Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

WhatsApp-Image-2024-08-06-at-9.37.25-PM-

ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தயோகபூர்வ இல்லத்தில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பினை ஊடகங்கள் முன்பாக வெளியிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

 

இதேவேளை தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடப்
போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நேற்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தினையும் தம்மிக்க பெரேரா கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆண்டு வரை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பணியாற்றியிருந்தார்.

தற்போது இலங்கை வரலாற்றில் மிகக்குறைந்த வயதுடைய ஜனாதிபதி வேட்பாளராக என்ற பெருமையை நாமல் ராஜபக்ச தனதாக்கிக்கி கொண்டுள்ளார்.

https://athavannews.com/2024/1394936

  • கருத்துக்கள உறவுகள்
Posted

454245326_897200332444940_86970758797479

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்களவர்கள்.  எத்தனை பேரும் ஐனதிபதி வேட்பாளர்களாக.  களமிறங்கலாம்.   ஆனால் ஒரு தமிழன் களமிறங்கக்கூடாது   என்று சுத்தத்தமிழன்.  சுமத்திரன். சொல்கிறார்.  2005 இல் புலிகள் மக்களை வாக்கு அளிக்க விடவில்லை,.ஆகையினால் ரணில் தோற்றார் என்பவர்கள் இன்று தமிழன் போட்டி இடக்கூடாது என்கிறார்கள்   ஏன்??  ரணிலுக்கு ஆதரவு இருந்தால்  100 பேரும்  போட்டி இடலாம்.  மக்கள் ரணிலை தெரிவு செய்வார்கள்,..அதிகமான சிங்களவர்கள். போட்டியிட்டால். தமிழ் மக்களின் பெறுமதியை   உணர்வார்கள் 

  • Like 1
Posted

மகிந்தவின் ரனிலுக்கான ஆதரவு அப்புட்டு தானா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிக் கொஞ்சம் தமிழ்  அரசியல்வாதிகளும் அவர்களின் சொம்புகளும் ரணிலுக்கு வாக்கு பெடாவிட்டால் நாமல் வந்து விடுவார். ஆகவே ரணிலுக்கு வாக்குப் போடுங்கள் என்று கிளம்புவார்கள்.

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாமல் கட்டுப்பணம் செலுத்தி விட்டாரா? நிலமையை பார்த்தால் ஜே வீ பி ஆள் தான் அடுத்த ஜனாதிபதி போல?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

images-1-1-1.jpg?resize=300,168&ssl=1

மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பும் பசில் ராஜபக்ஷ!ராஜபக்ச குடும்பத்தில் பிளவா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவதற்கு நாமல் ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் காரணமாகவே பசில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நிறுத்தும் தீர்மானித்தினால் ராஜபக்ச குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த நிலையில்இ பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவரும் அதனை நிராகரித்ததையடுத்து, நாமல் ராஜபக்சவின் பெயரை முன்மொழிந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பசில் ராஜபக்ச செயற்பட்டு வந்ததுடன் இது தொடர்பில் பல்வேறு மட்ட கலந்துரையாடலில் ரணில் – பசில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1394989

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடகிழக்கு இளைஞர்களின் ஆதரவு நாமலுக்கு! : கீத்நாத் காசிலிங்கம் நம்பிக்கை

Published By: RAJEEBAN   07 AUG, 2024 | 11:04 AM

image

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவுக்கு வட கிழக்கு இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும் என பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ வடகிழக்கு மாவட்டங்களில் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டுள்ளவர் என்பதால் வடக்கு, கிழக்கு இளைஞர்களின் ஆதரவை பெறும் முதலாவது ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ  விளங்குவார் என கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்குக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எனவும் தெரிவித்துள்ள அவர், மக்களின் துயரங்களை அறிந்துகொள்வதற்காகவே நாமல் ராஜபக்ஷ அங்கு சென்றார், அந்த பகுதியின் அரசியல் பொருளாதார சமூக நிலை குறித்து நாமல் ராஜபக்ஷ ஆழ்ந்த அறிவை பெற்றுக்கொண்டுள்ளார் என கீத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் நாமல் ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக மாற்றத்தை எதிர்பார்க்கும் இளம்தலைமுறையினர் நாமல் ராஜபக்ஷவை ஆதரிப்பார்கள் எனவும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/190473

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, ஏராளன் said:

