Jump to content

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு

11 AUG, 2024 | 05:01 PM
image
 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளால் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்ற அடிப்படையில் 14 உறுப்பினர்களும் சந்திப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள். 

தேர்தல் வேலைகளில் மூழ்கியிருப்பதால் குறுகிய கால அழைப்பின் அடிப்படையில் நாளைய சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாக கலந்துகொள்வது சிரமமாக இருக்கும். 

எதிர்காலத்தில் இதுபோன்ற அழைப்புகளை ஏற்று சந்திப்புகளில் கலந்துகொள்வது தொடர்பான முடிவை பொதுக் கட்டமைப்பு கூடி முடிவெடுக்கும் -என தமிழ் தேசிய பொது கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் மூலம் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/190828

Edited by நிழலி
தனித் திரியாக மாற்ற
Link to comment
Share on other sites

  • நிழலி changed the title to ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியை சந்தித்தனர் தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள்

Published By: DIGITAL DESK 3  13 AUG, 2024 | 03:51 PM

image

தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கிய சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று திங்கட்கிழமை (12)  மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும்,  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் வேந்தன் மற்றும் செயலாளர் துளசி ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கிய சூழலிலே,  இந்த சந்திப்புக்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்களை  சந்திப்பதற்கான அழைப்பினை தனித்தனியாக அரசியல் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் விடுத்திருந்தார்.

இந்த அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் இந்த அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமான தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவும் ரணில் விக்ரமசிங்க,  தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை  தீர்ப்பதற்காக முன்னெடுக்க உள்ள நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் இச்சந்திப்பில் பங்கேற்பதென முடிவு செய்தனர்.

இச் சந்திப்பில், பிரதானமாக தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கும் முகமான  சமஸ்டி முறையான அரசியல் தீர்வு தொடர்ந்தும்  தீர்க்கப்படாமல் இருப்பதனாலேயே பொது வேட்பாளர் என்ற முடிவு  எட்டப்பட்டுள்ளது என்பது தெளிவு படுத்தப்பட்டது.  ஜனாதிபதி தரப்பில் சமஸ்டி முறையான அரசியல் தீர்வு என்பது பலம் மிக்க பாராளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாக பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதுவரைக்கும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் ஊடாகக் கொண்டுவரப் பட்ட மாகாண சபைக் கட்டமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் அதற்காக தன்னிடம்  தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் யோசனைகளடங்கிய ஆவணம் ஒன்றையும் சமர்ப்பித்தார்.  ஏற்கனவே மாகாண சபையின் பறிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் மீள வழங்குவதாகவும், நிதி உட்பட  மேலதிக அதிகாரங்களையும் பொருளாதார அபிவிருத்தி ஆணைக்குழுவையும் மாகாண சபை கொண்டிருக்கும்  எனக்கும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் சார்பில்,  காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி,  எஞ்சியுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை,  காணி விடுவிப்பு மற்றும் அபகரிப்பை தடுப்பது,  தமிழ் இளைஞர்கள் யுவதிகள் நீதியற்ற முறையில் கைது செய்யப்படுவது,  விசாரணை என்ற போர்வையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கையை நிறுத்துதல், இந்திய  மீனவர்களுடைய  அத்துமீறலினால் எமது மீனவர்கள் படுகின்ற துன்பம், உட்பட பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டன.

இதற்கான தீர்வுகளை தான் நிச்சயமாக வழங்குவதாகவும் ஏற்கனவே சில விடயங்களுக்கான தீர்வுகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் தொல்லியல் விவகாரங்களை சுட்டிக்காட்டிய  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  தான் சமர்ப்பித்த ஆவணத்தில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன எனவும்,  அவற்றைப் பரிசீலித்த பின்னர் தொடர்ந்தும் சந்திப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்க்கு  முகமான மேலதிக கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தமது தரப்பிலும் தயாராக இருப்பதாக சொல்லிய தமிழ் தரப்பினர்,  அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து கருத்து தெரிவிப்பதாக கூறியதுடன் சந்திப்பு நிறைவடைந்தது.

