Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   14 SEP, 2024 | 10:36 AM

image
 
தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இலங்கையின் பரந்துபட்ட அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இடைக்கால அமைச்சரவையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் இடைக்கால அமைச்சரவை ஏற்படுத்துவதற்கு தனது கட்சி முயலும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இலங்கை அரசாங்கத்தை ஏற்படுத்த விரும்புகின்றோம். சிங்கள அரசாங்கத்தையில்லை, என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் சாராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கும் முதலாவது அமைச்சரவையாக இது காணப்படும் என தெரிவித்துள்ளார்.

222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வடக்குகிழக்கு மலையகத்தை சேர்ந்த சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக தெரிவு செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/193648

  • கருத்துக்கள உறவுகள்

சேச்சே,.......

நாங்கள் பகிஸ்கரிப்போம் அல்லது அதற்குப் போட்டியாக இன்னும் ஒரு அ

அமைச்சரவையை கொண்டுவருவோம். அது இயங்காவிட்டலும் பிரச்சனை இல்லை. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வடக்குகிழக்கு மலையகத்தை சேர்ந்த சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக தெரிவு செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த அதிபர் அநுரகுமார தான்.  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கை வாழ் மக்களனைவரும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த இடைக்கால அமைச்சரவையில் வடக்கைச் சேர்ந்தவர்களும்  அமைச்சராவார்கள். அதன்படி திரு சிறீதரன் அவர்கள் திருக்குறள், திருக்குறள் அபிவிருத்தி மற்றும் பேச்சுப்போட்டி அமைச்சராக வரவாய்ப்பு உள்ளது!

Edited by வாலி

36 minutes ago, வாலி said:

அடுத்த அதிபர் அநுரகுமார தான்.  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கை வாழ் மக்களனைவரும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த இடைக்கால அமைச்சரவையில் வடக்கைச் சேர்ந்தவர்களும்  அமைச்சராவார்கள். அதன்படி திரு சிறீதரன் அவர்கள் திருக்குறள், திருக்குறள் அபிவிருத்தி மற்றும் பேச்சுப்போட்டி அமைச்சராக வரவாய்ப்பு உள்ளது!

அரியத்துக்கு என்ன அமைச்சு பதவி?

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

அரியத்துக்கு என்ன அமைச்சு பதவி?

ஆப்பிழு குரங்குகள் மற்றும் அப்பம் பிரிப்பு, பராமரிப்பு அமைச்சுப் பதவி ஏற்கனவே ரெடியாகிவிட்டதே!

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் அய்யாவுக்கு என்ன அமைச்சர் பதவி என்று கேட்கலாமா  அவர் தான் துணை ஜனாதிபதி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் அய்யாவுக்கு என்ன அமைச்சர் பதவி என்று கேட்கலாமா  அவர் தான் துணை ஜனாதிபதி

வடமாகாண அபிவிருத்தி அமைச்சர் என சொன்னால் குறைந்தா போய்விடியல்😅...மலையக தமிழ் பிரதிநிதிகள் ஏறகனவே அமைச்சரா இருக்கின்றனர் ..அன்றைய தொன்டமானிலிருந்து இன்றைய தொண்டமான் வரை.....

அதாவது இன்று இந்தியாவுக்கு தேவை முழு சிறிலங்காவும் தனது  ஆட்சியின் கீழ் இருக்க் வேணுமென நினைக்கின்றனர் ...தமிழர்கள் ,தமிழ் மொழி பேசும் மாகாணங்கள் இலங்கையில் இல்லைஎன்பதை உலகறி செய்ய முழு மூச்சாக செயல் படுகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, கொள்கையளவில் இணைந்திருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிமன்றத் தீர்ப்பொன்றின் ஊடாக பிரித்துப்போட்டது இவரது கட்சிதான். இலங்கையில் இருக்கும் அனைத்து இன மக்களுக்கும் இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினையே தமிழர்களுக்கும் இருக்கின்றது, அவர்களுக்கென்று இனரீதியாகப் பிரச்சிகள் இல்லை என்று கூறுவதும் இவரது கட்சிதான். இதுகுறித்த தமிழ் மக்களின் பதில் என்ன?

இவரை ஆதரிப்பதால் 

1. வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கத் தேவையில்லை
2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான பிரச்சினைகள் இல்லை

என்கிற முடிவிற்குத் தமிழர்கள் வந்துவிட்டோமா? இங்கே எழுதப்படும் கருத்துக்களைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரஞ்சித் said:

வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கத் தேவையில்லை
2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான பிரச்சினைகள் இல்லை

என்கிற முடிவிற்குத் தமிழர்கள் வந்துவிட்டோமா? இங்கே எழுதப்படும் கருத்துக்களைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது.

