Jump to content

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!

September 10, 2024
01-12.jpg

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழு இன்று வவுனியாவில் கூடவுள்ளது. மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், பா.சத்தியலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவே இன்று கூடுகின்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் பா.சத்தியலிங்கத்தின் வவுனியா பணிமனையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளை ஆராய்ந்து அறிக்கையிடும் நோக்கில் இந்த சிறப்பு குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, இன்று கூடி ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து முடிவுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியிலுள்ள குழப்பங்களுக்கு முடிவு காணும் பொருட்டே இன்று கூடும் சிறப்புக் குழு விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கும். இந்த பரிந்துரைகளின்படி, எதிர்வரும் 14ஆம் திகதி கூடும் கட்சியின் மத்திய குழு இறுதி முடிவை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://eelanadu.lk/இலங்கை-தமிழ்-அரசுக்-கட்ச-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசுக் கட்சியின்  இன்றைய கூட்டம்... சட்டை கிழியாமல், வேட்டி அவிழாமல், மண்டை உடையாமல்... அமைதியாக நடக்க வேண்டும் என்று ஆண்டவனை  வேண்டுகின்றேன்.    

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவையில் அவை இல்லையெனில் அது கட்சிக் கூட்டமாக இருக்க வாய்ப்பில்லை .........!  😎

நேற்று சுவிஸில் .....இன்று ........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் அரசுக் கட்சியின்  இன்றைய கூட்டம்... சட்டை கிழியாமல், வேட்டி அவிழாமல், மண்டை உடையாமல்... அமைதியாக நடக்க வேண்டும் என்று ஆண்டவனை  வேண்டுகின்றேன்.    

மூன்றடுக்கு பாதுகாப்பு போட்டிருக்குமோ?

6 hours ago, suvy said:

அவையில் அவை இல்லையெனில் அது கட்சிக் கூட்டமாக இருக்க வாய்ப்பில்லை .........!  😎

நேற்று சுவிஸில் .....இன்று ........!

அவையடக்கம் என்றால் என்னவென்று தலைவர்களே மறந்துவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன்

10 Sep, 2024 | 05:01 PM
image
 
சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் கலந்துரையாடி விசேட குழுவிற்கு அறிவிப்பேன். எனவே மத்திய செயற்குழு கூட்டமும் இரத்து செய்யப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் விசேட குழு கூட்டம் தொடர்பில் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் இன்றைய கூட்டம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

14 ஆம் திகதி நடைபெற இருந்த மத்திய செயற்குழு கூட்டம் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்ததன் காரணமாக மீண்டும் மத்திய செயற்குழுவை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்பதினால் அது இரத்த செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பின்னர் கூடலாம். தற்போது அதற்கான தேவை இல்லை என்பதன் அடிப்படையிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

 ஏற்கனவே நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு என தெரிவித்ததன் அடிப்படையில் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபை விடயம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான விடயம் உட்பட பல்வேறு விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால வரையறை தொடர்பாக சஜித்துடன் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவது என முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த கால வரையறைகள் தொடர்பாக சஜித் பிரேமதாசாவுடன் நான் கலந்துரையாடியதன் பின்னர் அதில் எட்டப்பட்ட தீர்மானங்களை இந்த விசேட குழுவிற்கு அறிவிப்பது எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ilangai-thamilarasu-katchi-1.jpg?resize=

இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட கூட்டம்! 15ஆம் திகதி முக்கிய அறிவிப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றபோதும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற, உத்தியோகபூர்மான தீர்மானம் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி மூன்று விதமான நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ள நிலையில் கட்சியாக ஒருமித்து தீர்மானம் எடுப்பதில் குழப்நிலை காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது.

