஸ்மாயில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன்  அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறதுடன் இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்ததுள்ளது.

மேலும் 90 ஆயிரத்து 589க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன நிலையில் இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1394215

  • Replies 111
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும். குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அ

  • யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள்  வெளியேற்றப்பட்டது  90ம் ஆண்டு. அதற்குமுதல் எந்த முஸ்லிம்நாடுகள் எமக்கு ஆதரவும் ஆயுதமும் தந்தன? எந்த முஸ்லீம்நாடுகள் எமக்கு ஆயுதங்கள் தரும் வாய்ப்பு இருந்தன? இன்ற

  • nunavilan
    nunavilan

    பலஸ்தீனியர்களையும் ஒரே கூடைக்குள் போட்டீர்கள்  பாருங்கள் அங்கை தான் நீங்கள் நிற்கிறீர்கள். அது சரி பெரும்பாலான போர்களுக்கு ஏன் அமெரிக்கா காரணகர்த்தாவாக நிற்கிறது என எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? ப

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளுக்குத் தேவையான மருந்து இஸ்ரேலிடம் தான் உண்டு. இன்னொரு ஹெஸ்புல்லா பயங்கரவாதிக்கும் மருந்துகொடுக்கப்பட்டுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் சிரேஷ்ட தலைவர் ஈரானில் படுகொலை

Published By: DIGITAL DESK 3   31 JUL, 2024 | 09:52 AM

image

ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் இன்று புதன்கிழமை (31) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் இஸ்மாயில் ஹனியே இன்றைய தினம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்மாயிலுடன் சேர்த்து அவரது மெயப்பாதுகாவலரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை புதிய ஈரானின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ஹனியே கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/189858

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவிப்பு

இஸ்மாயில் ஹனியே

பட மூலாதாரம்,REUTERS

31 ஜூலை 2024, 04:04 GMT
புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஹமாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ஹனியே கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

''சம்பவத்திற்கான" காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் "விசாரணை செய்யப்பட்டு வருகிறது" என்று இரானிய புரட்சிகர காவல்படை கூறியதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

62 வயதான ஹனியே 1980களின் பிற்பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார்.

இஸ்ரேல் சொல்வது என்ன?

இஸ்ரேலிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் இன்னும் வரவில்லை.

ஆனால் இஸ்ரேலின் தீவிர வலதுசாரியான கலாசார அமைச்சர் அமிக்கேய் எலியாஹு போன்ற சில அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்வினை வந்துள்ளது.

ஹனியேவின் மரணம் "உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுகிறது" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹமாஸ் கூறியது என்ன?

''பாலஸ்தீனிய மக்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கும், உலகின் அனைத்து சுதந்திர மக்களுக்கும் ஹமாஸ் இரங்கல் தெரிவித்து கொள்கிறது'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹனியேவின் படுகொலைக்கு தங்கள் குழு பதிலடி கொடுக்கும் என்று ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

''இந்த கோழைத்தனமான செயலுக்கு, நிச்சயம் தண்டனை கிடைக்கும்'' என என்று முசா அபு மர்சூக் கூறியுள்ளதாக ஹமாஸ் நடத்தும் அல்-அக்ஸா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

முன்பு கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்கள்

அக்டோபர் 7-ல் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பிணைக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குலுக்கு பிறகு ஹமாஸின் மூத்த தலைவர்களை ''அழிப்போம்'' என இஸ்ரேல் தொடர்ந்து கூறி வந்தது.

அதன் பிறகு பல மூத்த ஹமாஸ் தலைவர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர் என நம்பப்படுகிறது. ஹமாஸின் துணை அரசியல் தலைவர் சலே அல்-அரூரி மற்றும் ஹமாஸின் ராணுவப் பிரிவின் துணைத் தளபதி மர்வான் இசா ஆகியோர் இதில் அடங்குவர்.

இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் மற்றும் அவரது நான்கு பேரக்குழந்தைகள் ஏப்ரல் மாதம் காசாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இஸ்மாயில் ஹனியே

பட மூலாதாரம்,REUTERS

இஸ்மாயில் ஹனியே யார்?