இணக்க அரசியலில் சங்கமமாகி விட்டார்கள்.

அடக்கு முறைக்குள் இருந்து சுதந்திரமாக உலாவ முடிகிறது.

நீண்ட வரிசையில் நின்று களைத்துப் போனோம்.

இப்போ பாணும் பருப்பும் சுலபமாக கிடைக்கிறது.

இதுக்கு அப்பால் என்ன தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரஞ்சித் said:

அதுசரி, கொள்கையளவில் இணைந்திருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிமன்றத் தீர்ப்பொன்றின் ஊடாக பிரித்துப்போட்டது இவரது கட்சிதான். இலங்கையில் இருக்கும் அனைத்து இன மக்களுக்கும் இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினையே தமிழர்களுக்கும் இருக்கின்றது, அவர்களுக்கென்று இனரீதியாகப் பிரச்சிகள் இல்லை என்று கூறுவதும் இவரது கட்சிதான். இதுகுறித்த தமிழ் மக்களின் பதில் என்ன?

இவரை ஆதரிப்பதால் 

1. வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கத் தேவையில்லை
2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான பிரச்சினைகள் இல்லை

என்கிற முடிவிற்குத் தமிழர்கள் வந்துவிட்டோமா? இங்கே எழுதப்படும் கருத்துக்களைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

எங்கள் கொள்கைகளைக்  கைவிடவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.

ஆனால் கொள்கைகள் கைகூட வேண்டுமெனில் இருப்பு முக்கியம்  அல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

இருப்பு முக்கியம்  அல்லவா

எப்பிடி, வடக்குக் கிழக்கை பிரித்தே வைத்திருக்கலாம் என்று அவர்களுடன் ஒத்துப்போவதன் ஊடாகவா இருப்பைத் தக்கவைக்கப்போகிறீர்கள்? ஆக, வடக்குக் கிழக்கு தனித்தனியாக பிரிக்கப்பட்டு சிறுகச் சிறுக அரிக்கப்படுவது தமிழர்களின் இருப்பைப் பாதிக்கப்போவதில்லை என்கிறீர்கள். நீங்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். 

9 minutes ago, Kapithan said:

எங்கள் கொள்கைகளைக்  கைவிடவேண்டும்

அப்போது இதுகுறித்து எப்போதுதான் அவர்களுடன் பேசுவதாக உத்தேசம்? 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

ஆனால் கொள்கைகள் கைகூட வேண்டுமெனில் இருப்பு முக்கியம்  அல்லவா? 

இதைப் பற்றி ஒருத்தருக்கும் பிரச்சனையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

எப்பிடி, வடக்குக் கிழக்கை பிரித்தே வைத்திருக்கலாம் என்று அவர்களுடன் ஒத்துப்போவதன் ஊடாகவா இருப்பைத் தக்கவைக்கப்போகிறீர்கள்? ஆக, வடக்குக் கிழக்கு தனித்தனியாக பிரிக்கப்பட்டு சிறுகச் சிறுக அரிக்கப்படுவது தமிழர்களின் இருப்பைப் பாதிக்கப்போவதில்லை என்கிறீர்கள். நீங்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். 

அப்போது இதுகுறித்து எப்போதுதான் அவர்களுடன் பேசுவதாக உத்தேசம்? 

உங்கள் புரிதலில் தவறு உள்ளது. 

விபு க்கள் கூட பேச்சுவார்த்தை என்று வரும்போது முதலில் வாழ்வாதார,  நடைமுறைப் பிரச்சனைகளைப் பற்றியே பேசினர். 

எங்கள் அரசியல்வாதிகளுக்கு முள்ளந்தண்டும் மூளையும் இருந்திருப்பின் கடந்த 15 வருடங்களில் அங்குள்ள மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை எவ்வளவோ தீர்த்திருக்க முடியும். 

நாங்கள் முஸ்லிம் தலைமைகளைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டும்.  அடுத்த 10 / 15 வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். அப்போது எம்மைப்பற்றிக் கதைக்க ஒருவரும் இலர். 

ஆகாயத்தில் கோட்டை கட்ட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பும் அடிப்படை வாழ்க்கை  பிரச்சனைகளும் மிகவும் முக்கியானது. ஆனால்ஜேவிபி வந்தால் முழு இலங்கைக்கும் தீமை.

  • கருத்துக்கள உறவுகள்

460202055_8542603712428564_8320627508372

ஜேவிபி இனவாத கூட்டத்தின் ஏமாற்று விளையாட்டு அம்பலம்.

