Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

presidential-election-2024-sri-lanka.jpg

வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?

எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களுடைய பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கை சுயாதீன ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவினா் வேட்பாளர்கள் தொடர்பான தொடர் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், கண்டி, நுவரெலியா, மாத்தளை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, மொனராகல, பதுளை, பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில்இ அனைத்து மாவட்டத்திலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தில் இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

குறிப்பாக மத்திய மாகாணத்தில் 1421 வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலிடத்திலும், தொடர்ந்து 1005 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாசவும், 420 வாக்குகளுடன் அநுரகுமார திசாநாயக்க மூன்றாவது இடத்திலும், 70 வாக்குகளுடன் நாமல் ராஜபக்ச நான்காவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வடமாகாணத்தை பொறுத்தவரையில், 886 வாக்குகளைப் பெற்று ரணில் முதலிடத்திலும்இ 683 வாக்குகளை பெற்று சஜித் இரண்டாவது இடத்திலும், 298 வாக்குகளை பெற்று அநுரகுமார மூன்றாவது இடத்திலும், 46 வாக்குகளை பெற்று நாமல் ராஜபக்ச நான்காவது இடத்திலும் உள்ளார்.

இருப்பினும்இ வடக்குக் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் பா.அரியநேந்திரன் இந்த பட்டியலில் உள்வாங்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

https://athavannews.com/2024/1396922

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இருப்பினும்இ வடக்குக் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் பா.அரியநேந்திரன் இந்த பட்டியலில் உள்வாங்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

அநுர முதலிடத்தில் இருந்து எப்படி கீழிறங்கினார்??
கடைசியில் இருந்த ரனில் எப்படி மேலேறினார்?
அரியநேந்திரன் ஏன் வாக்களிப்பில் இருந்து தவிர்க்கப்பட்டார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images-24.jpeg?resize=303,166

கருத்துக்கணிப்புக்களை நம்ப வேண்டாம் – தேர்தல்கள் ஆணைக்குழு.

எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் மேற்கொண்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, கருத்துக்கணிப்புகளை வைத்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பான  தமது கருத்தை வாக்காளர்கள் மாற்ற வேண்டிய அவசியமில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1396989

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிப் பார்த்தாலும் 50 வுpதத்திற்கு மேல் யாருக்கும் கிடைக்கவில்லை. 2வது சுற்று விருப்பு வாக்கெடுப்பு எண்ணப்பட வேண்டும் என்று இந்தக்கருத்துக்கணிப்பு சொல்கின்றது.. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தால் ஜனாதிபதித் தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் 2வது விருப்பு வாக்ககை எண்ணும் நிலை வந்தால்  ரணில் சுத்துமாத்திப் பண்ணி ஜனாதிபதியாக வருவார.(( சுமத்திரன் போன தடவை வென்றது போல(

3 hours ago, புலவர் said:

இது எப்படி என்று விளக்க முடியுமா புலவர்?

பதிவு செய்ப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக ( 2023 ஆண்டு கணக்கெடுப்பு படி)

யாழ் மாவட்டம்: 583,752

வன்னி மாவட்டம்: 300,675

மட்டக்களப்பு மாவட்டம்: 438,264

திருகோணமலை (தலை நகரம் மட்டும்): 102,298

மொத்தம்: 1,424,989

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பகுதிகளில் உள்ள மொத்த வாக்களர்கள் அனைவரும், ஒருவர் விடாது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்தால், மொத்த வாக்குகளின் எண்ணிக்கை: 1,424,989

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை (2023 ஆம் ஆண்டின் படி): 16,263,885

ஆகவே இலங்கையின் மொத்த வாக்களர்களுடன் ஒப்பிடும் போது வடக்கு கிழக்கில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையின் விகிதம்: 8.77

இந்த 8.77 எப்படி கடும் போட்டியைக் கொடுக்கும்?

இவ் 8.77 இல் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலையின் தலை நகரம் பகுதிகளில் வாழும் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கையும் அடங்கும். முஸ்லிம் மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்குப் போடப் போவதில்லை என்பதால் இவ் 8.77 விகிதமும் குறையும். அத்துடன் அனைத்து தமிழ் மக்களும் பொது வேட்பாளருக்கு போட்டால் மட்டுமே ஆகக் குறைந்தது 7 வீதமாவது பொது வேட்பாளர் பெறுவார்.