அபு அல்-அப்து என்ற புனைப்பெயர் கொண்ட இஸ்மாயில் அப்தெல் சலாம் ஹனியே, பாலத்தீன அகதிகள் முகாமில் பிறந்தவர். இவர் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவர்.

இஸ்மாயில் ஹனியே ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவராக பரவலாகக் கருதப்படுகிறார். 1980 முதல் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார்.

பாலத்தீன அரசாங்கத்தின்(Palestinian Authority government) பத்தாவது பிரதமராக 2006-ஆம் ஆண்டில் வகித்தார். ஒராண்டுக்கு பிறகு அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

அவர் 2017 இல் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை 2018 இல் பயங்கரவாதியாக அறிவித்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் தலைவரின் படுகொலை மத்திய கிழக்கை முழுமையான யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது - மத்திய கிழக்கு தொடர்பான நிபுணர் கருத்து

Published By: RAJEEBAN   31 JUL, 2024 | 11:29 AM

image
 
ஹமாஸ் தலைவர்  இஸ்மாயில் ஹனியே  கொல்லப்பட்டுள்ளமை மத்திய கிழக்கை முழுமையான ஒரு யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத்தின் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான பேராசிரியர் நடெர் ஹசேமி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவரின் படுகொலை முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு மத்திய கிழக்கை முழுமையான யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என  அவர்தெரிவித்துள்ளார்.

இது பெரும் திருப்புமுனை என தெரிவித்துள்ள அவர் பெய்ரூட்டின் தென் பகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவரை சில மணிநேரத்திற்கு முன்னர் இஸ்ரேல் படுகொலை செய்ய முயன்றுள்ளதால்  ஹமாஸ் தலைவரின் படுகொலை லெபானிலும் எதிரொலிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹனியேயின் படுகொலைக்கு பின்னர் இந்த மோதலை தீவிரப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189875

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள், இஸ்ரேலிய அரச பயங்கரவாதிகளின் அழிவு நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானுக்குள்ளும் முக்கிய தலைவரை காப்பாற்ற முடியவில்லை அராபியர்களால். 

அதேவேளை அங்கு சென்று தாக்குதலை நடாத்தி விட்டு சேதமற்று வந்திருக்கிறது இஸ்ரேல்.

கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியாக வரும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து இஸ்மாயில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன்  அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இவரும் எங்கட புலம்பெயர் ஈழதமிழர்கள் பலர் போன்று தான் சொந்த நாட்டில் ஒரு வீடும் இலங்கையில் ஒரு வீடும் வைத்திருப்பது போன்று.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும்.

குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அது பலமுறை நடந்திருக்கிறது.

சஹ்ரான் சாகுமுன்  வெளியிட்ட ஒரு வீடியோவில்  இஸ்லாமியர்களல்லாதவர்களை அவர்கள் எமக்கு எந்த அநியாயமும் செய்யவில்லையென்றாலும்  மூட்டு மூட்டாக வெட்டி கொல்லுங்கள் என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னான், 

இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையென்றால்கொல்லப்படுவீர்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும்  சொன்னான்.

அவன் வெளிப்படையாக சொல்லிட்டான் ஆனால் மறைமுகமாக ஏறத்தாள உலகின் அனைத்து இஸ்லாமியர்களும் தமது மதம்தான் உலகையே ஆளவேண்டும் என்ற கருத்தை ,அமதுக்குள் கொண்டவர்கள் .

பாலஸ்தீன பிரச்சனை அவர்கள் மண் சார்ந்த பிரச்சனை என்றாலும், மதம் என்று வந்தால் அவர்களும் உலகின் பிற முஸ்லீம்கள் போன்ற கருத்தை கொண்டவர்களே

32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இவரும் எங்கட புலம்பெயர் ஈழதமிழர்கள் பலர் போன்று தான் சொந்த நாட்டில் ஒரு வீடும் இலங்கையில் ஒரு வீடும் வைத்திருப்பது போன்று.

