Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா:

கனடாவின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்றது!

adminAugust 15, 2024
Canada.png

தமிழ் போராளிகளின் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடிப்பதற்கான கனடாவின் தீர்மானத்தை இலங்கை  வெளிவிவகார அமைச்சு அறிக்கைய மூலம்   வரவேற்றுள்ளது.

உலகத் தமிழர் இயக்கத்துடன் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளாக நீடிக்கும் கனடா அரசின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது.

அண்மைய மதிப்பாய்வின் படி, விடுதலைப் புலிகளின் எச்சங்கள் சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல் வலையமைப்பைக் கொண்டிருப்பதாக கனடா கூறுகிறது.

புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் சார்பாக நிதி திரட்டுவதன் மூலம் குழு தொடர்ந்தும் பங்களிப்பை வழங்கி வருவதாக உலகத் தமிழர் இயக்க மதிப்பாய்வு குறிப்பிடுகிறது.

மீளாய்வு செயல்முறைக்குப் பின்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு, குறித்த அமைப்புகளால் தொடர்ந்து அச்சுறுத்தலை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் முதன்முதலில் பட்டியலிட்டது.

மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்வது சட்டப்பூர்வ தேவையாகும். அண்மைய மதிப்பாய்வு 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தது.

அண்மைகாலமாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் தொடர்ந்தும் மூன்றாவது முறையாக பட்டியலிட்டுள்ளது.

இந்தியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்புடன் பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2024/205863/

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையைத் தொடர்ந்து பேணும் கனடாவின் நிலைப்பாட்டுக்கு இலங்கை வரவேற்பு

Published By: DIGITAL DESK 3   16 AUG, 2024 | 08:42 AM

image

(நா.தனுஜா)

கனேடிய அரசாங்கத்தினால் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் அடங்கிய பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் உள்ளடக்கப்பட்டிருப்பது குறித்து இலங்கை அரசாங்கம் வரவேற்பு வெளியிட்டுள்ளது.

கனேடிய அரசாங்கம் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கியது. அப்பட்டியல் 5 வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும். அதற்கமைய இவ்வருடம் ஜுன் மாதம் 7 ஆம் திகதி அப்பட்டியல் மீளப்புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பட்டியலிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு வரவேற்பு தெரிவித்து வெளிவிவகார அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் 'கனடாவைத் தளமாகக்கொண்டு இயங்கிய உலகத்தமிழ் அமைப்புடன் இணைந்ததாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் தொடர்ந்து உள்ளடக்குவதற்கு கனேடிய அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கனேடிய அரசாங்கத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பித்தல் மீளாய்வின் பிரகாரம், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் எச்சங்கள் சர்வதேச ரீதியில் நிதி திரட்டலிலும், இயங்குகையிலும் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

'உலகத்தமிழ் அமைப்பு தொடர்பில் கனேடிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டிருக்கும் விளக்கத்தில், அவ்வமைப்பானது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் நிதி திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் ஊடாக புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளுக்குக் களம் அமைத்துக்கொடுத்திருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

எனவே, இவ்வமைப்புக்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுவதன் காரணமாகவே அவற்றைத் 'தடை பட்டியலில்' பேணுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது' எனவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/191187

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சப்பிரியோ..அல்லது ரணிலோ கனடாவுக்கு வருகினம்...

  • கருத்துக்கள உறவுகள்


 

கொஞ்ச நாட் களுக்கு முன் தான் சிறிலங்காவுக்கு எதிராக கனடா அரசு கருத்து தெரிவித்து சிறிலங்கா அரசின் கண்டனத்தை பெற்றது.
இப்போ அதனை சமநிலை படுத்த அடுத்த அறிக்கை. வாழ்த்துக்களையும் சிறிலங்கா அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டது.

8 hours ago, ஏராளன் said:

கனேடிய அரசாங்கத்தினால் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் அடங்கிய பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் உள்ளடக்கப்பட்டிருப்பது குறித்து இலங்கை அரசாங்கம் வரவேற்பு வெளியிட்டுள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

கொஞ்ச நாட் களுக்கு முன் தான் சிறிலங்காவுக்கு எதிராக கனடா அரசு கருத்து தெரிவித்து சிறிலங்கா அரசின் கண்டனத்தை பெற்றது.
இப்போ அதனை சமநிலை படுத்த அடுத்த அறிக்கை. வாழ்த்துக்களையும் சிறிலங்கா அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டது.

கனடாவை… ஶ்ரீலங்கா,  நல்லாய் வெருட்டிப் போட்டுது.
இனியும் கனடா பிரதமரை… பொங்கல் விழாவுக்கு வேட்டி கட்டவும், 
கொத்து ரொட்டி சாப்பிடவும் கூப்பிடுவீங்களா… 😂

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா கீறிய கோட்டை கனடா தாண்டாது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் தமிழீழத் தமிழர்கள் விடுதலை அடைவதற்கு கனடாநாடு அளித்துவந்த பாரிய உதவிகளை எப்போ நிறுத்தியது??