இந்த 7  வீதத்தை வைத்துக் கொண்டு கடும் போட்டியை கொடுக்க முடியுமா?

இந்த யதார்த்தத்தை நீங்கள் மறுக்கின்றீர்களா?

வாக்காள எண்ணிக்கை தரவுகளின் மூலம் https://elections.gov.lk/en/voters/voters_statistics_E.html

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.சி தமிழின் கருத்துக் கணிப்பு மாதிரி

elec.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

ஐ.பி.சி தமிழின் கருத்துக் கணிப்பு மாதிரி

elec.jpg

சுமந்திரன் இந்தக் கருத்துக் கணிப்பை பார்த்தால்.... 
அரியநேந்திரன் 18% வாக்கு எடுத்ததை பார்த்து, மாரடைப்பு வந்தாலும், வந்து விடும். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் இந்தக் கருத்துக் கணிப்பை பார்த்தால்.... 
அரியநேந்திரன் 18% வாக்கு எடுத்ததை பார்த்து, மாரடைப்பு வந்தாலும், வந்து விடும். 😂 🤣

ஒன்லைன்ல வாக்குப்போட்டது புலம்பெயர்ஸ் என்று சொல்லுவார் அண்ணை!

நானும் பொதுவேட்பாளருக்கு தான் போட்டனான் என்று சொல்லிப்போடவேணாம்!

எனக்கென்னமோ இப்ப இருப்பவருக்கு பில்டப் குடுக்கினமோ என சந்தேகமாக இருக்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

ஒன்லைன்ல வாக்குப்போட்டது புலம்பெயர்ஸ் என்று சொல்லுவார் அண்ணை!

நானும் பொதுவேட்பாளருக்கு தான் போட்டனான் என்று சொல்லிப்போடவேணாம்!

எனக்கென்னமோ இப்ப இருப்பவருக்கு பில்டப் குடுக்கினமோ என சந்தேகமாக இருக்கு!

ஏராளன்...  இந்தப் பதிவை, @Kapithanக்கு காட்டிப் போடாதேங்கோ. 😂
பிறகு அந்தாள்... நித்திரை இல்லாமல் தவிக்கும்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஏராளன்...  இந்தப் பதிவை, @Kapithanக்கு காட்டிப் போடாதேங்கோ. 😂
பிறகு அந்தாள்... நித்திரை இல்லாமல் தவிக்கும்.  🤣

சிறியரின் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? . 🤣

2 hours ago, நிழலி said:

இது எப்படி என்று விளக்க முடியுமா புலவர்?

பதிவு செய்ப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக ( 2023 ஆண்டு கணக்கெடுப்பு படி)

யாழ் மாவட்டம்: 583,752

வன்னி மாவட்டம்: 300,675

மட்டக்களப்பு மாவட்டம்: 438,264

திருகோணமலை (தலை நகரம் மட்டும்): 102,298

மொத்தம்: 1,424,989

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பகுதிகளில் உள்ள மொத்த வாக்களர்கள் அனைவரும், ஒருவர் விடாது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்தால், மொத்த வாக்குகளின் எண்ணிக்கை: 1,424,989

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை (2023 ஆம் ஆண்டின் படி): 16,263,885

ஆகவே இலங்கையின் மொத்த வாக்களர்களுடன் ஒப்பிடும் போது வடக்கு கிழக்கில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையின் விகிதம்: 8.77

இந்த 8.77 எப்படி கடும் போட்டியைக் கொடுக்கும்?

இவ் 8.77 இல் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலையின் தலை நகரம் பகுதிகளில் வாழும் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கையும் அடங்கும். முஸ்லிம் மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்குப் போடப் போவதில்லை என்பதால் இவ் 8.77 விகிதமும் குறையும். அத்துடன் அனைத்து தமிழ் மக்களும் பொது வேட்பாளருக்கு போட்டால் மட்டுமே ஆகக் குறைந்தது 7 வீதமாவது பொது வேட்பாளர் பெறுவார்.

