Jump to content

தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2024-04-13-120059-750x430-1.j

தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து இன்று வவுனியாவில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.வி.தவராசா மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவு என்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் 7 பிரதிநிதிகளும் 7 அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளும் கூட்டிணைந்து இந்த தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை ஸ்தாபித்துள்ளனர்.

 

எனினும், ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும் நபரை தெரிவு செய்வதற்காக நீண்ட பட்டியலொன்று தயார் செய்யப்பட்ட நிலையில் தற்போது சந்திரநேரு சந்திரகாந்தன், தவராசா, அரியநேத்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இறுதிப்பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் இருந்து அரசியல் சாராத ஒருவரை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டபோதும் அது பலனளிக்காத நிலையில் தற்போது அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் கட்சி மற்றும் சின்னம் தொடர்பாகவும் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் எந்தவொரு தரப்பினரும் பொருந்தாத நிலையில் இறுதியாக சி.வி. விக்னேஸ்வரனை பரிசீலிப்பதாகவும் குறிப்பாக அவர் இரண்டாவது வாக்கு தொடர்பில் அதிகமாக பிரஸ்தாபித்து வருவதால் அவருடைய பெயரை இறுதி நிலையில் வைப்பதற்கு பொதுக்கட்டமைப்பின் சிவில் தரப்பினர் தீர்மானித்துள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2024/1394799

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது வேட்பாளர் யார்?; இன்று முடிவாகும்

ஜனாதிபதி தேர்தலில், தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளர் குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன், அரியநேத்திரன், தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.வி.தவராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளர் குறித்து வவுனியாவில் இன்று கூடி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/307317

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளர் யார் என்பது இன்றைய தினமும் அறிவிக்கப்படவில்லை

Published By: VISHNU   05 AUG, 2024 | 06:47 PM

image

சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.

FB_IMG_1722861960200__1_.jpg

அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் உள்ளதனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. 

IMG-20240805-WA0019__1_.jpg

மதியம் ஒரு மணியளவில் ஆரம்பமான கூட்டம் மாலை 5 மணி வரையிலான சுமார் 04 மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் இடம்பெற்ற நிலையில் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் சந்திப்பு நிறைவுற்றுள்ளது. 

FB_IMG_1722861955843__1_.jpg

எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் தமிழ் பொது வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது பெயர்களே இறுதிப் பட்டியலில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.   

https://www.virakesari.lk/article/190364

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

அதேவேளை இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது பெயர்களே இறுதிப் பட்டியலில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.   

இது விக்கி அய்யாவுக்கு தெரியுமோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தமிழ் பொது வேட்பாளர் யார் என்பது இன்றைய தினமும் அறிவிக்கப்படவில்லை

யார் என்று இன்னுமே  முடிவு செய்யவில்லையா யாராக இருந்தால் தான் என்ன  மேற்குலகம் ஆவலுடன் பார்த்து கொண்டிருப்பது  தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழர்கள்  
 வாக்கு அளிப்பதை வைத்து  தமிழர்கள் விரும்பியதை நிறைவேற்றுவதற்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யார் என்று இன்னுமே  முடிவு செய்யவில்லையா யாராக இருந்தால் தான் என்ன  மேற்குலகம் ஆவலுடன் பார்த்து கொண்டிருப்பது  தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழர்கள்  
 வாக்கு அளிப்பதை வைத்து  தமிழர்கள் விரும்பியதை நிறைவேற்றுவதற்காக.

பொது வேட்பாளருக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடுகிறார கள் போல இருக்கு. 😂

  • Haha 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

ஒரு கூடை முழுக்க முட்டாள்களை போட்டால் என்ன நடக்கும்?

எது நடக்குமோ அதுவே இங்கு நடக்கின்றது.

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளர்; தமிழரசின் முடிவுக்கு காத்திருப்பு

tamilarasu.jpg

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு தமிழரசு கட்சியின் சம்மதம் கிடைக்க பொறாமை காரணமாக பொது வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் இடையிலான நீண்ட கலந்துரையாடல் சில மாதங்களாக இடம் பெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் ஏழு தமிழ் கட்சிகளும் ஆறு சிவில் அமைப்புகளும் இணைந்து தமிழ் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி பொது வேட்பாளர் தொடர்பான தெரிவை முன்னெடுப்பதற்கான உப குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழ் பொது வேட்பாளராக தமிழரசு கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியனேத்திரன் ஆகியோரின் பெயர்கள் இறுதி முடிவுக்காக பரிசீலனையில் எடுக்கப்பட்டது.