.அவர் முதல் துருக்கியிலிருந்தார் , பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கத்தாரில் பதுங்கினார், பிறகு ,அங்கிருந்து ஈரான் வந்தபோது இஸ்ரேலினால் துல்லியமாக போட்டு தள்ளப்பட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சமூக ஊடகங்களில் இஸ்மாயில் ஹனியேயின் இழப்பை தாங்கிகொள்ள முடியாத  இந்திய இலங்கை முஸ்லீம்கள், சம்பந்தமே இல்லாமல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டது மகிழ்ச்சி என்று பதிவிடுகிறார்கள்,

புலிகளின் தலைவர் கமாஸ் தலைவர்கள்போல சொந்த மக்களையும் போராளிகளையும்  சாகவிட்டு அந்நியநாட்டுக்கு ஓடிபோய் அங்குள்ள அரண்மனைகளிலிருந்தபடி அறிக்கைவிட்டு வெட்டி வீரம் காண்பிக்கவில்லையென்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமலேயே! 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, valavan said:

இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும்.

குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அது பலமுறை நடந்திருக்கிறது.

சஹ்ரான் சாகுமுன்  வெளியிட்ட ஒரு வீடியோவில்  இஸ்லாமியர்களல்லாதவர்களை அவர்கள் எமக்கு எந்த அநியாயமும் செய்யவில்லையென்றாலும்  மூட்டு மூட்டாக வெட்டி கொல்லுங்கள் என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னான், 

இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையென்றால்கொல்லப்படுவீர்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும்  சொன்னான்.

அவன் வெளிப்படையாக சொல்லிட்டான் ஆனால் மறைமுகமாக ஏறத்தாள உலகின் அனைத்து இஸ்லாமியர்களும் தமது மதம்தான் உலகையே ஆளவேண்டும் என்ற கருத்தை ,அமதுக்குள் கொண்டவர்கள் .

பாலஸ்தீன பிரச்சனை அவர்கள் மண் சார்ந்த பிரச்சனை என்றாலும், மதம் என்று வந்தால் அவர்களும் உலகின் பிற முஸ்லீம்கள் போன்ற கருத்தை கொண்டவர்களே

.அவர் முதல் துருக்கியிலிருந்தார் , பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கத்தாரில் பதுங்கினார், பிறகு ,அங்கிருந்து ஈரான் வந்தபோது இஸ்ரேலினால் துல்லியமாக போட்டு தள்ளப்பட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சமூக ஊடகங்களில் இஸ்மாயில் ஹனியேயின் இழப்பை தாங்கிகொள்ள முடியாத  இந்திய இலங்கை முஸ்லீம்கள், சம்பந்தமே இல்லாமல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டது மகிழ்ச்சி என்று பதிவிடுகிறார்கள்,

புலிகளின் தலைவர் கமாஸ் தலைவர்கள்போல சொந்த மக்களையும் போராளிகளையும்  சாகவிட்டு அந்நியநாட்டுக்கு ஓடிபோய் அங்குள்ள அரண்மனைகளிலிருந்தபடி அறிக்கைவிட்டு வெட்டி வீரம் காண்பிக்கவில்லையென்ற அடிப்படை புரிதல்கூட 

பலஸ்தீனியர்களையும் ஒரே கூடைக்குள் போட்டீர்கள்  பாருங்கள் அங்கை தான் நீங்கள் நிற்கிறீர்கள்.
அது சரி பெரும்பாலான போர்களுக்கு ஏன் அமெரிக்கா காரணகர்த்தாவாக நிற்கிறது என எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?
பாலசிங்கம் எங்கை இருந்தவர்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

1) இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையென்றால்கொல்லப்படுவீர்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும்  சொன்னான்.

2) அவன் வெளிப்படையாக சொல்லிட்டான் ஆனால் மறைமுகமாக ஏறத்தாள உலகின் அனைத்து இஸ்லாமியர்களும் தமது மதம்தான் உலகையே ஆளவேண்டும் என்ற கருத்தை ,அமதுக்குள் கொண்டவர்கள் .

