Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு

புதிய இணைப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) அறிவித்துள்ளது.

வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று (01) இடம்பெற்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் இன்றைய கூட்டத்தில் அரியநேத்திரனுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், தமது கட்சியைச் சேர்ந்த அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக அதிலிருந்து விலக வேண்டும் என்றும், சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் மூன்று தீர்மானங்களை தமிழரசுக் கட்சி நிறைவேற்றியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்காக தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் கூடியுள்ளது.

குறித்த கூட்டமானது, வவுனியா (Vavuniya) இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (01) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர்

இந்தநிலையில், குறித்த கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) வருகைத் தரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு | Itak Central Committee Meeting Today

மேலும், இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் (R. Shanakyan), த.கலையரசன், எஸ்.குகதாசன் (Kuagadhasan), எம்.எ.சுமந்திரன் (M.A Sumanthiran), சட்டத்தரணி கே.வி. தவராசா, கே.சிவஞானம், செயலாளர் ப.சத்தியலிங்கம் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/itak-central-committee-meeting-today-1725172608

  • Replies 165
  • Views 10.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இந்தக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள் சமூகமளிக்கவில்லை.  இது... சுமந்திரன் குரூப்பின், மற்றுமொரு  தில்லாலங்கடி வேலை. 😎 கட்சியை நடுத் தெருவில் வைத்து,  நாறப் பண்ணிக் கொண்டு இரு

  • சாணக்கியனும் சுமந்திரனும் சஜித்துக்கு வாக்கை போட சொன்ன படியால் தமிழ் மக்கள் நான் முந்தி  நீ முந்தி என வாக்களிக்க போகிறார்கள்.  மிக முக்கியமாக தமிழருக்கு தீர்வொன்று வர போகிறது. மேற்கு நாடுகளுக்க

  • நிழலி
    நிழலி

    சஜித்தின் தோல்வியை இனி எவராலும் தடுக்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

குறித்த கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) வருகைத் தரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் (R. Shanakyan), த.கலையரசன், எஸ்.குகதாசன் (Kuagadhasan), எம்.எ.சுமந்திரன் (M.A Sumanthiran), சட்டத்தரணி கே.வி. தவராசா, கே.சிவஞானம், செயலாளர் ப.சத்தியலிங்கம் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள் சமூகமளிக்கவில்லை. 
இது... சுமந்திரன் குரூப்பின், மற்றுமொரு  தில்லாலங்கடி வேலை. 😎
கட்சியை நடுத் தெருவில் வைத்து,  நாறப் பண்ணிக் கொண்டு இருக்கிறாங்கள். 😂
எல்லாம்.. அந்த சம்பந்தனுக்கு, சமர்ப்பணம். 🤣

சஜித்தின் தோல்வியை இனி எவராலும் தடுக்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) அறிவித்துள்ளது.

சாணக்கியனுக்கு ரணில் கொடுத்த பணமெல்லாம் வேஸ்டா கோப்பாலு?

1 hour ago, தமிழ் சிறி said:

இந்தக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள் சமூகமளிக்கவில்லை. 
இது... சுமந்திரன் குரூப்பின், மற்றுமொரு  தில்லாலங்கடி வேலை. 😎
கட்சியை நடுத் தெருவில் வைத்து,  நாறப் பண்ணிக் கொண்டு இருக்கிறாங்கள். 😂
எல்லாம்.. அந்த சம்பந்தனுக்கு, சமர்ப்பணம். 🤣

ரணிலுக்கு முதுகில் குத்திட்டாங்களே.

வழமையா அந்தாள் தானே எல்லோருக்கும் ஆப்பு வைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) அறிவித்துள்ளது.

large.IMG_6968.jpeg.ef0f543f11835ee4f8ff

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

சாணக்கியனுக்கு ரணில் கொடுத்த பணமெல்லாம் வேஸ்டா கோப்பாலு?

ரணிலுக்கு முதுகில் குத்திட்டாங்களே.