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கனடாவை… ஶ்ரீலங்கா,  நல்லாய் வெருட்டிப் போட்டுது.
இனியும் கனடா பிரதமரை… பொங்கல் விழாவுக்கு வேட்டி கட்டவும், 
கொத்து ரொட்டி சாப்பிடவும் கூப்பிடுவீங்களா… 😂

கனடாத் தெருவிழாவுக்கு...அணிலார்தன் இந்தமுறை  பிரதம விருந்தினர்...சப்பிரி இசுலாமும் தமிழும் என்றா தலைப்பில்(.ஸந்தேகம் வேண்டாம் )  ....சொற்பொழிவாம்....

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றிரண்டு புறநடைகள் தவிர்த்து உலகின் ஆயுதபோராட்ட இயக்கங்களை கனடா தடை பட்டியலில் வைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல, பல்தரப்பட்ட மக்கள் கூட்டம் வாழும் கனடாவில் ஆயுத இயங்கங்களிற்கு சுதந்திரம் கொடுத்தால் பல்லின சமூகங்களிற்கிடையே மோதல் வரும் என்று நம்புகிறது.

அதனால்தான் அங்கே அகதி தஞ்சம் கோருபவர்களை ஆயுதபோராட்ட இயக்கங்களுக்கு ஆதரவோ அல்லது அங்கத்தவராக இருந்தாலோ கனடா அவர்களின் மனுவை நிராகரித்து திருப்பி அனுப்ப முயற்சிக்கிறது.

 

இங்கே கவனிக்கப்படவேண்டியது  கனடா புலிகள் அமைப்பைத்தான் தடை செய்திருக்கிறது  புலிகளை நேசிக்கும் மக்களை முடக்கி போடவில்லை அவர்கள்மீது நெகிழ்வு தன்மையையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் ஓரளவாவது ஒப்புக்கொள்கிறது, உதவி செய்ய முயற்சிக்கிறது.

புலிகளை தடை செய்தால் என்ன புலிகளை நேசித்த மக்கள்கூட நேசமா கனடிய அரசு இருந்தாலே போதுமே, பூலிகள் வேறு மக்கள் வேறா என்ன?

ஆனால் கனடாவின் சட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு எமக்கான ஒரு தீர்வுகிட்டும்வரை கனடாவில் நடத்தும் எமது இனத்துக்கான போராட்டங்களின்போது புலிகொடிகளையோ அல்லது தலைவரின் படங்களையோ காவி செல்ல தூண்டும் சில அறபடித்தவர்கள் விடயத்தில் கனடாவாழ் தமிழ் மக்கள் எச்சரிக்கையாய் இருப்பது எம் நலன்களுக்கு உகந்தது.

இல்லையென்றால் கனடிய அரசு எம்மைவிட்டு தூர போகும் நிலமையையே அது ஏற்படுத்தும்.  அவர்களாக தடையை எடுக்கும் காலம்வர காத்திருக்கலாம் அதுவரை கனடிய அரசை வெறுப்பேத்தாத விதத்தில் எமது அமைப்புக்கள் எம் மக்களுக்கான ஜனநாயக அழுத்தங்களை கொடுக்கலாம். பின்பு புலிகளை பகிரங்கமாகவே கொண்டாடலாம் தப்பில்லை.

புலிகளை தடையை நீடிக்கிறார்கள் என்பதில் எமக்கு ஓரவஞ்சனை என்று கருத்தில் கொள்ள தேவையில்லை,  புலிகள் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்ட  பல பத்து ஆயுதபோராட்ட அமைப்புகளில் ஒன்று அவ்வளவுதான்.

கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் விபரங்கள்:

 

https://www.publicsafety.gc.ca/cnt/ntnl-scrt/cntr-trrrsm/lstd-ntts/crrnt-lstd-ntts-en.aspx

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, valavan said:

 

ஆனால் கனடாவின் சட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு எமக்கான ஒரு தீர்வுகிட்டும்வரை கனடாவில் நடத்தும் எமது இனத்துக்கான போராட்டங்களின்போது புலிகொடிகளையோ அல்லது %-$$@%#^@%@$$# காவி செல்ல தூண்டும் சில அறபடித்தவர்கள் விடயத்தில் கனடாவாழ் தமிழ் மக்கள் எச்சரிக்கையாய் இருப்பது எம் நலன்களுக்கு உகந்தது.