3) பாலஸ்தீன பிரச்சனை அவர்கள் மண் சார்ந்த பிரச்சனை என்றாலும், மதம் என்று வந்தால் அவர்களும் உலகின் பிற முஸ்லீம்கள் போன்ற கருத்தை கொண்டவர்களே

1)  கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பெண்கள் தமிழ்ப் பெயர்களைக் கொண்டிருப்பதன் பின்னணி இதுதான். தமிழ்  ஆண்களைக் கொன்றுவிட்டு பெண்களைத் துப்பாக்கி முனையில் மதம் மாற்றம் செய்தார்கள்

2) 100%

3) 100%  

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

பலஸ்தீனியர்களையும் ஒரே கூடைக்குள் போட்டீர்கள்  பாருங்கள் அங்கை தான் நீங்கள் நிற்கிறீர்கள்.
அது சரி பெரும்பாலான போர்களுக்கு ஏன் அமெரிக்கா காரணகர்த்தாவாக நிற்கிறது என எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?
பாலசிங்கம் எங்கை இருந்தவர்?

எனது இனம் கொத்து கொத்தாய் மடிந்ததுக்கு யுத்தவெற்றி வாழ்த்து சொன்ன எம்மைபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட பாலஸ்தீன மக்களுக்கு தலைமை தாங்கும் அதன் தலைமையை எந்த கூடையில் வேண்டுமென்றாலும் போடலாம் என்ற கருத்து கொண்டுள்ளேன், நீங்கள் அதே  கூடைக்குள் அவர்களை போடாதிருப்பதில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஹமாஸ் தலைவரின் படுகொலை மத்திய கிழக்கை முழுமையான யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது - மத்திய கிழக்கு தொடர்பான நிபுணர் கருத்து

Published By: RAJEEBAN   31 JUL, 2024 | 11:29 AM

image
 
ஹமாஸ் தலைவர்  இஸ்மாயில் ஹனியே  கொல்லப்பட்டுள்ளமை மத்திய கிழக்கை முழுமையான ஒரு யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத்தின் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான பேராசிரியர் நடெர் ஹசேமி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவரின் படுகொலை முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு மத்திய கிழக்கை முழுமையான யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என  அவர்தெரிவித்துள்ளார்.

இது பெரும் திருப்புமுனை என தெரிவித்துள்ள அவர் பெய்ரூட்டின் தென் பகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவரை சில மணிநேரத்திற்கு முன்னர் இஸ்ரேல் படுகொலை செய்ய முயன்றுள்ளதால்  ஹமாஸ் தலைவரின் படுகொலை லெபானிலும் எதிரொலிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹனியேயின் படுகொலைக்கு பின்னர் இந்த மோதலை தீவிரப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189875

இவர் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர். ஆயுதப் பிரிவுக்கு அல்ல. 

இவரைப் படுகொலை செய்ததன் உண்மையான நோக்கம் ஈரானை எப்பாடுபட்டாவது போருக்குள் இழுத்துவிடுவதுதான். 

ஆனால் அது நடக்கும் என்று தோன்றவில்லை. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, valavan said:

எனது இனம் கொத்து கொத்தாய் மடிந்ததுக்கு யுத்தவெற்றி வாழ்த்து சொன்ன எம்மைபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட பாலஸ்தீன மக்களுக்கு தலைமை தாங்கும் அதன் தலைமையை எந்த கூடையில் வேண்டுமென்றாலும் போடலாம் என்ற கருத்து கொண்டுள்ளேன், நீங்கள் அதே  கூடைக்குள் அவர்களை 

ஆனாப்பட்ட கியூபாவே எங்களுக்கு எதிராக வாக்களித்தது ஏன் என நினைக்கிறீர்கள்?

14 minutes ago, Kapithan said:

இவர் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர். ஆயுதப் பிரிவுக்கு அல்ல. 

இவரைப் படுகொலை செய்ததன் உண்மையான நோக்கம் ஈரானை எப்பாடுபட்டாவது போருக்குள் இழுத்துவிடுவதுதான். 