இந்த 7  வீதத்தை வைத்துக் கொண்டு கடும் போட்டியை கொடுக்க முடியுமா?

இந்த யதார்த்தத்தை நீங்கள் மறுக்கின்றீர்களா?

வாக்காள எண்ணிக்கை தரவுகளின் மூலம் https://elections.gov.lk/en/voters/voters_statistics_E.html

யதார்த்தமா? அப்படியென்றால் என்ன? 

இதுதான் புலம்பெயர்ஸ் நிலைமை. 🥺

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இது எப்படி என்று விளக்க முடியுமா புலவர்?

நான் மேலே காட்டியிருந்த கருத்துக்கணிப்பகளில் இருந்துதான் இருவரும் 50 வீதத்துக்கு மேல் எடுக்கவில்லை என்று எழுதினேன்.இந்தக்கருத்துக்கணிப்பும் முழமையானது அல்ல என்ற புரிதல் எனக்க இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இந்த 7  வீதத்தை வைத்துக் கொண்டு கடும் போட்டியை கொடுக்க முடியுமா?

இதுவரை நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் வடக்கு கிழக்கு மக்கள் பெரும்பாலும் ஒரு அலையாகவே வாக்களித்திருக்கிறார்கள்.அவர்கள் வாக்களித்த வேட்பாளர் வென்றும் இருக்கிறார் தோற்றும் இருக்கிறார்.தமிழ்மக்களின் வாக்குகள் இல்லாமலேயே சிங்கள வேட்பாளர்களினால் வெற்றியைப் பெற முடியும்.அதற்குப்பல தேர்தல்கள் முன்னுதாரணமாக இருக்கின்றன.இம்முறை தென்பகுதியில் ரணீலுக்கும்>சஜித்துக்கும் கடுமையான போட்டி இருக்கிறது. அனுராவும் குறிப்பிடத்தக்க வாக்குகள் எடுக்கும் நிலையில் தமஜழ் வாக்குகள் ஒரு அலையாக ஒரு சிங்கள வேட்பாளருக்கு கிடைக்காமல் விட்டால் முதல்சுற்றில்  எவருக்கும் 50 வீதம் கிடைக்காமல் போகலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

இவ் 8.77 இல் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலையின் தலை நகரம் பகுதிகளில் வாழும் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கையும் அடங்கும். முஸ்லிம் மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்குப் போடப் போவதில்லை என்பதால் இவ் 8.77 விகிதமும் குறையும். அத்துடன் அனைத்து தமிழ் மக்களும் பொது வேட்பாளருக்கு போட்டால் மட்டுமே ஆகக் குறைந்தது 7 வீதமாவது பொது வேட்பாளர் பெறுவார்.

அப்போ ஜபிசி வானொலிக்கு கணக்குப் போடத் தெரியவில்லை. இல்லாவிட்டால் பொய்க் கணக்குப் போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ‘எடுத்த காரியம் எல்லாம் பொய்’

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

யதார்த்தமா? அப்படியென்றால் என்ன? 

இதுதான் புலம்பெயர்ஸ் நிலைமை. 🥺

தமிழ் ஈழத்திற்காக அரியநேந்திரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலைதளங்களில் எழுதுகின்றனராம்

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிசி தமிழின் கருத்துக் கணிப்பின் 25/08 இன்றைய நிலை.

ibc-elec.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

ஐபிசி தமிழின் கருத்துக் கணிப்பின் 25/08 இன்றைய நிலை.

ibc-elec.jpg

அடேங்கப்பா…. போற போக்கிலை,
அரியநேந்திரன்… ரணிலையும் முந்தி விடுவார் போலுள்ளது. 😂
சங்கு சின்னம்… பொதுமக்களிடம் நல்ல வேகமாக பரவியிருக்கு. 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

அடேங்கப்பா…. போற போக்கிலை,
அரியநேந்திரன்… ரணிலையும் முந்தி விடுவார் போலுள்ளது. 😂
சங்கு சின்னம்… பொதுமக்களிடம் நல்ல வேகமாக பரவியிருக்கு. 😁

இதில அரியத்தாற்ற படம் இருக்கு தானே அண்ணா?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

இதில அரியத்தாற்ற படம் இருக்கு தானே அண்ணா?!