இருவரும் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் தமிழரசு கட்சிக்குள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சார்பு அணி பொது வேட்பாளருக்கு ஆதரவாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆதரவு அணி பொது வேட்பாளருக்கு எதிராகவும் இருப்பதால் தமிழரசு கட்சியின் சம்மதம் கிடைக்கப்பெறாமல் உள்ளது.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் ஆதரவு இல்லாமல் இருவருடைய பெயர்களில் ஒருவரை தெரிவு செய்வதில் சிக்கல் காணப்படுவதாலேயே பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
https://akkinikkunchu.com/?p=286936

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனாதிபதித் தேர்தலும் தமிழ் பொதுவேட்பாளர் நாட்டியமும்…!

சனாதிபதித் தேர்தல் அறிவிக்க முன்னாடியே தமிழ் வேட்பாளரை நிறுத்துவோம் என தமிழ்தேசிய அரசியல்வாதிகள் பாட ஆரம்பித்திருந்தனர். 

கடந்த ஜூன் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ் தரப்பினர் சந்தித்தவேளையிலேயே, தமிழ் வேட்பாளரை நிறுத்தப்போகிறோம் என ஶ்ரீதரன்- விக்கினேஸ்வரன் தரப்பும், புறக்கணிக்கப்போகிறோம் என முன்னணி தரப்பும், இல்லை யாரேனும் ஒருவரை ஆதரிப்போம் என சுமந்திரன் தரப்பும் கைகலத்ததாக தெரியவந்திருந்தது. 

விக்கினேஸ்வரனை முன்னிலைப்படுத்தி, தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் 

- ஶ்ரீதரன் : தவராசா : அரியம்
-செல்வம் அடைக்கலனாதன்
-தர்மலிங்கம் சித்தார்த்தன் 
- ஶ்ரீகாந்தா 
-சுரேஸ் பிரேமச்சந்திரன் 

உட்பட நிலாந்தன் போன்ற தமிழ்தேசிய பத்தி எழுத்தாளர்களும் வேலைசெய்ய ஆரம்பித்திருந்தனர். 

அச்சமயம் வெளிநாடொன்றில் தமிழர்களைச் சந்தித்த ஶ்ரீதரன்,

“சிங்கள ஓட்டுகள் மூன்று நான்காக சிதறப்போகிறது பொதுவேட்பாளரை நிறுத்த இதுதான் சிறந்த சந்தர்ப்பம். நம்மை தேடி அவர்கள் வருவார்கள். எங்கள் கோரிக்கையை முன்வைத்து அதை ஏற்பவர்களை ஆதரிப்போம், இரு வெளி நாட்டு தூதர்கள் முன்னிலையில் கையெழுத்து வாங்குவோம்” என அவரைப் பொறுத்தவரையிலான தமிழருக்கு மிகவும் உகந்த - எதிர்கால தந்திரோபாய நகர்வை விளக்கி உரையாற்றியிருந்தார். 

சனாதிபதித் தேர்தல் வேண்டாம்; ஆனால் பொதுவேட்பாளரை தெரிவு செய்வோம் என இன்னொரு தலைவர் விக்கினேஸ்வரன் அறிக்கை விட்டார். கூடவே சுமந்திரன் மூளையால் யோசித்து முடிவெடுப்பவர், நான் அப்படியல்ல என்று சுயதம்பட்டம்வேறு அடித்திருந்தார்.

புறக்கணிக்கும் முன்னணியை தவிர்த்து கவனியுங்கள், இதில் பொதுவேட்பாளர் தேவை - அதுதான் சரியான தீர்வு என ஈடுபாட்டுடன் களமிறங்கிய ஶ்ரீதரன்- சித்தார்த்தன்- செல்வம்- விக்கி என அனைவரும் தீவிர தமிழ்தேசிய அரசியல்வாதிகள். பொதுவேட்பாளரே ஒரே திர்வு- இதோ மக்கள் தீர்மானிக்கப்போகிறார்கள் என எழுதித் தள்ளியவர் தமிழ்தேசிய பத்தியாளர் நிலாந்தன்.