ஆனால் அது நடக்கும் என்று தோன்றவில்லை. 

கிஸ்புல்லாவை வைத்து செய்ய வேண்டியதை செய்வார்கள்.

18 minutes ago, valavan said:

எனது இனம் கொத்து கொத்தாய் மடிந்ததுக்கு யுத்தவெற்றி வாழ்த்து சொன்ன எம்மைபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட பாலஸ்தீன மக்களுக்கு தலைமை தாங்கும் அதன் தலைமையை எந்த கூடையில் வேண்டுமென்றாலும் போடலாம் என்ற கருத்து கொண்டுள்ளேன், நீங்கள் அதே  கூடைக்குள் அவர்களை போடாதிருப்பதில் மகிழ்ச்சி.

நாங்கள் மொக்குதனமாக முஸ்லிம்களை அடித்துவிரட்ட சிறிலங்கா அரசு முஸ்லிம் நாடுகளில் புலிகள் முஸ்லிம்களை அடித்து கலைக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தின் பலாபலன் தான் அது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இவரும் எங்கட புலம்பெயர் ஈழதமிழர்கள் பலர் போன்று தான் சொந்த நாட்டில் ஒரு வீடும் இலங்கையில் ஒரு வீடும் வைத்திருப்பது போன்று.

அவரது பிள்ளைகள் சகோதர்கள் பலர் அண்மையில் இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

3 hours ago, விசுகு said:

ஈரானுக்குள்ளும் முக்கிய தலைவரை காப்பாற்ற முடியவில்லை அராபியர்களால். 

அதேவேளை அங்கு சென்று தாக்குதலை நடாத்தி விட்டு சேதமற்று வந்திருக்கிறது இஸ்ரேல்.

கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியாக வரும் 

இஸ்ரேலுக்குள் உள்ள பணய கைதிகளையும் காப்பாற்ற முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

இவரைப் படுகொலை செய்ததன் உண்மையான நோக்கம் ஈரானை எப்பாடுபட்டாவது போருக்குள் இழுத்துவிடுவதுதான். 

நான் அப்படி நினைக்கவில்லை  ......இவர்  சம்பந்தனைப்போல்.   பதவியில் ஒட்டி கொண்டு இருப்பார்,.......இதனால் இளைஞர்கள்  திறமைசாலிகள்……………… தலைவர்கள் ஆகும் வாய்ப்புகளை இழந்து விடுவார்கள . , .... புதிய  சிறந்த  திறமையான தலைவர்களை உருவாகிறது இஸ்ரேல்   😂😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

ஆனாப்பட்ட கியூபாவே எங்களுக்கு எதிராக வாக்களித்தது ஏன் என நினைக்கிறீர்கள்?

இப்போது கியூபாவை தொட்டுகொள்கிறீர்கள், பின்பு ரஷ்யா,இந்தியா என்றும் தொடரும் வாய்ப்பிருக்கிறது,

நாங்கள் பாலஸ்தீன தலைவர் பலி தொடர்பான திரியில் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம் அதனால் அவர்பற்றி பேசினேன், கியூபா பற்றிய செய்திகளாயிருந்தால் கண்டிப்பாக அதே கூடையில்தான் கியூபா  தலைமையும்  போடப்படும் என்பதில் மாற்றமில்லை.

எனது இனத்தின் அழிவை கொண்டாடியவர்களுக்கு முன்னால் நடு நிலமை என்பது ஒருபோதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும்.

இது 100%    உண்மையாகும்     

ஹெஸ்புல்லாவின் கொமாண்டோவான Fouad Chokr என்பவரை லெபனானின் தலைநகரில் நடத்திய தாக்குதலில் தாம் கொன்றுள்ளதாக இஸ்ரெயில் அறிவித்துள்ளது. இவர் கடந்த சனி இஸ்ரெயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பானவராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

பைடன் ஐயா ஓய்வு காலத்தை நோக்கி செல்கின்றார். அடுத்த தலைவர் சிங்கமா அல்லது கமலா அக்காவா என்பது தெரியாது. அமெரிக்காவின் அரசியல் தலைமையின் நிச்சயமற்ற தன்மையை இஸ்ரேல், ஈரான், இரஷ்யா, தமக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கலாம். 