வடகிழக்கு இளைஞர்களின் ஆதரவு நாமலுக்கு! : கீத்நாத் காசிலிங்கம் நம்பிக்கை

Published By: RAJEEBAN   07 AUG, 2024 | 11:04 AM

image

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவுக்கு வட கிழக்கு இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும் என பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ வடகிழக்கு மாவட்டங்களில் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டுள்ளவர் என்பதால் வடக்கு, கிழக்கு இளைஞர்களின் ஆதரவை பெறும் முதலாவது ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ  விளங்குவார் என கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்குக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எனவும் தெரிவித்துள்ள அவர், மக்களின் துயரங்களை அறிந்துகொள்வதற்காகவே நாமல் ராஜபக்ஷ அங்கு சென்றார், அந்த பகுதியின் அரசியல் பொருளாதார சமூக நிலை குறித்து நாமல் ராஜபக்ஷ ஆழ்ந்த அறிவை பெற்றுக்கொண்டுள்ளார் என கீத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் நாமல் ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக மாற்றத்தை எதிர்பார்க்கும் இளம்தலைமுறையினர் நாமல் ராஜபக்ஷவை ஆதரிப்பார்கள் எனவும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/190473

கீத் நாத் காசிலிங்கம் இவ்வளவு நாளும் எங்கை இருந்தவர்? 😂
இப்பதான் இவரின் பெயரை கேள்விப் படுகின்றேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, தமிழ் சிறி said:

கீத் நாத் காசிலிங்கம் இவ்வளவு நாளும் எங்கை இருந்தவர்? 😂
இப்பதான் இவரின் பெயரை கேள்விப் படுகின்றேன். 🤣

இவர் கோத்தபாயவின்ர ஆள் எண்டு நினைக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

இவர் கோத்தபாயவின்ர ஆள் எண்டு நினைக்கிறன்

இருக்கும்… இருக்கும். 😁
உண்மையில் நாமலின்ரை ஆள்… அங்கஜன் தான். 😂
ஆனால் அவர் இப்ப… ரணிலின்ரை கூடாரத்துக்குள்ளை இருக்கிறார். 🤣
அங்கஜனும், டக்ளசும்… போகாத இடம் இல்லை. 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

அந்த பகுதியின் அரசியல் பொருளாதார சமூக நிலை குறித்து நாமல் ராஜபக்ஷ ஆழ்ந்த அறிவை பெற்றுக்கொண்டுள்ளார் என கீத் குறிப்பிட்டுள்ளார்.

 

அங்கேயே பிறந்து வளர்ந்த எங்களாலேயே பெற்றுக் கொள்ள முடியாத அப் பிரதேசத்தின் அரசியல் சமூக பொருளாதார அறிவை ஒரு விஜயத்திலேயே நாமல் பெற்றுக் கொண்டிருக்கின்றார்..........🤣.

நாமலுக்காக சட்டக் கல்லூரி பரீட்சையை யார் எழுதினது என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

'கீத்' என்ற பெயர் கொஞ்சம் புதுமையாக இருக்கின்றது........... ஏதோ அவர்களால் முடிந்த ஒரு புதுமை........ 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

கீத் நாத் காசிலிங்கம் இவ்வளவு நாளும் எங்கை இருந்தவர்? 😂
இப்பதான் இவரின் பெயரை கேள்விப் படுகின்றேன். 🤣

அண்ணை மகிந்த ஐயாவின் வடக்கிற்கான இணைப்பாளராக முன்னர் இருந்ததாக நினைவு.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

z_p00-Namal-Rajapaksa.jpg?resize=750,375

எனது வெற்றியானது நாட்டின் வெற்றியாகும் -நாமல் ராஜபக்ஷ.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை இடம்பெற்ற விசேட நிகழ்வின் போது இது குறித்த  உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றியீட்டினால் அது தனது தனிப்பட்ட  வெற்றி அல்ல எனவும் , அது நாட்டின் வெற்றியாகவே கருதப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமல் ராஜபக்ஷ  மேலும் தெரிவித்துள்ளதாவது ” கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் இந்த இடத்தில் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

 

நெருக்கடியான சந்தர்ப்பங்களிலேயே முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் .தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயமாக வெற்றிபெறும். இது தேர்தலில் எனது தனிப்பட்ட வெற்றியல்ல.

