Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ஒரே ஒருவர் தான் ஐனதிபதி     இல்லையா?? அப்படியென்றால்  ஏன் பல சிங்களவர் போட்டிஇடுகிறார்கள்.......???  இந்த அரியேத்திரன். ஒரு சிங்களவன்.  என்று கற்பனையில் இருங்கள்’  உங்கள் வருத்தம் தீர்ந்து விடும்    தேர்தலில் எவரும் போட்டி இடலாம்  நீங்கள் வெல்ல முடியாது   போட்டி இடாதீர்கள்  என்பது   அடிப்படை உரிமை மீறிய செயல் 

😩

அரியநேந்திரனைச் சிங்களவராகக் கற்பனை செய்வதானால் தமிழ் வாக்காளர் எல்லோரும் தங்களைச் சிங்களவராகக் கற்பனை செய்துகொண்டால்  இலங்கையில் இனப்பிரச்சனையே இருக்காது அல்லவா? 

😏

1 hour ago, வல்வை சகாறா said:

எறும்பூர கற்குழியும். 🙂

இங்கே யார் எறும்பு, யார்  கல்லு, எறும்பு எதற்காக ஊருகிறது? 

  • Replies 77
  • Views 5.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    இதைத்தான் மக்களை ஏமாற்றும், புளுத்துப் போன, பழைய அரசியலின் நீட்சி என்கின்றேன். இவ்வாறு நீங்கள் சொல்லும் உறுதிப்படும், வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே உறுதியாக நிற்கின்றார்கள் என்று சர்வதேசத்துக்கு

  • அதி உத்தம  ஜனாதிபதி  பா. அரியநேந்திரன் நிச்சயமாக தமிழர் பிரச்சனைக்கு நீதியான தீர்வை காண்பார்.  இவரே முப்படைகளின் பிரதம தளபதியாகவும் எதிர்காலத்தில் இருக்க போவதால் முப்படைகளையும் உபயோகித்து அதிரடியாக சு

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுக்கேனையள்.. ஒண்டில் வீராவசனம் பேசுவாங்கள் இல்லாட்டி இப்பிடி ஏதாவது விளங்காத வேலை செய்வாங்கள்.. இவங்கள் செய்ததில் ஒரு வெளிநாடாவது எங்களுக்கு ஏதாவது செய்ததா தீர்வை நோக்கி இத்தனை தேர்தல்களில் நின்றிர

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அரியநேந்திரனைச் சிங்களவராகக் கற்பனை

சிங்களவர் போட்டி இட்டால் பிரச்சனை இல்லை எத்தனை சிங்களவரும்  போட்டி இடமுடியும்      ஒரு தமிழன் போட்டியிட்டால்.    தமிழனே   எதிர்க்கிறன்.  ......இவ்வளவு எதிர்ப்பு வெளிநாடுகளில் பிறமொழி பேசுவோர் அதிகம் வாழும். பகுதிகளில் ஒரு தமிழன் போட்டி இடும்போது   கூட  கிடைக்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

பெருசு, 

ஏதாவது ஒரு வகையில் சிறிதேனும் பலனளிக்கக்கூடிய ஒரு MP தேர்தல்  அல்லது மாகாண சபைத் தேர்தல்  போன்றவைகளில் ஒற்றுமையாகப் போட்டியிட்டு கூரையேற முடியாத ஊனமுற்றவர்கள், எந்தப் பிரயோசனமும் அற்ற வைகுண்டம் போகும் வழியைப் பற்றி பீத்தினால் பின்பக்கக்கத்தால் சிரிக்கத்தான் முடியும். 🤣

உந்தக் கூத்தை நீங்கள், அல்வாயன், விசுகர் போன்ற முரட்டுக் காளைகள் எல்லோரும்  பார்த்து ரசியுங்கள் என்னால் முடியாது.

சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல.
வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே.
முரட்டுக்காளை..இதுபோதும்...
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

  தமிழனே   எதிர்க்கிறன்.

கண்டவனை எல்லாம் தமிழன் என்று கொண்டால் அது கொண்டலடிக் கரடிதான்.🤔😩

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பொதுவேட்பாளர் காலத்தின் தேவையே!

1790646310.jpg

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்து!    

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டியது காலத்தின் தேவை. பொருளாதாரப் பிரச்சினைகளில் தமிழரின் உரிமைப் பிரச்சினை கரைந்து போகக்கூடிய அபாயநிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர் தம் திரட்சியை மீளவும் காண்பிக்க வேண்டிய தேவை உள்ளது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.  