சுமந்திரன் தலைமையிலான அணியினர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளபோதும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள சி.சிறிதரன் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு என நேற்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இன்று வவுனியாவில் கட்சியின் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்தியர், ப.சத்தியலிங்கத்தின் வவுனியா இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றிருந்தது.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றிருந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன் மற்றும் வடமகாண சபை அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சரவணபவன் இன்றைய தினம் கலந்துகொள்ள முடியாமையினால் ஆறு பேர் கொண்ட குழுவில் 5 பேர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1398853

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

ilangai-thamilarasu-katchi-1.jpg?resize=

சுமந்திரன் தலைமையிலான அணியினர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளபோதும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அறிக்கை மரியாதைக்காக விடப்பட்டது என்று காவித் திரிந்தவர்கள் வரிசையில் வரவும் 

  • Haha 1
Link to comment
Share on other sites

ஒரு கட்சிக்குள்,

சஜித்துக்கு ஆதரவாக ஒரு அணி.

ரணிலுக்கு ஆதரவாக இன்னொரு அணி.

பொது வேட்பாளருக்காக மூன்றாவதாக ஒரு அணி.

சுமந்திரனுக்கு தான் சஜித்தை ஆதரிக்கின்றாரா அல்லது அனுரவை ஆதரிக்கின்றாரா என்பதில் அவருக்கே குழப்பம்.

தமிழ் சனம் ஒட்டுமொத்தமாக இவர்களுக்கு நாமம் போடப் போகினம்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வடக்கில் வாக்குகளைப் பெறும்.

  • Like 3
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நிழலி said:

ஒரு கட்சிக்குள்,

சஜித்துக்கு ஆதரவாக ஒரு அணி.

ரணிலுக்கு ஆதரவாக இன்னொரு அணி.

பொது வேட்பாளருக்காக மூன்றாவதாக ஒரு அணி.

சுமந்திரனுக்கு தான் சஜித்தை ஆதரிக்கின்றாரா அல்லது அனுரவை ஆதரிக்கின்றாரா என்பதில் அவருக்கே குழப்பம்.

தமிழ் சனம் ஒட்டுமொத்தமாக இவர்களுக்கு நாமம் போடப் போகினம்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வடக்கில் வாக்குகளைப் பெறும்.

இவர்களுடன் பல கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பு என்ற ஒன்றும் உண்டாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன்

10 Sep, 2024 | 05:01 PM
image
 
சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் கலந்துரையாடி விசேட குழுவிற்கு அறிவிப்பேன்.

அப்புக்காத்து சுமந்திரன் என்பவர், முதலில்... சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பாராம்.

பிறகு... 10 நாள் கழித்து, சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடி மக்களுக்கு அறிவிப்பாராம்.

மக்களை இவர் முட்டாள் பயலுகள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாரா.

நீங்கள், ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் 😂. கட்சி தலைமைக்கு கட்டுப் பட்டு, வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே போதும்🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அறிக்கை மரியாதைக்காக விடப்பட்டது என்று காவித் திரிந்தவர்கள் வரிசையில் வரவும் 

மாவைக்கு, வக்காலத்து வாங்கப் போய்.... மூக்கு, உடைபட்டது தான் மிச்சம். 😂

இவர்களுக்கு... மணி கட்டின மாடு சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

ஏனென்றால்... அவர்களின் "டிசைன்" அப்படி🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஒரு கட்சிக்குள்,

சஜித்துக்கு ஆதரவாக ஒரு அணி.

ரணிலுக்கு ஆதரவாக இன்னொரு அணி.

பொது வேட்பாளருக்காக மூன்றாவதாக ஒரு அணி.

சுமந்திரனுக்கு தான் சஜித்தை ஆதரிக்கின்றாரா அல்லது அனுரவை ஆதரிக்கின்றாரா என்பதில் அவருக்கே குழப்பம்.

தமிழ் சனம் ஒட்டுமொத்தமாக இவர்களுக்கு நாமம் போடப் போகினம்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வடக்கில் வாக்குகளைப் பெறும்.