இப்போது என்னவாகிற்று?

- மெல்ல மெல்ல பொதுவேட்பாளருக்கான தெரிவு விமர்சிக்கப்பட, ஒருசில கிழமைகள் முன்பு பொதுவேட்பாளர்தான் தேவை என மக்களிடம் உணர்ச்சிகர உரையாற்றிய ஶ்ரீதரன் இருக்கும் இடம் தெரியாமல் சைலெண்ட் மோட்க்கு போய்விட்டார். முன்னால் நின்று நடத்திக்காட்டுவதுதானே தலைவருக்கு அழகு? ஒருமாதம் கூட தாக்குப்பிடிக்கமுடியாத தந்திரோபாயங்களை மக்களிடம் முன்வைக்க வெட்கமாக இல்லை?

-பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்யும் இழுபறியில் ஶ்ரீகாந்தா பக்கம் பொறுப்பை தட்டிவிட்டு விக்கினேஸ்வரன் நழுவிக்கொண்டார். தமிழ்தேசிய godfather.

- இறுதியில் பொதுவேட்பாளராக எஞ்சியிருப்பது தவராசாவும் அரியநேந்திரனும் தானாம். அதிலும் அரியம் தான் தெரிவு என்கிறார்கள். இவர்கள் இருவரும் தமிழரசு மத்திய குழுவைச் சார்ந்தவர்கள். ஶ்ரீதரன் அபினானிகள். தமிழரசுக் கட்சி ஒரு முடிவு எடுத்திருக்காத நிலையில் இவர்கள் கையைத் தூக்கியதற்காக உருப்படியான தமிழரசுத் தலைவர் கட்சியை விட்டு விலத்தவேண்டும். ஆனால் நடக்காது. 

-பெண் வேட்பாளர் தான் வேண்டுமென பத்மினி சிதம்பரநாதன் முதற்கொண்டு பலரையும் முயற்சித்து பலனில்லை.

- பொதுவேட்பாளர் ஐடியாவை ஆரம்பித்துவைத்த ஶ்ரீதரனோ விக்கினேஸ்வரனோ இதில் தாமே முன்வந்து தேர்தலை எதிர்கொண்டிருக்கவேண்டும். இருவரும் எஸ்கேப். இனித் தெரிவாகுபவர்கள் வேலைக்காகமாட்டார்கள் என செல்வமும் சித்தார்த்தனும் விலகிக்கொள்வார்கள். 

-பொதுவேட்பாளராக நியமனம்பெறுபவர் ஒரு சில ஆயிரம் ஓட்டுகளை, கடந்த காலங்களில் சிவாஜிலிங்கம் வாங்கியதைப் போல் வாங்கி சந்தி சிரிப்பார்கள்.

இவர்கள் தான் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தருவார்களென மக்கள் காத்திருக்கவேண்டுமா?

இவர்கள் தான் எம் இனத்தின் காவலர்கள்- எதிர்கால தூண்கள்-, அரசியல் சாணக்கியர்கள் என இளம் அரசியல்வாதிகள் பின்பற்றவேண்டுமா? 

——
மன்னாரிலோ எங்கேயோ நடந்த சனாதிபதி வேட்பாளர் தொடர்பான கூட்டமொன்றில் சுமந்திரனின் பேசிய பேச்சு முக்கியமானது. 1940 களில் இருந்து தமிழர்களின் தீர்க்கமற்ற / எதிர்காலத்தை நோக்கியதற்ற ஆனால் கடந்த காலங்களில் தேங்கி நின்று அரசியல் செய்த- செய்யும் வரலாற்றை படிப்படியாக விளக்கியிருப்ப்பார். அதன்வழியிலான அடுத்த நகர்வாகத்தான் இந்த பொதுவேட்பாளர் விடயமும் என்று முடித்திருப்பார். 

சுமந்திரனோடு பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இருக்கும் அரசியல்வாதிகளில் உண்மையை அரசியல் பூச்சுகள் இல்லாமல் செவிட்டில் அறைந்து சொல்லும் திறமை இங்கு வேறு எவருக்கும் இல்லை. Day 1 இல் இருந்தே பொதுவேட்பாளர் விடயத்தை முழுதாக கடுமையாக எதிர்த்துவந்தது சுமந்திரன் மட்டும்தான்.  