2 minutes ago, நியாயம் said:

பைடன் ஐயா ஓய்வு காலத்தை நோக்கி செல்கின்றார். அடுத்த தலைவர் சிங்கமா அல்லது கமலா அக்காவா என்பது தெரியாது. அமெரிக்காவின் அரசியல் தலைமையின் நிச்சயமற்ற தன்மையை இஸ்ரேல், ஈரான், இரஷ்யா, தமக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கலாம். 

சிங்கம் வந்தாலும் இஸ்ரேல் பிரச்சனை இஸ்ரேலுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் போலுள்ளது. கமலா இஸ்ரேலியர்களுக்கு எதிரானவர் என்று பிரச்சாரம் செய்து யூதர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

அபு அல்-அப்து என்ற புனைப்பெயர் கொண்ட இஸ்மாயில் அப்தெல் சலாம் ஹனியே, பாலத்தீன அகதிகள் முகாமில் பிறந்தவர். இவர் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவர்.

சொந்த மண்ணின் அருமையும் அந்த மண்ணின் மீதான தாக்குதலும் அந்த மண்ணின் சுரண்டலும் வலிகளும் வேதனைகளும் சொந்த மண்ணிலேயே அகதியானவனுக்குத்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nunavilan said:

ஆழ்ந்த அனுதாபங்கள், இஸ்ரேலிய அரச பயங்கரவாதிகளின் அழிவு நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

இஸ்ரேல் ஆதரவாளர்கள் இஸ்ரேல் செய்யும் அழிவுகளையும் ஆக்கிரப்புகளையும் கொலைகளையும் கண்டுகொள்வதுமில்லை.கண்டிப்பதுமில்லை.

 கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவருக்கு அழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயிலின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்!

Published By: DIGITAL DESK 3   31 JUL, 2024 | 03:16 PM

image

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனத்தை வெளியிட்டுள்ளார். 

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இவ்வாறான செயற்பாடுகளை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/189902

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஏராளன் said:

இங்கே பாரடா? 

1 hour ago, குமாரசாமி said:

சொந்த மண்ணின் அருமையும் அந்த மண்ணின் மீதான தாக்குதலும் அந்த மண்ணின் சுரண்டலும் வலிகளும் வேதனைகளும் சொந்த மண்ணிலேயே அகதியானவனுக்குத்தான் தெரியும்.

இது ஏன் அண்ணா உக்ரைன் மக்களுக்கு பொருந்தாது???

2 hours ago, valavan said:

எனது இனம் கொத்து கொத்தாய் மடிந்ததுக்கு யுத்தவெற்றி வாழ்த்து சொன்ன எம்மைபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட பாலஸ்தீன மக்களுக்கு தலைமை தாங்கும் அதன் தலைமையை எந்த கூடையில் வேண்டுமென்றாலும் போடலாம் என்ற கருத்து கொண்டுள்ளேன், நீங்கள் அதே  கூடைக்குள் அவர்களை போடாதிருப்பதில் மகிழ்ச்சி.

1 hour ago, valavan said:

இப்போது கியூபாவை தொட்டுகொள்கிறீர்கள், பின்பு ரஷ்யா,இந்தியா என்றும் தொடரும் வாய்ப்பிருக்கிறது,

நாங்கள் பாலஸ்தீன தலைவர் பலி தொடர்பான திரியில் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம் அதனால் அவர்பற்றி பேசினேன், கியூபா பற்றிய செய்திகளாயிருந்தால் கண்டிப்பாக அதே கூடையில்தான் கியூபா  தலைமையும்  போடப்படும் என்பதில் மாற்றமில்லை.

எனது இனத்தின் அழிவை கொண்டாடியவர்களுக்கு முன்னால் நடு நிலமை என்பது ஒருபோதும் இல்லை.

நன்றி எனது நேரத்துக்கு. .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.