வழமையா அந்தாள் தானே எல்லோருக்கும் ஆப்பு வைக்கும்.

ரணிலின்… 60 கோடியை அமுக்கி  விட்டார்கள்.
தற்செயலாய் ரணில் வென்றால்… சாணக்கியனும், சுமனும் நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டி வரும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ரணிலின்… 60 கோடியை அமுக்கி  விட்டார்கள்.
தற்செயலாய் ரணில் வென்றால்… சாணக்கியனும், சுமனும் நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டி வரும். 😂

இதிலே ரணிலுக்கு நஸ்டம் ஏதுமில்லை சிறி.

ஏற்கனவே கட்சியை பிழந்ததற்கே பணம் கொடுக்கப்பட்டது.

அவர்களும் இலவசமாக செய்யவா முடியும்.

இன்னமும் நாட்கள் இருக்கின்றன.

ஐயா விக்கியருக்கு ரணில் மேல ஒரு கண்ணு.ஆனாலும் நேரே சொல்ல முடியாமல் விக்கித் தவிக்கிறார்.

இங்கேயும் வாக்கில்லாத பலருக்கு ரணில் மேல ஒரு கண்ணு.

பொதுவேட்பாளர் தரப்பில் இரண்டாவது வாக்கை யாரக்கு போட சொல்கிறார்களோ?

பெட்டிகள் கைமாறும் போது மனங்களும் மாறும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவை இது செல்லாது என்றும் இது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்றும் அறிவுத்துள்ளதாக அறிய முடிகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

“இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நன்றி” - சஜித்

01 SEP, 2024 | 07:00 PM
image
 
ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி தனக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நன்றியை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத்தில்  இதனை பதிவு செய்துள்ள அவர், நாங்கள் இணைந்து அனைவரும் வெற்றிபெறும், இனவெறியில்லாத  பாரபட்சம் இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.

ஐக்கியம் வலு பகிர்ந்துகொள்ளப்பட்ட நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தை உருவாக்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/192590

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஏராளன் said:

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி தனக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நன்றியை தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்த பின்பும் இதே மனநிலையில் இருந்தால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

 சாணக்கியனும் சுமந்திரனும் சஜித்துக்கு வாக்கை போட சொன்ன படியால் தமிழ் மக்கள் நான் முந்தி  நீ முந்தி என வாக்களிக்க போகிறார்கள். 
மிக முக்கியமாக தமிழருக்கு தீர்வொன்று வர போகிறது. மேற்கு நாடுகளுக்கும் ஒரு செய்தியை சொல்ல போகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

மாவை இது செல்லாது என்றும் இது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்றும் அறிவுத்துள்ளதாக அறிய முடிகிறது..

மாவையின் முடிவை மாவையே கேட்பதில்லையே.

வருங்கால தலைவர் சிறிதரனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு உள்ளூரில் காய்களை நகர்த்துகிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமே சுமந்திரனும் அவர் சார்ந்த தமிழரசு கட்சியின் சஜித்துக்கு ஆதரவு நிலைப்பாடு ஆகும். ரணிலை விலக்கி அனுரவிக்கு எதிராக சஜித்தை தனிப்பெரும் வேட்பளராக்குவது என்பது தற்பொழுது ராஜதந்திர/அரசியல் வடடாரங்களின் பேசுபொருளாக உள்ளது. அனுராவுக்கு இருப்பது மக்கள் அலை அல்ல அது சுனாமியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nunavilan said:

 சாணக்கியனும் சுமந்திரனும் சஜித்துக்கு வாக்கை போட சொன்ன படியால் தமிழ் மக்கள் நான் முந்தி  நீ முந்தி என வாக்களிக்க போகிறார்கள். 

சுமந்திரனே.... செல்லாக் காசு.
அவரே... திருமதி ரவிராஜின் வெற்றியை தட்டிப் பறித்து பாராளுமன்றம் போனவர்.
இதுக்குள்ளை... அவர் சஜித்துக்கு போடச் சொல்லி சிபாரிசு பண்ணுகிறாராம். 😂
இவங்களின் அலப்பறை தாங்க முடியவில்லை.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

மாவையின் முடிவை மாவையே கேட்பதில்லையே.