இருக்கலாம், விக்கி சொன்னதுபோல இப்போதிருக்கும் வடக்கு கிழக்கு தமிழ்தேசிய அரசியல்வாதிகளில் மூளையை பாவித்து முடிவெடுக்கும் ஒருவர் சுமந்திரனாக இருக்கலாம். 

தேசியத்தின் பெயரில் - போர்வையில் தங்கள் இயலாமைகளையும் குறைகளையும் மறைத்து, மக்களை பேய்க்காட்டாமல், மூளையை பாவித்து அரசியல் செய்ய இளைஞர்கள் அரசியலுக்குள் வரவேண்டும்.

த்தூ..! வெட்கங்கெட்ட தமிழரசியல்.

நன்றி முகநூல் பதிவு 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன் - அவரைப் பொறுத்தவரையிலான தமிழருக்கு மிகவும் உகந்த - எதிர்கால தந்திரோபாய நகர்வை  விளக்கி உரையாற்றியிருந்தார்]  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டியிருக்கும்  கோவணத்தில் டிசைன்களாகத் தெரிவது பூக்களல்ல, ஓட்டைகள் என்பது புலம்பெயர்ஸ்  டமில் தேசிய விசுவாசிகளுக்கு இன்னமும் புரியாததுதான் வேடிக்கை. அந்த ஓட்டைகளுடன் பொதுவேட்பாளர் என்று இன்னொரு பெரிய  பீத்தல் விழுந்துவிட்டது. 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாரும் இன்னும் அம்பிடேல்லையா?

ஏன் அனந்தி சசிதரன் அக்காவை இல்லாட்டி இரமநாதன் அர்சுனாவை ஒருக்கால் கேட்டுப்பாக்கலேமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாலி said:

தாரும் இன்னும் அம்பிடேல்லையா?

ஏன் அனந்தி சசிதரன் அக்காவை இல்லாட்டி இரமநாதன் அர்சுனாவை ஒருக்கால் கேட்டுப்பாக்கலேமே!

அண்ணை போட்டியாளர்கள் கூடவாக இருப்பதால் ஓபத்து போட்டுத்தான் பொதுவேட்பாளர் கண்டடையப்படுவாரோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

அண்ணை போட்டியாளர்கள் கூடவாக இருப்பதால் ஓபத்து போட்டுத்தான் பொதுவேட்பாளர் கண்டடையப்படுவாரோ?!

இவையள் ஓ பத்து போடுறேல்லை. ஓ டலன் டலன் போடுற கோஸ்டி இது!

 

 

ஓ டலன் டலன் 

ஆர் யு கிளப்

கிளப்பை தூக்கி மேல போட்டால்

செட்டியார் வீட்டு நண்டு

நண்டத் தூக்கி மேல போட்டால்

நாகரிகப் பாம்பு

பாம்பத் தூக்கி மேல போட்டால்

பஞ்சவர்ணக் கிளி

கிளியத் தூக்கி மேல போட்டால்

கீ! கீ! கீ!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

தாரும் இன்னும் அம்பிடேல்லையா?

ஏன் அனந்தி சசிதரன் அக்காவை இல்லாட்டி இரமநாதன் அர்சுனாவை ஒருக்கால் கேட்டுப்பாக்கலேமே!

தமிழ் பொதுவேட்பாளர் கூத்து தனக்கு சரிவராது என்பதை டொக்டர் அர்சுனா முதலே சொல்லிவிட்டார். நீதிபதி இளம் செளியனை தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிட வைக்கபோவதாக சொன்னார்கள்.

இப்போது  தமிழரசு கட்சி அரியேந்திரன் தவராசா  என்ற இருவரில் ஒருவரை தமிழ் பொதுவேட்பாளராக களம் இறங்குவார்களாம் இவர்களை உங்களுக்கு எல்லாம் தெரியுமோ

 

Link to comment
Share on other sites

ஆரம்பத்தில் இருந்தே இந்த விசர்க் கூத்தை, நடைமுறையில் பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சியை நான் எதிர்த்து எழுதி வந்துள்ளேன். 