 

ஐயனே, தாங்கள் புலிக்கொடி என்று சுட்டியிருப்பது புலிகள் அமைப்பின் கொடியையா அ தமிழீழத்தின் கொடியையா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

கனடாவை… ஶ்ரீலங்கா,  நல்லாய் வெருட்டிப் போட்டுது.
இனியும் கனடா பிரதமரை… பொங்கல் விழாவுக்கு வேட்டி கட்டவும், 
கொத்து ரொட்டி சாப்பிடவும் கூப்பிடுவீங்களா… 😂

கொத்து ரொட்டியும் கொடுத்து கம்படியும் பழக்கி ஜஸ்டினை பழுதாக்கி போட்டார்கள் கனடிய உறவுகள்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

கொத்து ரொட்டியும் கொடுத்து கம்படியும் பழக்கி ஜஸ்டினை பழுதாக்கி போட்டார்கள் கனடிய உறவுகள்.🙂

இந்தமுறை வரட்டும் ...அப்பமும் ...தோசையும் சுடப் பழக்கி விடுவம்

 

  • கருத்துக்கள உறவுகள்

எமது நெஞ்சங்களில் வாழும் வீரர்களுக்கு நீதிமன்றங்களில் தடை விதித்து என்ன பயன்? ஏற்கெனவே புலிகள் தோன்றுவதற்கான காரணம் எங்கே எழுந்தது என்று கனடா பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஒன்றும் விடுதலைப்புலிகளை மட்டும் குறிவைத்து நீடிக்கப்பட்ட தடையல்ல, இதைப்புரியாமல் சிங்களம் குதிக்கட்டும், வரவேற்கட்டும் மகிழட்டும். அப்பப்போ கூடும் ஐ. நா. சபை போல இதுவும் ஒரு செயற்பாடு, தமது செயற்திறனை  வெளிக்காட்டுவதற்கு எடுக்கப்படும் நிகழ்வு. இப்போ யாரும் புலிகளுக்கு நிதி சேகரிக்க வேண்டிய தேவை இல்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் செயற்பாட்டை இந்த நிரலுக்குள் கொண்டு வருகிறார்களோ தெரியவில்லை. யாருக்கு இதனால் நட்டம் இலாபம் என்பதை விட இலங்கைக்கு பெரும் மகிழ்ச்சி, ஏதோ தான் சரியானதை செய்ததுபோல் அற்ப மகிழ்ச்சி. அவர்கள் பொது மக்களை அழித்தார்கள் என்பதை கனடா சொல்லியும் செய்தும் வருகிறது அது வரவேற்கத்தக்கது. அதனால் எமக்கு ஒரு நட்டமுமில்லை. விடுதலைப்போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் வேறுபாடு முன்வைக்கப்படும்போது சிங்களம் தலைகுனிந்து நிற்கும், சர்வதேசத்தால் தடைவிதிக்கும் காலமும் உருவாகும். இதை புரியாமல் ரணில் தீர்வு தருவார் சிங்களத்திடமிருந்துதான் தீர்வு வரும் இந்தியா வாங்கித்தரும் என்று இலவுகாத்த கிளிபோல் ஏமாறாமல், நல்லதை நினைக்கும் நாடுகளோடு கூட்டுச்சேர்ந்தால் மாற்றம் வரும். இந்தியாவுக்கு உற்ற நண்பன் இலங்கை என அப்பப்போ இருவரும் மார்தட்டி மாறி மாறி  தழுவிக்கொள்கிறார்கள். ஆனால் இருவரின் செயற்பாடுகளும் எப்படிப்பட்டது என்பது சிறுது சிறிதாக உணரப்படுகிறது.    

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நன்னிச் சோழன் said:

ஐயனே, தாங்கள் புலிக்கொடி என்று சுட்டியிருப்பது புலிகள் அமைப்பின் கொடியையா அ தமிழீழத்தின் கொடியையா?

இரண்டுமேதான்,  இலங்கைக்குள் இன்னொருநாட்டை உருவாக்குவதை சர்வதேசங்களில் எந்தநாடும் இப்போதும் சரி அப்போதும் சரி ஏற்றுக்கொண்டதே இல்லை.

அதனால் தனிநாடு எமக்கு விருப்பில்லை என்றில்லை, சாத்தியப்பாடான அணுகுமுறைகளையே முதலில் ஆராய வேண்டும்.

 புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் கொடிகளையும் எமது தாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளின் புகைப்படங்களையும், மஞ்சள் சிவப்பு கொடிகளாய் எமது அடையாளத்தையும் தாங்கி நிற்கலாம் என்பதே மனசில் தோன்றுவது,

மஞ்சள் சிவப்பு கொடிகளை தமிழர் பகுதிகளிலேயே எமது மக்கள் அடையாளமாய் தாங்கி நிற்கிறார்கள், சிங்களவனும் அதற்கு தடை விதித்ததாய் தெரியவில்லை. ஆகவே அது எம் பொது அடையாளமாய் இருக்கலாம்.