7e8b40a2-033f-4dcc-8dc4-6424c2a3c875.jpg

https://www.virakesari.lk/article/191002

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 11/8/2024 at 18:21, ஏராளன் said:

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு

11 AUG, 2024 | 05:01 PM

 

17 minutes ago, ஏராளன் said:

ஜனாதிபதியை சந்தித்தனர் தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள்

Published By: DIGITAL DESK 3  13 AUG, 2024 | 03:51 PM

பலே.. பலே...  இரண்டு நாளில்... மனம் மாறி, ஜனாதிபதியை சந்தித்து விட்டார்களா. 
ஏதாவது அறிக்கை விடும் போது நிச்சயமான, சாத்தியமான அறிக்கைகளை விட வேண்டும்.
மனுசர் இருக்கிற விசரிலை...  நீங்கள் வேறை, காமெடி பண்ணிக் கொண்டு இருக்கக் கூடாது.
பிறகு உங்களைத்த்தான்.... "லூசு"  கூட்டம் என்று சனம் சொல்லும். 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஜனாதிபதி தரப்பில் சமஸ்டி முறையான அரசியல் தீர்வு என்பது பலம் மிக்க பாராளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாக பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலில் பலமான அரசாங்கம் உருவாகப் போவதில்லை என்ற நம்பிக்கையில் வார்த்தைகளை அள்ளி விடுகிறார்.

1 hour ago, தமிழ் சிறி said:

 

பலே.. பலே...  இரண்டு நாளில்... மனம் மாறி, ஜனாதிபதியை சந்தித்து விட்டார்களா. 
ஏதாவது அறிக்கை விடும் போது நிச்சயமான, சாத்தியமான அறிக்கைகளை விட வேண்டும்.
மனுசர் இருக்கிற விசரிலை...  நீங்கள் வேறை, காமெடி பண்ணிக் கொண்டு இருக்கக் கூடாது.
பிறகு உங்களைத்த்தான்.... "லூசு"  கூட்டம் என்று சனம் சொல்லும். 😂 🤣

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகுது.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

 

பலே.. பலே...  இரண்டு நாளில்... மனம் மாறி, ஜனாதிபதியை சந்தித்து விட்டார்களா. 
ஏதாவது அறிக்கை விடும் போது நிச்சயமான, சாத்தியமான அறிக்கைகளை விட வேண்டும்.
மனுசர் இருக்கிற விசரிலை...  நீங்கள் வேறை, காமெடி பண்ணிக் கொண்டு இருக்கக் கூடாது.
பிறகு உங்களைத்த்தான்.... "லூசு"  கூட்டம் என்று சனம் சொல்லும். 

அவர்களே தம் பேட்டிகளில் சாடை மாடையாகச் சொல்கின்றார்கள், தம் உண்மையான நோக்கமே தமிழரசுக் கட்சியை நாசம் செய்வது தான் என்று. 
அதாவது சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் ஒற்றுமையை காட்டி ஒரு செய்தி சொல்ல போகின்றோம் என்று மக்களுக்கு படம் காட்டி விட்டு, அந்த ஒற்றுமையை கேலிக்குரியதாக்கின்ற வகையில் ஒரு கட்சியை நாசம் செய்வது தான் அவர்களின் உள் நோக்கமாம். எனவே அவர்கள் ரணிலை சந்திக்கின்றது மட்டுமல்ல, இறுதியில் அவரை அல்லது சஜித்தை ஆதரிக்க சொன்னாலும் சொல்லுவினம்.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நிழலி said:

தம் உண்மையான நோக்கமே தமிழரசுக் கட்சியை நாசம் செய்வது தான் என்று. 
அதாவது சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் ஒற்றுமையை காட்டி ஒரு செய்தி சொல்ல போகின்றோம் என்று மக்களுக்கு படம் காட்டி விட்டு, அந்த ஒற்றுமையை கேலிக்குரியதாக்கின்ற வகையில் ஒரு கட்சியை நாசம் செய்வது தான் அவர்களின் உள் நோக்கமாம்.

அண்ணை உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
அந்தக் கட்சியை அங்க இருப்பவர்கள் ஏற்கனவே நாசமாக்கி விட்டார்களே?!

முன்னர் கூட்டமைப்பாக இருந்து பிரிந்தது தமிழரசுக் கட்சியின் பொறுப்பற்ற செயல்களால் தானே?

Link to comment
Share on other sites

13 minutes ago, ஏராளன் said:

அண்ணை உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
அந்தக் கட்சியை அங்க இருப்பவர்கள் ஏற்கனவே நாசமாக்கி விட்டார்களே?!

முன்னர் கூட்டமைப்பாக இருந்து பிரிந்தது தமிழரசுக் கட்சியின் பொறுப்பற்ற செயல்களால் தானே?

நீங்கள் சொல்வது சரிதான் ஏராளன்.

ஆக, செத்த பாம்பை அடிக்கத் தான் இவ்வளவு பிரயத்தனங்களா?

