Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

sarath-fonseka-10.jpg?resize=750,375

விடுதலைப் புலிகளை ஒழித்தது போல் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்! -சரத் பொன்சேகா.

”தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்தது போல, தான் ஆட்சிக்கு வந்தால் நாட்டிலிருந்து இலஞ்சம், மற்றும் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்” என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி மற்றும் கட்சியின் களனி அமைப்பாளர் பதவிகளில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் சுயாதீன வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளேன். இந்நாட்டின் கட்சி அரசியல் என்பது ஊழல், மோசடிகளால் நிரம்பியுள்ளது என்பதை நான் பல தடவைகள் கூறியுள்ளேன்.

கட்சி அரசியல் என்பது ஜனநாயக ரீதியாக இருக்க வேண்டும். ஆனால், எமது நாட்டில் மோசடியாளர்கள்தான் கட்சிகளை வழிநடத்தி செல்கிறார்கள். இந்தக் கட்சிகளில் உள்ள பெரும்பாலானோரும் மோசடியாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஏனைய உறுப்பினர்களுக்கு நாட்டை வழிநடத்தும் அளவுக்கு போதிய அறிவும் தெளிவும் திட்டங்களும் கிடையாது. நான் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் இன்று விலகியுள்ளேன். எனினும், எனக்கு வாக்களித்து நாடாளுமன்றுக்கு அனுப்பிய களனி மக்களுக்காக தொடர்ந்தும் சேவை செய்தத்  தயாராகவே உள்ளேன்.

நாட்டை வழிநடத்தக்கூடிய சரியான தலைவரை மக்கள் இம்முறை தெரிவு செய்ய வேண்டும்.
இராஜதந்திர ரீதியாக தலைமைத்துவம் வகிக்கக்கூடிய ஒருவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக நான் பெரும் பங்காற்றியிருந்தேன். எனினும், இந்தக் கட்சியின் தலைவரின் செயற்பாடுகள் தொடர்பாக என்னால் திருப்தியடைய முடியாது.
பொருளாதார நெருக்கடி காலத்தில், அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு வந்தபோது, நான் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அவருக்கு வலியுறுத்தினோம்.

ஆனால், சிறுபான்மையான உறுப்பினர்களுடன் அரசாங்கத்தைப் பொறுப்பேற்க முடியாது என அவர் அதை தட்டிக் கழித்தார். ஆனால், 2015 இல், 44 உறுப்பினர்களுடன் தான் அரசாங்கத்தை பொறுப்பேற்றிருந்தோம். அந்த அரசாங்கத்தை ஒரு வருடம் கொண்டும் சென்றிருந்தோம்.

நாட்டில் எல்லாம் சரியான பின்னர், முழுமையான அரசாங்கமொன்றை தானா நீங்கள் பொறுப்பேற்பீர்கள் என்று வினவியிருந்தேன். ஏனெனில், எதிர்க்கட்சி என்றால் வீழ்ந்துக் கிடக்கும் நாட்டை தான் பொறுப்பேற்க வேண்டும். எனினும், இந்த சவாலை அவர் அன்று ஏற்கவில்லை.

பின்னர், நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நடந்தபோது, அநுரகுமார திஸாநாயக்க 3 உறுப்பினர்களுடன் போட்டியிட்டிருந்தார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரோ அந்தப் போட்டியிலிருந்தும் விலகினார்.

இறுதிவரை இதில் போட்டியிடுவேன் என்று அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வாக்கெடுப்பு தினத்தன்று காலையில் தனது முடிவை மாற்றி டளஸ் அழகப்பெருமவை வேட்பாளராக நிறுத்தினார். அப்போதே நான், சவாலை ஏற்றுக் கொள்ளாத இப்படியான தலைவர்களால் பயனில்லை என்று நினைத்தேன்.