சீனா ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வழங்கியிருந்தும் மக்களை திரட்ட முடியாமல் கூட்டம் சேர்ந்ததாக மக்களையும், காசு கொடுத்த சீனாக்காரனையும் ஏமாற்றுவதற்காக எடிட்டிங் விளையாட்டுக்களில் ஈடுபட்டு அரசியல் தெளிவற்றவர்களை ஏமாற்றி வாக்குகளை பறிக்கும் திட்டம் அம்பலமாகியுள்ளது.

Kunalan Karunagaran 

May be an image of one or more people, heart and crowd

இது தான் உண்மையான படம். அதிலேயேட்கள் அதிகமாக இருக்கும் போது எடிட்டிங் ஏன்? ஆர்வக் கோளாறோ....  😂 🤣

செந்தூர் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இதையெல்லாம் ஒரு விடயமாக எடுக்க வேண்டுமா ? 

பெறுமதியற்ற விடயங்களைத் தவிர்ப்பதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

17 hours ago, ரஞ்சித் said:

அதுசரி, கொள்கையளவில் இணைந்திருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிமன்றத் தீர்ப்பொன்றின் ஊடாக பிரித்துப்போட்டது இவரது கட்சிதான். இலங்கையில் இருக்கும் அனைத்து இன மக்களுக்கும் இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினையே தமிழர்களுக்கும் இருக்கின்றது, அவர்களுக்கென்று இனரீதியாகப் பிரச்சிகள் இல்லை என்று கூறுவதும் இவரது கட்சிதான். இதுகுறித்த தமிழ் மக்களின் பதில் என்ன?

இவரை ஆதரிப்பதால் 

1. வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கத் தேவையில்லை
2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான பிரச்சினைகள் இல்லை

என்கிற முடிவிற்குத் தமிழர்கள் வந்துவிட்டோமா? இங்கே எழுதப்படும் கருத்துக்களைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

வடக்கில் அனேகமான தொகுதிகளில் நாலாவதாக தான் வருவார். கிழக்கில் பல இடங்களில் மூன்றாவதாகவும், சில இடங்களில் நான்காவதாகவும் வருவார் என நினைக்கிறேன்.

சமூக நீதி எனும் முகமூடியை போட்டு கொண்டு வரும் இனவாத ஜேவிபி யின் சனாதிபதி கனவு வடக்கு கிழக்கு மக்களால் முறியடிக்கப்படும் சாத்தியமே அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

உங்கள் புரிதலில் தவறு உள்ளது. 

விபு க்கள் கூட பேச்சுவார்த்தை என்று வரும்போது முதலில் வாழ்வாதார,  நடைமுறைப் பிரச்சனைகளைப் பற்றியே பேசினர். 

எங்கள் அரசியல்வாதிகளுக்கு முள்ளந்தண்டும் மூளையும் இருந்திருப்பின் கடந்த 15 வருடங்களில் அங்குள்ள மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை எவ்வளவோ தீர்த்திருக்க முடியும். 

நாங்கள் முஸ்லிம் தலைமைகளைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டும்.  அடுத்த 10 / 15 வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். அப்போது எம்மைப்பற்றிக் கதைக்க ஒருவரும் இலர். 

ஆகாயத்தில் கோட்டை கட்ட முடியாது. 

புலிகள் அன்றாடப் பிரச்சினைகள் குறித்துப் பேசலாம் என்றுகேட்டது உண்மைதான். ஏனென்றால், நீண்டகாலப்பிரச்சினைகளான உரிமை, தாயக நிலம், அதிகாரம் என்பவற்றினைபெற்றுக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. தமது ஆயுதப் போராட்ட ஊடாக அரசைப்பணியவைக்கவோஅல்லது தனிநாட்டை உருவாக்கவோ அவர்களிடம் வல்லமையும்நம்பிக்கையும் இருந்தது. அதனால் அன்றாடப் பிரச்சினைகள்குறித்து இப்போது பேசலாம், நீண்டகாலப் பிரச்சினைகளைபின்னர் பார்க்கலாம் என்று கூறினார்கள். மக்களுக்கும் அதுநம்பிக்கை தருவதாக இருந்தது.

இன்று அன்றாடப் பிரச்சினைகளை மட்டுமே பேசிவிட்டு அரசியல்ப்பிரச்சினைகளை பின்னர் பேசலாம் என்கிற நம்பிக்கையோஅல்லது சிங்களவர்கள் அதனைத் தருவார்கள் என்கிறநம்பிக்கையோ உங்களுக்கு இருக்கிறதா? எதற்காக அவர்கள்அதனை உங்களுக்குத் தாரைவார்த்துத் தருவார்கள் என்றுநம்புகிறீர்கள்?