Link to comment
Share on other sites

சமஸ்டி முறையில் தீர்வு என்பது ரணிலால் முடியாத காரியம் என்பது தெரிந்தது. மீண்டும் ஏமாறாமல் அவர் கட்சியின் அனுமதியோடு எழுத்து மூலம் தான் ஜனாதிபதியானால் என்ன தீர்மானங்களை நிறைவேற்றுவார் என்று எழுதி வாங்கலாம். உதாரணமாக அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவித்தல் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற சாத்தியமாகக் கூடியவற்றைக் கேட்கலாம். எழுத்த்து மூலம் தந்தால் அதைப் பார்த்து சிங்களவர்கள் ரணிலை எதிர்க்கலாம். ஆகவே ரணில் எழுத்து மூலம் தர மறுத்தால் ஆதரவு கிடையாது என்று பேரம் பேசலாம் அல்லவா ?

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, இணையவன் said:

சமஸ்டி முறையில் தீர்வு என்பது ரணிலால் முடியாத காரியம் என்பது தெரிந்தது. மீண்டும் ஏமாறாமல் அவர் கட்சியின் அனுமதியோடு எழுத்து மூலம் தான் ஜனாதிபதியானால் என்ன தீர்மானங்களை நிறைவேற்றுவார் என்று எழுதி வாங்கலாம். உதாரணமாக அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவித்தல் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற சாத்தியமாகக் கூடியவற்றைக் கேட்கலாம். எழுத்த்து மூலம் தந்தால் அதைப் பார்த்து சிங்களவர்கள் ரணிலை எதிர்க்கலாம். ஆகவே ரணில் எழுத்து மூலம் தர மறுத்தால் ஆதரவு கிடையாது என்று பேரம் பேசலாம் அல்லவா ?

எது எப்படியோ சிங்களம் இதன் விளைவுகளை புரிந்த அளவுக்கு எம்மவர்???

Link to comment
Share on other sites

30 minutes ago, இணையவன் said:

சமஸ்டி முறையில் தீர்வு என்பது ரணிலால் முடியாத காரியம் என்பது தெரிந்தது. மீண்டும் ஏமாறாமல் அவர் கட்சியின் அனுமதியோடு எழுத்து மூலம் தான் ஜனாதிபதியானால் என்ன தீர்மானங்களை நிறைவேற்றுவார் என்று எழுதி வாங்கலாம். உதாரணமாக அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவித்தல் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற சாத்தியமாகக் கூடியவற்றைக் கேட்கலாம். எழுத்த்து மூலம் தந்தால் அதைப் பார்த்து சிங்களவர்கள் ரணிலை எதிர்க்கலாம். ஆகவே ரணில் எழுத்து மூலம் தர மறுத்தால் ஆதரவு கிடையாது என்று பேரம் பேசலாம் அல்லவா ?

அதை இவர்கள் ரணிலிடம் மட்டுமல்ல, இன்றைய நிலையில் முன்னிலையில் இருக்கும் அனுரவிடமும், சஜித்திடமும் கேட்டு பெற்று இருக்க வேண்டும் (அப்படிப் பெற்றாலும் நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி அதனை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை)

இன்றைய செய்திகளின் படி, இவர்கள் ரணிலை சந்தித்துள்ளார்கள். கோரிக்கை வைத்துள்ளார்கள், ஆனால் எழுத்து மூலம் கேட்டிருப்பதாக தகவல் இல்லை. அத்துடன் தாமே ஒரு வேட்பாளரை போட்டியிட வைத்து விட்டு, இன்னொரு வேட்பாளரைப் போய் சந்தித்ததன் காரணமும் தெரியவில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, இணையவன் said:

மீண்டும் ஏமாறாமல் அவர் கட்சியின் அனுமதியோடு எழுத்து மூலம் தான் ஜனாதிபதியானால் என்ன தீர்மானங்களை நிறைவேற்றுவார் என்று எழுதி வாங்கலாம்.

ஆட்சியாளர்கள் மாறலாம். சிங்கள அரசு மாறாது

வாய் மொழியாகச் சொன்னாலும் மறுக்கலாம். எழுத்து மூலமாகத் தந்தாலும் (பண்டா- செல்வா ஒப்பந்தம்) கிழித்தெறியலாம்.

large.IMG_6904.jpeg.f1d342a87dba34a949d4

13.12.1016இல் வரைந்த கருத்துப்படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

 கோரிக்கை வைத்துள்ளார்கள், ஆனால் எழுத்து மூலம் கேட்டிருப்பதாக தகவல் இல்லை. அத்துடன் தாமே ஒரு வேட்பாளரை போட்டியிட வைத்து விட்டு, இன்னொரு வேட்பாளரைப் போய் சந்தித்ததன் காரணமும் தெரியவில்லை.