இப்படியான தலைவர்தான் இன்று பாடசாலைகளுக்கு சென்று பேருந்துகளையும் உபகரணங்களையும் வழங்கி வருகிறார். இதற்கான நிதி எங்கிருந்து கிடைக்கிறது? பொதுஜன பெரமுனவுக்கு நிதி வழங்கிய கொழும்பின் கெஷினோ வியாபாரிகள்தான் இவருக்கும் நிதியை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால்தான் மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேறும் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தொடர்பாக மக்களும் சிந்திக்க வேண்டும்.
எல்.டி.டி.ஈ. அமைப்பை முற்றாக அழிப்பேன் என கூறியபோது, யாரும் நம்பவில்லை. இறுதியில் செய்துக் காண்பித்தேன்.

அதேபோல, நாட்டின் ஊழல் மோசடிகளையும் நான் ஆட்சிக்கு வந்தவுடன் இல்லாதொழிப்பேன். ஒழுக்கமான ஒரு நிர்வாகக் கட்டமைப்பை ஸ்தாபிப்பேன் என்றும் மக்களிடம் இவ்வேளையில் உறுதியளிக்கிறேன்” இவ்வாறு பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1395250

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

”தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்தது போல, தான் ஆட்சிக்கு வந்தால் நாட்டிலிருந்து இலஞ்சம், மற்றும் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்” என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளை அழித்தது...
மகிந்த நான் எண்டுறார்.
கோத்தபாய தான் எண்டுறார்.

இப்ப ஆர்ர கதைய நம்புறது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகளை அழித்தது...
மகிந்த நான் எண்டுறார்.
கோத்தபாய தான் எண்டுறார்.

இப்ப ஆர்ர கதைய நம்புறது?

ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கும்.. விடுதலைப் புலிகள்தான் தேவையாக உள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கும்.. விடுதலைப் புலிகள்தான் தேவையாக உள்ளது. 😂

இஞ்சை இருக்கிற ஆக்களுக்கே தேவைப்படும் போது.....? ! ? ! ? ! ? ! ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகளை அழித்தது...
மகிந்த நான் எண்டுறார்.
கோத்தபாய தான் எண்டுறார்.

இப்ப ஆர்ர கதைய நம்புறது?

கொஞ்சம் பொறுங்கோ...உண்மை தானாகவே வரும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

எல்.டி.டி.ஈ. அமைப்பை முற்றாக அழிப்பேன் என கூறியபோது, யாரும் நம்பவில்லை. இறுதியில் செய்துக் காண்பித்தேன்.

ம்... உப்பிடி பெருமை பேசிப்பேசியே நாட்டை சுரண்டி குட்டிச்சுவராக்கி இப்போ அரசியலையும் இழந்து புலம்பித் திரிகிறார்கள். இவருக்கும் அவர்களுக்குமிடையில் நடந்த போட்டியில் எங்கள் குருட்டு வழிகாட்டிகள் காட்டிய வழியில் இவருக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள். இப்போ; அவர்களின் ஆயுதத்தை கையில் எடுத்து, தானே அழியப்போகிறார். இவரை அப்பவே சிங்களமக்கள் மத்தியில் செல்லாக்காசாக்கி விட்டார்கள், கூட இருந்தவர்களே கைவிட்டு ஓடினார்கள். மனிசன் இன்னும் அதை வைத்து வென்று விடலாமென நினைக்கிறார். தலைப்புண்ணுக்கு காலைகாட்டுகிறார். மக்கள் புலிகளை மறந்து வயிற்றைப்பற்றி, அடுத்த வேளை பற்றி யோசிக்கிறார்கள். இவர் இன்னும் புலிக்கனவில் இருந்து மீளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

விடுதலைப் புலிகளை ஒழித்தது போல் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்! -சரத் பொன்சேகா.

இலங்கை ராணுவம் ஒழித்தது விடுதலைப் புலிகளை அல்ல.