வருங்கால தலைவர் சிறிதரனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு உள்ளூரில் காய்களை நகர்த்துகிறார்களே?

சிறிதரன் வெளிநாட்டில் காய்(சு)களை நகர்த்த  உள்ளூர் காய்கள் உள்ளூரில் காய்களை நகர்த்துகிறார்கள்.

இந்த முடிவிற்கும் இந்திய பாதுகாப்பு செயலாளரது இலங்கை விஜயத்துக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும்.

சஜித்தையும் ரணிலையும் ஒற்றுமை ஆக்க இந்தியா முயன்றது. ஆனால் சரிவரவில்லை. எனவே சஜித்தை முன்னிலைக்கு கொண்டு வர முயல்கிறது.

எஜமானின் உத்தரவுக்கமை பிரேதசந்திரன் பொது வேட்பாளர் விடயத்தில் ஒதுங்கி இருப்பார் என நினைக்கிறேன்.  குத்துக்கரணம் அடித்தாலும் ஆச்சரியமில்லை.

அரியத்திற்கான ஆதரவான  பிரச்சாரம் இனி குறையும். நிலாந்தனும் சோதி மாஸ்ரரும் மூக்குடைபடப் போகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நிழலி said:

இப்போதும் எப்போதும் முப்போதும்   இந்தியாவின் எதிரி JVP அல்லவா,..😀

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/v/z8B8KtB8jSchn6UW/

வெளியான சுமந்திரனின் தில்லுமுல்லு விளையாட்டு! 

கட்சி உறுப்பினர்களுக்கு முறையாக அறிவிக்காமல் திட்டமிட்டு சுமந்திரன் எடுத்த தீர்மானம் என யோகேஸ்வரன் ஐயா வெளிப்படுத்தியிருக்கிறார். 

இன்று 1ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில் நடைபெறும் என்று 28/08/2024 திகதியிடப்பட்ட கடிதம் 29 ஆம் திகதி அன்று அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெற்றது. கட்சியின் யாப்பின் படி மத்தியகுழு கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன் எழுத்துமூல அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது யாப்பு விதி. 

1) யாப்பு விதியை மீறி நடாத்தப்பட்ட கூட்டம் செல்லுபடியற்றது. அதுமட்டுமின்றி அங்கு எடுத்த தீர்மானமும் செல்லுபடியற்றது. 

2) 26 ஆம் திகதி கட்சி தலைவர் மாவை ஐயாவை சந்தித்த சிறீதரன் எம்பி “நான் 29 ஆம் திகதி இங்கிலாந்து செல்கிறேன், 6ஆம் திகதி தான் திரும்ப வருவேன். அதற்கிடையில் முக்கிய கூட்டங்களை தவிர்க்குமாறு” கேட்டிருந்தார்.

3) சிறீதரன் எம்பியின் கோரிக்கையை ஏற்ற மாவை ஐயா 8ஆம் திகதியில் இருந்து 10ஆம் திகதிக்கிடையில் தான் கூட்டம் போடுவம் சிறீ என்று உறுதியளித்திருந்தார். 

இன்று நடந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன் MP, வன்னி MP சார்ள்ஸ், யோகேஸ்வரன், ஶ்ரீநேசன், சரவணபவன், ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா போன்ற முக்கிய தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றவில்லை. 

46 மத்திய குழு உறுப்பினர்களில் 25 பேர் தான் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அதில் 6 பேர் தமிழ் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். ஆக சுமந்திரன் அணியின் 19 பேர் எடுத்த தனித்தீர்மானம் தான் சஜித்தை ஆதரவளிப்பது என்பது. 

மட்டக்களப்பை சேர்ந்த சிறீநேசன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இன்றைய கூட்டம் தொடர்பில் இதுவரை எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை. 