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு நேற்று வியாழக்கிழமை மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:      
மட்டக்களப்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன் அப்பழுக்கற்ற தமிழ்த் தேசியவாதி. தமிழ்த்தேசிய ஆயுதப் போராட்டத் தலைமைத்துவத்தின் ஆசிர்வாதத்துடன் மக்கள் பிரதிநிதியாக 2004ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் புகுந்தவர்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள், சிவில் அமைப்புக்கள் இணைந்துள்ளமை சிறப்பான விடயம். அதே நேரம் வேட்பாளர் ஊடாக தமிழரசுக்கட்சியும் அந்தக் களத்துக்கு வந்துள்ளது.

ஏற்கனவே தாயகக் கோட்பாட்டின் அடிநாதமாக விளங்குகின்றதும், சமகாலத்தில் உச்சப்பட்ச சவால்கள் எதிர்நோக்கியுள்ளதுமான  கிழக்கு மண்ணிலிருந்து மீன்பாடும் தேன் நாடு, தென் தாய்மண் மட்டக்களப்பிலிருந்து ஒருவர் முழுத் தமிழ்மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்வு செய்யப்பட்டமை பொதுக் கட்டமைப்பின் நடுநிலைப் பார்வையை உயர்த்தி உள்ளது. தமிழ்த்தேசியத் தேரை முன்நோக்கி இழுத்து, தமிழ்த்தேசியத் திரட்சியை வெளிக்காட்டுவதற்கும், தேக்க நிலையை உடைத்துப் புதிய அத்தியாயம் படைக்கவும் முன்வருவோம்- என்றுள்ளது. (ச)
 
https://newuthayan.com/article/தமிழ்ப்_பொதுவேட்பாளர்_காலத்தின்_தேவையே!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

இவ்வாறு தமிழ் மக்கள் இவருக்கே பெருமளவுக்கு வாக்களித்தால் (ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் போடும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை விட),  அதனால் சர்வதேச சமூகம் என்ன வகையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் உதவும்?

நல்லாக கேட்டீர்கள். மேற்குலக சமூகம் இந்த கூத்தை அறிந்தால் தமிழர்களை மதஅடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் மாதிரி கேலியாக பார்க்கும் நிலையை தான் உருவாக்கி வைத்துள்ளனர் 😟

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரியநேத்திரன் தொடர்பில் 11 ஆம் திகதி முடிவெடுக்கப்படும் : தமிழரசு கட்சியின் தலைவர் மாவை தெரிவிப்பு !

kugenAugust 9, 2024
 
23-6548fb0a14627.jpg

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தொடர்பில் 11 ஆம் திகதி முடிவெடுக்கப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சி ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ள முன்னர் அக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரான அரியநேத்திரன் பொது வேட்பாளராக 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வரும் 11.08.2024 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மத்திய குழு கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளவுள்ளது. அதன் பின்னரே கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்படும். இந்நிலையில், கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்னர் கட்சியின் உறுப்பினர் பொது வேட்பாளராக போட்டியிட தீர்மானித்த விடயம் தொடர்பில் அக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனத் தெரிவித்த அவர் பொது வேட்பாளராக அரியநேத்திரன் அறிவிக்கப்பட்ட பின்னர் என்னை வந்து சந்தித்து விடயத்தை தெரியப்படுத்தி சென்றுள்ளார் என்றும் தெரிவித்தார்.
 
https://www.battinews.com/2024/08/11_9.html

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இங்கே யார் எறும்பு, யார்  கல்லு, எறும்பு எதற்காக ஊருகிறது? 

தமிழ் தேசியவாதிகள் எறும்பு
தமிழர்கள் கல்லு
தமிழ்தேசியவாதிகள் செயல்களால் தமிழர்கள்  தேய்ந்து தேய்ந்து போகிறார்கள்😟

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

என்னிடம் இருக்கும் மூன்று கேள்விகள்:

1. இவ்வாறு தமிழ் மக்கள் இவருக்கே பெருமளவுக்கு வாக்களித்தால் (ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் போடும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை விட),  அதனால் சர்வதேச சமூகம் என்ன வகையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் உதவும்?