சம்பந்தன் இருந்திருந்தால்... நான்காவது அணியாக, பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து.... இருக்கின்ற குழப்பங்களுக்கு மணி மகுடம் வைத்திருப்பார்.

நீங்கள் சொன்ன மாதிரி... விரைவில் வடக்கில் இருந்து தேசியக்ட்சிகள் மூலமாக... சிங்களவனும், முஸ்லீமும் எம்.பி.யாகி வரப் போகும் காலம் வெகு விரைவில் நடக்கும்.

பிறகு... இவர்கள் உன்னாலை நான் கேட்டேன், என்னாலை நீ கெட்டாய் என்று, மாறி மாறி... முதுகு சொறிந்து கொண்டு இருக்க வேண்டியதுதான்.

இப்ப இவர்களுக்கு, சிங்களவனிடம் இருந்து... பெட்டியும், வரும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வாங்கும் போட்டியும் தான் நடக்குதே தவிர.. தமிழனின் நலன் சார்ந்து ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன்

10 Sep, 2024 | 05:01 PM
image
 
சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் கலந்துரையாடி விசேட குழுவிற்கு அறிவிப்பேன். எனவே மத்திய செயற்குழு கூட்டமும் இரத்து செய்யப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் விசேட குழு கூட்டம் தொடர்பில் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் இன்றைய கூட்டம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

14 ஆம் திகதி நடைபெற இருந்த மத்திய செயற்குழு கூட்டம் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்ததன் காரணமாக மீண்டும் மத்திய செயற்குழுவை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்பதினால் அது இரத்த செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பின்னர் கூடலாம். தற்போது அதற்கான தேவை இல்லை என்பதன் அடிப்படையிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

 ஏற்கனவே நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு என தெரிவித்ததன் அடிப்படையில் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபை விடயம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான விடயம் உட்பட பல்வேறு விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால வரையறை தொடர்பாக சஜித்துடன் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவது என முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த கால வரையறைகள் தொடர்பாக சஜித் பிரேமதாசாவுடன் நான் கலந்துரையாடியதன் பின்னர் அதில் எட்டப்பட்ட தீர்மானங்களை இந்த விசேட குழுவிற்கு அறிவிப்பது எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன் | Virakesari.lk

நீங்கள் அனைத்து முடிவுகளையும். எடுப்பது என்றால் கூட்டம் தேவையில்லை தான்   

பொதுசபை 

மத்திய குழு 

தமிழரசு கட்சி 

அனைத்தையும்  ரத்து செய்து விடலாம்     பத்திரிகையாளர் மாநாடும் தேவையில்லை 

ஒரு தலைவனாக இருக்க தகுதி அற்றவர் சுத்த பைத்தியம் 

குரங்கில். இருந்து மனிதன் தோன்றினான். என்பது பிழை  

மனிதனின் இருந்து தான் குரங்கு தோன்றியது என்பது தான் சரியானது 🤣🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kandiah57 said:

நீங்கள் அனைத்து முடிவுகளையும். எடுப்பது என்றால் கூட்டம் தேவையில்லை தான்   

பொதுசபை 

மத்திய குழு 

தமிழரசு கட்சி 

அனைத்தையும்  ரத்து செய்து விடலாம்  

இல்லை ஏன் என்றால் 👇

8 hours ago, பிழம்பு said:

ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்ததன் காரணமாக மீண்டும் மத்திய செயற்குழுவை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்பதினால் அது இரத்த செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பின்னர் கூடலாம். தற்போது அதற்கான தேவை இல்லை என்பதன் அடிப்படையிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்ததன் காரணமாக மீண்டும் மத்திய செயற்குழுவை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்பதினால் அது இரத்த செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பின்னர் கூடலாம். தற்போது அதற்கான தேவை இல்லை என்பதன் அடிப்படையிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது   இன்று கூட்டம் என்று அறிவிக்க முதல்  தெரியும் தானே?? 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.