கட்சியின் ஏகோபித்த வெற்றியாகும்.தேர்தலில் நெருக்கடிக்கு மத்தியில் பாரிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பயணத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களையும் மீண்டும் எம்முடன் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எமது கட்சியின் கொள்கை திட்டம் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. கட்சியின் வெற்றியானது நாட்டின் வெற்றியாகும். தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்” இவ்வாறு  நாமல் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1395048

  • கருத்துக்கள உறவுகள்
Posted

tumblr_mj043btyQ01s77u51o1_500.gifv

 

454311371_898125079019132_35737154250387

 

450836788_898158469015793_56613331525476

 

454194324_897926032372370_72804385552971

 

454315284_898188259012814_42825408475180

 

 

 

454646627_898127735685533_63489498270893

 

494c541e0a5f1172984da14545f4d32c.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

454426364_898517122313261_97903056997707

 

454740411_898815215616785_38026791975531

 

454471642_898815558950084_22316757211237

 

454382549_898816375616669_62546098755032

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாமல் வந்த ரகசியம்! ஐந்தாவது முனை என்ன செய்யும்? - Kuna kaviyalahan/ Namal president candidate

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோத்தாவை வீட்டுக்கு அனுப்பும் போது மகிந்தவோடு சேர்த்து நாமலையும் தானே அனுப்பினது. அதுக்குள்ள மறந்திட்டுதா சிங்கள சனம்.

ஆனால்.. தமிழ் சிங்களக் காவடிகளுக்கு எக்காலத்திலும் குறைவில்லை. என்ன டக்கிளஸ் சுமந்திரன் அங்கஜன் சித்தார்த்துக்கு போட்டி கூடிக்கிட்டே போகுது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
455028812_512486338118539_80152884408440
மூக்கணாங் கயிறுகளை மாற்றுவதால் மாடுகளுக்கு எந்த சுகமும் கிட்டுவதில்லை.
தலையணைகளை மாற்றுவதால் தலைவலி தீருவதில்லை.
ஜனாதிபதிகளை மாற்றுவதால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை.
தேவை... முகம் மாற்றம் அல்ல. அமைப்பு மாற்றமே.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாமல் வந்த ரகசியம்! ஐந்தாவது முனை என்ன செய்யும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஸ் குணவர்த்தன, காமினி லொக்குகே, சாகரவை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆராய்ந்தோம்; விஜயதாசவிற்கு ஆதரவளித்திருப்போம் - பசில்

Published By: RAJEEBAN   11 AUG, 2024 | 12:14 PM

image

தம்மிக பெரேரா போட்டியிலிருந்து விலகிய பின்னர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்காக தினேஸ் குணவர்த்தன, காமினி லொகுகே உட்பட பலர் குறித்து ஆராய்ந்தோம் எனதெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச விஜயதாசவை கூட ஆதரித்திருப்போம் என குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 தம்மிக பெரேரா  போட்டியிலிருந்து விலகிய பின்னர் நாங்கள் பல பெயர்களை ஆராய்ந்தோம்.

பிரதமர் தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்ற உறுப்பினர் காமினிலொகுகே கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் ஆகியோரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆராய்ந்தோம்.

கட்சியின் பிரதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக நாமல் ராஜபக்சவை நியமிக்க தீர்மானித்தோம். நாமல் அதற்கு இணங்கினார்.

எங்களிடம் தகுதியான ஏனைய வேட்பாளர்கள் இருந்தனர். விஜயதாச ராஜபக்சவை கூட நாங்கள் ஆதரித்திருப்போம், அவர் வேறு கட்சியின் கீழ் போட்டியிட்டாலும் அவர் இன்னமும் நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரே என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சியின் முடிவை நிராகரித்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்தவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என மாவட்ட மட்ட பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர், அவ்வாறான முடிவை எடுத்தால் நீதிமன்றம் அதற்கு ஆதரவளிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மகிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும்  இது அதற்கான நேரமில்லை என தெரிவித்துள்ளனர்.

தற்போதைக்கு நாங்கள்  தேர்தல் குறித்து கவனம் செலுத்துவோம் பலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மீள வருவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சியின் நலனிற்கு எதிராக செயற்படுபவர்கள் குறித்து நீண்டநாட்களாக எங்களிற்கு தெரியும் மேலும் இருவர் உள்ளனர், அவர்கள் என்ன செய்ய திட்டமிடுகின்றனர் என்பதும் எங்களிற்கு தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/190805

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜபக்ஷர்களே நாட்டு மக்களை யாசகர்களாக்கினர் : நாமல் ராஜபக்ஷவை படுதோல்வியடைய செய்து மக்கள் தமது வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும் - பாட்டலி சம்பிக்க ரணவக்க

Published By: VISHNU   12 AUG, 2024 | 03:34 AM

image

(இராஜதுரை ஹஷான்)

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி ஒட்டுமொத்த மக்களையும் கையேந்த வைத்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும். நாமல் ராஜபக்ஷவை படுதோல்வியடைய செய்து மக்கள் தமது வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும். 