2. அவ்வாறு உதவுமா அல்லது, வெற்றியடைந்த சிங்கள வேட்பாளருடன் / சனாதிபதியுடன் இணைந்து பணியாற்றி,  இலங்கை அரசினால் அடையக்கூடிய தம் நலன்களை தொடர்ந்து பேண முயலுமா?

3. ஒரு வேளை தமிழ் மக்களின் வாக்குகளில் சொற்ப வீதமே இவருக்கு கிடைப்பின், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரிக்கின்றார்கள் என அது எடுத்துக் கொள்ளப்படுமா?

அப்படியானால் வட்டுக்கோட்டை தீர்மானம் ஏன்???

அன்றிருந்த தமிழினம் மீதான அடுக்கு முறைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் இன்றும் உள்ளனவா??

அதிலிருந்து நாம் கேள்விகளை ஆரம்பிக்கலாமா??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,.......

இந்த பொது வேட்பாளர் நியமனம் மூலம்   .....போர் குற்ற விசாரணை செய்கிறோம். 

காணமால். ஆக்கப்பட்டோரை தேடுகிறோம்.  

பறிகொடுத்த. நிலத்தை காணி கோருகிறோம்.  

சிறையில். 20ஆண்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருப்போரை. விடுவிக்க கோருகுறோம் 

மாகாண சபை தேர்தலை நடத்த வலி உறுத்துகிறோம் 

சுயாட்சி கோருகிறோம்.  

ஐனதிபதி பதவிக்காக தேர்தலில் போட்டி இடவில்லை 

அது ......🙏

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

என்னிடம் இருக்கும் மூன்று கேள்விகள்:

1. இவ்வாறு தமிழ் மக்கள் இவருக்கே பெருமளவுக்கு வாக்களித்தால் (ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் போடும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை விட),  அதனால் சர்வதேச சமூகம் என்ன வகையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் உதவும்?

சர்வதேசம் நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை பற்றி கவலை கொள்ளாது. அரசியல் ரீதியாக சர்வதேசம் எப்போ தமிழ் மக்களுக்கு உதவியது?

2. அவ்வாறு உதவுமா அல்லது, வெற்றியடைந்த சிங்கள வேட்பாளருடன் / சனாதிபதியுடன் இணைந்து பணியாற்றி,  இலங்கை அரசினால் அடையக்கூடிய தம் நலன்களை தொடர்ந்து பேண முயலுமா?

மிக வெளிப்படையாக தனக்கு சார்பான வேட்பாளரை  வெல்ல வைத்து தமக்கு ஆக வேண்டியதை பெற்றுக்கொள்வார்கள்.

3. ஒரு வேளை தமிழ் மக்களின் வாக்குகளில் சொற்ப வீதமே இவருக்கு கிடைப்பின், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரிக்கின்றார்கள் என அது எடுத்துக் கொள்ளப்படுமா?

இதை பற்றி அவர்கள் கவலை கொள்வதே இல்லை. வேண்டுமானல் பிபிசி தமிழ் தமிழ் மக்களின் தோல்வி என ஒரு கட்டுரையை எழுதலாம். மூன்றால் நாள் அவை குப்பை தொட்டிக்குள் போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொது வேட்பாளரை நிறுத்துவதற்துவது ஏன் என்று  தமிழ் தேசியவாதிகள்  எனப்படுவோர் கூறும் காரணம் சர்வதேச நாடுகளுக்கு எமது மக்களின்  கோரிக்கையை எடுத்து கூறுவது என்பதே.  சர்வதேச நாடுகள் இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்குமா என்பது வேறு விடயம்.

 ஆனால்,  கோரிக்கை என்பது வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதையும் இணைத்த பிரதேசத்தில் ஒரு தன்னாட்சி சமஸ்டி. அதாவது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான அனைத்து பிரதேசங்களையும்  இணைத்த தன்னாட்சி அரசு.  ஒரு பேச்சுக்கு சர்வதேசம் இதை கணக்கில் எடுக்கிறது என்றால்   இப்போது பொது வேட்பாளர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் உத்தியோகபூர்வ வாக்களிப்பில் 50 வீதத்திற்கு  குறைவாக பெற்றால் தன்னாட்சி கோரிக்கையை வட கிழக்கு மக்கள் நிராகரித்தை விட்டார்கள் என்றே சர்வதேசம் எடுக்கும்.  ஏனென்றால் மாபெரும் எழுச்சியுடன் 1977 ல் நடைபெற்ற தமிழீழ கோரிக்கைக்கான வாக்கெடுப்பிறகே வடகிழக்கில் உத்தியோகபூர்வமாக கிட்டத்தட்ட 52  வீத வாக்குகளே கிடைத்தன. ஏறத்தாள அரைவாசி வடகிழக்கு வாக்காளர்களால்  அன்றே தமிழீழ கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.  இன்றைய நிலையில் 50 வீதம் சாத்தியமா? 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, island said:

புலம்பெயர்ஸ் டமில்ஸ்க்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுர்றது மாதிரி,..