//

இரு தரப்பிலும் ஆதரவை பெருவாரியாகப் பெற்றுக் கொண்ட ஒருவர் இன்று யாரும் இல்லை, வேட்பாளராக  நிறுத்துவதற்கு. அதே போன்று, தமிழ் கட்சி ஒன்று கூட இல்லை. வடக்கிலும் கிழக்கிலும் ஜேவிபி உட்பட தேசிய கட்சிகளின் செல்வாக்கு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் அப்படியான ஒருவர் எவரும் இல்லை.

அத்துடன் முஸ்லிம் மக்கள் ஒரு போதும் தமிழ் வேட்பாளரை ஆதரிக்கப் போவதும் இல்லை. இரு இனங்களுக்கும் இடையில் இருக்கும் பிளவை மேலும் வெளிக்காட்டிக் கொள்வதில் பலனடையப் போவது தமிழ் பேசும் இனங்கள் அல்ல.

தமிழ் கட்சிகளின் அரசியல் எப்போதும் நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றை செய்வதில் தான் தேங்கி நிற்கின்றது. அப்படியான ஒன்றுதான் இந்த தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவதும். 

//

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/8/2024 at 16:41, கிருபன் said:

பொறாமை காரணமாக பொது வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல்

இது தான் காரணமோ😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளரின் பெயர் இன்று வெளியாகும்

தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படவுள்ள பொது வேட்பாளரின் பெயர் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்குவதற்கான பொதுவேட்பாளராக பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டு ஆராயப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.வி.தவராசா ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் இருவருடனும் கலந்துரையாடி யாரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப் போகிறோம் என புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அறிவிப்பதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று புதன்கிழமை இதுபற்றி அவரிடம் வினவியபோது, பொது வேட்பாளரின் பெயர் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என அவர் உறுதிப்படுத்தினார்.
 

https://thinakkural.lk/article/307506

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பொதுவேட்பாளராக அரியநேத்திரனைத் தெரிவு செய்துள்ளார்களாம்..

---

🌟 **Congratulations to Mr. P. Arienanthairan!** 🌟

We are immensely proud to celebrate our esteemed Tamil nationalist, **Mr. P. Arienanthairan**, a former member of parliament. His notable contributions to democratic politics, especially his introduction and selection by the LTTE for democratic endeavors, have been exemplary.

Today, we are thrilled to announce that Mr. P. Arienanthairan has declared his candidacy as the common presidential candidate. His vision and dedication promise a bright future for our community and the nation.

Join us in supporting and honoring his remarkable journey and steadfast commitment to democratic values.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

பொதுவேட்பாளராக அரியநேத்திரனைத் தெரிவு செய்துள்ளார்களாம்..

large.IMG_6905.jpeg.0dcf104557acbe86bcc7

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

5 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_6905.jpeg.0dcf104557acbe86bcc7

தமிழ்த்தேசிய பெரும்புள்ளிகளின் வாட்ஸப் குறூப்பில் அதனை இயக்கும் எனது நெருங்கிய நண்பர் சேர்த்துவிட்டிருக்கின்றார்! அரியம் ஐயாவும் இருக்கின்றார். என்ன சொல்கின்றார் என்று பார்க்கின்றேன்😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

Today, we are thrilled to announce that Mr. P. Arienanthairan has declared his candidacy as the common presidential candidate. His vision and dedication promise a bright future for our community and the nation.

large.IMG_6907.jpeg.87d30b8c01a84a79e8ce

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கிருபன் said:

தமிழ்த்தேசிய பெரும்புள்ளிகளின் வாட்ஸப் குறூப்பில் அதனை இயக்கும் எனது நெருங்கிய நண்பர் சேர்த்துவிட்டிருக்கின்றார்! அரியம் ஐயாவும் இருக்கின்றார்.

நாட்டை ஆளப்போகின்ற ஜனாதிபதி அரியம் அய்யா, தமிழ்தேசிய பெரும்புள்ளிகள் என்று உயர்மட்டத்தவர்கள் வட்சப் குறுப்பில் நீங்களும் இருப்பது யாழ்கள உறுப்பினர்களாகிய எமக்கு மகிழ்ச்சியை கொண்டுவருகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7 தமிழ் கட்சிகளுடைய வேட்பாளராக, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசிய பா.அரியநேத்திரன்

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

சற்று முன்னர் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது.