எழுத்து மூலம் கேட்டது கிடைத்தால்?? 

போட்டியில் இருந்து விலகினாலும் தகும் வந்தால் மலை போனால்....,!(இது எனது கருத்து மட்டுமே. 

Link to comment
Share on other sites

6 minutes ago, விசுகு said:

எழுத்து மூலம் கேட்டது கிடைத்தால்?? 

போட்டியில் இருந்து விலகினாலும் தகும் வந்தால் மலை போனால்....,!(இது எனது கருத்து மட்டுமே. 

நீங்கள் சொல்வது போல் எழுத்து மூலம் கிடைத்தால் ஓரளவுக்கேனும் கெளரவத்துடன் விலகலாம்.

இன்றிருக்கும் நிலையில் இவ்வாறு எழுத்து மூலம் கொடுத்தால் "ஐயோ தமிழர்களுக்கு நாட்டை பிரித்து கொடுக்க போகிறார்" என்று இனவாதம் பேசி வாக்கு கேட்கும் நிலையில் எந்த முன்னணி வேட்பாளர்களும் இல்லை.

இந்த தேர்தலில் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம், இனவாதம் பேசி வாக்கு கேட்கும் நிலையில் முன்னணி வேட்பாளர்கள் இல்லை என்பது தான்.

இதன் அர்த்தம் இவர்கள் இனவாதிகள் அல்ல என்பது அல்ல. இன்றைய வங்குரோத்து நிலையில் பொருளாதாரம், வாழ்க்கை செலவு என்பனதான் முக்கிய விடயங்களாக உள்ளன.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து மூல அரசியல் சாசனங்கள் இருக்கும் போது வாய்மொழி  அரசியலை முன்னெடுத்தவர் அமரர் சம்பந்தன் மட்டுமே.அந்த பழக்கம் இன்றுவரை தொடர்கின்றது.
கோட்டு சூட்டுடன் வெளிநாடுகளுக்கு வந்து செல்லும் அரசியல்வாத்திகள் எதை கற்றுக்கொண்டு போகின்றார்கள் என தெரியவில்லை.
இது சம்பந்தமாக அதாவது அரசியல்வாக்குறுதிகள் சம்பந்தமான ஒப்பந்தங்களுக்கு இலங்கை அரசியலில் மூக்கை நுழைத்திருக்கும் அமெரிக்க,கிந்திய மற்றும் மேற்கத்திய நாட்டு அரச பிரமுகர்களை சாட்சி கையெழுத்து போட அழைக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

வாய் மொழியாகச் சொன்னாலும் மறுக்கலாம். எழுத்து மூலமாகத் தந்தாலும் (பண்டா- செல்வா ஒப்பந்தம்) கிழித்தெறியலாம்.

அன்றைய கிழித்தெறியும் சேட்டைகள் இனிவரும் காலங்களில் நடைபெற சந்தர்ப்பங்கள் இல்லை என்றே நினைக்கின்றேன்.
இனவாத சிங்களமும் கத்தி கூர்முனையின் மேலேதான் நடக்கின்றார்கள் என நினைக்கின்றேன். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான் அவர்களுக்கு...
ஆனால் எமது தமிழ் அரசியல்வாதிகள் கடந்த 10 வருடங்களாக இருக்கும் சந்தர்ப்பங்களை வரிசை வரிசையாக தவறவிட்டுக்கொண்டிருக்கின்றாகள் என்பதுதான் நிதர்சனம்.

இனியும் சும்மா புத்த பிக்குகளை சாட்டிக்கொண்டிருந்தால்......? 😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

சமஸ்டி முறையில் தீர்வு என்பது ரணிலால் முடியாத காரியம் என்பது தெரிந்தது. மீண்டும் ஏமாறாமல் அவர் கட்சியின் அனுமதியோடு எழுத்து மூலம் தான் ஜனாதிபதியானால் என்ன தீர்மானங்களை நிறைவேற்றுவார் என்று எழுதி வாங்கலாம். உதாரணமாக அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவித்தல் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற சாத்தியமாகக் கூடியவற்றைக் கேட்கலாம். எழுத்த்து மூலம் தந்தால் அதைப் பார்த்து சிங்களவர்கள் ரணிலை எதிர்க்கலாம். ஆகவே ரணில் எழுத்து மூலம் தர மறுத்தால் ஆதரவு கிடையாது என்று பேரம் பேசலாம் அல்லவா ?