(நாங்கள் உசார் மடையர் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்றுதானே )

🤣

3 hours ago, Paanch said:

கண்டவனை எல்லாம் தமிழன் என்று கொண்டால் அது கொண்டலடிக் கரடிதான்.🤔😩

டமிலன் என்பதற்கு பான்ச் அவர்களின் வரைவிலக்கணம் என்னவோ,.......? தெரியாதா,....தெரிந்தால் எடுத்து விடுறது,.....😁

  • கருத்துக்கள உறவுகள்

IMG_20240808_115817_800_x_533_pixel-1.jp

அரியநேத்திரனுக்கு எதிராக நடவடிக்கை…?

கட்சியின் நிலைப்பாட்டினை மீறி தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள அரியநேத்திரன் தொடர்பாக, எதிர்வரும் 11 ஆம் திகதி முடிவென்றை எடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது கட்சி இதுவரை எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் 11ஆம் திகதிக்கு பின்னரே கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் இந்நிலையில், கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்னர் கட்சியின் உறுப்பினர் பொது வேட்பாளராக போட்டியிட தீர்மானித்த விடயம் தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1395215

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மாவைக்கு,  என்ன விசரே.....
காலம் முழுக்க சுமந்திரன் என்பவர் கட்சி கட்டுப்பாடுகளை மீறி 
தனித்தவில் வாசித்துக் கொண்டு இருக்கிறார். 
அவர் மீது, மாவை... என்ன நடவடிக்கை எடுத்தவர் எண்டு ஒருக்கால் சொல்லட்டும் பாப்பம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மாவைக்கு விசர்  இல்லை    சுமத்திரன். மீது நடவடிக்கைகள் எடுத்தால்   மாவை தான்  சிறையினுள்ளே  இருக்க வேண்டும்      🤣🤣🤣🤣🤣  சுமததிரன். ஒரு பொய்யை பல தடவைகள் சொல்லும் போது அது  உண்மை ஆகி விடும்   அவர் பொய்யை உண்மை ஆக்குவார்.......உண்மையை பொய்யாக்குவார்.     இலங்கையின் பிரபல சட்டத்தரணி ஐனதிபதி சட்டத்தரணி     சுமத்திரன்.    இந்த சுமத்திரன் மீது எப்படி என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும்??? 🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

சுமந்திரன்  மீது நடவடிக்கைகள் எடுக்க... மாவைக்கு "தில்" இல்லை என்றால்,
அரியநேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்காமல், மாவை... 🤫 மூடிக் கொண்டு  இருக்க வேணும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்  மீது நடவடிக்கைகள் எடுக்க... மாவைக்கு "தில்" இல்லை என்றால்,
அரியநேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்காமல், மாவை... 🤫 மூடிக் கொண்டு  இருக்க வேணும். 😂

அவற்றை கட்சியை முதலில் கோட்டில் இருந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர் யாரு யார் மேல் நடவடிக்கை எடுப்பது என்று பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அவற்றை கட்சியை முதலில் கோட்டில் இருந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர் யாரு யார் மேல் நடவடிக்கை எடுப்பது என்று பார்க்கலாம். 

2009’ம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த கட்சியை…
இந்த  கையாலாகதவர்கள்  12 ஆக சிறுக்கப் பண்ணி இருக்கின்றார்கள்.
ஆனால்… இந்த உருப்படாதவங்களின் வாய் மட்டும் பயங்கர நீளம். 
கிலிசு கெட்டவர்கள். 😂

6 hours ago, விசுகு said:

அப்படியானால் வட்டுக்கோட்டை தீர்மானம் ஏன்???

அன்றிருந்த தமிழினம் மீதான அடுக்கு முறைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் இன்றும் உள்ளனவா??

அதிலிருந்து நாம் கேள்விகளை ஆரம்பிக்கலாமா??