ஓரிரு தினங்களின் முன்னர் பிரம்டன் நகரபிதா எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராய் போராட்டம் நடத்திய சிங்களவர்களுக்கெதிராய் காட்டமான பதிலையும் வழங்கி உறுதியாய்  குரல் கொடுத்ததெல்லாம் மிக பெரும் விஷயங்கள் அதை கனடாவின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு அவர்களை பின் தொடர்வதே சாணக்கியம்.

கனடாவின் வரைமுறைகளை மீறி அவரைபோன்றவர்கள் எமக்காக செயல்படபோவதில்லை, போனால் அவர்கள் மீதும் சட்டம் பாயும் அவ்வாறான நிலமை உருவாக எமது அணுகுமுறைகள் இருக்க கூடாது என்பதே அவா.

மீறி வெறும் உணர்ச்சி கொந்தளிப்புகளுக்கு அடிமையாகி எழுந்தமானமாய் போனால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா கேஸ்தான்.

எமக்கான வாய்ப்புகளை சரியான பயன்படுத்துவதும் தவறாகிபோவதும்  வலிமையுள்ள எம்மவர்களின் அமைப்புக்களின் கைகளிலேயே உள்ளது. எம்மை போன்ற சாமானியர்களால் எழுத்தில் மட்டுமே கவலைகளை  முடியும் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

கொத்து ரொட்டியும் கொடுத்து கம்படியும் பழக்கி ஜஸ்டினை பழுதாக்கி போட்டார்கள் கனடிய உறவுகள்.🙂

 

2 hours ago, alvayan said:

இந்தமுறை வரட்டும் ...அப்பமும் ...தோசையும் சுடப் பழக்கி விடுவம்

images?q=tbn:ANd9GcR1VfJOipagcVaMVzVGvqX

Rm8ItjhIvXJoT7-Bp_8mADFcjA3L4meXeGvCvAxH

tamil-samayam.jpg

ஜஸ்டின் ட்ரூடோவின்... பிள்ளைகளின்   சாமத்திய சடங்கை,
எங்கள் முறைப்படி... உலங்கு வானுர்தியில் வைத்து செய்து,
அவரின் மனதை கவர வேண்டும். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

ஜஸ்டின் ட்ரூடோவின்... பிள்ளைகளின்   சாமத்திய சடங்கை,
எங்கள் முறைப்படி... உலங்கு வானுர்தியில் வைத்து செய்து,

அவரின் மனதை கவர வேண்டும்.

எப்போதிலிருந்து இது உங்கள் கலாச்சாரமானது?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

எப்போதிலிருந்து இது உங்கள் கலாச்சாரமானது?

சுளையாக டொலரை கண்டவுடன், இடையில் புகுந்த கலாச்சாரம்.
ஒரு சிலர் இதை செய்வதால்... முழு இனத்துக்கும் இது தலைகுனிவு. 
போரில்... உயிரை, சொத்துக்களை இழந்த இனம் இதை செய்வது வெட்கக் கேடானது.
இறந்த ஆத்மாக்களின் சாபம், இவர்களை சும்மா விடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழ் மக்கள் சிங்கள பொதுமக்களுக்கெதிராக எதிர்ப்பு ஊர்வலங்களோ ஆயுத முன்னெடுப்புகளோ இதுவரை செய்ததில்லை. செய்யப்போவதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2024 at 11:50, குமாரசாமி said:

ஈழத்தமிழ் மக்கள் சிங்கள பொதுமக்களுக்கெதிராக எதிர்ப்பு ஊர்வலங்களோ ஆயுத முன்னெடுப்புகளோ இதுவரை செய்ததில்லை. செய்யப்போவதுமில்லை.

பிரபாகரன் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட  பல சிங்களப் படிப்பறிவற்ற சிப்பாய்களும் விடுதலையாகித் திரும்ப தங்கள் கும்பத்தினருடன் இணைந்தபோது, படிப்றிவோடு கூடவே ஆங்கில மொழியறிவும் கொண்டடிருப்பது கண்டு அந்தச் சிப்பாய்களின் குடும்பங்கள் வியந்ததுதான் வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2024 at 04:58, தமிழ் சிறி said:

சுளையாக டொலரை கண்டவுடன், இடையில் புகுந்த கலாச்சாரம்.
ஒரு சிலர் இதை செய்வதால்... முழு இனத்துக்கும் இது தலைகுனிவு. 
போரில்... உயிரை, சொத்துக்களை இழந்த இனம் இதை செய்வது வெட்கக் கேடானது.
இறந்த ஆத்மாக்களின் சாபம், இவர்களை சும்மா விடாது.

"துரோகி" பார்சல் ஒன்று ரெடிபண்ணுங்க. 

🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.