ரணிலே கட்சியில்லாமல் சுயேச்சையாக தேர்தலில் நிற்கிறாரர் .இந்தத் தேர்தலில் அவர் எடுக்கின்ற முடிவுகளுக்கு கட்சி எப்படிப் பொறுப்பேற்கும்? உண்மையில் விகிதாசார பிரிதிநித்துவ தேர்தலிக் படி ஒரு வலுவான அரசாங்கம் அமைவது மிகமிக அரிது.கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன்தான் அரசாங்கம் அமைக்கலாம். வரலாற்றில் 2 பெரிய கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்த வேளையில்ஈதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்குச்சார்பான எபிரதான எதிர்க்கட்சியாக இருந்த வேளையில் தமிழர்களின் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகளான காணி விடுவிப்பு>அரசியல்கைதிகள் விடுதலை> போர்க்குற்ற விசாரணை>சிங்களக் குடியேற்றங்களைத் துடுத்தல்>தொல்டபொருட் திணக்களம் என்ற வகையில் தமிழர் தேசங்களில் புத்தர் சிலைகளை நிறுவி விகாரைகளைக்கட்டுதல்> போரினால் பாதிப்படைந்தவர்களுக்கு  புனர்வாழ்வு அளித்தல்> காணாமல் போனவர்களின் நிலைமை தொடர்பான பாரபட்சம்ற்ற நீதி விசாரணை என்று எதுவுமே கேட்டுப்பெறாமல். பெட்டி வாங்குவதிலும் எதிர்க்கட்சிதலைவரான சம்பந்தருக்கு கொழும்பில் சொகுசு மாளிகையும். மற்றும் எம்பிகளிங்கு அரசால் வழங்கப்படும் சலுகைகளையும் அனுபவித்துவிட்டு இப்பொழுது கூட்டமைப்பு உடைந்து  தமிழர் பலமிழந்து நிற்கும் வேளையில் சிங்கள வேட்பாளர்கள் கொடுக்கும் எந்த ஊறுதிமொழிகளும் ஒப்பந்தங்களும் ஒரு போதும் நிறைவேறப் போவதில்லை. பண்டா செல்வா ஓப்பந்தம்> டட்லி செல்வா ஒப்பந்தம். அதிகம் ஏன் இன்னொரு நாடான இந்தியாவுடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் எல்லாவற்றையும் தூக்கி குப்பைக் கூடையில் போட்டவர்களை நம்பி எப்படி ஒப்பந்தங்களைப் போடலாம். அவர் விரும்பினால் நடைமுநைச்சாத்தியமற்ற பலமான அரசாங்கம் அமையும்வரை காத்திராமல் தமழர்களுக்கு சமஷட்டி தேவையா இல்யைh என்று வடக்கு கிழக்கு மக்களிடம் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்துமாறு ஏன் னகனட்கக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

தாமே ஒரு வேட்பாளரை போட்டியிட வைத்து விட்டு, இன்னொரு வேட்பாளரைப் போய் சந்தித்ததன் காரணமும் தெரியவில்லை.

தமிழர்களை கேலிக்குரியவர்களாக ஆக்கி தமிழரசு கட்சியை நாசம் செய்து தாங்கள் எதாவது எழும்பலாமா பயனடையலாமா என்ற முயற்ச்சி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

தமழர்களுக்கு சமஷட்டி தேவையா இல்யைh என்று வடக்கு கிழக்கு மக்களிடம் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்துமாறு ஏன் னகனட்கக் கூடாது.

தமிழ்தரப்பின் ஜனாதிபதி பொதுவேட்பாளர் இந்த கோரிக்கையுடன் களமிறங்கி வடக்கு கிழக்கின் பெரும்பான்மை வாக்காளர்களின் ஆதரவை பெறுவாராயின் அதுவே தமிழர் உலகுக்கு சொல்லும் மறைமுகமான செய்தி. இதைவிட  சமஸ்ட்டி தேவையா இல்லையா என்ற தனியான வாக்கெடுப்பு ஒன்றை, குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள அரசுகள் ஒருபோதும் நடத்த விடாது. 

தமிழர் பிரதேசங்களில் பல சிங்கள மக்களின் வலிந்த  குடியேற்றமும் பேச்சுவார்த்தை என்று வரும்போது அதை குழப்பும் நோக்கத்துடன் முஸ்லிம் மக்களின் தலைமைகளை தமிழ் தரப்பிற்கு எதிராக திருப்பிவிடுவதும் இனவாத சிங்கள அரசுகள் தொடர்ந்து எமக்கு எதிராக செய்துவரும் சதி  நடவடிக்கைகள். இது தொடரும் பட்சத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் எமது முயற்சியில்  அனைத்து  ஜனநாயக பாதைகளும் என்றோ ஒரு நாள் நிரந்தரமாக மூடப்படுவது சாத்தியம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.