வட்டுக்கோட்டை தீர்மானம் 1976 மே 14 ஆம் திகதியில் சிங்கள அரசுகளுடன் சேர்ந்து வாழ முடியாது, வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம், எனவே சுதந்திர தமிழீழமே இறுதி தீர்வு என்று முழங்கி கொண்டு வரப்பட்ட தீர்மானம். இன்னொரு விதத்தில் தமிழீழத்துக்காக இளைய சமூகத்தினரை ஆயுதம் போராட்டத்துக்கு வழி வகுத்த தீர்மானம். 
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இதே வட்டுக்கோட்டை தொகுதியில் தியாகராஜாவிடம் 700 சொச்ச வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் தோற்ற பின் தன் செல்வாக்கையும் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கையும் இளைஞர்களிடையே பெருக்கி கொள்ள, முதுமையால் சுகவீனமுற்றிருந்த செல்வ நாயகம் அவர்களை தூண்டி 
கொண்டு வரப்பட்ட தீர்மானம்.

அதன் பின் நிகழ்ந்தது பல்லாயிரக்கணகான இளையவர்களின் தியாகங்களும், வீரமரணங்களும், பொதுமக்களினதும் உயிரிழப்புகளும், பொருளாதார சீரழிவும், தாயகம் ஆட்புலம் அற்று சிறுகிப் போனதும், தான்.

இந்த தீர்மானம் முழுதும் இந்திய செல்வாக்கினால் கொண்டு வரப்பட்டது என்று நம்பப்படும் தீர்மானம் (அன்றும் இன்றும் கக்கா போவதுக்கும், தும்முவதற்கும் கூட தமிழரசுக் கட்சி இந்தியாவின் அனுமதி இன்று எதுவும் செய்ததில்லை)

வடக்கு கிழக்கில் தமிழர்களை அணிதிரட்டி போராட்டத்துக்கு அழைத்த இந்த தீர்மானத்துக்கும், பொது வேட்பாளரை களம் இறக்கும் செயலுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது?

அப்படியே ஒரு தொடர்பு இருப்பதாக நீங்கள் எண்ணினால், இன்னமும் தமிழ் கட்சிகள், மக்களிடம் முன் சென்று காத்திரமாக செயலாற்ற எந்த ஊக்கமும் இன்றி, மீண்டும் மீண்டும் இத்துப் போன, தோற்றுப் போன முழக்கங்களுடன் தான் முன் செல்கின்றனர் என்பது மீண்டு நிரூபணம் ஆகின்றது.

செப்ரம்பர் 24 ஆம் திகதிக்கு பின், எந்த பயனும், சிறு சலனமும்,ஒரு சிறு மாற்றம் தானும் ஏற்பட வாய்ப்பில்லாத ஒரு விடயத்துக்காக மக்களை திரளப்பண்ணி, அணி திரட்டி மீண்டும் மீண்டும் மக்களை முட்டாள்களாக்கி, அதில் குளிர் காயும், தம் இருப்பை தக்க வைக்க முயலும், ஈன அரசியலைத்தான் இந்த பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் செய்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்  மீது நடவடிக்கைகள் எடுக்க... மாவைக்கு "தில்" இல்லை என்றால்,
அரியநேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்காமல், மாவை... 🤫 மூடிக் கொண்டு  இருக்க வேணும். 😂

சம்பந்தனுக்கு   விழ வேண்டிய பேச்சு எல்லாம் ....இப்போது மாவைக்கு கிடைக்கிறது   🤣😀 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நிழலி said:

வட்டுக்கோட்டை தீர்மானம் 1976 மே 14 ஆம் திகதியில் சிங்கள அரசுகளுடன் சேர்ந்து வாழ முடியாது, வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம், எனவே சுதந்திர தமிழீழமே இறுதி தீர்வு என்று முழங்கி கொண்டு வரப்பட்ட தீர்மானம். இன்னொரு விதத்தில் தமிழீழத்துக்காக இளைய சமூகத்தினரை ஆயுதம் போராட்டத்துக்கு வழி வகுத்த தீர்மானம். 
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இதே வட்டுக்கோட்டை தொகுதியில் தியாகராஜாவிடம் 700 சொச்ச வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் தோற்ற பின் தன் செல்வாக்கையும் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கையும் இளைஞர்களிடையே பெருக்கி கொள்ள, முதுமையால் சுகவீனமுற்றிருந்த செல்வ நாயகம் அவர்களை தூண்டி 
கொண்டு வரப்பட்ட தீர்மானம்.