தமிழர் மட்டுமன்றி சிங்களவர், முஸ்லீம்களும் அரியத்தாருக்கு வாக்கு போட்டுள்ளார்கள் போலுள்ளது.
ஏராளன், சஜித்தும்… தமிழ் பொது வேட்பாளரினால் தனது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று பேட்டி கொடுத்துள்ளது உண்மையாகி விட்டது.

😁

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஏராளன் said:

ஐபிசி தமிழின் கருத்துக் கணிப்பின் 25/08 இன்றைய நிலை.

ibc-elec.jpg

ஐபிசி தமிழின் வாக்கெடுப்பில் தமிழர்கள் மட்டுமே வாக்களித்திருப்பார்கள் என்பது சொல்லி தெரியவேண்டிய விடயம் அல்ல.  தமிழர்களுக்குள் நடந்த வாக்கெடுப்பிலே பொது வேட்பாளர் 23  வீதத்தை மட்டுமே பெற  மற்றைய வேட்பாளர்கள் அனைவரும்  77 வீதத்தை  இதுவரை பெற்றுள்ளார்கள். 

தமிழர்களுக்குள்ளேயே  ரணிலை  வெல்ல  தமிழ்ப் பொது  வேட்பாளரால் முடியவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஏராளன் said:

ஐபிசி தமிழின் கருத்துக் கணிப்பின் 25/08 இன்றைய நிலை.

ibc-elec.jpg

அலறும்.. சஜித் பிரேமதாசா. 😂 🤣

//தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கவேண்டாம்; தனக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் - தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் சஜித் வேண்டுகோள்.  👇 //

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழர் ஒருவரிடம் ஜனாதிபதிப்பொறுப்பை இலங்கை மக்கள் கொடுத்து பார்ப்பார்களாயின் அதுவே இலங்கையின் மீட்சியாக இருக்கும். தமிழர்கள் ஒரு போதும் சிங்கள இனத்தை ஆள முயலமாட்டார்கள். இது நிரூபிக்கப்படும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

உண்மையில் தமிழர் ஒருவரிடம் ஜனாதிபதிப்பொறுப்பை இலங்கை மக்கள் கொடுத்து பார்ப்பார்களாயின் அதுவே இலங்கையின் மீட்சியாக இருக்கும். தமிழர்கள் ஒரு போதும் சிங்கள இனத்தை ஆள முயலமாட்டார்கள். இது நிரூபிக்கப்படும். 

அமுதலிங்கம், சம்பந்தன் போன்றோர் எதிர்க்கட்சி தலைவராக வர முடியுமாயின்...
இப்போது நடக்கும்... ரணில், சஜித், அனுரா.. எனும் முக்கோண போட்டியில்.... 
தமிழன் ஜனாதிபதியாகவும் வர சந்தர்ப்பம் வரலாம்.
வண்டியின்... சக்கரம் நெடுக ஒரு இடத்தில் நிற்பதில்லை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

அமுதலிங்கம், சம்பந்தன் போன்றோர் எதிர்க்கட்சி தலைவராக வர முடியுமாயின்...
இப்போது நடக்கும்... ரணில், சஜித், அனுரா.. எனும் முக்கோண போட்டியில்.... 
தமிழன் ஜனாதிபதியாகவும் வர சந்தர்ப்பம் வரலாம்.
வண்டியின்... சக்கரம் நெடுக ஒரு இடத்தில் நிற்பதில்லை. 🙂

அதுக்கு நம்ம முதுகை நாம் முதலில் பார்க்கணுமே. கழுவணுமே. அதுக்கு சந்தர்ப்பமே இல்லையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அதுக்கு நம்ம முதுகை நாம் முதலில் பார்க்கணுமே. கழுவணுமே. அதுக்கு சந்தர்ப்பமே இல்லையே.

விசுகர்... சிலரின்  பழக்க தோசத்தை மாத்துறது கஸ்ரம் என்றாலும், முயற்சிப்பதில் தவறு இல்லை. 😂
நெடுக... முதுகு முட்ட, அழுக்குடன் இருப்பதும்... அவர்களுக்கு அரிப்பாக.. இருக்கும்தானே...  🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.