சரணடைந்த போராளிகளையும் பொதுமக்களையுமே போட்டுத் தள்ளினீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் குட்டையை கலக்குகிறார், மீன் அள்ளலாமெனும் கனவில். ஆனா புத்திசாலிகளுக்கு தெரியும், தாம் யார் தயவால் (வாக்கால்) பதவியை ஏற்றோம், அவர்களால் ஏன் கைவிடப்பட்டோம்  எதனால் பதவியை இழந்தோம். ஆகவே அவரும் அவ்வாறே அழியட்டும் என வாயை கொடுக்காமல்  காத்திருப்பார்கள். இருந்தாலும் புலிகளை வைத்து அரசியல் செய்யும் கனவோடு காத்திருப்பவர்கள் ஏதாவது சொல்லக்கூடும். போர் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து ராஜ பக்ஸக்களே வெற்றியின்  கதாநாயகர்களாக  மேடைகளில் வீற்றிருக்கிறார்கள். வெற்றி என்று அறிவித்த அ ந்த தருணத்தை விட இவருக்கு எங்கேயும் இடமில்லை. அந்த வெற்றியே இவருக்கு சிறையை பரிசாக அளித்தது. அதை கூட மறந்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை, இன்னும் அதே மமதையில் பேசுகிறார். இவர் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? இவர் வெற்றி விழா மேடைகளில் தோன்றுவார் என்பதையே இதன்மூலம் கூற வருகிறார். ஊதிப்பெருத்த ஊழல் பெருகுமே தவிர குறையாது இவர் வந்தா. ஒருவேளை மஹிந்தா, கோத்தா சிறை செல்ல நேரிடலாம். இவர் வர சாத்தியமே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவருக்கு வாக்குப்போடச்சொன்ன கூட்டமைப்பையும் வாக்குப் போட்ட தமிழ்மக்களையும் நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. இந்தமுறையும் ஒரு சிங்கள வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் சில யாழ்கள உறவுகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

Edited by புலவர்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, புலவர் said:

இவருக்கு வாக்குப்போடச்சொன்ன கூட்டமைப்பையும் வாக்குப் போட்ட தமிழ்மக்களையும் நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. இந்தமுறையும் ஒரு சிங்கள வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் சில யாழ்கள உறவுகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

புலவருக்கு அரசியல் தெரியவில்லை என்று பேசப்போகிறார்கள். 

Posted
22 hours ago, தமிழ் சிறி said:

எல்.டி.டி.ஈ. அமைப்பை முற்றாக அழிப்பேன் என கூறியபோது, யாரும் நம்பவில்லை. இறுதியில் செய்துக் காண்பித்தேன்.

இப்படி சொன்ன கோத்தபயவுக்கு கோவணம் இல்லாமல் போனது நினைவில் இருக்கலாம். சரத் பொன்சேகாவுக்கு சில  ஆயிரம் வாக்குகள் கிடைக்கலாம். ஓரு போதும் வெல்ல மாட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, தமிழ் சிறி said:

எல்.டி.டி.ஈ. அமைப்பை முற்றாக அழிப்பேன் என கூறியபோது, யாரும் நம்பவில்லை. இறுதியில் செய்துக் காண்பித்தேன்.

இந்தப் பேச்சுகளைக் கேட்டாவது இவருக்கு ஆலவட்டம் பிடித்தவர்களுள் போனவரைவிட்டு இருப்பவர்க்ள் சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆமாம் ஆமாம்.. ஆனையிறவை விட்டு ஓடினது.. மாங்குளத்தில் அடி விழ ஆரம்பிச்சதும் சீனாவில் போய் பதுங்கிக் கிடந்தவர் எல்லாம்.. ஊழலை அல்ல.. சொறீலங்காவில் உள்ள எலிகளைக் கூட ஒழிக்க முடியாது. 

சும்மா வெறுவாய் சப்பிட்டு சிங்கக் கொடி கூட்டாளி.. சம்பந்தன் பாதையில் போய் சேர வேண்டியான். 

புலிகளை.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை.. ஹிந்திய- அமெரிக்க - மேற்குலகின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் சூழ்ச்சிக்குள் கொண்டு வந்த கதிர்காமர் போன்றவர்கள் தான் அழித்தார்கள் என்றால் மிகையல்ல. இதில் சர்வதேச சதியே அதிக பங்களித்தது. கோத்தாவோ.. மகிந்தவோ.. சரத்தோ.. உரிமை கோருவதில் அர்த்தமில்லை. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/8/2024 at 12:14, தமிழ் சிறி said:

எல்.டி.டி.ஈ. அமைப்பை முற்றாக அழிப்பேன் என கூறியபோது, யாரும் நம்பவில்லை. இறுதியில் செய்துக் காண்பித்தேன்.