இந்த நிலையில் தான் பலமான தரப்பை உள்ளீர்க்காமல் சுமந்திரன் அணியால் திட்டமிட்டு தனித்து சஜித்திற்கு ஆதரவு என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவில் மக்கள் பதில் சொல்வார்கள். 

இந்த முடிவு தமிழரசுக்கட்சியின் முடிவு இல்லை என்பதை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உறுதிப்படுத்தியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரலாற்றில் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக  உலக ஜதார்த்தத்தை புறந்தள்ளி தனி ஆவர்தன வீர அரசியல் செய்து, உள்ளதும் போச்சையா நொள்ளைக்கண்ணா  என்ற  கதையாய் தமிழர் அரசியல் தொடர்கிறது.  

படிப்படியாக அங்குலம் அங்குலமாக  தமது அரசியல் தந்திரோயபம்  மூலம் பெரிய கட்சிகளுக்குள் ஊடுருவி தமது சமுதாயத்தை ஶ்ரீலங்காவில் பலப்படுத்திய  முஸலீம் அரசியல்வாதிகளின் தந்திரோபங்களைக் கூட தமிழ் அரசியலில் ஈடுபடும் தாயக/  புலம் பெயர் தமிழ் தேசிய  அரசியல்வாதிகளால் செய்ய முடியவில்லை.  இன்றைய நிலையில் தமிழரின் பொருளாதார சமூக கட்டமைப்புகளை வட கிழக்கில்  பலப்படுத்த தேவையான கோரிக்கைகளை வைத்து பேரம் பேசி அதை நிறைவேற்றி தமது அரசியலைத் தொடர்ந்திருக்கலாம்.   அதை விடுத்து பொது வேட்பாளர் என று ஒரு கோமாளிக்கூட்டம் கூத்தாட  இப்போது எந்த பயனும் அற்ற முடிவையே தமிழரசுக் கட்சியும் எடுத்துள்ளது என்றே நினைக்கிறேன்.  தமது வெற்று கோஷங்களை வைத்து தமிழ் தேசிய வெறித்தன அரசியலை செய்து மிக விரைவில் இரண்டாவது பெரும்பான்மை என்ற நிலையில் இருந்து மூன் றாவது சிறுபான்மை இனம் என்ற நிலைக்கு தமிழரை கொண்டுவந்துவிட்டே புலம் பெயர் / தாயக தமிழ் தேசிய வெறியர்கள் தமது கண்களை மூடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியில் இருந்து பொது வேட்பாளராக  அரியநேந்திரன் போட்டியிட்டது கட்சிக்கு விரோதமானது என்றனர். இப்போ சஜித்துக்கு ஆதரவு என்று ஒரு சிலர் அக்கட்சியில் இருந்து  அறிவித்து இருப்பது கட்சிக்கு விரோதமானதில்லையா??
முஸ்லிம்களும்  ஜனாதிபதி வேட்பாளர்களாக உள்ளனர்? எம்மை மாதிரி குடும்பி பிடி சண்டை இல்லையே? ஏன்? அவர்களும் சிறுபான்மையினர். அதே போல் மலையகத்தின் இருந்தும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் உள்ளார். யாரும் அவருக்கு சேறடித்ததாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, nunavilan said:

சிறிதரன் வெளிநாட்டில் காய்(சு)களை நகர்த்த  உள்ளூர் காய்கள் உள்ளூரில் காய்களை நகர்த்துகிறார்கள்.

நிலத்தையும் புலத்தையும் சேர்த்துக் குழைத்து முறுக்குச் சுட தமிழரசுக் கட்சியின் சில தலைகள் முயல்வது தெரிகிறது. புலத்திற்கு பணத்தால் சுடும் தகுதி இருந்தாலும்… நிலம் மானத்தால் சுடும் என்று நம்பலாம். சிங்களத்துடன் பேரம்பேச ஒரு தன்மானத் தமிழனை உருவாக்குவது அவசியம்.🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

மொத்தத்தில் தமிழரசு கட்சியையே மக்கள் நிராகரிக்க வேண்டும். எரியும் நெருப்பில் கொள்ளி பொறுக்குபவர்களாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

https://www.facebook.com/share/v/z8B8KtB8jSchn6UW/

வெளியான சுமந்திரனின் தில்லுமுல்லு விளையாட்டு! 