Edited by ரஞ்சித்

உங்கள் கற்பிதம் தவறு. 

அவர்கள் தாரைவார்த்துத் தருவார்கள் என்று ஒருவரும் கூறவில்லை. ஆனால் அதற்காக அங்குள்ள மக்களை ஏழ்மையிலும் பட்டினியிலும் வாழ விட முடியாது. 

பசியில்லை, பயமில்லை, பாதுகாப்புப் பிரச்சனையோ அல்லது எதிர்காலம் தொடர்பான பயமோ உங்களுக்கும் எனக்கும்  இல்லை. அதனால் நீங்களும் நானும்  உரிமையைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். 

தாயக மக்களின் நிலையோ நேரெதிரானது. 

உள்ளதையும் கெடுத்தான் நொள்ளைக் கண்ணன் எனும் நிலைக்கு தாயகத்தில் உள்ளவர்களைத் தள்ளி இட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தமிழர்களின் அன்றாடப் பிரச்சினைகள் என்பது எப்போதுமே உயிர்ப்புடன் வைத்திருக்கப்பட்டே வருகின்றது. சிங்கள ஆளும்தரப்புக்கள் தொடர்ச்சியாகவே தமிழர்களை ஏதோவொரு அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைக்குள் அமிழ்த்தியே வைத்திருக்கின்றன. 

புலிகளின் காலத்தில் அரசியல்ப் பிரச்சினைபற்றிப் பேசலாம் என்று புலிகள் கேட்டபோதெல்லாம், அன்றாடப் பிரச்சினைகள் முதலில்பேசலாம் என்றே அரசுகள் அலைக்கழித்துவந்தன. அதனாலேயே புலிகளும் ஒரு கட்டத்தில் அரசின் வழியில் சென்று, சரி பேசலாம், இடைக்கால நிர்வாக சபையினைத் தாருங்கள் என்று கேட்டார்கள். உடனே அரசு சுதாரித்துக்கொண்டு அரசியல்ப் பிரச்சினை பற்றிப்பேசலாம் என்றது.

தமிழரின் அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகளைத்தீர்த்தபின்னர்தான் அரசியல்ப் பிரச்சினை பற்றிப் பேசலாம்என்றால், தமிழருக்கு அரசியல்த் தீர்வு ஒருபோதுமே கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால், அன்றாடப்பிரச்சினைகளை அரசு ஒருபோதும் தீர்க்காது.

இப்போது அரசியல் பேசவேண்டாம், அன்றாடப் பிரச்சினை பற்றிப்பேசலாம் என்கிறீர்கள். சரி, அப்போ எப்போதுதான் அரசியல்ப்பிரச்சினை குறித்துப் பேசலாம் என்று நினைக்கிறீர்கள்? இன்னும் 5 வருடங்களில்? 10 வருடங்களில்? 50 வருடங்களில்? அப்போதுமட்டும் தமிழர்களின் அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகள்தீர்க்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறீர்கள்?

அரசியல்ப் பிரச்சினையும், அன்றாடப் பிரச்சினையும் சமாந்தரமாகஒரே நேரத்தில் பேசப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

அரசியல் பற்றி பேசவேண்டாம் என்று யாரும் கூறவில்லை. அன்றாடப் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள் என்பது பிழையா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அரசியல் பற்றி பேசவேண்டாம் என்று யாரும் கூறவில்லை. அன்றாடப் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள் என்பது பிழையா? 

தமிழர்களுக்கென்று  அரசியல்ப்  பிரச்சினைகள்  எதுவும்கிடையாது. இருப்பதெல்லாம்  ஏனைய இலங்கையர்களைப்  போன்று  பொருளாதாரப்  பிரச்சினை  மட்டும்தான்  என்று கூறுகின்ற  ஒரு  கட்சிக்காக வாக்குக்  கேட்கிறீர்கள்.  சரி,  ஒரு  பேச்சிற்கு  தமிழர்களின்  பொருளாதாரப்  பிரச்சினைகளைத்தீர்த்துவிடுகிறார்கள்  என்று  வைத்துக்கொள்வோம்.  அதன்  பின்னர்  இனித்  தமிழர்களுக்குப்  பிரச்சினையில்லை  என்றுகையை  விரித்தால்  என்ன  செய்வதாக  உத்தேசம்? இதற்குத்தான்,  தமிழரின்  அரசியல்ப்  பிரச்சினைகளையும் சேர்த்தே  பேசுங்கள்  என்று கேட்கிறோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.