ஆளாளுக்கு நானேதான் புலிகளை அழித்தேன் என்று சிங்கள மக்களிடயே தம்மை வீர சூரரா காண்பித்தாலும்,

புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியது

சமாதான பேச்சு என்று நோர்வேயின் பொறிகிடங்கு உருவாக்கியது,

சமாதான பேச்சு என்று அங்கும் இங்கும் என்று இழுத்தடித்து புலிகள் பயங்கரவாதிகள் சமாதான பேச்சுக்கெல்லாம் ஒத்துவரமாட்டார்களென்று சர்வதேசத்துக்கு காண்பிக்க முனைந்தது

அந்த சமாதான காலத்தில் மிக ரகசியமாக இலங்கை படையினரின் தொகையை பலமடங்காக்கியது

சமாதான காலத்தில் பலமடங்கு ஆயுதங்களை ரகசியமாக இறக்குமதி செய்தது

சமாதானகாலத்தில் கருணாவை பிரிச்சு புலிகளை பலவீனபடுத்தியது. நாங்களே புலிகளிடமிருந்து அவனை பிரித்தோம் என்று அவரே வெளிப்படையாக மஹிந்த ஆட்சி காலத்தில் கூறியிருந்தார்

அதற்கு முற்பட்ட சில மாதங்களில்  கருணாவை போட்டுத்தள்ள ஊடுருவிதாக்கும் அணியை அனுப்பியதாகவும் பின்னர் அவர்களை உடனடியா திரும்புமாறும் தான் கட்டளையிட்டதாக பகிரங்கமா கூறியிருந்தார்

சமாதான காலத்தில் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து புலிகளின் சர்வதேச கடல் போக்குவரத்து பற்றிய கண்காணிப்பு உதவிகளை, தகவல்களை பலமாக பெற்றது என்று அத்தனைக்கும் அடித்தளம் போட்டது சாட்சாத் அன்றைய பிரதமரும் இன்றைய ஜனாதிபதி ரணிலேதான்.

அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா ஒரு சாணக்கியமற்றவராகவே இருந்தார்.

ஆக வீடுகட்ட பணம் சேர்த்து கல்லு மண் பறிச்சு அத்திவாரம் போட்டது ரணில் , அதை வைச்சு வீடுகட்டி முடித்தவர்கள் மற்றையவர்கள்.

இல்லையென்றால் மஹிந்த ஆட்சிக்கு வந்து இரண்டே வருடங்களில்  படிப்படியாக போர் தொடங்கியது, அந்த குறுகிய காலத்தில்   படையினர் மற்றும் ஆயுதங்கள் தொகையை பலமடங்காக்கி பெருமெடுப்பில் பயிற்சிகள் கொடுத்து , முன்புபோல் வடக்கிலிருந்து கிழக்குக்கும் கிழக்கிலிருந்து வடக்குக்கும் படையினரை மாற்றி மாற்றி நகர்த்தி போர் செய்யாமல்  போரை வெற்றி கொள்வது உலகில் எவராலும் முடியாதது.

குள்ளநரி ஜேஆரிடம் கற்ற சாணக்கியத்தை பயன்படுத்தி புலிகளை அழிப்பதற்கு பலமான அத்திவாரம் போட  சமாதானகாலத்தை பயன் படுத்தினார் ரணில்,

சமைச்சு வைச்சது அவர், ஆனால் சாப்பிட்டவர்கள் விருந்துக்கு சிங்களவர் மத்தியில் மஹிந்த, கோட்டபாய, சரத் என்று  ஆளாளுக்கு உரிமைகோருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தாளுக்கு கொஞ்சம் கழண்டு விட்ட்து ... உளறுகிறார் 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.