 

தந்தை செல்வா கலையரங்கில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானம்  அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 

7 தமிழ் கட்சிகளும் 7 சிவில் அமைப்புக்களும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஊடாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு | Tamil Presidential Candidate

 

மேலும், பொதுவேட்பாளராக களமிறங்குவதற்காக தவராசா மற்றும் பா. அரியநேத்திரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தது.  இந்த நிலையிலேயே பா.அரியநேத்திரனை பொது வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

 

கடந்த காலங்களில் இந்த அரிநேந்திரன் முலிம்களுக்கு எதிராக இனவாதப் பேச்சுக்களை  பேசி வந்தமை குறிப்பிடத்தக்கது

https://www.jaffnamuslim.com/2024/08/7.html

Link to comment
Share on other sites

சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் எவராவது தமிழ் கட்சிகளுடன் பேசி ஏதாவது தீர்வு தருவதாக   உறுதி அளித்தார்களா?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழரசுக் கட்சியினதும் அரியத்தை இறக்கினவர்களினதும் குறிக்கோள் ரணிலுக்கு தமிழர் வாக்குகள் போய்விடக்கூடாது என்பதுதான். அதில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்!    
    • இப்ப தான் பொய்ண்டுக்கு வந்திருக்கிறீங்கள்! சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது வாக்குகளைப் பிரிப்பதற்காக. அது போலவே அரியமும் போட்டிடுவது தமிழர் வாக்குகள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு போகாமல் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே! நிலாந்தன் மாஸ்டர் கஸ்டப்பட்டு எழுதின விஞ்ஞாபனம் எல்லாம் வேஸ்ட்டாப் போச்சே!😂
    • 09 SEP, 2024 | 05:26 PM   யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   இதன்போது அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய   குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,   குறித்த பகுதியின் புதிதாக கட்டுமானம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு நிர்மாணிக்கப்படும் கட்டுமானத்திற்கு அருகாமையில் சடலமானது மீட்கப்பட்டுள்ளது.  சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் அடி காயங்கள் காணப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுமானத்தில் இரத்த கறைகளும் காணப்பட்டுள்ளன.    இந் நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கப்படுகின்றது.   மீட்கப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.   இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  https://www.virakesari.lk/article/193251
    • நடக்காது நடக்காது நடக்கவே முடியாது என்று சொல்கிறோமே தவிர  அதற்கு காரணம் நாம் நமது ஒற்றுமை இன்மை என்பதை உணர மறுக்கிறோம். அது இனி இல்லை என்றால் இளம் தலைமுறையினர் அதை தீர்மானிக்கட்டுமே.  எமது பலவீனங்களை உணராது அதை களையாது அதை ஒழித்து வைத்து விளையாடலாம் என்பது எவ்வகையில் நியாயம்??? எதிர்காலத்திற்கு உகந்தது???? இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டக்கிளை, நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்திருந்தது.   மாவட்ட கிளையினுடைய தீர்மானத்தை அங்கீகரிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூலக் கிளைகள் பிரதேசக் கிளைகள் மாவட்டக் கிளை உட்பட்ட தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபையினர் கூடி நுணுகி ஆராய்ந்து மாவட்ட கிளையினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்பொது வேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் தொடர்ந்து அதை நோக்கிய பணிகளை மாவட்டக்கிளை தீர்க்கமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்தனர் சிறீதரன் சிவஞானம்  https://www.facebook.com/share/p/7hLfFwWsHpAMCRCa/
    • சுமந்திரனும் சாணக்கியனும்  சகித்துக்கு ஆதரவு தேடி எப்படி தமிழரின் ஒற்றுமையை உறுதியாக்குவார்கள் என அறிய ஆவல். சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது போல் கிழக்கில் இருந்து ஒரு தமிழர்  ஜனாதிபதி போட்டியில் போட்டியிடுகிறார். இதில் வெளிநாடு எப்படி சிந்திக்கும் என்று நாம் கவலைப்படுவது ஏன் என்று புரியவில்லை. நாம் தமிழீழம் கேட்டு பொதுவாக்கெடுப்பு நடாத்தவில்லை.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.