நாட்டை வங்குரோத்துக்கு தள்ளியவர்களால் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். நாட்டு மக்கள் தெளிவாக சிந்திக்க  வேண்டும். செப்டெம்பர் 21 ராஜபக்ஷர்களுக்கு சிறந்த படிப்பினையை கற்றுக்கொடுக்கும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பு பிலியந்தல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் சிறந்த அபிவிருத்தித் திட்டங்களை நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுத்தோம்.நட்டமடைந்த அரச நிறுவனங்களையும் இலாபமடைய செய்து அதன் பயனை நாட்டு மக்களுக்கு பல்வேறு வழிகளில் பெற்றுக்கொடுத்தோம்.

2019 ஆம் ஆண்டு இனவாதம் மற்றும் மதவாதத்தை முன்னிலைப்படுத்தி கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.இவர் ஜனாதிபதியாகியது நாட்டின் துரதிஸ்டம் என்கே குறிப்பிட வேண்டும்.கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் எவ்விதமான தூரநோக்கு சிந்தனைகளுமில்லாமல் பல அபிவிருத்தி கருத்திட்டங்களை இரத்து செய்தார்.இலகு ரணில் திட்டத்தை விசேடமாக குறிப்பிட வேண்டும்.

2020 ஆம் ஆண்டு இலகு ரயில் அபிவிருத்தி திட்டத்தை இரத்து செய்யாமலிருந்திருந்தால் இந்த ஆண்டு அந்த அபிவிருத்தி திட்டத்தை நிறைவு செய்திருக்க முடியும்.இலகு ரயில் அபிவிருத்தி திட்டம் குறித்து ஜப்பான் நாட்டுடன் மீண்டும்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

ஒட்டுமொத்த மக்களையும் யாசகர்களாக்கி இந்திய யாசகர் இலங்கைக்கு நிவாரணம் வழங்கும் நிலைக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்கள் 'பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டம் எம்மிடம் உள்ளது'என்று குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் செல்வது வேடிக்கையாகவுள்ளது. நாட்டை வங்குரோத்துக்கு தள்ளியவர்களால் எவ்வாறு பொருளாதார்தை மேம்படுத்த முடியும்.நாட்டு மக்கள் தெளிவாக சிந்திக்க  வேண்டும்.

பொருளாதார பாதிப்புக்கு முன்னாள் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.இவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்றும் சுதந்திரமாக உள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை களமிறக்கியதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனெனில் ஒட்டுமொத்த மக்களையும் யாசகர்களாக்கிய ராஜபக்ஷவின் குடும்பத்துக்கு தக்க பாடத்தை ஜனநாயக முறையில் புகட்ட வேண்டும்.ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவை படுதோல்வியடைய செய்து மக்கள் தமது வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும்.ராஜபக்ஷர்கள் 2022 ஆம் ஆண்டு மே 09 மற்றும் ஜூலை 09 காலப்பகுதியில் கற்றுக் கொள்ளாத படிப்பினையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி கற்றுக்கொடுக்க வேண்டும்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பிரதான தனியார் ஊடகம் ஒன்று சிங்கள பௌத்தம்,இனவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியது. பாம்பை  காண்பித்து பல விடயங்களை செய்தார்கள்.இவர்கள் மீண்டும் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட முன்வந்துள்ளார்கள்.ஆகவே இவர்களுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/190849

  • கருத்துக்கள உறவுகள்
Posted

455011439_921605823312804_10514812166426

சித்தப்பா... இதிலை  எங்கை Sign வைக்கிறது.  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/8/2024 at 22:58, ஏராளன் said:

ஒட்டுமொத்த மக்களையும் யாசகர்களாக்கி இந்திய யாசகர் இலங்கைக்கு நிவாரணம் வழங்கும் நிலைக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்கள்

இது பொருள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாமலுக்கு கோட்டா ஆதரவு

Simrith   / 2024 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:48 - 0      - 54

email sharing button
print sharing button
whatsapp sharing button
douban sharing button

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆதரவை வழங்கியுள்ளார். 

image_57fb88a278.png

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டார்.

image_5a02594d41.jpg

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். 

Tamilmirror Online || நாமலுக்கு கோட்டா ஆதரவு



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.