அதன் பின் நிகழ்ந்தது பல்லாயிரக்கணகான இளையவர்களின் தியாகங்களும், வீரமரணங்களும், பொதுமக்களினதும் உயிரிழப்புகளும், பொருளாதார சீரழிவும், தாயகம் ஆட்புலம் அற்று சிறுகிப் போனதும், தான்.

இந்த தீர்மானம் முழுதும் இந்திய செல்வாக்கினால் கொண்டு வரப்பட்டது என்று நம்பப்படும் தீர்மானம் (அன்றும் இன்றும் கக்கா போவதுக்கும், தும்முவதற்கும் கூட தமிழரசுக் கட்சி இந்தியாவின் அனுமதி இன்று எதுவும் செய்ததில்லை)

வடக்கு கிழக்கில் தமிழர்களை அணிதிரட்டி போராட்டத்துக்கு அழைத்த இந்த தீர்மானத்துக்கும், பொது வேட்பாளரை களம் இறக்கும் செயலுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது?

அப்படியே ஒரு தொடர்பு இருப்பதாக நீங்கள் எண்ணினால், இன்னமும் தமிழ் கட்சிகள், மக்களிடம் முன் சென்று காத்திரமாக செயலாற்ற எந்த ஊக்கமும் இன்றி, மீண்டும் மீண்டும் இத்துப் போன, தோற்றுப் போன முழக்கங்களுடன் தான் முன் செல்கின்றனர் என்பது மீண்டு நிரூபணம் ஆகின்றது.

செப்ரம்பர் 24 ஆம் திகதிக்கு பின், எந்த பயனும், சிறு சலனமும்,ஒரு சிறு மாற்றம் தானும் ஏற்பட வாய்ப்பில்லாத ஒரு விடயத்துக்காக மக்களை திரளப்பண்ணி, அணி திரட்டி மீண்டும் மீண்டும் மக்களை முட்டாள்களாக்கி, அதில் குளிர் காயும், தம் இருப்பை தக்க வைக்க முயலும், ஈன அரசியலைத்தான் இந்த பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் செய்கின்றன.

ஒரு உதாரணத்திற்கு 

மேலே கந்தையா அண்ணா குறிப்பிட்ட அறிக்கையையும் கோரிக்கையையும் முன் வைத்து  பொதுவேட்பாளருக்கு தமிழர்கள் மீண்டும் ஒன்று திரண்டு வாக்களித்து இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருத்தினால்???

4 minutes ago, விசுகு said:

ஒரு உதாரணத்திற்கு 

மேலே கந்தையா அண்ணா குறிப்பிட்ட அறிக்கையையும் கோரிக்கையையும் முன் வைத்து  பொதுவேட்பாளருக்கு தமிழர்கள் மீண்டும் ஒன்று திரண்டு வாக்களித்து இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருத்தினால்???

நான் கேட்கின்ற கேள்வியைத் தான் நீங்களும் கேட்கின்றீர்கள். அப்படி 2 ஆம் 3 ஆம் இடத்துக்கு இருத்தினால், அதனால் செப்ரம்பர் 21 இன் பின்  வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு ஏற்படும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நன்மைகள் என்னென்ன?

Edited by நிழலி
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை மீறி இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே நடந்துவிடப்போவதில்லை.சிறிலங்கா  ஜனாதிபதி தேர்தலில் சுப்பன் நின்றாலென்ன? குப்பன் நின்றாலென்ன?

இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்கின்றதென நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

நான் கேட்கின்ற கேள்வியைத் தான் நீங்களும் கேட்கின்றீர்கள். அப்படி 2 ஆம் 3 ஆம் இடத்துக்கு இருத்தினால், அதனால் செப்ரம்பர் 21 இன் பின்  வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு ஏற்படும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நன்மைகள் என்னென்ன?

நடந்த அநியாயங்களுக்கு மீண்டும் மீண்டும் நீதி கேட்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படும். 

முக்கியமாக நீதியும் வாக்குறுதிகளும் மறுக்கப்பட்டதால் தமிழர்கள் வட்டுக்கோட்டையிலேயே உறுதியாக நிற்கிறார்கள் என்று தெரியவரும்.

இது யாரை எம் பக்கம் சிந்திக்க வைக்கும் என்று கேட்டால் பதில் தெரியாது. ஆனால் எமது கையில் ஒரு பைல் மீண்டும் கனமாக இருக்கும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.