கட்சி உறுப்பினர்களுக்கு முறையாக அறிவிக்காமல் திட்டமிட்டு சுமந்திரன் எடுத்த தீர்மானம் என யோகேஸ்வரன் ஐயா வெளிப்படுத்தியிருக்கிறார். 

இன்று 1ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில் நடைபெறும் என்று 28/08/2024 திகதியிடப்பட்ட கடிதம் 29 ஆம் திகதி அன்று அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெற்றது. கட்சியின் யாப்பின் படி மத்தியகுழு கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன் எழுத்துமூல அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது யாப்பு விதி. 

1) யாப்பு விதியை மீறி நடாத்தப்பட்ட கூட்டம் செல்லுபடியற்றது. அதுமட்டுமின்றி அங்கு எடுத்த தீர்மானமும் செல்லுபடியற்றது. 

2) 26 ஆம் திகதி கட்சி தலைவர் மாவை ஐயாவை சந்தித்த சிறீதரன் எம்பி “நான் 29 ஆம் திகதி இங்கிலாந்து செல்கிறேன், 6ஆம் திகதி தான் திரும்ப வருவேன். அதற்கிடையில் முக்கிய கூட்டங்களை தவிர்க்குமாறு” கேட்டிருந்தார்.

3) சிறீதரன் எம்பியின் கோரிக்கையை ஏற்ற மாவை ஐயா 8ஆம் திகதியில் இருந்து 10ஆம் திகதிக்கிடையில் தான் கூட்டம் போடுவம் சிறீ என்று உறுதியளித்திருந்தார். 

இன்று நடந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன் MP, வன்னி MP சார்ள்ஸ், யோகேஸ்வரன், ஶ்ரீநேசன், சரவணபவன், ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா போன்ற முக்கிய தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றவில்லை. 

46 மத்திய குழு உறுப்பினர்களில் 25 பேர் தான் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அதில் 6 பேர் தமிழ் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். ஆக சுமந்திரன் அணியின் 19 பேர் எடுத்த தனித்தீர்மானம் தான் சஜித்தை ஆதரவளிப்பது என்பது. 

மட்டக்களப்பை சேர்ந்த சிறீநேசன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இன்றைய கூட்டம் தொடர்பில் இதுவரை எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை. 

இந்த நிலையில் தான் பலமான தரப்பை உள்ளீர்க்காமல் சுமந்திரன் அணியால் திட்டமிட்டு தனித்து சஜித்திற்கு ஆதரவு என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவில் மக்கள் பதில் சொல்வார்கள். 

இந்த முடிவு தமிழரசுக்கட்சியின் முடிவு இல்லை என்பதை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கனடா டொரண்டோ வில் சுமத்திரனுக்கு இரண்டாவது குடியிருப்பு தொகுதி சொந்தமாகியிருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனும் சாணக்கியனும் சஜஸத்தை ஆதரித்து சஜித்தின் வெற்றிவாய்ப்பைதட்டிப் பறித்து ரணிலிடம் கொடுக்கப் டபோகிறார்கள் போல் தெரிகிறது. அது சரி கஜித் சுயாட்சித் துpர்வுக்கு எழுத்து மூல உத்திரவாதம் அளித்து விட்டாரா?. சிறிதரன் தெரிஞ்சு கொண்டுதான் வெளிநாட்டுக்குப் போய் விட்டார். நான் இல்லாத சநரமாய் பார்த்து இந்த விசயம் நடந்திட்டுது. நான் இருந்திருந்தால் நிலைமைமே தலகீழாக மாறியிருக்கும். என்று தேர்தல் முடிந்த பின்னர் விளக்கம் கொடுப்பார். கழுவுற மீனில நழுவுற மீன் அவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.